வியாழன், 27 அக்டோபர், 2022

இரகசியங்களுக்குள் நான் மௌனம்...

 காலை நேரங்கள் அமைதியானவை என்றுதானே நினைக்கிறீர்கள்?  சாலைக்கு வந்து பாருங்கள்.  அந்நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள் சாலையின் அமைதியைக் கெடுத்தபடி ஓடிக் கொண்டிருக்கும். 


அமைதியான சாலைதானே, அளவான வேகத்தில் செல்லலாம் என்கிற எண்ணம் ஏனோ எந்த வண்டிக்காரர்களுக்கும் வருவதில்லை.  போக்குவரத்துக்கு காவலர் இன்னும் அவரவர் இடங்களை பெறாத நிலையில் காலி சிக்னல்களில் குறுக்கே மறிக்க வண்டி இல்லாவிட்டால் தாண்டிச் செல்லும் வாகனங்கள்.  எங்கள் வண்டியும் அப்படிதான்!
ஆட்டோவின் பின் சீட்டுக்கு அருகில் யானை பிளிறுவது போல ஒரு அலறல் கேட்கும் பாருங்கள்..  திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய வாகனத்தின் இடுப்புப்பகுதி க்ளோசப்பில் தெரியும்.  ஒரு கணம் தூக்கி வாரிப்போடும்.  அனுபவமில்லாத ஓட்டுநர்களாயிருந்தால் தடுமாறித்தான் போவார்கள்.  எங்கேயோ ஒதுங்க அவசரப்படுவது போல நம்மை ஒதுக்கி விட்டு விரைய அவசரப்படுவார்கள்.

சாதாரணமாகவே கொஞ்சமாவது போக்குவரத்து இருந்தால் மனதில் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.  அதிகம் போக்குவரத்து இல்லா சாலையில் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பிக்கும்.
இப்படியான சூழ்நிலையில் ஒருநாள் காலை நான் மறுபடி ஒரு ஆட்டோ விபத்திலிருந்து தப்பினேன்.  முந்தைய சம்பவம் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.  

இதுபோல ஓர் ராட்சத வாகனம் காதுக்கருகில் வந்து அலறியதும் சட்டென முன்னால் போய்க்கொண்டிருந்த வண்டியின் பின்னால் ஒதுங்கி ஸ்லோ செய்தார் எங்கள் ஆ.ஆ.  

ரா வா விலகியதும் மறுபடியும் கிளப்புகிறார்.  வண்டி நகரவில்லை.  எதன் மீதோ ஏற சிரமப்படுவது போல எகிறி எகிறி நின்றது.  இறங்கி மேடு, கல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை.  நானும் இறங்கிப் பார்த்தேன்.  

ஆ. ஆ மறுபடி சீட்டில் அமர்ந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய,  முன் சக்கரம் அப்படியே சற்றே மேலே எழும்பி இறங்க, டயர் தேய்த்துக்கொண்டு கொஞ்ச தூரம் நகர்ந்தது.    

சட்டென பிரேக் வீல் இறுகியிருக்கிறது.  

இதுவே வேகமாக நடுசாலையில் செல்லும்போது, அல்லது வேகத்தடையில் ஏறி இறங்கும்போது ஏற்பட்டிருந்தால் ஆட்டோ தூக்கி அடித்து கவிழ்ந்திருக்கும்.  பின்னால் வரும் ரா வா வந்து மோதி இருக்கும்! கடவுள் கருணை.

உடனே ஊபர் போட்டேன். ஆபீசுக்கு நேரமாகிறதே...!  ஆ ஆ காரர் நான் ஊபர் போடுவது தெரியாமல் வேறு வழியில் வரும் ஆட்டோவை மடக்கப் போனார்.  நான் அவரை நிறுத்தி ஊபர் போடுவதைச் சொன்னேன்.  

எனக்கு ஷெட்யூல் ஆன வண்டி நம்பர் வந்தது.  3035.  டிரைவரிடமிருந்து I AM ARRIVED என்கிற மெசேஜும் தொடர்ந்து அவரிடமிருந்து அழைப்பும் வந்தது.  அப்போது எதிரே ரோட் க்ராஸ் செய்து ஆட்டோ எங்களை நோக்கி வர, அதுதான் எங்கள் வண்டி என்று நினைத்து கை காட்டி ஏறியும் விட்டேன், வண்டி நம்பர் 3505 என்று இருந்ததால்.


என் பின் நம்பர் சொன்னேன்.  அவர் கவலைப் படாமல் ஆட்டோவை எடுத்தார்.  'நான்தான் ஏறிவிட்டேனே, காலை கட் செய்யுங்கள்' என்றேன்.

அவர் போனிலிருந்து அழைத்தது போலவே தெரியாததால் "நீங்கள் ஊபர்தானே?" என்றேன்.   

'இல்லை நான் ஓலா'  என்றார்! 

என்னிடம் 'ஓலா இல்லையே' என்று குழம்பி விட்டு, சட்டென புரிந்து 
'வண்டியை நிறுத்துங்கள்... வண்டியை நிறுத்துங்கள்' என்றேன்.  

அவர் கூலாக "உங்கள் ஊபரில் என்ன வந்ததோ அதையே கொடுங்கள்' என்றார்.  
'பிரச்னை அதுவல்ல.  நான் ஏறாமல் இருக்கும் அந்த ஊபரின் கட்டணமும் என் தலையில் விழும்   முதலில் நிறுத்துங்கள்'  என்று சொல்லி இறங்கினேன்.  

'பின்னே ஏன் கையை ஆட்டி ஆட்டிக் கூப்பிட்டீங்க' என்று கேட்டுக்கொண்டே சாபம் விட்டுக் கொண்டே கிளம்பிப் போனார் அவர்.  

இப்போது அலைபேசியில் நின்றுபோயிருந்த அழைப்பு மறுபடி வரத்தொடங்க, நான் வந்த பாதையை திரும்பி நோக்கினேன்.  அங்கு ஒரு ஆட்டோ நின்றிருக்க, தொலைபேசியை இயக்கி பேசி, அவரை அருகில் வரவைத்து ஏறினேன்.  வண்டி நம்பர் 3035!  என்ன ஒரு குழப்பம்..   

இப்படியா இந்த சமயத்தில் குழப்பும்படி நம்பருடன் இன்னொரு ஆட்டோ வரவேண்டும்!

பின்னர் மாலைக்குமேல் ஆ ஆ சரியாக, மெக்கானிக் சொன்னாராம்,  "நல்லவேளை ரோடோரத்தில் இப்படி ஏற்பட்டதால் தப்பினீர்கள்...  சாலை நடுவில் ஏற்பட்டிருந்தால்....  " என்று.

அதுதான் எனக்குத் தெரியுமே என்று நினைத்துக் கொண்டேன்.

=================================================================================================================

பேஸ்புக்கில் திரு ஜெ. பிரதாபன் அவ்வப்போது சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்.  அவற்றை நான் மட்டும் ரசிப்பதா?  உங்களுக்கும் ரசிக்கக் கொடுக்கிறேன்...

26-10-22/12:04
இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் வியப்பைத்தருகின்றன.
பொன்னியின் செல்வனைப் படைத்தவரின் மறுபக்கம்.
நன்றி :- அறிவு ஜீவி சுஜாதா வாசகர் குழு.
Sometimes, an interesting drama may be enacted within the closed screen...!
"ஆனந்தவிகடன்" இதழுக்குப் தனிப்பெபயரையும், வரவேற்பையும் ஏற்படுத்தியவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்'என்ற நூலில், தினமணிக்கதிர் இதழில் துமிலன் எழுதி வெளிவந்த, அந்த ராஜினாமா சம்பந்தப்பட்ட தகவலை அப்படியே கொடுத்திருக்கிறார்.
பெரும் தேசபக்தரான கல்கி அவர்கள் நாட்டு விடுதலைக்காகப் பலமுறை சிறை சென்றவர். 1940 ன் கடைசி மாதத்தில், முன்னிரண்டு விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றிருந்த கல்கி, அப்போது தொடங்கியிருந்த மூன்றாவது பெரும் போராட்டத்திலும் கலந்து கொள்ள பெரு விருப்பம் கொண்டிருந்தார். அவரை வருத்திக் கொண்டிருந்த ஆஸ்துமா, அந்த பனிக்காலத்தில் கடுமையாக இருந்தது. சிறை சென்றிருந்த அவரது குரு ராஜாஜி அவர்களோ, டாக்டர்களோ அவர் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் கண்டிப்பாய்த் தடுத்திருப்பார்கள்.


யாருடனும் ஆலோசனை கலக்காமல் தாமே தீர்மானம் செய்து கொண்டு மனைவியிடம் மட்டும் ஜாடையாகச் சொல்லிவிட்டு, சத்தியாகிரகம் செய்ய அனுமதி வேண்டி மகாத்மா காந்திக்கு விண்ணப்பம் அனுப்பினார். டிசம்பர் 31 ஆம் தேதி காலையில் காந்திஜியின் அனுமதி, வீட்டு முகவரிக்கு வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்த கல்கி, அந்த விவரத்தை மனைவியிடம் தெரிவித்து, "இனி வாசனின் அனுமதிதான் வேண்டும்" என்று சொல்லிவிட்டு, மனைவியின் திகைப்பு தீருவதற்கு முன்னாலேயே அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட்டார்.
வாசனின் அறைக்குள் கல்கி நுழையும் போது அங்கே அவருடன் துமிலனும் இருந்தார். அவர் போகட்டும் என்று காத்திராமல் பீடிகை எதுவும் போடாமலும்,நேராகவே வாசனிடம் விஷயத்தைச் சொன்னார் கல்கி. இருவருக்கும் இடையே ஐந்து நிமிடம் பேச்சு நடந்தது. அதன் இறுதியில் கல்கி வாசனின் அறையை விட்டுத் தமது அறைக்குச் சென்றார். தமது மேஜையின் இழுப்பறைகளைத் திறந்து தமது சொந்தக் காகிதங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டார். கடைசி தடவையாக எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்துக்கொண்டபோது அலுவலகச் சிப்பந்திகளிலும், அச்சுக்கூடத் தொழிலாளர்களிலும் சிலர், வாசல் படிகளில் திகைப்புற்று நிற்பதைக் கண்டார்.
மறுநாள் புத்தாண்டு தினத்தன்று, வீட்டிலிருந்தபடியே தமது ராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார்.
அதற்கு முந்திய நாள் அந்த ஐந்து நிமிட நேரத்தில், வாசனுக்கும் கல்கிக்கும் நடந்த பேச்சு என்ன என்பதை அப்போது ஒரு சாட்சியாக உடனிருந்த துமிலன், சுயவரலாற்றுப் போக்கில் அமைந்த "நான்+நாற்பது" என்ற தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
"ஒரு பத்திரிகாலயத்தில் திரை மறைவில் சில பெரிய நாடகங்கள் நிகழ்வதுண்டு" என்று தொடங்கி அவர், வாசனிடம் கல்கி தம்மைக் காந்திஜி சத்தியாகிரகத்திற்குத் தேர்ந்தெடுத்து விட்ட செய்தியை அறிவித்ததை அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறார்.
...திரு வாசன் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.
"நீங்கள் உங்கள் பெயரைக் கொடுத்து இருப்பதைப் பற்றி என்னிடம் முன்னாடியே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே!" என்றார் வாசன்.
"நான்தான் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொள்கிறவன் ஆச்சே! அது உங்களுக்குத் தெரியுமே!" என்றார் கல்கி.
"இருந்தாலும் நீங்கள் என்னிடம் முதலிலேயே சொல்லி இருக்கத்தான் வேண்டும். நீங்கள் போன பிறகு பத்திரிகை என்ன ஆகிறதாம்?"
"துமிலன் பார்த்துக் கொள்கிறார்."
"அது எனக்குத் தெரியும். நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பத்திரிக்கையைப் பாதிக்கும். ஏற்கனவே ஒருமுறை அச்சாபீசுக்கு ஜாமீன் கட்ட நேர்ந்தது உங்களுக்குத் தெரியாதா?"
"பத்திரிகை ஆசிரியராக என் பெயர் போடப்படவில்லையே?"
"இருந்தாலும் உங்கள் தொடர்பு இருக்கிறதென்று அரசாங்கத்திற்கும் தெரியாதா?"
இத்தகைய பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருக்க விரும்பாத நான்(துமிலன்) வெளியே போவதற்காக எழுந்தேன். திரு வாசன் என்னை உட்காரச் சொன்னார்.
"என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?" என்று கல்கி பச்சையாகக் கேட்டார்.
"நீங்கள் போராட்டத்தில் சேரப் போவதில்லை என்று காந்திஜிக்கு எழுதி விடுங்கள்."
"அது நடக்காத காரியம்!"
"அப்படியானால் பத்திரிக்கையுடன் தற்காலிகமாக உங்கள் தொடர்பு இல்லாமல் செய்து கொள்ளுங்கள்."
"ராஜினாமா செய்யச் சொல்கிறீர்களா?"
"ஆமாம்" என்றார் திரு.வாசன்.
"சரி; சிறை சென்று வந்த பிறகு பதவியை ஒப்புக்கொள்கிறேன்" என்றார் கல்கி.
"அதைப்பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்!" என்று திரு.வாசன் நிதானமாக கூறினார்.
இதுதான் நடந்தது. கல்கி அவர்கள் சத்தியாகிரகத்தில் சேர காந்திஜி அநுமதியளித்தும், வாசன் அவர்களின் அநுமதி பெற முடியாததால் பதவியில் இருந்து விலக நேர்ந்தது என்பதுதான் முற்றிலும் உண்மை.
"விகடனின் வளர்ச்சியையே வாழ்க்கை லட்சியமாக கொண்டு, அதற்குச் சீரும் சிறப்பும், பேரும் பெருமையும் தேடிக் கொடுத்த கல்கிக்கு, கடைசி ஒரு மாதச் சம்பளத்தை மட்டுமே கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டார் வாசன். அதன் மூலம் அவர் புலப்படுத்தியது என்ன? பணம் கடுத்தம் அல்ல. கல்கியின் மீது அப்போது கொண்ட மனக் கடுத்தமே!" (சுந்தா)
1940 ஆம் ஆண்டு 'பொல்லாத 40' ஆக இருந்தாலும் அதுவே தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் யோக காலமாய் அமைந்து விட்டது. இல்லாவிட்டால் 'கல்கி' என்ற பெயரில் இதழ் ஒன்று தோன்றியிருக்குமா? முதல் வரலாற்றுத் தொடர் கதையாக 'பார்த்திபன் கனவை' இலக்கிய உலகம் அடைந்திருக்க முடியுமா?
தாம் விலகியதைப் பற்றி கல்கி அவர்கள் 'கல்கி' முதல் இதழில் எழுதுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அடுத்தடுத்த இதழ்களிலும் எழுதவில்லை.காரணம் கேட்ட வாசகர்களுக்குப் பதிலாக அவர் கூறியது இதுதான்.
'இரகசியங்களுக்குள் நான் மௌனம்' என்கிறார் கிருஷ்ண பகவான். அந்த வகை இரகசியம் தான் இதுவும்!

====================================================================================================

அடுத்த வாரம் மழை 2 கவிதை வருமா என்று கீதா ரெங்கன் கேட்டிருந்தார். ஆனால் தற்சமயம் அவர், கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்ட தன் தந்தைக்கு துணையாக மருத்துவமனையில் இருப்பதால் இதை வாசிக்க ப்ரமேயமில்லை என்றாலும் நான் வெளியிட்டு விடுகிறேன்!


=========================================================================================

யார் இவர் என்று தெரிகிறதா?


=======================================================================================

போரில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த வீரரை, திரு லால்பகதூர் சாஸ்திரி வந்து பார்த்தார். படுக்கையிலிருந்து எழக்கூட முடியாமல் உணர்வற்றிருந்த அவரின் தோள்களுக்கு கீழே கையைக் கொடுத்துத் தூக்கி நலம் விசாரிக்க, பாரதப் பிரதமரிடமிருந்து இப்படி ஒரு கவனம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று நெகிழ்ந்து போனாராம் அந்த வீரர்.

உயரமான மனிதர்

==============================================================================================

சென்ற வாரம் நெல்லையை நினைத்துக் கொண்டே நான் பார்த்த சீரிஸ்! குறுகிய நிமிடங்களைக் கொண்டு சட்சட்டென அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு ஓடிய இந்த சீரிஸில் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று கடைசி வரை எதிர்பார்த்தேன். செமையாக கொண்டு வந்து முடிக்கப் போகிறார்கள் என்றும் எதிர்பார்த்தேன்.


================================================================================================

பொக்கிஷம்...
 
இந்த எழுத்தாளர் பெயர் ஆர்வி என்று தெரிகிறது. இவர் எழுதிய இந்தப் படைப்பும் எனக்குத் தெரியாது!இவர் பெயரும் அப்படியே. கொஞ்சம் கான்ட்ரவர்ஸியல் எழுத்தாளர் என்ற அளவில் நினைவிருக்கிறது. ஏதோ சண்டை போய்க்கொண்டிருந்தது. துக்ளக்கில் கடிதங்களுக்கு மேல் கடிதங்களாக பதில்கள் ஓடிக்கொண்டிருந்தன!


காந்திஜி பற்றி இரண்டு செய்திகள்... அவர் விடுதலையை பாரதமாதா கொண்டாட, அவரோ...


சோகமான நிகழ்வு....

டண்டடைங்.........

பிரிட்டிஷ் அரசுக்கு பேஜாரு.......

96 கருத்துகள்:


 1. ஆட்டோக்கள் என்றாலே அலர்ஜியாகி விட்டது எனக்கு. ஓலா தான் எப்போதும் என் சாய்ஸ். இருந்தாலும் அரைக் கி.மீ. தூரத்திற்கெல்லாம் என்ன செய்வது என்பது யோசனை. முன்பெல்லாம் நடை தான். சென்னைத் தெருக்களில் நடப்பதை விட ஆட்டோவே மேல் என்று ஆகிப்போச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். ஓலா, ஊபர், ரேபிடோ எல்லாவற்றிலும் ஆட்டோ உண்டு!

   நீக்கு
  2. எனக்கு விபத்து நேர்ந்தது ஓலா ஆட்டோவில் தான்.
   நான் ஓலா காரைச் சொன்னேன்.

   நீக்கு
  3. ஸ்பீட் ப்ரேக்கரின் மீது வேகமாக ஏற்றி இறக்கியதால் பின் மண்டையில் பலமாக அடிபட்டு இடது பக்க தோள், கை பாதித்தது எனக்கு. நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு.

   நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

   ஆட்டோவில் சென்ற போது தற்செயலாக தங்களுக்கு நடந்த விபத்தை படிக்கவே கஸ்டமாக உள்ளது. இப்போது பரிபூரணமாக நலமடைந்து விட்டீர்களா ஜீவி சகோதரரே.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்

   நீக்கு
  5. ஆம் ஜீவி ஸார்.. உங்களுக்கு விபத்து நடந்தது எனக்குத் தெரியும். அதுவும் காம்பவுண்டுக்குள்ளேயே..

   நீக்கு
  6. தங்கள் விசாரிப்புக்கு மிக்க நன்றி சகோதரி.
   இது நடந்து ஒரு வருடமாகிறது. இப்போ எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம். தொடர்ந்து நடைப்ப்யிற்சியம் இடது கை அசைவுகளுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கவலை வேண்டாம், சகோ.

   நீக்கு
  7. ஆமாம், ஸ்ரீராம்.
   நான் சென்னை வந்ததும் நேரில் சந்திக்கலாம்.

   நீக்கு
 2. ஆட்டோக்காரர் மேல் தான் தவறு. சாதாரணமாக முன் சக்கர பிரேக்கை போட மாட்டார்கள். எப்படியோ தப்பித்தது தம்புரான் புண்ணியம். 

  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வரும் என்று தோன்றுகிறது. JP ஒன்றைத் தொடக்கி சில கட்சிகள் உருவாகக் காரணமானார். அத்தகைய JP போல் ஒருவர் வரும் காலம் அடுக்கிறது. 

  முயற்சித்தும் பாட்டுக்குப் பாட்டு தோன்றவில்லை. தோன்றிய கருத்தை சும்மா வார்த்தைகளை மடக்கிப் போட்டு கருது எழுதுகிறேன். 

  இளைய பட்டாளம் 
  இந்த தளத்திற்கு 
  எப்போதும் வருவதில்லை 
  வரும் பெரியவர்களோ 
  இளமைக்கு திரும்பப் போவதில்லை. 
  பின் யாருக்கு இந்த 
  இளமை சுகம். 
  முதுமை சுகம் 
  என்று உண்டாயின் 
  கூறலாம் அதையும். 

  ஓ அடுத்த வியாழன் முதல் துப்பறியும் சாம்பு ஒவ்வொரு வாரமும் வருவாரா?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன் சக்கர பிரேக்போடவில்லை.  வண்டியை மறுபடி கிளப்ப ஆக்சிலரேட் செய்தார்.  போகவில்லை.  அப்போது கோளாறு என்ன என்று பார்த்தபோது புரிந்தது!

   JP  - சுவாரஸ்யமான பகிர்வுகளை அவர் கொடுக்கும்போது அவற்றை இங்கும் பகிர கை அரிக்கிறது!

   // ஓ அடுத்த வியாழன் முதல் துப்பறியும் சாம்பு ஒவ்வொரு வாரமும் வருவாரா? //

   ஹா...  ஹா..  ஹா...

   நீக்கு
  2. எபியில் வெளியான என் கதைகளை அப்பப்போ படித்துப் பாருங்கள், JC.
   இளமையின் கூத்தாட்டத்திற்கு என்றுமே நான் குறை வைத்ததில்லை.

   எபியும் சிறு குழந்தையில்லை. 'நான் வளர்கிறேனே, தம்பி' என்று சொல்வதற்கான ஊட்டச்சத்து வேண்டும்.
   ஆக்கபூர்வமான வளர்ச்சியை இப்பொழுது தப்ப விட்டு விட்டோமானால் பின் எப்போதுக்கும் இல்லை என்றாகிவிடும்.காலத்தின் தேவை இது. தவற விட்டால் நூற்றோடு நூற்றொன்று.

   நீக்கு
 3. அறிவுஜீவி சுஜாதா வாசகர் குழுவா?
  சுஜாதா வாசகர்கள் இப்படியா நீட்டி முழக்கிக் கொண்டு பெயர் கொள்வார்கள்?..
  நறுக்குத் தெரித்தாற்போல சுஜாதாவின் துடிப்புக்கு ஏற்ற மாதிரி
  குழுவுக்கு பெயர் வைத்துக் கொள்ளத் தெரியவில்லை, பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ஹையோ. சுஜாதாவுக்குத் தான் அறிவுஜீவி பட்டம். குழுவிற்கு அல்ல. அடுக்களையில் கஞ்சி வடிக்கும் சுஜாதாவிற்கும்  எழுத்தாளர் சுஜாதாவிற்கும் வேற்றுமை காண்பிக்கவே அடைமொழி. 
   Jayakumar

   நீக்கு
  2. நான் சொன்னது ஸ்ரீராமிற்குப் புரியும்.
   :))

   நீக்கு
  3. க்ரூப்கள் பெருகப் பெருக பெயர் என்ன வைத்துக்கொள்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை..

   நீக்கு
 4. துமிலனுக்கு தினமணிக்கதிர்.
  சுந்தாவுக்கு கல்கி.
  இவர்களில் எவராவது ஆவியில் இந்த கல்கி சமாச்சாரத்தை எழுதியிருந்தாலும் அதை ஆவி வெளியிட்டிருக்கும். அந்த அளவுக்கு அந்தக்கால ஆவி
  சில விஷயங்களில் ஒளிவு மறைவற்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்னியின் புதல்வரில் இந்தப் பகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

   நீக்கு
 5. கல்கிக்கு விகடனில் நேர்ந்தது சரி.
  இதே மாதிரி வேறொன்றுக்கு கல்கி பத்திரிகையில் நா.பார்த்தசாரதிக்கு நேர்ந்தது தெரியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியானால் பத்திரிகையில் பணியாற்றுபவர் வெளியேறினால் அவர் வேறு ஒரு பத்திரிகை துவங்கிவிடுவார் என்கிறீர்களா?தீபம் நா பார்த்தசாரதி, சாவி சாவி,இதயம் பேசுகிறது மணியன். 

   அது சரி மாலன் ஏதாவது பத்திரிகை தொடங்கினாரா? Jayakumar

   நீக்கு
  2. தெரியாது. தீபம் உதயமாக அதுதான் காரணமா?

   நீக்கு
  3. மாலன் ஊரில் இருக்கையில் "திசைகள்" என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். எத்தனை பேர் அறிவார்கள்? திசைகள் மாலன் என்றே பெரும்பாலும் எழுதி வந்திருக்கேன்/கோம். என் மன்னிக்குப் பரிச்சயமானவர். ஞானியையும் சின்ன வயசில் இருந்தே தெரியும். சித்தப்பா அப்போதெல்லாம் அவரை எங்கே சென்றாலும் கூடவே அழைத்துப் போவார். அவர்/ஞானி என்னையும் அக்கா என்றே கூப்பிட்டிருக்கார்.

   நீக்கு
  4. மாலன் திசைகள் தொடங்கியபோது அதில் இணைய எங்கள் அண்ணனை உட்பட பல கையெழுத்துப் பத்திரிகைக்காரர்களை அழைத்தார்.  முன்னதாக அவரவர் கையெழுத்துப் பத்திரிகை பிரதிகளை அனுப்பப் சொல்லிக் கேட்ட நினைவு. நான் அண்ணன் எல்லோரும் கையழுத்துப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தாலும், அண்ணன் அவர் நடத்திய வசந்தம் பத்திரிகையை மாலனுக்கு அனுப்பி இருந்தார். திசைகளில்தான் சுஜாதாவின் திமலா வெளியானது.  

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  சாலை வாகனங்கள் பற்றி நீங்கள் சொன்னது சரியானதுதான். பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன்தான் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் அன்று விபத்து நேராமல் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி கூறுவோம். இப்போதும் தங்களுக்கு உடல்நல குறைவென சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் பதிவில் பார்த்ததும் உடனே இங்கு வந்தேன். தாங்கள் உடல்நல குறைவு ஏதுமின்றி பரிபூரணமாக குணமாக இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இங்கு எங்கள் வீட்டிலிருந்து ஒரு கி. மீட்டருக்குள் அருகிலேயே இருக்கும் எங்கள் பேத்தியின் பள்ளிக்குச் செல்ல இந்த ஓலாவில் ரூபாய் நூறுக்கு மேல் சார்ஜ் ஆகிறது. அதுவும் தினமும் நாங்கள் அவசரமாக புக் செய்கிறோம் என்ற காரணத்தால் ரூபாய் அறுபதிலிருந்து ஏற்றி, ஏற்றி நூற்றி பத்து என ஆட்டோ மீட்டர் போல வேகமாக ஏற்றியது கொடுமை. இப்போது சாதாரண ஆட்டோவில், இரண்டு கி. மீ க்கு முப்பது ரூபாய்க்கான என்ற கணக்கில் தொகை கொடுத்து பள்ளிக்கு அந்த ஒரு கி மீ கடந்து சென்று வருகிறோம். குழந்தையால் அவ்வளவு தூரத்தை காலை அவசரத்தில் நடந்து கடக்க இயலாது. என்ற காரணத்தால் இந்த அவஸ்தை. என்ன செய்வது.. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பெல்லாம் வீட்டு வாசலுக்கு வந்துவிடும், சேர்ந்துவிடும் என்பதால் ஓலா புக் பண்ணிக்கொண்டிருந்தேன். ஒரு நேரத்தில் ஓலா, 50 ரூபாய் மார்ஜின் வைப்பதைப் பார்த்து, பொடி நடையாக வளாகத்திலிருந்து வெளியில் வந்து ஆட்டோ பிடிக்கிறேன். பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டர்தான் என்பதால் பர்சுக்குப் பழுதில்லை. 30-40 ரூபாய் ஆகும் இடத்திற்கு, 96,99 ரூ என்று ஓலாவில் வருவது சகஜம்தான்.

   நீக்கு
  2. /பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டர்தான் என்பதால் பர்சுக்குப் பழுதில்லை. 30-40 ரூபாய் ஆகும் இடத்திற்கு, 96,99 ரூ என்று ஓலாவில் வருவது சகஜம்தான்./

   ஒரு கி. மீட்டர் கூட ஆகாத இடத்திற்கு செல்ல 30 தே அதிகம் என நான் நினைக்கிறேன். சரி.. வேறு வழியில்லை அதுதான் போகட்டும் என்றால். 100ம் அதற்கு மேலும் என்றால் அதிகந்தானே என நான் தினமும் சொல்லுவேன். அதனால் போகும் போது இந்த ஆட்டோ பயணம் குழந்தையை பள்ளிக்குள் விட்டு வரும் போது நடராஜா சர்விஸ் என இப்போதைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. நன்றி.

   நீக்கு
  3. கிலோமீட்டருக்கு மினிமம் இவ்வளவு என்று நிர்ணயிக்கிறார்கள். நமக்குதான் கட்டுபடியாவதில்லை! இப்போது அதுவே பழைய ரேட், போதாது என்று ஆட்டோக்காரர கள் கொடி பிடிக்கிறார்கள்.

   நீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 10. அன்பின் ஸ்ரீராம் ..

  உடல் நலத்தைக் கருத்தில் கொள்ளவும்..

  பதிலளிநீக்கு
 11. // கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்ட தன் தந்தைக்கு துணையாக தற்சமயம் கீதா ரங்கன் அவர்கள் மருத்துவமனையில் இருப்பதால்..//

  என்னென்ன கஷ்டங்கள்..
  எத்தனை எத்தனை சோகங்கள்?..

  இறைவா அனைவரையும் நல்லவிதமாகக் காப்பாற்று!..

  பதிலளிநீக்கு
 12. இருபது வருடங்களுக்கு முன்பு சென்னைக்குள் ஆட்டோ பயணம்.. அப்போதே அதில் மனம் லயித்ததில்லை.. இப்போது சென்னையே பிடிப்பதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு சென்னை உணவகங்கள், தேவையான கடைகள் பிடிக்கும். ஆனால் கும்பகோணம், மன்னார்குடி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அங்கேயே இருந்துவிடுவோமா என்று தோன்றும்.

   நீக்கு
  2. அலுத்துப்போன பயணங்கள். கடைத்தெருக்களிலும் நாட்டமில்லை.

   நீக்கு
  3. எனக்கும் சென்னை எக்காரணத்தினாலோ சின்ன வயசில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டது. என்றாலும் அங்கே தானே முதல் குடித்தனமே!

   நீக்கு
  4. எனக்கும்! பிடிக்காத சென்னையில்தான் என் பெரும்பாலான வாழ்க்கை!

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  மழைக் கவிதை நன்றாக, அருமையாக உள்ளது. பசுமை மிகுந்த இயற்கை அழகும் நிறைந்து, தாரையாக கொட்டும் மழையை ரசிப்பதற்கு ஏற்றபடி இருக்கும் அந்த இடத்திற்கே சென்றது போன்ற ஒரு இன்பம் கவிதையை படிக்கும் போது மனதில் ஏற்பட்டது ரசித்துப் படித்தேன்.

  "இளமை நில்லாது. யாக்கை நிலையாது.வளமையும் செல்வமும் நலம் ஒன்றும் தாராது. " என்ற வரி அனுபல்லவியில் வரும் "பழனிமலை முருகா.. பழம் நீ திருக்குமரா" என்ற சீர்காழி அவர்களின் அருமையான பாடலும் நினைவுக்கு வந்தது (நாளைய தனிப்பாடல் இப்போதே சிந்தைக்குள் வந்து விட்டது. ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா. இளமையில் ரசித்தால்தான் உண்டு...

   நீக்கு
 14. கீதா ரங்கன்(க்கா) அப்பாவிற்கு வந்த பிரச்சனை, நேரம் சரியில்லாத்தால்தான். எதிர்பாராமல் இந்தப் புதுப் பிரச்சனை கீதா ரங்கனுக்கு வந்தது வருத்தம்தான்.

  உங்களுக்கு என்னாச்சு ஶ்ரீராம்?

  பதிலளிநீக்கு
 15. கல்கி ராஜினாமா விஷயம் முன்பே எங்கோ படித்திருக்கிறேன். கல்கியின் தேச சேவைக்காக வண்டலூரைத் தாண்டிய இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் அரசாங்கம் கொடுத்ததை கல்கி ராஜேந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

  பதிலளிநீக்கு
 16. கல்கி ராஜேந்திரன், சில தனிப்பட்ட விஷயங்களுக்காக சில காலம் கருணாநிதி ஜால்ராவாக இருந்ததும் நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்கி எழுத்து அரசுடைமை, கல்கி ஸ்டாம்ப் வெளியீடு என்று பல காரணங்கள் இருந்திருக்கலாம். பிறகு சட் என்று நடுநிலைக்குத் தாவி, கருணாநிதியின் வெறுப்பைச் சம்பாதித்தார்

   நீக்கு
  2. மவுண்ட்ரோட் மகாவிஷ்ணுவுக்கே நிரந்தர ஆதரவு தராதவர் முன்னாள் முதல்வர்!

   நீக்கு
 17. எழுத்தாளர் ஆர்வி அவர்களுடம் மிகவும் நெருக்கமான பழக்கம் எனக்குண்டு. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது அவரைப் பார்க்கப் போய் விடுவேன். அவர் வீடும் மிக அருகிலிருந்தது வசதியாகப் போய்விட்டது.
  கலைமகள் கி.வா.ஜ., மஞ்சரி தி.ஜ.ர. கண்ணன் ஆர்வி மூவரும் எழுத்துலக மும்மூர்த்திகள்.
  20க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களை கண்ணன் பத்திரிகையில் எழுத வைத்து அறிமுகப் படுத்தியவர் அவர். லெமன், குருமூர்த்தி, ஜோதிர்லதா கிரிஜா, அம்பை போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தமிழ் எழுத்துலகில் ஒரே நேரத்தில் நான்கிற்கும் மேற்பட்ட தொடர்கதைகளை எழுதிய ஒரே எழுத்தாளர் அவரே. அவரின் எழுத்து பாதிப்பில் தான் என் புனைப்பெயரையும் அவர் எழுதிய காலத்திலேயே வைத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  சகோதரி கீதாரெங்கன் அவர்கள் அப்பாவுக்கு தீடிரென நேர்ந்த பிரச்சனை படித்ததும் மனதை வருத்துகிறது. கூடிய விரைவில் அவர் பூரண நலமடைந்து வீடு திரும்ப இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவரின் ஆரோக்கியத்தையும் நலமாக்க இறைவன் துணை புரிய வேண்டும். 🙏.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. எனக்கு இதுவரை ஊபர், ஓலா, முக்காபுலா அனுபவங்கள் வந்ததில்லை ஜி

  பதிலளிநீக்கு
 20. R.V is a popular children literature Author. I can remember one of his book ' Asattup pichchu '. Hema Anantha theerthan is a novelist in 70s. Some of his novels are available even now.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,
   ஆர்வி நிறைய சமூக நாவல்கள் எழுதியிருக்கிறார். சரித்திர நாவலையும் அவர் விட்டு வைக்கவில்லை.
   எழுத்தாளர் ஆர்வி என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். விக்கி இணைப்பில் நான் ஆர்வி பற்றி எழிதிய ஒரு கட்டுரையம் காணக் கிடைக்கும். சுதேச மித்திரனும் கல்கியும் அவர் ஆஸ்தான பத்திரிகைகள். கல்கி என்றால் ஓவியர் லதா தான் அவர் நாவல்களுக்கு படம் வரைவார்.

   நீக்கு
 21. இந்த ஓலா, ஊபர் வண்டிகளெல்லாம் நாங்க பதிவு செய்து கொண்டு போனதே இல்லை. ஓரிரு முறை முயன்றும் சரியாக வரலை. கான்சல் என்றே செய்தி வந்தது. ஆனால் பணம் கட்டணும்னும் சொன்னாங்க. மொபைலுக்கு வந்திருக்கும். யார் மறுபடி எல்லாம் போய்ப் பார்த்தது? அப்படியே விட்டுட்டேன். தம்பி பையர் மறுபடி நீங்க புக் செய்தால் முந்தைய பாக்கியையும் சேர்த்துப்பாங்க என்று சொன்னார். ஆனால் சுத்தமாக அந்தப் பக்கமே போவதில்லை. இங்கே பிரபலமாய் உள்ள ரெட் டாக்சி தான். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் எனப் பாக்கேஜ் இருக்கு. எங்களோட தேவைக்கு ஏற்ப எடுத்துப்போம். பிரச்னை இல்லை. வெளியூர் போனாலும் அப்படியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொன்று. இங்கு கூட பாஸ்ட் ட்ராக் எல்லாம் உண்டு. ஓலா ஊபர் பற்றி உங்கள் சகோதரர் சொல்லி இருப்பது சரி.

   நீக்கு
  2. தம்பி இல்லை/ தம்பி பையர். இங்கே இப்போது சுத்தமாய் ஃபாஸ்ட் ட்ராக்கே இல்லை. ரெட் டாக்சி மட்டும் தான் இருக்கு. முன்னால் எல்லாம் ஃபாஸ்ட் ட்ராக்கில் தான் போவோம். அம்பத்தூரில் இருந்தவரை எங்க அழைப்பை எடுத்ததுமே எங்கேனு சொல்லுங்க சார்! வண்டியை அனுப்பறோம் என்பாங்க ஃபாஸ்ட் ட்ராக்கில். அந்த அளவுக்குப் பயன்பட்டது.

   நீக்கு
 22. முன்னரே எழுதி இருக்கேன். என்றாலும் மறுபடி எழுதறேன். ஆர்வி எங்க சம்பந்திக்கு மாமா முறை. எங்க பையர் நிச்சயதார்த்தத்துக்கு அம்பத்தூர் வந்திருந்தார். நாங்களும் அவர் வீட்டுக்குப் போயிருக்கோம். அவர் மாப்பிள்ளை "மாயவரத்தான்" என்னும் பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய "திரைக்குப் பின்னால்" நாவல் தான் பின்னாட்களில் அமிதாப் பச்சன்/ரேகா நடிச்சுத் திரைப்படமாக வந்ததுனு நினைக்கிறேன். அதைப் பற்றி அவரிடம் பேசும்போது சாவகாசமாகப் பேசலாம் என்றார். ஆனால் மறுபடி சந்திக்கவே முடியலை.

  ஹேமா ஆனந்ததீர்த்தன் கொஞ்சம் பச்சை/பச்சையாக எழுதுவார். அவருக்கும் ரசிகர்கள் இருந்தனர். அவரோட ஒரு கதையை துக்ளக்கில் விமரிசிக்கையில் அவரையும் பற்றி விமரிசிக்கப் பின்னர் நடந்தவை தான் நீங்க குறிப்பிட்ட சொற்போர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   நீங்க ரெண்டு பெரும் உறவுக்காரரா?  என்னிடம் தேடிப்பார்த்தால் பைண்டிங்குகளில் ஆர்வி எழுதிய சில சிறுகதைகள் அகப்படலாம்.  எப்போதாவது கிடைத்தால் செவ்வாயில் பகிர்கிறேன்!

   நீக்கு
  2. ஹேமா ஆனந்ததீர்த்தன் சண்டை என்னிடம் பைண்டிங்கில் உல்ளது!

   நீக்கு
  3. இம்மாதிரி உறவை எங்க உறவு வட்டத்தில் "ஆச்சாளு உறவு" என்போம். ஆனாலும் அவர் என்னை சம்பந்தி அம்மா என்றே அழைத்துக் கொண்டிருந்தார். :) கடைசி நாட்களில் எனக்கு உடம்பு ரொம்ப முடியாமல் (ஆஸ்த்மா பிரச்னை) இருந்ததால் போயே பார்க்கலை.

   நீக்கு
 23. கீதா ரங்கன்/தி/கீதா எனக்குத் தகவல் தெரிவிக்கையில் நான் அவருக்குத் தான் விபத்துனு நினைச்சுட்டேன். பின்னர் தான் புரிஞ்சது பெரியவருக்கு என்று. இப்போத் தான் வீடு மாற்றி வந்தார். வந்த உடனே இந்தப் பிரச்னை/ என்னவோ ஆண்டவன் சோதனைகளின் காரணம் மட்டும் நமக்குப் புரிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரி, உங்கள் கால் வலி எப்படி இருக்கு கீதா அக்கா? நீங்க எப்படி இருக்கீங்க?

   நீக்கு
  2. கால் வலி கொட்டு மேளத்தோடு அவ்வப்போது வரும்/போகும். மருத்துவர் இப்போ நடக்க வேறே சொல்லி இருக்கார். நடை பழகிக்கொண்டிருக்கேன்.

   நீக்கு
 24. ஸ்ரீராம் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். முடிஞ்சால் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் தங்கி முழு ஓய்வு எடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் தங்கி //.... ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா?... வீட்டில் தங்கி, இன்னும் பத்து வாரங்களுக்கு வரும்படியாக வியாழன் பதிவுகள், வெள்ளி பாடல்கள் தயார் செய்வாரோ?

   நீக்கு
  2. மருத்துவ விடுப்பு ஏராளமாக பாக்கி வைத்திருக்கிறேன் எனினும் தற்சமயம் எடுக்க முடியாத நிலை!  ஆளில்லை!

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.. நெல்லை... ஸ் சரியாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!

   நீக்கு
 25. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 26. காலை நேரம் அமைதியா? பரபரப்பு நிறைந்த நேரம் ஸ்ரீராம்.
  பள்ளிக்கு போகும் குழந்தைகள், அலுவலகம் செல்லும் மக்கள்
  கூலி தொழிலாளிகள் என்று அனைவரும் பர பரப்பாக ஓடி கொண்டு இருக்கிரார்கள். வாகனங்கள் அதிகமாகி விட்டது. நடப்பவர்களும் சாலையை கடக்க மிகவும் கஷ்டபடுகிறார்கள் .

  //வேகத்தடையில் ஏறி இறங்கும்போது ஏற்பட்டிருந்தால் ஆட்டோ தூக்கி அடித்து கவிழ்ந்திருக்கும். பின்னால் வரும் ரா வா வந்து மோதி இருக்கும்! கடவுள் கருணை.//

  கடவுளின் கருணையால் நல்லபடியாக தப்பித்தீர்கள்.படிக்கவே மனம் பதறுகிறது. வீட்டை வீட்டு வெளியே போய் வீடு திரும்புவது என்பது இறைவனின் கருணை என்று ஆகி விட்டது. ஒருத்தரை ஒருத்தர் முந்த எடுத்து கொள்ளும் வேகம் பயத்தை தருகிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லும் காலை நேரம் நான் சொல்லும் காலை நேரத்திலிருந்து மாறுபட்டது கோமதி அக்கா.  நான் சொல்லும் காலை நேரம் காலை ஐந்தே முக்காலுக்கு மேல் ஆறரை ஆறே முக்காலுக்குள்!

   இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் புதிய வாழ்க்கை!  நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
  2. காலை நேரத்து அமைதி பிரம்ம முஹூர்த்தத்தில் காணக் கிடைக்கும். அதற்குச் சற்றே பின்னால் கருக்கிருட்டு கவிந்து கொண்டு பின் மெல்ல மெல்ல சாம்பல் வெள்ளையாகி முழு வெள்ளையாகும் அதிகாலை நேரத்து அமைதி மனதையும் அமைதிப்படுத்தும்.

   நீக்கு
  3. ஆட்டோ/பேருந்துகளில் இப்போல்லாம் அதிகம் போவதில்லை என்றாலும் காரில் செல்லும்போதும் கவனமுடன் இல்லை எனில் இந்த ஸ்பீட் ப்ரேக்கர்களில் உடலே மேலெழுந்து பின் கீழிறங்கும். உலுக்கி விடும்.

   நீக்கு
 27. இரகசியங்களுக்குள் நான் மௌனம்' என்கிறார் கிருஷ்ண பகவான். அந்த வகை இரகசியம் தான் இதுவும்!//

  கல்கி அவர்கள் சொன்னது சரிதான். சில நேரம் மெளனம் நல்லது.
  மழை படமும், கவிதையும் அருமை.
  மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

  ஸ்ரீராம் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
  கீதா ரெங்கன் அப்பா அவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும். ஸ்ரீராம் நீங்கள் ஆட்டோவில் போனபோது ஏற்பட்ட கஷ்டத்தை சொன்னீர்கள். கீதாரெங்கன் அப்பாவிற்கு நடந்து போனபோதும் பிறால் ஏற்பட்ட விபத்தை என்ன சொல்வது.!

  நேரமும் நல்லா இருக்கவேண்டும் என்று தான் தோன்றுகிறது.

  சாரின் சித்தப்பா மகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் உடல் நலக்குறைவால். நலமாக வேண்டும் . இறைவன் எல்லோரையும் நலமாக வைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரின் சித்தப்பா மகளும், கீதா ரெங்கன் அப்பாவும் விரைவில் நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

   நீக்கு
 28. நான் சொல்லும் காலை நேரம் காலை ஐந்தே முக்காலுக்கு மேல் ஆறரை ஆறே முக்காலுக்குள்!//

  ஆமாம் , தெரிகிறது ஸ்ரீராம். இங்கு காலை 5.30க்கு அலுவலகம் கிளம்பும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் காலையே 4.30க்கு சமையல் வேலை நடக்கும்.வெகு தூரம் அலுவலகம், பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகாலை போகிறார்கள். முன்பு டெல்லியில் இப்படி தான் இருக்கும், இப்போது எல்லா இடமும் இப்படி இருக்கிறது.அதிகாலை பயணம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 29. ஆட்டோ கவிழாமல் நீங்கள் தப்பியதே பெரிய செயல் .

  வாசன் கல்விக்கு கூறியதை இப்பொழுது தான் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!