வெள்ளி, 9 செப்டம்பர், 2022

​வெள்ளி வீடியோ : தேவனே காத்திருப்பேன்.. தீயிலே பூத்திருப்பேன்

 வாலி எழுதி டி எம் எஸ் பாடிய இந்தப் பாடல் பிறந்த கதை பற்றி அனைவருமே அறிந்திருப்பீர்கள்.

இன்றைய தனிப்பாடலில் 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்னும் அருமையான பாடல்.  காணொளியிலேயே பாடல் வரிகள் வருவதால் தனியாக தரவில்லை.


========================================================================================================

வெள்ளத்தில் விழுந்த இருவரில் பிழைத்துக் கொண்ட அமலா, தன்னைக் காப்பாற்றிய நிழல்கள் ரவியிடம் காதலன் ராஜா பற்றிச் சொல்லி அழைத்து வர, சேர்த்து வைக்க வேண்டுகிறாள்.​  நிழல்கள் ரவி அந்த ஊருக்கு  சென்று பார்க்கும்போது அவள் காதலனும் அவள் தகப்பனும் இறந்து விட்டார்கள் என்று தெரிகிறது. அதை அவளிடம் எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் ஊர் திரும்பி வருகிறான்.

நல்ல செய்தி கொண்டு வருவான் என்று நம்பி அமலா, ரவியின் மகளுடன் பாடிக் கொண்டிருக்கிறாள்.

புத்தம்புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு வாசம் வரும்...

அந்த நம்பிக்கையை உடைக்கவேண்டிய நிலை ரவிக்கு..

வேதம் புதிது படத்தில் இப்படி ஒரு காட்சி.  சித்ரா குரலில், தேவேந்திரன் இசையில் வைரமுத்து பாடல்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடகரை என்கிற ஊரில் பிறந்து திருவொற்றியூர் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக வேலை செய்துவந்த தேவேந்திரன் இசையமைத்த பாடல் ஒன்றை மாணவர்கள் பாடியதைக் கேட்ட டைரக்டர் சுந்தர்ராஜன் தனது அடுத்த படத்துக்கு அவர்தான் இசை என்று அறிவித்தார் ஆயினும் நீண்ட நாள் அந்த சம்பவம் நிகழாமல் போகவே, கோவைத்தம்பி தனது படமான 'மண்ணுக்குள் வைரம்' படத்தில் இவருக்கு முதல் வாய்ப்பளித்தார்.  அப்புறம் சுந்தரராஜனின் 'காலையும் நீயே மாலையும் நீயே' படத்துக்கு இசை அமைத்தார்.

இனி பாடல்... சித்ரா குரலில் இனிமையான பாடல்.   ஆரம்ப இசையும் அருமையாக ஆரம்பித்திருப்பார் தேவேந்திரன்.

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

என்னென்ன தடை வந்தபோதும் காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை மறைப்பதில்லை
காலமின்னும் கூடவில்லை.. மாலையின்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்றபோதும் உன்னை நினைத்திருப்பேன்
தேவனே காத்திருப்பேன்.. தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன்.. இப்போது

30 கருத்துகள்:

 1. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டது.

  இரண்டாவது பாடலும் பலமுறை கேட்ட பாடல்தான் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இனிமையான பாடல்கள் என்பதால் அடிக்கடி கேட்க முடிகிறது. நன்றி தேவகோட்டை ஜி.

   நீக்கு
 2. இனியதோர் காலைப் பொழுது..

  அன்பின் வணக்கங்களுடன்

  நலமே வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.  வாழ்க நலம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. இனிமையான காலைபொழுதுக்கேற்ற இனிமையான பாடல்கள்.  நன்றி.

   நீக்கு
 4. திறமை இருந்தாலும் நேரம் வரும்போதுதான் வாய்ப்புகள் வருகிறது. வாலிக்கும் தேவேந்திரனுக்கும் இது பொருந்தும்.

  இரண்டாவது பாடல் மனதில் ஒலிக்கிறது. நல்ல இசை.

  முதல் பாடல் சொல்லவே தேவையில்லை. நெல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.  ஆனாலும் தேவேந்திரன் இந்த அளவு இனிமையான இசையை மற்ற படங்களில் கொடுக்கவில்லை.  மண்ணுக்குள் வைரம் ஓகே.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய முதல் பாடல் அருமை. யார் என்ன சொன்னாலும், என் மனதில் நீ என் தெய்வம், என் உயிர் என்ற கருத்தை ஒவ்வொருரின் மனதிலும் ஆழமாக பதிய வைக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிப்பதேயில்லை. இதில் டி எம் எஸ்ஸின் குரல் அற்புதமாக இருக்கும். நல்லதொரு தெய்வீகமான பாடலை இன்றைய வெள்ளி விடியலில் முதல் பாடலாக பதிந்தமைக்கு மிக்க நன்றி. . இரண்டாவதை குழந்தைக்கு பள்ளிக்கு ரெடி செய்து அனுப்பிவிட்டு கேட்க, படிக்க பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 8. மிகவும் பிடித்த பாடல் முதல் பாடல்.
  அடிக்கடி கேட்கும் பாடல்.
  பகிர்வுக்கு நன்றி.
  அடுத்தபாடலும் இனிமையான பாடல். பலமுறை கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி. அப்போல்லாம் இந்தப் பாடல்களை ஒலி பெருக்கியில் கேட்டுக் கூடவே பாடி மகிழ்ந்த நாட்கள் நினைவில் வருகின்றன. அப்படியே நோட்டுப் புத்தகத்தில் எழுதியும் வைச்சுப்பேன்.

  பதிலளிநீக்கு
 10. நேற்றோ/முந்தாநாளோ "தினமலர்" பத்திரிகையில் "உள்ளம் உருகுதையா!" புகழ் ஆண்டவன் பிச்சை பற்றிப் போட்டிருந்தார்கள். என்ன ஆச்சரியம்னா அவர் 1990 ஆம் ஆண்டில் தான் இறந்திருக்கார். ஆனாலும் அவரைப் பற்றிக் கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் கேள்விப்படும் அளவுக்கு முன்னால் கேட்டதில்லை.

  பதிலளிநீக்கு
 11. முதல் பாடல் பற்றிக் கருத்துச் சொல்லி இருந்தேன். காணாமல் போய்விட்டது. மெயிலிலும் இல்லை. பின் தொடரும் பெட்டியில் க்ளிக் செய்யாமல் எழுதி இருக்கேன் போல. அதானோ என்னமோ மெயில் பாக்சில் இல்லை. நேற்றும் அப்படியே நடந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. ஹிஹிஹி கருத்துப் போடப் போட முன்னால் போட்ட கருத்துகள் காக்கா உஷ்! கற்பனை என்றாலும் பாடலை அநேகமாக ஒலிபெருக்கி மூலமே சின்ன வயசில் நிறையக் கேட்டிருக்கோம். கூடவே பாடுவதோடு பாடலையும் மறக்காமல் இருக்க ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதியும் வைச்சுப்பேன். அந்த நோட்டுப் புத்தகமெல்லாம் போன இடம் தெரியலை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று கமெண்ட்ஸ் ஸ்பாமில் இருந்தன.  கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இரண்டாவது பாடலையும் கேட்டேன். இதுவும் அடிக்கடி கேட்ட பாடல்தான். இசையமைத்தவரின் விபரங்களுக்கு நன்றி.

  படத்தின் கதைதான் மறந்து விட்டது. எப்போதோ தொலைக் காட்சியில் பார்த்தது. இதில் இன்னொரு பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். (கண்ணுக்குள் நூறு நிலவா என்று வருமோ?) அமலா அன்றும் சரி இன்றும். சரி எளிமையான அழகு படைத்த நடிகை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.   இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல் அதுதான்.  ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த பாடலாம் அது!

   நீக்கு
  2. மவுன்ட்ரோடில் ஏதோ ஒரு திரையரங்கில் இந்தப்படம் ஓடிக்கொண்டிருந்தப்போ கணுவுக்காக ஆழ்வார்ப்பேட்டை சென்ற நான் அண்ணா/தம்பியரோடு இந்தப் படம் பார்த்தேன். அநேகமாக அவங்களோடு நான் பார்த்த கடைசிப் படம் இதுவாகத் தான் இருக்கும். :)

   நீக்கு
 14. இரு பாடல்களுமே அருமை இனிமை. முதல் பாடல் பக்தி .

  பதிலளிநீக்கு
 15. முதல் பாடல் எத்தனை முறை கேட்டிருக்கிறேன்...ஸ்ரீரான்......அருமையான பாடல் மனதில் நிற்கும் பாடல்.
  ஹிந்தோளம் ராகம்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. இரண்டாவதி பாட்டு கேட்ட நினைவில்லை. பாடல் சூப்பர். கல்யாணி ராகம்...

  வேதம் புதிது படத்துல வர பாட்டா? அந்தப் படத்தில் கேட்டு மனதில் இருக்கும் பாடல் கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் மட்டுமே..

  கண்ணுக்குள் நூறு ஷண்முகப்பிரியா....இதுவும் அருமையான் பாடல்

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!