ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஞாயிறு : அறிவிக்கப்பட்ட ஆசிரியருக்கு பதிலாக... 'டொயிங் டொயிங்'

ஆசிரியர்கள் அறையில் கணக்கு  வாத்தியார் தேமே என்று உட்கார்ந்திருப்பார்.  பியூன் வந்து கதவைச் சுரண்டி உள்ளே வருவான்..

"சார்..   உங்களை ஹெச் எம் கூப்பிடறார்..."

எழுந்து அவர் அறைக்குப் போனால், "இன்னிக்கி நைந்த் ஸ்டாண்டார்ட் பி செக்ஷன்ல இங்கிலிஷ் வாத்தியார் லீவு.  அவருக்கு பதிலா நீங்க க்ளாஸ் எடுங்க.."

"மாட்டினாண்டா மாரிமுத்து" என்று அவரும் பிரம்போடும் சாக்பீஸோடும் உற்சாகமாகி கிளம்புவார்!

இங்கிலிஷ் வாத்தியார் லீவு என்றதும் சந்தோஷத்தில் இருந்த அந்த வகுப்பு மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?  லீடரிடம் முறையிடுவார்கள்..  "அதுக்குதான் முன்னாலேயே போய் கேம்ஸ் விளையாட கிரௌண்டுக்குக்கு போறோம்னு கேளுன்னு சொன்னோம்..  கேட்டியா?"

கண்ணாடி போட்ட சில முதல் பெஞ்ச் பசங்க மட்டும் சந்தோஷமா இருப்பாங்க...

நான் கணக்கு வாத்தியாரா, பி ஈ டி க்ளாஸா என்பது உங்கள் பின்னூட்டங்களினால்தான் அறியவேண்டும்!

புரியவில்லையா?

அதாவது நண்பர்களே...  முன்னால் எல்லாம் ரேடியோ நாம் அதி தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்  ஒரு வழக்கம் உண்டு.  அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக வேறு நிகழ்ச்சி இடம்பெறும்.  இதற்காக என்றே சில 'நிலைய வித்வான்கள்' இருப்பார்கள்.  அவர்களை விட்டு ஏதாவது 'டொயிங் டொயிங்' என்று ஒலிக்க விட்டு விடுவார்கள்.

அதுபோல, இன்று ஞாயிறு விற்பன்னர்கள் லீவு போட்டு விட்ட காரணத்தினால், மற்றும் பிளாக் பாங்கில் வேறு போட்டோஸ் எதுவும் அக்கவுண்டில் இல்லாத காரணத்தால்..

"Sunday கொஞ்சம் பார்த்துக்கப்பா...  எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு...  ஸ்விஸ் அக்கவுண்ட் சரிபார்க்கணும்"

என்னால் எப்பப்போதோ (!) எடுக்கப் பட்ட படங்களை வைத்து இன்றைய ஞாயிறுக்கு உங்களை படம் பார்க்க அழைக்கிறேன்!

ஓகே..   லெட்டஸ் ஸ்டார்ட்...   படம் காட்ட ஆரம்பிக்கலாமா?இந்த மாதிரி இருப்புப் பாதைகளை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்குமோ, என்ன தோன்றுமோ, எனக்கு என்னென்னவோ தோன்றும்.  பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கும். இளமைக்காலங்களும், பயண நேரங்களும் நினைவுக்கு வரும்.  சில மெலடி பாடல்கள் மனதில் ஓடும்.

இணையா விட்டாலும் 
பரவாயில்லை
துணையாக வா 
கடைசி வரை...
ஒன்றில்லாவிட்டால் 
மற்றொன்றால் 
பயனில்லை 


பயணம் கிளம்பி... அதென்னவோ கோவில் கோபுரத்தைப் பார்த்தால் போட்டோ எடுக்காமல் போகத் தோன்றுவதில்லை.  குடந்தை ராமசாமி கோவில் கோபுரம் போட்டோவைத் தேடினேன்.  கிடைக்கவில்லை!கோவிலுக்குள் நுழைந்தால் எத்தனை நீண்ட நடை..  பக்கங்களில் நந்தவனங்கள், சிறு சந்நதிகள்...


கோவில் மணியை ஒலிக்கச்செய்து நாதருக்கு நம் வரவை முன்னறிவிப்போம்!


எழுத்தறிநாதரே..  எம் எழுத்தையும் இந்தப் பதிவின் படங்களையும் சுவையுறச்செய்யும்!


அக்னிதேவன் கிளர்ந்தெழும்போது அதில் சில உருவங்கள் தெரியும் என்பார்கள்.  அதன் வழியே நம் முன்னோர்கள் கூட வந்து பார்த்துச் செல்வார்கள் என்று தோன்றும்.  இதில் குதிரை பூட்டிய ரதத்தின் முன்பக்கம் ஒன்று தெரிவது போல எனக்கு பிரமை!


இதில் சில உருவங்களும் முகங்களும் தெரிவது போல பிரமை.  இடது ஓரம் தம்புராவோடு ஒரு உருவம் அமர்ந்திருப்பபது போல தோன்றுகிறது எனக்கு!


சிறு கொழுந்தில் ஒரு ஒற்றை வடிவம்...விறகைத தாண்டி வெளியேற முயல்வது போல தோற்றம்.


அக்னியில் நெய் ஆஹுதி.... நீர் குடித்த மிருகம்..  அல்லது ஜொள்ளு?!


"அர்ஜுனா...  பார்..  ஃபோட்டோவா எடுத்துத் தள்ளுகிறார்கள்..  ராகுல் காந்தி வருவதற்குள் நாம் கிளம்புவோம் வா..  குதிரைகள் துடித்துக் கிளம்புகின்றன பார்...   அங்கே கொழுக்கட்டை ரெடியாம்....""சப்ஜெக்ட் மாற்றுகிறாயா கிருஷ்ணா...   ஆகட்டும் பரந்தாமா....சரி...  பாதை தெரிகிறது..  ஆனால் மரங்கள் பாதை ஆரம்பத்தை மறைக்கின்றனவே...  சரி..  சரி..  நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை!"ப்படி வடிவான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி?  கொஞ்சம் கீழே வாருங்கள்...  


அரிசியை நீரில் அலசி துணியில் காயவைத்து அரைத்து மாவாக்கி, அடுப்பில் பாத்திரம் வைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, அது கொதிக்கும்போது மாவை அதிலிட்டு கிளறி, அடுப்பை அணைத்து கையால் கட்டி இல்லாமல் பிசைந்து, ஓரமாக வைத்து ஈரத்துணியால் சற்றுநேரம் மூடி வைத்து, பின் கைகளில் எண்ணெய் தடவி, அல்லது இலேசாக நீரை தொட்டுக்கொண்டு மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து...


ஓரங்களிலிருந்து வலது கைபெருவிர,. ஆள்காட்டி விரல்களால் மெதுவாய் அமுக்கிக் கொண்டே, நடுவே நோக்கி முன்னேறவேண்டும்.  இன்னொரு கை அதைச் சுழற்றிக் கொண்டே வருவதில் அது குழிவாய், உள்வளைந்தும் வரவேண்டும்.  


இதைவிட இன்னமும் கூட மெலிசாய கப் வரவேண்டும்! கிழியக்கூடாது.  உள்ளே தித்திப்பு பூரணம் இட்டால் முனை கூராக உருண்டையாய் மூடவேண்டும்.

காரபூரணம் (உளுத்தம் பூரணம்) என்றால் இப்படி சோமாசி போல மடித்து வளைத்துவிட வேண்டும்!

"வேணாம்...   உன் கருணை வேணாம்...   ஐஸ் வைக்காதே..    என் குழந்தை எங்கே என்று தெரியும்வரை நான் உண்ணாவிரதம்..."

நாளை....

118 கருத்துகள்:

 1. தினம் தினம் ஸ்ரீராம்!!  வாத்தியார் உவமை உண்மையாகவே எனக்கு ஏற்பட்ட ஒன்று. 

  கவுதமன் சார் ஒரு வருடத்துக்கு லால் பாக் போட்டோக்கள் வரும் என்று சொல்லியிருந்தாரே? 

  ஞாயிறு படங்கள் கீதா ரங்கனிடம் கேட்டு வாங்கி போடலாம்.. 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தினம் தினம் ஸ்ரீராம்!! //

   ஆம்.  அலுத்துதான் போகும்!  நேற்று என்னிடம் பணி ஒபபடைக்கபப்ட்டபோது யாரிடமும் கேட்டுப்பெற நேரமில்லை.  கீதா ரெங்கனும் (அவர்) ஊரில் இல்லை!

   நீக்கு
  2. // கவுதமன் சார் ஒரு வருடத்துக்கு லால் பாக் போட்டோக்கள் வரும் என்று சொல்லியிருந்தாரே? // ஆ ! அவ்வ்வ் அப்படி எல்லாம் நான் ஒன்றும் சொல்லவில்லையே!!

   நீக்கு
  3. மொபைலை எடுக்க மறந்து சென்னையில் வீட்டில் இருக்கிறது. நம்ம மறதிக்கு அளவே இல்லாம போச்சு!!! அவங்க கூரியர்ல அனுப்பி எனக்குக் கிடைத்தால்தான். .இப்ப மொபைல் இல்லை எனவே என் கூகுள் ஐடி சைன் இன் பண்ண முடியாது.

   லேப்டாப் எடுத்துக் கொண்டுதான் வந்திருந்தேன் ஸ்ரீராம். அதனாலதான் தொடர் பதிவில் இன்று சிம்மாச்சலம் பதிவு போட முடிந்தது. சில பதிவுகளுக்குக் கருத்து போட முடிந்தது ஆனால் அங்கு நெட் எல்லா ரூமிலும் சிக்னல் கிடைக்காது. படுத்தல். ப்ளஸ் உறவினரோடு இருந்ததால் அதிகம் இணையம் பக்கம் வர முடியவில்லை.
   இதற்கு முன்னான துளசி அனுப்பிய கருத்துகளில் ஒன்றிரண்டு போட முடிந்தது. மற்றவை எல்லாம் அப்படியெ உள்ளன!!
   இப்ப மொபைல் இல்லை...ஸோ அவரோடும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. அவருடைய கருத்துகளையும் போட முடியாது. மொபைல் வந்தபிறகுதான் அந்த வேலைகள், மற்ற வேலைகளும் நடக்கும்.

   ஜெகேசி அண்ணா, என் படங்கள் வந்திருந்தாலும் கூட இந்த அளவு சிறப்பாக என்னால் படத்திற்கான வரிகள் சொல்லியிருந்திருக்க முடியாது. ஸ்ரீராம் அசத்திவிட்டார் அவர் கற்பனையையும் எழுத்தையும் பற்றிச் சொல்லணுமா என்ன!!

   கீதா

   நீக்கு
  4. மொபைல் சென்னையிலேயே விட்டு விட்டீர்களா?  கஷ்டமாச்சே...  எப்படி சமாளிப்பீர்கள்?  கூரியரில் அனுப்ப முடியுமா?

   நீக்கு
 2. பாட்டுக்கு பாட்டு 

  தண்டவாளங்கள் இணைந்திருக்கின்றன. 
  ஸ்லீப்பர் கட்டைகள் உதவியால். 

  வாழ்க்கைப்பயணமும் இணைந்திருப்பது 
  பிள்ளைகள் என்ற ஸ்லீப்பர்களால். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல பா பா...   'பிள்ளைகள்'  என்னும் இடத்தில் அன்பு அல்லது நேசம் அல்லது காதல் அல்லது புரிதல் போன்ற வார்த்தைகளில் ஏதாவதொன்றை உபயோகிக்கலாம்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் உங்கள் கருத்து சூப்பர். அதே நேரம் அண்ணா சொல்லியிருக்கும் கருத்தும் பல குடும்பங்களுக்கு ஒத்துப் போகிறது எனலாம். பிள்ளைகள் என்ற ஒரு விஷயம் இருவரையும் இப்படிக் கொண்டு செல்லும் குடும்பங்களும் உண்டே

   கீதா

   நீக்கு
  3. வாரிசுகளை முழுதாக நம்ப முடியாது என்கிற எண்ணம் எனக்கு உண்டு!

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. அனுப்பிய படங்கள் என்னவாயிற்று? இன்னும் இரண்டு வாரங்களுக்காவது இருந்திருக்கணுமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரிடம் இருக்கும்.

   வரும்!

   மேலே சொன்னபடி இது மாற்று ஆசிரியர் தவிர்க்க முடியாமல் எடுக்கும் பீரியட்! இயல்புநிலை மீண்டபின் மீண்டும் வழக்கங்கள் தொடரும்.

   நீக்கு
  2. மன்னிக்க வேண்டுகிறேன். தவிர்க்க முடியாத சில சிக்கல்கள் காரணமாக என்னால் நேரம் ஒதுக்க இயலவில்லை.

   நீக்கு
 5. கோவில் படங்கள் தொடர்பில்லாமல் இருக்கிறதே...திருப்பதியில் எடுத்த படம் உட்பட... சொல்லியிருந்தால் உடனே அனுப்பிவைத்திருப்பேனே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களுக்குள் தொடர்பில்லை. சும்மா என்னிடம் உள்ள படங்களை வைத்து தாளித்த அம்மிணி கொழுக்கட்டை வகையறா...

   நீக்கு
 6. நாச்சியார் கோவில் படம் ஒன்று இருப்பதால் அதையே ஆரம்பமாக வைத்து இரண்டு நாட்களுக்குள் சாயிறு பகுதிகள் சில அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @நெல்லை! அதென்ன "சாயிறு" பகுதிகள்?

   நீக்கு
  2. சனி + ஞாயிறு = சாயிறு & ஞானி.

   நீக்கு
  3. நன்றி கௌதமன் சார். நல்ல மறுமொழி.

   நான் முதலில் எபி தளத்தை மட்டும்தான் பார்ப்பேன். ஐபேடில் பின்னூட்டமிட்டால் தட்டச்சுத் தவறுகள் வரும். ஞாயிறு என்பது சாயிறு ஆகிவிட்டது. ஆனால் கேஜிஜி சார் நல்லா யோசித்து எழுதியிருக்கிறார்.

   நீக்கு
 7. ்கோபுரங்களைப் படமெடுக்கும்போது அது எந்தக் கோவில் என்று தெரியும்படியாக ஒரு படமும் எடுத்துவைத்துக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும். ஆனால் அவசரத்துக்கு அப்படியான படம் - நான் தேடிய சில படங்கள் - கிடைக்கவில்லை!

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  ஆகா...அருமை.. இன்று நாள் மாறிய வித்தியாசமான வியாழன் கதம்பம். பதிவு படங்கள் பள்ளியோடு பயணித்து, போகும் வழியில் பாங்க்குள்ளும் நுழைந்து, பணத்தைப் பற்றி கணக்கிடாமல், பக்தி மார்க்கத்தில் சென்று. பரந்தாமனை பரவசத்துடன் சந்தித்து, மீண்டும் உலக இயல்பால் கவரப்பட்டு பசியெனும் மயக்கத்தில் வீழ்ந்து, அதை தூண்டும் வண்ணங்களில் அமைந்த பச்சரிசியின் கலவைகளை கண்டுகந்த சந்தோஷத்தோடு திரும்பும் போது , ஒரு பாசப் பறவையின் உண்ணாவிரதத்தையும் பார்த்து மனது பரிதவித்து நோகும் போதே, நாளைய பொழுதையும் அவசியம் பார்த்து விட வேண்டுமென்ற எதிர்பார்ப்பையும் மனதுக்குள் உண்டாக்கி விட்டதே....!! .

  அருமை.. அருமை. .பதிவு அத்தனை காலத்திற்குள்ளும் ஒரே பொழுதில் சென்று வந்து விட்ட மாதிரி உள்ளது. தங்களின் இந்த பதிவை மிகவும் ரசித்தேன். எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.. . பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..   நன்றி அக்கா...   படங்களை இணைக்க ஒரு காரணக்கதை கண்டு விட்டீர்கள்!  

   // நாள் மாறிய வித்தியாசமான வியாழன் கதம்பம்//
   அட!

   //எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்..//

   தன்யனானேன்.  நன்றி.

   நீக்கு
  2. தங்கள் பதில் கருத்துக்கு மிக்க நன்றி கௌதமன் சகோதரரே.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காலையில் கோபுர தரிசனம், ஈசனின் தரிசனம் என மனதுக்கு நிறைவூட்டும் படங்கள். எழுத்தறிநாதர் கோவில் என்றால் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் அன்று குறிப்பிட்ட கோவிலா?

  அக்னியின் ஜ்வாலைகள் படங்கள் அருமை. அதில் தெரியும் உருவங்களும் அருமை. நம் கற்பனைக்கு ஏற்றபடி அக்னியின் கொழுந்துகள் ஆடும் போது மனது அதில் லயிப்பது உண்மைதான். நெய் விடும் உபகரணம் /நீர் குடித்த மிருகம் ஜொள்ளு/வித்தியாசமான சிந்தனை வரிகள்.

  /சிறு கொழுந்தில் ஒரு ஒற்றை வடிவம்...விறகைத தாண்டி வெளியேற முயல்வது போல தோற்றம்./

  அந்தப்படத்திற்கு பொருத்தமாக அமைந்த வரிகளையும், தண்டவாளத்திற்கு பொருத்தமான கவிதையையும் ரசித்தேன். இன்று மிகவும் கலகலப்பாக்கிய. ஞாயிறு படங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எழுத்தறிநாதர் கோவில் என்றால் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் அன்று குறிப்பிட்ட கோவிலா? //

   இதில், எங்கு கீதா அக்கா குறிப்பிட்டார் என்று நினைவில்லை.  ஆனால் இது இன்னம்பூர் .

   மற்றவற்றையும் சொல்லி ரசித்ததற்கு நன்றி அக்கா.

   நீக்கு
  2. முன்னர் ஒரு முறை இன்னம்பூர் பற்றிப் பேச்சு வந்தப்போக் குறிப்பிட்டூ நான் எழுதிய சுட்டியையும் கொடுத்திருந்தேன். அதைத் தான் கமலா சொல்கிறார் ஶ்ரீராம்.

   நீக்கு
 10. கோயில் படங்கள் சிறப்பாக இருக்கிறது ஜி
  தரிசித்து கொண்டேன் நன்றி

  தண்டவாளம் படம் அருமை.

  பதிலளிநீக்கு
 11. ஆஹா! சமயத்தில் நிலைய வித்வான்கள் கூட அருமையான கச்சேரி கொடுப்பார்கள். இதுவும் அப்படிப் பட்டதொரு கச்சேரியே! புகைப்படங்களோடு கூடிய விளக்கங்கள் அனைத்தும் மனதைக் கவர்ந்திழுக்கின்றன. அதிலும் தம்புராவோடு உட்கார்ந்திருக்கும் பெரியவர் (அக்னி ஜ்வாலையில்) தலையில் கட்டிய தலைப்பாகையோடு இருக்கும் தியாகப்பிரம்மம் போலவே தோற்றம் அளிக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..  வாங்க கீதா க்கா..  பாராட்டுக்கு நன்றி.  தியாகப்ரம்மம் எனக்கும் தோன்றியது.  ரொம்ப ஓவராக சொல்றேன்னு சொல்லிடுவீங்களோன்னு விட்டேன்!  தம்புரா உருவம் உங்களுக்கும் தெரிந்தது சந்தோஷம்.

   நீக்கு
 12. இன்னம்பூருக்கு எப்போப் போனீங்க? நாங்க போனப்போக் காமிராவை வாங்கிக் கொண்டு விட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்கஎன்னடான்னா சாவகாசமா கர்பகிரஹ வாசலை எடுத்துப் போட்டிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   ஆமாம்.. ஆமாம் இன்னம்பூர்.... அந்த கோவில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் தாங்கள் சொன்னவுடன் நினைவு வந்து விட்டது. இவ்வளவு நேரம் யோசித்தும் வரவில்லை. நினைவுபடுத்தியதற்கு நன்றி சகோதரி நன்றி,

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. 2018 அல்லது 2017 என்று நினைவு.  நாங்கள் போனபோது ஆட்களே கண்ணில் படவில்லை.  பல இடங்களுக்கு ஒரு அவசர விசிட் அடித்துத் திரும்பிய ட்ரிப் அது.

   நீக்கு
  3. இன்னம்பூரார் என்று ஒரு மூத்த பதிவர் இருக்கிறார்.  இப்போது அவர் கண்ணில் படுவதில்லை.

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவரை அறிமுகப்படுத்தியதே நான் தான் இல்லையோ? அவர் இப்போ இல்லை. இறைவன் அடி சேர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. பெருங்களத்தூரில் அவர் இருந்த முதியோர் இல்லத்திற்கு எங்களையும் அழைத்த வண்ணம் இருந்தார். :( கடைசி வரை ஏதேனும் படித்துக்கொண்டும்/எழுதிக்கொண்டும் ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இளைஞர்களைத் தயார் செய்து கொண்டும் சுறுசுறுப்பாக இருந்தார்.

   நீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்குச் சொன்ன பதிலைக் காணோம். மெயில் பாக்சில் பார்க்கிறேன்.

   நீக்கு
  6. //Geetha Sambasivam "ஞாயிறு : அறிவிக்கப்பட்ட ஆசிரியருக்கு பதிலாக... 'டொயிங் டொயிங்' ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

   க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவரை அறிமுகப்படுத்தியதே நான் தான் இல்லையோ? அவர் இப்போ இல்லை. இறைவன் அடி சேர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. பெருங்களத்தூரில் அவர் இருந்த முதியோர் இல்லத்திற்கு எங்களையும் அழைத்த வண்ணம் இருந்தார். :( கடைசி வரை ஏதேனும் படித்துக்கொண்டும்/எழுதிக்கொண்டும் ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இளைஞர்களைத் தயார் செய்து கொண்டும் சுறுசுறுப்பாக இருந்தார்.// எல்லாப் பதிவுகளிலும் இதே வேலையாகப் போய் விட்டது. வர வரக் கருத்துரைகள் கொடுப்பதற்கே மனசு வரதில்லை. உடனே காணாமல் போகின்றன.

   நீக்கு
  7. அறிமுகப்படுத்தியது நீங்களா என்று நினைவில்லை.  ஆனால் அவரையே டிக்கடி கூகுள் ப்ளஸ்ஸில் பார்த்த நினைவு.  சரியா?

   காலமாகி விட்டாரா...   அதுவும் இப்போ சமீபத்தில்தானா?  முதியோர் இல்லத்தில் இருந்தாரா?

   நீக்கு
  8. ஆமாம், முதியோர் இல்லத்தில் தான் இருந்தார். அவர் மகன் பக்கிங்ஹாம் மாளிகையில் காவல் இருக்கும் ராணுவத் தலைவர். அவர் மகள் யு.எஸ்ஸில் ஃபோனிக்ஸ்/ஃபீனிக்ஸ் என்னும் ஊரில் இருக்கார். இங்கே தன் தம்பி/மைத்துனி ஆகியோருடன் குரோம்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட் எடுத்துக் கொண்டு வசித்து வந்தவரை இனி தனியாக இருக்க வேண்டாம் எனச் சொல்லி முதலில் பெண்ணும்/பின்னர் பிள்ளையும் அழைத்துச் சென்றனர். சுமார் இருவருடங்கள் இருந்தவருக்குச் சரியாக வரலை. மீண்டும் இந்தியா/தமிழ்நாடு வந்து பெருங்களத்தூரில் முதியோர் இல்லத்தில் தங்கினார். அங்கிருந்தபடியே பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து தமிழில் முனைவர் பட்டமும் வாங்கினார். பின்னர் மெல்ல மெல்ல முதுமை/தனிமை ஆட்கொண்டு விட்டது என நினைக்கிறேன்.

   நீக்கு
  9. ராணி இறந்த செய்தியைப் படிக்கையில் இன்னம்பூரார் பிள்ளையைத் தான் நினைத்துக் கொண்டேன். ராணியின் மெய்க்காப்பாளர்களின் தலைவராக இருந்த நினைவு. மருத்துவமும் படிச்சிருப்பதால் மருத்துவராகவும் இருந்தார் என நினைக்கிறேன்.

   நீக்கு
  10. மிகவும் வருத்தமான செய்தி சகோதரி. தனிமை கொடியதுதான்.

   நீக்கு
  11. இதில் ஒரு முக்கியமான செய்தி என்னன்னா திரு இன்னம்பூரார் அவர் சகோதரருக்குத் தன் ஒரு சிறு நீரகத்தைத் தானமாக வழங்கியுள்ளார். சுமார் ஐம்பது வருடங்கள் முன்னரே! அதோடு அவர் இத்தனை காலமும் நீரிழிவு நோயும் பாதித்து சுமார் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கார். அந்தக் காலத்து ஐசிஎஸ் என்பதால் அதன் தாக்கம் அவர் நடை,உடை, பாவனைகளில் தெரியும்.

   நீக்கு
 13. இருப்புப் பாதைகள் இணையாவிட்டாலும் கடைசிவரை ஒன்றாகப் போவது கணவன்/மனைவி வாழ்க்கை நடத்துவது போலத்தான் இருப்பதாகத் தோணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணவன் மனைவி என்பதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். குழந்தைகளை சேர்க்கவில்லை!

   நீக்கு
 14. சுவாரசியமான மருக்கொழுந்துக் கதம்பம். நெல்லைக்குத் தான் பாவம் மனசே ஆகலை. தான் படங்கள் அனுப்பியும் வெளிவரலையேனு கவலை. இதை ரசிக்கும் மனோநிலையில் இல்லை போல! :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... உண்மைதான். தவிர்க்க முடியாத நிலை. நெல்லை மன்னிக்க...

   நீக்கு
  2. அப்படீல்லாம் இல்லை கீசா மேடம். படங்கள் தொடர்பில்லாததாக எனக்குப் பட்டது. அப்படியே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். எப்போதும் ஸ்ரீராம் நல்லா எழுதுவார். படங்களை கோர்வையாக என்னால் பார்க்க முடியாததால் அந்தப் பின்னூட்டம்.

   நீக்கு
 15. புறா பாவம்! எதிரே அன்னம் இருக்கப் பட்டினி கிடக்கே! குஞ்சு விரைவில் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்!!!  ஆனால் இந்தப் படம் அந்த 2017 ட்ரிப்பில் நாச்சியார் கோவிலில் எடுக்கப்பட்டதுதான்!

   நீக்கு
 16. எதிர்பாராத பதிவு..
  இனிய ஞாயிறு..

  அன்பின் வணக்கங்களுடன்

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம். 

   திடுக்கிட வைக்கும் பதிவா?!!  வாழ்க நலம்.

   நீக்கு
 17. //பித்தனின் வண்ணம் பிதற்றலின் வண்ணம்..//

  இந்த வார்த்தைகள் எளியேன் எனக்கானவை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்..

  நன்றி ஸ்ரீராம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன அங்கிருந்து இங்கு கடத்தி விட்டீர்கள் வார்த்தையை!!!

   நீக்கு
  2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

   இப்போதுதான் தங்கள் பதிவை படித்து வந்தேன். அருமை.

   /பித்தனின் வண்ணம் பிதற்றலின் வண்ணம்..//

   அவ்வரியின் அர்த்தத்தை நானும் புரிந்து கொண்டேன்.

   இன்றைய ஞாயிறு காலை வழக்கமான சூரியோதயத்தினால் மட்டுமின்றி, உங்கள் இருவரின் (நீங்கள், சகோதரர் ஸ்ரீராம்) பதிவினாலும் மனதுக்குள் ஒளி வீசுகிறது. நன்றி ஞாயறுக்கும், உங்களிருவருக்கும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 18. இதுக்கப்புறமாக் கொடுத்த கருத்துகளைக் காணவில்லை. வாழ்க்கையே வெறுத்துடும் போல!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  /மாட்டினாண்டா மாரிமுத்து" /

  சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவில் அழகான சேர்ந்தாற் போல விமர்சனமாக வரும் இவ்வரிகளையும்,

  /கண்ணாடி போட்ட சில முதல் பெஞ்ச் பசங்க மட்டும் சந்தோஷமா இருப்பாங்க.../

  தங்களின் அருமையான வரிகளையும் மீண்டும் படித்து ரசித்தேன்.

  படிப்பாளி குழந்தைகள் முதல் பெஞ்ச் என்றால் கண்ணாடியும் விரைவில் அவர்களை வந்து சரணடைந்து விடும்.. ரத்தின சுருக்கமான தெளிவான வரிகள்.

  பதிவின் தாக்கம் என்னை இன்னமும் கிச்சனுக்குள் அனுப்பவேயில்லை.. :))) அடுப்பு கோபித்துக் கொள்ளும். வருகிறேன். நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..   இப்படி சொல்லி, குறிப்பிட்டு ரசித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும் என்பது உ கை நெ 


   //பதிவின் தாக்கம் என்னை இன்னமும் கிச்சனுக்குள் அனுப்பவேயில்லை.//

   நன்றி..  நன்றி...!

   நீக்கு
 20. // என்ன அங்கிருந்து இங்கு கடத்தி விட்டீர்கள் வார்த்தையை!.. //

  இங்கே பதிவு செய்தால் தான் உடனடியாகக் கவனத்துக்குள்ள்ளாகும்..

  எல்லாம் ஒரு தம்பட்டம் தான்..

  தண்டோரா தான் தடை செய்யப்பட்டு விட்டதே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. ஆனால் நீங்கள் அங்கே பதில் கொடுத்தால் எனக்கு தெரிந்து விடும்!

   நீக்கு
 21. //மாட்டினாண்டா மாரிமுத்து..//


  ஃ முத்திரை தேவகோட்டை
  ஜி யின் சாயல்
  மிகவும் கலக்கலான பதிவு..

  தொடக்கமே இணைய நகைச்சுவை..

  பதிலளிநீக்கு
 22. நிலைய வித்வான் என்றாலும் டொய்ங்.. டொய்ங் இனிமை..

  பத்ம ஸ்ரீ - பட்டமே
  கொடுக்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்ம என்று சொல்லாதீர்கள். வம்பாகி விடும்!

   நீக்கு
  2. பத்மா என்று சொல்லவில்லையே!..

   ஓ.. நீங்க அங்கே இருந்து வருகின்றீர்களா!..

   நீக்கு
  3. இல்லை...! இங்கே இருந்து அங்க பார்க்கிறேன்!!

   நீக்கு
 23. அது சரி..

  நிலைய வித்வான்களில் எவ்ருக்காவது
  பத்ம ஸ்ரீ கொடுத்திருக்கின்றார்களா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன்.  ஆனால் புகழ்பெற்ற எம் பி ஸ்ரீநிவாசன் நிலைய வித்வான்தான்..

   நீக்கு
  2. ஆம்!..

   எம் பி ஸ்ரீநிவாசன் அவர்கள் தனது தனித் தன்மையினால் புகழ் பெற்றவர்..

   நீக்கு
 24. வித்தியாசமாக இருந்தாலும் நன்றாக உள்ளது...

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம் அட்டகாசமான பதிவு போங்க!! ஞாயிறு இப்படி ஒரு அழகான பதிவை எதிர்பார்க்கவே இல்லை!!!!!

  வாசிக்கும் போதே அட இன்று ஸ்ரீராம் கதை எழுதியிருக்கிறாரான்னுதான் வாசிக்கத் தொடங்கினேன். அப்புறம் படக்கதைகள்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. எல்லாப் படத்துக்கும் செம கற்பனையான வரிகள்...

  அந்த ஜொள்ளு ரொம்பவே ஈர்த்தது!!! ஹாஹாஹாஹா தத்ரூபம் அந்த மிருகம் வாய் பிளந்து வழிவது!!! அந்த ஃபோட்டோ செம ஷாட் ஸ்ரீராம். ரொம்ப நல்லாருக்கு...ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 27. அது சரி இந்த கௌ அண்ணா எப்ப ஸ்விஸ் அக்கவுன்ட் எல்லாம் ஆரம்பிச்சாரு!!! ஜொல்லவே இல்லை....ஜொல்லிருந்தா நாங்களும் கூட்டுச் சேர்ந்திருப்போம்ல.....ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. எழுத்தறிநாதர்!!! அருமையான வித்தியாசமான பெயர் இல்லையா ஸ்ரீராம். இறைவன் அழகு!

  உங்க பதிவுக்கு அருளாசி வழங்கிட்டாரே எழுத்தறிநாதர்! ...எனக்கும் எழுத வர மாட்டேங்குது கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ் ரெக்கமன்ட் பண்ணுங்க, ஸ்ரீராம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 29. அந்த ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் தூண்கள் நிறைந்த அந்த ஷாட் செம ....சூப்பர் அழகா இருக்கு ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 30. கோபுரம் ஷாட் அருமை!..

  ஆமாம் ஸ்ரீராம் நானும் கோபுரம் எங்க பார்த்தாலும் எடுத்துவிடுவேன். ரொம்ப ரொம்பப் பிடிக்கும்...நிறைய எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் பதிவுதான் வரலை!!!! இதுக்கு அடுத்த லைன் எல்லாம் எழுத மாட்டேன் எல்லாருக்கும் தெரிஞ்சு விஷயம்தானே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 31. எனக்கும் இருப்புப் பாதைகள் ரொம்பப் பிடிக்கும்!!! பார்த்துக் கொண்டே இருப்பேன். உங்கள் இந்த ஷாட்டும் செம...நல்லாருக்கு

  கவிதை அருமை. நல்ல அர்த்தமுள்ள கவிதை.

  கீதா

  பதிலளிநீக்கு
 32. அக்னி படம் - நீங்கள் சொல்லியிருக்கும் வடிவம் என் மனதிலும் தோன்றியது....குதிரையை கடிவாளம் பிடித்து பின்னில் மூன்றுபேர் ஓட்டுவது போல கைகள் கூட இருப்பது போலத் தோன்றுகிறது அவர்களின் மேல் தூண்டும் முடியும் காற்றில் பறப்பது போன்று படங்களில் எல்லாம் காட்டுவாங்களே அப்படி குதிரைகள் கால்களைத் தூக்கிக் கொண்டு பறக்கும் வேகத்தில்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   உங்களுக்கும் அதே காட்சிகள் தெரிகிறதா?  ஒருவேளை நான் சொல்லியிருப்பதாலோ?!

   நீக்கு
 33. மூன்றாவது அக்னி - சிறு கொழுந்து - படங்களில் ஆவி மெதுவா எழுந்து அப்படியே புகையா போகுமே அது போல!!

  முதலில் பயண டிஸ்கஷன்....அடுத்து பயணம் (தண்டவாளம் குறியீடு), கோயில்களுக்குச் செல்லும் பயணம், அதோடு ஏதோ அங்கு ஒரு ஹோமம் நிகழ்வு, அடுத்து கோயிலோடு இருக்கும் நந்தவனம்...கடைசில கோயில்னா பிரசாதம் இல்லாமலான்னு கொழுக்கட்டை பிரசாதத்தோடு ஞாயிறு பட உலா முடிவுற்று நாளையும் ஒரு சாப்பாடு உண்டு எல்லாரும் வந்துருங்கன்னு முடிச்சாச்சு!!!

  படங்களின் அணிவகுப்பு இப்படி எண்ண வைத்தது!

  கொழுக்கட்டை சூப்பர். நல்லா வந்திருக்கு உங்க கைவண்ணம்தான்...

  அது சரி முதல் படத்தில் உங்கள் ரெண்டு விரல்களுக்கும் நடுவில் ஏதோ ஒரு நெட்டுக்க தெரிகிறதே! என்னது அது?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே..  அதே...  கரெக்ட் கீதா..  கிட்டத்தட்ட அப்படித்தான் அமைத்தேன்.  இன்னும் ஓரிரு படம் அமைத்து முடிக்க நினைத்திருந்தேன்...

   நீக்கு
 34. கொழுக்கட்டைச் சொப்பு நன்றாக வந்திருக்கிறது. ஆனாலும் நான் சுமார் பத்து வருடங்கள் தான் இப்படி மாவாக்கிப் பண்ணினேன். பின்னர் நீர் விட்டு அரைத்துக் கிளறிப் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இம்முறையில் மாவில் கட்டி தட்டாது என்பதோடு கொழுக்கட்டைகளின் எண்ணிக்கையும் கூடவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா நானும் அரைத்துக் கிளறித்தான் செய்கிறேன். ஆமாம் கட்டித் தட்டாமல் வரும். கணிசமாகவும் வருகிறது

   கீதா

   நீக்கு
  2. ஹப்பாடா... கொழுக்கட்டை பற்றி யாருமே ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைத்தேன்...

   நீக்கு
 35. முன்ன போட்ட கருத்துகளில் பல காணவில்லை எல்லாம் ஸ்பாமில் ஒளிந்திருக்கும்...ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 36. பானுமதி வெங்கடேஸ்வரன்11 செப்டம்பர், 2022 அன்று PM 4:54

  சில சமயம் substitute ஆக வரும் ஆசிரியர் வெகு ஸ்வாரஸ்யமாக வகுப்பெடுப்பார். அப்படி ஒரு ரசனையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // சில சமயம் substitute ஆக வரும் ஆசிரியர் வெகு ஸ்வாரஸ்யமாக வகுப்பெடுப்பார். அப்படி ஒரு ரசனையான பதிவு.// முற்றிலும் சரி.

   நீக்கு
 37. அருமையான பதிவு.
  படங்கள் எல்லாம் அருமை.
  விளக்கமும் நன்றாக இருக்கிறது.
  கொழுக்கட்டை செய்முறை, கொழுக்கட்டை செய்யும் படங்கள் எல்லாம் அருமை.
  //அது சரி முதல் படத்தில் உங்கள் ரெண்டு விரல்களுக்கும் நடுவில் ஏதோ ஒரு நெட்டுக்க தெரிகிறதே! என்னது அது?//

  கீதாரெங்கனுக்கு தோன்றியது போன்ற கேள்வி எனக்கும்.

  கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  சிறு கொழுந்தில் ஒரு ஒற்றை வடிவம்...விறகைத தாண்டி வெளியேற முயல்வது போல//

  இரண்டும் ஒன்றாய் இணைந்து ஒற்றையாக பிரிந்து போவது ஏன் என்ற சோகம் மனதில்.


  //ஒன்றில்லாவிட்டால்
  மற்றொன்றால்
  பயனில்லை //

  ஆமாம், பயனில்லைதான்.
  கவிதை கொஞ்சம் சோகமாக தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அது சரி முதல் படத்தில் உங்கள் ரெண்டு விரல்களுக்கும் நடுவில் ஏதோ ஒரு நெட்டுக்க தெரிகிறதே! என்னது அது?//

   இப்போதுதான் நானும் பார்க்கிறேன். அது என்ன என்று எனக்கும் தெரியவில்லை.

   //கவிதை கொஞ்சம் சோகமாக தெரிகிறது.//

   ஆம். ஏனோ எனக்கு தண்டவாளங்களை பார்த்தால் மகிழ்ச்சியான மனநிலை தோன்றாது. ஏனென்று தெரியாது. அது பிரதிபலித்திருக்கும் போல...
   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
  2. //ஒன்றில்லாவிட்டால்
   மற்றொன்றால்
   பயனில்லை //
   ஒன்றைப் பார்த்து - மற்றது எங்கே என்று கேட்டால், இது அந்த மற்றதுதான் என்று செந்தில் பாணியில் சொல்லிவிடுவோம்!

   நீக்கு
 38. கடைசி வரை...
  ஒன்றில்லாவிட்டால்
  மற்றொன்றால்
  பயனில்லை

  மனதைச் சலனப்படுத்தும் கவிதை

  பதிலளிநீக்கு
 39. //வடிவான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி?// அதாவது நான் அனுப்ப நினைத்திருக்கும் 'அவசர கொழுக்கட்டை செய்முறை-அனுப்பாதீர்கள்' என்று சொல்வது போலிருக்கிறதே. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... அனுப்புவதாக இருக்கிறீர்களா? அனுப்புங்கள்... அனுப்புங்கள்!

   நீக்கு
 40. கோமதி அக்கா, கீதா ரெங்கன்...

  அந்தப் படத்தை கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்குகிறது.  ஆப்டிகல் இல்லுஷன்!  அங்கு ஒன்றுமே இல்லை.  நிழலடித்து கையிடுக்கில் கொழுக்கட்டை கப்பின் பின் வளைவு தெரிகிறது.  அவ்வளவுதான்.  கொஞ்சம் நிழல் போல இருப்பதால் புதிதாக ரிப்பன் போல எதுவோ இருப்பது போல தெரிகிறது.  உற்றுப்பாருங்கள்! 

  பதிலளிநீக்கு
 41. உற்றுப்பார்த்து தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 42. கோவில் படங்கள் நன்றாக இருக்கின்றன.
  தண்டவாளம் தொடரும் வாழ்க்கை பயணங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!