வெள்ளி, 30 செப்டம்பர், 2022

வெள்ளி வீடியோ : மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?

 பி சுசீலா பாடல்களில் இந்த லிஸ்ட் ரொம்ப பிரபலம்.  மாணிக்க வீணையேந்தி, கலைவாணி உன் கருணை தேன்மழையே, ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்க்கா தேவி சரணம் பாடல்கள்.

இதில் மாணிக்க வீணையேந்தி பாடல் சிறு வயதிலிருந்தே என் தங்கைக்கு உயிர்.  அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பாள்.  ஜெயஜெயதேவி பாடல் என் மகனுக்கு மழலை மாறா பருவத்தில் மிக பிடித்தமான பாடல்.  "உக்கா தேவி" என்று பாடுவான்!

நவராத்திரி முடிந்து சரஸ்வதி பூஜை அன்று இந்தப் பாடல் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும்.  அமைதியான குரல் தெய்வீகம் ததும்பும் பாடல்.

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்….
=================================================================================================================

1966ல் வெளியான திரைப்படம் மஹாகவி காளிதாஸ்.  சிவாஜி கணேசன், சௌகார், முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது..  ஆர் ஆர் சந்திரன் இயக்கத்தில் கே வி மதாதேவன் இசையில் உருவான படம்.  பாடல்களை கு மா பாலசுப்ரமணியமும் கண்ணதாசனும் எழுதி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தேன்...   தேன்,,,  தித்திக்கும் தேன்.

கண்ணதாசன் பாடல்.  TMS குரல்.  அடாணா எனும் கம்பீரமான ராகம்.

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா

அடுத்த பாடலும் கண்ணதாசன் எழுதிய பாடல்தான்.  "கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்" பாடலையும், இந்தப் பாடலையும் பூப் போட்டுப் பார்த்து இந்தப் பாடலைப் பகிர்கிறேன்!!

இந்தப் பாடலைக் கேட்கும் முன்னரோ பின்னரோ கவியரசரின் மகன் சொல்லும் இந்த விஷயங்களைக் கேட்டு விடுங்கள்.  கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இந்தப் பாடலை எழுதி இருக்கிறார், குற்றம் குறை இருந்தால் மன்னிக்கச்ச்சொல்லி தொடங்கி, பாடலின் ஆரம்பம் (கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்) ஏன் அப்படி அமைத்திருக்கிறார் என்று புரியும்.

       

இப்போது இந்தப் பாடலுக்கு வருகிறேன்....

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க
என் தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ?

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

29 கருத்துகள்:

 1. அனைத்தும் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்களே....

  //முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது// நடித்தது என்று மாற்றவும்.

  ஜெய ஜெய தேவி பாடல் சிறு வயதில் எனக்கும் பந்தப்பட்ட சம்பவம் பாம்பன் ஆயிஷா டாக்கீஸில் உண்டு.

  இதோ பாடல்களை கேட்கப் போகிறேன் ஜி.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  நவராத்திரி வெள்ளிக் கிழமை எல்லா நலங்களையும்
  அருளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. கண்ணதாசன் பாடல்கள் அனைத்துக்கும்
  விளக்கம் சொல்லும் அவர் மகன் இந்தக் காளிதாசன் படப் பாடலுக்கும்
  அருமையாக உணர்ந்து
  அர்த்தம் சொல்லி இருக்கிறார்.
  கவிஞருக்கு வாழ்வில் எத்தனையோ
  சோகங்கள்.

  அத்தனையும் கவிதைகளாக வந்து
  நம்மை ஆட்கொள்கின்றன.
  இன்றும் கொடுத்திருக்கும் சரஸ்வதி பாடலும் சுசீலா அம்மாவின் குரலும் எத்தனை வருடங்களாகக் கேட்டு வருகிறோம்!!! மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 4. மலரும் வான் நிலவும்
  மற்றும் யார் தருவார் இந்த அரியாசனம், அகர முதல் எழுத்தெல்லாம்
  அறிய வைத்தாய் தேவி.
  சென்று வா மகனே எல்லாமே மிக உணர்ச்சி மிகுந்த
  பாடல்கள்..
  கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்கள்.
  மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 5. பேட்டி அருமை... தொழில் பக்தி சிறப்பு...

  அனைத்தும் என்றும் ரசிக்க வைக்கும் பாடல்கள்...

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. மாணிக்கவீணை மட்டுமல்ல அந்த கேசட்டில் உள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதம். மனதில் ஓடும் வரிகள், பி சுசீலாவின் இனிய குரலில்

  பதிலளிநீக்கு
 8. யார் தருவார் இந்த அரியாசனம்... டிஎம்எஸ். ஆஹா ஆஹா... கணீர்குரல்... ஆனால் சிவாஜி தான் பாடுவதுபோலவே நடித்திருப்பார்.. சிம்மக்குரலோன் என்று சும்மாவா சொன்னாங்க.

  பதிலளிநீக்கு
 9. கவியரசரின் மகன் ரப்பர் தோட்ட முதலாளி போலிருக்கு... ரப்பர் மாதிரி இழுக்கறார். கவியரசரின் வாக்கில் வருவதே சரஸ்வதி அளித்த கொடையல்லவா... இருந்தாலும் சில பாடல்களில் பொருட்குற்றம் வந்துவிடும். வாலி இது பற்றி எழுதியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 10. மலரும் வான் முகமும் மிக அருமையான பாடல். சரணம்லாம் மறந்துவிட்டது. இன்று எல்லாப் பாடல்களுமே சூப்பர்.

  பதிலளிநீக்கு
 11. ' மஹா கவி காளிதாஸ்' பாடல்கள் அனைத்துமே நீங்கள் சொல்வது போல ' தேன்' தான் என்றாலும் ' மலரும் வான் நிலவும்' பாடல் பி.சுசீலாவின் குரலில் மிகவும் இனிமையான ஒன்று!!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் அனைத்தும் இனிக்கும் தேன்தான். பி. சுசீலா அவர்களில் குரலில் அம்மன் பாட்டுக்கள் அனைத்தும் மனதில் மகிழ்ச்சியை தந்து பக்திப் பிரவாகத்தில் மூழ்கச் செய்து விடும் தன்மையுடையவை . அதுவும் இந்தப் பாடல் எவ்வளவு முறை கேட்டாலும் கேட்கும் போதெல்லாம் புதிதாகவே தோன்றும் மாயம்.... அந்த ஆனந்தத்தை விவரிக்கவே முடியாது. இது எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல். முக்கால்வாசி அவரின் பாடல்கள் எனக்கு மனப்பாடந்தான். நவராத்திரிகளில் தினமும் கூடவே பாடுவதுதான். அருமையான பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. வெள்ளியின் நன்பொழுது வாழ்கவே..

  அனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளியில் மாணிக்க வீணையேந்தும் கலைவாணியின் இருபாடலையும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி.

  நடிகர் திலகத்தின் பக்திப் பாடல்களே நம்மையும் உணர்ச்சிவசப்பட வைத்து விடும். பாட்டின் வரிகள், இசை, பிண்ணனி பாடுபவரின் அருமையான குரல், எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு அவரின் பொருத்தமான வாயசைக்கும் உச்சரிப்பு, உடல், முக பாவங்கள், அனைத்தும் சேர்ந்து அந்தப்பாடலை சிறப்பாக ஆக்கி விடும்.

  மூன்றாவது பாடலும் அருமை. இன்றைய மூன்று பாடலுமே அருமை. காணொளி கேட்கிறேன். அதில் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. ஒரே வரியில் சொல்வதென்றால் கவியரசர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்..

  பதிலளிநீக்கு
 16. மாணிக்க வீணையே
  மரகதப் பதுமையே!..

  அருவி போல கவித்துவம்..

  காளிதேவி வந்து கருணை செய்யும் போது இப்படித்தான் இருக்கும்..

  இது மாதிரி பாட்டெல்லாம் இனி வருமோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டெல்லாம் இனி வருமோ என்று கேட்பதற்குப் பதில், கதைகளெல்லாம் வருமோ என்று கேட்டிருக்கலாம்.

   வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் கடைசி பாடல்.... உணர்ச்சி மிகுந்த காவியம். ஒவ்வொரு தடவை நான் படம் பார்க்கும்போதும் இந்தத் தடவையாவது வெற்றிபெறணுமே என்று நினைத்துக்கொள்வேன்.

   நீக்கு
 17. பாடல்கள் அனைத்தும் அருமை.

  முதல் பாடல் மிக அருமையான பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ள அனைத்து பாடலும் நன்றாக இருக்கும் எங்கள் வீட்டில் கொலு சமயம் தினம் ஒலிக்கும். மற்ற நாளில் வெள்ளிக்கிழமை வைப்போம்.
  தங்கை, மகன் பாடும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.
  சரஸ்வதி பூஜை அன்று எல்லா இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கும்.
  மலரும் வான் நிலவும் பாடல் டி.எம்.எஸ் அவர்களும் பாடி இருப்பார்.
  அந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைவரும் அவர் பாடலை பாடுகிறார்கள் என்பது போல் சினிமாவில் வரும். காட்சி நன்றாக இருக்கும்.
  பேட்டி முன்பு கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. இண்டைக்கு எல்லாமே சைவப் பாட்டாவே போட்டிட்டார் ஸ்ரீராம்:)

  மாணிக்க வீணை ஏந்தும் நானும் சின்னனில் பாடும் பாட்டு.. அதில் வரும் அம்மா.. என்பதை நான் நீட்டி முழக்கி இழுப்பேன்.. அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ என ஹா ஹா ஹா..

  கடசிப் பாட்டு இதுவரை கேட்டதில்லை...
  நான் இங்கின ரொம்ப அமைதியா வந்திட்டுப் போகிறேன், ஆரையும் பார்க்காமல்:))

  பதிலளிநீக்கு
 19. ///சிவாஜி கணேசன், சௌகார், முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது.. //

  எனக்கும் இதுதான் கண்ணில் பட்டது, பின்பு பார்த்தால் கில்லர்ஜி சொல்லிட்டார்:))..

  பதிலளிநீக்கு
 20. நவராத்திரி காலத்தில் மூன்று பாடல்களுமே சிறப்பான பாடல்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!