வியாழன், 15 செப்டம்பர், 2022

முகவரி இல்லாத கடிதம்

 என்ன ஒரு அழகான படம்..

எனக்கு துல்ஹரை பிடிக்கும்.  நான் அவர் குரலை முதலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கேட்டேன்.  ஆம், முதலில் கவர்ந்தது குரல்தான்!  அப்புறம் ஓகே கண்மணி..  அப்புறம் ஹே சினாமிகா.. 


இந்தப் படத்தில் அவரை ரொம்பவே ரசித்தேன்.  பாடல்களும் ரசிக்கத் தக்கவையாய் இருந்தன.  உண்மையில் சினாமிகா பார்த்ததுமே அந்தப் படம் பார்த்த அனுபவம் பற்றி ஒரு நாலுவரி எழுதலாம் என்று இருந்தேன்.  விட்டுப் போச்சு.  அப்புறம் நிறைய வெவ்வேறு படங்கள் பார்த்ததில், அந்த feel தூரமானதில், எழுத முடியவில்லை.  இந்தப் படம் கிடைத்தால் அதைப்பார்க்க சிபாரிசு செய்கிறேன்.  பார்க்கும் பல படங்களில் சில படங்கள் பற்றி அவ்வப்போது எழுதத்தோன்றி நிறைய எழுதாமல் விட்டிருக்கிறேன்.

இதுவும் அப்படி விட்டு விடக்கூடாது என்று உடனே எழுதி விட்டேன்!

சினாமிகாவில்  துல்கரின் பேச்சுதான் நாயகியை முதலில் கவர்கிறது.  எதற்கெடுத்தாலும் விளக்கம், லெக்சர் அடிக்கும் துல்கர்.  திருமணமானபின் இதுவே அவளுக்கு அலுப்பைத் தருகிறது.  இணையும்வரை காதல் மயக்கம்.  இணைந்தபின் ஒரு சலிப்பு.  கிடைக்கும் வரைதான் ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம்.  ஒரு பக்குவம் வர ஒரு வயது தேவைப்படுகிறது, சென்ற வாரம் டெல்லி கணேஷ் பற்றிய பின்னூட்டங்களில் பேசப்பட்டது போல...  ஒரு கட்டத்தில் அவனைப் பிரியும் எண்ணம் மேலோங்க, அதற்கான வேலைகளில் இறங்குகிறாள்.  வெற்றியும் பெறும் நேரம் சில திருப்பங்கள்...  அழகான துல்கர்..  கவர்ச்சியான குரல்..    சில இடங்களில் அப்பா மம்மூட்டி நினைவுக்கு வருவார்.  அவரை ஏமாற்ற முன்வரும் மருத்துவர் காஜல் அவரை விரும்பத்தொடங்குவார்.  பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு அருமையான பாடல் கூட உண்டு.  'யாரிசைக்க வருகுவதோ'  பாரதியார் பாடல் என்று ஏமாற்றி இருப்பார்கள்.  ஆனால் அது அவர் சாயலில் மதன் கார்க்கி எழுதிய பாடல்.  இங்கு சில வரிகளே இருக்கும்.  யூடியூபில் முழு பாடலும் கிடைக்கும்.

MBA படித்தவராம் துல்கர்.  துபாயில் கொஞ்ச காலம் வேலையும் பார்த்திருக்கிறார்.

அப்புறம் ஒரு மூன்று மாதம் நடிப்புப் பயிற்சி பெற்று,  நடிக்க வந்து ஏகப்பட்ட விருதுகளை வாங்கி வைத்திருக்கிறார்.  பாடல்களும் பாடி இருக்கிறார்.


சீதாராமம் வெளியாகும்போதே அதைப்பற்றி நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததை கவனித்தேன்.  துல்கர் இனி,  தான் இதுபோன்ற காதல் கதைகளில் நடிப்பதை நிறுத்தி வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்லி இருந்தார்.

தியேட்டர் காலம் முடிந்து அது ஒன்பதாம் தேதி அன்று அமேசான் பிரைமில் வெளியாக, அன்றே அதைப் பார்த்தேன்.


எங்கிருந்து எங்கு பயணிக்கிறது கதை என்பது ஒரு பிரமிப்பு.  ஒரு இந்தியனின் காரை எரித்து வம்பில் மாட்டும் பாகிஸ்தான் பெண் ராஷ்மிகா அதன் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்க மறுத்து, நிர்வாகத்தின் கட்டளையை மறுக்க முடியாமல் ஒரு வாரத்தில் பத்து லட்சம் பணம் தர ஒப்புக்கொண்டு பாகிஸ்தான் வருகிறார்.  எதிர்பாராமல் அவர் தாத்தா ஒரு வாரத்துக்கு முன் இறந்து போயிருக்க, அவருடைய சொத்துகள் இவர் கைக்கு வரவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் வக்கீல்.  ஒரு கடிதத்தை உரியவரிடம் சேர்க்கவேண்டும்.  உரியவர் இந்தியாவில்.  பகைமை உணர்வு தலை தூக்க இதை செய்ய மறுக்கும் ராஷ்மிகா அப்புறம் பணத்தேவை இருப்பதால் அந்த வேலையை செய்ய புறப்படுகிறார்.

அங்கே தொடங்குகிறது பயணத்தோடேயே கொஞ்சம் கொஞ்சமாக விரியும் ஒரு அற்புதமான காதல் கதை.

கலகலப்பான ராணுவ வீரன் துல்கர் அங்கு பேட்டி எடுக்க வரும் ரேடியோ ஜாக்கி பெண்மணியிடம் (ரோகிணி) தான் அனாதை என்பதை மிகச் சாதாரணமாக வெளிப்படுத்தி செல்லும் இயல்பு..  நெகிழ்ந்து போகும் அவர் அதை அவர் ரேடியோவில் சொல்லும்போது "என் மகன் ராமுக்கு நான் ஒரு கடிதம் எழுதி விட்டேன்... நீங்கள்?" என்று கேட்க, ராமுக்கு வருகிறது ஆயிரக்கணக்கான கடிதங்கள்.  திடீரென அவன் குடும்பஸ்தன் ஆகி விடுகிறான்.  மனைவி என்றே சொல்லி ஒரு கடிதம் வருகிறது.  

சீதா.  சீதாமஹாலக்ஷ்மி!

சீதாவின் கடிதம் தொடர்ச்சியாய் வருகிறது.  தன்முகவரி இல்லாத அந்தக் கடிதம் ராமை அவளைத் தேடி புறப்படச் செய்கிறது.


வெறுப்புடனும், எரிச்சலுடனும் கடிதம் சேர்ப்பிக்க பயணம் தொடரும் ராஷ்மிகா மனதில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆர்வம் வருகிறது.  நமக்கும்தான்.  ராம் யாரென்று தெரியவில்லை.  சீதா யார் என்று தெரியவில்லை.  ஆனால் தெரிந்து கொள்ளும் வேளையில் சில ஆச்சர்யங்கள்..  அதிர்ச்சிகள்..

இங்கு தொடங்கி கடைசி காட்சி வரை ஒரு அற்புதமான கவிதையாக எடுத்திருக்கிறார் ஹானு ராகவப்புடி. சின்னச்சின்ன திருப்பங்களுடன்.  பாடல்களையும் ரசிக்கலாம் என்றாலும் நான் பார்வேர்ட் செய்து விட்டேன்!  ஆங்காங்கே தேஷும், சாரமதியும் இழையும் பின்னணி இசை.

சீதா பிரகாஷ்ராஜை சந்திக்கும் காட்சியை ரொம்ப ரசித்தேன்.  சிலபேருக்கு அந்த காட்சி செயற்கைத்தனம் கலந்தததாக தோன்றலாம்.   அப்புறம் ஒரு நிறைவான கடைசிக் காட்சி.  ராமுக்கு தெரியாமலே இருந்திருக்கலாமோ என்று கூட நினைக்க வைக்கும் இடம்.  ஆனால் அதுவும் ஒரு உத்திதான்.

அஃப்ரீன் சீதாமஹாலக்ஷ்மியை கட்டியணைக்கும் காட்சி..  அவளது எதிர்ப்புணர்வு, கோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் காணாமல் போய் மனிதம் தலைதூக்கி நிற்கும் காட்சிப்படுத்தல்.

வழக்கமான ஒரு காதல்கதையை எவ்வளவு சுவாரஸ்யமாகவும் சஸ்பென்ஸாகவும் எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ராகவப்புடி.  உலகில் சொல்லாத கதை எது?  கதையின் ட்ரீட்மெண்ட் எப்படி என்பதை வைத்துதானே அதன் சுவாரஸ்யமும், வெற்றியும்!

இதுவரை பார்க்காதவர்கள் படத்தை கட்டாயம் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.  கொஞ்சம் பொறுமையுடன் பாருங்கள்.

============================================================================================================

"நீலக்கருவிழியில் ஓலைகொண்டு மையெழுதி, ஏலக்கருங்குழலில் இதமாக நெய் தடவி, வாரித் தலைசீவி, வகிடெடுத்துப் பின்னலிட்டு ,வாரியணைக்க வரும், வாஞ்சையில் நான் தாயடியோ...."  - வாலி மடியிருத்தி காதலுடன் 
மனைவியின் கூந்தலில் 
இரண்டு கைகளால் 
இருபுறமும் சேர்த்தெடுத்து 
இறுக்காமல் பிடித்து 
மூன்று கால் சமமாய் எடுத்து 
மென்மையாய்ப் பின்னலிட்டு 
பிரியாமல் முடிச்சிட்டு 

மல்லிகைச் சரமொன்றை 
மங்கையின் தலையில் 
மையமாய் வைத்து 
மயக்கும் வாசனையில் 
மனம் மகிழும் மணாளன் 

=========================================================================================================


பெரிய பெண் தான் எனக்கு டியூஷன் டீச்சர்!
கணவரை இழந்து, வைராக்கியமாக வாழ்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெற்றது குறித்து கூறும், பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற கு.அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி:
"நான் பிறந்த வீடு, சங்கீதக் குடும்பம். மலேசியாவில் சங்கீதம், நடனம் கற்று கொடுக்க, என் அம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்து, எங்கள் குடும்பம் மலேசியா இடம்பெயர்ந்தது. அங்கே செட்டில் ஆனதும், நான், அக்கா, தங்கை எல்லாம் மேடைக் கச்சேரிகள் செய்தோம்.
அப்போது தான், அழகிரிசாமி அறிமுகம் கிடைத்தது.அவருக்கு கோவில்பட்டி பக்கத்தில் இடைச்செவல் கிராமம். 1952ல், மலேசியாவில், 'தமிழ்நேசன்' பத்திரிகைக்கு ஆசிரியராக வந்தார். அவருக்கு சங்கீதத்தில் ஆர்வம்; எனக்கு கதைகள் வாசிப்பதில் அதீதப் பிரியம்.
இசையும், இலக்கியமும் தான், எங்களை கணவன் மனைவியாக இணைத்தது.கடந்த, 1955ல் திருமணம். எழுத்தில் பிரமாதமான வருமானம் இல்லை. நான்கு குழந்தைகள் பிறந்ததும், ரொம்ப சிரமமான வாழ்க்கை. அவருக்கு மலேசிய வேலை பிடிக்காமல், சென்னை வந்தும், இதே நிலை தான்.
இந்நிலையில், 37 வயதில் இருந்த என்னை, நான்கு பிள்ளைகளோடு தவிக்கவிட்டு, டி.பி., வந்து அவர் இறந்தார்.
என்ன செய்வது என தவித்தபோது, 8வது வரை படித்திருந்த என்னை, 10ம் வகுப்பு படிக்குமாறும், பாஸ் செய்தால், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், எங்கள் குடும்ப நண்பர் வி.எஸ்.சுப்பையா ஐ.ஏ.எஸ்., உறுதி கொடுத்தார். என் பெரிய பெண் தான், எனக்கு டியூஷன் டீச்சர்.
பாத்ரூம் போனால் கூட புத்தகம் கையில் இருக்கும். அப்படி வெறியாக படித்தேன். பெரியவளும், நானும் ஒன்றாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதினோம். அவள் பாஸ்; நான் பெயில்!
ஆனாலும், நான் சோர்ந்து விடாமல், மீண்டும் பரீட்சை எழுதி பாஸ் செய்து, வீட்டு வசதி வாரியத்தில், 'கிளார்க்' வேலைக்குச் சேர்ந்தேன். 'மாங்கு மாங்கு'ன்னு, 23 ஆண்டு உழைத்து, பிள்ளைகளை படிக்க வைத்ததில், எலக்ட்ரானிக் இன்ஜினியர், வங்கி அதிகாரி. மனநல மருத்துவர் மற்றும் மீடியா ஒளிப்பதிவாளராக உள்ளனர்.
அவருக்கு, 1970ல் சாகித்ய அகாடமி விருது கொடுத்தனர். அதில் வந்த பரிசுப்பணம், 10 ஆயிரம் ரூபாயில் இடம் வாங்கி, லோன் போட்டு, வீட்டைக் கட்டினேன்.
இப்போது என் பிள்ளைகள் அனைவரும், செட்டில் ஆகிவிட்டனர். என்னை ராணி மாதிரிப் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், இதையெல்லாம் பார்க்க அவர் தான் இல்லை. அவரில்லாமல் நான் எப்படி இருந்தேன்னு தெரியவில்லை; எந்த வைராக்கியம் என்னை வாழவைத்தது எனவும் புரியவில்லை. இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது.
- தினமலர் - 'சொல்கிறார்கள்' - செப் 6, 2015

==============================================================================

2013 ல் எங்கள் தளத்தில் வெளியான ஒரு பதிவுக்கு சுப்பு தாத்தாவின் உணர்வுபூர்வமான பின்னூட்டம்..

எப்படியிந்தப்பதிவினைப்படியாதொழிந்துபோனேனெக் கவலையிலேயேன்ன்னையுமறந்திருக்குமந்தவேளையிலே அப்பப்பா.. அந்த அப்பாதுரை சார் பின்னூட்டங்களையும் சுவைத்துக்கொண்டே மென்றுகொண்டே அடடா, இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் கூட போட்டிருக்ககூடாதா என நினைத்த அந்த வேளையிலே

என்றோ 1979 அல்லது 1980 ல் மாயவரத்தில் அதுதான் இன்று மயிலாடுதுறை எனக்குறிப்பிடப்படும் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அந்த கல்யாண மண்டபம் மிகவும் பெரியது. ஒரு கல்லூரி வளாகம் என நினைக்கிறேன். அங்கு என் நண்பரின் மகள் திருமணத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்திருந்து காலை உணவருந்தி திருமண மேடையிலே மண மகன், மண மகள் அமர்ந்து, அவர்கள் வாழ்விலே ஒன்று படும் நிகழ்ச்சியைத் துவங்குமுகத்தான் வருகை புரிந்த பற்பல பேச்சாளர்களிடையே முதன்மையான பேச்சாளராக அவர் வந்தார்..

பேச வந்த இரு நிமிடங்களுக்கும் குறைவாகவே திருமண நிகழ்ச்சியின் மேடை அமைப்புகளைப்பற்றியும் அந்த அமைப்பு ஒரு திருமணத்திற்குத் தேவையா என்பது பற்றியும் துவங்கினார். இரு பெரிய மிகவும் பெரிய குத்துவிளக்குகளில் ஐந்து முகங்கள் கொண்ட தீபங்கள் சுடர் விட்டுக்கொண்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி முடியும் வரை இதில் நல்ல எண்ணை வீணாகிக்கொண்டிருக்கிறது. இது தேவைதானா திருமணத்திற்கு என்று சொன்னவர், தொடர்ந்து, இல்லங்களில் தினந்தோறும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதால் எத்தனை எண்னை செலவாகிறது, அது மாதத்திற்கு எத்தனை செலவு, ஆண்டுக்கு எத்தனை செலவு, எனக்குறிப்பிட்டு விளக்கினார். 
இதை மிச்சப்படுத்தினால் என்னென்ன அத்தியாவசியமான செலவுகள் செய்ய இயலும் எனவும் பட்டியலிட்டார். ஒரு குடும்பம் தன் வாழ் நாட்களில் கிட்டத்தட்ட ரூ 50000 இந்த மாலை நேர விளக்கெரிக்கும் என்ணையிலே செலவிடுகிறதே என வருத்தப்பட்டார் அடுத்து, மணமகள் மணமகன் கழுத்திலே மாலை அணியும்பொழுது பார்வையாளர்கள் அரிசியையும், மஞ்சளையும் கலந்து அவர்கள் தலையிலே போட்டு எத்தனை எத்தனை படி அரிசியை வீணாக்குகிறார்கள். அவர்களை வாழ்த்த அவர்கள் தலையிலே அரிசியைப் போடவேண்டுமென, விழா நடக்குமிடம் எல்லாம் அரிசியை வாறி இறைப்பது நியாயமா எனக்கேட்டார். இது போன்று எல்லா குடும்பங்களும் இனி அரிசி அட்சதை வாழ்த்துச்செய்தியாக நினையாது சேகரித்தால் தமிழ் நாட்டில் ஒரு வருடத்திற்கு எத்தனை டன் அரிசி மிச்சப்படும் என்று கணக்குச் சொன்னார்.

மேடைக்குப் பின்புறத்தில் திருப்பதி வெங்கடாசலபதி பத்மாவதி தாயார் படம் மிகப்பெரிய படம் மாட்டி இருந்தது.

அந்த படத்திற்கு மிகப்பெரிய மாலைகள் சூட்டப்பட்டிருந்தது.

ஒரு திருமணத்திற்கு இந்தப்படங்கள் தேவையா என்றார்.

ஒரு வழியாக விழாவுக்கு வந்திருந்த அனைவரின் உள்ளத்தையும் கவரும் வகையில் பேசி முடித்தபின் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

அடுத்து வரும் நபர் மேடை மைக்குக்கு செல்லுமுன்பே , மாலை மாற்றும் வைபவம் என்று சொல்லப்பட்டது.

மணமகன், மணமகள் மிகுந்த கரகோஷத்திற்கிடையே மாலை மாற்றிக்கொண்டனர்.

அடுத்த கணமே கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர், தத்தம் கைகளிலிருந்து பூக்களையும், மலர்களையும், மஞ்சள் அட்சதைகளையும் பலர் அங்கிருந்தே மணமக்கள் தலையில் தூவினர். பற்பலர் மேடைக்குச்
சென்று அவர்கள் தலையிலே அட்சதையைப்போட்டு ஆசிகள் வழ்ங்கினர்.

அந்த விழா மண்டபம் முழுவதுமே பூக்களும் அட்சதைகளாலும் பரவி இருந்தது.

அந்த திருமண வளாகமே அடுத்த நிமிடம் காலியாகி விருந்து நடக்கும் இடம் நோக்கி விரைந்தது. ( என்னையும் சேர்த்து தான் ) . சுவையிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, அது போன்ற விருந்து இனி கிடைக்குமா என்று இருந்தது.
அவர்கள் கொடுத்த தாம்பூலப்பை இன்னும் அழகாக இருந்தது.

நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களானாலும் அந்தப்பேச்சும் அந்தச் சாப்பாடும் அந்த விருந்தினரை என் நண்பர் உளமாற உபசரித்த நேர்த்தியும் என்னால் மறக்க முடியவில்லை.

அதெல்லாம் சரி. அந்த பேச்சாளர் யார் எனக்கேட்கிறீர்களா ?
அந்த பேச்சை நான் குறிப்பிட்டதன் காரணம் . அந்த பேச்சாளரின்தமிழ் அழகு. சொல் அழகு. அச் சொற்களை கோர்வையாக பேசியது அழகு.

கருத்துக்கள் மாறுபடலாம். மாறுபடும். ஆயினும் மொழி மாறிடின்
சிதைந்திடின் அது மொழியின் முழுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நாளடைவில் அந்த மொழி மக்களிடையே முற்றிலும் மறைந்தே போகும்.

வடமொழி சம்ஸ்க்ருதம் பண்டிதர்களால் மட்டுமே இலக்கண சுத்தமாக பேசப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியில் சிதைந்தபோது பாலி ஆனது. பாலியில் இலக்கணம் செய்யப்பட்டது. இலக்கியம் உருவானது. அதைக் கட்டிபிடித்து ஒரு இலக்கண கூட்டுக்குள்ளே வைக்க துவங்குகையில் மறுபடியும் மக்கள் மத்தியில் ப்ராக்ருதம் உருவானது. அதே நிலைக்கு ப்ராக்ருதம் போனது. விருஜ பாஷை உருவானது. வ்ருஜ பாஷையும் சிதைந்தது முகலாய மன்னர்கள் ஆட்சியின் போது. பாரசி மொழி கலப்பில் ஒரு பக்கம் கடி போலி ( இன்றைய இந்தி ) இன்னொரு பக்கம் உருதுவும் உண்டாயின

இது மொழி வரலாறு.. சம்ஸ்க்ருதம் இப்பொழுது ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு எல்லைக்குள் மட்டும் பேசப்படுகிறது அங்கு நான் சென்று இருந்தேன். அவர்கள் சம்ஸ்க்ருதம் பொதுவாக பேசுகிறார்கள் என்றாலும் இன்றைய கன்னட மொழியையும் கலந்து தான் பேசுகிறார்கள். இது தவிர்கமுடியாதது.

தமிழ் ஒன்று தான் . ஆனால் நமது நாட்டில் இருக்கும் 25 மாவட்டங்களில் வழக்கு தமிழ் வேறாகி விட்டதே.

தூயமாக, துல்லியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நிலை.

வாழ்வில் இன்பம் வேண்டும். அது தனக்கு எப்படி பொருந்துமோ அப்படி அதன் ஆரங்களை, நீட்டுவது மற்ற ஒரு வகை. அது போலவே மொழியை தனக்கு விருப்பம் போல் சிதைத்து இதுதான் இலக்கியம் என்று பிற்கால சந்ததியர் குழப்பச் செய்வது .

நிர்வாணங்கள் நடுவிலே கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். என்பர்

அதைச் சொல்லத்தான் மேற்கூறிய பின்னூட்டம்.  அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைச் சாடுவது எனக்கு எள் அளவும் சம்மதம் இல்லை.

சுப்பு தாத்தா

======================================================================================================

சென்ற வாரம் ஜீவி ஸார் ராஜாஜி பற்றி ஏதாவது எழுத்தாக கேட்டிருந்தார்...   இப்போதைக்கு இது.  ஹிஹிஹி...

===============================================================================================================

பொக்கிஷம்...  விகடன் 1931, 32,34

இப்போது இது தமிழகமெங்கும் காமன்!!


அப்போதைய காங்கிரஸின் வெற்றியைக் கொண்டாடும் தமிழர்கள்...


காதலிகள் எல்லோருமே ஜெனிலியாக்கள்தானா?!

புத்திசாலி.. புத்திசாலி....


காந்தியின் கையெழுத்து. தமிழர்களுக்கு செய்தி... என்ன சொல்லி இருக்கிறார், சொல்லுங்கள்...


123 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

  தலைப்பு ஈர்க்கிறது! முகவரி இல்லாக் கடிதம்னு ஒரு கதை கூட எழுதி....எழுதி?..ஹிஹிஹிஹி இதுக்கு அப்புறம் நான் சொல்ல மாட்டேன். ஆமாம் பெரிய ரகசியம்!!! ஊர் உலகம் அறிந்த விஷயம்!

  துல்கர் ரொம்பப் பிடிக்கும். ஆமா ஸ்ரீராம் அவர் குரல் செம....ஹைஃபைவ்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. ஃபோன் கைக்கு கிடைத்து விட்டதா இல்லையா?

   நீக்கு
  2. இன்னும் இல்லை ஸ்ரீராம்...இங்கு வரை வந்தாச்சு ஆனால் இன்னும் வீட்டிற்கு வரவில்லை

   கீதா

   நீக்கு
 2. எதற்கெடுத்தாலும் விளக்கம், லெக்சர் அடிக்கும் துல்கர். //

  ஆஹ்வ்!!!!!! ஹையோ ஸ்ரீராம்...நிறைய சொல்லத் தோன்றுகிறது ஆனால்..நான் எதுவும் இதைப் பற்றி பேசலை......ஹாஹாஹா.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. கவார்ச்சியான குரல்.. சில இடங்களில் அப்பா மம்மூட்டி நினைவுக்கு வருவார்.//

  அதே அதே நான் சொல்ல வந்தேன் அதற்குள் இந்த வரிக்கு வந்துவிட்டேன்....

  துல்கர் பற்றிய மற்ற விஷயங்கள் நானும் அறிந்திருக்கிறேன்.

  ஸ்ரீராம் நீங்கள் சொல்லியிருக்கும் இரு படங்களையும் நோட் செய்து கொண்டேன். கண்டிப்பாகப் பார்க்கத் தூண்டும் படங்கள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கூட பார்க்கலாம்.

   நீக்கு
 4. மணம் மகிழும் மணாளனை

  ரசித்தேன்!

  மற்ற கருத்துகள் மாலையில்தான் இனி....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வியப்பின் வியாழன்..

  அன்பின் வணக்கங்களுடன்
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 7. திரைப்பட விமர்சனங்களில்
  கதாபாத்திரத்தின்
  பெயரைக் குறித்துச் சொல்வது என்பதே பெரும்பாலும் இல்லை..

  இதுவும் அப்படியே!..

  கதாபாத்திரங்களைச் சொல்லி விட்டு,

  அந்தக் கால டைட்டில் மாதிரி இன்னாராக இன்னார் என்று கடைசியாக சொல்லி விடலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்பிட்டுள்ள படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் ராம் சீதா தான் தமிழ் மற்ற படங்கள் ரொம்ப முன்னாடி பார்த்தது நினைவில்லை

   நீக்கு
 8. அருமையான விமரிசனம் கொண்ட பதிவு. இதில் சொல்லி இருக்கும் படங்கள் எதையுமே நான் பார்த்ததில்லை. துல்கர் மமூட்டியின் மகன் எனத் தெரியும். ஆனால் படங்கள் பார்த்ததில்லை. சீதாராமம் படம் பார்க்க ஆசை தான். எங்கே பார்ப்பது என்பது தான் புரியலை. வாய்ப்புக் கிடைச்சால் பார்க்கலாம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா நான் ஓட்டிட்டியில் பார்த்தேன் கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம் தேடியாவது பிடித்து பார்க்கலாம் நல்ல படம்

   நீக்கு
 9. கு.அழகிரிசாமியின் மனைவி சொன்னதை முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி எங்கேயோ/எதிலோ படிச்ச நினைவு அரைகுறையாக. அது சரி, சுப்புத்தாத்தாவின் பின்னூட்டம் நன்றாக இருக்குத் தான். ஆனால் அந்த பேச்சாளர் யார்னு கடைசி வரை சொல்லவே இல்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்தது

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பேச்சாளர் யார்?

   நீக்கு
  3. என் அப்பா, மா.நன்னன் தொலைக்காட்சியில் தமிழ்ப்பாடங்கள் நடத்தும்போது என்னிடம், அவர் மிகத் திறமையானவர் என்று சொல்லியிருக்கிறார் (அவரும் ஆசிரியப் பணிதான்).

   நீக்கு
 10. ராஜாஜி திரைப்படங்களுக்கு எதிரானவர் தான். ஆனால் எம்.எஸ். அம்மா திரைப்படங்களில் நடிச்சாரே? அதான் கொஞ்சம் புரியாமல் இருக்கும். அதோடு திரு கல்கி தன் "அமரதாரா" நாவலைத் திரைப்படம் எடுக்கவெனவே எழுதினார். ஆனால் பாதி நாவல் கூட முடியலை. இறந்துவிட்டார். பின்னர் அவர் மகள் ஆனந்தி கல்கி எழுதின குறிப்புக்களை வைத்து முழுவதும் எழுதி முடித்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமராதாரா பற்றியும் அதை கல்கி மகள் ஆனந்தி முடித்தது பற்றியும் படித்திருக்கிறேன் எம் எஸ் அம்மா படங்களில் நடித்த ராஜாஜி என்ன செய்வார்?

   நீக்கு
  2. அவங்களுக்கு குரு/ ராஜாஜி தானே!

   நீக்கு
  3. அதற்காக சினிமாவில் நடிக்க கூடாது என்று இருக்கிறதா என்ன!

   நீக்கு
 11. ப்ரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கணவன்மார்/மனைவிமாருக்குப் பின்னிப் பூவைக்கும் இந்தக் காட்சி ஏற்கெனவே நீங்க காசி போன விருத்தாந்த்த்தை எழுதினப்போ வந்ததோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காசி போய்விட்டு வந்த போது இந்த விவரத்தை பற்றி சொல்லி இருந்தேன் ஆனால் இந்த படம் அதற்கும் முன்னதாக தினமலரில் வெளியானது. அதை வைத்து சும்மா ஒரு படம் மட்டும் போட்டு இருந்தேன் பேஸ்புக்கில். நீங்கள் அப்போதே இது திருவேணி என்கிற விவரத்தை சொல்லி இருந்தீர்கள்.

   நீக்கு
  2. ஓஹோ! இந்தப்படத்தை அடிக்கடி பார்ப்பதால் நீங்க எடுத்தது என்றே நினைச்சிருந்தேன். :)

   நீக்கு
  3. இப்போ சமீபத்தில் ( போன மாதம்) போயிட்டு வந்தவங்க சொன்னது. இப்போல்லாம் கங்கைக்கரையிலேயே இந்தச் சடங்கை நடத்தறாங்களாம். திரிவேணி சங்கமத்துக்குப் படகில் அழைத்துச் செல்லுவது இல்லையாம். நாங்க கங்கையின் நட்ட நடுவே மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் இடத்திலே (பார்த்தால் நீரில் வித்தியாசம் தெரியும்.) நிறுத்தப்பட்டிருந்த படகிலே அமர்ந்து கொண்டு எல்லாச் சடங்குகளும் செய்தோம். ஆனால் அப்போல்லாம் இத்தனை கூட்டமெல்லாம் இல்லை. நாங்க ஒரு நாலைந்து பேர் தான் இருந்திருப்போம்.

   நீக்கு
 12. பாட்டுக்கு பாட்டு

  கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை அம்பி
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
  செறி எயிற்று அரிவைக் கூந்தலின்
  நறியவும் உளவோ நீ அறியும் பூவே. 

  பூவை அறியேன். பூவையர் கிழமாகி 
  கூந்தலும் நரையாகி நிறைய கொழிந்து 
  போனபின் எஞ்சியதே சிக்கு பிடித்த வாசம்
  வாசம் மணக்கவே வைத்தேன் மல்லிகை 

  சுப்பு தாத்தாவும் அப்பாதுரை அய்யாவும் இணையத்தில் இருந்து காணாமல் போய் விட்டனர்!

  வேப்பிலைக்கட்டி தற்போதும் செய்க்கிறார்களா? உரல் உலக்கை எல்லாம் போனபின்பும்? 

  ஜோக்குகள் பரவாயில்லை. அது என்ன தலைப்பு "காதலிகள் எல்லோருமே ஜெனிலியாக்கள்தானா?!" புரியவில்லை. 

  காந்தி கையெழுத்து சுருக்கெழுத்து போல் உள்ளது. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேப்பிலைக்கட்டிக்கெல்லாம் வேண்டாம்னு சொல்லுபவர்களே இல்லை. உரல் உலக்கை எல்லோரிடமிருந்தும் போகலையே! எங்க வீட்டில் கல்லுரல், அம்மி இன்னும் வைச்சிருக்கோம். இங்கே வந்ததும் சின்னதான உரல் ஒன்றும் அதற்கேற்ற கல்லால் ஆன உலக்கையும் வாங்கி வைச்சிருக்கேன் அவசரத்துக்கு.

   நீக்கு
  2. ஜெயக்குமார் சந்திரசேகர் சார்... காதலிகள் எல்லோரும் ஜெனிலியாக்கள் என்று சொன்னதற்கு அர்த்தம் ஜெனிலியா தான் நடித்த படங்களில் பெரும்பாலும் ஒரு அசடாகவே நடித்திருந்தார். அதனால் தான் அப்படி சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
  3. சுப்பு தாத்தா மீனாட்சி பாட்டி பேஸ்புக்கில் இப்போதும் நிறைய அல்லது அவ்வப்போது பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு 98 அல்லது99 பேரை டேக் செய்வார்கள்

   நீக்கு
 13. விவாஹ சுபமுஹூத்தப் பத்திரிக்கை என்பது
  வாழ்க்கைத் துணை ஒப்பந்த அழைப்பிதழ் என்றெல்லாம் மொழி மாற்றம் கண்டிருக்கின்றது..
  பேச்சைத் துவக்கும் போதே அமங்கலமாகத் தான் ஆரம்பிப்பார்கள்..

  சமசுக்கிருதம் , சமக்கிருதம் என்றெல்லாம் பேசி அந்த மொழியைக் கரைத்துக் குடித்த மாதிரி இன்னின்ன மாதிரி ஆபாச வார்த்தைகள் இருக்கின்றன என்பார்கள்..

  இப்படியான பொருத்தத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் போது ஒப்பாரி வைக்காமல் காரில் வந்து இறங்கியிருக்கும் அவர் வாழ்க.. இவர் வாழ்க.. என்று சத்தம் போடுவார்கள்..

  மஞ்சள் குங்குமச் செலவை மிச்சப் படுத்தினால்
  மச்சு வீடு கட்டி வாழலாம் என்பார்கள்..

  ஆனால்,
  வெளியில் புலி
  வீட்டுக்குள் எலி கதை தான்..

  இன்னும் பேசலாம்..
  எதுக்கு ஊர் வம்பு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு மா நன்னன் பற்றிய அந்தப் பதிவில் அவருக்கு நிறைய ஆதரவு தெரிவித்த கருத்து இருந்தார்கள். குறிப்பாக ராஜா சுந்தர்ராஜன் சுப்பு தாத்தா உள்ளிட்டோர்

   நீக்கு
  2. என்னவோ? எப்படி சுப்புத்தாத்தா ஆதரித்தார்னு தெரியலை. விடிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தில் ஏற்றும் விளக்கையும், மாலை அந்தி மயங்குகையில் ஏற்றும் விளக்கையும் அதன் உள்ளார்ந்த தாத்பரியத்தையும் குறித்து அறிந்தால் இப்படி எல்லாம் பேசவே மாட்டார். மின் விளக்குகளின் அணி வரிசை மட்டும் பரவாயில்லையா? மின்சாரம் எக்கச்சக்கமாகச் செலவு ஆகுமே! இது நாட்டுக்கே கேடு இல்லையோ? மூட நம்பிக்கை என்பது முற்றிலும் வேறு. இறை சார்ந்த/மனம் சார்ந்த/பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கைகள் என்பது வேறு.

   நீக்கு
 14. சீதாராமம் - அருமையான அழகான படம்... என்ன நடக்குமோ என்று தவிக்க, ரசிக்க வைத்த படம்...

  மனம் மகிழ்கிறது மணாளன் செயல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் பார்த்து விட்டீர்களா டிடி? உண்மையிலேயே நல்ல படம்.

   நீக்கு
 15. காந்தியை விட்டு விடுங்கள்... பாவம்,!..

  சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்கிக் கதறி அழுதவர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் காந்தியைப் பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை காந்தி தமிழர்களுக்கு சொன்ன வாழ்த்து செய்தி தான் அது அதற்கான தமிழாக்கமும் என்னிடம் இருந்தது யாராவது அதை படித்து பதில் சொல்கிறார்களா என்று பார்த்தேன்

   நீக்கு
  2. நான் அதைக் கடந்து வந்துட்டேன். படிக்கும் ஆவல் இல்லை. :(

   நீக்கு
 16. யாருக்காக அவர் விக்கி விக்கி அழுதாரோ யாரிடத்தில் அவர் அன்பினையும் ஆதரவையும் பொழிந்தாரோ அவர்களே அவரைக் கண்டு கொள்வதில்லை..

  இப்போது வந்து...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா! ஶ்ரீராம்! நிஜம்மாப் புரியலை? பேச்சாளர் யார்னு தெரிஞ்சதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு! :)

   நீக்கு
 17. சீதாராமம்! ஏதோ ஒரு வகையில் சீதாராம நாமகீர்த்தனம் செய்யவைத்திருக்கிறாரோ அந்த ஓமப்புடி? சீதா ராமனைத் தேடியவாறு பாகிஸ்தானில் வந்த பக்தையா ராஷ்மிகா! ஆஹா.. என்ன ஒரு கதை அமைப்பு. ஷாருக் கான்/ப்ரீத்தி ஸிண்ட்டாவின் 'வீர் ஸாரா’வை அடிக்கடிப் பார்த்திருப்பாரோ இயக்குனர்?

  //..மதங்களைவிட மனிநேயம் தான் பெரியது என கூறும் படம், சில இடங்களில் மதம் குறித்த வெறுப்பு பிரச்சாரத்திற்கான கால்வாயையும் திறந்துவிடுகிறது..// -இந்து தமிழ் திசை விமரிசனம். அப்படியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இந்து தமிழிசை விமர்சனம் படிக்கவில்லை ஏகாந்தன் சார் ஆனால் இந்த படம் தாராளமாக நம்பி பார்க்கலாம் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் இருந்தாலும் படம் நம்பி பார்க்கலாம்

   நீக்கு
 18. தொடர்ச்சியாக வியாழன் பதிவை இன்டெரெஸ்டிங் ஆகத் தொகுத்து பதிவை வெளியிடுவதே ஒரு சாதனைதான். அவ்வப்போது வாசிப்பவைகளைச் சேர்த்து வைக்கணும். பிறகு வியாழனுக்குரிய ஒரு டாபிக்கில் எழுதணும். பிறகு கோர்க்கணும். நல்ல உழைப்பு. பாராட்டுகள் ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லை உங்கள் வரிகள் என்னை ஊக்குவிக்கின்றது

   நீக்கு
 19. மொடர்ந்து அவ்வப்போது பார்த்த படங்கள் (நன்றாக இருப்பவை) பற்றிக் குறிப்பிடணும். என்னிடம் ஹாட்ஸ்டார், ப்ரைம் உண்டு. வேறு எதுவும் கட்டுப்படியாகாது.

  என்னிடம் சேகரமாயிருக்கும், IMTBல் 6க்குமேல் மதிப்பெண் பெற்றவைகள் என்று சேகரித்திருக்கும் படங்களைப் பார்த்தால் அறுவை, நேரம் வீண். பிறகு IMDB பார்த்தால் 3-4 என மதிப்பெண் இருக்கிறது. அதுக்கு நல்ல படங்களையாவது பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் நான் குறிப்பிட்டிருக்கும் துல்கர் படங்களை நம்பி பார்க்கலாம் நெல்லை மற்ற படங்கள் அவ்வப்போது நன்றாக இருந்தால் இனி வியாழன் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்

   நீக்கு
 20. திருமண நிகழ்வு, அதறாகான செலவுகள் மிகவும் வேஸ்ட் என்பது என் அபிப்ராயம். சமீப, சென்னைக்கு வெளியே நிகழ்ந்த திருமணத்துக்கு உணவு 7 லட்சம், மண்டபம் 4 லட்சம் ஆயிற்றாம். இது தவிர ஏகப்பட்ட செலவுகள். இப்படி காசை கரியாக்குவதால் என்ன பயன்?

  நல்லா கிராண்டா திருமணம் செய்தார்கள் என்ற வெற்றுப் பாராட்டுக்காகவா?

  கேடர்ர்கள் கோடிகளில் வீடு வாங்கவும், தியேட்டர்கள் போன்ற பல, மிருமண மண்டபமாகி, மினி ஹாலாகிப் பணம் கொழிக்க வாழ்நாள் உழைப்பு போகணுமா? யோசிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை எல்லாம் சொல்லப் போனால் உன்னோட பொண்ணு/பிள்ளைக்கு நடக்கலைனு பொறாமையானு கேட்கிறாங்க. ஆகவே இப்போல்லாம் வாயே திறப்பது இல்லை. வட நாட்டில் மேலே ஷாமியானா மாதிரி இருக்கும் சின்னப் பந்தலின் கீழ் நடக்க வைச்சு/ ஆட வைச்சு மணமேடைக்கு இப்போல்லாம் அழைத்து வராங்க. அதை நாலாபக்கமும் உயரே தூக்கிப் பிடிப்பவர்கள் பெரும்பாலும் பெண்ணின் சொந்த அண்ணா/தம்பி (இருந்தால்) அல்லது அண்ணன்/தம்பி முறை இளைஞர்கள்

   நீக்கு
  2. நெல்லை அண்ட் கீதாக்கா ஹைஃபைவ்!!! நானும் இதே கட்சிதான்...

   நெல்லை அதை ஏன் கேட்கறீங்க....ஒரு பதிவே எழுதும் அளவு இருக்கு...நீங்க சொல்லியிருக்கும் செலவு தவிர, அறைகள் பதிவு செய்வது, பட்டு, உறவினர், நட்புகளுக்கு துணிகள் வாங்குதல் அதிலும் முதல் வட்ட உறவினர், இரண்டாம் வட்ட உறவினர் இப்படித் தரம், நட்பிலும் அது போல முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என்று வகை வகையாக பரிசுப் பொருள் வாங்கறாங்க ....அதுவே 4, 5 லட்சம் ஆகிறது, இப்படிக் கொடுக்கும் போது பாரபட்சம் வரும்,,,உறவினருக்குள் உனக்கு என்ன கொடுத்தாங்க எனக்கு இதுதான் கொடுத்தாங்க ஆ உனக்கு பட்டுப் புடவையா,,,,,இந்த கிஃப்ட்டா விலை உசத்தியா கொடுத்திருக்காங்க....இப்படி ஒப்பீடுகள் பொறாமைகள், பேச்சு வம்பு,,,,

   இதுல வேற பொண்ணுக்கு என்ன கொடுக்கறாங்க மாப்பிள்ளை வீட்டில் என்ன செய்யறாங்க....பொதுவெளியில் பரத்தி வைப்பது எல்லோருக்கும் காட்டுவது....எக்சிபிஷன் போல....அதுலயும் ஆர்ட்....அப்புறம் அவங்க கல்யாணத்துல அது வைச்சிருந்தாங்க இவங்க கல்யாணத்துல இது வைச்சிருந்தாங்க....இது சுமார் அது ஆஹா ஓஹோ இப்படி பேச்சுக்கள்...

   அப்புறம் ஃபோட்டோகிராஃபி அது இப்ப கல்யாணத்துக்கு முன்ன டீசர்....ஏதாவ்து லொக்கேஷன் போய் ஷூட்டிங்க் வேற....அதுக்குத் தனி காசு...ஃபோட்டோஷூட் வீடியோ ஷூட் டீசர் டிஜிட்டல் ஆல்பம், ஆல்பம் எல்லாத்துக்குமெ 4, 5 லட்சம்....

   என்னவோ போங்க...என்ன கல்யாணமோ என்ன வம்போ....என்ன ஒப்பீடோ...என்ன போட்டியோ...

   கீதா

   நீக்கு
  3. திருமண செலவுகள் நிறைய செலவுகள் வீண் என்று எல்லார் மனதுக்கும் தெரியும் ஆனால் யாராலும் அதை கட்டுப்படுத்த முடியாது ஏனெனில் நாம் ஒருவரே முடிவு எடுக்க முடியாது சம்பந்தி வீட்டாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாம் என்ன செய்ய முடியும்? மேலும் நிறைய சம்பிரதாயங்களை நாம் செய்யாமல் இருக்க மனம் தயங்கவும் தயங்கும்

   நீக்கு
 21. எளிமையான வேப்பிலைக்கட்டி எனக்குப் பிடிக்காது. இது பாலக்காட்டில் உருவாயிருக்கணும். பாலக்காட்டு உணவு வகைகளை வைத்து, ஏகப்பட்ட விலைக்கு விற்கும் இடம் அம்பிகா டெபோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பத்தூரில் இருந்தவரைக்கும் (ஹிஹிஹிஹி, எங்கே கௌதமன் சார்?) எங்க வீட்டு நாரத்தை இலை, எலுமிச்சை இலைகளுக்கு நல்ல டிமான்ட் இருந்தது. வேப்பிலைக்கட்டியை உரலில் இடிக்காட்டி என்ன மிக்சி ஜாரில் போட்டுச் சுற்றிடலாமே! நான் அப்படித்தான் பண்ணி வைச்சுப்பேன்.

   நீக்கு
  2. கீதாக்கா நானும் மிக்சியில்தான் !!!

   கீதா

   நீக்கு
  3. வேப்பிலை கட்டி என்று சொல்லும் வழக்கம் சமீபத்தில் தான் எனக்கு தெரியும் எனக்குத் தெரிந்தவரை அது நார்த்த இலை பொடி தான் ஆரம்ப காலங்களில் என் அம்மா அம்மியிலோ அல்லது சற்றே உயரமான உடல் போன்ற ஒரு அமைப்பு இருக்கும் அதில் உலக்கையால் குத்தியோ தயார் செய்து சாப்பிட்டு வழக்கம் நார்த்த இலையில் அழகாக பெருங்காயம் உப்பு போன்றவை சேர்த்து மிளகாய் காய்ந்த மிளகாய் சேர்த்து இடித்துக் கொடுக்கும் போது அதன் சுவையே தனிதான் எளிமையாக என்றால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை இது ஆரம்ப காலத்தில் இருந்தே இதே வழக்கத்தில் தானே தயார் செய்கிறார்கள்

   நீக்கு
  4. ஹாஹாஹா! கௌதமன் சார்! நல்வரவு! :)

   நீக்கு
 22. அம்மா இல்லாமல் பசங்களை வளர்க்கும் அப்பாக்களைவிட, கணவன் இல்லாமல் பசங்களை வளர்க்கும் அம்மாக்கள் அதிகம். அதில் வியப்பேற்படுத்துவது, அதுவரை வெளி உலகில் தாய்க்குப் பழக்கம் இருக்காது.

  எல்லாவற்றிலும் பெண்ணே வலிமையான உழைக்கக்கூடிய பசங்களை நல்லா வளர்க்கக்கூடிய படைப்பு, ஆணைக் காட்டிலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் ஆணுக்கு பொறுப்பு கம்மி பொறுமை கம்மி ஆனால் சோம்பேறித்தனம் ஜாஸ்தி

   நீக்கு
 23. மலையாளப் படங்களில் கதை இருக்கும், தமிழ்படங்களில் பெரும்பாலும் அப்படி இருக்காது. வித்யாசமான கதைகள் மலையாளத்தில் உண்டு. என் மனைவி மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்களும் பார்ப்போம். ஆனால் இங்கே தமிழகத்தில் வாய்ப்பதில்லை. அம்பேரிக்கா போனால் தான் அதிகப் படங்கள். அநேகமாய்த் தினம் ஒன்றாவது இருக்கும்.

   நீக்கு
  2. அப்படித்தான் மணிச்சித்திரத் தாழ், இன்னும் சில படங்கள் பார்த்துட்டு அவற்றின் தமிழாக்கப் படங்களைப் பார்த்து மனம் நொந்து/வெந்து போயிட்டோம். :(

   நீக்கு
  3. நெல்லை எனக்கும் மலையாளப்படங்கள் பார்க்க ரொம்பப் பிடிக்கும்..

   கீதாக்கா ஹைஃபைவ்!!!! மணிச்சித்திரத்தாழ் பரதம் இரண்டும் தமிழில் எடுத்து.....ஹையோ....

   கீதா

   நீக்கு
  4. மலையாள படங்கள் பற்றி எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டுதான் ஆனாலும் இன்று காலை படித்த மலையாள படங்கள் பற்றிய ஒரு அபிப்பிராயம் எடுத்த பகிரலாம் என்று பேஸ்புக் தேடினேன் யார் எழுதியது என்பது மறந்து போயிட்டு ஹரிஹரன் தங்கவேலு என்று நினைத்து தேடிப் பார்த்தேன் அது இருந்தால் அதை எடுத்து பகிர்ந்து இருப்பேன் சற்று மாறுபட்ட கோணத்தில் யோசித்தது அது

   நீக்கு
  5. எடுத்து எழுதுங்க ஶ்ரீராம். தெரிஞ்சுக்கலாம். ஆனால் நீங்க சொல்றாப்போல் எல்லா மலையாளப்படங்களையும் ரசிக்க முடியாது என்பதும் உண்மையே!

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்களின் படவிமர்சனங்கள் இந்தப் படங்களை பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் இப்போதெல்லாம் நான் எந்த புதுப் படத்தையும் பார்க்க விளைவதில்லை. குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் பார்ப்பார்கள். கதை நன்றாக இருந்தால் என்னை மறுபடி பார்க்கும்படி சிபாரிசு செய்வார்கள். அப்படி துல்ஹர் நடித்த படங்களை சில பார்த்துள்ளேன். அனைத்திலும் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கலி என்ற படந்தான் அவர் நடிப்பில் நான் முதலில் பார்த்தது. அப்போதுதான் அவர் மம்முட்டியின் மகன் என்பதை தெரிந்து கொண்டேன். நீங்கள் இப்போது சொல்லும் இந்தப்படங்களை குழந்தைகள் பார்த்து விட்டார்களா என கேட்க வேண்டும்.

  கவிதை அருமை. ரசித்தேன் கணவன்மார்கள் இப்படி மனைவியை பாசமாகப் பார்த்துக் கொண்டால் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் தாயைப் பிரிந்திருக்கும் நினைவே வராதே.. .!

  பதிவர் சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் அருமையாக உள்ளது. ரசித்துப் படித்தேன். அந்தப் பேச்சாளர் யார் எனவும் தெரிந்து கொள்ளும் அவா இறுதியில் வருகிறது.

  கு. அழகிரிசாமியின் மனைவி பற்றி படித்தது மனதை நெகிழ வைத்தது. தைரியமான மனுஷி. அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  வேப்பிலைக்கட்டி அடிக்கடி உரலில் இடித்திருக்கிறேன். (எங்கள் மாமியாருக்காக) அப்போதெல்லாம் எனக்கும் வேப்பிலையே சேர்க்காமல் எதற்காக இதற்கு இந்தப் பெயர் இந்த சிந்தனை வரும்.

  ஜோக்குகள் அருமை. இன்றைய தங்களின் அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம்போல அனைத்தையும் பற்றி ஒவ்வொன்றாக கருத்து கூறிய கமலா அக்காவுக்கு நன்றி கவிதை ரசித்ததற்கும் நன்றி நீங்கள் நீ இந்த துல்கர் படங்களை நம்பி பார்க்கலாம் குறிப்பாக சீதாராமன் கண்டிப்பாக பார்க்கலாம் வேப்பிலை கட்டி அந்த காலத்தில் உரலில் தான் இடித்திருக்கிறோம் மிக்ஸியில் அரைப்பது எதோ ஒவ்வாத செயல் போல தோன்று

   நீக்கு
 25. பட விமர்சனம் அருமை.
  ஓகே கண்மணி, ஹே சினாமிகா, சீதா ராமம் மூன்று படங்களும் பார்த்து விட்டேன். பிள்ளைகள் நன்றாக இருக்கிறது பாருங்கள் என்றார்கள் பார்த்தேன். எனக்கு பிடித்து இருக்கிறது.

  உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

  கு.அழகிரிசாமியின் மனைவி சீதாலட்சுமி அவர்கள் சொன்னது படித்து மனது நெகிழ்ந்து விட்டது. மனதிடத்துடன் வைராக்கியமாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இப்போது மகிழ்ச்சியாக இருக்கும் போது அவர் இல்லையே இதனை பார்க்க என்று சொன்னது நெகிழ்வு.
  சுப்பு சார் எப்படி இருக்கிறார்? மீனாட்சி அம்மா எப்படி இருக்கிறார்கள்?

  பொக்கிஷபகிர்வுகள் அருமை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நீங்கள் மூன்று படங்களும் பார்த்து விட்டீர்களா மகிழ்ச்சி அப்புறம் நீங்களும் பேஸ்புக்கில் இருக்கிறீர்கள் சுப்பு தாத்தா பதிவுகள் உங்களுக்கு வருவதில்லையா நீங்கள் அவற்றை பார்ப்பதில்லையா மீனாட்சியம்மா சுப்பு தாத்தா நலமாகவே இருக்கிறார்கள்

   நீக்கு
  2. சுப்பு தாத்தா , மீனாச்சியம்மா நலம் என்று அறிந்து மகிழ்ச்சி.
   பேஸ்புக்கில் எழுதி கொண்டு இருக்கிறார்களா? பார்க்கிறேன்.
   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. கோமதி அரசுவுக்கு அவரோட பதிவுகள் வரலை போல! ஒவ்வொரு பதிவிலும் என்னையும் சேர்த்துக் குறிப்பிடுவதால் அநேகமாக அவரோட எல்லாப் பதிவுகளும் என் டைம்லைனுக்கு வந்துடும்.

   நீக்கு
 26. கு அழகிரிசாமி அவரின் மனைவி சொல்லியிருப்பவை என்ன ஒரு வைராக்கியம்! எவ்வளவு திடனோடு குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து முன்னுதாரணமாக இருக்கிறார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. சுப்பு தாத்தா சொல்லியிருக்கும் நபர் யாரோ?

  எனக்கு கல்யாணம் ஆடம்பரமாக நடத்துவதில் சுத்தமாக இஷ்டம் கிடையாது நம் வீட்டிலும் அப்படித்தான். ஆடம்பரச் செலவுகள் வீண். இப்போதைய கல்யாணங்கள் தங்களுக்குப் பணம் இருப்பதைக் காட்டும் கல்யாணங்கள். அல்லது கடன் வாங்கி உற்றார் உறவினர் அப்படிச் செய்தார்கள் நாமும் செய்ய வேண்டாமா என்று போட்டி அலல்து அவங்க நமக்கு இவ்வளவு கொடுத்திருக்காங்க நாம அதுக்கு டபுள் கொடுத்து நம்ம ஸ்டேட்டஸ் காட்ட வேண்டாமான்னு தங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டுவாங்க இல்லைனா கட்ன வாங்கியாவது காட்டுவதையும் பார்க்கிறேன்.

  நான் இப்படியான கல்யாணங்களுக்கு எதிர்.

  அது போல ரெசார்ட்டில் கல்யாணம், வானத்தில் கல்யாணம், கடலில் கல்யாணம் என்று ஒரு பட்டுப் புடவையெ 60 ஆயிரம் 70 ஆயிரத்துக்கு அப்படி 4, 5 என்று வாங்கி வெளிநாடு செல்லப் போகும் பெண் உடுத்தவா போகிறாள்?

  என்னவோ போங்க...இப்படியான செலவுக்குப் பதில் சிம்பிளா செஞ்சு அந்தப்பணத்தை குழந்தைகளுக்குச் சேர்த்துவிடலாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்பு தாத்தா சொல்லி இருக்கும் நபர் பேராசிரியர் நன்னன் கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்கு பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை தான் சிலர் தான் ஆடம்பரத்தை விரும்புகிறார்கள் ஆனால் அது எல்லோரும் கூறிச் செய்யும் கொண்டாட்டம் என்பதால் சாத்தியமில்லாமல் போகிறது நன்னன் சொல்லியிருக்கும் சிக்கனங்கள் சற்றே கடவுள் நம்பிக்கையே ஆட்டி பார்ப்பது போல சம்பிரதாயங்களை கிண்டல் செய்வது போல இருந்ததால் ஒரு சாராருக்கு வருத்தம் அல்லது கோபம் ஏற்பட்டது அப்போது

   நீக்கு
 28. ராஜாஜி பற்றிய செய்தி புதிது....

  ஆஹா வேப்பிலைக்கட்டி ரொம்பப் பிடிக்கும் திருவனந்தபுரம், பாலக்காட்டில் ரொம்ப ஃபேமஸ், அது போல எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு. வாங்கும் கட்டியில் உப்பு, காரம் கூடுதலாக இருக்கிறது. இப்போது கூட அப்பா கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்னைச் செய்யச் சொல்லி. நார்த்தை/எலுமிச்சை மரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!!!!! அம்பிகாவில் வாங்கு என்று சென்னையில் இருந்தப்ப சொன்னாங்க...ஆனால் எனக்கு விருப்பம் இல்லை காரமும் உப்பும் கூடுதல்...அது வேப்பிலைக் கட்டிக்கு நல்லதில்லையே வேப்பிலைக்கட்டி மருந்து போன்ற சமாச்சாரம்...அதில் உப்பும் காரமும் இருந்தா? வீட்டில் செய்வதுதான் பிடிக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நார்த்த இலை இப்படி வீட்டில் செய்வது போல வராது அம்பிகாவில் தான் நிறைய பேர் வாங்குகிறார்கள் ஆனால் அம்பிகாவில் வாங்கும் நார்த்த இலை பொடி உப்பு அதிகமாக இருக்கும்

   நீக்கு
  2. மாம்பலம் தாயார் டெய்ரியிலும் ' வேப்பிலை கட்டி' கிடைக்கும்.

   நீக்கு
  3. என்னமோ இதெல்லாம் எனக்குக் கடைகளில் வாங்கவே பிடிக்காது. எல்லாமும் வீட்டுத் தயாரிப்புத் தான். நேற்றுத் தான் ஒரு புது முறையில் புளி இஞ்சி தயார் செய்து வைச்சிருக்கேன். இதற்கு முன்னால் மி.வ.ப.மி.இஞ்சி புளி எல்லாவற்றையும் வதக்கி அரைத்துப் பின்னர் கிளறித்தான் பண்ணி இருக்கேன். இம்முறை தனியாவெல்லாம் வைச்சு வெந்தயப் பொடி போட்டுப் பண்ணும் முறை. தே.எண்ணெயில் செய்யச் சொல்லி இருந்தது. அது மட்டும் ஏனோ எனக்குச் சரியா வரலை. நல்லெண்ணெயில் தான் பண்ணி வைச்சிருக்கேன். சாப்பிடும்போது தான் ருசி பார்க்கணும்.

   நீக்கு
  4. இப்போ இரண்டு நாட்களாக வத்தக்குழம்புப் பேஸ்ட் தயாரிக்கும் முயற்சியில்! இன்னமும் ஆரம்பிக்கவில்லை. ஆங்காங்கே கண்ணில் படும் சமையல் குறிப்புக்களைப் பார்த்துக் கொண்டு எனக்கென ஒரு (formula?) உருவாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கேன். சரியாக வந்தால் விரைவில் வெளிவரும்.காத்திருங்கள்! டட்ட்டடய்ங்க்!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
 29. ஆமாம் திருநெல்வேலியிலும் வேப்பிலைக்கட்டி அதிகமாகச் செய்வதுண்டுதான்...

  ஜோக்ஸ் ரசித்தேன்...

  அதென்ன ஜெனிலியா? ஒல்லியா இருப்பாங்கன்னா? இப்பவும் ஒல்லியா இருக்காங்களா என்ன?

  காந்தி கையெழுத்து ஒன்னும் புரியலை ஓரிரு வார்த்தைகளைத் தவிர

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெனிலியா பற்றிய விளக்கம் மேலே கொடுத்திருக்கிறேன் அசட்டு காதலியாக வருபவர்கள் ஜெனிலியா காதலி என்று அழைக்கப்படுகிறார்கள் காந்தி பொதுவாக தமிழர்களுக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார் அப்போது பெரிய செய்தியை எதுவும் அதில் இல்லை என்பதால் அதனுடைய தமிழாக்கத்தை நான் பகிரவில்லை மக்கள் விரும்பினால் பகிர்கிறேன்

   நீக்கு
 30. கல்யாண வீடியோ ஷூட்: குடும்பப்பெண்ணை இன்ஸ்டண்ட் நடிகையாக்க நடக்கும் அசட்டு முயற்சி.

  கல்யாண சாப்பாடு என்று பார்த்தால், பாரம்பர்ய உணவு வகையைப்பற்றிப் பேசினாலே நம்மை ஒருமாதிரி பார்க்கும் இந்தக்கால பெண்வீட்டுக்காரர்கள். உறவினர்கள். எல்லாம் பெரும்பாலும் வடக்கத்தி உணவுவகைகள். பரிமாறுபவனுக்கும் அவற்றின் பெயர்களை சரியாக சொல்லத் தெரியாது. தின்பவர்களுக்கும் ஒன்றும் சரியாகத் தெரிவதில்லை. ஏதோ தேவாம்ருதத்தை விழுங்குவது போன்ற புளகாங்கிதத்தில் அவர்கள்!
  முதல் நாள் மாலை ரிசப்ஷனில் ஆட்டம், பாட்டம், ஆனந்தம். அடுத்த நாள் நிஜமான கல்யாணம், முகூர்த்தம் - சம்பந்தி குடும்பத்தினர்கள் சிலர், நாதஸ்வரக்காரர்கள், காட்டரிங் ஆசாமிகள் தவிர யாரும் தென்படுவதில்லை! முடிஞ்சுது கல்யாணம்! கஷ்டப்பட்டு சம்பாதித்த லக்ஷங்கள் காணாமல்போயாச்சு.

  ஒரு பெண் இருந்தால் சரி.. 3, 4 பெண்கள் இருக்கும் குடும்பஸ்தன் என்ன செய்வானோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஏகாந்தன் சார் ஆடம்பரத்துக்காக ஏகப்பட்ட ஐட்டங்களை போடும்போது அதில் பாதி வீணாவதை பற்றி கவலைப்படுவதில்லை அல்லது செலவு செய்து பெருமைக்காக செலவு செய்து முடித்தபின் கடைசியில் வீணாவது பற்றி பார்க்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு வருத்தம் ஏற்படுமோ என்னவோ இனியாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம் ஆனால் அடுத்த முறையும் இப்படித்தான் இருப்பார்கள் அல்லது திருந்தாமலேயே போவார்கள் பிரசவ வைராக்கியம் மாதிரி

   நீக்கு
  2. ஏகாந்தன் எந்தக் காலத்தில் இருக்கார்னு தெரியலை. ஒற்றைக்குழந்தைக் கலாசாரம் தமிழகத்தில் பரவிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! எங்கானும் அபூர்வமாக 2 பெண்கள்/2 பிள்ளைகள்/அல்லது ஒரு பெண்/ஒரு பிள்ளை எனக் காண முடியும். இப்போதெல்லாம் ஒற்றைக்குழந்தை கலாசாரம் தான்.

   நீக்கு
 31. //..நெல்லை எனக்கும் மலையாளப்படங்கள் பார்க்க ரொம்பப் பிடிக்கும்..//

  எனக்கும்தான்! ஆனால் அதில் யார் நடித்திருக்கிறார்கள் என்பதல்ல, யார் டைரக்டர் என்பது முக்கியம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னர் அப்படி சொல்லலாமே தான் சார் தற்காலங்களில் பகத் பாஸில் மோகன்லால் போன்றவர்கள் நன்றாகவே இருக்கும் பிரித்விராஜ்ஜையும் ஒரு லவ் சொல்லலாம் குஞ்சக்கோன் என்று ஒருவரை சொல்வார்கள் அவரது படம் இதுவரை நான் பார்த்ததில்லை

   நீக்கு
 32. இன்றைய 90% பதில்கள் வாய்ஸ் டைப்பிங் மூலம் செய்யப்பட்டது எனவே அதில் முற்றுப்புள்ளி எடுத்தாது ஆச்சரியர் கூறியிருக்காது கேள்விக்குறி இருக்காது கமா இருக்காது சில இடங்களில் ஓரிரு வார்த்தைகள் நான் கவனிக்காமல் விட்டதில் வேறு வார்த்தையாக இருக்கலாம் ஆனாலும் இன்று பெரும்பாலும் வாய்ஸ் டைப்பிங்கில் பதில் சொல்லி இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுப். போஃன் வாங்கி விட்டீர்களா?

   நீக்கு
  2. இப்படித்தான் என்னையும் பேசச் சொல்லி மகன் கூறினார். இப்போது அவர் வாங்கித்தந்த இதிலேயும் இந்த வசதி உள்ளதென கூறினார். அதனால்தான் கேட்கிறேன்.

   நீக்கு
  3. // புது போன் வாங்கி விட்டீர்களா //

   ஆம். புது போன் வாங்கி விட்டேன் ஐந்து வருடங்களுக்கு முன்னால்!!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா. நல்ல காமெடி.. வேறு ஒன்றுமில்லை.. நீங்களும் வாங்க வேண்டுமென சொன்னீர்களை....! அதனால் கேட்டு விட்டேன் இரண்டாவதாக நான் போஃனில். பதிவுகளுக்கு வருவது போல.. அதே நினைவில் கேட்டு விட்டேன். தன்னைப் போல பிறரை எண்ணும் உள்ளம்.. :)) நான் கேட்ட நேரம் உங்களுக்கும் நல்ல போஃன் வரட்டும்.

   நீக்கு
  5. அக்கா எனக்கு புதிய போன் வர வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் சீக்கிரம் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன் ஆனால் நான் வாங்குவதாக இல்லை!! :))

   நீக்கு
  6. வாய்ஸ் டைப்பிங் என்பது வாக்கியங்கள் சரிவர வராமல் இருப்பதில் இருந்தும் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள்/கருத்துப் பிழைகள் இருப்பதில் இருந்தும் தெரிந்து கொண்டேன். :)))))) நல்லவேளையாக நான் இப்படி எல்லாம் முயற்சி செய்வது இல்லை. ஏனோ மனசுக்குத் திருப்தி தராது என்னும் எண்ணம். :)

   நீக்கு
  7. பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் உண்டு.

   நீக்கு
 33. ஓக்கே கண்மணி பார்த்திருக்கிறேன் மற்றைய படங்கள் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 34. நன்றி, ஸ்ரீராம். ராஜாஜி
  பற்றி சொல்ல சிலரே இருப்பார்கள். அதனால் அவரைப் பற்றி எழுதுங்களேன் என்ற என் கோரிக்கையை கவனத்தில் கொண்டமைக்கு நன்றி ஸ்ரீராம். இப்போதைக்கு இது என்ற குறிப்பு மேலும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவி சார் ஆனால் ராஜாஜியை பற்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்னிடம் அவரை பற்றி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை அவர் எழுதியது இருக்கலாம் அவரைப் பற்றி எழுதியது எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை

   நீக்கு
 35. சகட்டு மேனிக்கு எதையாவது அடித்து விடக்கூடாது. ராஜாஜி திரைப்படங்களுக்கு எதிரானவர் அல்ல. சில குறிக்கோள்களை கவனத்தில் கொண்டு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதாக திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்பினார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் என்ன கண்டேன் ஜீவி சார் நான் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்

   அவர் காலத்தில் அவர் என்ன நினைத்தார் என்பதை அறிய எனக்கு வாய்ப்பில்லை அதை சொல்வதற்கான நேர்மையான புத்தகங்களும் இல்லை பத்திரிகைகளும் இல்லை

   நீக்கு
 36. ராஜாஜியின் அத்யந்த சிஷ்யர் பேராசிரியர் கல்கி. சுதந்திர போராட்டத்தையும் காந்திய கொள்கைகளையும் அடிநாதமாகக் கொண்ட கல்கியின் தியாகபூமி நாவல் ராஜாஜியின் ஆசியுடனேயே திரைப்படமானது. கே. சுப்பிரமணியம் டைரக்‌ஷனில் எஸ்.டி. சுப்புலஷ்மி கதா நாயகியாக நடித்திருந்தார். தமிழ் திரைப்பட வரலாற்றில் தடைசெய்யப்பட்ட பெருமை பெற்ற முதல் திரைப்படம் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுதந்திர உணர்வு மக்களுக்கு ஊட்டப்படக்கூடாது என்கிற பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சரிக்கை உணர்வு தான் அந்த படத்தை தடை செய்ய தோன்றியிருக்கும்

   நீக்கு
 37. அவ்வளவு போவானேன்?
  ராஜாஜியின் திக்கற்ற பார்வதி என்ற கதையே திரைப்படமாகியிருக்கிறது. மதுக்குடியினால் விளையும் சீரழிவை அடி நாதமாகக் கொண்ட கதை இது.
  காரைக்குடி நாராயணன் என்ற இளைஞர் இந்தத் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதத் தீர்மானமான பொழுது
  அவரை தன் வீட்டிற்கு அழைத்து குடியின் தீமைகள் திரைக்கதையில் அழுத்தமாக வெளிப்பட தகுந்த ஆலோசனைகள்
  கூட ராஜாஜி சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திக்கற்ற பார்வதி பற்றி நானும் ராஜாஜி குறித்து எழுதும்போது ஒரு facebook பதிவில் எழுதி இருக்கிறேன் அந்த படத்தை நான் பார்த்தும் இருக்கிறேன் அதில் லட்சுமி கதாநாயகி ஒய் ஜி மகேந்திரன் வில்லனாக வருவார் உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்தப் படம் பார்க்க ரொம்பவும் பொறுமை வேண்டும்!!! :))

   நீக்கு
 38. சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தை ராஜாஜிக்குப் போட்டுக் காட்டி அவர் கருத்தை அறிய தயாரிப்பாளர்கள் பெரிதும் விரும்பினர். ராஜாஜி அவர்கள் படத்தைப் பார்த்து ஏதாவது திருத்தங்கள் சொன்னால் அதையும் செய்து விடலாமே என்ற எண்ணமும் அவர்களுக்கிருந்தது. அதற்காக நேரம் ஒதுக்கி விருப்பத்துடன் படம் பார்க்க வந்திருந்தார் ராஜாஜி. படம் ராஜாஜியை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக பரதனாக நடித்திருந்த சிவாஜியின் நடிப்புத் திறமை. தன்னை அழைத்து பெரியவர் ராஜாஜி வாழ்த்தியதைப் வாழ்க்கையில் கிடைத்தப் பெரும் பேறாக சிவாஜியும் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் தமிழாசிரியர் திரு இரா. சங்கரன் அந்தப் படத்தின் காட்சிகளைச் சொல்லி வகுப்பில் சிலாகிப்பார்.

   நீக்கு
 39. நெல்லை, வியாழன் பதிவுகளைத் தொகுப்பதில் 'இண்ட்ரஸ்ட்டிங்காக' என்று நீங்கள் சொல்லியிருப்பதில் தான் விஷயமே இருக்கிறது..
  ஸ்ரீராம், பதிவு எழுத்தாளர் அல்லர். அவர் பத்திரிகை எழுத்தாளர். இதை பலதடவைகள் உணர்ந்து மனசார அனுபவித்திருக்கிறேன். வாசித்து வாசித்து பத்திரிகை எழுத்து அவருக்கு கைவந்த கலையாகியிருக்கிறது.
  விஷயங்களை 'பிரஸண்ட்டேஷன்' பண்ணும் அந்த நேர்த்தி!
  அந்த ஜாலம்!.. லேசில் கைவராத நுணுக்கங்கள் அவருக்கு அத்துப்படி ஆகியிருக்கின்றன. தனக்குத் தானே கற்ற எழுத்துக் கல்வி!..
  இது தான் எழுதுவதில் அவர் வளர்ச்சி. வாழ்த்துவோம். அதுவே மென்மேலும் அவரை வளர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
 40. இந்தப் பதிவில் நான் சுட்டி கொடுத்திருந்த "யார்இசைக்க வருகுவதோ" பாடலைக் கேட்டோர் யாராவது உண்டா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!