ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

(006) கும்பகோணம் – இராமஸ்வாமி கோவில் – பகுதி 2

நாங்கள் (அல்லது நான்) கும்பகோணம் செல்லும்போது பெரும்பாலும் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்குவோம். அங்கு இடம் கிடைக்காதபோது தனியார் விடுதிகளில் தங்குவோம். குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது அங்கு தங்கி, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரக் கோவில்களில் தரிசனம் செய்வோம்.

நடந்துசெல்லும் தூரத்திலேயே நிறைய கோவில்கள் உண்டு. அதிலும் இராமஸ்வாமி கோவிலுக்கோ (பெரியகடை வீதியின் ஒரு முனையில்) அல்லது சக்ரபாணி கோவிலுக்கோ (அது இன்னொரு முனை) சென்றுவிட்டு, கடைவீதி வழியாக மெதுவாக கடைகளையும், இடையில் வரும் கோவில்களிலும் தரிசனம் செய்துகொண்டு, இன்னொரு முனைக்கு வருவோம்.

கடைகளில் விற்பவைகளோ அல்லது வீதிகளில் விற்கும் பழங்கள் போன்றவையோ விலை மலிவுதான். அதுவும்தவிர, ஈயச் சொம்பு, பித்தளைப் பொருட்கள், விளக்குகள் போன்றவை வாங்கச் சிறந்த கடைகள் அங்கு உண்டு.

























எனக்கு, கும்பகோணத்தில் வாழ்ந்து, அதைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு நிறைய முறை சென்று தரிசனம் செய்யணும், அந்த ஊர்ச் சூழ்நிலையில் வாழ்வது, சிறிது மேம்பட்ட கிராம வாழ்க்கையாக, ஆன்மீகத்துக்கு நெருக்கமான வாழ்க்கையாக இருக்கும் என்று எண்ணம். நம் நண்பர்கள் முனைவர் ஜம்புலிங்கம் சார், ஆன்மீகச் செல்வர் துரை செல்வராஜு சார், கரந்தை ஜெயக்குமார் சார் எல்லோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தாமே. (கொடுத்துவைத்தவர்கள் என்று மனதுக்குத் தோன்றும். ஆனால் அவர்களால் கோவில்கள், வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் என்று தொடர்ந்து போய்வர முடிகிறதா இல்லை வீடு அவர்களைக் கட்டிப்போட்டுள்ளதா என்று தெரியவில்லை).  நாம் விரும்பும் ஊரில், வீடு வாங்குவதைவிட, சில வருடங்களுக்குப் பிறகு, அந்த ஊரில் வாடகைக்கு வீடு எடுத்துச் சில மாதங்கள் தங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறோம். அதன் பிறகு ஸ்ரீரங்கத்தில் அது போல…. அது சரி.. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கவிஞன் சொல்லியிருக்கானே… பார்க்கலாம்.

கோவிலைத் தொடர்ந்து சிந்தனை சொந்த வாழ்க்கை, விருப்பம் பக்கம் திரும்பிவிட்டதே!  சரி சரி.. இன்னொரு பதிவில் மீண்டும் சந்திப்போம். அது சரி… கும்பகோணம் பக்கம் சென்றுவிட்டு, அதுவும் பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து சோழர்கள் வரலாறு, ராஜராஜ சோழன் என்று அதகளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் படங்கள் கிடையாதா என்பவர்களுக்கு…. அவையும் வரும். அதற்கு முன்னோட்டமாக இதோ சில படங்கள்.




மீண்டும் சந்திப்போம்.

 = = = = = = =

122 கருத்துகள்:

  1. அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது..

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் சிற்ப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு வருகிறேன்.. ஆந்திரா சித்தூர் மாவட்டக் கோவிலிலிருந்து இப்போ பெங்களூர் செல்கிறேன்

      நீக்கு
  3. //வீடு அவர்களைக் கட்டிப் போட்டுள்ளதா என்று தெரிய வில்லை.. //

    உடல் நலக்குறைவும் பொருளாதாரமும் கட்டிப் போட்டுள்ளன..

    நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்!..

    பதிலளிநீக்கு
  4. //வீடு அவர்களைக் கட்டிப் போட்டுள்ளதா என்று தெரிய வில்லை.. //

    உடல் நலக்குறைவும் பொருளாதாரமும் கட்டிப் போட்டுள்ளன..

    நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல்நலக்குறைவு சரியாகிவிடும். எனக்கும் வெறும் தரையில் நடந்தால் பாதங்கள் வலிக்கும். இப்போ இல்லைனா எப்போ என்ற கேள்வி என்னை ஓடவைக்கிறது

      நீக்கு
    2. மனமிருந்தால் மார்க்கபந்து!

      நீக்கு
  5. ஒப்பிலியப்பன் சன்னதி தெருவில் உள்ள ஆண்டவன் ஆஸ்ரம விடுதியில் தங்கினீர்கள் என்றால் ---

    1. அதிகாலை 6 மணியளவில் விஸ்வரூப தரிசனம் பார்க்க ரொம்ப செளகரியமாக இருக்கும்.
    2. காலை, மதியம்,.மாலை,.இரவு என்று நினைத்த பொழுதெல்லாம் ஒப்பிலியப்பன் தரிசனம் செய்து வரலாம்.

    2. வெகு அருகிலிருக்கும் திரு நாகேஸ்வரம் கோயில் தரிசனம் செய்வீர்களா அறியேன்.

    கிட்டதட்ட 6 கிலோமீட்டர்
    தள்ளி இருக்கும் கும்பகோண நகர்புற லாட்ஜூகளில் தங்கினால் நீங்கள் சொல்கிற மாதிரி நடந்து செல்கிற தூரத்திலேயே
    நிறைய கோயில்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒப்பிலியப்பன் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தயங்கியதில்லை. அங்க 5:30க்கு விஸ்வரூபம். ஆராவமுதன் சன்னதில 7:15க்கு. கும்பகோணம் ஆண்டவன் ஆஸ்ரமம் கோவில்லேர்ந்து 50 அடி தூரம்

      நீக்கு
    2. திருநாகேஸ்வரம் சில முறைகள் போயிருக்கேன். நான் பராதானமான எல்லாக் கோவில்களுக்கும் தரிசனத்துக்குச் செல்வேன்

      நீக்கு
    3. நவகிரக சன்னதி ஊர்களுக்கு செல்வீர்களோ?
      கும்பகோணத்தில் தங்கிக்கொண்டு சென்று வருவதென்றால் அதற்கே சுத்தமாக இரண்டு நாட்கள் ஒதுக்க வேண்டும்.

      நீக்கு
    4. ஸ்ரீ ஒப்பிலியப்பன் எங்கள் குலதெய்வம் ஆகையால் நாங்கள் ஒரு முழு நாளும் அங்கு தங்கி விடுவது வழக்கம்.
      ஒப்பிலியப்பன் கோயில் சன்னதித் தெருவில் ஆண்டவன் ஆஸ்ரமம் பக்கத்திலேயே அகோபில மடத்தின்
      பெரிய்ய்ய தங்கும் விடுதி புதிதாக வந்திருக்கிறது. இங்கு தங்கியிருந்து உபநயனம், கல்யாணம் போன்றவற்றை நடத்தும் வகையில் அத்தனை வசதிகளும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

      நீக்கு
    5. எங்கள் குலதெய்வம் கோவிலும் அங்கிருந்து சில கிலோமிட்டர் தூரத்தில்தான் உல்ளது.  எங்கள் இரண்டாவது குலதெய்வம் கோவில் சுவாமிமலை.  எங்கள் திருமணம் நடந்தது ஒப்பிலியப்பன் கோவிலில்!

      நீக்கு
    6. ஆமாம் ஜீவி சார்... கும்பகோணத்திலும் அஹோபிலமடம் புது தங்குமிடம் இருக்கிறது. மனதில், பணம், நல்லவற்றிர்க்கு உபயோகமாகும் என்று தோன்றுவதால், தனியார் விடுதிகளை முடிந்தவரை நான் தவிர்த்துவிடுவேன்.

      என் பெண்ணின் அபிமானத் தலமாக ஒப்பிலியப்பன் பெருமாள் இருக்கிறார். அவள் அங்க போகணும் என்று சொல்லிவிட்டால் உடனே கிளம்பிவிடுவேன் (என் மனைவி சைடுல குலதெய்வம் ஒப்பிலியப்பன். எங்களுக்கு திருப்பதி)

      நீக்கு
  6. சிறப்பான காலை தரிசனம் நன்று. பெரும்பாலும் தூரத்தில் இருப்பவர்களுக்குத்தான் கோயில் மீது அதிக ஈடுபாடு வரும்.

    இராமேஸ்வரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்
    இராமநாதசுவாமி கோயிலுக்கு போனதே இல்லை இத்தனைக்கும் அவர் ஆத்திகர்தான்.

    காரணம் நம்ம ஊரு தானே போகலாம் என்ற சோம்பல்...

    ஆனால் வடக்கிலிருந்து தினம் எவ்வளவு நபர்கள் வருகிறார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..  உண்மை...   எப்போதுமே இது வழக்கம்தான்.

      நீக்கு
    2. அவ்வளவு தூரம் யாத்திரைக் குழுவுடன் சென்று, அதிகக் கூட்டத்தினால் பிரகாரம் மாத்திரம் பிரதட்சணம் செய்து திரும்பியதுண்டு

      நீக்கு
    3. இன்னொன்று கில்லர்ஜி... தெய்வ தரிசனம் என்பது நமக்கு வாய்க்கவேண்டும். அதனால்தான் நாம் கோவிலுக்குப் போனோம் என்பதைவிட, அந்தத் தெய்வம் கூப்பிட்டது என்றுதான் நாங்கள் சொல்லுவோம் (ப்ராப்தம் அமைந்தது என்று)

      நீக்கு
  7. கில்லர்ஜி சொல்வது உண்மை. உள்ளூர்காரர்களுக்கான கோயில் என்ற காலம் மாறிப் போய் டூரிஸ்டுக்கான கோயில்கள் என்று மாறிப்போன காலமிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு இருப்பவர்கள் வெளியூரில் வேறொரு கோவிலுக்குச் செல்வார்கள்!

      நீக்கு
  8. படங்கள் பெரிதாக நுணுக்கமான கொத்து பணிகளையும் வெளிப்படுத்தும் விதமாக நன்றாக அமைந்திருக்கின்றன.

    ​​Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயகுமார் சார். இரண்டு படங்களாக இருந்ததைப் பிரித்து அவர் போட்டிருக்கிறார். இனிவரும் பதிவுகளில் இதனைக் கடைபிடிக்கப்பார்க்கிறேன்

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. அதுவும் பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து//

    இது தான் எனது மர மண்டைக்குப் புரியவில்லை..

    மானா ரானாவின் பொ. செ. வந்ததுக்கு அப்புறம் தான் தஞ்சாவூருக்கும் பெரிய கோயிலுக்கும் பெருமை வந்ததாமா?..

    இப்படித்தான் Fb யிலும் புகை விட்டுக்கிட்டு இருக்காங்க!..

    அடக்கெரகமே!..

    அந்த ஒரிஜினல் பொன்னியின் செல்வனில் ஒரு இடத்தில் கூட பெரிய கோயில் என்ற வார்த்தை வந்திருக்காது!..
    அருண்மொழி தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பிறகு மதுராந்தகன் பதினாறு வருசம் ஆளணும்... அதுக்கப்புறம் ராஜராஜ சோழனா பட்டம் ஏத்துக்கனும்.. அதுக்கப்புறம் இருபது வருசம் போகணும்..

    ஏ.. ஷாமியோ...வ்!..

    போய் வேற வேலை இருந்தா பாருங்க..!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அந்தப் படம் வருதுன்னு எத்தனைபேர் கதைக்காக பொ செ படிச்சிருப்பாங்க, கேட்டிருப்பாங்க... அப்புறம் யாரு சோழர்கள், தஞ்சை இதிலெல்லாம் ஆர்வம் வந்தது. தேப்லா எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கு..ஆனால் கீதா சாம்பசிவம் மேடம் சொல்லித்தான் எனக்குத் தெரியும்

      நீக்கு
    2. சமீபத்தில் வழக்கத்தைவிட அதிகமாக தமிழகமெங்கும் பொன்னியின் செல்வன் ஜுரம் பரவியது என்பது உண்மை. தமிழகத்தைத் தாண்டியும் பரவியது.

      நீக்கு
    3. @நெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. ம.ர வின் பொ.செ படத்தை விடுங்க. அதற்கு முன்பே (பல வருடங்களாக) யூடியூப்களில் பஞ்சவன் மாதேவி மற்றும் பல இடங்களைப் பற்றி வந்திருக்கின்றது. அதில் பார்த்துத்தான் நான் ராஜராஜசோழனின் பள்ளிப்படை என்று சொல்லும் இடத்திற்கும் சென்றுவந்தேன். படங்கள் வரும். தஞ்சை/கும்பகோணம் மண்...கோவில், கலைகளின் இடம், காஞ்சீபுரம் போல. என்ன ஒண்ணு..இந்த இரண்டு இடங்களிலும் நாத்திகர்களை நிறைய உருவாக்கியிருக்காங்க (எல்லாப் பயலுவளும் 60 க்கு மேல் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தத்தான் செய்வாங்க)

      நீக்கு
  11. கும்மோணத்துல புருடா கொஞ்சம் அதிகம்..

    காரைக்காலுக்குப் பக்கத்தில் இருக்கிற திருநள்ளாறு, மயிலாடுதுறையத் தாண்டி இருக்குற வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, மேலப்பெரும் பள்ளம் - இந்த ஊரெல்லாம் கும்மோணத்துக்குப் பக்கத்துல இருக்குதுன்னு நாப்பது வருசத்துக்கு முன்னால ஆரம்பிச்சது..

    இன்னைக்கு மயிலாடுதுறை தனி மாவட்டம்...

    ஆனாலும்,
    கும்மோணத்துக்குப் பக்கத்துல இருக்குதுன்னு தான் சொல்றாங்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் கூப்பிடு தூரம்தான்...!  மனதளவில்.  இணையம் தூரங்களைக் குறுக்கி விட்டது.  முற்றத்தில் உலகம்.

      நீக்கு
    2. துரை சார்... நான் விழுப்புரம் போக, பெங்களூரிலிருந்து திருநள்ளாறு செல்லும் பேருந்தில்தான் செல்கிறேன். எங்க இறங்கினாலும் 890ரூபாய் மாதிரியான பேருந்து அது.

      அது இருக்கட்டும். நான் அர்ஜெண்டாக திருநள்ளாறு கோவிலுக்குச் செல்லவேண்டும். யாரேனும் தகவல், யாரைத் தொடர்புகொள்ளணும் என்று சொல்ல இயலுமா? (7 1/2 சனி தனுசு ராசி)

      நீக்கு
  12. கரெக்ட். பிரஹதீஸ்வரர் கோயில் என்று சொல்லச் சொல்ல இனிக்க அழைப்போம்.

    பதிலளிநீக்கு
  13. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கதையே தனி..

    திருநாகேஸ்வரம் - என்கிற பெயரை மாற்றி,

    திரு ராகேஸ்வரம் என்கிற அளவுக்கு ஆர்ப்பாட்டம்..

    நாவுக்கரசர் சொல்றாங்க - ஐந்தலை அரவின் பணி கொண்ட .. - என்று..

    ஐந்தலை அரவு என்பது ஆதிசேஷன்.. ஆதிசேஷந்தான் ராகுவா?...

    சரி..
    ஞானசம்பந்தப் பெருமான் என்ன சொல்றாங்க?..

    தனக்கும் கிடைக்க வேண்டும் என, பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினை மோகினியாக வந்த திருமால் அரிந்து வீச, அந்த சிரமானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்து நின்றது.. - என்று!..

    அந்த ஊர் தான் - சிரபுரம்..
    சீர்காழி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு விவரம் எல்லாம் எனக்குத் தெரியாது! தெரிந்து கொண்டேன் இன்று.

      நீக்கு
    2. இப்போ (அதாவது 20 ப்ளஸ் வருடங்களாக) ஒவ்வொரு கோவிலுக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மகிமையை விளம்பரப்படுத்தறாங்க. இது கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவதற்குத் துணைபுரியுது.

      உங்களுக்கே தெரியும். கோவில்ல விளக்கு ஏற்ற எண்ணெய் வழங்குவது புண்ணியம் என்று (ராஜராஜ சோழன் காலத்தில் சாவா மூவா ஆடுகள் என்றெல்லாம் நிவந்தமளித்து எண்ணெய் போன்றவற்றிர்க்கு வழி செய்திருக்கிறார்கள்). ஆனால் மக்களுக்குத் தேவை 'உடனடி' செலவில்லாத' புண்ணியம். அதனால என்னாச்சு... 2 ரூபாய் விளக்குக் கடைகள் அதிகரித்தது (நான் சொல்றது 25 வருடங்களாக) அப்புறம் கோவில்ல கண்ட கண்ட இடங்கள்ல இந்த விளக்கு ஏற்றராங்க என்று அதுக்கு அலுமினிய ட்ரே பெரிதாக ஒன்று வைத்து அதில் விளக்கேற்றச் சொன்னார்கள். அப்புறம் நல்லெண்ணெய் பிஸினஸைக் கவிழ்க்க, தீபம் எண்ணெய் என்ற ஃப்ராடு வந்தது. அப்புறம் 'நெய்' என்ற ஃப்ராடு இப்போ அதிகமாக உலவுகிறது. (மைலாப்பூரில் அனுமாருக்குச் சாற்ற கெடுதலான கெமிக்கலில் செய்த வெண்ணெயைப் பலகாலமாக விற்றுப் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்தனர். அப்போதான் தெரிந்தது அனுமாருக்காக என்று விற்கும் வெண்ணெய் ஃப்ராடு என்று) சரி..எதையோ சொல்ல நினைத்து எங்கேயோ போய்விட்டேன்.

      ஒவ்வொரு கோவிலிலும், இந்தக் கோவிலில் இதைச் செய்தால் இந்தப் பயன் என்பது விளம்பரத்திற்காகச் சொல்வதாக ஆகிவிட்டது. உதாரணமா, 'சந்தான கோபாலன்' என்று ஒரு விக்ரஹம் பல கோவில்களில் வைத்திருக்கிறார்கள். இத்தனை ரூபாய் கட்டினால், அதனை தம்பதிகள் கையில் பிடித்துக்கொள்ளச் சொல்லி மந்திரம் சொல்வார்கள். அப்போ குழந்தைப் ப்ராப்த்தம் கிடைக்கும் என்று. இப்போ பார்த்தால் பலப் பல கோவில்களில் இப்படிச் செய்கிறார்கள்.

      சரி.சரி..எதை எதையோ சொல்லி பக்தியை/பக்தர்கள் கோவிலுக்கு வருவதை வளர்க்கிறார்கள் என்றே நினைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  14. நெல்லை அவர்கள் - ஆன்மீகச் செல்வர் துரை செல்வ ராஜு என்று பட்டம் வேறு கொடுத்து விட்டார்..

    என்ன செய்வது என்று தெரிய வில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வெறும்ன புராணக்கதைகளை மாத்திரம் எழுதுவதில்லை. உணர்ந்து, உணர்வு பூர்வமாக, உங்களுக்கு அது தரும் புரிதலையும் சேர்த்து எழுதுகிறீர்கள். 80 சதத்துக்கு மேல் நீங்கள் தெய்வம், ஆன்மீகம் இவைகளைப்பற்றியே எழுதுகிறீர்கள். அதனால் என் மனதில் தோன்றியவிதத்தில் உங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  15. திருநாகேஸ்வரத்தில் - நாககன்னி, நாகவல்லி எனும் தேவியருடன் விளங்குபவர் ஸ்ரீ நாகராஜன்..

    ஆதிவழிபாட்டின் காரணகர்த்தா..

    இந்தத் திருமேனியை விட சற்றே ஆகிருதியுடன் தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில் நாக ராஜனுக்கு தனிச் சந்நிதியை ராஜராஜ சோழர் அமைத்திருக்கின்றார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விவரங்கள் கொடுக்கிறீர்கள்.  இன்று கீதா அக்காவை வேறு காணோம்.  அவர் வந்தால் அவரும் நிறைய விவரங்கள் தருவார்.

      நீக்கு
    2. ஒருநாள் சுறுசுறுப்பாக இருக்கும் உடல்நிலை மறுநாள் முற்றிலும் மாறிவிடுகிறது. அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கிறேன். இந்த அழகிலே வேலை செய்யும் பெண்மணி வேறே நான்கு நாட்களாக வரலை. நாளைக்கு வரணும். என்ன செய்யப் போறாங்களோ! இப்போல்லாம் இந்த வீட்டு வேலைகள் என் நேரத்தைச் சாப்பிடுகின்றன. :(

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்...இன்றைக்கு என்னை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறீர்கள். பெரியகோவில் கல்வெட்டில், ராஜராஜேச்வரம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில், பாண்டியர்கள் அம்பாள் கோவில் கட்டியிருக்கின்றனர், மராத்தியர்கள் ஆறுமுகன் கோவில் கட்டியிருக்கிறார்கள். யார், ப்ரகதீஸ்வரர் என்று பெயர் வைத்திருப்பார்கள்? எந்தக் காலத்தில் பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கும்?

      நீக்கு

  16. @ ஜீவி அண்ணா..

    //பிரஹதீஸ்வரர் கோயில் //

    (ப்ரஹதி மைதான் - தில்லி)

    இந்தப் பெயர் கூட மராட்டிய காலத்தில் வந்தது என்கின்றனர்..

    சோழர் சும்மாவா போனார்?..

    விலை மதிப்பு இல்லாத பொன்னையும் மணியையும் தங்கத்தையும் கொடுத்ததோடு ராஜ ராஜேஸ்வரம் என்னும் பெயரையும் வைத்து விட்டுத் தான் போயிருக்கின்றார்..

    ஆனால் நாங்க தான டம்ளர் ஆச்சே!..

    ஒத்துக்க மாட்டோம்.. ஒத்துக்கவே மாட்டோம்!...

    அவுரு மேல எதையாவது வாரித் தூத்திட்டு அவருக்கே வேற பேரு வெச்சிடுவோம்!..

    அந்த அளவுக்கு ஆரிய சதி செஞ்சிருக்கான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரகதீஸ்வரர் என்ற பெயர்க்காரணம்தான் என்ன?  யார் சூட்டியது அந்தப் பெயரை?

      நீக்கு
    2. இந்த அரசியல்வாதிகளை விட்டுடுங்க. அவனுகளுக்கு வேற வேலையே இல்லை. மக்களை எப்படிப் பிரிப்பது, எப்படி முட்டாளாக்கி வாக்களிக்க வைப்பது என்றெல்லாம் அவனுகளுக்குத் தெரியும்.

      ஆரியர் என்பதே நிச்சயமாக வடபெண்ணையாற்றுக்கு வடபுறமும், மேற்குவங்கத்திற்குக் கீழாகவும் உள்ள, களப்பிரர் ஆண்ட நிலம். இதுதான் 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பெயர் வந்ததன் காரணம்.

      மற்றபடி, ஈரான்லேர்ந்து வந்து, இங்க இருந்த திராவிடர்கள் தலையில் மிளகாய் அரைத்து, சமஸ்கிருதத்தைக் கொண்டுவந்தார்கள் என்றெல்லாம் இவர்கள் பேசுவது, திராவிடர்கள் என்பவர்களே முட்டாள்கள் என்று ஒத்துக்கொள்கிறோம் என்பதையே அறியாமல் உளருவது.

      நீக்கு
  17. எதிர் வரும் வியாழன் அன்று தஞ்சையில் சதயத் திருவிழா..

    வாய்ப்பு வசதி உடையோர் வருக.. வருக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அனுமதித்தால் அவர் வியாழனின் ஒரு பகுதியை தஞ்சைக் கோவில் படங்கள் அலங்கரிக்கலாம்

      நீக்கு
    2. சதயத் திருவிழாவைப் போற்றுகிறேன். ஆனால் அடுத்த முறை தஞ்சப் பெரிய கோவிலுக்கு அதிகாலை திறக்கும் நேரத்திலேயே போக நினைத்திருக்கிறேன். கொஞ்சம்கூடத் தொந்தரவு இல்லாமல் எல்லாச் சன்னிதிகளையும், சிற்பங்களையும் ஆழ்ந்து பார்க்கணும் என்ற எண்ணம்தான் காரணம்

      நீக்கு
  18. குழாயடி வித்தகர்களுக்கு எல்லாம் நல்ல வேட்டை..

    நான் தான் அருல் மொளிக்கு ஐடியா கொடுத்தேன்...

    முப்பாட்டனுக்கு முப்பாட்டன் தலை மாட்டுல வச்சிருந்த கல்லை எடுத்துதான் இதெல்லாம்!!..

    என்னன்ன விதமான காணொளிகள் வருவதற்குக் காத்திருக்கின்றனவோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ வந்திருக்கும் காணொளிகளைப் பார்த்திருந்தால், சே..வாய்ப்புகளைத் தவற விடறோமேன்னு வருத்தப்படுவீங்க.

      நீக்கு
    2. இதை விவரிக்க எண்ணினேன்... அப்புறம் சரியாக வராது என்று விட்டுவிட்டேன்

      நீக்கு
  19. நேற்று கதைக்கு விட்ட குறை தொட்டக் குறையாய் பின்னூட்டம்
    பாருங்க.. :))

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!!
    சிற்பங்கள் எல்லாம் புகைப்படங்களில் மிக அழகாய் விழுந்திருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  21. குடந்தை எப்போதுமே சற்று ஜன சந்தடி அதிகம் இருக்கும். தஞ்சாவூர் அமைதியாக இருக்கும். அதுவும் தஞ்சை பெருவுடையார் கோவில் எப்போது சென்றாலும் மிக அமைதியாக இருக்கும். மனதிலும் ஒரு அமைதியைக்கொடுக்க தவறுவதில்லை. . அதுவும் தொலை தூர நாதஸ்வர பின்னணியில் கருவூரார் சன்னதியருகில் அமர்ந்து, அங்கே இசைத்துக்கொண்டிருக்கும் பாடல்களைக்கேட்டவாறே மெய்மறந்திருப்பது தனி சுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூர்க் கோவில் மட்டுமில்லை, தாராசுரம், கும்பகோணம் கோவில்களும் அப்படியேதான்.

      நீக்கு
    2. அப்படி இல்லை மனோ சாமிநாதன் மேடம். குடந்தை சந்தடி மிக்கது என்றாலும், கோவில்களில் கூட்டமில்லை. அமைதியாக தரிசனம் செய்யமுடியும். (உண்மையைச் சொன்னா, பக்தர்கள் வரவு குறைவு....ஆனால் கோவில்கள் பிரம்மாண்டம்)

      தஞ்சை பெரிய கோவில் நம் எல்லோருக்கும் பெருமிதம் தரக்கூடியது.(ஆனால் இதுபோல பலப் பல சோழர்கள் கோவில்கள் இருக்கின்றன)

      நீக்கு
  22. இருக்கும் இடத்தை விட்டு - இல்லாத இடம் தேடி - எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே...
    அவர் ஏதும் அறியாரடி - ஞானத் தங்கமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைச் சொல்கிறீர்கள் தங்கமே...

      நீக்கு
    2. இது ரொம்ப தத்துவார்த்தமான ஒன்று. அதைப் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள மிகுந்த ஞானம் வேண்டும். அது லட்சத்தில் ஒருவருக்கே இருக்கும். அதனால் அப்படிச் சொல்லி நாம் கடந்துவிட முடியாது

      நீக்கு
  23. அதுவும் தஞ்சையில் ஒரு பக்கம் திருவாரூர், நாகை கோவில்கள், இன்னொரு பக்கம் குடந்தை மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் என்று கோவில்கள், இன்னொரு பக்கம் புதுக்கோட்டை, அறந்தாங்கி என்று கோவில்கள் அதியற்புதமான சிற்ப அழகுடன் பிரமிக்க வைக்கும்! தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் வழியில் சுவாமிமலை அருகே தாராசுரத்தில் சிற்ப அழகு எல்லா கோவில்களையும் விட மிக அதிகம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் திரும்பி வெளியே வரவே மனம் வராது.

      நீக்கு
    2. தற்போது நான் பிரமிக்க ஆரம்பித்திருப்பது புதுக்கோட்டை பகுதியிலுள்ள சில கோவில்களின் சிற்பங்கள். நான் இன்னும் சென்றதில்லை. செல்ல வெகுவான ஆவலுடன் இருக்கிறேன். போய்விட்டு வந்து எழுதுகிறேன்.

      நீக்கு
  24. @ ஜீவி அண்ணா..

    // நேற்று கதைக்கு விட்ட குறை தொட்டக் குறையாய் பின்னூட்டம்
    பாருங்க.. :))//

    பின்னூட்டங்களுக்கு என்ன பஞ்சம்?..

    செவ்வாய்க்கிழமைகளில் கதை எழுதுவர்கள் இங்கிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகள் வந்த பிறகு சனிக்கிழமைகளில் மட்டும் நான் இந்தப் பக்கம் வருவதே இல்லை..

    நான்கு வருடங்களாக மாதந்தோறும் எனது ஆக்கங்கள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறதோ.....

      நீக்கு
    2. நான் வரையும் ஓவியங்களில் குறைகள் இருந்தாலும், பாராட்டுவது ஒரு வகை. எனக்கே தெரிந்தாலும், அந்த ஓவியங்களை, ரவிவர்மா, மணியம் செல்வன், மாருதி....என்று லிஸ்ட் போட்டு, அவங்க ஓவியத்தை ஒப்பிட்டால், என் ஓவியம், வெறும் சிறுகுழந்தையின் கிறுக்கல் என்று மதிப்பிடுவது ஒரு வகை. இரண்டிலுமே உண்மை இருக்கிறது.

      நீக்கு
  25. அன்பின் நெல்லை அவர்களே..

    ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே மகேந்திர பல்லவனுக்கு பதில் அளித்துப் பாடிய திருப்பதிகத்தில்
    கணபதியைப் பற்றி பாடிவிட்டார் நாவுக்கரசர்...

    மகேந்திர பல்லவன் மகன் நரசிம்ம பல்லவன் காலத்தில் தான் வாதாபியில இருந்து வெற்றிச் சின்னமாக கணபதி தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார் கணபதி..

    இந்த வருட சதுர்த்தி பதிவுகளில் இதைப் பற்றி எனது தளத்தில் சொல்லியிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு முன்பே இங்கு உண்டு என்பது என் எண்ணம். புதுசா கணபதி வந்து, முருகனுக்கு அண்ணன்னு கதை வந்ததாமா? வெற்றிச் சின்னமா அழகிய சிற்பத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.

      நீக்கு
    2. இந்த வரலாறு நான் அறிந்ததுதான். நான் சொல்லவந்தது, கணபதி வழிபாடே அதற்கு அப்புறம்தான் தமிழகத்தில் வந்தது, அதற்கு அப்புறம்தான் பிள்ளையார் சிலைகளே வந்தது என்று ஒன்றும் தெரியாமல் ஜல்லியடிப்பவர்களைப் பற்றி.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. கும்பகோணம் இராமநாத சுவாமி கோயில் படங்கள் அருமையாக உள்ளது. தெளிவாகவும் இருக்கிறது. தஞ்சை பெருவுடையார் கோவில் படங்களும் அருமை. நீங்கள் சொல்வது போல் அந்த ஊருக்குச் (கும்பகோணம் என்றில்லை.. எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் நிதானமான தரிசனங்கள் மனத் திருப்தியை தரும். ) சென்றால் நான்கைந்து நாட்கள் நிதானமாக தங்கியிருந்து ஒவ்வொரு கோவிலையும் ரசித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவசர பயணம் எதற்கும் உதவாது.

    படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்தேன். விளக்கமாகவும், பொறுமையாகவும், பதிவையும், படங்களையும் பகிர்ந்த சகோதரர் நெல்லைத் தமிழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... எனக்குப் பொறுமை இருக்கிறது. என்னை நம்பி பசங்களோட நிலை இல்லை (அதாவது சமையல், போன்ற அன்றாட உதவிகள்). அதனால சட்னு ஐந்து நாட்கள் எங்கேயாவது போய், அமைதியாக கோவில் தரிசனம், எனக்குப் பிடித்தவைகளைச் செய்ய முடிகிறது

      நீக்கு
  27. பெரிய கோயிலின் படங்களும் குறிப்பும் அழகு..

    துவார பாலகர் சிலையில் உள்ள
    ஆனை விழுங்கி (அனகொண்டா) அரவினைப் பற்றி ஞானசம்பந்தர் சொல்லியிருக்கின்றார்..

    ஆனை விழுங்கிகள் கயிலாயத்தின் பக்கங்களில் கிடக்கின்றனவாம்..

    ஆனால் திருக்காளத்தியில் இருந்தபடியே திருக்க்கயிலாய மலையைத் தரிசனம் செய்தவர் ஞானசம்பந்த மூர்த்தி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனைவிழுங்கி அரவு பற்றி இதுவரை எனக்குத் தெரியாது துரை சார். நான் பிரம்மாண்டம்னு காண்பிக்கத்தான் சிற்பி இப்படிச் செய்திருக்கிறார் என்றே நினைத்தேன்

      நீக்கு
  28. பெரியது யானை.. அதை விழுங்கும் பாம்பு அதை விடப் பெரிது.. அந்தப் பாம்பு சுற்றிக் கொண்டிருக்கும் கதாயுதம் அதை விடப் பெரிது..

    எனில்,
    அத்தகைய கதாயுதத்தைக் கையில் தங்கியிருக்கும் என்னைப் பணி யாளனானாகக் கொண்டிருக்கும் இறைவன் எவ்வளவு பெரியவன்!..

    ஆகவே ஒழுங்கு மரியாதையாக இருந்து கொள்ளுங்கள்!.. -

    என்று சுட்டு விரலைக் காட்டி எச்சரிக்கை செய்கின்றார்..

    இதுவே திருக்குறிப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எனக்குப் புதிய செய்தி (ஆனை விழுங்கும் அரவு) ஆனால் தலைவன் (சிவபெருமான்) மிகப் பெரியவன் என்று அவனது ப்ரம்மாண்டத்தை சிற்பி இந்தச் சிற்பங்கள் மூலம் காட்டுகிறார் என்று தோன்றுகிறது

      நீக்கு
  29. அருமையான பதிவு. கோயில் சிறபங்களின் படங்கள் பகிர்வு அருமை.
    காலத்தை வென்ற கோயில்கள் வியக்க வைக்கும். 30 வருஷ கட்டிங்கள் பழுது பார்த்து கொண்டே இருக்க வேண்டும் இப்போது என்பது உண்மை. 12 வருடத்திற்கு ஒரு முறை கோயிலை பழுது பார்த்து கும்பாபிஷேகம் செய்தால் இன்னும் நிறைய கோயில்கள்
    காலம் காலமாக நீடித்து இருக்கும்.
    கும்பகோணத்தில் வீடு எடுத்து தங்கி பார்க்க இப்போது நிறைய வசதி வந்து இருக்கிறது.
    நானும் மாயவரத்திலேயே இருந்து இருக்கலாம் என நினைக்காத நேரம் இல்லை.
    மதுரை மீனாட்சி இங்கு வர வேண்டும் நினைத்து இருக்கும் போது என் எண்ணம் எப்படி நிறைவேறும். கிடைத்தவரை மன நிறைவுடன் இருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க் நன்றி கோமதி அரசு மேடம்.

      இப்போதெல்லாம் பழுது பார்த்து கும்பாபிஷேகம் என்பதன் அர்த்தம், கல்வெட்டுகள் மீது சிமெண்ட்டைப் பூசி எல்லாவற்றையும் மறைப்பது என்பதுதான். இல்லைனா கண்ணைப் பறிக்கும் பெயிண்டை கோவிலில் பூசிவிடுகிறார்கள்.

      நீக்கு
    2. மீனாட்சி, தன் எல்லையில் நீங்கள் இருக்கணும் என்று நினைத்திருக்கிறாள். அப்படி இருக்க, மாயவரத்தான் விட்டுக்கொடுக்க வேண்டியதுதான்

      நீக்கு
  30. @ நெல்லை..

    // ஸ்ரீராம் அனுமதித்தால் அவர் வியாழனின் ஒரு பகுதியை.. //

    உங்களுக்கு அனுமதி கிடைக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன், மற்றவர்களுக்கு? அல்லது உங்களுக்கு?

      நீக்கு
    2. //அனுமதி கிடைக்கும்// - நீங்க வேற துரை செல்வராஜு சார். எனக்கு பாரிஸில் நான் சென்றிருந்த லூவர் மியூசியத்தில் நான் எடுத்த படங்கள் (சிற்பங்கள் ஓவியங்கள்) பத்து பதிவுகளாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு நிரம்ப ஆசை. ஆனால் கேஜிஜி சார்..இந்தத் தளம் சைவம். கிட்ட வரப்படாது என்று சொல்லிவிட்டார். 'கலைக்கண்ணோட' வாசகர்கள் பார்ப்பாங்க என்று சொன்னால், 'கலையாவது கண்ணாவது மூச்' என்று மிரட்டுகிறார்.

      அரசியல், ஏடாகூடப் படங்கள், அசைவம் போன்ற தலைப்புகளை எங்கள் பிளாக் ஏற்றுக்கொள்வதில்லை.

      நீக்கு
    3. கலைப்படைப்புகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கணும் என்பது என் எண்ணம். ஆனால், தளத்திற்கு வரும் கீசா மேடம், கமலா ஹரிஹரன் மேடம், காமாட்சியம்மா, கோமதி அரசு மேடம், கீதா ரங்கன்(க்கா) என்ற பெரிய லிஸ்டில் வருபவர்கள், அம்மிக் குழவியைத் தூக்கிக்கொண்டு கோபமாக வருவார்களோ என்ற சந்தேகம்...

      நீக்கு
  31. @ நெல்லை..

    // வெற்றிச் சின்னமா அழகிய சிற்பத்தைக் கொண்டு வந்திருக்கலாம்..//

    நடன மங்கையின் சிற்பம் ஏதாவது கிடைத்திருந்தால் பிடுங்கி எடுத்து தோளில் வைத்துக் கொண்டு வெற்றி வீரர் பரஞ்சோதி வந்திருக்கலாம்...

    ஆனால், அவருக்கு
    நாயன்மார் வரிசையில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..

    அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கணபதி விக்ரஹம் திருச்செங்காட்டங்குடி கோயிலில் இருக்கின்றது.. அழகான பிள்ளையார்.. வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள்..

    அந்த சிவன் கோயிலுக்கு இந்தக் கணபதி வருவதற்கு முன்பே கணபதீஸ்வரம் என்று பெயர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை... என் பாயிண்ட்... கணபதி வழிபாடே அதற்கு அப்புறம்தான் தமிழகத்தில் தோன்றியது, அதற்கு முன்னால் கணபதி, விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை, இது ஆரியக் கடவுள், முருகன் தமிழ்க்கடவுள் என்று கடவுளர்களைப் பிரிக்கும் அறிவிலிகளுக்காகச் சொன்னது.

      திருச்செங்காட்டங்குடி என் லிஸ்டில் இருக்கிறது. செல்லவேண்டும். இப்போ உடனடி ஆசை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்லணும்..சிற்பங்களைப் பார்க்க

      நீக்கு
  32. இன்று பதிவைத் தொடர்ந்த கருத்துக்களை நிறைய சொல்லியிருக்கின்றேன்..

    முடிந்தவரை அனைத்தையும் கண்டு கொள்ளுங்கள்..

    அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை எனில்..

    கிடைக்கவில்லை எனில்?..

    சும்மா இருந்து விடுவேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரை பதில் அளிக்கப்பட்டிருக்கின்றன!!!

      நீக்கு
    2. இப்போதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். நான் ஒரு நாளும் மறுமொழி எழுதாமல் இருந்ததில்லை. நெல்லை

      நீக்கு
  33. சிற்பங்கள் யாவும் அருமை. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  34. மத்தியானமே பார்த்துட்டேன். ஆனால் கருத்துச் சொல்லவில்லை. படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  35. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் குடவரைக்கோயில் முற்காலப் பாண்டியர்களில் கடைசியாக இருந்தவர்கள் காலத்தையது என்று ஒரு கூற்று உண்டு. தமிழகத்தின் முதல் குடவரைக்கோயிலும் அதுதான் என்பவர்களும் உண்டு. திருப்பரங்குன்றத்திலும் குடவரைக்கோயில் தானே! அதன் பின்னரே பல்லவர்கள் எழுப்பியவை வரும் எனச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஆராயத்தக்கது. ஆனால் குடவரைக் கோயில்கள் மகேந்திர பல்லவனால்தான் ஆரம்பித்தது என வரலாறு சொல்கிறது. யார் அப்போ இருந்து பார்த்தார்கள்?

      நீக்கு


  36. @ ஸ்ரீராம்..

    // உள்ளர்த்தம் இருக்கிறதோ...//

    அதெல்லாம் ஒன்றும் இல்லை..

    நான்காண்டுகள் தொடர்ச்சியாக சங்கப் பலகையில் இடம் கிடைப்பதே பெரும் பாக்கியம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பிளாக்கைப் பொறுத்தவரைல, நம்ம படைப்புகள் வரும்... ஆனால் சில நேரங்களில் ரொம்ப தாமதமாகும். சில சமயம் நம் வேண்டுகோள் அர்த்தமுள்ளதாக இருந்தால் உடனே வந்துடும். அவங்க மத்தவங்க எழுதணும், படைப்பு அனுப்பணும் என்றே விரும்பறாங்க, encourage செய்யறாங்க என்று நினைக்கிறேன்

      நீக்கு
  37. //செவ்வாய்க்கிழமைகளில் கதை எழுதுவர்கள் இங்கிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் //

    இவ்வாரம் வாத்தியாரின் ஒரு பாடம். செவ்வாய் கிழமை கே வா போ க எழுதுபவர்களுக்கு ஒரு உதவி!!

    சிறுகதை என்றால் என்ன? – சுஜாதா

     இதுவே என்னுடைய உண்மையான வார்த்தைகள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதை ஒவ்வொன்றும் எழுதுபவரது ஆத்மார்த்த உணர்வு...

      எழுதுபவரது உயிருக்குள் தோன்றிய ஜீவனுள்ள சிசு..

      அது -
      அவர் சொல்வதால் இப்படித்தான் இருக்க வேண்டும் ..

      இவர் சொல்வதால் அப்படித்தான் இருக்க வேண்டும் ..

      என்றெல்லாம் இருக்க வேண்டியது இல்லை!..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. நம் படைப்பு என்பது நம் பையன் போன்றது. அதில் குறைகள் இருக்கலாம் ஆனால் அது நம் படைப்பு.

      எப்படிக் கதை எழுதுவது என்று குமுதம் இதழில் தொடர் வந்தது. ஆனால் இதையெல்லாம் படித்துவிட்டு படைப்பாளியாக முடியுமா?

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
      அன்பின் நெல்லை அவர்களுக்கும்

      நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  38. நிறைய கருத்துகள் காணாமல் போகின்றன

    பதிலளிநீக்கு
  39. @ நெல்லை

    //அவங்க மத்தவங்க எழுதணும், படைப்பு அனுப்பணும் என்றே விரும்பறாங்க, encourage செய்யறாங்க என்று நினைக்கிறேன்..//

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
  40. அழகிய சிலைகள் கண்டு தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!