கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
****** பெற்ற பன்னிரண்டு குலம்.
(வரருக்ஷி கதை)
பகுதி-1/2.
***************
மொழியாக்கம்
– ஜெயகுமார் சந்திரசேகரன்
முன்னுரை:
பதஞ்சலி முனிவர்
வ்யாகரணத்திற்கு ஒரு மகா பாஷ்யம் உருவாக்கி தன்னுடைய சீடர்களுக்குப்
போதிக்கும் போது, ஒரு சீடன் செய்த தவறால் அவருடைய ஆயிரம் சீடர்கள் கோபாக்கினியில்
வெந்து சாம்பலானதையும், மறைந்திருந்து கேட்ட ஒரு கந்தர்வன் மூலம் அந்த பாஷ்யம் கோவிந்தசாமி என்ற பிராமணனுக்கு போதிக்கப்பட்டதும், அப்பிராமணன் அவனுடைய
உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றிக்
கடனாக, ஒரு சூத்ர பெண்மணியை விவாகம் செய்ய வேண்டி, நான்கு வர்ணத்திலும் ஓரோர் கன்னிகையை மணந்ததையும்,
பிராமண மனைவி மூலம் வரருக்ஷி,
க்ஷத்ரிய மனைவி மூலம் விக்ரமாதித்தன்,
வைஸ்ய மனைவி மூலம் பட்டி,
சூத்திர மனைவி மூலம் பத்ருஹரி என்ற நான்கு புதல்வர்களைப்
பெற்றார் என்றும் மகா பாஷ்யம்-1
மகா பாஷ்யம்-2 ஐதீகத்தில் கண்டோம்.
கொட்டாரத்தில் சங்குண்ணி
அவர்கள் அதன் தொடராக வரருக்ஷி கதையையும், பர்த்ருஹரி கதையையும் எழுதியுள்ளார். அதில் வரருக்ஷி
மூலம் பன்னிரண்டு குலத்தவர்கள்
தோன்றியதை இக்கதையில் எழுதியுள்ளார். மேலும் பர்த்ரூஹரி
என்பவர் பட்டினத்தாரின் சீடர்
பத்திரகிரியார் எனவும் எழுதியுள்ளார். அக்கதை பின்னர்.
இந்தக் கதை வரருக்ஷி ராஜா விக்ரமாதித்தன் அரண்மனையில் பணியாற்றும்
வகையில் தொடங்குகிறது.
***** பெற்ற பன்னிரண்டு குலம்.
புகழ்பெற்ற கோவிந்தசாமி அவர்களுடைய புத்திரன், மலையாளத்தில் தற்போதும் நடப்புள்ள “வாக்கியம்”,
“பரல்பேறு”, முதலான ஜோதிஷ சாஸ்திர கிரந்தங்களின்
கர்த்தாவும் ஆகிய வரருக்ஷியைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரியும்.
இவர் ராஜா விக்ரமாதித்தன் சபையில்
சேவை செய்து கொண்டிருந்தார்.
சகல கலைகளையும் அறிந்தவராகவும், நல்ல பௌராணிகனும்
ஆயதினால், சாஸ்திர, புராண சம்பந்தமான ஐயங்களை ராஜா இவரிடமே கேட்டுத் தீர்த்துக்
கொள்வார்.
அப்படி இருக்கும் காலத்தில் ஒரு நாள் ராஜா “ராமாயணத்தில் பிரதானமான வாக்கியம் எது?” என்று இவரிடம் கேட்டார்.
இதற்குத் தக்க பதில் உடனே தோன்றாததால் வரருக்ஷி பதில் சொல்ல சங்கடப்பட்டார். ராஜா “சரி எங்காவது சென்று யாரிடமிருந்தாவது இக்கேள்விக்குப்
பதில் அறிந்து நாற்பத்தியொரு
நாட்கள் கழியும் முன் இங்கு வந்து சொல்வீர்.
அப்படி செய்யாவிட்டால் பின்னர் ஒருபோதும் இச்சபைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என் முகத்தில் முழிக்கவும் வேண்டாம்.” என்று கட்டளை இட்டார். இந்த ஆக்கினையைக் கேட்ட வரருக்ஷி மிக்க வருத்தம் அடைந்தார்.
சங்கடத்துடன் சபையை விட்டு நீங்கினார்.
பல ஸ்தலங்களுக்குச் சென்று பல அறிஞர்களையும் சந்தித்து இக்கேள்விக்கு விடை பெற முயன்றார் வரருக்ஷி. ராமாயணத்தில் எல்லா ஸ்லோகங்களும் முக்கியமானவையே.
முக்கியம் இல்லாதது எதுவும் இல்லை.
“நஹி குளகுளிகாயாம் க்வாபி மாதுர்யபேதம்”
(என் ஊகம்: இனிப்பில் எல்லா பகுதிகளும் ஒரே போல் இனிப்பே, சுவை மாறுவதில்லை.) என்று பலரும் கூறினர். திருப்தி இல்லை.
சரியான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு நாற்பது
நாட்கள் கழிந்தன. வரருக்ஷிக்கு சகிக்க முடியாத விசனம். ராஜ சேவை இல்லாமல் ஆவது மாத்திரமல்ல,
சர்வக்ஞன் என்று பலராலும் போற்றப்பட்ட
எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை, என்பதுவும் மிகவும்
அவமானகரமானது அன்றோ. இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு வாழ்வதைக்
காட்டிலும் மரிப்பது நன்று அல்லவா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு
ஊண் உறக்கம் இன்றி, பகல் முழுதும்
அலைந்து இரவாகும்போது வனத்தில் ஒரு ஆலமரத்தை அடைந்தார்.
பசி, தாகம், அசதி, கவலை என்று எல்லாம் சேர்ந்து அவரை வாட்டின. “வனதேவதைகள் என்னை
ரக்ஷிக்கட்டும்” என்று கூறியபடி மயங்கி ஆல் தரையில் படுத்தார்.
நள்ளிரவானபோது ஆகாய மார்க்கம் சென்று கொண்டிருந்த சில பூதகணங்கள் அந்த ஆலமரத்தில் வந்து அமர்ந்தனர். அம்மரத்தில் வசிக்கும்
பூதகணங்களை நோக்கி “நீங்களும் வருகிறீர்களா? இப்போது அடுத்து ஒரு வீட்டில் பிரசவம் உண்டு. நாங்கள் அங்கேதான் போகிறோம். இரத்தமும்,
நின நீரும் குடிக்கணும் என்றால்
வாருங்கள் செல்லலாம்.” என்று விளித்தனர். அதற்கு மற்ற பூதகணங்கள் “நிவர்த்தியில்லை.
இங்கு ஒரு பிராமணன் எங்களைப் பிரார்த்தித்து விட்டுக் கிடக்கிறார்.
அதனால் இவ்விடம் விட்டு நீங்க முடியவில்லை. நீங்கள் போய் திரும்பி வரும்போது விவரங்கள் யாவையும் சொல்லி விட்டுச் செல்லுங்கள்” என்று கூறினர்.
“அப்படியே ஆகட்டும்” எனக் கூறி வந்த பூதகணங்கள் புறப்பட்டுச் சென்றனர்.
கடைசி ஜாமம் ஆகியது. வரருக்ஷிக்கு உறக்கம் தீர்ந்தபோதும் விழிப்பு வரவில்லை.
பாதி உறக்கத்தில் படுத்துக் கிடந்தார். சென்ற பூதகணங்கள் திரும்பி வந்தன.
மரத்தில் இருந்த பூதகணங்கள் “பிரசவம் எங்கே நடந்தது? என்ன குழந்தை?” என்று கேட்டன. அதற்கு வந்த பூதகணங்கள் “ஒரு ****** வீட்டில், பெண் குழந்தை” என்று கூறின. “அவளை விவாஹம் செய்வது யாராயிருக்கும்?”
என்று மரத்தில் இருந்த பூதகணங்கள் கேட்டபோது “அது ‘மாம் வித்தி’ என்று அறியாமல் படுத்திருக்கும் இந்த
வரருக்ஷி தான். சூரியோதயம் ஆகப் போகிறது, நாங்கள் பின்னர் வந்து காரியங்கள் சொல்கிறோம். தற்போது செல்ல வேண்டும்” என்று கூறிப் புறப்பட்டுச் சென்றனர்.
புத்திமானாகிய வரருக்ஷிக்கு இந்த வாக்குக்களைக் கேட்டபோது
சந்தோஷமும் துக்கமும் ஒரே சமயத்தில் உண்டாகியது. தேடிய விடை
கிடைத்ததில் சந்தோசம். ஆனால் அதப்பதனம் (கெடுதல்) சம்பவிக்கும் என்பது துக்கத்தை உண்டாக்கியது. அதப்பதனம் (கெடுதல்)
சம்பவிக்காமல் இருக்க ஏதேனும் ஒரு உபாயத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் சூர்யோதயத்தில்
எழுந்து ராஜாவைக் காணப் புறப்பட்டார்.
நாற்பத்தியொரு நாட்கள் ஆகியும் வரருக்ஷியைக் காணாமல்
ராஜாவிற்குக் கொஞ்சம் கவலை தோன்றியது. ஆனால் சபையில்
உள்ள மற்ற அறிஞர்களுக்குச்
சந்தோசமே உண்டாகியது. அவர்களுக்கு வரருக்ஷியின் பேரில் ஒரு அசூயை (பொறாமை) இருந்தது. “வரருஷி இருந்தவரை அவர்களுக்கு முக்கியத்துவம்
கிடைக்கவில்லை. ராஜா உபசரிக்கவில்லை. புகழ் பெறுவதும் கடினமாக இருந்தது.
இது எல்லாம் இனி மாறக்கூடும்.”
என்று நினைத்தனர்.
சபை கூடியது. ராஜா “கஷ்டம்,
நம்முடைய வரருக்ஷியைக் காணவில்லையே. அவமானம் தாங்காமல்
தற்கொலை ஏதும் செய்து கொண்டாரா? அல்லது நாடு விட்டு வேறு ஏதாவது ராஜ்ஜியத்திற்குச் சென்று
விட்டாரா? இல்லை இல்லை. சகல சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த அவர் எந்த விதத்திலாவது நம்முடைய
சந்தேகத்திற்கு விடை கண்டுபிடித்திருப்பார் என்ற
நம்பிக்கை எனக்குத் தோன்றுகிறது. வருவதில் தாமதமாகலாம்.”
என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருந்தபோது சிரித்த முகத்துடன் வரருக்ஷி சபையில் பிரவேசித்தார்.
ராஜாவுக்கும் மற்றவர்களுக்கும்
வரருக்ஷியைக் கண்டபோதே “எல்லாம் சுபம்,
காரியம் சித்தி” என்ற தெளிவு உண்டாகியது. ராஜாவும் “என்ன விடை கிடைத்ததா?” என்று கேட்டார்.
வரருக்ஷி : தெய்வ கடாட்சத்தாலும், குரு கருணையாலும், மதிப்பு மிக்க உங்கள் அனுக்கிரகத்தாலும்
ஒரு விதம் விடை கிடைத்தது என்று கூறலாம்.
ராஜா: எந்த ஸ்லோகம் ? எந்த வாக்கியம்?
வரருக்ஷி: ராமாயணத்தில் பிரதானமான ஸ்லோகம்
“ராமம் தசரதம்
வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்தியாமடவீம் வித்தி கச்ச தாத யதாசுகம்”
என்பதாகும்.
இதில் பிரதான வாக்கியம்
“மாம் வித்தி ஜனகாத்மஜாம்” என்பதாகும்.
இதைக் கேட்டவுடன் சபையில் உள்ளவர் யாவரும் “சரி சரி” என்று ஆமோதித்தனர்.
ராஜாவும் எழுந்து வரருக்ஷியின் கைகளைப் பிடித்து ஒரு உயர்ந்த ஆசனத்தில் இருத்தினார். விலை உயர்ந்த
ஆபரணங்கள் பரிசளித்தார். வரருக்ஷி எப்போதும் ராஜாவுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வரருக்ஷி மேற்கூறிய ஸ்லோகத்திற்குப் பத்து விதமான வியாக்யானம்
(பொழிப்புரை) தந்தார் என்று கூறுவர். அவற்றில் இரண்டு இங்கு தரப்பட்டுள்ளன.
இந்த ஸ்லோகம் ஸ்ரீராமனும், சீதையும், லக்ஷ்மணனும்,
வனவாசத்திற்காகப் புறப்படும்போது மாதாவின் கால்களில் நமஸ்கரித்து
லக்ஷ்மணன் யாத்திரைக்கு அனுமதி கேட்டபோது லட்சுமணனுக்கு தாய் சுமித்திரை கூறியது.
“தாத வத்ச ‘ராமம் தசரதம் வித்தி’: ராமனை தசரதன் என்று கொள்வாயாக. (உன்னுடைய சகோதரன் ராமனை தசரதன் போல் கொள்ளவேண்டும்.)”
‘ஜனகாத்மஜாம் மாம்
வித்தி’: ஜனகாத்மஜாம் (சீதையை) மாம் வித்தி (என்னைப்போல் கருதுவாயாக.).
அடவீம் அயோத்யாயாம் வித்தி : அடவி (வனம்), அயோத்யாயாம் (அயோத்தியாபோல்) கருத வேண்டும்.
யதாசுகம் கச்ச: சுகமாகச் செல்லுக.
சுமித்திரை : “ராமனைத் தந்தை
தசரதனைப் போலவும், சீதையைத் தாய் என்னைப் போலவும், வனத்தை அயோத்தியா பட்டினமாகவும், கருதிக்கொண்டு சுகமாகப் போய் வருவாய்.”
இரண்டாவது வ்யாக்யானம் :
‘ராமம் தசரதம் வித்தி’: ராமனைத் தசரதனாக (பக்ஷி வாகனத்தில் உள்ள மஹா விஷ்ணுவாக) கருதிக்கொள்.
‘ஜனகாத்மஜாம் மாம்
வித்தி’: ஜனகாத்மஜாம் சீதையை மாம் வித்தி மஹாலக்ஷ்மி என்று கருதிக்கொள்.
அடவீம் வித்தி அயோத்யா : அயோத்யா காடாகி விடும் (ராமன் போன பின்பு) என்று கருதிக்கொள்.
யதாசுகம் கச்ச: சுகமாகச் செல்லுக.
ராமன் விஷ்ணு
அவதாரம், சீதை மஹாலக்ஷ்மி
அவதாரம், (இவர்கள் இருவரும் போவதால்) அயோத்யா வனமாகி விடும்.
இப்பிரகாரம் யதாக்கிரமம் பத்து விதத்தில் வரருக்ஷியுடைய
வ்யாக்யானம் கேட்டபோது ராஜாவிற்கு மிக்க சந்தோசம்.
பின்னர் சபை ராஜ காரியங்களில் ஈடுபட்டபோது, வரருக்ஷி,
“மஹாராஜா நேற்று இரவு ஒரு ***** ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அதனுடைய ஜாதகப் பலன் நோக்கும்போது அக்குழந்தைக்கு மூன்று வயதாகும்போது
ராஜ்ஜியம் நசித்துப் போகும் என்று தெரிய வருகிறது. நாசங்கள் இன்று முதல் ஒவ்வொன்றாகத் துவங்கும்.
ஆகவே அக்குழந்தையை உடனே கொல்ல வேண்டும் என்று கூறினார்.
“வரருக்ஷியினுடைய வாக்குகள் ஒருபோதும் தவறாகாது. ஆனால் சிசுஹத்தி என்பது பெரும் பாபம். மேலும் இது
பெண் குழந்தையாக உள்ளது.
ஆகையால் என்ன செய்யலாம்” என்று ராஜா ஆலோசனை கேட்டார். எல்லோரும் கூடி ஆலோசித்தபின், ‘வாழை மரத்துண்டுகள் கொண்டு ஒரு தெப்பம் உண்டாக்கி அதில் அக்குழந்தையைக் கிடத்தி, தலைப் பக்கத்தில் ஒரு பந்தம் கொளுத்திச் சொருகி, ஆற்றில் விட்டு விடலாம்’ என்று தீர்மானித்தனர். இத்தீர்மானத்திற்கு ராஜாவும் சம்மதம் தெரிவித்தார்.
குழந்தை உள்ள இடம் பற்றி வரருக்ஷி சொல்லித் தந்ததின் பேரில் இரண்டு சேவகர்கள் சென்று சரியாக விசாரித்து குழந்தையைக்
கொண்டு போய் கட்டளை பிரகாரம் செய்து ஆற்றில் விட்டனர். செய்த காரியத்தை
சபையிலும் சென்று அறிவித்தனர். வரருக்ஷிக்கு மகிழ்ச்சி
உண்டாகியது. அதப்பதனம் சம்பவிக்காமல் போகும் என்று நினைத்தார்.
>>>>>>>>>>>>>>>>>>
வரருக்ஷி கதை - பகுதி 2 <<<<<<<<<<<<<<<
இந்தப் பதிவு எனக்கு டாஷ் போர்டில் இன்னமும் வரலை. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆம். கொஞ்சம் தாமதமாகின்றன. எனக்கு வெங்கட்டின் பதிவுகள் இப்படி தாமதமாக காட்டும். வாங்க கீதா அக்கா. வணக்கம், பிரார்த்திப்போம்.
நீக்கு
இந்தக் கதை இன்று வரை படித்தது இல்லை.. அடுத்த வாரமும் தொடரும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஆம். தொடரும்.
நீக்குசெவ்வாய்க் கிழமை சுய படைப்புகளுக்காக என்ற நிலை மாறினால், எபியைப் பொறுத்த மட்டில் சனிக்கிழமை க்கும் செவ்வாய்க்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும். அதனால் என்ன என்றால் ஒவ்வொரு கிழமைக்கும் பதிவுகளின் உள்ளடக்கத்தில் வேறுபாடு காட்டும் எபியின் தனித்தன்மை நாளாவட்டத்தில் மாறுதல்களுக்குள்ளாகும். ஒரு விதத்தில் அது கூட நன்றாகத் தான் இருக்குமோ?.. இப்பவே சொல்ல முடியாது. போகப் போகத்தான் தெரியும்.
பதிலளிநீக்கு// போகப் போகத்தான் தெரியும்..//
நீக்குஜீவி அண்ணா அவர்களை வழிமொழிகின்றேன்..
சுய படைப்புகள் எழுதும் திறமை பெற்றவர்கள் நிறைய எழுதி அனுப்பத் தவறிவிடுகிறார்களோ?
நீக்கு!?..
நீக்குஇந்தப் பகுதியிலேயே மறக்க முடியாத கதைகள் என்று அப்பாதுரையின் பங்களிப்புகளை வெளியிட்டிருக்கிறோமே...
நீக்குநெல்லை.. துரை அண்ணாவின் கேள்விக்குறிக்குக் காரணம் அவர் நிறைய அனுப்பி இருக்கிறார். நான்தான் மாதம் ஒன்று என்று ஷெட்யூல் செய்திருக்கிறேன்!
நீக்குசெவ்வாய், சனி பதிவுகளின் நுண்ணிய வித்தியாசம் அந்தந்த கிழமை பதிவுகளில் பங்கு பெறுவோருக்குத் தான் தெரிந்திருக்கிறது போலிருக்கு. :))
நீக்குசெவ்வாய்க்கு கதை தட்டுப்பாடோ என்ற எண்ணம் எனக்குமிருந்தது. அதன் அடிப்படையில் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்ததும் உண்டு.
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வாழ்க... வாங்க...
நீக்குஇந்த மாதிரிக் கதைகளும் அவசியம் தான்..
பதிலளிநீக்குஅழகான மணிப் பிரவாள நடை...
மாதுர்யபேதம் - அன்னைகளிடத்தில் வித்தியாசம். நெல்லை
பதிலளிநீக்குதேவதைகள் இரத்தமும், நின நீரை எல்லாம் குடிப்பார்களோ...? ஓகோ...!
பதிலளிநீக்குநான் கேட்க நினைத்தேன்.. சூழலில் மறந்து விட்டது..
நீக்குகேள்விக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
ஐயா மன்னிக்க வேண்டுகிறேன். பூத கணங்கள் என்பது தான் சரி. பஞ்சபூதத்திலிருந்து வேறு படுத்த வேண்டி தேவதைகள் என்று அடைப்பில் சேர்த்தேன். ஸ்ரீராம் அவர்களை தேவதைகள் என்ற சொல்லை நீக்கி விட கோருகிறேன்.
பதிலளிநீக்குJayakumar
தெளிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநன்றி JK ஐயா..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு// ஸ்ரீராம் அவர்களை தேவதைகள் என்ற சொல்லை நீக்கி விட கோருகிறேன். // நீக்கிவிட்டேன்.
நீக்குதவறு சரி செய்யப்பட்டதில் மகிழ்ச்சி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல கதை. இதுபோன்ற கதைகளை இதுவரை படித்ததில்லை. ஆனால் படிக்கும் போது மேலும் கதையின் சாராம்சங்களை அறிந்து கொள்ளும் ஒரு ஸ்வாரஸ்யம் உண்டாகிறது. நம்மைச் சுற்றி நாமறியாமல் நடக்கும் நிகழ்வுகளை உணர வைக்கிறது. இரவில் ஏதும் மறுநாளைய முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற நம் முன்னோர்களின் அறிவார்ந்த பல கூற்றுகளும் நினைவுக்கு வருகிறது. அடுத்த வாரமும் தொடரும் இக்கதை தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆழமான கருத்துக்களுடைய இது போன்ற கதைகளை நல்ல தமிழில் மொழி பெயர்த்து தரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அக்குழந்தைக்கு மூன்று வயதாகும்போது ராஜ்ஜியம் நசித்துப் போகும் என்று தெரிய வருகிறது. நாசங்கள் இன்று முதல் ஒவ்வொன்றாகத் துவங்கும். ஆகவே அக்குழந்தையை உடனே கொல்ல வேண்டும் என்று கூறினார். “வரருக்ஷி//
பதிலளிநீக்குஇப்படி நிறைய கதைகளில் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்று வருகிறது !
அடுத்து படிக்க தொடர்கிறேன்.
ஆம் மஹாபாரதத்தில் கர்ணன், பைபிளில் மோசே ஆகியவர்கள் இப்படி குழந்தையாக ஆற்றில் கைவிடப் பட்டவர்களே.
நீக்குJayakumar
பதிவைப் படித்து கருத்துக் கூறியவர்கள் மற்றும், வந்தவர்கள் எல்லோருக்கும், என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீக்குJayakumar
கர்ணனைக் கொல்லணும்னு குந்தி நினைக்கலையே!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், காணாமல் போய்விட்டது கருத்து. கர்ணனைக் கொல்லணும்னு குந்தி நினைக்கலை என எழுதி இருந்தேன். மெயிலில் போய்ப் பார்க்கணும் இருக்கானு.
நீக்குஅட? இதோடு சேர்ந்து அதுவும் வந்திருக்கே!
நீக்குகண்ணனைக் கொல்ல கம்சன் ஏற்பாடு செய்யவில்லையா?
நீக்கு//குழந்தையாக ஆற்றில் கைவிடப் பட்டவர்களே. // கொல்வதை பற்றி நான் சொல்லவில்லை.
நீக்கு//குழந்தையாக ஆற்றில் கைவிடப் பட்டவர்களே. // கொல்வதை பற்றி நான் சொல்லவில்லை.
நீக்குஆமாம், கிருஷ்ணன் பிறக்கையிலேயே சிறைச்சாலையில் பிறந்தான். பிறந்ததுமே தாய்/தந்தையரை விட்டுவிட்டுப் பிறரிடம் வளரக் கொண்டு போய் விட்டு விட்டார்கள். குழந்தையாக இருக்கும்போதே பால் அருந்தும்போதே பூதனை வந்து கொல்லப் பார்த்தாள். இப்படிக் குழந்தையாக இருந்ததில் இருந்து எத்தனை எத்தனை எதிரிகள்! ஜராசந்தனால் அவருக்கு மதுராவை விட்டே வேறிடம் செல்ல நேர்ந்தது. அதுவும் மொத்தச் சுற்றம்/உறவு உள்பட. சிசுபாலன் அவரைத் திட்டாதது இல்லை. அத்தையின் மகன் எனத்தெரிந்தே அவனைக் கொல்ல நேர்ந்தது. சொல்ல ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும். :(
நீக்குஎவ்வளவு முட நம்பிக்கைகள் அதுவும் குழந்தையைக் கைவிடுவது போன்ற நிகழ்வுகள்!
பதிலளிநீக்குஇப்போதும் கூட சில இடங்களில் இப்படியான மூட நம்பிம்பிக்கைகள் இருக்கின்றன. நான் அறிந்து, ஓர் அம்மா தான் பெற்ற குழந்தையை தான் வளர்த்தால் தாய்க்கு ஏதோ மரணம் சம்பவிக்கும் என்று தத்துக் கொடுத்துவிட்டார். நல்ல காலம் கொல்லவோ இல்லைக் குப்பைத் தொட்டியிலோ போடவில்லை. என்ன மூட நம்பிக்கையோ?
கீதா
குழந்தையைக் காப்பாற்ற என்றால் கூட (கண்ணன் காப்பாற்றப்பட்டது போல்) ஓகே... ஆனால் குழந்தையையே ஆற்றில் விடுவது எல்லாம் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது
நீக்குகீதா
இப்பொழுதுதான் படிக்கிறேன். அடுத்து தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு