வியாழன், 25 ஆகஸ்ட், 2022

புலிக்கு பலி

 உத்தரப்பிரதேசத்தில் பிலிபிட் என்றொரு இடம் இருக்கிறது.  இங்கு இந்த ஊரின் 23 சதவிகித அளவு வங்களால் சூழப்பட்டதுதான்.  இந்த ஊரில் உள்ள வனப்பிரதேசத்தை 2014 ல் மத்திய அரசு  புலிகள் சரணாலயமாக அறிவித்தது.  இங்கு சுமார் 25 புலிகள் இருக்கக்கூடும் என்கிறது பழைய தகவல் ஒன்று.

னம் எதிலும் ஒட்டாமல் இருப்பதால் OTT தளங்கள் இருக்கும் வசதியில் கன்னாபின்னா என்று படங்கள் பார்ப்பது வழக்கமாகி விட்டது.  மூளையை ரொம்ப செலவழிக்கவே வேண்டாம் பாருங்கள்..   ஓரிரு மணி நேரங்கள் அரைமயக்க நிலையில் இருக்கலாம்.

சஸ்பென்ஸ் த்ரில் படங்கள் என் முதல் சாய்ஸ்.  அல்ப சஸ்பென்சாக இருந்தாலும் ஆ என்று பார்ப்பேன்!  ("எதெது மொக்கை படம் என்று நாம் பார்த்து பிரிக்கவே தேவையில்லை..   அப்பா சரியாக அவற்றை செலெக்ட் செய்து பார்க்கிறார்" - மகன்கள்)

தியேட்டரில் ரிலீசாகி இங்கு வரும் படங்கள், பெயர் தெரிந்த நடிகர்கள் நடித்திருந்தால் அவற்றையும் பார்த்து விடுவேன்!  சமீபத்தில் அப்படி 'கடாவர்', யானை,  வட்டம், சில பஹத் பாசில் படங்கள், என்று சொல்லவே நினைவு வராத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.  தனுஷின் 'க்ரே மேன்' பார்க்கும் துணிவு வரவில்லை.  சத்யராஜ் ஊர்வசி நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அதில் அவரும் நடித்திருந்த 'வீட்டில் விஷேங்க' (நல்ல படம்.  மலையாளத்தில் வந்த ப்ரோ டாடி என்கிற மோகன்லால்-பிரித்விராஜ் நடித்த படத்தின் தமிழ்!).  அதேபோல மனதில் நின்றவள் என்றொரு படம்.   இளம் கதாநாயகன்-நாயகி.   ஞாபகமில்லை.  ஆனாலும் ரத்தம் சிந்தாமல், அடிதடி இல்லாமல் இனிமையான காதல்  கதை!

அந்த வரிசையில் இரண்டு நாட்களுக்குமுன் ஷெர்டில் என்றொரு படம் நெட்ப்ளிக்சில் பார்த்தேன்.  இந்த வருடம் ஜூன் மாதம்தான் ரிலீஸாகி இருக்கிறது.  ஆகஸ்ட் மாதம் ஓ டீ டீ க்கு வந்து விட்டது!

முன்பெல்லாம் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியங்களில் அவார்ட் படங்கள் போடுவார்களே..   கொஞ்சம் அப்படியான படம்.  கொஞ்சம்தான்.  ஆனாலும் நிறைய இடங்களில் ரசிக்கலாம்.  உண்மை சம்பவங்களை ஒட்டி தயாரான படம்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டம்.  வனவிலங்குகளுக்கான இடமா, உரிமையா, மனிதனுக்கான இடமா, உரிமையா?  யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்?  அரசாங்கம் யாருக்கு அதிகம் கவலைப்படுகிறது?  யாருடைய இடத்தில யார் புகுந்தார்கள்? 

வனத்தை ஒட்டி இருக்கும் சிறு கிராமம் ஒன்று.  மூன்று வருடங்களாக பொய்த்துவிட்ட இயற்கை.  புலிகளின் ஊடுருவல் ஒரு பக்கம்.  வறுமை ஒரு பக்கம்.  அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் தலைவன் மக்களுக்கு உதவ வேண்டி நகரத்துக்கு வந்து அதிகாரிகளை சந்திக்கிறான்.

வழக்கம்போல அரசு அதிகாரி!  கிராமத்தான் என்கிற எள்ளலுடன் அலுத்துக் கொண்டு பதிலளிக்கிறான்.  'உனக்கு உதவக்கூடிய நிலையில் யாரும் இல்லை' என்பதை சுற்றி வளைத்துச் சொல்லும் அந்தக் காட்சிகள் ரசிக்கத் தக்கவை.  படிக்காத ஆனால் நேர்மையான கிராமத்தானின் அப்பாவித்தனமும், நகரத்தானின் நக்கலும் வெளியாகும் வசனங்கள்.  ("ஆன்லைன்ல செய்யணும்"  "நான் எந்த லைன்ல வேணும்னாலும் நிற்கத் தயார்)

பிலிப்பிட் ஊரைப்பற்றி ஒரு கதை உண்டு.  நிஜத்தில் நடப்பது தான் என்கிறார்கள்.  வறுமையில் வாடும் அந்த கிராம மக்கள் தங்கள் வீட்டிலுள்ள வயதானவர்களை வனத்துக்குள் அனுப்பி புலிக்கு இரையாகச் செய்கிறார்கள்.  பிறகு மிச்ச மீதி உள்ள உடலை எடுத்து வந்து தங்கள் வயல்களில் போட்டு அரசாங்கத்திடம் லட்சக்கணக்கில் நிவாரணம் பெறுகிறார்கள்.  அரசாங்கத்தில் அப்படி ஒரு திட்டம் இருப்பதை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

பயனேதும் இல்லை என்று தெரிந்துகொண்டு அந்த அரசாங்க அலுவலகத்தை விட்டு வெளியே வரும் கங்காராம் (அதுதான் அவன் பெயர்) அங்குள்ள நோட்டீஸ் போர்டில் மேற்சொன்ன இந்த அறிவிப்பைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான்.

தன் குடும்பத்தை சம்மதிக்க வைக்க தனக்கு பிளட் கேன்சர் என்றும் இன்னும் மூன்று மாதம்தான் வாழ்வு என்றும் பல மருத்துவமனைகள், பல டாக்டர்கள் நகரில் சொல்லி விட்டதாகச் சொல்கிறான்.  தக்க சமயத்தில் ஊர்க் கூட்டத்தில் பேசும்போது மற்றவர்களைத் தூண்டி விட்டு, யாரும் தியாகம் செய்ய போகத் தயாராக இல்லாத நிலையில் தானே வனம்புகுந்து புலியிடம் அடிபட்டு உயிர்விட தீர்மானிக்கிறான்.
கங்காராம் சிலநாட்களுக்கான சப்பாத்தி வெங்காயத்துடன் வனத்துக்குள் புகுந்து நடக்கிறான்.  புலியிடம் தன்னை ஒப்புவித்து, அதனால் உயிர் போனவுடன் தனது உடலை எடுத்து கிராமத்தில் போட்டு பணம் பார்த்து கிராமம் கொஞ்சமாவது காசு பார்க்க வேண்டும் என்பது அவன் எண்ணம்.  தான் பலியான இடத்தை இடத்தை அடையாளம் காட்ட, கடைசி நிமிடத்தில் வானத்தில் கொளுத்திப் போட, ராக்கெட்களும் வைத்திருக்கிறான்!

படத்தில் இந்தக் காட்சியெல்லாம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் நடுவில் அவன் ஜிம் அஹ்மதை சந்தித்த உடன் படம் சுவாரஸ்யமாகிறது.  

ஜிம் அஹ்மதின் பெயரில் உள்ள ஜிம்முக்கு காரணம் ஜிம் கார்பெட்!  ஆனால் இவன் செய்யும் தொழிலோ புலிகளை வேட்டையாடி பணம் பார்ப்பது.  வில்லனாக இருந்தாலும் ஜிம்முக்கும், கங்காராமுக்கும் நடக்கும் உரையாடல்கள் ரொம்பவே ரசிக்கத்தக்கவை.  அப்போது வரும் பாடல் வரிகள் கூட ரசிக்க வைக்கின்றன.. "இறந்த மலரின் உடலில் வாசனையைத் தேடும் சுயநல மனிதர்கள்"  "கடவுள் எங்கு இருக்கிறார்?"  "உங்கள் நம்பிக்கையில் இருக்கிறார்"  இப்படி..

கிராம மக்கள் ஒரு நிலையில் காவல் நிலையத்தில் சென்று கங்காராமை மீட்டுத்தரக் கோர, அவர்கள் ஜிம்முக்கும் சேர்த்து குறி வைக்கிறார்கள்.

கடைசி காட்சிகளில்...    இல்லையில்லை,  கடைசி காட்சிகளுக்கு கொஞ்சம் முந்தைய காட்சிகளில் வரும் கோர்ட் உரையாடல் வழக்கமான தமிழ்ப்பட உரையாடலைக் கொண்டிருந்தாலும், முடிவு இயல்பு.

இதை இயக்கி இருக்கும் சிரிஜித் முகர்ஜி புகழ்பெற்ற பெங்காலி இயக்குனர்.   படம் பார்த்த பிறகு இவரைப்பற்றி படிக்கும்போது ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கும் இவரது முந்தைய சில படங்களை பார்க்கும் ஆவலும் வருகிறது, கூடவே தயக்கமும் வருகிறது!  உதாரணமாக ஜட்டிஸ்வர், பேகம்ஜான் போன்ற படங்களை பார்க்கும் ஆவல் வருகிறது.  மெதுவாக ஜவ்வு மாதிரி கதை நகருமோ என்கிற பயமும் வருகிறது.  அப்படி வந்தாலும் கவலையில்லை.  ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து விடலாம்.  ஷெர்டில் படத்திலேயே அப்படிதான் செய்தேன்!!

இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடி இருக்கும் KK சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற பாடகர்.  அவர் பாடிய கடைசி திரைப்பாடல் இந்தப் படத்தில் வருகிறது.
=============================================================================================================

சென்ற வார புறா பதிவில் என் பாஸ் சொன்ன வார்த்தைகளை பதிவில் சேர்க்கவில்லை என்று சொல்லி இருந்தேன்.

கூட்டை எடுத்து வெளியில் வைக்க வேண்டும் என்று சொன்னதும் நான் கலங்கியதை பார்த்து அவரும் கலங்கி விட்டார்.  'அந்தப் புறா பெரிதாகும்வரை இங்கு இருக்கட்டுமே' என்றார்.  கூடவே, இன்னும் சில புறாக்கள் வந்து புதிய குஞ்சுகள் உருவானால் என்ன செய்வது என்றும் கேட்டார்.  நியாயம்தான்.  நெட் போட்டதும் அதே இடத்தில் வைத்து பால்கனி கம்பித் தடுப்பின்  கதவை திறந்து வைத்துக் காத்திருக்கலாம் என்றும் யோசித்தார்.

அப்புறம் சில கேள்விகள் கேட்டார்..!

"கரப்பு அதிகமாகிவிட்டது என்று பெஸ்ட் கண்ட்ரோலில் சொல்லி அவர்களும் வந்து மருந்து அடித்தார்கள்.   கூடை கூடையாக கரப்பு செத்து விழுந்து, அள்ளிப் போட்டோம்.  அது உயிரில்லையா?  முன்னர் இருந்த வீட்டில் எலிகள் குஞ்சு போட்டிருந்ததை எடுத்து வெளியில் விட்டீர்கள்.  பெரிய எலிகளை எலிப்பொறியில் பிடித்து வெளியில் விட்டீர்கள்.  அதிலும் சில எலிகளை அந்த பசை இருக்கும் அட்டையில் ஒட்டிக்கொள்ளவிட்டு அதிலிருந்து எடுக்கவே வராமல் ரத்தக்களரியாய் பிய்த்து எறிந்தீர்கள்.  வீட்டுக்கு வெளியே  பொந்திலிருந்த  குட்டி சாரைப் பாம்புகளை ஸ்பிரிட் ஊற்றி எரித்தீர்கள்..  அதெல்லாம் பாவமில்லையா?  (இதெல்லாம் கொஞ்சம் பழைய சம்பவங்கள்).  இதே புது வீட்டிலேயே ஒரு வவ்வால் வீட்டுக்குள் வந்து நம் எல்லோரையும் பயமுறுத்தியதும், அதை ஒன்றும் செய்ய முடியாமல் ஆட்டோக்காரரிடம் சொல்ல, அவர் வந்து அதை வேறு ஒன்றும் செய்ய முடியாமல் 'பச்சக்' என்று அடித்துக் கொன்று வெளியில் போட்டார்.  ஆபீஸில் கரையான் புற்று ஆங்காங்கே இருக்கிறது என்று அதே பெஸ்ட் கண்ட்ரோலில் சொல்லி அழித்தீர்கள்.  அது சரியா?  சொல்லுங்கள்..  நாய், பூனை, குருவி, புறா, காக்கை மட்டும் ஸ்பெஷலா?  எனக்கும் பாவமாகத்தான் இருக்கிறது.  என்ன செய்ய முடியும்? "

பேச்சிழந்தேன்!  
===============================================================================================================

பெண்கள் இந்தியாவின் கண்கள் என்பார்கள். எ வராது கிச்சன் சேமிப்பினாலும் கூட இந்தியா வாழ்கிறது என்பார்கள்!

குடும்பத்தின் வரவு, செலவு கணக்குகளை பார்க்க வழி சொல்லும் ஆடிட்டர் ஜி.ஆர்.ஹரி:

அமெரிக்க மக்களின் செலவு பழக்கம் வேறு மாதிரியானது. அவர்கள் கடன் வாங்கியாவது, கார் வாங்குவர்; வீடு வாங்குவர். இ.எம்.ஐ., கட்ட முடியாமல், வாங்கியதை வங்கியிடமே திருப்பிக் கொடுப்பர். சேமித்த பின் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. கடன் வாங்கி செலவு செய்வதுஎன்பது, அவர்களின் கலாசாரம். ஆனால், இந்தியர்களின் மனநிலை வேறு. முதலில், வருமானம் ஈட்ட வேண்டும்; பின், சேமிக்க வேண்டும். அதன்பிறகே, செலவு செய்ய வேண்டும் என்று நினைப்போம். நம்மூரில் பல குடும்பங்களில், பெண்களிடம் வரவு - செலவுகளை ஒப்படைத்து விட்டு, ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்பதையே, பல ஆண்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்... அது தான் பிரச்னையே!
ஒருவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கும் போது, அந்தப் பொறுப்பை சிறப்பாக செய்யும் சுதந்திரத்தை, அவருக்கு கொடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில், இந்த விதி தான் பின்பற்றப்படும்.

அந்த சுதந்திரத்தை, உங்கள் மனைவிக்கு கொடுத்து விடுங்கள். ஆரம்பத்தில் தவறுகள் செய்வார்; அவற்றை பெரிதுபடுத்தி கேள்விகள் கேட்க வேண்டாம். அனுபவங்களில் இருந்து தாமே கற்றுக் கொள்வார்.  வழக்கமாக, கணவர் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, 'பிக்சட் டெபாசிட்'டிலோ, ஷேர் மார்க்கெட்டிலோ முதலீடு செய்து வைத்தால், அதிலிருந்து வரும் வருமானத்துக்கு, கணவர் தான் வரி கட்ட வேண்டும்.  அதுவே, கணவர் தன் மனைவியிடம் வீட்டுச் செலவுக்காக, 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம்.

மனைவி, 40 ஆயிரம் ரூபாயை செலவு செய்து விட்டு, மீதியை பிக்சட் டெபாசிட்டிலோ, சீட்டு திட்டத்திலோ முதலீடு செய்கிறார் என்றால், அதிலிருந்து வரும் தொகைக்கு மனைவி தான் வரி கட்ட வேண்டும்.
இந்திய வருமான வரி சட்டத்தின் படி ஒரு தனிநபர், 2.50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டாம். அந்த வகையில், மனைவி முதலீடு செய்யும் விதத்தில், அதிலிருந்து வரும் வருமானத்துக்கு வரி கட்டும் சுமை கணவருக்கு வராது.  2.50 லட்சம் ரூபாய்க்குள் தான் மனைவிக்கு அந்த வருமானம் வருகிறது எனில், அவரும் வருமான வரி விலக்கு பெறுகிறார். இதை புத்திசாலித்தனமான வரித்திட்டமாகவும் அணுகலாம்.

================================================================================================================== 

சமஸ்தானத்தையே அய்யருக்கு கொடுத்த ராஜா...


==============================================================================================================

சென்னையில் சில இரவுகளில் மழை...   மாலை வேளைகளில் அடைப்பான அடைப்பு.. புழுக்கம்.  ஆனால் பகல்கள் வெயிலின் வெப்பத்தில் ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கிறோம்.    ரசித்த படங்களின் வரிசையில் அப்படி இரண்டு...!

அப்பா...  இந்த வெயிலுக்கு இதம்தான்..  ஆனால் புழுங்குகிறதே..   அதுசரி...   எப்படி வெளியில் வருவது?!



என்ன வெயில் அடிச்சால் என்ன...  அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா?!!

========================================================================================================================

ஜோக்ஸ்...  ஜேக்ஸ்...   குமுதம் ஜோக்ஸ்...

இது அப்போ!


இரண்டு காலி என்பதற்கு பதில் இற்காலி என்று சொல்லலாமோ!


மாமியாருக்கு ஒரு சேதி....


மை நேம் ஐஸ் கர்ணன்...   கும்பகர்ணன்...


சாதா ஸ்பெஷல் சாப்பிடவே வயிறு இல்லை...


84 கருத்துகள்:

  1. எல்லாத்தையும் படிச்சுட்டேன். ஜோக்ஸ் எல்லாம் அரதப் பழசு. கரப்பு, பாச்சை போன்றவற்றோடு எறும்புகளையும் சேர்த்துக்குங்க. எனக்கு எறும்புன்னாலே அலர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.  எறும்பைச் சொல்லும்போது கொசுவையும் சேர்த்துக் கொள்ளலாம்!

      //ஜோக்ஸ் எல்லாம் அரதப் பழசு.//

      அப்பாடி..  எங்கே, இப்போ வந்த ஜோக்ஸையே போட்டிருக்கீங்களேன்னு சொல்லுவாங்களோன்னு பார்த்தேன்!!

      நீக்கு
    2. கீசா மேடம் அரதப்பழசுன்னா அது 18ம் நூற்றாண்டில் வந்திருக்குமோ?

      நீக்கு
    3. எழுபதுகளில் நான் குமுதம் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சப்போ வந்தவைனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. எப்படியோ..  பழசைதான் பகிர்ந்திருக்கிறேன்!

      நீக்கு
  2. என்னடா, காலங்கார்த்தாலே வந்துட்டாளேனு பார்க்கிறவங்களுக்கு! எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்குப் போறாங்க. என்னை விட்டுட்டு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.. யார் உங்களக்கு துணை? சாப்பாடு?

      நீக்கு
    2. குட்டிக் குஞ்சுலு தான் கேட்டுண்டு இருந்தது, பாட்டி எப்படித் தனியா இருப்பானு? அதான் வீட்டு வேலைகள் சரியா இருந்தனவே! இப்போத் தான் நாளைக்கு அமாவாசைக்கு அரைச்சுட்டு என்னோட விருப்பமான புழுங்கலரிசிக் கஞ்சியைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு வந்தேன், நாரத்தங்காய்த் துணையுடன். கஞ்சியில் உப்புப் போறலை. நாரத்தங்காயில் உப்பு. :) ஒண்ணுக்கொண்ணு சரியாகி விட்டது,

      நீக்கு
    3. புழுங்கலரிசிக் கஞ்சி, நார்த்தங்காய்.. ம்ம்ம்ம்... வாய்க்கு எதுவும் சுவைக்கவிலையோ...

      நீக்கு
  3. பட விமரிசனம் நன்றாய் இருக்கிறது. ஆனால் என்னால் தான் உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை. அடுத்தடுத்து ஏதேதோ வேலைகள், பிரச்னைகள். மனம் எதிலும் ஈடுபடவில்லை. ஏதோ நாட்கள் தண்டமாய்க் கழிச்சுட்டு இருக்கேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப்படத்தை ஆரம்ப கட்டங்களில் ஓட்டி ஓட்டிதான் நானே பார்த்தேன்.

      நீக்கு
  4. காலங்கார்த்தாலே வந்து புலம்பிட்டேன்னு நினைக்காதீங்க. இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமையவும் மன அமைதியும்/ஆரோக்கியமும் பெற வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே... அப்படி எல்லாம் இல்லை. உங்களை சீக்கிரமே பார்த்தது சந்தோஷமே..

      நீக்கு
  5. குடை பிடித்துக் கொண்டு சாப்பிடுவது தமிழ்நாட்டிலா?

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கார்ட்டூன் எழுபதுகளில் குமுதத்தில் வந்தது என நினைக்கிறேன். யாஹ்யாகான் ஆட்சியின் போதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். "நான்தான் பேசுகிறேன்" டெலிபோன் உரையாடல் தொடர் வந்த காலகட்டம்.

      நீக்கு
  7. புலிக்கு பலி விடயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    நகைச்சுவைகள் இரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  8. பட விமரிசனம் நன்று. 
    எங்களுடைய  செலவுகள் பலவும் ஆன்லைன் பேமென்ட் என்பதால் பாஸிடம் சில்லறை மட்டுமே கொடுக்கப்படும். சேமிப்பு என்பது நேரடி. அதாவது பேங்க் அக்கவுண்டில் இருந்து எடுப்பதில்லை. தற்போது வயதானவுடன் செலவுகளும்  கம்மி. 

    கவிதையை காணவில்லை. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவலாம். கவிதை.. புதிதாக ஒன்றும் தோன்றவில.லை!

      நீக்கு
  9. விடியலின் வியாழன்..

    ( இது வேற விடியல்)

    அன்பின் வணக்கங்களுடன்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  10. செர்டில் அவசியம் பார்க்கிறேன் . நன்றி

    பதிலளிநீக்கு
  11. வழிக்கு வழியானவர்களை புலிக்குப் பலியாக்கி வயிற்றுப் பசி தீர்த்துக் கொள்ளும் மனிதர்கள்.. மனிதனின் குரூரம் இதைத் தாண்டியும் செல்கின்றது.. வியப்பு ஒன்றும் இல்லை..

    அதற்கு ஏன் அவ்வளவு பயங்கரம்?.. ரோட்டோரக் கடையில் ஷவர்மா வாங்கித் திங்கலாமே.. நிதியுதவியும் கிடைக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களது வறுமை இப்படி கொடுமை செய்ய வைத்திருக்கிறது.  படிக்கும்போதே பகீர் என்னும் செய்தி.

      நீக்கு
  12. எல்லா உயிர்களுக்கும் செந்தண்மை பூண்டு ஒழுக இயலாது தான்!..

    விஷ ஜந்துக்களை அகற்ற வேண்டியது.. சரி.


    ஆனாலும் மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இந்தப் படம் பற்றி பகிர நினைத்தபோதுதான் நானே இந்த செய்தி அறிந்தேன்.

      நீக்கு
  13. அந்த பாடல் வரிகள் சிறப்பு...

    இத்தனை படங்களா...?!!!பார்த்தவை : கடாவர், வீட்ல விஷேங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  பாடல் வரிகள் சிறப்புதான்.  இந்த இராணு தவிர இன்னமும் கூட பாத்திருக்கிறேனே!

      நீக்கு
  14. பாஸுக்குப் பக்கத்தில் அடிக்கடி போய் நிற்கக்கூடாது! நின்றால், இப்படித்தான் சில பல கேள்விகளை அள்ளி வீசுவார். அப்புறம் வியாழனைத் தேடவேண்டிவரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானெங்கே பக்கம் சென்றேன்? கலங்கி நின்று என்னருகே அவர்தான் வந்து வந்து என் முகம் பார்த்து மூடை மாற்றினார்!

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம். பாஸ் கேட்ட விஷயங்கள் மனதைப் பிசைந்தன. நாம் இப்படித்தான் பல பாவங்கள் செய்கிறோம். :((
    ஒரு முறை ஹார்பிக்போட்டு டாய்லெட் கழுவிக் கொண்டிருந்த பொழுது ஒரு சிலந்தி அதில் விழுந்து இறந்து விட்டது. அந்த சமயத்தில் ஆன்மீக புத்தகங்கள் வேறு நிறைய படித்துக் கொண்டிருந்தேனா.. சின்ன உயிர், பெரிய உயிர் என்றெல்லாம் உண்டா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே, எனக்குள் இருக்கும் ஆன்மா தானே அந்த சிலந்திக்குள்ளும் இருக்கிறது..? என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் காலத்துப் படமான ரத்தக்கண்ணீரில் எம் ஆர் ராதா இதைப்பற்றி எள்ளியிருப்பாரே

      நீக்கு
    2. ரத்தக் கண்ணீரா? எப்போ வந்தது?

      நீக்கு
    3. சிலந்திக்கேவா?  ஹம்மோவ்..  அப்போ நான் ரொம்ப கொடிய மனதுக்காரன் போலவே...

      நீக்கு
    4. @நெல்லை: எங்களுக்கெல்லாம் ராதா ரவியைத்தான் தெரியும்.

      பானுமதி வெங்கடேஸ்வரன்

      நீக்கு
    5. ராதா ரவியா?  எனக்கு ஜெயம் ரவியைத்தான் தெரியும்.

      நீக்கு
  16. முதல் பகுதிக்கு ....பாஸ் கேட்ட கேள்விகள் என் மனதுள்ளும் உண்டு. மகனோ கேட்கவே வேண்டாம். எறும்பைக் கூட சாக்லேட் சர்க்கரை போட்டு வளர்ப்பவன், நாங்கள் எங்கள் வீட்டில் பல வருடங்களாகப் பின்பற்றுவது, ஊரிலும் கூட பாம்பைக் கொன்றது கிடையாது வீட்டில் நிறைய பாம்புகள் வரும் ஊரில் இருந்தப்ப.

    அது போல எலிகள், கரப்பான், எல்லாம் வராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதுண்டு.

    பானுக்கா சொல்லியிருப்பதுதான் அப்படியே.

    அது போல எறும்பு இவற்றிற்கு வீட்டின் ஓர் ஓரத்தில் சர்க்கரை அல்லது இனிப்புகள் அல்லது கடலை இப்படி அவற்றின் விருப்பத்தைப் போட்டு வைத்துவிட்டால் அவை அங்கு குவிந்து விடும். உள்ளே வராது.

    அனுபவத்தில்...கண்டவை

    இதன் அடிப்படையில் ஒருகதை கூட எழுதியிருக்கிறேன் இன்னும் கொஞ்சம் வேலைகள் இருக்கின்றன அதில்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணும் போடாமலேயே எங்க வீட்டில் பெரிய பெரிய சிவப்பு எறும்புகள் ராஜ்ஜியம் தான்! காலம்பர எழுந்ததும் ஒரு நாழி அவற்றை எல்லாம் விரட்டிட்டுப் பின்னரே காஃபி. :(

      நீக்கு
    2. எறும்பையெல்லாம் காப்பாற்றியயது இல்லை கீதா..   ஜெயின் துறவிகள் தாங்கள் நடக்கும் பாதையில் புழு பூச்சி இருந்து மிதி பட்டுவிடக் கூடாது என்று மயில் தோகையால் பெருக்கிக் கொண்டே செல்வார்களாம்..  புண்ணியாத்மாக்கள்.

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம்....ஜெயின் துறவிகள் கேட்டிருக்கிறேன்....பார்த்தும் இருக்கிறேன். ஹூம் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை...

      கீதா

      நீக்கு
    4. எல்லோருமே (அவ்வளவு) நலலவங்களா இருந்துட்டா நாடு தாங்காது!

      நீக்கு
  17. கனடாவில் இருந்து வரை ஒரு நாளைக்கு ஒரு படம் (தமிழ், மலையாளம், தெலுங்கு, எப்போதாவது ஹிந்தி, ஆங்கிலம்) என்று பார்த்தேன். வெப் சீரிஸுகளும் இதில் அடக்கம்.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு நான் படங்களாகப் பார்த்துத் தள்ளுகிறேன்.  திடீரென நிறுத்தி விடுவேன்!

      நீக்கு
  18. வீட்டுல விசேஷங்க படம் 'பதாயி ஹோ' என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக். நான் கூட அதற்கு விமர்சனம் எழுதியிருந்தேன். ஆயுஷ்மான் குரானா நடித்தது. 'ப்ரோ டாடி' வேறு கதை.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதாயி ஹோ தான் மலையாளத்தில் ப்ரோ டாடி என்று வந்தது.

      நீக்கு
  19. கவிதையும், கவர்ச்சிக் கன்னியும் மிஸ்ஸிங்.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
  20. சஸ்பென்ஸ் த்ரில் படங்கள் என் முதல் சாய்ஸ்.//

    ஹைஃபைவ் ஸ்ரீராம். எனக்கும் அதேதான்.....

    அல்ப சஸ்பென்சாக இருந்தாலும் ஆ என்று பார்ப்பேன்! //

    ஹாஹாஹா இது ஒரு காலத்தில் ஆனால் இப்போதெல்லாம் இல்லை...முதலில் பார்க்க வாய்ப்பு கிடைச்சாத்தானே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வரும் படங்களில் 90 % சஸ்பென்ஸ் பாடங்கள்தான்.  சிசி டீவி புட்டேஜ், பிளாக் போர்டில் செய்தித் துண்டுகளாக ஒட்டி வைபபது, யாரோ பேசுவதிலிருந்து திடீரென பொறி கிடைப்பது...    ஒரே மாதிரி....

      நீக்கு
    2. ஓஹோ....ஸ்ரீராம் படங்களின் பெயர் அப்புறமா எனக்கு அனுப்புங்க....நான் குறித்து வைத்துக் கொண்டு பார்க்க சான்ஸ் கிடைக்கறப்ப பார்க்கிறேன்..

      கீதா

      நீக்கு
  21. கடாவர் - பார்த்திட்டீங்களான்னு கேட்க நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க

    எப்படி இருக்கு ஸ்ரீராம் இந்தப் படம்...எப்படியும் என்னால் பார்க்க முடியாது ஹாட்ஸ்டாரில் இருக்கு ஆனால் ப்ரீமியம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கு...   அமலா பால் தானே தயாரித்து கதாநாயகியாய் நடித்திருக்கும் படம்.  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

      நீக்கு
  22. ("எதெது மொக்கை படம் என்று நாம் பார்த்து பிரிக்கவே தேவையில்லை.. அப்பா சரியாக அவற்றை செலெக்ட் செய்து பார்க்கிறார்" - மகன்கள்)//

    ஹாஹாஹா ஹையோ ஸ்ரீராம் சிரித்து முடியலை...இந்த மாதிரி டயலாக்ஸ் வீட்டின் lively environment!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. நீங்கள் விமர்சனம் செய்திருக்கும் படம் வித்தியாசமாக இருக்கும் போலத் தெரிகிறது. நீங்கள் கோட் பண்ணியிருக்கும் வசனங்கள் செம. வித்தியாசமான கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. சமஸ்தானம்/ சிலேடை ரசித்தேன்

    ரெண்டு படங்களும் பார்த்ததும் புன்னகை வந்தது,

    சேமிப்பு தகவல்கள் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. சுவையான மிக்சர்.! OTT தளங்கள் சில இருந்தாலும் படம் பார்க்கப் பிடிப்பதில்லை.பதிவைப் படித்த சூட்டோடு ஏதாவது பார்ப்பேனோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்காவது ஒரு ஆரம்பம் இருக்க வேண்டுமல்லவா? தொடங்கினால் தொடரும்!

      நீக்கு
  26. பட விமர்சன்ங்கள் நன்று.
    நானும் படங்கள் பார்த்து கொண்டு இருக்கிறேன். பிள்ளைகள் நன்றாக இருக்கிறது பாருங்கள் என்று சொல்லும் படங்கள்.
    கொரியன் தொடர் நாடகம் பார்த்தேன்.

    பாஸ் சொன்னது போல கரப்பான் பூச்சியை அடிக்க கஷ்டப்பட்டு பிடித்து வெளியே விட்டு விடுவேன். எறும்புகள் வந்து விட்டால் மண் குமித்து இருக்கும் அப்படியே அள்ளி வெளியே போட்டு விடுவேன்.
    மறுபடி வராமல் இருக்க ஓட்டைகளை அடைத்து விடுவேன்.

    எலி வராமல் இருக்க அது வரும் வழிகளை அடைக்க வேண்டும்.

    முன்பு எலிகளை பிடித்து வெளியே கொண்டு விட்டு இருக்கிறோம். அதன் பின் அது வரும் வழிகளை அடைத்து வராமல் செய்து விட்டோம். (இது எல்லாம் மாயவரத்தில்.)

    கொசுவுக்கு முன்பு வலை கட்டி படுப்போம். இப்போது கொசு வரும் நேரம் ஜன்னல் , கதவுகளை அடைத்து வைத்து விடுகிறோம். சிறிது நேரம் கழித்து திறந்து விடுவோம். அப்படியும் கடிக்காமல் இருக்க
    ODOMOS தடவி கொள்கிறோம். முடிந்தவரை கடைபிடிக்கலாம்.ஈ, எறும்பை கொல்லாமல் இருக்கலாம், ஆனால் கொசு அது கஷ்டம் தான். கை அனிச்சையாக தட்டி விடும் போது சில நேரம் கொசு செத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு சாதுவாக உத்தமனாக எல்லாம் நான் இல்லை கோமதி அக்கா.  எனவே புறாவுக்காக ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.  அதாவது மிச்ச தப்பை எல்லாம் செய்துவிட்டு, ஏதோ இதில் மட்டும் நியாயம் பேசிக்கொண்டு...

      நீக்கு
  27. மருமகள் ஜலதோஷத்திற்கு நல்ல மருந்து சொல்கிறாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா!!!!! ஹாஹாஹா
      ஒரு வேளை வெங்காயம் வழக்கம் இல்லாமல் இருக்கலாம் இல்லைனா ஒரு கிலோ வெங்காயம் நறுக்கச் சொன்னாலும் சொல்லிடுவாங்க...

      கீதா

      நீக்கு
    2. ஐயே... மூக்கிலிருந்து ஒழுகி வெங்காயத்தில் எல்லாம்...!!

      நீக்கு
  28. @கீதா அக்கா: வந்தாச்சு. அதென்ன ஜோக்கில் அரதப்பழசு? சிரிப்பு வந்துச்சா இல்லையா?

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
  29. மனம் எதிலும் ஒட்டாமல் இருப்பதால் OTT தளங்கள் இருக்கும் வசதியில் கன்னாபின்னா என்று படங்கள் பார்ப்பது வழக்கமாகி விட்டது. மூளையை ரொம்ப செலவழிக்கவே வேண்டாம் பாருங்கள்.. ஓரிரு மணி நேரங்கள் அரைமயக்க நிலையில் இருக்கலாம்.//

    ஹாஹாஹா இதுக்கும் ஹைஃபைவ் ஸ்ரீராம். அதை ஏன் கேட்கிறீங்க, மனது எதிலும் இல்லை. எனக்குப் படம் பார்க்கும் வாய்ப்ப்பு கம்மி எனவே யுட்யூபில் ஏதேனும் சுவாரசியமானதைப் பார்க்கிறேன். எதிலும் ஒன்றுவதில்லை. எதையோ ஏதோ ஏனோதானோவென்று செய்து கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..எதிலும் ஒன்றுவதில்லை. எதையோ ஏதோ ஏனோதானோவென்று செய்து கொண்டிருக்கிறேன்..//

      இப்படித்தான் இருக்கு நம்ம கதையும்!.
      டிவியில் யூட்யூப், ஓடிடி எல்லாம் இருக்கிறது. அன்றுகூட வீட்டில் Nana Patekar பற்றி பிரஸ்தாபிக்க நேர்ந்தது. நல்ல படங்கள் சிலவற்றைத் தந்த அருமையான கலைஞன். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத மனிதன். அமேஸான், Zee 5-ல், தேடிப் பார்க்கவேண்டும் என்று பேசினேன். ஆனால் டிவி பக்கம் போகவில்லை. கிரிக்கெட் இருந்தாலொழிய அப்பா டிவி பக்கமே வருவதில்லை என்று அங்கலாய்க்கிறார் மகள்..

      சில சிறுகதைகள் படித்துக்கொண்டிருக்கிறேன் சமீப காலமாக. அதுவும் எப்போவோ வாங்கிய புத்தகங்களிலிருந்து! எழுதுவது மிகவும் குறைந்திருக்கிறது எனக்கே கவலை தருகிறது!

      நீக்கு
    2. எனக்கும் தான். ஏதோ எழுதி ஒப்பேத்திக் கொண்டிருக்கேன். ஒண்ணும் சுவாரசியமா இல்லை.

      நீக்கு
    3. எல்லோரும் ஒரே மூடில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.  வெங்கட் கூட இப்படியான மனநிலையில்தான் இடைவெளி விட்டிருக்கிறார் போல..

      நீக்கு
  30. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படம் Sherdil என எழுதப்பட்டிருந்தாலும் உச்சரிக்கவேண்டியது ’ஷேர்தில்’ என்று. ஷேர் தில்(Dil) . ’ஷேர்’ என்பது (உருது, பாரசீக, ஹிந்தி மொழிகளில்) சிங்கம். ’தில்’ Dil என்பது இதயம் என்று தெரியாதவருண்டோ! {Dil என்றொரு ஹிந்தி படம் .ஆமீர் கான், மாதுரி தீக்ஷித் (1990)}. ஷேர், தில் என்கிற இரு வார்த்தைகள் சேர்ந்து ’ஷேர்தில்’ என ஒரே வார்த்தையாய், ஒரு சொல்லாடலாய், ஆகிவிட்டிருக்கிறது. அர்த்தம் : Lion heart (lion-hearted). இங்கே சிங்கத்தைப்போன்ற இதயம் கொண்டவன் எனப்பொருள்.

    பங்கஜ் த்ரிப்பாட்டி (Pankaj Tripathi), கங்காராமாக நன்றாக நடித்திருக்கிறாராமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஏகாந்தன் ஸார்..  ஓரளவு தெரிந்த ஹிந்தியில் ஷேர் என்றால் சிங்கம் என்றும் தில் என்றால் இதயம் என்றும் அறிவேன்.   சேர்த்து யோசிக்க விட்டு விட்டேன்!!

      பங்கஜ் திரிபாத்தியை முதன்முறை பார்க்கிறேன்.  நன்றாகச் செய்திருக்கிறார்.    நீரஜ் கபியும் நன்றாகவே செய்திருக்கிறார்.

      நீக்கு
    2. பங்கஜ் த்ரிப்பாட்டி நல்ல நடிகர் எனப் பெயர் வாங்கியிருக்கிறார் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில். சோனியில் மகளிர் கிரிக்கெட் (வரவிருக்கும் இங்கிலாந்து தொடர்) விளம்பரத்தில் ஸ்ம்ருதி மந்தனாவுடன் வருபவர் (crystal ball-ல் காட்சிகள்) இவரே.

      நீக்கு
  31. படம் பார்த்து பல மாதங்கள் வேலைகளுடன் பேரன் இருப்பதில் பார்க்க முடியாது.

    ஜோக்ஸ் ரசனை.

    மனிதர்களை புலியிடம் அனுப்புவது படிக்கும் போதே மிகுந்த வருத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம்ஜி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களில் கடாவர் இன்னும் பார்க்கவில்லை. நிறைய படங்கள் பார்த்தாலும் சில நினைவில் நிற்பதில்லை. ப்ரோடாடி இப்போதைய வாழ்க்கை முறை பற்றிய படம் என்றாலும் எடுத்த விதம் பரவாயில்லை.
    இப்போது பிள்ளைகளின் ரசனை வித்தியாசமாக இருக்கிறது. மாஸ் என்ற ரீதியில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புலியைப் பற்றிய படம் வேதனையாக இருக்கிறது. வறுமையால் இப்படியும் கூட நடக்கிறதா என்று.

    சேமிப்பு பற்றிய தகவல் மிகவும் நல்ல தகவல். சேமிப்பு மிக மிக அவசியம். கலந்து ஆலோசித்து செய்வதால் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஆண்கள் பலர் குடித்துவிட்டுப் பணத்தைச் சீரழிப்பதால் அப்படியான குடும்பங்களில் பெண்கள் கண்டிப்பாகச் சேமிப்பில் ஈடுபடுவது அவசியம். அவர்களின் கண்ணில் படாமல் பாதுகாத்து சேமித்தலை கண்கூடாகப் பார்த்துவருகிறேன்.

    துளசிதரன்








    பதிலளிநீக்கு
  34. சமஸ்தானம் பற்றிய செய்தியையும், படங்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!