என்பது அனைவரும் அறிந்தது. காரத்தன்மையுள்ள பச்சைமிளகாயைக்
கொண்டு, இனிப்பு செய்து ருசித்திருக்கிறீர்களா?
ஆம், வித்தியாசமான முறையில், பச்சை மிளகாயில் சுவையான
'அல்வா' செய்வது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்...
தேவையானப் பொருட்கள்:
பச்சை மிளகாய் - 1 கப்
சர்க்கரை - ¼ கப்
முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
சோள மாவு - 1 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி
சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை போட்டு வறுத்து, தனியாக
எடுத்து வைக்கவும். பச்சை மிளகாயை விதைகள் நீக்கி, நீளவாக்கில்
இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைப் போட்டு
5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் இருக்கும் பச்சை மிளகாயை எடுத்து
இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோல் 3 முறை
செய்யவும்.
இதன் மூலம், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும். சூடு ஆறியதும்,
மிளகாயை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை
அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த மிளகாய்
விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர், சர்க்கரை
சேர்த்துக் கிளறவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து,
பச்சை மிளகாய் கலவையில் ஊற்றி, தொடர்ந்து கிளற வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக சுருண்டு, ஓரங்களில் நெய் பிரிந்து வரும்
சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கி
விட வேண்டும்.
'அல்வா' செய்வது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்...
தேவையானப் பொருட்கள்:
பச்சை மிளகாய் - 1 கப்
சர்க்கரை - ¼ கப்
முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
சோள மாவு - 1 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி
சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை போட்டு வறுத்து, தனியாக
எடுத்து வைக்கவும். பச்சை மிளகாயை விதைகள் நீக்கி, நீளவாக்கில்
இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைப் போட்டு
5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில்
தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் இருக்கும் பச்சை மிளகாயை எடுத்து
இதில் போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோல் 3 முறை
செய்யவும்.
இதன் மூலம், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும். சூடு ஆறியதும்,
மிளகாயை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை
அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, சூடானதும் அரைத்த மிளகாய்
விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர், சர்க்கரை
சேர்த்துக் கிளறவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து,
பச்சை மிளகாய் கலவையில் ஊற்றி, தொடர்ந்து கிளற வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக சுருண்டு, ஓரங்களில் நெய் பிரிந்து வரும்
சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கி
விட வேண்டும்.
தினத்தந்தி என்கிற பெயரை க்ளிக்கினால் அந்தப் பக்கத்துக்குச் செல்லும்! இதை சில மாதங்களுக்கு முன்னால் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் அனுப்பி இருந்தார். இன்று வெளியிட வேறு சமையல் குறிப்பு இல்லாததால் இதை வெளியிடுகிறேன் - தினத்தந்திக்கும், JC ஸாருக்கும் நன்றி சொல்லி! இது அதற்கும் முன்னர் 2021 ஆம் வருடம், பிப்ரவரி 8 ஆம் தேதி மாலைமலரில் வெளியாகி இருந்திருக்கிறது!
வேறு சமையல் குறிப்புகள் கைவசம் ஸ்டாக் இல்லை. அடுத்த வாரத்துக்குள் யாரும் ஒன்றும் அனுப்பவில்லை, ஒன்றும் வரவில்லை என்றால் நான் ஏதாவது சோதனை முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும் என்று அன்புடன் எச்சரிக்கிறேன்!
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க..
நீக்குஎல்லா இனிப்பும் இனிப்பல்ல தின்போர்க்குத் தித்திக்கும் இனிப்பே இனிப்பு..
பதிலளிநீக்குசுவை நெறி வாழ்க..
வாழ்க.... வாழ்க..... :))
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குகடலைப் புண்ணாக்கு அல்வா , கோலமாவு ரங்கோலி குருமா, அரளிக்காய் அவியல், வாழை மட்டை ஷவர்மா -
பதிலளிநீக்குஎன்றெல்லாம் ஏதாவது ஏடாகூடங்கள் வரலாம்..
//அரளிக்காய் அவியல்//
நீக்குஹா.. ஹா.. ஹா...
பழைய சோறும் பச்சை மிளகாயும் கூடுமானவரை எல்லாருக்கும் தெரியும் ..
பதிலளிநீக்குஅதற்காக பச்சை மிளகாய் பால் பாயசம் வைக்க முடியுமா?..
கலி காலத்தில் இதுவும் நடக்கும்..
ஆஹா.. நல்ல ஐடியா.. அடுத்த வாரம் அதுதான்!
நீக்கு// அடுத்த வாரம் அதுதான்!.. //
நீக்குஇப்படித்தான் போட்டுத் தாக்கணும்..
ஹா ஹா ஹா. இப்படியான வித்தியாசமான முயற்சி களுக்கு பாராட்டலாம். பாகற்காய் பாயாசமும் செய்து வெளியிடலாம். :)
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஎப்படியெல்லாம் தலைப்பு வாக்கிறாங்க, பாருங்க..
பதிலளிநீக்குபச்சை மிளகாய் அல்வாவாம்! இந்த வீரியம் இழந்த மிளகாயும் துணைப் பொருள் தானே தவிர அல்வாவாக பரிமளிப்பது சோளமாவு தான். கெட்டிக்காரர் புளுகு சாப்பிட்டவுடனே தெரிந்து விடும்..
பச்சை மிளகாய் என்பது Capsicum என்று சொல்லப்படும் குடமிளகாய் போலிருக்கு!! யாருக்கு அல்வா கொடுக்கறாங்களோ
நீக்குதெரிலே.. மிளகாயை வேகவைத்து... அப்படியானும் அல்வா சாப்பிட வேண்டுமா, என்ன?..
இந்த ஊர்ல இனிப்பு, மிளகாய் போளிகூட இருக்கு. அதிகமில்லை ஜென்டில்மேன்.. 20 ரூபாய்தான்.
நீக்குவீரியம் இழந்த மிளகாயா? அப்படி ஒன்று இருக்கா என்ன!
நீக்குயாராவது கிளப்பி விட்டால் போதும்!..
பதிலளிநீக்குகடலைப் புண்ணாக்கு காஜர் அல்வா - ஊரெங்கும் பிரபலமாகி விடும்..
ஹஹ்ஹஹா. :))
நீக்குஇது நல்லா இருக்கே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
பச்சை மிளகாய் அல்வா.. பெயர்தான் கொஞ்சம் மிரட்டுகிறதே தவிர இனிப்பும் காரமுமாக சுவையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. இதையும் மோர், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.
பொதுவாக அல்வாவுக்கு 1 கப் மூலப்பொருளுக்கு இரண்டு அளவாவது சர்க்கரை சேர்க்க வேண்டும். இது காரமான வஸ்து. இதற்கு ஒன்றுக்கு ஒன்று என்ற அளவு போதுமா என்ற சந்தேகம் வருகிறது. மற்றபடி வித்தியாசமான முயற்சி.
எங்கள் வீட்டில் முன்பு குழந்தைகள் இட்லி மிளகாய் பொடி (அரைத்தவுடன்) காரமாக அமைந்து விட்டால் அதில் சர்க்கரை சேர்த்து தொட்டுக் கொள்வார்கள். அதன் பின் அந்த சுவையின் பழக்கம் காரணமாக அந்தப் பொடி காலியாகும் வரை அதனுடன் இணைவது அந்த சர்க்கரைதான். அது வேறு விஷயம். இதனால் இ. பொடியுடன் கடைசியில் சிறிது வெல்லம் கலந்து இடித்துக் கொண்டிருந்தேன் . வீட்டிலுள்ள கார விரும்பிகளுக்கு இந்த முறை கோபத்தை ஏற்படுத்தியது. :))) (காரம் அதிகம் சாப்பிட்டாலே கோபம் வருவது இயல்புதானே)
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகச்சில சமயங்களில் மட்டும் இட்லி மிளகாய்ப்பொடியில் வெல்லம் சேர்த்திருக்கிறோம்.
நீக்குமிகச்சில சமயங்களில்!
கொஞ்சம் புளி கூட வைப்பார்கள்.
அனைவருக்கும் காலை.மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள் எத்தனை கருத்து வெளிவருமோ?
பதிலளிநீக்கு/எத்தனை கருத்து வெளிவருமோ?/
நீக்குஹா ஹா ஹா. அதற்கே தனியாக ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டும் போலும்.
வாங்க கீதா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம். எல்லா கமெண்ட்ஸும் வந்திருக்கா?
நீக்குசாதாரணமாகப் பச்சை மிளகாய்த் தொக்குப் பண்ணினாலே வெல்லம் சேர்ப்பது உண்டு. இல்லைனா வயிறு வயிறாக இருக்காது. இதிலே பச்சை மிளகாய் அல்வா வேறேயா? கடவுளே!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... யாராவது செய்து தந்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம்.
நீக்குதோசை மிளகாய்ப் பொடிக்கு மிளகாய் வற்றல்+பெருங்காயம்+உப்புச் சேர்த்து அரைக்கும்போதே வெல்லம் சேர்த்துவிட்டால் அந்த இனிப்பு மிளகாய்ப் பொடியில் அவ்வளவாகத் தெரியாது. கடைசியாக மிளகாய்ப் பொடியை நைஸாகத் தேவைப்பட்டால் அரைத்து எடுக்கையில் வெறும் சட்டியில் வறுத்த எள்ளைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுத்தால் போதும். மிளகாய்ப் பொடி வாசனை ஊரைத் தூக்கும்.
பதிலளிநீக்குஇட்லி/ தோசை மி. பொடி என்றால் எள் இல்லாமலா? கண்டிப்பாக அது மி. பொடியுடன் சேர வேண்டும்.
நீக்குஎள் சேர்த்தால் சிலருக்குப் பிடிக்காது. எனக்கு பிடிக்கும்.
நீக்குஇன்றைக்கு பல'காரம்' இட்லி தான். தொட்டுக் கொள்ள... அதே அதே..
பதிலளிநீக்குஎங்கல் வீட்டு மி.பொடி லைட்டான காரத்துடன் தான் இருக்கும். அதனால் தான் எனக்குக் கோபமே
வருவதில்லை போலிருக்கு!! கும்பகோண வெளிக்குத் தெரியாத லேசான
கிண்டல் தான் கொஞ்சம் தூக்கல்!..
என்னாது... ஜீவி சாருக்குக் கோபம் வராதா? இந்த நியூஸ் பச்சை மிளகாய் அல்வாவைவிட நம்பும்படியா இல்லையே
நீக்குஆக்ரோஷம் கோபமல்ல.. ஹிஹி.
நீக்குநானும் சிரித்து விட்டேன்!
நீக்குhttps://myhappykitchens.blogspot.com/2017/10/green-chilli-halwa.html
பதிலளிநீக்கு__/\__
நீக்குகட்டா மிட்டா என்பது வடவர்களின் உணவுப் பழக்கம் தானே!..
பதிலளிநீக்குஉணவு கலப்படம் என்பது டமிளனுக்குப் பிடித்த விசயம் தானே!..
நோ... இது பச்சைத்தமிழன் சமையல்.
நீக்குவித்தியாசமான முயற்சி தான்! ஆனால் எனக்கும் இது குட மிளகாய் அல்வா போலத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஅக்கா.. நல்லா பாருங்க அது பச்சை மிளகாய்த்தான்!
நீக்குஇப்பொழுதுதான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி
பதிலளிநீக்குநானும்! நன்றி நண்பரே..
நீக்குபெயர் இனிக்காமல் இளிக்கிறதே...
பதிலளிநீக்குஎரிக்காமல் இருந்தால் சரி!
நீக்குஆத்தாடி...!
பதிலளிநீக்கு:))
நீக்குடோக்ளாவுக்கு,வதக்கின மிளகாய் நிறைய தருவாங்க (வட இந்தியாவுல). அது அட்டஹாசமா இருக்கும். ஆனால் வயிற்றுக்கு என்ன கெடுதல் செய்யும் என்பது நமக்கு அப்போ தெரியாது.
பதிலளிநீக்குமிளகாய் அல்வா என்ன செய்யுமோ?
சுவைக்க நன்றாக இருக்கலாம். விளவு என்னை எமிரட்ஸ்
நீக்குஹாஸ்பிட்டலில் விட்டது:(
சாப்பிட்டபின் வயிற்றில் ஒரு குட்டி அடுப்பு உருவாகும் பாருங்கள்... அனல் பறக்கும்!
நீக்குநவராத்திரி முதல் நாளில் பச்சை மிளகாய் அல்வா!
பதிலளிநீக்குபடத்தில் குடமிளகாய் இல்லை, சின்ன பச்சை மிளகாய் வகுந்து வைத்து இருக்கே! அதுதான் இரண்டு மூன்று முறை, தண்ணீர் மாற்றி வேக வைத்து காரத்தை குறைத்து சோளமாவுடன், இனிப்பு சேர்த்து அல்வா செய்ய சொல்கிறார்கள்.
ஹா.. ஹா.. ஹா... நவராத்திரி என்றெல்லாம் யோசிக்கவில்லை அக்கா... ஜஸ்ட்...
நீக்குஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
பதிலளிநீக்குப மி அல்வா பயங்கர ருசியாக இருக்கும் என்றூ நம்புகிறேன்.
இது நாம் தீபாவளி லேகியத்துக்கு வெல்லமும் நெய்யும் சேர்த்து அதையே
ஒரு ஹல்வா மாதிரி செய்வது போல எனக்குத் தோன்றுகிறது.
பாட்டி, அம்மா எல்லாரும் என் லேகியத்தை
ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மருந்தின் வீர்யம் போய்விடும் என்று அவர்கள் குறை.
1974 தீபாவளிக்குத் திருச்சியில் இருந்து நாங்கள் சென்னைக்கு வந்த
கொண்டு வந்து கொடுத்த லேகியத்தைப்
புக்ககத்துப் பாட்டி (ஒரு பெரிய சம்புடம் ) அவரே சாப்பிட்டார்.
தன் மர பீரோவில் வைத்துக் கொண்டு:)
இந்த செய்முறையை அனுப்பிய ஜெயக்குமார் சந்த்ரசேகர் ஸாருக்கு நன்றி.
பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். இது நிஜமாய் யாராவது செய்து பார்த்திருப்பார்களா, தெரியாது. தீபாவளி லேகியதில் பமி சேர்ப்பர்களா என்ன!
நீக்குஅம்மாடி ...பச்சை மிளகாய் அல்வா யா
பதிலளிநீக்குவித்தியாசமான குறிப்பு.
பதிலளிநீக்குதோசைக்கு நம் ஊரில் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கடுகு, வெந்தயம், கறிவேற்பிலை தாளித்த கறி வைப்போம் இறுதியில் புளியை தேங்காய் நீரில் கரைத்து விடுவோம் காரம் சற்று தணிந்து இருக்கும்.