ஞாயிறு, 16 அக்டோபர், 2022

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் : தாய்பே பகுதி 2 :: நெல்லைத்தமிழன்

 

(001) தாய்பே Taipei, தாய்வான் –  Taipei Zoo – பகுதி 2

என்னுடைய நான்கு பயணங்களில் மூன்று முறை இந்த உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு தடவை என் மனைவியையும் பசங்களையும் தாய்வானுக்கு வரச்சொல்லி, அங்கு சில நாட்கள் விடுமுறையைச் செலவழித்தோம். குடும்பத்தோடு சென்றபோது, ஒரு மணி நேரம்தான் இங்கு செலவழித்தோம். நான் தனியாகப் போயிருந்தபோது இரண்டு, மூன்று மணி நேரங்களுக்குக் குறையாமல் உயிரியல் பூங்காவில் அலைந்திருக்கிறேன்.

இந்தப் பூங்காவிலேயே, பாண்டாக்களுக்குத் தனி இடம், பெங்குயின்களுக்குத் தனி இடம், அடர்த்தியான மரங்கள், மலைப்பகுதி போன்ற தோற்றம், பாறைப்பகுதி என்று பல்வேறு பகுதிகள் உள்ளன. பூங்காவின் மேப்பை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக நடந்து பார்க்கவேண்டியதுதான். சோலைக்குள் நடக்கும் உணர்வு கிடைக்கும்.

முன்பு சொல்லியிருந்தபடி, பூங்காவிற்கு அருகிலேயே கோண்டாலா எனப்படும் விஞ்ச் ஸ்டேஷன் உண்டு. அதில், மலைகளின் மீது நாம் விஞ்ச் மூலம் பயணித்துப் பரவசமடையலாம். பூங்காவிற்கும் விஞ்ச் ஸ்டேஷனுக்கும் இடையில் பெரிய இசை நீரூற்றுப் பகுதியும் உண்டு. அங்கு விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், மற்ற நாட்களில் மாலையும், இசை நீரூற்று நிகழ்ச்சிகள் நடக்கும்.

தாய்வான் ஒரு ட்ராபிகல் தீவு. காலநிலை நன்றாக இருக்கும். ரொம்ப வெயில் இருக்காது. பாதுகாப்புக்கோ ஒரு குறையும் இல்லை. அதனால் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பதில் சிரமம் ஏற்படாது. எல்லா இடங்களிலும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ்க்கான இடங்கள் உண்டு.

நாம் மற்ற விலங்குகளின் அணிவகுப்பைத் தொடர்வோம்.
















(தொடரும்) 

 

47 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பிறகு வந்து கணினியில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களுக்கான கருத்துகள் சிறப்பு.
      நல்லவேளை வரிக்குதிரை நிறம் கருப்பு வெள்ளையாக இருக்கிறது, கருப்பு சிவப்பாக இருந்தால் ?

      நீக்கு
    2. அந்த வரிக்குதிரைகள் எல்லாம் அதிமுக என்றும், வெள்ளைக்கோடு இல்லாதவை திமுக என்றும் சொல்லிடவேண்டியதுதான். திராவிட வரிக்குதிரைகள் என்றுதான் சொல்லமுடியாது. நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  2. இயற்கை சூழலில் மிக அழகான படங்கள்..

    பதிவு அழகு..

    பதிலளிநீக்கு
  3. ஞாயிறு ஆல்பம் மெருகேறுகிறது. விவரணம் ஓகே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயக்குமார். வித்தியாசமாகத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது

      நீக்கு
  4. நெல்லை அட்டகாசம் போங்க!!! விவரிப்பும். தாய்வான் உயிரியல் பூங்கா பத்தி செம தகவல்கள். ரசித்து வாசித்தேன்.

    ஹைஃபைவ்....நானும் அப்படித்தான் உயிரியல் பூங்காக்குள் சென்றால் மணிக்கணக்காக இருக்க விரும்புவேன் ஒவ்வொன்றையும் நன்றாகப் பார்த்து அதுவும் இப்படி சோலைக்குள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தா.....கேட்கணுமா....கூட யாரேனும் வந்தால் நேரம் செலவிடுவது கம்மிதான், நானும் மகனும் வண்டலூர் தனியாகச் சென்றிருக்கிறோம்...நல்லா எஞ்சாய் செய்தோம்.

    படங்களுக்கு வரேன்....கொஞ்சம் பின்னர்..,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் ரொம்பக் கூட்டமில்லாமல் ஒரு ஒழுங்குமுறையோடு பார்வையாளர்கள் இருந்தால் ரொம்பவே ரசிக்கமுடியும். நம்ம ஊரில் எங்கு பார்த்தாலும் சிப்ஸ் கால பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் என உடனே குப்பையாக்கிடுவாங்க. அத்தகைய போக்கு அங்கு வெகு அபூர்வம்.

      நீக்கு
  5. நல்ல ரசனையோடு படங்கள் வந்திருக்கின்றன. அவற்றுக்கான விளக்கங்களும் கூட அருமையான கற்பனை. இங்கெல்லாம் போகக் கிடைக்காது என்பதால் உங்கள் மூலமே பார்த்துக்கறேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் கால்வலி விரைவில் குணமாகட்டும் கமலா ஹரிஹரன் மேடம். பழைய தொடரை முடிங்க என்று சொன்னால், புதுப் பதிவு தேத்தறீங்க

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. புதுப்பதிவை நான் தேத்தவில்லை. எல்ல்லாம் விதி வசம். தங்கள் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  7. சில இடங்கள் மலேஷியா உயிரியல் பூங்காவை நினைவுபடுத்துகின்றன. வித்தியாசமான கலரில் காண்டாமிருகம்!புகைப்படங்கள் அனைத்தும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நினைவுக்கு வந்தது. நன்றி மனோ சாமிநாதன்.

      நீக்கு
  8. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய ஞாயறையும் அழகான படங்களை தந்து சிறப்பாக்கி விட்டீர்கள். அந்த விலங்குகளுக்கும் ஒரு மனச்சோர்வு இல்லாமல் இயல்பாக இருக்கும் வண்ணம் தாய்பே உயிரியல் பூங்கா ஒவ்வொரு இடமும் இயற்கையோடு ஒன்றியபடி மிகவும் அழகாக இருக்கிறது.

    படங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளது. அவற்றிற்கு நீங்கள் தந்த பொருத்தமான வாசகங்களும் நன்றாக உள்ளது. குளிக்கும் குழந்தைகளை அக்கறையுடன் கரைக்கு அழைக்கும் தாயின் அன்பு வாசகம் மனம் நெகிழ்கிறது. மான்கள் வித்தியாசமாக உள்ளன. எல்லா விலங்குகளும் சுதந்திரமாக உணருவதைப் போன்று தோற்றமளிக்கும் படங்கள் மூலமாக இந்த நாட்டு பூங்காவை நாங்களும் கண்டு களிக்கிறோம்.

    நாங்கள் சென்னையிலிருக்கும் போது வண்டலூர் பூங்காவிற்கு பல தடவைகள் சென்றிருக்கிறோம். இங்கு வந்ததும் பன்னார் கட்டாவுக்கு இரண்டு மூன்று தடவைகள் சென்று பார்த்தாகி விட்டது. இன்னமும் குழந்தைகளுக்காக மீண்டும் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்டலூருக்கு அருகில் பெருங்குளத்தூரில் வசித்ததால், வண்டலூர் பூங்காவிற்கு பசங்க குழந்தைகளாக இருந்தபோது அழைத்துச் சென்றிருக்கிறேன். பன்னர்கட்டாவிற்கும் சென்றுள்ளோம். வெளிநாட்டில் ஒழுங்குமுறை அதிகம் என்பதால் மிகவும் ரசிக்கமுடியும்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. தாய்பே உயிரியல் பூங்கா படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்து இருக்கும் வாசகம் அருமை.
    உடலில் வரிகள் உள்ள மான் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் செம...வரிக்குதிரை, ஆமை அழகோ அழகு!!!

    வண்டலூர், இங்கு பன்னெர்கட்டா, திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா, அமிர்தி (ரொம்ப மோசமாக இருக்கும்) தில்லி உயிரியல் பூங்கா.....மைசூர் உயிரியல் பூங்கா....அங்கு கங்காரு பார்த்திருக்கிறேன். ...பன்னெர்கட்டாவில் சஃபாரியும் பல வருடங்களுக்கு முன், பிடிஎம் லே அவுட்டில் இருந்தப்ப. இப்போது நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உயிரியல் பூங்கா இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டுவிடுவதுண்டு.

    சிங்கப்பூர் உயிரியல் பூங்கா செமையா இருக்கும்....அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் (இருந்ததென்னவோ 9 தே மாசம்தான்...) சின்ன நகரத்துக்குள்ளும் அங்கிருப்பவற்றை வைத்து ஒரு மினி ஜூ இருக்கும். இதை எல்லாம் பார்த்துவிட்டு நம்மூர் உயிரியல் பூங்காவை நினைத்தால் கொஞ்சம் வேதனையாக இருக்கும்....தண்ணீர் நாறும். அங்கு சுத்தம் பராமரிப்பு மரங்கள் அத்தனை நன்றாக இருக்கும்

    நிறைய தீனிக்கடைகள்தான்....குப்பைகளுக்கு தொட்டிகள் வைத்திருக்கிறார்கள் ஆங்காங்கே இப்போது. ஆனாலும் சிலர் போடுகிறார்கள்

    அங்கு விலங்குகளுக்குக் கொடுக்க என்று உணவுகள் வைத்திருப்பாங்க அதை நாம் வாங்கிக் கொடுக்கலாம். அப்படி வாத்துகள் பறவைகளுக்குக் கொடுத்ததுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நம்மிடம் இருப்பதுபோல, வரலாறு, பாரம்பர்யம், காட்சிப்படுத்தத்தக்க, வெளிநாட்டினரை வரவழைக்கத் தக்க சுற்றுலா இடங்கள் பிற நாடுகளில் அனேகமாக இல்லை. நமக்கு அவற்றை இன்னும் சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யத் தெரியவில்லை.

      அவனவன், 300 ஆண்டுகளுக்கு உள்ளான இடங்களை ஏதோ புராதான இடம்போல சுற்றுலா இடமாக மாற்றியிருக்கிறான்.

      நீக்கு
  12. கமென்ட்ஸ் ஹாஹாஹா அதுவும் சீக்கிரம் வாங்கடா கரைக்கு!!!!! கரடிச்செல்லங்களா....தண்ணீர் என்னமா நல்லாருக்கு....இங்கல்லாம் இப்படிப் பார்க்கவே முடியாது.

    ஜூ செமையா சுத்தமா இருக்கு. பளிச்சுன்னு

    வடிவேலு வெற்றிக் கொடி கட்டு? துபாய் போய்விட்டு வந்துட்டு ஊர்ல அலட்டுவாரே...துபாய் ரோட்டை பார்த்திருக்கியால.......ரோட்டை பார்த்தெ ஷ்விங்க் பண்ணி, தலை சீவி சோத்தை கொட்டி...ன்னு பேசுவாரே அது நினைவுக்கு வருது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //துபாய் போய்விட்டு வந்துட்டு ஊர்ல அலட்டுவாரே...// - ஹாஹாஹா. பாரீஸில் நான் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு தெருவில் இரண்டு மூன்று பப்ளிக் டாய்லெட்டுகள் பார்த்திருக்கிறேன். இருந்தபோதும் ஒருவர் தெருவில் பைப் திறந்தார். சட்னு படமெடுக்கலாம் என்று நினைத்தேன். அதுபோல அங்கு ஒரு மேம்பாலம் அருகில் இருந்த தெருக்கள், அதன் முக்குகள் என்று ஒரே குப்பை மயம். பழைய துணி, பேப்பர் குப்பைகள் என்று காற்றில் பறந்தன. அதனைப் படமெடுத்திருக்கிறேனா என்று நினைவில்லை. பார்க்கணும்.

      ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள்தாம். பொதுவா இந்தியர்களிடம் உடல் சுத்தம், வீட்டுச் சுத்தம் நல்லா இருக்கும். பொது இடங்களை மாத்திரம் நாறடிச்சுருவாங்க. ஆனால் வீட்டுக்கு வெளியில் மெழுகி கோலம் போடுவாங்க.

      நீக்கு
  13. எடுப்புச் சாப்பாடு....ஹாஹாஹா இந்தச்சொல் கேட்டு ரொம்ப நாளாச்சு....காலம் கலிகாலம்.....அதுங்களுக்கு மட்டுமா ரெண்டு கால்களுக்கும் பலருக்கும் எடுப்புச் சாப்பாடுதானே பாவம்...

    //மற்றவன் உணவைத் தட்டிப் பறிக்கும் கொடூரன்னு// ஏன் சொலல்ணும் நெல்லை....அது அதன் இயற்கை குணம்..இயற்கையின் படைப்பு.அது என்ன நம்மள மாதிரி ஆறறிவா...இல்லை தத்துவ வகுப்புகளுக்குப் போகுதா....ஆறறிவுங்களே மத்தவனை எப்படா கவுக்கலாம்னு கவுத்துக்கிட்டும் இருக்கான்...அரசியல்வாதிகளை விட இது சிறந்ததுதானே இல்லையா.....எவ்வளவு இன்னசென்டா தூங்குது பாருங்க!!!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைக் குணத்தையே எடுத்துக்கோங்க. நாய் நன்றியுடையது. நிறைய விலங்குகளின் குணமும் தனித்துவமாகத் தெரியும் இல்லையா? நல்லவேளை... மனுசப்பயலுவ இப்படி இருப்பதற்கும் இயற்கைக் குணம்னு சொல்லாம விட்டீங்களே

      நீக்கு
  14. mountain bongo - ஆன்டிலோப் தான்...மலை மான்....அதை டக்குன்னு பார்த்ததும் கண்ணை கட்டி விட்டாப்ல தோற்றம்...(கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்லன்னு ஃபீல் பண்ணுதோ??!!!)

    காண்டாமிருகம் பத்தி கமென்ட் பார்த்ததும்....

    நானும் ஒன்று எழுதி பாதில ...நாய்கள்...ஹூம் எங்களுக்குள்ளயும் ஜாதி பார்த்து இது உசத்தி ஜாதி இது நாடன் நாய் ன்னு உசத்தியானா ஸ்டேட்டஸ் கூடுதல் இப்படி....மனுஷன் புத்தி போகுமா...

    என்னது இன்னொரு ஜாதில பெண் கொடுத்து பெண் எடுக்கமாட்டோமா? அதுவும் அங்கு நடக்கிறதே...

    நீர்யானை ஹாஹாஹாஹா கமென்ட் ரொம்ப ரசித்தேன், நெல்லை...

    ஆமை ஸ்விக்கில வேலை செய்யுதோ...யாரோ குழிப்பணியாரம் ஆர்டர் பண்ணிருப்பாங்க போல எடுத்துட்டுப் போயிட்டிருக்கு!!!!! கஸ்டமர் கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறாரு....!!!!!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்தைப் படித்ததும் எனக்குத் தோன்றியது. மனிதர்களுக்குள்ளே, நான் உன்னைவிடப் பெரியவன் என்று எப்போதும் காண்பித்துக்கொள்ளும் ஆசை இருக்கிறது. அதனால்தான் விதவிதமாக அதனைத் தீர்த்துக்கொள்கிறான். வாடகை வீட்டில் இருப்பவர்களைவிட சொந்த வீடு வைத்திருப்பவன், தான் பெரிய ஆள்னு நினைக்கிறான். சொந்த வீடு வைத்திருப்பவன், என்னோடது 2 கிரவுண்டு, நகரின் மத்தியில் இருக்கிறது என்றெல்லாம் பிறரை விடத் தான் உசத்தி என்று காண்பிக்க நினைக்கிறான். எதை எடுத்துக்கொள்ளுங்கள், பைக், கார் என..எல்லாவற்றிலும் நான் பிறரைவிட உசத்தி என்று காண்பிக்க நினைத்து, அதன்படியே அலட்சியமாக நடந்துகொள்கிறான். 'எதைக் கொண்டுவந்தோம், என்ன கொண்டுபோகப் போகிறோம்' என்பதை மாத்திரம் மறந்துவிடுகிறான் (சும்மா ஆண்களைப் பத்தி எழுதியிருக்கேன்னு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள். பெண்களும் அப்படித்தான், நகை, விதவித உடை.....)

      நீக்கு
    2. படங்களெல்லாம் மிக அழகுஅதன் கருத்துகளும் ருசிக்கும்படி இருக்கிறது. வரவர எனக்கு பின்னூட்டம் கூட ஸரியாக எழுத வருவதில்லை. மன்னிக்கவும். கூடவே வந்த உணர்வு. அன்புடன்

      நீக்கு
    3. உங்களை ரொம்ப நாள் கழித்து இங்கு பார்ப்பது ரொம்பவே சந்தோஷம் காமாட்சியம்மா. நலமா? கோவில் பதிவெல்லாம் பார்த்தீர்களா? சமீபத்தில் திருவண்ணாமலையைக் கடந்துசென்றபோது உங்களை நினைத்துக்கொண்டேன்.

      நீக்கு
    4. நெல்லை உங்களின் முதல் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்

      கீதா

      நீக்கு
  15. ஆவ்வ்வ்வ் இன்று அனிமல்ஸ்:)) ஆகவே போட்டுப் போஸ்ட்டை முடிச்சிட்டார்:)).. மனித மங்களை ரீட் பண்ணத்தெரியுமோ தெரியேல்லை:), ஆனா விலங்குகள் மைண்ட் வொயிஸ் எல்லாம் கரீட்டாக் கேய்க்குதே உங்களுக்கு:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் கடைசிப் பகுதி வரும்னு நினைக்கிறேன். மனித மனங்களை நாம் படிக்க முடிந்தால்...... நிம்மதி கிடைக்குமா? அல்லது நமக்கு நல்லது நடக்குமா?

      நீக்கு
    2. விவேக் கொமெடி பார்த்திருப்பீங்களே.. பெண்கள் நினைப்பதெல்லாம் அவருக்கு கேட்கும் ஹா ஹா ஹா..

      ஊ.குறிப்பு:
      டமனாக்கா என்ன நினைக்கிறாவெனவாவது அறியலாமெல்லோ:))

      நீக்கு
  16. அந்த ரெண்டு காண்டாமிருகமும் அஞ்சுவும் நானுமாக இருக்குமோ எனச் சந்தேகம் வருது ஹா ஹா ஹா ஹையோ அஞ்சு பார்த்தால் அடிக்கக் கலைப்பா:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலங்குகளை நாம் அவற்றின் சூழலில் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கலாம். அதை உசுப்பிவிடுவது, தொந்தரவு செய்யாமல்.

      நீக்கு
  17. இந்த முறை நீங்கள் “செல்லங்கள்” எனச் சொன்னது:).. செல்லங்களைத்தானே?:)).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  18. படங்கள் சூப்பர். நாமும் அழகாக சுற்றி வந்தோம்.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!