வியாழன், 8 செப்டம்பர், 2022

வாட்ஸப் பேஸ்புக்கோ ஃபார்வேர்டியோ ஸின்ட்ரோம்.

 இந்த வியாதி இன்று நிறைய பேர்களுக்கு பரவி இருக்கிறது. 

வாட்ஸாப்பில் சற்றே நீளமாக எதையாவது பார்த்தால் போதும்.  விரல் துறுதுறு என்கிறது.  அவ்வளவுதான் பார்வேர்டிங் படலம் தொடங்கி விடுகிறது.

நல்லவேளையாக என்னிடம் இந்த வியாதி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!  ஆனால் சமயங்களில் நானும் கோவணம் கட்ட நேர்ந்ததுண்டு!

மறைந்த என் மாமாவுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது (பயப்படாதீங்க..  அவர் உயிருடன் இருந்தபோது!)  "இன்னிக்கி இந்த பாலாஜி செய்திருக்கும் விஷயம் மாதிரியே என் நண்பனும் செய்திருக்கிறான்.."

"ஓ..." அவர் வேறு எதிலோ கவனமாயிருக்கிறார் என்று பொருள்.  ஒன்று சுடோகுவில் அல்லது தொலைக்காட்சியில்.  இலலாவிட்டால் ஒற்றை வார்த்தையில் சே..  ஒற்றை எழுத்தில் பதில் வராது...ஆனால் ஓ என்பது கேட்டுக்கொள்ளும் சொல் என்பதாலும் அது ஒரு பொருளைக் கொடுப்பதாலும் அதை வார்த்தை என்றும் சொல்லலாமோ?!!

"அதுவும் அந்த பாலாஜி ஊட்டி என்று வேறு போட்டிருக்கே..   உங்கள் நண்பரா?  உங்களுக்கு ஏதும் தெரிந்தவரா?"

ஊட்டி என்கிற வார்த்தை அவரை சுறுசுறுப்பாக்கியது.  அதனுடனான பந்தம் மட்டுமே பல வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு மகிழ்வான விஷயம்.

"யாரு பாலாஜியா?  ஊட்டியா?  என்ன விஷயம்?"

"நீங்கள் அனுப்பியிருந்த பார்வேர்டில்தான் இருந்தது...   ஞாபகமில்லையா?"

"என்ன இருந்தது?"

விவரம் சொன்னேன்.\\

"அப்படியா?  இதோ படிக்கிறேன்.."

"சரியா படிக்கலையா?  படிக்காமலா அனுப்பினீங்க..?"

"ஒரே சமயத்தில் ரெண்டு மூணு க்ரூப்ல வந்திருந்தது.  அதைப் பற்றி என் ப்ரெண்ட்ஸ் கூட ஏதோ பேசிக்கிட்டாங்க.. அதுதான் உடனே அதை உனக்கும் இன்னும் சிலருக்கும் பார்வேர்ட் செய்தேன்.  நீளமாய் இருந்தது.  அதனால் படிக்கவில்லை"

"நானும் க்ரூப்களில் நீள நீளமாய் எதுவும் வந்தால் படிக்க மாட்டேன்.  இதை நீங்கள் தனியாய் எனக்கும் அனுப்பவும் 'ஏதோ விஷயம்' என்று படித்தேன்" என்றேன்.

இது மாதிரி சமையல் குறிப்புகள், அதைவிட மருத்துவக் குறிப்புகள், பழைய இலக்கியம் என்கிற பெயரில் வரும் கதைகள், அரசியல் திட்டுகள் என்று இவற்றைப் படித்ததும் உணர்ச்சி வசப்படுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

"இதை அதிகம் பகிருங்கள்" என்று சிலதில் வேண்டுகோள் இருக்கும்.  "நீ தமிழனாய் இருந்தால் பகிரவும்" என்று சில உசுப்பேத்தி விடும். 'நீங்கள் பகிரும் ஒவ்வொரு பகிர்வுக்கும் ஒவ்வொரு பைசா பாதிக்கப்பட்டவர் கணக்கில் சேரும்' என்று சமூக சேவை முகம் காட்டும் சில.  சாத்தியமா என்று கூட யோசிக்காமல் பார்வேர்ட் செய்து புண்ணியம் பார்ப்பார்கள்!

பழைய தபால் கார்ட் "இதை உடனே பதினைந்து பேர்களுக்கு பகிர்ந்தால் திங்கட்கிழமை அன்று ஒரு நல்ல செய்தி வரும்.  இல்லாவிட்டால் இப்படிதான் திருச்சியில் ஒருவர் அலட்சியம் செய்தார்.. அவர் என்ன ஆனார் தெரியுமா?' டைப் மிரட்டல் பார்வேர்ட்ஸும் உண்டு!

படங்களும், குட்மார்னிங் குட் ஈவெனிங் குட்நைட் மெசேஜ்களும் வந்து குவியும் பாருங்கள்.  அவற்றை அழித்து அழித்து இடம் காலி செய்துகொள்ள வேண்டி இருக்கும்.  நான் அவற்றை என் அனுமதி இல்லாமல் திறக்கக் கோடானது என்று செய்து வைத்திருக்கிறேன்.  தேவைப்படும் படங்கள், விடீயோக்களை மட்டும் நான் டவுன்லோட் செய்துகொள்வேன்.

எங்கள் அலுவலகத்தின் இரண்டு டெக்னிக்கல் வாட்ஸாப் க்ரூப்கள் இருக்கின்றன.  சீரியஸாக அவற்றில் அலுவலக குறிப்புகள், தகவல்கள்தான் பகிரப்படும்.  திடீரென யாராவது ஒருவர் இது மாதிரி விஷயங்களை போட்டுவிட்டு வாங்கி கட்டிக்கொள்வார்!  "ஹிஹிஹி..  நான் இல்லீங்க...  என் பையன் கைல செல்லு..  அவன் ஏதோ விளையாடிட்டான்" என்பது போல சமாளிப்பார்கள்.

ஒரு மேட்ரிமோனி க்ரூப்பில் இப்படி பார்வேர்ட்ஸ் வந்தால் ஸ்ட்ரிக்ட்டான விளைவுதான்.  அவர் உடனடியாக குரூப்பை விட்டு நீக்கப்படுவார்!  திரும்ப உள்ளே சேருவது பெரிய வேலையாக இருக்கும்.  ஏதேதோ தடைகள் சொல்லும் அந்த ஆப்!

இன்னொரு வகை இருக்கிறது...

தெருவில் அந்தச் சிறுவனைக் கண்டதும் எதிரே வந்தவருக்கு சந்தேகம்.  சட்டென மொபைலை எடுத்து சரிபார்த்துக் கொண்டவர், அந்தச் சிறுவனை குண்டு கட்டாய் தூக்கி அங்கு வந்த ஆட்டோவில் போட்டுக் கொண்டவர் ஆட்டோக்காரரிடம் அட்ரஸ் சொன்னார்.  அவர் முகத்தில் ஒரு பரவசமும் திருப்தியும் தெரிந்தது.  'நாளை இதையே ஸ்டேட்டஸ் ஆக போட்டு விடலாம்.  அந்த முகவரியில் நிறுத்தி, முகவரி சரிபார்த்து சிறுவனைச் சேர்த்தபோது இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் அம்மா சந்தோஷப்படுவதற்கு பதில் அலுத்துப்போனாள்.  "ஒரு கறிவேப்பிலை கொத்துமல்லி கூட வாங்க விட மாட்டேன் என்கிறார்கள்..  இதற்காக நாங்களே போகமுடியுமா?  ஆமாம்..  இவன் மூன்று  வருடங்களுக்கு முன் காணாமல் போனான்தான்.  வாட்ஸாப்பில் உதவி கேட்டேன்.  அதற்குள் இவனே வீட்டுக்கு வந்து விட்டான்.  ஆனால் இன்றும் இவனை வெளியில் கடைக்கு அனுப்பினாலும், ஸ்கூலுக்கு அனுப்பினாலும்  யாராவது கொண்டுவந்து வீட்டில் விட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்.."

அசடு வழிய சற்றே கோபத்துடன் "கிடைத்து விட்டான் என்று பகிர வேண்டியதுதானே?"

"செய்தேனே..  அதை யாரும் நிறைய பகிரவில்லை போல..டேய்..  அங்கிளோட அப்படியே ஆட்டோவில் போய் அந்த லிஸ்ட்டில் உள்ளதை வாங்கி வந்து விடு...  ஸார்..  புண்ணியமா போகும்..  ஆட்டோவில் திரும்பி கொண்டு வந்து விட்டுடுங்க சார்..  வெளில விட்டால் மறுபடி இன்னொருவர் குறுக்க வந்துடுவார்"

இப்படி சமூக சேவை செய்யும்பார்வேர்ட்கள்,  காணாமல் போனவர் விவரம், ரத்த தானம், விபத்தில் இறந்தவர் போட்டோ என்று பார்த்தாலே பயப்படும் ஒரு போட்டோ எல்லாம் வருடக்கணக்கில் பார்வேர்ட் ஆகிக் கொண்டிருக்கும்.அதில் வெளியான வருடமும் தேதியும் இருக்காதா....   புதுசு என்று அனுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

செய்தித்த்தாள் போல பரபரப்பான செய்திகளை பார்வேர்ட் செய்யும் இவர்கள் இவற்றுக்கு வரும் மறுப்புகளை அலட்சியம் செய்து விடுவார்கள்!

வாட்ஸாப்பில் வருவதை பேஸ்புக்கில் எடுத்து பகிர்வார்கள்.  பேஸ்புக்கில் வருவதை வாட்ஸாப்பில் கொண்டு வருவார்கள்!  நல்லவேளை, நான் ட்விட்டரில் இல்லை!  இங்கும் படித்து, அங்கும் படித்து, எங்கும் அதையே படித்து...  அதனாலேயே எந்த மெஸேஜையும் படிக்கும் ஆர்வம் போய்விடுகிறது.  இதில் இன்னொன்று..  இவற்றை எடுத்து பத்திரிகைகளில் பகிரும் பழக்கம்...  அவர்களும் விதிவிலக்கல்ல!

சுஜாதா எழுதியது என்று வந்த ஒரு புளியோதரைப் பகிர்வு...  அது எங்கள் குடும்பத்திலேயே புயலைக் கிளப்பியது.  அது சுஜாதா எழுதியதாய் இருக்க முடியாது என்று சொன்னேன்.  சண்டை வந்தது.  கேஜிஜி  அதை உண்மையில் யார் எழுதியது என்று அகழ்ந்தாய்ந்து எடுத்து வெளியிட்டார்.  சத்தமே இல்லை.  இந்த புளியோதரை-சுஜாதா பகிர்வை தினமலர் வாரமலர்க்காரர்கள் வெளியிட்டார்கள்.  அதுவும் அந்துமணியின் 'பார்த்தது, கேட்டது, பகிர்ந்தது' பகுதியில்.  அங்கு இணையத்தில் நான் சென்று மறுப்பு எழுதினேன். ஒன்றும் ரெஸ்பான்ஸ் இல்லை!

சமீபத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதியே, அந்த வழக்கு சம்பந்தமாக தனக்கு வந்த ஃபார்வேர்ட்கள் பற்றி சொல்லி இருந்தார்.  நீதிபதியையும் விட்டு வைக்கவில்லை ஃபார்வேர்ட் ஜனம்!

விடுங்க சாமி..  அலுத்துப் போகுது!  க்ரூப்பில் ஒரு வசதி வந்திருக்கிறது தெரியுமோ...   க்ரூப்பில் யார் எதை பார்வேர்ட் செய்திருந்தாலும், அது தேவை இல்லை என்று நினைத்தால் அட்மின் அதை அழிக்க முடியும்.  முன்பு அதைப் பகிர்ந்தவர்தான் அழிக்க முடியும்.  எத்தனை நாட்களாய் இந்த வசதி இருக்கிறதோ, நான் சென்ற வாரம்தான் பார்த்தேன்.

=================================================================================================================

காமராஜரும் தேர்தல் வாக்குறுதியும் 

1954ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஆனால் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அல்லது மேலவை உறுப்பினராக ஆக வேண்டும்.

காமராஜருக்கு குறுக்கு வழியில் மேலவை உறுப்பினராகி முதல்வராவதில் விருப்பம் இல்லை. மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டே முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என விரும்பினார்,

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த திரு அருணாசலம் என்பவர் காமராஜருக்காக பதவி விலக முன்வந்தார். இடைத்தேர்தல் வந்தது.

அவருக்கு தொடர்பே இல்லாத குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோதண்டராமன் என்பவர் போட்டியிடுகிறார். இருவரிடையே கடுமையான போட்டி.

அப்போது அந்த தொகுதியில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் காமராஜரிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். காமராஜர் அப்போது முதல்வர். சரி என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் மக்கள் ஓட்டினை அள்ளியிருப்பார்.ஆனால் அவர் அப்படிச்செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்யமுடியாது என மறுத்துவிட்டு வருகிறார்.

அவருடன் இருந்தவர்கள் “என்ன அய்யா, இப்படி செய்துவிட்டீர்கள். செய்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? அவர்களது கோரிக்கை நியாயமானதும் கூட எல்லோரும் நமக்கே ஓட்டு போட்டிருப்பார்களே…” என்று குறைபட்டுக்கொண்டனர்.

அப்போது காமராஜர் ”மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான், தேர்தலுக்கு பிறகு செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் அதைச் சொல்லி நான் ஓட்டு கேட்கக் கூடாது. நான் இதைச்சொல்லி வாக்கு கேட்டால், எதிர்கட்சி வேட்பாளர் என்ன சொல்லி வாக்கு கேட்பார்?அவரிடம் அதிகாரமில்லையே? நான் எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகத்தானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்? “ என்று சொல்லி மறுத்துவிட்டார்.

காமராஜர் 64344 வாக்குகள் பெற்றார். கோதண்டராமன் 26132 வாக்குகள் பெற்றார். காமராஜர் வெற்றி பெற்று முதல்வரானார்,

இன்று எவ்வளவோ வாக்குறுதிகள். இலவசங்கள். அன்பளிப்புகள். வெற்றி பெற எல்லாவித சாகசங்கள். என்ன சொல்ல?


அன்பு கணேசன் என்னும் முன்னாள் நூலகர் கோரா கேள்வி பதிலில் 


====================================================================================


பிரபல திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ்:


1964 முதல், 1974 வரை விமானப் படையில் பணியாற்றினேன். 1977ல் பட்டினப் பிரவேசம் திரைப்படம் வாயிலாக, சினிமா நடிகரானேன்.

எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மனைவி அக்கவுன்டன்டன்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்தாங்க. மகள்கள் இருவருக்கும் கல்யாணமாகி விட்டது; மகன் எங்களோடு தான் இருக்கிறார். எனக்கு இப்போது, 79 வயது. ஆனாலும், வயதை பற்றி நினைப்பதே இல்லை. ஆரம்ப காலத்தில், வீட்டில் நான் ரொம்ப கெடுபிடியாக இருப்பேன். காலையில் காபி வர கொஞ்சம் லேட்டானாலும் வேண்டாம் என்று சொல்லிடுவேன். மதியம் சாப்பாடு சரியில்லைன்னா, எழுந்து போயிடுவேன். ஆனாலும், என் மனைவி எதிர்த்து பேசவே மாட்டாங்க. அந்த வயதில் மற்றவர்கள் சிரமம், எனக்கு பெரிதாக தெரியவில்லை.



இப்போது அப்படியில்லை... காலையில் என் மனைவி காபி கொண்டு வர லேட்டானா, சமையலறைக்கு போய், நானே காபி போட்டு குடிச்சிடுவேன். 'ஷூட்டிங்' போறதா இருந்தா, தேவையானதை நானே எடுத்து வைத்துக் கொள்வேன். நான் நன்றாக சமைப்பேன் என்பதால், அவங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. எனக்கு என்ன தேவையோ, அதை நானே சமைத்துக் கொள்வேன். அவங்களுக்கு ஏதாவது தேவையிருந்தாலும் செய்து கொடுப்பேன். மனைவியும், நானும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது ஆறுதலாக இருக்கிறது; அன்பு இன்னும் அதிகமாகிறது.

என்னை பொறுத்தவரை, வயதானவங்க தனியாக இருக்கிறது சரியானதல்ல. நான் கூட்டுக் குடும்பத்தை விரும்புகிறேன். என்னால் தனியாக வாழ முடியாது. சில நாட்களுக்கு முன், மனைவிக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக உணர்ந்தோம்.என் பொண்ணு என்னை, அவள் வீட்டுக்கு வரச் சொல்லிட்டா. அவள் வீட்டில் தேவையானதை கொடுத்தாலும், நினைப்பெல்லாம் என் வீட்டை சுத்தியே இருந்தது. ஒருவருக்கொருவர் அன்பாக, ஆதரவாக இருப்பதே சந்தோஷமான வாழ்க்கை.
வயதானாலே கோபம் அதிகமாகி விட்டதாக உணர்வாங்க. அது, இயலாமையின் வெளிப்பாடு. கோபம் வராத மனிதன் உணர்ச்சியற்றவன். இப்பவும் எனக்கு, அவ்வப்போது கோபம் வருகிறது. அப்படி எனக்கு கோபம் வரும் நேரத்தில், மனைவி அமைதியாக போயிடுவாங்க. அடுத்த முறை அவங்களை பார்க்கும் போது, அதை மறந்து போயிடுவேன். கண்ணாலேயே என்ன என்கிற கேள்வியும், ஒண்ணுமில்லை என்கிற பதிலும் தன்னால் வந்துடும்.


நாம் எதையும் கொண்டு வரவில்லை; கொண்டு போகவும் போறதில்லை. செங்கல்லும், சிமென்டும் கொண்டு கட்டிய பங்களாவும், நட்டும், போல்டும் நிறைந்த சொகுசு கார்களும் நிரந்தரமில்லை; அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!  


-ஏதோ புத்தகத்திலிருந்து... -

================================================================================


பாடலை உல்ட்டா செய்து பேஸ்புக்கில் பகிர்ந்தபோது...  தலைவர் பாடலை எப்படி நீ இபப்டி மாற்றலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார்.  மற்றபடி பாராட்டி இருந்தார்கள்.



=========================================================================================


தப்பிக்கிறானா?  ரொம்ப ஒன்றிட்டானா? சமயங்களில் முதல் பரிசே கிடைக்கலாம்!


==============================================================================================


இணையத்தில் ரசிக்க வைத்த படங்கள்..




======================================================================================

விகடன் 1930, 31 ஜோக்ஸ்...!


செருப்பாலடிச்சா மாதிரி கேள்விக்கு பல்லைத் தட்டிக் கைல கொடுத்த மாதிரி பதில்!

மூன்று ஜோக்ஸ்...   மூன்றாவது டாப்!


இந்த வருடத்தில்தான் மாலி என்ட்ரி!  அவரின் முதல் மூன்று படைப்புகள்..

பாட்டியின் சொல்ப ஆகாரம்!

விகடனார் உருவம் ஜனனம்!


குழந்தையின் நிறைவேற்ற முடியாத ஆசை!


கொஞ்சம் உண்மை; கொஞ்சம் விளம்பரம்; கொஞ்சம் நகைச்சுவை!


111 கருத்துகள்:

  1. காலை வணக்கம்

    ஓணப் பண்டிகை வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா.. வாங்க...
      இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  2. இங்கு யாரும் ஓணம் கொண்டாடுபவர்கள் இல்லையோ!!!! பரவால்ல வாழ்த்து சொல்லிக்குவோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் இல்லை; எல்லோரும் இருக்காங்க.  எல்லோருக்குமான பண்டிகைதானே...  கொண்டாடுவோம்.

      நீக்கு
    2. அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள். கஹ்ரைன்ல, இந்த நாள் பரவலாக அறியப்படும், கேரளத்தவர்கள் அதிகம் என்பதால். அங்கு இருந்த நாயர் மெஸ்ஸில் 2 1/2 தினாருக்கு ஓணம் சத்யா ஒரு டிபன் கேரியரில் வாங்கி வந்து இருவர் சாப்பிடுவோம். அந்த நாயர் இருந்தவரை எப்போதுமே ஒரு மதிய உணவு பார்சல் என்றால் இருவர் சாப்பிடும்படியாக அனுப்பித்தான் அவருக்குப் பழக்கம். அவரே, நான் அங்கு சென்றிருந்தபோது, என் ஆபீஸில் வேலை பார்ப்பவனைக் காண்பித்து, (அவன் எழுந்து சென்றவுடன்), ஒரு தினார் கொடுத்துட்டு ஒன்றரை தினாருக்குச் சாப்பிட்டால் என்னால் எப்படி கடை நடத்தமுடியும் என்றார்.

      நீக்கு
    3. ஒரு காலத்தில் தமிழகத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை ஓணம் தான். கேரளம் எடுத்துக் கொண்டு விட்டது.

      நீக்கு
    4. நெல்லை அண்ட் ஸ்ரீராம், கீதாக்கா ஓணம் சத்யா மிஸ்ஸிங்க் எனக்கு. எங்கள் வீட்டில் என்றால் செய்துவிடுவேன். இன்று என் மாமாவின் 90 வது பிறந்தநாள் (அவருக்கு ஓணத்தன்று பிறந்தநாள்) குடும்பம் சந்திப்பு. ஓணம் கொண்டாட்டம் அங்குதான் என்றாலும் வெளியில் சாப்பாடு சொல்லியிருப்பதால் வேறு மெனு. மாலையும் அது போல.

      கீதா

      நீக்கு
    5. ஒரு காலத்தில் தமிழகத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை ஓணம் தான். //

      அதே அதெ கீதாக்கா....நிறைய இருக்கு சங்க இலக்கியங்கள் வரலாற்றிலும்.

      அவர்கள் இன்னும் இங்கிருந்து பிரிந்த பகுதிதானே அது இங்கு கொண்டாடப்பட்ட பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காம இருக்காங்க..

      கீதா

      நீக்கு
    6. ஒரு மலையாள நண்பருக்கு வாழ்த்து அனுப்பியபோது நேற்றுதான் விசேஷம் என்று பதில் அனுப்பி இருந்தார்?​

      நீக்கு
  3. நல்ல காலம் இந்த ஃபார்வேர்ட் சின்ட்ரோமில் சிக்கிக் கொள்ளவில்லை...இது பத்தி நிறைய சொல்லலாம்...ஃபேஸ்புக்கில் இல்லை...வாட்சப் மட்டுமே அதுவும் முக்கியமான தகவல்களுக்கு, நெருங்கிய நட்புகளுடன் உறவுகளுடன் ஏதேனும் அவர்களும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் மகிழ்வார்கள் என்பது மட்டுமே அபூர்வமாக

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், முக்கியமானதை அது எல்லோருக்கும் போகணும் என்றாலே ஃபார்வர்ட் பண்ணுவேன். அதிலும் வாட்சப்பில் மட்டும்.

      நீக்கு
    2. பார்வேர்ட் செய்வதே தவறு என்று சொல்லவில்லை.   அதே க்ரூப்பில் ஒருவர் ஏற்கெனவே நுப்பி இருப்பார்.  இன்னொருவர், இன்னொருவர் என்று அதையே அனுப்புவார்கள். மற்றவர்கள் அனுப்புவதை பார்க்கவே /படிக்கவே மாட்டார்கள் என்று தோன்றும்!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் ஃபார்வேர்ட் பகுதியை டிட்டோ செய்கிறேன் அதுவும் இந்த உடனே பகிரவும், இதை இத்தனைப்பேருக்குப் பகிர்ந்தால் உடனே ..... உங்களுக்கு அருள் பாலிப்பார் உங்கள் பாவங்கள் எல்லாம் பொசுங்கிவிடும் ...நு வரும் பாருங்க ஹப்பா என் நம்பரை வாட்சப்பில் இருந்து விலகியதில் கிடைத்த பெரிய நன்மை இதுதான்....

    சாமிக்கும் நமக்கும் ஒன் டு ஒன் அப்படி இருக்க இதெல்லாம்...இப்ப ஃபார்வேர்ட் இல்லாமல் நிம்மதியா இருக்கு. குறிப்பிட்ட நட்பு உறவு வட்டம் மட்டுமே. ஸேஃப்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இன்னும் சாமிக்கு மட்டும்தான் வாட்சாப் பார்வேர்ட் செயயவில்லை!  இல்லாவிட்டால் அவரைப்பற்றி அவருக்கே தெரியாத விவரங்களை நாம் அவருக்கு அனுப்பி, மற்ற கடவுள்களுக்கும் உடனே பார்வேர்ட் செய்யவும் என்று மிரட்டி இருப்போம்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹ் ஹையோ ஹைஃபைவ்,.......ஸ்ரீராம் நான் இதே கருத்தைத்தான் சொல்லவும் வந்தேன் ஒரு சில்லு சில்லாயில் எழுதியும் வைத்திருக்கிறேன்!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  6. WhatsApp - வாரம் ஒருமுறை clear chat செய்யவே அதிக நேரம் ஆகும்...

    உல்டா பாடலை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆமாம் நான் எதையும் 'இறங்க' அனுமதிப்பதில்லை என்பதால் பெரிய கவலை இல்லை!

      நீக்கு
  7. திருஒணத் திருநாள் வாழ்த்துக்களுடன்..

    அன்பின் வணக்கங்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள்.  வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..  வாங்க..

      நீக்கு
  8. நல்லவேளை..

    வாட்சாப் க்ரூப் எதிலும் நான் இணைய வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் ஓரிரண்டு க்ரூப்களிலாவது இருக்கும் கட்டாயம் இருக்கும்!

      நீக்கு
  9. நான் பல வாட்சப் க்ரூப்பில் விவரங்களுக்காகச் சேருவேன் (யாத்திரை போன்று). இந்த ஃபார்வர்ட் பிசாசுகள் அங்கேயும் பலவற்றை ஃபார்வர்ட் செய்யும். அப்படி ஒரு க்ரூப்பில் நடந்தபோது, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அட்மின், அவர் எனது உறவினர், கேள்வி கேட்காதீங்க என்றார். இப்படிப்பட்ட பிரகஸ்பதிகள் வாட்சப் க்ரூப்பின் உபயோகத்தை அழிக்கப் பிறந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு அது புதிய செய்தி. எனவே பார்வேர்ட் செய்கிறார்கள். பழகியபின் படிக்காமலேயே பார்வேர்ட் செய்கிறார்கள்!!!

      நீக்கு
  10. காற்று வாங்கம் போன கவிதையை மிகவும் ரசித்தேன். நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. டெல்லி கணேஷ் சொல்லும், அன்பே அடிப்படை என்பது, அனேகமாக எல்லோருக்கும் கொஞ்சம் வயதானபிறகுதான் பிடிபடுகிறது. அதனால்தான் இளரத்தம் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      "வாலிபங்கள் ஓடும். வயதாக கூடும். ஆனாலும், அன்பு மாறாதது." என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலின் கருத்தும், இசையும், நம் எஸ். பி. பி அவர்களின் குரலினிமையும் என்றும் நினைவை விட்டு அகலாதது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நான் சொல்லவந்தது, இளமை இருக்கும்போது, 40-45 வயது வரை, அன்பைவிட அதிகாரத்தைக் காண்பிக்கும் ஆண், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறி, நன்கு வயதாகும்போது நல்ல புரிதலோடு அன்போடு இருக்கிறான் என்பது

      நீக்கு
    3. ஆம் கமலா அக்கா.   பக்குவமடையா இளமைக் காதல் இளமையில் சுவாரஸ்யம்.  ஓய்ந்த வயதில் ரத்தம் சுண்டி பக்குவமானபின் வரும் புரிதலை தைவிட இன்பம்.

      நீக்கு
    4. ஆம்.  நெல்லை நீங்கள் சொல்ல வந்தது புரிந்தது, நானும் அப்படியேதான் நினைக்கிறேன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் திருவோண நன்னாள் வாழ்த்துகள். ஶ்ரீராமின் கவிஜை நன்றாக இருக்கு. முகநூலிலும் படிச்ச நினைவு இருக்கு. விகடன் ஜோக்ஸ் எல்லாமும் பழைய பைன்டிங்குகளில் சித்தப்பா வீட்டில் படிச்சிருக்கேன். மாலி கார்ட்டூன் அந்தக் காலத்தில் ரொம்பவே பிரபலம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. வாழ்த்துகளும், வணக்கமும். பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  13. காமராஜர் ஒரு காந்தியவாதி. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேசத் தெரியாதவர். அதனால் தான் 1967இல் "ரூபாய்க்கு மூன்று படி" யில் தோற்றுப் போனார்.

    ஆம். சொல்வதைக் கேட்பவர் இருக்கும் வரை தான் அதிகாரம் தூள் பறக்கும். இது டெல்லி கணேஷுக்கு மாத்திரம் அல்ல, எல்லோருக்கும் பொருந்தும்.

    //என்னை பொறுத்தவரை, வயதானவங்க தனியாக இருக்கிறது சரியானதல்ல.// சரிதான். ஆனால் சூழ்நிலை, நிர்பந்தம், மற்றும் ஈகோ இவற்றையும் பார்க்க வேண்டியிருக்கிறதே!.

    பாடல் உல்டா செய்வது கில்லெர்ஜீயின் காப்புரிமை!

    பஸ் பொந்துக்குள் அந்த நாய் எப்படி நுழைந்தது என்பது ஆச்சர்யம். எப்படி ?

    காரைப் பார்த்தால் AC சார் என்றுதான் தோன்றுகிறது. ஏன் இப்படி ஒரு விண்டோ  AC
    கூட வைக்க வேண்டும்?

    இரவல் கொடுக்காதீர் என்ற ஆனந்த விகடன் வேண்டுகோள் வித்தியாசம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாடல் உல்டா செய்வது கில்லெர்ஜீயின் காப்புரிமை!//

      அது வெளியான வருடத்தைப் பார்க்கவும்!
      விரிவான பின்னூட்டத்துக்கு அன்றி JC ஸார்.

      நீக்கு
  14. திரு டெல்லி கணேஷ் தன் வாழ்க்கைச் சரித்திர்த்தை முகநூலில் "மத்யமர்" குழுவில் பகிர்ந்திருந்தார். அது புத்தகமாகவும் வெளி வந்துவிட்டது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. @ ஜெயக்குமார் சந்திரசேகர்

    // காமராஜர் ஒரு காந்தியவாதி. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேசத் தெரியாதவர். அதனால் தான் 1967இல் "ரூபாய்க்கு மூன்று படி" யில் தோற்றுப் போனார்..//

    சிறப்பு

    பதிலளிநீக்கு
  16. அப்புறமாக உல்டா அடிக்கப்பட்டது..

    மூன்று படி லட்சியம்..
    ஒரு படி நிச்சயம்!!..

    இதுக்குத் தாளம் போட்டுக்கிட்டு டான்ஸ் கூட ஆடினாங்க..

    படி அரிசி கிடைக்கிற காலத்தில
    நாங்க படியேறி
    பிச்சை கேக்கப் போவதில்லே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தை ஜாலங்களில் வாழ்க்கையைத் தொலைத்த தமிழர்கள்.  இப்போது ஊழலை மிகச் சாதாரணமாக நினைக்குமளவு மக்களை பழக்கி விட்டார்கள்.

      நீக்கு
  17. என்னோட மற்றக் கருத்துகளைக்காணோமே! :(

    பதிலளிநீக்கு
  18. உல்டா பாடல் செம....மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்

    ஊரில் இருந்தவ்ரை நான் இப்படி ஏதாச்சும் சொல்ல எங்கள் (குட்டீஸ் நாங்க) குரூப் ரசித்து சிரித்து விளையாடிய நேரம்....இதையும் எழுதி வைத்திருக்கிறேன்....என்ன பாடல்கள்னு வரும் அதில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டைக்காரன் வேணுஜியும் அப்போது இப்படி உல்ட்டா பாடல்களே எழுதிக் கொண்டிருந்தார்.  நானும் முயற்சித்திருக்கிறேன்!

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    நல்லவேளை இந்த மாதிரி வாட்சப் குரூப் பக்கமெல்லாம் என்னிடம் இல்லை. அதனால் இதுபற்றி ஒன்றும் அறிய வாய்ப்பில்லை.

    /நாம் இன்னும் சாமிக்கு மட்டும்தான் வாட்சாப் பார்வேர்ட் செயயவில்லை/

    ஆமாம்.. இப்போது இறைவனுக்கும் ஒரு வாட்சப் செய்திகள் தரும்படி ஒரு வசதி இருந்தால் அவரிடமும் இப்படி ஏதேனும் சம்பாஷணை தொடர்பு வைத்துக் வைத்துக் கொள்ளலாம். ஹா ஹா. ஆனால், அதனால்தான் அப்போதிலிருந்தே (நாம் பிறந்த நாள் தொட்டு.... உலகில் பிறந்து சில நாட்கள் ஆன நிலையிலேயே ஒவ்வொரு ரும் ஹரி மிரட்டல் என்ற வளையத்தில் வளர்ந்துதானே வருகிறோம். அப்போதிலிருந்தே அவனுடனான மானசீகமாக பேச்சு வார்த்தைகள் நம்மிடையே தொடர்ந்து விட்டன என நினைகக்கிறேன். ) ஒரு வசதி இயற்கையாகவே இறைவனே ஏற்படுத்தி வைத்திருக்கிறான். (சற்று வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மனதில் எழும் கவலை, சந்தோஷம் என அவனிடம் மனதோடு ஷேர் செய்து கொள்ளும் வசதி.) அதனால்தான் அவன் கடவுள் (உள்+கட) எனவும் பெயர் கொண்டு உலகில் இன்றளவும் நிற்கிறான்.

    அனைவருக்கும் அந்த உலகளந்த நாராயணனின் நட்சத்திர தினமான இன்று அவனருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனமாற அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமா யோசிக்கறீங்க கமலா அக்கா..

      நீக்கு
    2. கமலாக்கா சூப்பர்....கட + உள் - ஆம் கடவுள் . இதன் அடிப்படையில் இப்படியோரு பதிவு எழுதியிருந்த நினைவு....பதிவின் பெயர் எல்லாம் மறந்துவிட்டது....

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் கருத்துரை பதிலைப் பார்த்ததும் ஏதோ தோன்றியது. தோன்ற வைத்தவனும், வைப்பவனும் அவன்தானே..! நன்றி சகோதரரே

      கீதாரெங்கன் சகோதரி உங்களையெல்லாம் விடவா நான் எழுதி விடப்போகிறேன். உண்மையைச் சொன்னால், உங்களிமிருந்தான் இப்படி. யோசிக்கவும், பகிரவும் அவன் கற்றுத் தருகிறான். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. *உங்களிடமிருந்துதான்*. என வந்திருக்க வேண்டும். கைப்பேசி புதிதாகையால் வார்த்தைகள் தொடுவதற்கு முன் அவசரமாக வழுக்கி விழுகின்றன.:))))

      நீக்கு
    5. பல சமயங்களில், பல இடங்களில் உங்கள் எண்ணக்கோர்வை வித்தியாசமாக இருப்பதை கவனித்திருக்கிறேன் கமலா அக்கா.  சிறப்பு.

      நீக்கு
  20. காமாராஜர் - சான்ஸே இல்லை ஸ்ரீராம். என்ன அருமையான சிந்தனைகள் எண்ணங்கள் கொண்டவர்!! ஹூம் இப்ப பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை மாதிரி மனிதர்களை இப்போ பார்க்க முடியுமா?

      நீக்கு
    2. காமராஜர், சாதாரண மனிதர். ஒரு பைசா சேர்க்காதவர். எந்த இன்பமும் (உணவு உட்பட) அனுபவிக்காதவர். ஒரு நல்ல டிரெஸ் கூட (விலையுயர்ந்த) வாங்கியதில்லை. நல்லா தூங்குவதற்கு சுகமான மெத்தைகூட வாங்காமல் நாட்டிற்கு, அதைவிட, சாதாரணர்களுக்கு உழைத்தார் (முதலமைச்சருக்குள்ள மெடிகல் சீட் கோட்டாவை அவர் எப்படிக் கொடுத்தார் என்பது சரித்திரம்). அவரையும் மக்கள் தோற்கடித்தார்கள். அதைப்பற்றி ஒரு நாளும் அவர் குறையாகச் சொன்னதில்லை. அது சரி...இதெல்லாம் செஞ்சு, இப்படி வாழ்க்கை வாழ்ந்து என்ன சாதித்தார்?

      ஒன்றும் சாதிக்கவில்லை. அவருக்குப் பின் வந்த எல்லோரும், காமராசர் ஆட்சியைத் தருகிறேன் என்றுதான் தேர்தலின்போது சொல்கிறார்களே தவிர, தங்களின் அல்லது தங்களுக்கு முன் இருந்த முதலமைச்சர்களின், அல்லது காமராஜருக்கு முன்பிருந்தவர்களின் ஆட்சியைத் தருகிறேன் என்று மறந்தும்கூடச் சொல்வதில்லை. அதுதான் காமராஜரின் சாதனை.

      மற்ற முதலமைச்சர்கள் சம்பாதித்தது காக்காய் கூட்டங்களை. காமராசர் சம்பாதித்தது, தமிழகத்தின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பட்டத்தை.

      நீக்கு
    3. அவரைப்போன்ற மனிதர்களைக் காண ஏக்கம் அதிகரிக்கிறது.

      நீக்கு
  21. டெல்லிகணேஷ் ஒரு பேட்டியில் கூடச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்...அவர் சொல்லியிருப்பது அனுபவ யதார்த்தம்...நல்ல கருத்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கொஞ்சம் ஓவர்தான் இல்லை//

    இப்பகுதி யோசிக்க வைக்கிறது. அந்த பதில் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. படங்கள் ரசனை.

    ஜோக்ஸ் ரசித்தேன் அதிலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் மூன்றாவது செம!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பாட்டியின் பலகாரம் ஹாஹாஹாஹா என் பாட்டியை நினைவுபடுத்துகிறது அப்படியே....நாங்கள் அப்படிக் கலாய்ப்போம் இப்படி சொல்லும் போது

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஆனந்த விகடன் விளம்பரம் புன்சிரிக்க வைத்தது நல்ல கற்பனை

    கீதா

    பதிலளிநீக்கு
  26. @ ஸ்ரீராம்

    //எப்படியும் ஓரிரண்டு க்ரூப்களிலாவது இருக்கும் கட்டாயம் இருக்கும்!..//

    நான் தங்களுடன் கூட எதையும் பகிர்ந்து கொள்வது இல்லையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாகப் புரிந்துகொள்ளும்படி எழுதி இருக்கிறேனோ?  நீங்கள் அனுப்புவது பற்றி அல்ல...  க்ரூப்களில் நீங்கள் பார்ப்பது.  நான் கூட அவ்வப்போது பார்வேர்ட்ஸ் செய்வதுண்டு.  நான் சொன்னது தவறாகப் பொருள்பட்டிருந்தால் மன்னிக்கவும்.  

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சு நன்றாக உள்ளது. ஆம். நிதர்சனமான வார்த்தைகள். இந்த வாழ்க்கையோடு ( இதிலேயே "கையோடு" என்ற மறை பொருளும் அடங்கி உள்ளது) முடிந்து போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம்.

    டெல்லி கணேஷ் என்றதும், என் நினைவுக்கு வருவது.. அவரின் சித்தப்பா வல்லநாடு அம்மன் கோவிலில் (அது எங்கள் புகுந்த வீட்டின் குல தெய்வ கோவில்) ஒரு கோவில் அதிகாரியாக இருந்தார் போலும்.. எங்கள் மைத்துனர் (என் கணவரின் அண்ணா) அவரை மயிலையில் (அப்போது நாங்கள் கூட்டு குடும்பமாக சென்னை மயிலையில்தான் ஜாகை) கபாலி கோவிலில் சந்தித்ததும், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவருடன் அவரின் மற்றொரு உறவும். வீட்டில் எங்கள் மாமியாரிடம் அறிமுகப்படுத்தி விட்டு சிறிது நேரம் அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு அப்போது திருமணமான புதிது. என் கணவரும் அலுவலகத்திற்கு சென்று விட்டார். நான் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் நான் காலை டிபனுக்கு அடை, சட்னி செய்திருந்தேன். (அதைத்தான் மாமியார் செய்யச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் சொல்வதைதான் செய்வேன்.) அவரையும் டிபன் காப்பி சாப்பிட வைத்து அனுப்பினோம். நடிகர் டெல்லி கணேஷ் ஜாடை அவரிடம் அப்படியே இருந்தது. டெல்லிகணேஷ் அவர்கள் அப்போது திரையுலகில் வளர்ந்து வரும் நேரம். டிபன் நன்றாக உள்ளதாக அவர்கள் என்னைப்பாராட்டி விட்டு சென்றார்கள். அதன் பின் மாமியார் விபரம் சொல்ல அவர் யாரென தெரிந்து கொண்டேன். அந்த நினைவு இதைப் படித்ததும் வருகிறது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் நான் காலை டிபனுக்கு அடை, சட்னி செய்திருந்தேன். (அதைத்தான் மாமியார் செய்யச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் சொல்வதைதான் செய்வேன்.) //

      நெகிழ்ந்தேன் அக்கா. என் மரியாதைகள்.

      நீக்கு
    2. மாமியார்/மாமனார் இருக்கையில் சமையலறையும் தாழ்வாரத்தையும் தவிர்த்து வேறெங்கும் தலை காட்ட முடியுமா? யாரானும் வந்தால் கூட அவங்க அழைத்தால் தவிரப் போக முடியாது. நம்ம உறவினராய் இருந்தாலும். :))))))

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    தங்களின் உல்டா பாடல் அருமையாக உள்ளது. நாங்களும் இந்தப்பாடல் வந்த புதிதில் இப்படி மனதிற்கேற்றபடி மாற்றி மாற்றி ,பாடி சிரித்தது நினைவுக்கு வருகிறது. இப்போதும் இதை ராகத்துடன் பாடி மகிழ்ந்தேன். (மனதிற்குள்தான்) நன்றாகவே உள்ளது.

    இணையத்தில் நீங்கள் ரசித்தப்படங்கள் அருமை. நானும் ரசித்தேன்.

    கொஞ்சம் ஓவராக இல்லை. என்றுதான் அந்த கட்டுரை எழுதியவர் சொன்னது நினைக்க வைத்தது. அந்த காலத்தில் கதையாக தலையில் விழுந்த எள்ளைப்பற்றி ஒருவர் யோசித்து யோசித்து கற்பனையில் பணக்காரராக ஆவதும், முடிவும் நினைவுக்கு வருகிறது.

    ஜோக்குகளை பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன். இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. என் தம்பி குழந்தையாய் இருக்கும்போது அப்பா ஸ்ராத்தம் பண்ணும்போதெல்லாம் அப்பாவிடம், "நான் எப்போ உனக்குப் பண்ணுவேன்?" என்று கேட்பார் எனச் சொல்லிச் சிரிப்பார்கள். நாங்கல்லாம் பள்ளிக்குப் போய் விடுவதால் எங்களுக்கு அது பற்றித் தெரியாது. :)))))

    பதிலளிநீக்கு
  30. வாட்ஸ் அப் பல விடயங்களில் கஷ்டத்தையும், சில விடயங்களில் மகிழ்ச்சியையும் கொடுப்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  31. கதம்பம் அருமை.
    வாட்ஸ் அப் அளவோடு இருந்தால் நல்லது.
    இத்தனை பேருக்கு பகிர சொல்லி வரௌவதை பகிர மாட்டேன்.
    மனதுக்குள் வேண்டிக் கொள்வேன் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று,.

    காமராஜர் போல யாரும் இருக்க மாட்டார்கள். நல்ல மனிதருக்கு நாளும் வணக்கம் சொல்ல வேண்டும்.

    டெல்லி கணேஷ் சொன்னதை படித்து இருக்கிறேன். மிக அருமையாக சொல்லி இருக்கிறார்.
    உங்கள் உல்டா கவிதை, பகிர்வுகள், நகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. //இந்த வியாதி... //
    அது வியாதி அல்ல. யான் பெற்ற இன்பம் சமாசாரம்.

    பதிலளிநீக்கு
  33. ராஜாஜி பற்றி நினைவு கொண்டு மகிழக் கூடிய விஷயங்கள் எத்தனையோ உண்டு. ஏன் அவரைப் பற்றி பொதுவாக பொது தளங்களில் இப்படி நினைவு கொள்வதில்லை என்று இந்த மாதிரியான தருணங்களில் யோசனை ஓடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் பெரும்பாலானோர் அறிந்தது!

      நீக்கு
    2. நீங்கள் தான் ஒரு வியாழக்கிழமை ராஜாஜியின் சிறப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பைப் போடுங்களேன். கருத்துக்களுக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பு ஏற்படும்.

      நீக்கு
    3. உதாரணத்திற்கு ஒன்று. "அவர் என் மனசாட்சியின் குரல்"

      நீக்கு
  34. அந்நாளைய மேலவை உறுப்பினர் என்பது குறுக்குவழியில் கிடைக்கும் பதவிப் பொறுப்பல்ல. தமிழக மன்னர் காலத்து ஐம்பெருங்குழு, எண்பேராயம் மாதிரி. பல துறைகளில் சிறப்புக் கொண்டோரை மேலவை நியமன உறுப்பினர்களாக்கி சட்டமியற்றுமுன் அவர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படுவதற்கான ஏற்பாடு அது. பின் வந்த காலத்தில் மேலவையை ஒழிக்க அரசியல்வாதிகள் ஏன் துடித்தார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பேச்சை நாம் ஏன் கேட்கவேண்டும் என்கிற மனோபாவம்...

      நீக்கு
    2. இல்லை. தனக்கு வேண்டுகிற போக்கில் ஆட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம். அதற்காகத் தான் மக்கள் வாக்களித்திருப்பதாக வேறு சொல்லிக் கொள்வார்கள்.

      நீக்கு
  35. @ ஜீவி அண்ணா

    //அந்நாளைய மேலவை உறுப்பினர் என்பது குறுக்குவழியில் கிடைக்கும் பதவிப் பொறுப்பல்ல..//

    மக்களின் ஆதரவினை வாக்குகளாகப்
    பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கவேழ்ண்டும் என்பது பெருந்தலைவருடைய எண்ணமாக இருந்திருக்கலாம்..

    பல ஆண்டுகளுக்குப் பின்பு வார்த்தைகள் இடம் மாறி வருவதால் ஏற்படும் சொல் மயக்கம் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலவை குறுக்குவழி என்பது கட்டுரையாளர் கருத்து. அது அப்படியில்லை என்பதற்காக சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
    2. கட்டுரையாளர் சொல்ல வந்த கருத்தில் துணைப்பொருளாக சொல்லும் விஷயங்களில் அதிக அக்கறை காட்டாமல் வார்த்தைகளைக் கோர்த்திருக்கலாம்!

      நீக்கு
    3. கட்டுரையாளர் அந்த குறுக்குவழியை காமராஜர் கருத்தாகக்
      கையாளுகிறார். அதுவே காமராஜருக்கு இழுக்கு. கவனிக்கவும்.

      நீக்கு
  36. @ ஜீவி அண்ணா..

    // ஏன் அவரைப் பற்றி ( ராஜாஜி) பொதுவாக பொது தளங்களில் இப்படி நினைவு கொள்வதில்லை.. //

    ஆண்டாள் நாச்சியாரை
    அவர் ஒத்துக் கொண்டதில்லையாம்..

    பெரியாழ்வார் தான் தன்னை ஆண்டாளாகப் பாவித்துக் கொண்டார்.. என்று சொல்லியிருக்கின்றாராம்..

    கப்பலோட்டிய தமிழன் என்ற சொல் வழக்கு விஷயத்திலும் ஏறுக்கு மாறாக ஏதோ அவர் சொன்னதாக சொல்வார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரியாழ்வார் தான் தன்னை ஆண்டாளாகப் பாவித்துக் கொண்டார்.. என்று சொல்லியிருக்கின்றாராம்..// இதைப் பற்றி ஆண்டாள் பற்றிய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிடப் போய் (பத்து வருஷங்களுக்கும் முன்னர்) மின் தமிழ்க் குழுமத்தில் பெரிய வாத, விவாதம். பின்னர் நண்பர் ஒருவர் இந்தக் கருத்து வெளிவந்திருக்கும் கட்டுரையைச் சுட்டிக்காட்டியது அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.

      நீக்கு
    2. அதே போல் "குறை ஒன்றும் இல்லை" பாடலும் ராஜாஜி அவர்களே முழுவதும் எழுதியது இல்லை. திரு மீ.ப.சோமு அவர்கள் உதவி/திருத்தம் செய்ய ராஜாஜியால் இது எழுதப்பட்டுக் கடையநல்லூர் வெங்கட்ராமன் என்பவர் இசை அமைத்து எம்.எஸ்.அம்மா. ராதா அம்மா ஆகியோரால் எண்பதுகளில் பிரபலப்படுத்தப்பட்டது.

      நீக்கு
    3. ராஜாஜி சிறப்பான ஆட்சியைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் "குலக்கல்வி" என அழைக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்ததும் அவரால் மேற்கொண்டு ஆட்சி செய்ய முடியாமல் போய்விட்டது. உண்மையில் அது நல்லதொரு திட்டம். இன்னொரு தவறு திரு காமராஜர் மீது தனிப்பட்ட முறையில் கொண்ட காழ்ப்புணர்வால் 67 ஆம் வருஷத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து காங்கிரஸைத் தோற்கடித்தது. அதன் பிறகு அவருடைய சுதந்திரா கட்சியும் போன இடம் தெரியலை. காங்கிரஸால் தமிழ்நாட்டில் நிமிரவே முடியலை! :(

      நீக்கு
    4. கப்பலோட்டிய தமிழன் விஷயத்திலும் தம்பி துரை சொல்லி இருப்பது சரியே! ராஜாஜி தலைவர் தான். ஆனால் வெகுஜனத் தலைவராக அவரால் ஆக முடியலை. தலைவர்களின் தலைவர்னு வேணா சொல்லிக்கலாம்.

      நீக்கு
    5. ராஜாஜி பள்ளி நேரத்தை இரண்டு பகுதிகளாக வைக்க திட்டமிட்டு செயல்படுத்தினார் என்றும், அதன் மூலம் மேலும் நிறைய மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதே சமயம் மதியத்துக்குமேல் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் வேறு ஏதாவது கற்றுக் கொள்ளலாம், அவரவர் வ ஏட்டில் என்னென்ன தொழில் தெரியுமோ கற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னதாக சமீபத்தில் எங்கேயோ படித்தேன்...  எங்கே?

      நீக்கு
    6. உண்மை தான். மதிய நேரத்தில் கைத்தொழில் அவரவருக்கு விருப்பமானது என்றாலும் அவங்க அவங்க குலத்தொழில் எனில் எளிதாகக் கற்கலாம்/கற்க முடியும் என்பது அவர் எண்ணம். உண்மையும் அது தான். ஆசாரிக் குலத்தில் பிறந்தவர்களின் வேலைகளோடு கற்றுத் தெரிந்து கொண்டு பண்ணுபவர்களின் வேலைகளை ஒப்பிட்டால் எளிதில் புரியும். அதே போல் எல்லாக் கலைகளும். சிற்ப வேலை செய்பவர்களின் வாரிசுகளுக்கு எளிதாக வரும். தங்கள் வாரிசு என்பதால் பெரியோர்கள் நுணுக்கங்களையும் ரகசியங்களையும் மறைக்காமல் கற்றுக் கொடுப்பார்கள்.

      நீக்கு
    7. ஆங்கிலேயர்கள் வந்து இந்த குலத்தொழிலைச் சீரழித்ததோடு அல்லாமல் அப்போது இருந்த மருத்துவ குலம் அனைத்தும் நாவிதர் குலமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டது. எனினும் முன்னெல்லாம் பெரியோர் பலரும் அவங்களை மருத்துவர்/மருத்துவச்சி என்றே அழைத்து/சொல்லிப் பார்த்திருக்கேன். இவங்களுக்கு எளிதாக மருத்துவம் வரும். ஆனால் பண்டைய ஏடுகள்/சுவடிகள் அழிக்கப்பட்டு விட்டதோடு இருந்தாலும் அவற்றைப் படிக்கும் அறிவு இப்போது யாருக்கும் இல்லை.

      நீக்கு
    8. ராஜாஜியின் மேல் உள்ள இன்னொரு குற்றச்சாட்டு. ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடினார் என்பது. இதைப் படிக்கையில் எனக்குச் சிப்புச்சிப்பாக வரும். எப்படி அத்தனை பள்ளிகள் சுதந்திரம் வந்து பத்தாண்டுகளில் திறக்கப்பட்டனவா? சுத்தப் பேத்தல் இல்லையோ இது? அப்போதெல்லாம் தனியார் பள்ளிகள் என்பது ஆங்காங்கே ஒன்றிரண்டு தான் இருக்கும். எனக்குத் தெரிந்து மதுரை நகரில் பொன்னு ஐயங்கார் பள்ளியும், சூரியநாராயண சாஸ்திரி பள்ளியும் தனியார் நிர்வாகம். கிறித்துவப் பள்ளிகளும் பெரிய பள்ளிகளாக மூன்றே மூன்று இருந்தன. ஓசிபிஎம், செயின்ட் ஜோசப்'ஸ் கான்வென்ட், பெருமாள் தெப்பக்குளம் அருகே ஆர்.சி. ரோசலின் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பள்ளி. செவென் த் டே அட்வென்டிஸ்ட் பள்ளிகள் எல்லாம் எனக்குத் தெரிந்து எழுபதுகளில் தான் வந்தன. தர்க்கரீதியாக யோசித்தால் தமிழகத்தில் அத்தனை பள்ளிகள் ராஜாஜி காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரியும். எந்தப் பள்ளியையும் அவர் மூடவும் இல்லை. மூடி இருந்தால் அரசு ஆவணங்களில் இருக்கணுமே!

      நீக்கு
    9. வதந்தி பரப்புபவர்கள் அப்படிதான் சொல்வார்கள்.  தகவல் அறியும் உண்மை சட்டத்தில் கேட்கலாம், கேட்க மாட்டார்கள்.

      நீக்கு
  37. எனக்கு வாட்சப்பில் யாரும் பார்வோர்ட் மெஜேஜ் அனுப்பினால் முதலில் ஒரு வார்னிங்க் கொடுப்பேன் அதையும் மீறி இரண்டாவதாக சம்பந்தமில்லாத செய்தி அனுப்பினால் பேசம்மாட்டேன் ப்ளாக் செய்துவிடுவேன் என் மனைவி ஒரு தடவை பார்வோர்ட் மெஜேஜ் அனுப்பினாள் அவலுக்கும் இந்த எச்சரிக்கை செய்த பின்னால் அவள் ஏதும் அனுப்புவதுமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   மனைவியாயிருந்தாலும் சட்டம் சட்டமே வா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!