திங்கள், 5 செப்டம்பர், 2022

"திங்க"க்கிழமை : கடுகோரை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

 கடுகோரை

சில, பல திப்பிசங்கள்! ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது! மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு? ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.

வீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன்.  இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே!

சில நாட்கள் முன்னர்  கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு!  அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது! மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா? ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.

ஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ! ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே! அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோடு வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.

புளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக! அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:

மி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறுத்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.

அடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில்! மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :))))))))

45 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாகவும் அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக்கொள்கிறேன்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  ஆசிரியர்கள் தின வாழ்த்துகள். எ.பி ஆசிரியர்கள் அனைவருக்கும், நம் எ.பி குடும்பத்தின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி

  இன்றைய சமையல் ரெசிபிகள் அனைத்தும் அருமை. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த சமையல் தினுசுகளை அறிந்து கொண்டேன். திப்பிச மாங்காய் சாதத்திற்கும் பாராட்டுக்கள். அடுத்த மோர் குழம்பிற்கும் எதிர்பார்த்தபடி இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோர்க்குழம்பு மிஞ்சினால் தஹி ஆலுவாகப் பண்ணி அன்னிக்கு ராத்திரிக்குச் சப்பாத்தி பண்ணிடுவேன் கமலா. அதைத் தான் எழுத எண்ணி எழுதலைனு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. ஏன் அப்படி சகோதரி.? தாராளமாக எழுதுங்கள். தங்களின் சுவையான எழுத்தில் வித்தியாசமான முறைகளை படிக்க காத்திருக்கிறேன்.

   நீக்கு
  3. முடிஞ்சால் பண்ணும்போது படங்களும் எடுத்துட்டு எழுதுகிறேன் கமலா. :)))))

   நீக்கு
 4. //மொக்கைக்குக் கூட்டம் வந்துடும்//

  ஹா.. ஹா.. இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கங்களுடன்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. இதிலே ஏதோ ஒண்ணு விட்டுப் போச்சோ? ஶ்ரீராமுக்கு அனுப்பின மெயிலைச் சரி பார்க்கணும். :(

  பதிலளிநீக்கு
 7. இந்த மொக்கைக்கு இங்கெல்லாம் கூட்டம் கூடலை. போணி ஆகலை போலிருக்கே!

  பதிலளிநீக்கு
 8. கீதா ரங்கன்(க்கா) மான் இதனை முதன் முதலில் எழுதினார் என்று நினைவு. பதிவைப் பிறகு படிக்கிறேன். நெல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்கும் முன்னாடி நான் கடுகோரை எழுதிப் பதிவே போட்டாச்சு. 2011/12 ஆம் ஆண்டிலோ என்னமோ! எ.பி.க்கெல்லாம் அப்போ அனுப்பியதில்லை/

   நீக்கு
  2. http://geetha-sambasivam.blogspot.com/2011/11/blog-post_09.html பதிவின் ஆரம்பத்திலேயே "கடுகோரை" என்று எழுதினதில் இந்தச் சுட்டி இணையவில்லை. :(

   நீக்கு
  3. சுமார் ஏழு வருடங்கள் கழிச்சு ஶ்ரீராம் வந்து கருத்துச் சொல்லி இருக்கார்.

   நீக்கு
 9. கீதாக்கா நான் ஆவாக்காய் ஊறுகாய் விழுது இருக்குமே அதை கடுகோரை செய்துவிடுவதுண்டு. கடுகோரையில் கடுகு வாசனை நன்றாகத் தெரியவேண்டும் என்று என் மாமியார் சின்னா மாமியர் சொல்வாங்க...அவங்க ரெண்டு பேரும் செமையா செய்வாங்க. அப்படிக் கற்றுக் கொண்டதுதான்...

  உங்கள் திப்பிசம் நல்லாருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவக்காய் விழுதெல்லாம் சப்பாத்தி/பராந்தா/தேப்லா/மேதி ரோடி போன்றவற்றுக்குத் தொட்டுப்போம். நீங்க கடுகோரை எ/பியில் போட்டப்போ நானும் ஏற்கெனவே எழுதி இருப்பதைச் சொல்லிப் பின்னூட்டம் போட்ட நினைவு இருக்கு. கடுகுப் பச்சடி கூட எழுதி இருக்கீங்க!

   நீக்கு
  2. கடுகோரையைத் தான் கடுகுப் பச்சடினு சொல்லி இருக்கீங்க போல. அதிலேயும் நான் போட்ட கருத்தையும் பார்த்துக்கொண்டேன். இந்தச் சுட்டியும் அப்போவும் கொடுத்திருக்கேன்.

   நீக்கு
 10. இனி யார் என் வீட்டுக்கு வந்தாலும், இது ஒரிஜினலாகச் செய்ததா இல்லை என்றோ செய்த பொடிகளை வைத்துத் திப்பிச வேலையில் செய்ததா? இதுமாதிரியெல்லாம் கேட்பாங்களே... சொக்கா! நான் என்ன செய்வேன்? அது சரி... பெயர் பாலாபசந்த், நாங்க நாகாலந்திலே இவர் ஆர்மில இருக்கும்போது தங்கின இடத்தின் பக்கத்து வீட்டில் செய்தது, அதன் செய்முறையைக் கேட்டுவந்து இப்போதான் செய்துபார்க்கிறேன் என்று சொல்லிவிட்டால், கேட்கிறவங்க, குடுகுடுன்னு நாகாலாந்துக்கா போய் கேட்கப்போறாங்க?

  பதிலளிநீக்கு
 11. திப்பிச வேலைகள் உங்களுக்கு உணவுப்பொருட்கள் பற்றியும் அதைச் சேர்த்தால் நன்றாக வருமா என்ற ஆராயும் தன்மை இருப்பதையும் காட்டுகின்றன. என்ன ஒரு ப்ராப்ளம்னா, 'அப்போ அன்னைக்குப் பண்ணினயே அது மாதிரி பண்ணிக்கொடு' என்று யாரேனும் கேட்டால், என்னைக்கு? எப்போ? என்று சந்தேகங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் மறக்காது நெல்லை. பொதுவாகவே எனக்கு எதையும் ஒரு தரம் ஆழ்ந்து கவனித்தால் நினைவில் இருக்கும். பல சமயங்களிலும் எண்களை நினைவாகச் சொல்லுவேன். நம்மவர் ஆச்சரியப்படுவார். இப்போல்லாம் முடியலை! :(

   நீக்கு
 12. நீங்கள் இந்த மாதிரிச் செய்து, ஐயே.. எனக்குப் பிடிக்கவேயில்லை... பேசாம கொஞ்சம் மோர் சாதம் போட்டுடு என்று சொன்ன நிலைமை வந்திருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் திப்பிசம்னு யாருக்கும் தெரியாது. நானாகச் சொன்னால் தான். மற்றபடி நல்லா இருந்தாலும் சரி/இல்லைனாலும் யாரும் வாயைத் திறக்கமாட்டாங்க என்று சொல்ல ஆசை தான். ஆனால் இன்னிக்குக் கூட நம்ம ரங்க்ஸ் என் சமையலில் தப்புக் கண்டுபிடிச்சுச் சரியா இல்லைனு சொல்லி இரண்டு பேருக்கும் "கத்தி"ச் சண்டை! :(

   நீக்கு
  2. //என்று சொல்ல ஆசை தான்.// - யாருக்குத்தான் சர்வாதிகாரியாக ஆவதற்கும் அரசு செய்வதற்கும் கசக்கும்? ஹா ஹா ஹா

   நீக்கு
 13. வர வர எல்லோருக்கும் சமையலில் ஆர்வம் குறைந்து விட்டதோ? ஶ்ரீராம், இந்தத் "திங்க"க்கிழமைகளில் வேறே ஏதானும் பதிவுக்கு உடனடியாக மாறுங்க. யாருமே வரதில்லை.

  பதிலளிநீக்கு
 14. கடுகோரை பெயர்க் காரணம் உண்டா?

  பதிலளிநீக்கு
 15. ஶ்ரீராம் இப்போதெல்லாம் எட்டிக் கூடப் பார்க்காமல் இருப்பதன் மர்மம் என்னவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கௌதமன் சார் கூட எட்டிப் பார்த்திருக்கார்! :( எல்லோரும் பிசி போல!

   நீக்கு
 16. திப்பிசம் சமையல் குறிப்பு அருமை.
  நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே!

  பொருளை வீணாக்காமல் இப்படி மாற்றி நல்லதாக செய்து கொடுத்தால் சரிதான் என்று ஏற்றுக் கொள்வார்கள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி, தாமதமாக வந்தாலும் கருத்துக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 17. அவசரபட்டு பதிவாகி விட்டது. திப்பிச சமையல் தொடரட்டும்.
  படம் எடுக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 18. கடுகோரை நான் செய்ததில்லைஎன்று நினைக்கிறேன் மற்றபடி திப்பிஷ காரியங்கள் தானாகவே அந்த அந்த சமயத்திற்கு ஏற்றவாறு தானாகவே வந்து விடும் இருக்கும் பொருளை வைத்து ஏதோ ஒன்று ருசியாக மாரி சமாளித்து விட முடியும் அதுதானே வேண்டியது அதில் நீங்கள் கைதேர்ந்தவர் அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா. அருமையாகக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி. உங்களை மாதிரிப் பெரியவங்க சொல்லிக் கொடுத்த்தையே நானும் யோசிச்சுச் செய்கிறேன். _/\_.

   நீக்கு
 19. திப்பிச மாங்காய் சாதம் சுவைக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!