வியாழன் பதிவாசிரியரின் கணினி பழுது பார்க்கப் படுவதால், உங்களுடன் இந்த வார வியாழன் அரட்டை அடிப்பவர் உங்கள் கௌதமன்!
(அவசரப் பதிவு) அப்பா.
அரட்டை சம்பந்தமாக யோசனை செய்த போது, இது வெளியிடப்படும் தேதி என்ன என்று பார்த்தேன். அது அக்டோபர் 13.
அக்டோபர் 14 என்னுடைய (KGG) அப்பாவின் பிறந்தநாள். அது மட்டும் அல்ல, அன்று அவருடைய (ரோகிணி) நட்சத்திரப் பிறந்தநாளும் கூட! ( இந்த வருடம் அவர் திதி வருவது அக்டோபர் 15 அன்று.)
அவர் பிறந்தது அக்டோபர் 14 1908. இறந்தது அக்டோபர் 28, 1991.
எனவே அரட்டை சப்ஜெக்ட் ஆக அப்பாவையே எடுத்துக் கொள்ளலாம் என்று யோசனை வந்தது.
அப்பா என்றால் எனக்கு நினைவுக்கு வருவது அவர் தினப்படி செய்த பூஜை. அவர் பூஜை செய்த எல்லா விக்கிரகங்களும் இன்றும் என்னுடன் அவர் நினைவாக இருந்து வருகின்றன.
நான் ஆரம்பப் பள்ளி படித்த காலங்களில் திருச்சி, மதுரை நாகை ஆகிய ஊர்களில் கிளைகள் இருந்த ஜவுளிக்கடை ஒன்றின் ஆடிட்டராக வேலையை பார்த்தவர் என்பதால் அடிக்கடி நாகையிலிருந்து மதுரைக்கு வேலை நிமித்தம் சென்று வருவார்.
அந்த சமயங்களில் அவர் பூஜை செய்யும் சில விக்கிரகங்களை பட்டுத் துணி போர்த்தி, ஒரு சிறிய பெட்டியில் வைத்து, எடுத்துச் செல்வார். அவர் செல்லும் ஊரிலும் வைத்து அவற்றுக்கு காலை நேரங்களில் பூஜை செய்வார்.
வேலை பார்த்த நாட்களில் அவர் லீவு எடுத்தது மிக மிக சொற்பம்தான் என்று நினைக்கிறேன்.
கோபம் வந்து கத்துவது எல்லாம் அம்மாவிடம் மட்டும்தான்! மற்றபடி குழந்தைகளிடம் எப்பொழுதுமே பிரியமாக இருப்பார்.
வாழ்க்கையில் அவருக்கு எவ்வளவோ கஷ்டம் வந்த நேரத்திலும், அவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு, அவ்வப்பொழுது வருகின்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை - அது குழந்தைகளின் படிப்பு / மதிப்பெண் / வேலை குறித்தோ அல்லது உறவினர்களின் குடும்பங்களில் சந்தோஷ நிகழ்வுகளோ - எல்லாவற்றையும் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடுவார்.
சதுரங்க விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. எங்கள் எல்லோருக்கும் சதுரங்க ஆட்டம் சொல்லிக்கொடுத்தவர் அவர். (அம்மாவுக்கும் அந்தக் காலத்தில் சதுரங்க விளையாட்டு சொல்லிக் கொடுத்தாராம். ஆனால் அடிக்கடி சதுரங்கம் விளையாட வா என்று அம்மாவை ஓய்வு நேரங்களில் தொந்தரவு செய்ததால், - அம்மா 'தனக்கு சதுரங்க விளையாட்டு மறந்துபோய்விட்டது என்று பொய் சொல்லி தப்பித்துவந்தார். - இதை என் அம்மா என்னிடம் ஒருநாள் சொன்னார்!)
அதுமட்டும் அல்ல, வீட்டுக்கு வருகின்ற அண்ணனின் நண்பர்கள், ஏன் - பிற்காலத்தில் என்னுடைய வீடு காட்டிய டில்லி பாபு என்னும் மேஸ்திரி - எல்லோருடனும் சதுரங்கம் ஆடுவார்.
விளையாடும்போது - சில சமயங்களில் அவருடைய காய் வெட்டுப்படும் வகையில் வந்துவிட்டால், சில மூவ்களை திரும்ப எடுத்து மாற்றி விளையாடுவார். நமக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், நம்முடைய காய் நகர்த்தலை சில ஆட்டங்கள் பின்னுக்கு வாங்கி, மாற்றி ஆட வாய்ப்பு அளிப்பார்.
பேரன்களுடன் சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு அதிக சந்தோஷம்.
கிரிக்கட்டில் ஆர்வம் உண்டு. முன் காலத்தில் ரேடியோ கமெண்ட்டரி அதற்குப் பின் டி வி யில் ஆட்டம் எல்லாம் ஆர்வத்துடன் கேட்பார், பார்த்து ரசிப்பார்.
அவர் தன்னுடைய அண்ணன் பையனுடனும், மற்றும் தன் அக்கா பையனுடனும் (என்னுடைய மாமனார் ) கார சாரமாக, அனல் பறக்க அரசியல் பேசுவார். அவருக்கு காந்தி, நேரு , ராஜாஜி பிடிக்கும். இந்திரா காந்தியை எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று. கருணாநிதியை அறவே பிடிக்காது! எம்ஜியார் பற்றி அவர் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ ஒன்றும் கருத்து சொன்னது இல்லை.
அப்பா தன் குழந்தைகளைத் திட்டுவது உண்டு - ஆனால் ஒரு நாளும் அவர் எங்களை அடித்தது இல்லை.
அப்பாவுக்கு அவரின் கடைசி காலத்தில் (1991 ல்) இருந்த உறவுகள் : மூன்று பெண்கள், ஆறு பையன்கள், மூன்று மாப்பிள்ளைகள், ஆறு மருமகள்கள். ஒன்பது பேரன்கள். பன்னிரெண்டு பேத்திகள்.
அவருடைய எழுபதாவது வயதில், அவரிடமிருந்து, அவருடைய தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா ஆகியோரின் பெயர்கள், அவர்களுடைய மூதாதையர்கள் பற்றி பற்றி எல்லாம் கேட்டு, ஒரு டைரியில் குறித்துக்கொண்டேன். அவருடைய கொள்ளுத் தாத்தா / கொள்ளுப் பாட்டி தொடங்கி அவர்களுடன் பிறந்தவர்கள் சம்பந்திகள் அவர்களுடைய மூதாதையர்கள் என்று இருநூறுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள், விவரங்கள், உறவுமுறை எல்லாம் அவர் சொல்லியவற்றை குறித்துவைத்துக்கொண்டேன். அந்த விவரங்களை கணினியிலும் ஏற்றி வைத்துள்ளேன்.
அப்பாவிடமிருந்து கற்றவைகளையும் தெரிந்துகொண்டவைகளையும் பட்டியலிட்டால் பெரிய புத்தகமே எழுதலாம்.
(ஆங்காங்கே தூவப்பட்டுள்ள படங்களும் வாசகங்களும் இணையத்திலிருந்து நன்றியோடு சுடப்பட்டவை!)
= = = = = =
வாசகர்களும் தங்கள் அப்பா பற்றி கருத்துரைகள் பதியவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
== = = =
பழைய சமாச்சாரங்கள் ஏதாவது போட்டால்தான் வியாழன் பதிவு முழுமை அடையும் என உள்ளுணர்வு சொல்வதால் ..
ஐம்பது வருடங்களுக்கு முன்பு எம்ஜியார் பேட்டி.
ஆனந்தவிகடன் ஆகஸ்ட் 6 1972.
= = = = = =
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்..
பதிலளிநீக்குநலமே வாழ்க..
வாழ்க..... வாழ்க....
நீக்குவாங்க, வாங்க!
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ சார்... வாங்க..
நீக்குவணக்கம் DS
நீக்குஅப்பா!..
பதிலளிநீக்குஆம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா,... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குநன்றி.
நீக்குஎவ்வளவு தான் சொன்னாலும் மகன்களுக்கு அம்மா மேல தான் மிக்க பிரியம். மகள்களுக்கு அப்பா மேல் பிரியம் அதிகம். சரிதானே?
பதிலளிநீக்குகுடும்ப உறவுகள் மற்றும் நபர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய geni.com உபயோகித்தீர்களா?
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரியை தெரியப்படுத்தவும்
என்னுடைய கணினியும் பழுது. HDD crash.
Jayakumar
1) Oedipus complex?
நீக்கு2) spread sheet
3) engalblog@gmail.com
geni.com is a site like tumblr etc. to keep your family root details in a tree form. it is available since 2009. photos also can be uploaded. anybody in the tree can post updatesin the tree. google for detail.
நீக்குI think I tried that some years back. But the other members were not conversant with the site. So I discontinued!
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குஆங்காங்கே சேர்த்திருக்கும் படங்கள் அவற்றின் விளக்கங்கள் சின்னச் சின்னத்துணுக்குகள் எல்லாமே அருமையாக்ப் பொருந்தி இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குதந்தை சொல் மிக்க மந்திரமில்லை...
பதிலளிநீக்குஆம்! நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅவசர பதிவு என்றாலும், அப்பா பற்றிய நினைவுகள் என்றுமே அளவிட முடியாத ஆனந்தம் தருபவைதான். அம்மா, ஒரு அன்பின் பொக்கிஷம் என்றால், அறிவு என்பதற்கு பொருள் அப்பாதான். இங்கும் காலை வேலைகள்( குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல்) அவசரம் என்பதினால் மீண்டும் வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன் .
நன்றி, மீண்டும் வருக!
நீக்குதந்தையைக் குறித்த பதிவு மனதை நெகிழ வைத்தது ஜி
பதிலளிநீக்குதந்தை ஒவ்வொரு மனிதனுக்கு ஓர் பள்ளிக்கூடம்.
கூத்தாடிகளைக் குறித்த பேட்டி உண்மையை பிரதிபலித்தது.
1) நன்றி.
நீக்கு2) நினைத்தேன்!!
என் அப்பாவின் ச்ராத்தம் வரும் 16ம் தேதி, ஞாயிறு. அம்மாவுக்கும் இந்தத்தடவை இதே மாதம் 28ல்.
பதிலளிநீக்குஎன்ன பொருத்தம் தனுஷுக்குள் இந்தப் பொருத்தம்!!
நீக்குஎம் ஜி ஆர், தாங்கள் இருவரும் நடித்தால் அதனால் வரும் விளைவைப்பற்றி அப்போதே கணித்திருக்கிறார். அப்போதைய ரசிகர்கள் சுபாவம் அப்படி.
பதிலளிநீக்குஇதோ பொ.செ வில் அனேகமாக எல்லா முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்களே
அது அந்தக் காலம்; இது இந்தக் காலம்!
நீக்குபுதன் கேள்வி- இரண்டு முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதுபோல, நடிகைகள் நடித்தால் அப்படி ஏற்படுவதில்லையே. ஏன்? (நல்ல சந்தர்ப்பம் சில பல நடிகைகள் படத்தைப் போடுவதற்கு. நழுவ்விட்டுவிடாதீர்கள்)
பதிலளிநீக்குஆஹா நன்றி!!
நீக்குஆண் என்பவன் வளரும்போது அடுத்த தலைமுறையின் தலைவன். அதனால் அவனுக்கும் அப்பாவுக்கும் வெளிப்படையான நெருக்கம் இருக்காது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே குறைவு. பெண் அப்படியல்ல என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஆம், பொதுவாக அப்படித்தான்.
நீக்குபொதுவாக அப்படிச் சொல்லப்படுவதுதான்....நடப்பதும்தான் என்றாலும், நம் வீட்டில் என் மகனும் அவன் அப்பாவும் நன்றாகப் பேசிக்குவாங்க. நிறைய அறிவியல் ரீதியாகவும், மற்ற விஷயங்களும்னும் ன்னு பேசிக்குவாங்க.
நீக்குகோமதிக்கா மகனும், அவங்க அப்பாவும் நல்ல நண்பர்கள் போல நிறைய பேசிக்குவாங்கனு அக்கா சொல்லியிருக்காங்க.
கீதா
கீதா ரங்கன்(க்கா)..சில கேள்விகளுக்கு சிலர் சொல்லும் பதில் பொருத்தமுடையதல்ல. சில பல ஆண், பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால்தான் இந்த வித்தியாசம் புரியும் (ஏன்..உங்க அப்பா, அவங்க பசங்க இவங்களுக்குள்ளேயே வித்தியாசம் இருக்குமே).
நீக்கு(ஏன்..உங்க அப்பா, அவங்க பசங்க இவங்களுக்குள்ளேயே வித்தியாசம் இருக்குமே).//
நீக்குஇல்லையே நெல்லை. அவருக்கு நாங்கள் இருவருமே ஒரே போலத்தான். பார்க்கப் போனா பையனைத்தான் ரொம்ப சொல்லிக்குவார். அசாத்திய பெருமையும் வேறு. இப்பத்தான் கொஞ்சம் குறைஞ்சுருக்கு.. என் கல்யாணத்துக்கு அப்புறம, அப்பாவை விட அம்மா எங்கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. எனக்குக் கொடுத்துவைக்கல.
என் அப்பா ஒரு பாவப்பட்ட ஜீவன் என்பது மட்டும் சொல்லலாம், அதனாலதான் இங்க கௌ அண்ணா கருத்து கேட்டிருந்தும் இங்கு அப்பா பத்தி கருத்து எதுவும் நான் சொல்லலை.
எங்கள் வீட்டுல எங்க மாமாக்களும் அப்படித்தான் பையனைத்தான் கொண்டாடுவாங்க. இத்தனைக்கும் பெண் குழந்தைகள் இருவர்...
என் மாமா மகனைப் பத்தி அவனை விட அவன் மனைவி....பத்தி எழுதணும்னு நினைப்பதுண்டு. அவன் மகனைப் பத்தியும்...அவங்க சந்தோஷமாக இருக்கணும்னு எப்பவும் பிரார்த்தனை செய்து வாழ்த்திக் கொண்டே இருப்பேன். அத்தனை நல்ல மனசோடு மாமாவுக்கு 90, மாமிக்கு 83...இருவருக்கும் நடமாட்டம் குறைவு ஆனால் அப்படிப் பார்த்துக் கொள்கிறார்கள். சொல்லி முடியாது. இறைவன் அவர்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புகுந்த வீட்டிலும் ஆண் குழந்தைகள் அப்பாவோடு அதிக பாசம். பெண் குழந்தைகள் அம்மாவோடு...
கோமதிக்காவுக்கும் மகள் உண்டே..
கீதா
வெளீல அப்படித்தான் பையனை மெச்சிக்குவாங்க. ஆனால் உதவி செய்வது, அன்போடிருப்பது எல்லாமே பெண் தான். அவங்க மனதளவுல பெண்குழந்தையைத்தான் பிடிக்கும். யாரு இங்க ஆண், பெண் இருவரைப் பெற்றவர்கள்? அவர்கள் கருத்து தெரிவிக்கலாமே
நீக்குஎனக்கு ஒரு பையன், ஒரு பெண். இருவருக்குமே எங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும். எங்கள் இருவரிடமும் நிறைய அன்பாகப் பேசுவார்கள்.
நீக்குஎன் கணவர் இரு குழந்தைகளையும் (மகள் பெரியவள், மகன் அடுத்து) அன்பாய் பார்த்து கொண்டார்கள். இருவரிடமும் சம அன்பு செலுத்தினார்கள் .குழந்தைகளும் எங்கள் இருவரிடமும் அன்பாய் இருக்கிறார்கள். என்னிடம் மனம் விட்டு பேசுவதை விட அப்பாவிடம் உரிமையுடன் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்வார்கள். அப்பாவின் இழப்பு இருவருக்கும் மிகவும் வருத்தம் அதை மறைத்து கொண்டு என்னை உற்சாகபடுத்துவார்கள் பேசி.
நீக்குகீதா சொன்னது போல மகன், மகள் , என் கணவர் மூவரும் எல்லா விஷயங்களும் பேசி கொள்வர்கள். என் பெண் என் கணவரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டாள். நான் அம்மாவிட்டுக்கு, உறவுகள் வீட்டு விழாவிற்கு போய் விட்டால் அப்பாவும் , மகளும், மகனும் மூவரும் சேர்ந்து சமைத்து கொள்வார்கள். ஆனால் எனக்கு ஒரு நாளும் செய்து கொடுத்தது இல்லை என் கணவர். கேட்டால் "நீ நன்றாக சமைப்பாய் என் சமையல் உனக்கு பிடிக்காது" என்று சொல்லி சாக்கு விடுவார்கள்.
நீக்கு:))) கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஎன் அனுபவத்தில், பெற்றோருக்குச் செய்ய நினைப்பவைகளை உடனேயே செய்துவிடவேண்டும். இன்னும் சம்பாதித்துப் பிறகு... என்ற எண்ணம் வந்தால் வாய்ப்பு நழுவிவிடும்.
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குபஹ்ரைனில் ஒருவரைச் சந்தித்தேன். பிறகு அறிமுகப்படுத்திய நண்பரோடு வீட்டிற்கும் விருந்திற்கு அழைத்தேன். என் அப்பாவின் நெருங்கிய உறவினர் என பிறகுதான் தெரிந்தது. எனக்கு என் ரிலேஷனில் பலரும் பழக்கமில்லை. என் மனைவிதான் அதோ அவர் வந்திருக்கிறார், இவர் வந்திருக்கிறார், விசாரிங்க என்று செல்லும் கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூறுவார். எனக்கு யாரிடமும் நெருக்கம் கிடையாது
பதிலளிநீக்குதிருமதிகள் எல்லோருமே இந்த சமாச்சாரத்தில் மிகவும் கெட்டி.
நீக்குஹாஹாஹா மீ - திருமதி - ரொம்பப் புவர்.....ஆனால் எல்லோருடனும் ஹலோ சொல்லுவேன் அவ்வளவே குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக...
நீக்குகீதா
:)))
நீக்குஅப்பா போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குஆம். நன்றி.
நீக்குதந்தைக்கு சமர்ப்பணம் செய்த இன்றைய பதிவு நெகிழ வைத்தது. நல்ல விஷயங்களை, கடந்து போன நல்லவைகளை, உன்னதமான உறவுகளை நினைத்துப்பார்க்க இயலாத மின்வேக வாழ்க்கையில் இன்றைக்கு எல்லோருமே அவரவர் தந்தையைப்பற்றி நினைத்துப்பார்த்திருப்பார்கள். பாசத்துடனும் பெருமையுடனும் ஏக்கத்துடனும் நினைத்துப் பார்த்திருப்பார்கள். அந்த வகையில் உங்களுக்குத்தான் மனதார நன்றி சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குஅப்பாவுக்கான இப்பதிவு மனதை நெகிழ வைத்தது, கௌ அண்ணா. படங்களும் அதில் இருக்கும் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஎம்ஜி ஆர் சொல்லியிருப்பது உண்மைதான்....அதுவும் இப்போது அதீத நடிப்பு எடுபடாது என்பதை அப்போதே சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
பதிலளிநீக்குதானும் சிவாஜியும் சேர்ந்து நடித்தால் என்ன ஆகும் என்று சொல்லியிருப்பது நிஜம்.
இப்போதும் இருவர் சேர்ந்து நடித்தால்... குறிப்பாக அஜித்தும் விஜயும் சேர்ந்து நடிக்க முடியுமா?
கீதா
நடிக்கலாமே... விஜய்க்கு அஜீத் அப்பாவா ஹா ஹா ஹா
நீக்குஹாஹாஹா நெல்லை நீங்க பங்களூர்ல இருக்கறதுனால தப்பிச்சீங்க!!!!!!!
நீக்குகீதா
மலையாளத்தில் மம்மூட்டி, மோஹன்லால், ஃபகத் ஃபாசில் எல்லாரும் சேர்ந்து நடிக்கிறார்கள்...
நீக்குகீதா
சமீபத்தில் அஜீத் தன் மனைவியுடன் ஏர்போர்ட்டில் இருப்பதை காணொளியில் பார்த்தேன். உடம்பை, தோற்றத்தை மெயிண்டெயின் செய்வது ஒரு கலை. பலவித காரணங்களால், அது அஜித்திற்கு இல்லை.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குஅப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தலைவன், ஆளுமை,வழிகாட்டி, பாசம்,கண்டிப்பு என பல்வேறு வடிவங்களில் ...இன்று நினைத்தாலும் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை .
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவை வணங்குகிறோம்.
படங்களும் பகிர்வும் சிறப்பு.
நன்றி.
நீக்குகௌ அண்ணா உங்களுக்கு ஒரு மெயில் கொடுத்திருக்கிறேன்...பார்த்தீர்களா..
பதிலளிநீக்குகீதா
பார்க்கிறேன்.
நீக்குபார்த்தேன்.
நீக்குபதில் அனுப்பியுள்ளேன்.
நன்றி கௌ அண்ணா
நீக்குகீதா
ஐயா தாங்கள் தெரிவித்து இருக்கும் உங்களது அப்பாவின் தேதி என் தாத்தாவின் பிறந்த மற்றும் மறைந்த வருடங்களை அப்படியே ஒத்து இருக்கிறதே! உங்களுக்கு என் அப்பாவின் வயது இருக்குமா!
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவின் வயது என்ன?
நீக்குநம்மை நாமாக்கிய அப்பாவின் பெருமையை நாம் பேசாமல் யார் பேசுவார்கள். அப்படிப் பேசும்போது நமக்குக் கிடைக்கும் மன நிறைவு நமக்கு அமிர்தம் உண்ட மன நிறைவை அல்லவா தருகிறது. அப்பாவின் சதுரங்க விலையாட்டு, அரசியல் நிலைப்பாடுகள், கிரிக்கெட் ஆர்வம், மூதாதையர்களைப் பற்றிய நினைவுப் பரிமாற்றம், அடுத்த தலைமுறையினரிடம் காட்டிய அன்பு....புண்ணியம் செய்த அப்பாவின், புண்ணியம் செய்த பிள்ளையாகி விட்டீர்கள் இந்தப் பதிவின் மூலம்.
பதிலளிநீக்குகூடவே இலவச இணைப்பாக எம் ஜி ஆரின் ன் பக்குவமார்ந்த வார்த்தைகளுடன் ....இரண்டையும் வாசித்த எல்லோரது மனதையும் good olden days il பயணிக்கச் செய்தது அருமை.
துளசிதரன்
நன்றி, நன்றி!
நீக்குபதிவு அருமை. மனதை நெகிழ வைத்து விட்டது.
பதிலளிநீக்குஉங்கள் அப்பாவை பற்றி சொன்னது எல்லாம் அருமை.
பதிவை படித்தவுடன் என் அப்பாவின் நினைவுகள் மனம் முழுவதும்.
இளம் வயதில் இழந்து விட கூடாத சொத்துதான் அப்பா.
என் 17ம் வயதில் அப்பாவை இழந்தேன், என் தம்பி தங்கைகள் மிக சிறு வயதில் .
நான் அப்பாவின் செல்லம். இப்போதும் அப்பா என்றால் கண்கள் குளமாகி விடும்.
என் கணவர் தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பா, நல்ல நண்பர்.
உணர்ச்சி பூர்வமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது. அதற்கேற்ற படங்களும், வாசகங்களும் கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விட்டது.
தங்கள் தந்தையைப்பற்றி பெருமையாக சொன்னது அனைத்தும் உங்களை அவர் எந்த அளவுக்கு பாசத்துடன் வளரர்த்திருக்கிறார் என்பதற்கு சாட்சி. ஒவ்வொன்றையும் ரசித்துப்படித்தேன்.
எங்கள் அப்பாவின் பிறந்த நாளும், மறைவு நாளும் ஐப்பசியில்தான் வருகிறது. அப்பாவின் நினைவுகளால், மனதை கலங்க வைத்த பதிவு.
மக்கள் திலகத்தின் பேட்டி பதில்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரசிப்புக்கு நன்றி.
நீக்கு//அப்பா தன் குழந்தைகளைத் திட்டுவது உண்டு - ஆனால் ஒரு நாளும் அவர் எங்களை அடித்தது இல்லை. //
பதிலளிநீக்குஎன் அப்பாவும் அடித்தது இல்லை. சத்தமாக அதட்டி பேசுவார்கள் அதில் எல்லோரும் "கப் சிப்." சிரிக்க சிரிக்க பேசுவார்கள். ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வரும் போதும், முதல் மாதம் சம்பளம் வாங்கி வரும் போது கை நிறைய எங்களுக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவார்கள்.
எந்த ஊருக்கு சென்றாலும் வித விதமாக டாலர் வைத்த பாசி மணி மாலைகள் வாங்கி வருவார்கள். உடைகள் அழகாய் தேர்வு செய்வார்கள். எல்லோரிடமும் அப்பா நட்பாய் இருப்பார்கள்.
ஆஹா! இனிய நினைவலைகள்!
நீக்குஅவர் பிறந்தது அக்டோபர் 14 1908. இறந்தது அக்டோபர் 28, 1991.//
பதிலளிநீக்குஉங்கள் அப்பா அவர்களுக்கு வணக்கங்கள்.
__/\__
நீக்குஅப்பாவைப்பற்றி சொல்லும் இந்த வியாழன். அதை நான் அர்த்த ராத்திரியில்தான் கவனிக்கிறேன்! இன்று மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இரண்டு செமிஃபைனல்களிலும் (Ind v Thailand, Pak v SL)ஆழ்ந்திருந்தேன். (அது தனிக் கதை. கொஞ்சம் பதிவு போடலாமா என்றும் எண்ணம்). பகல் போய் இரவு வந்ததும்தான் வியாழனே நினைவில் வந்தது!
பதிலளிநீக்கு:)))
நீக்குஅப்பா! அவரின்றி அசைந்திருக்காது இந்த ஜீவன்..
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குஅப்பாவை பற்றிய பதிவு அருமை! பதிவிற்கு அலங்காரமாக வாசகங்களும் அழகு!
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு