திங்கள், 10 அக்டோபர், 2022

"திங்க" க்கிழமை :  தஞ்சாவூர் வாழைக்காய் பொரியல்   -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 தஞ்சாவூர் வாழைக்காய் பொரியல்..

( இதற்கும் படங்கள் இல்லை.. அவசர கதி..)

தஞ்சாவூர் வாழைக்காய் பொரியலில்  இரண்டு வாழைக்காய்களைத் தான் சொல்லியிருக்கின்றேன்.. 
இங்கே ஒன்று கூடுதலாக இருக்கின்றது..   சமாளித்துக் கொள்ளவும்..


செய்முறை:

மொந்தன் வாழைக்காய் - 2
தேங்காய் - 1 கப் (துருவியது)
வீட்டில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் - 1/4 tsp
கடுகு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
வற மிளகாய் - 3
நல்லெண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு

((கடலைப் பருப்பு வேணாமா?..
வேண்டாம்!..))

வாழைக்காய்களின் தோலைச் சீவி  விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உடனடியாக தண்ணீரில் போடவும் .. இல்லையேல் கறுத்து விடும்..

வாழைக்காய் துண்டுகளை ஒரு முறை தண்ணீரில் கழுவிய பின் அரை டம்ளர் ( தமிழர் அல்ல) தண்ணீருடன் மஞ்சள் தூள்,  தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

வாழைக்காய் சிறிது நேரத்திலேயே வெந்துவிடும்..  எனவே, கவனித்து  அரை வேக்காட்டிலேயே எடுத்து விடவும்..

வாழைக் காய்களை வடிகட்டி எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்..

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை ஊற்றி அது காய்ந்ததும் மிளகாய் களைக் கிள்ளிப் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அரை வேக்காட்டில் வடி கட்டி எடுத்த வாழைக்காய் துண்டுகளைப் போட்டு ஒரு சுழற்று சுழற்றி ஒரு நிமிடம் ஆனதும் தேங்காய்த் துருவலையும் போட்டு பக்குவமாகக் கிளறி மூடி வைத்து விடவும் .. 

மேலும் ஒரு நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்..

இதுவே.. - அதற்கப்புறம் வழக்கமான பாட்டு தான்!..

இந்தப் பக்குவம் எல்லாருக்கும் தெரிந்தது தானே!.. 

ஆனால், 
இது தஞ்சையின் கைப்பக்குவம் என்பது தெரியாது அல்லவா!..

அதற்காகத் தான் இது!..

***

76 கருத்துகள்:

 1. கடவுள் வாழைக்காய், வெண்டைக்காய் போன்றவற்றைப் படைத்திருப்பதன் காரணம், கடகடவென ஒரு கரேமது செய்துவிடலாம் என்பதால்தான்.

  இன்றைய வாழைக்காய் பொரியலும் வாழைக்காய் படங்களும் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக சமையலுக்கு மொந்தன் வகை வாழைக்காய்களே சிறந்தவை..

   நீக்கு
  2. ஆமாம் துரை அண்ணா அடுத்த கருத்தாக நான் சொல்ல வந்தேன் இதுகண்ணில் பட்டுவிட்டது!!ஃப்

   கீதா

   நீக்கு
  3. நாட்டுக் காய் என்போம் எங்க ஊரிலே. இதுவும் பிஞ்சாக இருந்தாலே இந்தக் கறி நன்கு குழைந்து வரும். இல்லைனா நடுவில் வெந்திருக்காது. அழுத்தமாக இருக்கும்.நான் பெரும்பாலும் கச்சல் வாழைக்காயே வாங்குவேன் வயிற்றுப் புண்ணிற்கு நல்லது என்பதால். வாயுவும் அண்டாது. ஒரு சிலர் வாழைக்காய் என்றாலே வேண்டாம் என்பார்கள். அவங்க கூட தைரியமாகச் சாப்பிடலாம். முற்றிய நாட்டு வாழைக்காயில் பொடிமாஸ், வாழைக்காய்ப் பொடி (பிசைந்து சாப்பிட) நன்றாக இருக்கும்.

   நீக்கு
  4. வாழையின் துவர்ப்பு பலவகையிலும் உடலுக்கு நல்லது.. இன்று கூட மதியம் வாழைக்காய் புளிக் குழம்பு தான்...

   நீக்கு
  5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

   நேற்றைய உங்கள் பதிவுக்கு இன்று தாமதமாக வந்து அதற்கான காரணம் கூறி கருத்து தெரிவித்திருக்கிறேன். தாமதமானதற்கு மன்னிக்கவும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். .

   நீக்கு
 2. யாரேனும் சிலர் வந்து, ஒஆழைக்காய்களை வைத்து என்ன என்ன செய்யலாம் எனப் பல்வேறு செய்முறைகளை எழுதி, தி பதிவுக்கு அவசர செய்முறைகளை அனுப்புவதை இயஙாத்தாகச் செய்யாதிருக்கவேணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நெல்லை? சொன்னால்தான் என்னவாம்னு கேட்கிறேன். ஏன் செத்தல் மிளகாய் இலங்கை மசாலா பொடி போட்டுச் செய்வம் என்று சொல்றவங்க சொன்னா தெரியாதவங்களுக்கு ஏதோ ஒரு வகைல பயன்படும்தானே!!!!!

   எத்தனை எளிமையான குறிப்புகள் வந்தாலும் பல இளைஞர்கள் அதாவது சமையல் செய்து சாப்பிடும் ஆண்கள், பெண்கள் தனியாக இருப்பவர்கள் (இப்போதும் சமைத்துச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்) அவங்க பாத்துப்பாங்கல்ல...ஸ்ரீராமோ தயிர் சாதம் குறிப்பு கூட அனுப்பலாம்னு சொல்லிருக்கிறாரே!!!!

   கீதா

   நீக்கு
  2. தி பதிவுக்கு அவசர செய்முறைகளை அனுப்புவதை இயஙாத்தாகச் செய்யாதிருக்கவேணும்.//

   இதை நான் வேறு அர்த்தம் கொண்டு மேலே சொல்லியிருக்கிறேனோ அது என்ன சொல்?!!!!!

   கீதா

   நீக்கு
 3. தென்றலோடு உடன் பிறந்த திங்களின் கிழமை...

  அன்பின் வணக்கங்கள் அனைவருக்கும்..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 4. துரை அண்ணா அருமையான எளிமையான ஒரு குறிப்பு!!!

  மொந்தன் வாழைக்காய் என்று பெயர் கேட்டு எவ்வளவு நாளாச்சு!! ஊரில் இருந்தவரை வீட்டில் மொந்தன் வாழை இருந்தது. எனவே சல்லிசாக மொந்தன் வாழைக்காய் குறிப்புகள் செய்வதுண்டு. திருவனந்தபுரத்தில் இருந்த போதும் அப்படியே. மொந்தங்கா என்று வீட்டில் சொல்வதுண்டு. இங்கும் கிடைக்கிறதுதான்.

  ஆனால் நான் சொல்வது மொந்தன் என்ற சொல் பற்றி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழைப்பழங்களிலேயே சிறப்பானது மொந்தன் வாழைதான். விளையும் இடங்களில் 2-3 ரூபாய்தான். நம் கையில் வரும்போது 10-15 ரூபாயாக ஆகிவிடுகிறது.

   சின்ன வயதில், என் அப்பா, ஒரு தார் வாங்கி வைத்துத் தொங்கவிடுவார். காலையில் எழுந்ததும் ஒரு வாழைப்பழம், அதில் நாங்கள் குழித்துக்கொண்டதும் தேன் விட்டுச் சாப்பிட்டது நினைவில் வருகிறது.

   இப்போ சாப்பிடும் தேனும் ஒரிஜனலான்னு எப்போதுமே சந்தேகம். வாழைப்பழம் கேட்கவே வேண்டாம்.

   நீக்கு
  2. ஆமாம் நெல்லை. இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பழம்.

   எங்கள் வீட்டிலும் மொந்தன் தார் தொங்கும்...தேன் ஆமாம்....மார்த்தாண்டம் தேன் வாங்குங்கள் நெல்லை...அது ஒரிஜினல்தான்...என்னுடன் படித்த நண்பர் பீ கீப்பிங்க் கோர்ஸ் முடித்து மார்த்தாண்டத்தில் வேலை செய்தார். அவர் சொல்லியிருக்கிறார். காதியில் கிடைக்கும்.

   துளசி வீட்டில் இப்போதும் வீட்டிலேயே தேனீ வளர்த்து தேன் எடுக்கிறார்கள். நான் சென்ற போதெல்லாம் எனக்குக் கிடைத்துவிடும். இப்போது செல்லமுடியவில்லையே.

   கீதா

   நீக்கு
  3. துளசி வீட்டில் வாழை, பலா, மா என்று எல்லாமே வீட்டில்...

   கீதா

   நீக்கு
 5. எபி ஆசிரியர்களே.....பாருங்கள் கருத்துகள் ஓடி ஒளிகின்றன....யார் ஃப்ரீய்யாக இருக்கீங்களோ எடுத்து இங்குப் போடுங்கள் ப்ளீஸ்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. இக்கறியில், வறுத்த நிலக்கடலைப் பொடி சேர்த்துச் செய்கிறார்கள் சிலர் வறுத்த எள்ளும்...பொடித்துச் சேர்த்து...குறிப்பாக ஆந்திரக்காரர்கள். நானும் செய்திருக்கிறேன். அதுவும் நன்றாகவே இருக்கின்றது.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நான் இணையத்திலேயே இல்லை. எதுக்கு வம்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க வந்தாலும் வராவிட்டாலும் வம்புக்கு இழுப்போமே... பயந்து ஓடினால் விட்டுவிடுவோமா?

   நீக்கு
  2. இல்லை, நீங்கள்தான், வாழைக்காயில் நீண்ட துளை செய்து, அதில் மசாலாப் பொருட்களை உப்போடு சேர்ந்து அடைத்து அரை மணி வைத்திருந்து, வேக வைத்து, பிறகு எண்ணெயில் சிறிது முழு வாழைக்காயையும் வதக்கி, வட்ட வட்டமாகத் திருத்திச் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் என்று எழுதினால், நாங்கள்தாம் வேண்டாம் என்று சொல்லிடப்போறோமா என்ன?

   நீக்கு
  3. கீசா மேடம்... நான் விழுப்புரத்திலிருந்து சேனை (2 1/2 கிலோ 50 ரூ) வாங்கிவந்தேன். சிவப்பா இருக்கு திருத்தினா. ரொம்ப அரித்தது. அதனால் நேற்றுப் பண்ணினதைத் தூரப்போட வேண்டியதாகிவிட்டது.

   எப்படி உபயோகிக்கலாம்? என்ன என்ன செய்யலாம்? கூட்டைத் தவிர்த்தால் சந்தோஷம்.

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிவப்பு சேனையை யார் வாங்கச் சொன்னாங்க? ஓ முழுதாக இருந்ததா? சேனைக்கிழங்கை நான் முழுதாக வாங்குவது இல்லை...

   கீதா

   நீக்கு
  5. சொல்கிறேன் நெல்லை...என்ன செய்யலாம் என்று...இப்போது கொஞ்சம் பிஸி வேலை

   கீதா

   நீக்கு
  6. நெல்லை, நேற்று எப்படிச் செய்தீங்க?

   கை அரிக்கமல் இருக்க - கிழங்கை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிவிட்டு தோலை நீக்கி காயை உங்களுக்கு வேண்டிய சைசில் நறுக்கிய பிறகுதான் தண்ணீரில் கழுவ வேண்டும் கை உட்பட. நறுக்கும் போதே கழுவினீங்கனா கை அரிக்கும். இது சின்னதான அரிப்புக்கு. கையில் தே எண்ணை தடவிக் கொண்டும்நறுக்கலாம்.

   தொண்டை வரை அரிக்காமல் இருக்க. பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தோல் எடுத்துவிட்டு புளியைக் கரைத்து நீரில் ஒரு மணி நேரம் போல ஊறவைக்கவும் அல்லதுபுளித்தா மோரில் ஊற வைக்கவும் அதன் பின் கழுவி விட்டு உங்களுக்கு வேண்டிய சைசில் நறுக்கிக் கொண்டு செய்யலாம். இதெல்லாம் அரிக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே. அரிப்பு சிறிதாக இருந்தால் புளித்தண்ணீர் தெளித்து வேக வைத்தோ வறுத்தோ செய்யலாம்.

   மற்றொறு முறை வெட்டிய துண்டுகளை கொஞ்சம் நீரில் போட்டுக் கொதி வந்ததும் அணைத்துவிட்டு அப்படியே கொன நேரம் வைத்து நீரை வடித்துவிட்டுச் செய்வது. இது நான் கூடியவரை செய்வது இல்லை. சத்து வீணாகிவிடுமே என்று.

   எலுமிச்சை சாற்றில் பிசிறி வைத்து அதன் பின் கழுவியும் செய்யலாம்.

   கீதா

   நீக்கு
  7. தி/கீதா எல்லாமும் சொல்லிட்டாங்க. இருந்தாலும் அரிசி கழுவிய கழுநீரில் சேனையை வேக வைச்சுப் பாருங்க. அப்படியும் அரிப்பு எடுத்தால் தூக்கிப் போட வேண்டியது தான். இங்கே திருச்சியில் சேனை, பிடி கருணை இரண்டுமே கொஞ்சம் காறல் இருக்கத்தான் செய்கிறது. சென்னையில் சேனைக்கிழங்கு நன்றாக இருக்கும். வேகவிட்டுக் கொட்டிக் கொண்டு மிவத்தலோடு ஜீரகம் தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்சியில் அல்லது அம்மியில் நடத்திக் கொண்டு தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு இந்தத்துருவலையும் போட்டுப் பிரட்டிக் கொண்டு வெந்த சேனைக்கிழங்கையும் போட்டுப் பிரட்டி எடுக்கலாம்.
   கொதிக்கும் வெந்நீரில் மிளகு, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துச் சேனைத்துண்டங்களைப் போட்டுச் சிறிதுநேரம் வைத்துப் பின்னர் வடிகட்டிக் கொண்டு ஈரம் போனபின்னர் வறுவலாக வறுக்கலாம். சேனைக்கிழங்கு துவையல், மசியல் பண்ணலாம்.

   நீக்கு
  8. ஆம்மாம் கீதாக்கா மி வ, ஜீ, தே து போட்டு - தண்ணீர் விடாமல் அரைத்து அல்லது சதைச்சு என்று நாங்கள் சொல்வதுண்டு இதை சாய்ச்ச கறி என்று சொல்வதுண்டு...இது தே எ யில்தான் செய்ய வேண்டும் செம சுவையா இருக்கும்.

   பாருங்க நெல்லை கீதாக்கா கூடுதல் டிப்ஸ் கொடுத்துருக்காங்க....நோட் பண்ணிக்கோங்க!!!!!!!! இதை ஒழுங்கா வாசிக்காம கீதாக்காட்ட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிக்காம இருங்க!!!

   கீதா

   நீக்கு
  9. @நெ.த///
   சேனைக் கிழங்கு என்பது கருணைக்கிழங்குதானே, அவ்ளோ மலிவாகவா கிடைக்குது, இங்கு கிலோ 7.99 பவுண்டுகளுக்கு கிடைக்குது எங்கட தமிழ்க் கடையில்.. என் யூரியூப் சனலில் போட்டிருக்கிறேன் ரெசிப்பி:)).

   அதை வெட்டும்போதும், கழுவும்போதும் கட்டாயம் கிளவுஸ் போட வேண்டும், இல்லை எனில் ஒரு பொலித்தீன் பையைக் கட்டிக்கொண்டாவது வெட்டலாம், அதுவும் இல்லை எனில் மேலே கீதா சொன்னதைப்போல, கைகளை நன்கு எண்ணெயில் தோய்த்தபின்பு வெட்ட வேண்டும், இது மிகவும் சுவையான அருமையான கிழங்கு அதைப்போய் எறிஞ்சிட்டீங்களே கர்ர்ர்ர்ர்:))..

   நீக்கு
  10. கருணைக்கிழங்கு என்றும் சொல்கிறார்கள் அதிரா. ஆனால் கருணைக் கிழங்கு என்பதுபிடி கருணையைத்தான் சொல்வது.

   இது ஆங்கிலத்தில் எலிஃபென்ட் யாம். ...உங்க யுட்யூபில் போட்டிருக்கீங்க...பார்த்தேன் க்ளவுஸ் போட்டு வெட்டியது கூட வந்ததே!!!! அதையும் சொன்னீங்கதானே!!! பாருங்க நான் உங்க யுட்யூபை தவறாமல் பார்க்கிறேன்னு ஆவணம் ஆக்கிட்டேன்!!!!!

   கீதா

   நீக்கு
  11. பாகிஸ்தான் பார்டர் தொட்டதுக்கு அப்புறம் காணலையே...வந்திருக்கிறதோ வீடியோ? எனக்கு இப்போதெல்லாம் ஏன் என் பாக்சிற்கு வருவதில்லை என்று தெரியலை

   கீதா

   நீக்கு
  12. அந்தக் கிழங்குதான் கீதா, அதைவிட வேறு வகையும் உண்டோ? எனக்கு தெரியவில்லை, வெட்டும்போது கைதானே கடிக்கும், சமைத்தபின் எந்தப் பிரச்சனையும் இல்லைத்தானே..

   ஹா ஹா ஹா நீங்க ஒழுங்காக பார்க்கிறனீங்கள் எனத் தெரியும் என் வீடியோக்கள்.. அதுக்கு மிக்க நன்றி.
   இல்லை பாகிஸ்தானைத் தொட்ட அதிர்ச்சியில் இன்னும் புதுசு போடேல்லையாக்கும் ஹா ஹா ஹா.

   ஊர்ப்பட்ட வீடியோக்கள் இருக்குது கீதா, கன்னாபின்னாவென எடுத்திருக்கிறேன், போன ஜனவரியில் இருந்து, ஆனா எடிட் பண்ணிப் போட நேரமும் மனமும் சரியாக அமையும்போதுதான் கடகடவெனப் போட்டு விடுகிறேன். திரும்படியும்:) பெட் பட்டினை அமத்தி.. ஓல் all என்பதைக் கிளிக் பண்ணி விடுங்கோ சனலில், அப்போதான் அனைத்தும் வரும் என நினைக்கிறேன்.

   நீக்கு
  13. //க்ளவுஸ் போட்டு வெட்டியது கூட வந்ததே!!!!// அதுக்கு முன்னால, நகங்களுக்கு பாலிஷ் போட்டு, கைகளில் மெஹந்தி டிசைன்லாம் போட்டு, அதற்குப் பிறகு கையில் க்ளவுஸ் போட்டுக்கொண்டு வெட்டணுமோ? சந்தேகம் வந்ததால் கேட்டேன்

   நீக்கு
  14. //சேனைக் கிழங்கு என்பது கருணைக்கிழங்குதானே, அவ்ளோ மலிவாகவா கிடைக்குது, இங்கு கிலோ 7.99 பவுண்டுகளுக்கு // பொதுவா ஜனவரில, சேனை (கருணைக்கிழங்குன்னு இதைச் சொல்லிட்டு, கருணைக்கிழங்கை பிடி கருணைன்னு சொல்றவங்க இருக்காங்க), சேப்பங்கிழங்கு மிகவும் மலிவாகக் கிடைக்கும் (சிறுகிழங்கும்). இப்போ கிலோ 50 ரூபாய். அப்போ 30 ரூபாய்க்குக் கிடைக்கும். விழுப்புரத்தில் எனக்கு 2 1/2 கிலோ 50 ரூபாய்க்குக் கிடைத்தது.

   நீக்கு
  15. @ நெ த
   ///கைகளில் மெஹந்தி டிசைன்லாம் போட்டு, அதற்குப் பிறகு கையில் க்ளவுஸ் போட்டுக்கொண்டு வெட்டணுமோ? சந்தேகம் வந்ததால் கேட்டேன்////

   இனித் தமனாக்காவை:)) உள்ளே இறக்கினால்தான் சரி:)).. சே சே.. வியாளக்கிழமை ஸ்ரீராம் ஒரு தமனாக்கா படம் போட்டாரெனில் நன்றாக இருக்கும்:)), ஆனா அவருக்கு எப்பூடி மனம் வரும்.. குண்டு அனுக்காவைத்தவிர அடுத்தவரின் படம் போட:)).. ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு.. ஓடிடுறேன்:))

   நீக்கு
 8. வாழைக் காய்களைப் பற்றி பல பதிவுகளே எழுதலாம்...

  ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகை..

  ஆள் பற்றாக்குறை எதிர்பாராத இயற்கை சீற்றம்...

  பிரச்னைகள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வாழைக்காய்க் கறிக்கு காயை வேகவிடும்போது கொஞ்சம் போல் நீர்க்கப் புளி ஜலம் சேர்த்து வேக விட்டால் சுவை கூடும்.

   நீக்கு
  2. அதே அதே கீதாக்கா...சொல்ல நினைத்துவிட்டுப் போச்சு...

   கீதா

   நீக்கு
  3. புளியை இறுக்கமாகக கரைத்து விட்டு செய்திருக்கின்றீர்களா?..

   நீக்கு
  4. இல்லை. புளியை எப்போவுமே நீர்க்கவே தான் கரைப்பேன். அதிகம் புளியைச் சேர்ப்பதும் உடல்நலத்திற்கு ஒத்துக்கறதில்லை. ரசம், சாம்பார் என்றால் கூட நீர்க்கக் கரைத்துத் தான். பருப்புச் சேர்த்து அரைச்சுவிட்டால் சேர்ந்துக்கும். ரசம் தெளிவாகவே இருக்கணும். அடியில் பருப்புக்கரைசல் தங்காமல் இருக்கணும். ஆகவே பருப்பைக் கரைத்துக் கொண்டு அந்த நீரைத்தான் ரசத்திற்கு விளாவுவேன்.

   நீக்கு
 9. அனைவருக்கும் காலை வணக்கம். வாழைக்காய் பொறியல் சுவை! மொந்தன் வாழை என்று எப்படித் தெரியும்? எனக்கென்னவோ பொரியல் என்றால் அது தேங்காய் போட்டது என்பது போல தோன்றுகிறது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மொந்தன் வாழை என்று எப்படித் தெரியும்?// - நல்லவேளை.. எந்த வாழையை வைத்து பஜ்ஜி போடுவதுன்னு கேள்வி கேட்கலை. கொஞ்சநாள் பஜ்ஜி போடாமலிருந்தால், எந்த வாழைக்காய்னு மறந்துமா போகும்?

   நீக்கு
  2. கிடைக்கும் வாழைக்காயில் நான் பஜ்ஜி போடுவேன். நன்றாகத் தான் இருக்கும்.

   நீக்கு
  3. மொந்தன் காயில் பஜ்ஜி போட்டால் அருமையால இருக்கும்..

   நீக்கு
 10. ஆஹா! என் கருத்து வந்து விட்டதே..??!! மேற்கண்ட பெயரில்லாதவள் நான்தான். 

  பதிலளிநீக்கு
 11. சுருக்கமான செய்முறை விளக்கம் நன்று.
  இதேபோல்தான் தேவகோட்டையிலும் செய்வோம் ஆனால் அதற்கு நான்கு வாழைக்காய் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///ஆனால் அதற்கு நான்கு வாழைக்காய் வேண்டும்.

   //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி இது என்ன புயுக் கொயப்பம்:))

   நீக்கு
  2. பெரிய குடும்பம் என்றால் நாலு காயும் போதாது தான்..

   நீக்கு
 12. எங்கள் தளத்தில் நாங்கள் இடையில் லீவு போட்டாலும் பதிவுகள் போடுகிறோம் தான். இது பார்க்காதவங்களுக்கு ஒரு நோட் அவ்வளவுதான்!!!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா லீவில இருந்தாலும் பதிவு போட்டால் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே.. தெரியாததுபோல இருக்கினமோ :)).. நான் நைட்டே பார்த்தேன் கீதா, இன்னும் வரவில்லை .. வந்திடுவேன்:))

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய தஞ்சை கைப்பக்குவமான வாழைக்காய் பொரியல் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் செயல்முறையில் அருமை.

  வாழைக்காயை எப்படி வேண்டுமானாலும் (தேங்காய் மட்டும் சேர்த்து, இல்லை, அது இல்லாமல் வெறும் காரப்பொடி, தனியா தூள் கலந்து, இல்லை அதனுடனே தேங்காயையும் சேர்த்து வதக்கி) பொரியல் செய்து சுவைக்கலாம். வாழையின் துவர்ப்பு இனிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு நல்லது. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // வாழையின் துவர்ப்பு இனிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு நல்லது. பயனுள்ள பதிவு..//

   உண்மை உண்மை தான்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 14. வாழைக்காய்ப் பொரியல் ரெசிப்பி வித்தியாசமாக, நன்றாக இருக்கிறது, படம் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...

  நாங்களும் சமையலுக்கு மொந்தன் வாழைக்காய் மட்டும்தான் வாங்குவோம், அதிலும் சாம்பல் மொந்தன் எனத்தான் பார்த்து வாங்குவோம், அதுதான் சுவை அதிகம். சாம்பல் மொந்தன் எனில் காய்கள் சாம்பல் நிறத்தில் .. அதாவது மெல்லிய திருநீறு பூசிய கலராக இருக்கும், பச்சையாக இருக்காது, அவைதான் நல்ல மாச்சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பாதொ அ! கிராமத்தில் எங்கள் வீட்டில் இருந்த அந்தக் காய் அப்படித்தான் இருக்கும் ஒரு சாம்பல் பூசியது போல...அது எங்கள் ஊர்ப்பக்கங்களில் கிடைக்கிறது ஆனால் இங்கெல்லாம் பச்சையாகத்தான் கிடைக்கிறது. கேரளத்துக் கடைகளில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்

   கீதா

   நீக்கு
  2. இருக்கிறது மான்செஸ்டரில். அங்கு வாழைக்காய் கிடைப்பதே அபூர்வம். இதுல சாம்பல் மொந்தனாம், திருநீறு பூசியிருக்குமாம்.. ஹா ஹா ஹா.

   வெளியூரில் இருந்துவிட்டு, இந்தியா வந்தபிறகு, இங்குக் கிடைக்கும் பச்சைக்காய்கறிகள், புதிய பழங்கள் என்று எனக்கு ரொம்பவே சந்தோஷம். இன்றுகூட புதிய வாழைக்காய், சௌசௌ, கீரைகள் (ஒரு கட்டு 5 ரூபாய்) என்று வாங்கிவந்தேன்.

   நீக்கு
  3. கர்ர்ர்ர்:)).. இங்கு எங்கட தமிழ்க் கடைக்கு வருகிறது, ஆனா ஆனை விலையில்தான் எல்லாம்:)).. குட்டிச் சிவப்புக் கீரை , குட்டியாக இருக்கே என 2 எடுத்தேன், பார்த்தால் ஒன்று 4.99 பவுண்டாம். இந்தியாவில் இருந்தபோது பார்த்தேன், பென்னாம்பெரிய ஒரு கீரைக் கட்டு 75 ரூபாய் மட்டுமே.. எனக்கு தலை சுத்தியது:))..

   ஆனாலும் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மிக மிக மிக மலிவு அனைத்தும். அங்கு ஒரு மசாலா தோசை(தலைவர்) ரெஸ்ரோரண்டில் என நினைக்கிறேன் 275 ரூபாய்... சூப்பரான கேரளா ரெஸ்ரோரண்ட் இருக்குது “மகாபலி” என, அங்கு மீன் தளிச்சது ஒன்று 450 ரூபாய் ஹா ஹா ஹா ஆனா சின்னக் குட்டி மீன் துண்டு:)).. ஆஆஆ நான் இப்போ கேதார கெளரி விரதமாக்கும்:))

   நீக்கு
  4. வணக்கம் அதிரா சகோதரி.

   நேற்றும் இன்றும் தங்கள் வருகையால் (அதுவும் பாகிஸ்தானை தொட்டு விட்டு வந்த தங்கள் வருகையால்.... . ஹா ஹா ஹா ஹா) களை கட்டுகிறது. இப்படியே தினமும் பதிவுகளுக்கு வரவும் வேண்டுகிறேன்.

   வருக வருக என்று தங்களை வரவேற்கிறேன். உங்கள், (மற்றும் சகோதரி ஏஞ்சல் அவர்களுடன் சேர்ந்த நேற்றைய பதிவின் கலாய்த்தல்களை பல்வலி அதற்கான ஜுரத்துடன் (அதையும் பொருட்படுத்தாமல். ) இரவு அமர்ந்து படித்து ரசித்தேன்.. சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கும் என் நல்வரவு. நன்றி

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. ஹா ஹா ஹா கமலாக்கா மிக்க நன்றி.. ஒருவேளை பாகிஸ்தான் காத்துப் பிடிச்சதாலதான் இவ்ளோ உசாராகிட்டனோ என்னமோ:)).. ஓ பல்வலியோ.., கவனம்.

   நீக்கு
 15. படம் இல்லாத ரெசிப்பியாக திங்கட் கிழமை ஆரம்பித்தால், இனிக் கீசாக்கா மளமளவென அனுப்பிடப்போறா ரெசிப்பிகள்.. கீசாக்காவுக்குப் படம் எடுத்துப் போடுவதுதான் அலர்ஜி என்பது எனக்கு 6 வயசிலிருந்தே தெரியுமே:)).. எனக்கெதுக்கு ஊர் வம்பு மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ இவ்வளவு நாள் வராம என்ன இப்பூடி சொல்றீங்க கீதாக்கா இப்பல்லாம் படம் எடுத்துப் போட்டுத்தான் ரெசிப்பி அனுப்புவாங்க தெரியுமா!!!!!

   கீதா

   நீக்கு
  2. //கீதாக்கா இப்பல்லாம் படம் எடுத்துப் போட்டுத்தான் ரெசிப்பி அனுப்புவாங்க தெரியுமா!!!!!

   கீதா

   ///

   ஹா ஹா ஹா கடவுளே அப்போ என் கொமெண்ட்டைப் ஸ்பாம்முக்கு அனுப்பிவிடச்சொல்லி ஸ்ரீராமிடம் சொல்லிடுங்கோ:)).. அதுசரி எங்கே ஆளைக் காணம்:))..

   நீக்கு
  3. //பாக்கிஸ்தானைத் தொட்ட அதிரா//
   உலக வரை படத்திலா ?

   நீக்கு
  4. //உலக வரை படத்திலா ?

   // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னை ஆரும் நம்ப மாட்டீங்க எண்டுதானே வீடியோவா எடுத்து வந்து போட்டேன்ன்...:))

   நீக்கு
 16. வாழைக்காய் படமும் குறிப்பும் அருமை!
  தஞ்சாவூர் பக்கம் வாழைக்காய்களை ஆவியில் வேக வைத்து, தோல் நீக்கி கைகளால் உதிர்த்து விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்று தாளித்துக்கொண்டு, வாழைக்காயை போட்டு உப்பு கலந்து பிரட்டி, கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் அது வாழைக்காய் பொடிமாஸ். உதிர்க்காமல் துருவினால் பார்க்க இன்னும் அழகாய் இருக்கும். அல்லது வாழைக்காயை பொடியாக நறுக்கி உப்புத்தண்ணீரில் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, இதே போல தாளிதம் செய்தால் அது வாழைக்காய் பொரியல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ மனோசாமிநாதன்

   // தஞ்சாவூர் பக்கம் வாழைக்காய்களை ஆவியில் வேக வைத்து, தோல் நீக்கி கைகளால் உதிர்த்து விட்டு, //

   இப்படியும் செய்யலாம்.. ஆனால் வாழைக்காயின் துவர்ப்பு சுவையும் நார்ச்சத்தும் போய் விடும்..

   அதனால் எங்கள் வீட்டில்எப்போதும் இப்படித் தான்..

   நீக்கு
  2. "வாழைக்காய் புட்டு" என்று சொல்வோம். ஆவியில் வேக வைக்கமாட்டார்கள் திருநெல்வேலியில் தண்ணிரீல் வேக வைத்து பக்குவமாக வேக வைத்து ஆறிய பின் புட்டு சீவும் தட்டில் துருவி வெங்காயம், பச்சைமிளகாய் தாளித்து சீவிய துருவலில் போட்டு தேங்காயை துருவி போட்டு கலந்து விட்டு விடுவார்கள் வெள்ளையாக பார்க்க அழகாய் இருக்கும்.

   நீக்கு
  3. ஆமாம்.. கோமதி அரசு சகோதரி. இந்த பக்குவத்தோடுதான் செய்வோம். ஆனால் வெங்காயத்திற்கு பதிலாக கடுகு, உ. பாவுடன் ப. மி. இஞ்சி துண்டு, கறிவேப்பிலை, தேங்காய் துருவலுடன் தாளித்து கலந்து செய்வோம். இதைத்தான் நாங்கள் வாழைக்காய் பொடித்துவல், இல்லை பொடிமாசு என்போம்.

   நீக்கு
 17. கைவசம் குறிப்புகள் என்றதால் அவசரத்துக்கு அனுப்பி வைத்தேன்..

  அங்கே என்றால் சமையல் படங்களுடன் அனுப்பியிருப்பேன்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 18. சிறுவயதில் சிறுவர்கள் சேர்ந்து கைகளை கீழேவைத்து பாடி தொட்டு விளையாடுவோம் 'தாராம்பட்டி வாழைக்காய் பூவும் பிஞ்சும் மண்டபத்தில் பூமாதேவி கையை எடு'' என்று, முடிவில் யாருடைய கை மிஞ்சுகிறதோ அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவர். எ பி நண்பர்கள் வாருங்கள் விளையாடுவோம் :)

  தஞ்சாவூர் சமையல் நன்று.எங்கள் வீட்டிலும் வாழைக்காய் சமையல் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
  2. வணக்கம் மகாதேவி சகோதரி.

   நல்ல விளையாட்டு. நாங்களும் சின்ன வயதில் இந்தமாதிரி வேறொரு வாசகத்தை சொல்லி விளையாடுவோம். அதில் வரிகள் நிறைய வரும். இப்போது அவையனைத்தும் மறந்து விட்டது. "கூப்பிடுங்கோ குலவிடுங்கோ.. குறத்தி மகளே கையை மடக்கு."
   என்று இறுதியில் வரும். அது மட்டும் நினைவில் உள்ளது. வாழும் இடங்களுக்கு தகுந்த மாதிரி வரிகள் மாறும் போலும்.

   உங்கள் பாடல் சின்னவயது. நினைவுகளை தூண்டி விட்டது. சகோதரி கோமதி அரசுவும் இதை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அவருக்கும் இந்தப்பாடல் தெரிந்திருக்குமோ என்னவோ... நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். .

   நீக்கு
  3. //சின்ன வயது. நினைவுகளை தூண்டி விட்டது..//

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 19. அருமையான வாழைக்காய் பொரியல்.
  நாங்களும் செய்வோம்.
  மாதேவி பாடல் அருமை. வாழைக்காய் பொரியல் மாதேவியை விளையாட அழைக்க வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழைக்காய் பொரியல் மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டதே...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!