ஞாயிறு, 9 அக்டோபர், 2022

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் : தாய்பே :: நெல்லைத்தமிழன்

 

தாய்பே Taipei, தாய்வான் –  Taipei Zoo – பகுதி 1 of 3 

நான் தாய்வானுக்கு ஆபீஸ் வேலையாக (அங்குள்ள புகழ்பெற்ற கம்ப்யூட்டர் எக்ஸிபிஷனில் கலந்துகொள்ளவும், எங்களது கம்பெனிக்குத் தேவையான கணிணி சம்பந்தமான பொருட்களை evaluate செய்து வாங்கவும் முதன் முதலில் 2008ல் சென்றிருந்தேன். அதன் பிறகு நான்கு தடவை சென்றிருக்கிறேன்.

தாய்வான், ஒருங்கிணைந்த சீனாவின் பகுதியாக 1912லிருந்து இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவை கபளீகரம் செய்தபிறகு, அதற்கு எதிராகப் போராடியவர்கள் 50களில் தாய்வானில் அடைக்கலம் புகுந்தனர். தாய்வானில் தனித்த அரசு அமைந்தது. இருந்த போதிலும், சீனாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே தாய்வான், தங்களைச் சார்ந்து என்ற அரசியல் நிலையிலேயே இருக்கிறது. அந்த அரசியலுக்குள் நாம் புக வேண்டாம்.

கணிணி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் எதுவாக இருப்பினும், மேற்கத்தைய நாடுகளின் தயாரிப்புகள் மிக விலை உயர்ந்தவை. அதே சமயம், சைனா, தாய்வான் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுபவை ஐம்பது சதவிகித்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் (உண்மையில் அதைவிட விலை குறைவு). இதனால் வாடிக்கையாளர்கள் குறைவதைக் கண்ட மேற்கத்தைய நாடுகளின் நிறுவங்கள், தங்கள் உபகரணங்களை சைனாவிலோ அல்லது தாய்வானிலோ உற்பத்தி செய்து அதைத் தங்கள் பிராண்ட் பெயரில் விற்க ஆரம்பித்தன. அப்படி இருந்துமே, விலை வித்தியாசம் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தது.  இதில், தாய்வான் உபகரணங்களுக்கும் சைனா உபகரணங்களுக்கும் வித்தியாசம் உண்டு. தயாரித்த பொருளின் Quality Control தாய்வானில் இன்னும் செம்மையாகச் செய்வார்கள். அதனால் நான், நேரடியாக தாய்வானிலிருந்தே உபகரணங்களை வாங்குவதற்கு 2008ல் மேற்கொண்ட முதல் பயணம் உபயோகமாக இருந்தது.

நான் ஒரு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டால், வேலை நேரம் முடிந்ததும் ஏதாவது ஒரு இடமாவது சுற்றிப் பார்ப்பேன். நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஹோட்டலில் தங்கமாட்டேன்

ரொம்ப அவசியம் இருந்தாலொழிய இரவு உணவு சந்திப்புக்களைத் தவிர்த்துவிடுவேன். உணவு என்பதை நான் பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்வதில்லை. (எடுத்துக்கொண்டால் பயணம் செய்வது இயலாது). எங்குமே பழங்கள் கிடைக்கும், பழரசம், வாசனையூட்டப்பட்ட பால் போன்றவற்றை வைத்துச் சமாளித்துவிடுவேன். மறுநாள் உடனடியான உணவுக்கு, ஏதாவது செய்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். ஊறுகாய் பாட்டில் ஒன்றும் கொண்டுசென்றுவிடுவேன். வெறும் இனிப்புகளையே சாப்பிட்டாலும், எப்போது நாக்குக்கு உப்பு/காரம் கேட்குதோ அப்போது, அந்த ஊரில் கிடைக்கும் நல்ல English bread வாங்கி, ஊறுகாய் தடவிச் சாப்பிட்டுவிடுவேன். காலம் மாற மாற, அந்த ஊரில் ஏதேனும் இந்திய ரெஸ்டாரண்ட் இருந்தால் அங்கு பயணத்தில் ஒரு தடவையாவது உணவு சாப்பிடுவேன்.  இந்திய சைவ உணவகங்கள் தவிர (வெகு அபூர்வமாக இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது ஸ்டார் ஹோட்டல்களில்) வேறு எந்த சைவ உணவகத்திலும் சாப்பிடமாட்டேன்

அதுபோல எனக்கு என்று வைத்துக்கொண்டிருக்கும் கர்மாக்களை (தர்ப்பணம் போன்று) விட்டதும் இல்லை. அந்த அந்த ஊரிலேயே குறைவு வராமல் செய்துவிடுவேன்.

அந்த அந்த ஊரின் பாதுகாப்பைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்வேன். பொதுவாக நான் பயணம் செய்த நாடுகளில் பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதில்லை.   

ஒவ்வொரு பயணத்திலும் ஏதாவது ஒரு இடத்தைப் பார்த்து வருவேன். அப்படி நான் பார்த்த இடங்களைப் பற்றிய படத் தொகுப்பை எங்கள் பிளாக்கிற்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறேன். அப்படி அனுப்பும்போது, நானே என்னளவில் சென்சார் செய்தே அனுப்புகிறேன்.  அதன் காரணத்தையும் பிறகு சொல்கிறேன்.

அவ்வளவு தூரம் சென்று ஒரு உயிரியல் பூங்காவுக்கா செல்லவேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் மூன்று பகுதிகளாக Taipei உயிரியல் பூங்கா படங்கள் வரும்.(தொடரும்) 

167 கருத்துகள்:

 1. ஆஹா மீ தி ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க.. இன்று பெங்களூருக்கு வந்துவிட்டேன். உங்களை இப்போல்லாம் பார்ப்பதே, பொன்னியின் செல்வன் படத்தில் வானதியைத் தேடுவதுபோல ஆகிவிட்டது. நலமா?

   நீக்கு
  2. உடம்பு நலமாக இருந்தால் நீங்கல்லாம் தேடும்படி வைச்சுக்கவே மாட்டேனே! :))))) இப்போப் பரவாயில்லை. )

   நீக்கு
  3. நான் இன்று தளத்திற்கு வந்தபோது 5: 05.. ஏனோ எதுவும் எழுதுவதற்குத் தோன்றவில்லை..

   நீக்கு
  4. நானும் காலை 6 மணிக்கு (இன்று ஞாயறாகையால் சற்று தாமதம்) கண் விழித்தவுடன் வழக்கப்படி எ. பியைதான் பார்த்தேன். ஆனால், நேற்றிலிருந்து ஆரம்பித்த பல் வலி என் உயிரை கொன்று கொண்டிருந்தது. அதனால் இன்று எ.பிக்கு வர தாமதம்.

   நீக்கு
  5. நான்கு நாட்களாக நடைப்பயிற்சி இல்லை. அதனால் இன்று 9 கி.மீ நடக்கச் சென்றுவிட்டேன். ஞாயிறு ஆகையால் எல்லோரும் மெதுவாகத்தான் வருவார்கள் என்று நினைத்தேன்

   நீக்கு
  6. 'செல்லம்' என்று குறிப்பிடுவது, யாரை என்று ஒருவரும் கேட்கவில்லையே....

   நீக்கு
  7. ஆஆஆஆஆ இது வேற .. கவலையா இருக்கோ?:)) ஹா ஹா ஹா

   நீக்கு
 2. தாய்வான் பெயரெல்லாம் தினசரிகளில் அட்லஸில் பார்த்துக் கேட்டதோடு சரி. உ.சு.வா. ஆன நெல்லையின் மூலம் இன்றைய படங்கள்/தாய்வான் அனுபவம் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் வேலை, நெல்லை கிராமத்தானாகிய எனக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. ரொம்பவே மாறாமல், ஆனால் நான் படித்த பலவற்றையும் காணும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. இது அதிருஷ்டம்தான்.

   நீக்கு
 3. நாங்களும் அம்பேரிக்கா போறச்சே எல்லாம் ஓட்டல் அறையா இருந்தாலும் தர்ப்பணம் முதலியவை செய்வார். நான் மைக்ரோவேவில் சமைச்சுடுவேன். புளிக்காய்ச்சல் கையில் இருக்கும். ஃபுல்கா ரொட்டி தேப்லா எடுத்துத் தனியாக வைச்சுக் கொண்டு போவோம். சாதம் ரைஸ் குக்கரில் வைச்சுத் தயிர், புளிக்காய்ச்சலோடு சாப்பிட்டுப்போம். இரவு விரதம் முடிக்கச் சப்பாத்தி, தேப்லா, ஊறுகாயுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னால் அன்று உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற முடிவதில்லை. லண்டன், மெக்சிகோ, தாய்வான், இந்தோநேஷியா, துபாய் போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்யும் நாட்கள் பயணத்தில் வந்திருக்கின்றன. படங்களும் எடுத்துவைத்துக்கொள்வேன்.

   நீக்கு
 4. ஆனால் பின்னர் எங்க மாமியார் இறப்பின்போது அம்பேரிக்காவில் இருக்க நேர்ந்தப்போ எங்க குடும்பப் புரோகிதர் அங்கெல்லாம் கர்மாக்கள் செய்வது உசிதமில்லை என்று சொல்லிவிட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபர காரியங்கள் வெளிநாடுகளில் செய்வது சரியாகவராது

   நீக்கு
 5. சரி, வரேன் அப்புறமா. படங்கள் எல்லாம் பெரிது பண்ணிப் பார்க்க முடிந்தன.

  பதிலளிநீக்கு
 6. தங்களது தைவான் அனுபவத்தில் பல விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

  படங்களை மீண்டும் கணினியில் பார்க்க வேண்டும் இரண்டாவது புகைப்படத்தில் இருக்கும் எழுத்து ஜிலேபியைவிட கஷ்டமாக இருக்கும் போல...
  தொடர்ந்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி... தாய்வான் அனுபவத்தைப் படங்கள் மூலம் அவ்வப்போது இங்கு தொடர்வேன், கோயில் உலாக்களுக்கு இடையில். அந்த ஊரில், எனக்கு உணவு வாசனைதான் ரொம்பவே குமட்டும். பல இடங்களைக் கடக்கும்போது மூச்சை அடக்கிக்கொண்டே நகர்வேன். அசைவர்களுக்கு அந்தக் கஷ்டம் கிடையாது

   நீக்கு
  2. //அசைவர்களுக்கு அந்தக் கஷ்டம் கிடையாது..//

   இப்போது தான் எல்லாமும் தனித்தனியாகப் போகின்றதே..

   பெரும்பான்மையைப் பிரித்து உதறப் போகின்றார்கள்..

   நரிக்கூட்டங்கள் கதறப் போகின்றன..

   நீக்கு
  3. துரை சார்... எருதுக் கூட்டத்தைப் பிரிப்பதைப் போல புதுத் திட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும், இப்போது தமிழ்நாடு என்று நாம் அழைப்பது, மூன்று நான்கு தேசங்கள்/நாடுகள் சேர்ந்த பகுதியல்லவா? இப்போதும் தமிழர்களை கேரளத்தவர், 'பாண்டி நாட்டான்', 'பாண்டி' என்றே சொல்லுவார்கள்.

   நீக்கு
 7. நலம் தரும் ஞாயிறு...

  அன்பின் வணக்கம்.. அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 8. நெல்லை அவர்களின் படத்தொகுப்பும் தகவல் தொகுப்பும் அருமை.. அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துரை செல்வராஜு சார்... இன்னும் இரு வாரங்கள்...இதேதான்

   நீக்கு
 9. அக்கா வந்திருக்கின்றார்கள்.. நல்வரவு..

  பொன்னியின் செல்வன் படத்தில் வானதியைத் தேடுவதுபோல ஆகிவிட்டது.. - என, நெல்லை அவர்கள் கூறியிருக்கின்றார்..

  நான் சொல்கின்றேன் -
  பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியைத் தேடுவதைப் போல!.. என்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை... துரை செல்வராஜு சார் இன்னும் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், படத்தில் தஞ்சாவூர், சோழப் பிரதேசத்தைத் தேடுவது போல என்று எழுதியிருப்பார்.

   நீக்கு
  2. நன்றி துரை. உண்மையில் பொன்னியின் செல்வன் படத்தில் சோழநாட்டையே தேடணும் போல! :(

   நீக்கு
 10. நான் இன்று தளத்திற்கு வந்தபோது 5: 05.. ஏனோ எதுவும் எழுதுவதற்குத் தோன்றவில்லை..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. பாதுகாப்பைப் பற்றி அறிந்து கொள்வது சிறப்பு...

  படங்கள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த இடத்துக்குப் போனாலும், என் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். இரண்டு சந்தர்ப்பங்களில், தெய்வ அருளால், சரியான இடத்திற்குச் சென்று சேர்ந்திருக்கிறேன், அசந்தர்ப்பங்கள் எதுவும் நடக்காமல்

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. கணினியில் பெரிதாக்கி பார்த்து இரசித்தேன் தமிழரே... வசனங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 15. தாய்வான் படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் நெல்லை பேச்சும் அருமை.
  தைவான் அனுபவ கட்டுரை நன்றாக இருக்கிறது.
  வெளி நாடுகளில் செல்லும் இடமெல்லாம் வளர்ப்பு செல்லங்களை பெருமிதமுடன் அழைத்து வருவார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை 'செல்லங்கள்' என்று யாரைக் குறிப்பிட்டேன் என்ற சந்தேகம் யாருக்கும் எழவில்லை.

   அங்கு வித வித வளர்ப்புப் பிராணியைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அப்போது எனக்கு அவற்றையெல்லாம் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று தோன்றவில்லை.

   நேற்றைக்கு முந்தைய தினத்தில், விழுப்புரம் அருகே இருக்கும் கிராமத்தில், நாங்கள் நடந்துவந்துகொண்டிருந்தபோது, பெரிய நாய் ஒன்று (4 அடிக்குமேல் உயரம் இருக்கும்) எங்களைப் பார்த்துக் குரைத்தது. ராஜபாளையம் என்று சொன்னார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பாய்ந்து கடித்தால் 2 கிலோ சதை காலியாகிடுமே

   நீக்கு
  2. நன்றி கோமதி அரசு மேடம்..... என்ன வளர்ப்புச் செல்லங்களோ... குட்டி நாயாக இருந்தால் பரவாயில்லை. பெரிய ஓநாய் சைஸ், கன்று சைஸாக இருந்தால், அதிலும் அவைகள் கோப முகத்துடன் இருந்தால் நமக்குத்தான் பயமாக இருக்கிறது..

   இரண்டு நாட்கள் முன்பு விழுப்புரம் அருகே கிராமத் தெருவில் நாங்கள் நடந்துவந்துகொண்டிருந்தபோது, 4 அடி போன்ற ஒரு நாய் எங்களைப் பார்த்துக் குரைத்தது. கேட்டால் ராஜபாளையம் என்றார்கள். பாய்ந்து கடித்தால் 2 கிலோ சதை காலி. அவைகளை எப்படி செல்லங்கள் என்று அழைப்பது?

   நீக்கு
  3. எபி தளத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

   உங்களின் பின்னூட்டத்திற்கு இரண்டு முறை (வெவ்வேறு நேரங்களில்) நீண்ட பதிலளித்தேன். அவற்றைக் காணவில்லை.

   நல்லவேளை 'செல்லம்' என்பது யார் என்று யாருமே கேட்கவில்லை

   நீக்கு
  4. இந்தச் செல்லம்.. பிரச்சனை பெரும் பிரச்சனை போல இருக்கே:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. ஆமா !! யாரு அந்த செல்லம் ??? கொஞ்சம் நாள் எட்டி பாக்காட்டி என்னென்னமோ நடக்குது

   நீக்கு
  6. நான் கேட்டுட்டேன் நானும் கேட்டுட்டேன்  யார் அந்த செல்லம் ஆனாலும் ஒரு இடைவெளி விட்டு வந்தா நிறைய மாற்றங்கள் தெரியுதே :)))

   நீக்கு
  7. நான் செல்லம் என்று சொன்னது, நாயைக் கூட்டிவந்த அழகுப் பதுமையை. ஆனால் நீங்கள் நினைப்பது நாயை. நான் என்ன செய்யட்டும்?

   நீக்கு
  8. ஹூம், நானும் மாசக்கணக்காப் போடும் கருத்துகள் காணாமல் போகின்றன என்பதைப் பலமுறை எ/பியிலும் துரை/கில்லர்ஜி/கமலா ஆகியோரின் தளங்களிலும் சொல்லி இருக்கேன். யாரும் கண்டுக்கலை.. நல்லவேளையா மெயில் பாக்சில் அநேகமாக் கிடைச்சுடும் என்பதால் திரும்ப எடுத்துப் போடுவேன். அது மாதிரி நீங்களும் பண்ணுங்க நெல்லை. அப்போத் தான் நான் சொன்னதில் உள்ள கஷ்டம் புரியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 16. உலகம் சுற்றிய வாலிபன் இதயம் பேசுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போவும் வாலிபன் இல்லை...இப்போதும் இல்லை.

   இருந்தாலும் என்னிடம் இருக்கும் புகைப்படக் குவியல், பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவுகிறது

   நீக்கு
  2. இப்போதெல்லாம். பின்னூட்டங்கள் காணாமல் போகிறது. காரணம்தான் புரியவில்லை. நான் இதற்கு எழுதியிருந்தது, 'அப்போதும் வாலிபன் இல்லை. இப்போதும் இல்லை. ஆனால் என்னிடம் இருக்கும் புகைப்படக் குவியல்களால் நினைவை மீட்டெடுக்க முடிகிறது'

   நீக்கு
  3. ஸ்பாமில் மாட்டும் பின்னூட்டங்களை பார்க்கும்போது உடனடியாக எடுத்து விட்டு விடுவோம்.  இப்போதான் வந்தேன்.  ஆறு பின்னூட்டங்களை சிறையிலிருந்து  விடுவித்திருக்கிறேன்!

   நீக்கு
 17. அதென்னமோ அதிரா எ பி யில் எட்டிப் பார்த்தா கீசாக்காவுக்கு எல்லா கஷ்டமும் பறந்து போய் மீ பர்ஸ்ட் னு ஓடி வர முடியுது. அப்போ அதிரா தான் வைத்தியர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஜே கே ஐயா.. இதை இப்போதான் பார்க்கிறேன், ஆனா ஆர் கண்ணுக்கும் இது தெரியல்ல.. கீசாக்காவுக்கும் தெரியல்ல:))

   நீக்கு
  2. ஹாஹாஹாஹாஹா, என்னவோ சொல்லுவாங்களே! காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாப்போல என்று! அது மாதிரி அதிரா வரவும் நான் ஓடி வந்தேன்னு சொல்றீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு. இப்படியே இருக்கட்டுமே!

   நீக்கு
 18. // நல்லவேளை... துரை செல்வராஜு சார் இன்னும் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை.//

  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் அரசலாற்றில் குளிக்கும் போது நினைத்துக் கொள்வேன் - இந்த ஆற்றில் தானே குந்தவையும் வானதியும் ஓடத்தில் வந்தார்கள்.. என்று..

  இன்றைக்கு கல்கி அவர்களின் குந்தவையைக் காணவில்லை..

  சரி.. நந்தினி?...

  நந்தினியுமா காணாமல் போக வேண்டும்!..

  இது வேறொரு பொன்னியின் செல்வன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கும்பகோணம் அருகே உள்ள இடங்களுக்குச் செல்லும்போது (குறிப்பாக பழயாறை வடமேற்றளி அருகில் இருக்கும் இடங்கள்), இங்குதானே அரச குலத்தவர் குழந்தைகளாக நடமாடியிருப்பர். அவர்கள் எப்படி ரகசியங்களைப் பரிமாறிக்கொண்டிருப்பர், எப்படி தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களை அடையாளம் கண்டுகொண்டிருப்பர் என்றெல்லாம் யோசிப்பேன்

   நீக்கு
  2. இதைத்தான் ரத்தத்தில் ஊறியது என்பார்கள்..

   உங்களுக்கோ எனக்கோ பாரம்பரியங்களுக்கு எதிராக பேசுவதற்கு வருமா?..

   பிழைகளை சரி செய்யும் நோக்கம் வேறு..

   குந்தவையும் ரவிதாசனும் ரகசிய தொடர்பில் இருந்தார்கள்

   என்று இன்னும் எவனும் கிளம்பி வரவில்லை..

   நீக்கு
  3. நீங்க வேற... சில கற்பனைகளை நம்மால் டைஜஸ்ட் செய்ய முடியாது. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் மிக நன்றாக நாவல் படைத்திருந்தாலும், ராஜராஜன், குந்தவையின் மகன் என்ற ரேஞ்சுக்கு எழுதியதால், சர்க்கரைப் பொங்கலில், பாகற்கான் தான் போட்டதுபோல ஆகிவிட்டது.

   நீக்கு
  4. ஆமாம், ஆனால் ஆதாரங்கள் எனப் பலவற்றைச் சொல்லி இருக்கார்.

   நீக்கு
 19. அட்டகாசமான, எபியின் ஞாயிறு!!! கடந்த வாரங்களையும் தான் சொல்கிறேன்.

  நெல்லை ஆதிகேசவனின் இருப்பிடப் புகைப்படங்களைப் பார்த்தேன் அருமை....ரொம்ப ரசித்த்ப் பார்த்தேன். அது சரி அங்கு படங்கள் எடுக்க அனுமதித்தாங்களா?

  அடுத்து இன்றைய பதிவுக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவட்டாறு கோவிலில் எப்படியோ படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. பொதுவா யாத்திரைக்குக் கூட்டிச் செல்பவர், நான் படங்கள் எடுத்துப் பகிர்வதனால், அதற்கு இடம் கொடுப்பார். ஆனால் சொல்லிடுவார், வம்பு வரும் பார்த்து எடுங்க என்று. அப்போது பாலாலயம். அதனாலும் எடுக்க முடிந்தது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 20. நல்ல மழை.....கரன்ட் கட்டாகிவிட்டது நெட் போவதற்குள் இன்றைய பகுதிக்கு ஒரு கருத்து போட்டுவிட்டு கரண்டும் நெட்டும் வந்ததும் வருகிறென் .

  படங்கள் அட்டகாசம், நெல்லை.....நம்ம் ஊர் மொழியில் கலக்கல்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்க வெறும் தூரல்தான். பெரும் மழையையெல்லாம் காணோம்.

   நீக்கு
  2. இங்கே விட்டு விட்டுப் பெய்கிறது.

   நீக்கு
 21. குரங்காரும் ஆமைகளும் அருகருகே போட்டுட்டு அதற்கு உங்கள் கருத்து செம ரசித்துச் சிரித்தேன்''

  கீதா

  பதிலளிநீக்கு
 22. ஆஆஆ விடிய வந்து திறந்தேனா, நெ தமிழன் 4 நாட்களையும் மொத்தமாச் சேர்த்து 9 கிலோ மீட்டர் நடந்தேன் என சொல்லியிருந்தாரா.. உடனேயே மீயும் நடக்க ஓடிட்டேன்.. 3.5 கிலோமீட்டர் நடந்திட்டேன் ஹா ஹா ஹா டெய்லி 2 கிலோமீட்டருக்குக் குறையாமல் நடக்கோணும் எனக் கங்கணம் கட்டி நடக்கிறேனாக்கும்...

  சரி அது போகட்டும் , உண்மையில நான் புளொக்குக்கு வராத காரணத்தை ஒரு போஸ்ட்டாக எழுதோணும் என நினைக்கிறேன்.. முடியல்ல:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டெய்லி 2 கிமீ நடக்கணும்னா, அதுக்கு பக்கத்துல பார்க்லாம் இருக்கணும். இருக்கா? உங்க ஊர்ல காலநிலை சூப்பராக இருக்கும். நான் இருக்கும் ஊரிலும் அப்படித்தான்.

   புளாக்கை விட்டு மறைவது சில வருடங்களாக ஃபேஷனாகிவிட்டது. அதற்குக் காரணம் சோம்பேறித்தனம் என்றுதான் நான் நினைப்பேன்.

   நீக்கு
  2. இங்கு நடக்க சைக்கிள் ஓட என சூப்பர் இடங்கள் வீட்டைச் சுத்திச் சுத்திக் கட்டியிருக்கினம், பார்க் இருக்குது பேர்ட்ஸ் இருக்குது, பொண்ட் இருக்குது, நடக்கும்போது பிரெட் பிஸ்கட் கொண்டுபோய் அவையளுக்குக் குடுப்பது ஒரு டனி டுகம்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  3. சோம்பேறித்தனம் இல்லை, இது வேஏஏஏஏற காரணம், கொம்பியூட்டரைத் திறந்து கொமெண்ட் போட வெளிக்கிட்டால் முடியாமல் போயிடுது எரிச்சலாகி விட்டிடுறேன்... டமில் பொண்ட் படுத்தும் பாடு கர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. // டமில் பொண்ட் படுத்தும் பாடு கர்ர்ர்ர்ர்ர்// இன்றைக்கு நான் எழுதின பத்து பின்னூட்டங்களாவது காணாமல் போய்விட்டது. ரொம்பவே எரிச்சலா இருக்கு. அது இருக்கட்டும்... டமில் ஃபாண்டில் என்ன பிரச்சனை? அழகியை இன்ஸ்டால் செஞ்சீங்கன்னா பிரச்சனை தீர்ந்தது. தமிழ்ல சந்தேகம் வந்தால் சிமியோன் டீச்சர்ட்டதான் கேட்டுக்கணும்

   நீக்கு
  5. /உடனேயே மீயும் நடக்க ஓடிட்டேன்..//
   ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா முடில அது என்ன ஒன்று நடக்கணும் இல்லைனா ஓடணும் நடக்க ஓட இந்த பாகிஸ்தான் தொட்ட மேடமால் மட்டுமே முடியும் 

   நீக்கு
  6. நாங்கல்லாம் போயிட்டு வந்து பதிவெல்லாம் போட்டு நாலைந்து வருஷங்கள் ஆச்சு. இப்படியா பெருமை அடிச்சுக்கிட்டோம்! இந்த அதிரடி என்னமோ பாகிஸ்தானையே தோற்கடிச்சுட்டாப்போல் ஒரே பீத்தல்!

   நீக்கு
  7. நடக்கிறதுக்காக ஓடினேன் அது டப்பா?:))

   நீக்கு
  8. ஆஆஆஆஆஆ கீசாக்காவும் லாண்டட்.. கீசாக்க நீங்க மேலே ஜே கே ஐயாட கொமெண்ட்டைப் படிக்கவில்லைப்போலும்:))

   நீக்கு
  9. haahaahaa அதிரடி! படிச்சுட்டுக் கருத்தும் போட்டிருக்கேனே. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுனு ! ஹெஹெஹெஹெஹெஹெ

   நீக்கு
 23. கப்சன்ஸ் எல்லாம் சூப்பராப் போட்டிருக்கிறார் ஆனா தலைப்பு மட்டும் ஏதோ எக்ஸாம் பேப்பரில் பதில் எழுதுவதைப்போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாஹா பார்டர் போயிட்டு, அதிரா பண்ணற அலட்டல் தாங்கலை. ஏதோ இந்தியா முழுவதையும் அளந்துவிட்டதைப் போலயும், பாகிஸ்தான் பார்டரைத் தொட்டு போர் புரிந்துவிட்டு வந்ததைப் போலயும்..... வாஹா காணொளி நல்லா இருந்தது. ஆனால் பொற்கோயிலை இன்னும் அதிகமாக எடுத்துப் போட்டிருக்கலாம். ப்ளாக் எழுதியிருந்தீங்கன்னா அருமையான பதிவு கிடைத்திருக்கும்.

   நீக்கு
  2. அது 10 நிமிடத்துக்கு மேல வீடியோப் போட்டால் மக்களுக்கு போரடிக்கும் என மிரட்டுகிறார்கள் அதனால நிறைய வெட்டி வெட்டி ஸ்பீட்டாக்கி, குறுக்கிப் போடுறேன், ஆனா பாகிஸ்தார் போடர் செரிமனி மட்டும் எனக்கு நல்லாப் பிடிச்சதால, ஆரும் பார்க்காவிட்டாலும் பறவாயில்லை, எனக்கது ஒரு நினைவுச் சேர்க்கையாக இருக்கட்டும் என கொஞ்சம் பெரிசாக்கிப் போட்டேன்.. புளொக் எழுதப்போகிறேன், மும்தாஜ் ஆன்ரியைப் பற்றி எழுதோணும் அவ இருந்த வீட்டில நான் போய் உலாவிய கதை எல்லாம் சொல்லோணும் எல்லோருக்கும்:))
   ஹையோ அஞ்சு இங்கின இல்லை இப்போ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  3. ///நெல்லைத் தமிழன்9 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 6:07
   வாஹா பார்டர் போயிட்டு, அதிரா பண்ணற அலட்டல் தாங்கலை.//

   ஹா ஹா ஹா இதுக்கே இப்பூடி எனில், அதிரா போஸ்ட் போட்டிருந்தால் ஹா ஹா ஹா பலபேர் எமேஜென்சிக்குப் போயிருப்பினமாக்கும்.. தாஆஆஆங்க முடியாமல் ஹா ஹா ஹா:))

   நீக்கு
  4. //மும்தாஜ் ஆன்ரியைப் பற்றி எழுதோணும் // நீங்கள் guide வைத்துக்கொண்டீர்களா? நான் முதல் முறை ஒரு கைடை வைத்துக்கொண்டேன் (ரொம்ப டீடெயிலா எதுவும் சொல்லவேண்டாம்..நானே ஹிஸ்டரி படித்திருக்கிறேன். இந்த இடம் இன்னது, அதன் முக்கியத்துவம் என்று ஒரு மணி நேரத்துக்குள் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டேன்)

   அதைப் பற்றி இங்கு நிச்சயம் ஒரு பதிவு படங்களோட வரும். நீங்கள் எழுதுவதற்கு முன்பா என்பது தெரியவில்லை.

   நீக்கு
  5. பொற்கோவில் போகணும்னு எனக்கு ஆசை. ஒன்று வெளில நிறைய புகைப்படங்கள் எடுக்கலாம். அப்புறம் அவங்க கிரந்தா சாஹிப்பைப் படிக்கும் இடத்தைப் பார்க்கணும். அங்க சப்பாத்தி சப்ஜி சாப்பிடணும். நீங்க என்னடான்ன... 50 பேர் கியூல இருக்காங்கன்னு, அந்த அருமையான எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிட்டு வாஹா பார்டருக்கு அவசர அவசரமாப் போயிட்டீங்க. அவங்க உணவு பரிமாறும் முறை (பக்தியோட, அன்போட)... எல்லாம் மிஸ் பண்ணிட்டீங்க

   நீக்கு
  6. ஆக்ரா கோட்டை போனீங்களே... அங்க, ஜோதாபாய் அக்பர் வணங்கிய கிருஷ்ணன் கோவில் இருந்த இடம் பார்த்தீங்களா? ஷாஜஹானுக்கு அனுமதிக்கப்பட்ட அவனுடைய ஆயிரம் பெண்கள் (காதலிகள்/மனைவிகள்) தங்கின இடங்களைப் பார்த்தீங்களா? ஆனா நிச்சயம் அக்பர் பையன் உபயோகித்த குளிக்கும் தொட்டியைப் பார்த்திருப்பீங்க

   நீக்கு
  7. நீங்க அமிர்தரஸ் பொற்கோவில்ல, பிரசாதம் (சப்பாத்தி சப்ஜி) சாப்பிடும் வாய்ப்பை இழந்துட்டீங்க. அவங்க ரொம்ப பக்தியா அன்பா எல்லோருக்கும் உணவு கொடுப்பாங்கன்னு படிச்சிருக்கேன். இன்னும் நிறைய படங்கள் எடுத்து பதிவில் எழுதியிருக்கலாம். ஆனால் வாஹா பார்டர் செல்வதும் முக்கியம்தான்.

   நீக்கு
  8. //பாகிஸ்தான் பார்டரைத் தொட்டு போர் புரிந்துவிட்டு வந்ததைப் போலயும்..///

   ஆமா நல்லவேளை இங்கே வெளிநாட்டில் இப்படி castles இருக்கும் இடங்களில் போர் வீரர் உடை வாள்  எல்லாம் கிடைக்கும் அப்படி வாஹா எல்லையில் வைக்கலை .இருந்திருந்தா பாகிஸ்தானுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடிய வாஹா எல்லையில் வாகை சூடியன்னு ஒரு அடைமொழி ஒரு வருஷத்துக்கு ஓடியிருக்கும் :))))))))

   நீக்கு
  9. அது வாஹா இல்லை. Wagha Border (Attari)

   நீக்கு
 24. ஓணானின் மகராசனா செம!!! ஆமாம் அந்த வகைதானே சொல்லியா கொடுக்கணும்!!

  தங்கச்சிக்குத் தப்பாத அண்ணன்!! ஆங்கிள் பாத்து பாத்து ஃபோட்டோ க்ளிக்கித் தள்ளிட்டீங்க!!

  அதே போல எந்த ஊருக்குப் போனாலும் அங்க என்னென்ன இடங்கள் இருக்கு பார்க்க என்று கிளம்ப ஆசைப்படுவேன். நான் டக்குபுக்குனு கிளம்பிப் போயிட முடியாதே.....இதோ இப்ப ஏரியா மாறினாலும் முதல்ல இங்க பக்கத்துல்ல என்ன இருக்குன்னுதான் பார்த்துக் கொண்டேன்.

  ஆமாம் சாப்பாடு பத்திக் கவலைப்பட்டா எந்த ஊருக்கும் போய்ச் சுற்றிப் பார்க்க முடியாது. என்ன கிடைக்கிறதோ அதை வைத்து ஓட்டிவிட வேண்டியதுதான்...சைவ உணவு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆ கீதாவும் இங்கின கம்பிமேலதான் போல:)).. கீத்ஸ் நலம்தானே?.. மீயும் நலம்.. கேய்க்காமலே சொல்லிட்டேன் என்னைப்பற்றி:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
  2. கீதா ரங்கன்(க்க்க்க்க்க்காகாகா) பெண்களைவிட ஆண்களுக்கு இந்த விஷயத்தில் சிறிது சுதந்திரம் அதிகம். நான் டக்கு டக்குன்னு வெளில கிளம்பிவிட முடியும். மனைவியைக் கூப்பிட்டால், பசங்களுக்குச் சாப்பாடு, மற்ற வேலைகளெல்லாம் முடிந்தால்தான் கிளம்பமுடியும்.

   சுற்றிப் பார்க்கணும்னா, சாப்பாடு போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. அப்படிச் சுற்றிப்பார்த்த இடங்கள் ஏராளம்.

   நீக்கு
  3. //மீயும் நலம்// - ஏஞ்சலின் எப்படி இருக்காங்கன்னும் எழுதுவீங்கன்னு பார்த்தால்.....

   நீக்கு
  4. ஹாஹாஹா நலமே!! அதிரா!!! பாகிஸ்தானைத் தொட்ட வீராங்கனையே!!! அதிராக்கு பதில் வீராங்கனைன்னு போட்டிருக்கலாமே!!
   பாகிஸ்தானைத் தொட்டீங்க....நல்லகாலம் அங்கின காலை வைக்கலை போல!!

   கீதா

   நீக்கு
  5. அஞ்சுவை மிரட்டிட்டேன், இங்கின வரோணும் வராட்டில் இன்னும் வெயிட் ஏறும் என ஹா ஹா ஹா.. ஏறின வெயிட்டோட உருண்டு பிரண்டு இங்கின அவ வந்து சேர எப்பூடியும் உங்களுக்கு இருட்டிடும்:)).. ஹையோ சனி அங்கிள் இப்போ வக்கிரத்தில நிற்பதால என் வாயை என்னால அடக்க முடியல்லியே ஜாமீஈஈஈஈஈஈ:))..

   நெ தமிழன் உங்களுக்கு ஜனவரி 17 உடன் ஆஹா ஓஹோ வாமே:)) யூ ரியூப்பைத் திறந்தாலே.. உங்கட ராசி பற்றித்தான் புகழ்கிறார்கள்... கூரையைப் பிரிச்சுக் கொண்டு பணம் கொட்டுமாமே ஹா ஹா ஹா ஓடிப்போய் ஒரு லொட்ரி எடுத்து வந்து விழுந்திட்டுதோ எனப் பார்த்தேன்.. ஹா ஹா ஹா ரிக்கெட் காசுகூட வரேல்லை ஹையோ ஹையோ:))

   நீக்கு
  6. ///அதிராக்கு பதில் வீராங்கனைன்னு போட்டிருக்கலாமே!!///

   .நோ கீத்ஸ் நோ.. அது எனக்குத் தற்பெருமை புய்க்காதாக்கும்:)) ஹா ஹா ஹா நல்லவேளை என் செக் இன்னும் இங்கு வரல்லே:))

   நீக்கு
  7. //உங்களுக்கு ஜனவரி 17 உடன் ஆஹா ஓஹோ வாமே:)) // - கூரையெல்லாம் பிச்சுக்கிட்டு பணம் கொட்டவேண்டாம். எனக்கு நியாயமாக வரவேண்டிய 3 லட்சம் அமெரிக்கன் டாலருக்கு மேலான பணம் வந்தால் சந்தோஷம்தான்.

   நீக்கு
  8. கீதா ரங்கன்(க்க்க்க்க்க்காகாகா)//

   ஹாஹாஹா நினைச்சேன்.....என் விஷயத்தில் வீட்டு வேலை என்பதை விட....அது எல்லாம் சமாளித்துவிடுவேன்...அதுவும் வெளியில் செல்ல வேண்டும் என்றால் பக்கா ப்ளானிங்காக இருக்கும். வீட்டாருக்குப் பிடித்தால்தானே இறங்க முடியும்!!!!

   கீதா

   நீக்கு
  9. ////அதிராக்கு பதில் வீராங்கனைன்னு போட்டிருக்கலாமே!!///  @ கீதா இப்படியா அப்பாவியா இருப்பீங்க 
   அதிரா சுட்டது நாளை உளுந்து வடை கொஞ்சம் பஜ்ஜி ரெண்டு எண்ணையில் முங்கின பூரி அவ்ளோதான் இதுக்கெல்லாம் வீராங்கனைனு சொல்லப்படாது :))

   நீக்கு
  10. ஏஞ்சலும் வந்தாச்சா? அதான் மழை!

   நீக்கு
 25. //நல்ல English bread வாங்கி, ஊறுகாய் தடவிச் சாப்பிட்டுவிடுவேன். //

  ஹா ஹா ஹா இங்கும் யூரோப் நாடுகளில் பிரெட்கள் விதம் விதமாக சூப்பர் சுவையில் கிடைக்குது, எனக்கும் இந்த மெதேட் விருப்பம், ஊறுகாயுடன் சாப்பிட்டிருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூரோப்பில் ப்ரெட் எப்போதுமே சூப்பர். நான் வேலை பார்த்த கம்பெனி சூப்பர்மார்க்கெட்டிலும், பிரிட்டன் செய்முறையில்தான் எல்லாமும் செய்வாங்க. எனக்கு ஹாட் க்ராஸ் பன் போன்றவை ரொம்பவே பிடிக்கும். அதெல்லாம் ஒரு காலம்.... இந்தியாவில், என்னத்தை ப்ரெட் பண்ணறாங்க....

   நீக்கு
  2. நானும் சொல்ல வந்தென்...இங்கிலாந்து ப்ரெட், (யுரோப் ப்ரெட்,} பிஸ்கட்ஸ், ஹார்லிக்ஸ், வீட்டபிக்ஸ், ஓட்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

   இலங்கையிலும் கூட ஒரு காலத்தில் பான் வெரைட்டிஸ் இறக்குமதியானதும் அங்கு தயாரிப்பதும் கூட அவ்வளவு சுவையுடன் இருக்கும்...ஊறுகாய் செம காம்போ

   கீதா

   நீக்கு
  3. இலங்கையிலும் உண்மையில் பாண் நன்றாக இருக்கும், அதிலும் ரோஸ் பாண் என ஒன்று செய்வார்கள் அது இப்பவும் கனடாக் கடைகளில் செய்து விற்கிறார்கள், சூப்பராக இருக்கும்.

   நீக்கு
  4. பாதொஅ......நினைவுபடுத்திட்டீங்க....சின்ன வயசில் இலங்கையில் பாண் வெரைட்டிஸ் அத்தனை சுவைத்திருக்கிறேன். ஆமாம் ரோஸ் பான்.....
   நாம் கேட்பதை பேக் செய்தும் கொடுப்பாங்க...நாங்கள் இருந்த வீட்டருகில் ஒரு பேக்கிங்க் கடை உண்டு...இஞ்சி பிஸ்கட் சுட சுட பேக் செய்து தருவார்கள் இதுவரை அப்படியான சுவை பிஸ்கட் சாப்பிட்டதில்லை. வீட்டில் செய்திருக்கிறேன் ஆனால் அதன் சுவை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அங்கு நமக்குத் தேவையானதை கணாடிக் கூண்டில் இருப்பதில் சுட்டிக் காட்டினால் அளவும் சொன்னால் பேக் செய்து தந்துவிடுவார்கள் அப்படி பாண் கூட வாங்கியதுண்டு. ஒவ்வொரு ஞாயிறும் காலை உணவு இதாகத்தான் இருக்கும் கூட வெண்ணை அத்தனை சுவையாக இருக்கும்....தாத்தாவும் நானும் தான் போவோம் தாத்தா எனக்குப் பிடித்ததைச் சொல்லி வாங்குவார்.

   கீதா

   நீக்கு
  5. இலங்கைல 'பாண் வெரைட்டீஸ்' செய்ய ஆரம்பித்தது 1950ல. அப்போ இவங்க சின்னப் பெண்ணாம். தாத்தாவோட போனாங்களாம். அப்படீன்னாக்க இந்த கீதா ரங்கன் அக்காவா இல்லை ஆண்டியா?

   நீக்கு
  6. கீதாவின் அந்தநாள் ஞாபகத்தைக் கிளறி விட்டிட்டேனோ ஹா ஹா ஹா

   நீக்கு
 26. //ஒவ்வொரு பயணத்திலும் ஏதாவது ஒரு இடத்தைப் பார்த்து வருவேன். அப்படி நான் பார்த்த இடங்களைப் பற்றிய படத் தொகுப்பை எங்கள் பிளாக்கிற்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறேன். //

  ஆஆஆஆஆஆஅ அஞ்சூஊஊஊஊஊஊஉ ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிங்கோ, நான் வழமைபோல புகைக்கூட்டுக்குக் கீழயே இருந்திடுறேன்:))... ஹா ஹா ஹா கரெக்ட்டான நேரம்தான் மீ கால் பதிச்சிருக்கிறேன் புளொக்குகளில்:)).. அதிரா இல்லாமல், இங்கின கிளவி கேய்க்க ஆருமே இல்லை:)).. இப்போ வந்திட்டேனெல்லோ.. என் செக் ஐயும் [(அவ இப்போ வெயிட் கூடிட்டா:)), இது நமக்குள்ள இருக்கட்டும் இல்லை எனில் அடிப்பா:)))].. கஸ்டப்பட்டு இழுத்து தூக்கி வந்து இங்கின களம் இறக்கிட வேண்டியதுதேன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் சொல்றீங்க அதிரா..நீங்க ரெண்டுபேரும் ப்ளாக்கைத் தூசி தட்டி வருடக்கணக்காக ஆகிவிட்டது. நீங்கள் யூடியூப் போன பிறகு, கால் நகம் வெட்டுவது முதற்கொண்டு காணொளியாப் போட ஆரம்பிச்சுட்டீங்க. அதுக்கு கேப்ஷன், மியூசிக் என்று மெனெக்கெடறீங்க. அதைவிட பதிவுகள் எழுதினா பலரும் படிப்பாங்க.

   அச்சப்பம் செய்வதற்கே கணவன் துணையை நாடிய ஏஞ்சலினுக்கு ஏன் வெயிட் கூடாது? ஹா ஹா ஹா. உங்க ரெண்டு பேருக்குமே, பசங்களை யூனிக்கு அனுப்பிவிட்டதால் வெயிட் கூடாவிட்டால்தான் ஆச்சர்யமா இருக்கும்.

   விரைவில் என் புகைப்படம் இங்கு வரும். பார்த்துவிட்டு.... அடச்சீ..இதுக்கு புகைப்படம் போடாமலேயே இருந்திருக்கலாம். நாங்க வச்சிருந்த ரெஸ்பெக்டே (அப்படி ஒண்ணு இருந்தால்) போயிடுச்சுன்னு எழுதாம இருந்தால் சரிதான்

   நீக்கு
  2. என்ன ஏதாச்சும் வேஷம் போட்டு இல்ல மாஸ்க் போட்டு எடுத்த புகைப்படமா!!!!! நெல்லை??!!

   கீதா

   நீக்கு
  3. ///
   விரைவில் என் புகைப்படம் இங்கு வரும். ///

   ஹா ஹா ஹா இந்தச் சலசலப்புக்கெல்லாம் மீ அசைய மாட்டேனாக்கும்:)) .. கோபு அண்ணனுக்கு ஒரு ஐஸ் வச்சால், உங்கட அந்த பிரயாணத்தின்போது அனுப்பிய போட்டோவை அனுப்பி விட்டிடுவார் ஆனா இன்னும் ஐஸ் வைக்கேல்லை ஹா ஹா ஹா:))

   நீக்கு
  4. //என்ன ஏதாச்சும் வேஷம் போட்டு இல்ல மாஸ்க் போட்டு எடுத்த புகைப்படமா!!!!! நெல்லை??!//

   இல்லைக் கீதா நீங்க வேற:)) அந்த ஸூவில சிங்கம் புலிக்குப் பின்னால நிண்டு கை விரலைக் காட்டுவார் பாருங்கோ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. ///அச்சப்பம் செய்வதற்கே கணவன் துணையை நாடிய ஏஞ்சலினுக்கு ஏன் வெயிட் கூடாது? ஹா ஹா ஹா.///

   ஹா ஹா ஹா ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தோசம் மூக்கில் பொயிங்குதே:)).. ஹையோ ஆண்டவா.. அஞ்சுப்பிள்ளை இங்கின வரமுதல்..:) மீ ஓடிடுறேன் பின்பு வாறேன்..

   நீக்கு
  6. //நான் வழமைபோல புகைக்கூட்டுக்குக் கீழயே இருந்திடுறேன்:))...// இதைப் படிக்கும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள், பிராணிகள் நலக் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஏதோ அதிர்ச்சியில் இருந்த பூனையை வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள். அது வெளியிலேயே வராது. (மத்தவங்க இருந்தால்). அவர்கள் வீட்டுப் பெண்ணின் படுக்கையில் சுவாதீனமாகச் செல்லுமாம். அந்த உறவினரின் கணவர் (அவர்தான் எங்களுக்கு உறவு) பூனையை லைக் பண்ணுவதில்லை. இது மாத்திரம் அந்தப் பூனைக்கு எப்படியோ தெரிந்திருக்கு. அவர் இருந்தால், அவருடைய அறை, பூஜை அறை ஆகியவற்றிர்க்குச் செல்லாது. எனக்கு அந்தப் பூனையைக் காண்பித்தார்கள். அதன் கண்களில் ஒரு உயிர்ப்பு இருந்தது, சொல்லொணாத் துயரமும் தெரிந்தது.

   அங்கு பூனை இருப்பதே எனக்கு அங்குச் சென்றபோதெல்லாம் தெரியாது. ஹாலில், back bag மாதிரி ஒன்று, முழுவதும் transparentஆக, ஆனால் இரண்டு மூன்று துளைகளுடன் இருந்ததைப் பார்த்து இது என்ன என்று கேட்டபோது, அது பூனையை வைத்து வெளியில் கொண்டுபோக என்று சொல்லி, பிறகு அவரது அறையில் திரைச்சீலைக்குப் பின் உட்கார்ந்துகொண்டிருந்த பூனையைக் காண்பித்தார்.

   நீக்கு
  7. ந்த ஸூவில சிங்கம் புலிக்குப் பின்னால நிண்டு கை விரலைக் காட்டுவார் பாருங்கோ ஹா ஹா ஹா:))//

   சிங்கம் புலி பொம்மைன்னு சொல்லுங்க!!! இங்கின இருக்கற கரடி பொம்மை போல!!!

   கீதா

   நீக்கு
  8. நெல்லை, பொதுவாகவே பூனைகளும் சரி நாய்களும் சரி தங்களை வீட்டில் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அல்லது எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று வீட்டவர் நினைக்கிறார்கள் என்பது தெரிந்தால் புரிந்துகொண்டுவிட்டால் அவை அதை மீறுவதில்லை. ஒதுங்கியேதான் இருக்கும்.

   கீதா

   நீக்கு
  9. அவ்வ்வ்வ்வ் இந்த பூனையை பாருங்க //கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு இதோ வரேன்னு  சொன்னேன் அவ்ளோதான் அதை அரைகுறையா படிச்சிட்டு எதோ வெயிட் போட்டுட்டேன் என்று இங்கே குஷி ஆட்டம் போடுறாங்க :))
   யாரும் நம்பாதீங்க நான் நலமுடன் தான் இருக்கிறேன் என் ஹேண்ட் பேகைகூட என்னால் தூக்க முடில அவ்ளோ வீக்கா இருக்கேன் 

   நீக்கு
  10. @நெல்லைத்தமிழன்  .அந்த பூனையோ இல்லை எந்த பிராணியோ .குடும்பத்தில் அனைவருக்கும் விருப்பம் இருக்கணும் .
   இல்லேனா அந்த ஜீவனுக்கும் கஷ்டம்தான் .
   அதைவிட கீதா சொன்னதுபோல் அவற்றுக்கு நிறைய அறிவுண்டு தங்களை ஒருவருக்கு பிடிக்காட்டி அவரை  தவிர்த்துவிடும் .

   நீக்கு
  11. //என் ஹேண்ட் பேகைகூட என்னால் தூக்க முடில அவ்ளோ வீக்கா இருக்கேன் // - முன்னால கைவளை, அழகிய காதணி போன்றவைகளைச் சிலர் வாங்கி, அதனை ஒரு இடத்தில் தொங்கவிட்டு, அதைவைத்து காணொளியும் பதிவும் போட்டாங்களே அதுமாதிரி இல்லாமல், நீங்க, கைப்பையில் antique items நிறைய வாங்கிப்போட்டுவிட்டதால், தூக்க முடியவில்லையா? அல்லது ஒரு காலத்தில் 'குண்டுப் பூனை' என்று வெறுப்பேற்றியதால் பழி வாங்குகிறாரா?

   நீக்கு
  12. //தங்களை ஒருவருக்கு பிடிக்காட்டி அவரை தவிர்த்துவிடும் .// உண்மைதான். அது சிலரிடம் மாத்திரம் போகுமாம், பார்க்குமாம். மற்றவரிடம் செல்லாதாம். எனக்கு அந்தப் பூனையைப் பார்த்தபோது மனதை என்னவோ செய்தது. அதனையும் கௌரவமா வளர்க்கணும் என்று நினைத்த அந்த வீட்டுப் பெண்ணை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது.

   நீக்கு
  13. Bless Her..
   உண்மைதான் எல்லா உயிரும் கவுரவமா வாழ நாமும்  இடம் கொடுக்கணும் .

   நீக்கு
  14. என்னாது கை பாக்கைத்தூக்க முடியல்லியாமா:)) அது உடம்பில வெயிட் ஏறிட்டால் ஒரு கைகுட்டையைக்கூடத்தூக்க முடியாதெண்டு எங்கட அம்மம்மா சொல்லுவா:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊ

   நீக்கு
 27. ///அவ்வளவு தூரம் சென்று ஒரு உயிரியல் பூங்காவுக்கா செல்லவேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.//

  ஹா ஹா ஹா உப்பூடிக் கேள்வி எல்லாம் நாங்க கேய்க்க மாட்டோம்:)), ..
  அதுசரி எதுக்கு உயிரியல் பூங்கா போனீங்கள்?:)).. உங்களுக்கு இப்படிச் செல்லங்களைப் பெரிசாப் பிடிக்காதென எங்களுக்குத் தெரியுமே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு நாய்கள் பிடிப்பதில்லை. காரணம், சட்னு கடிச்சுடுச்சுன்னா என்ற பயம்தான்.

   எனக்கு எல்லா இடங்களும் சுற்றப் பிடிக்கும், அதிலும் நடந்து பார்க்க ரொம்பவே பிடிக்கும். அவங்க கோவிலுக்கெல்லாம் போயிருக்கேன். அவங்க வழிபடும் முறை, குறி சொல்வதுபோல, கடவுளின் விருப்பத்தை உணர்ந்துகொள்வது (அதுபற்றிப் பின்னர் எழுதுகிறேன்), கடவுளுக்கு பிரசாதங்கள் கொண்டுவந்து அவற்றை அங்குள்ள மேசைகளில் பரப்பி வைப்பது, அவற்றைப் பிறர் எடுத்துக்கொள்வர் என்று நினைக்கிறேன்.... காணொளிகளும் எடுத்திருக்கிறேன். அவற்றை எப்படிப் பகிர்வது என்று கௌதமன் சாரிடம் கேட்கவேண்டும்.

   நீக்கு
  2. அதிரா உங்களுக்குப் போட்டியா ஒரு ஆசிரமம்...தொடங்கிருக்கேன் தெரியுமா...ஹிஹிஹி.நெல்லைதான் என் பெயரில் ஓரு ஆசிரமம் தொடங்கிட்டார் தெரியுமோ!!!!

   கீதா

   நீக்கு
  3. எனக்கு நாய்கள் பிடிக்காது (பூனைகளும்தான்). அவை கடிக்கும் என்ற பயம்தான்.

   ஆனால் zooவில் நடந்து நிறைய மிருகங்கள், பறவைகள் பார்க்கப் பிடிக்கும். வெயில் இல்லை. கும்பல் இல்லை. ரொம்பவே டீசண்ட் ஆட்கள். வேறு நாட்டு ஆள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. என்ன ஒன்று... ஆங்கிலம் பேசுவது குறைவு (அனேகமாக இல்லை).

   நீக்கு
  4. புது இடங்களை ரசிக்கும் ஆசைதான். அங்குள்ள மக்களும் நல்லவங்க.

   நீக்கு
  5. 1. மெட்ரோல போகலாம். கொண்டோலா எனப்படும் விஞ்ச் (மலைமீது செல்லும்), உயிரியல் பூங்கா என்று இரண்டையும் பார்த்துவிடலாம்.
   2. அழகிய இயற்கைச் சூழலில் நடந்துசெல்லலாம். களைப்பே தெரியாது. தாய்வான் மக்கள் ரொம்ப ஃப்ரெண்ட்லி. ரொம்பவே கூட்டமும் இல்லை. அதனால் நிம்மதியாகப் பார்க்கலாம்.

   நீக்கு
  6. ///உங்களுக்கு இப்படிச் செல்லங்களைப் பெரிசாப் பிடிக்காதென எங்களுக்குத் தெரியுமே:))//

   தெளிவா குழப்புறீங்க மியாவ் :))  எந்த செல்லங்கள் :)))))))))))))))))))))))))))

   நீக்கு
  7. அவங்க, 'நாயை' mean பண்ணியிருக்காங்க. எனக்கு அவைகளைக் கண்டால் பயம். ஆனால் என் பெண்ணிற்கு அப்படிப் பயமில்லை. நாய் வளர்ப்போம் என்று என்னிடம் சொன்னாள். வேற வேலையில்லை என்று சொல்லிவிட்டேன்.

   ஆனால் zooவில் மிருகங்களைப் பார்க்கப் பிடிக்கும்.

   நீக்கு
  8. //நெல்லைத் தமிழன்9 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 7:40
   அவங்க, 'நாயை' mean பண்ணியிருக்காங்க.//

   கரீட்டூஊஊ:))..

   கீதா அந்த ஆச்சிரம அட்ரெஸ் பிளீஸ்ஸ்ஸ்:).. இப்பவே அஞ்சுவை அனுப்பி வைக்கிறேன்:))

   நீக்கு
  9. // காணொளிகளும் எடுத்திருக்கிறேன். அவற்றை எப்படிப் பகிர்வது என்று கௌதமன் சாரிடம் கேட்கவேண்டும்.// வாட்ஸ் அப் மூலம் எனக்கு அனுப்புங்கள். அதை எங்கள் blog youtube கணக்கில் பதிவேற்றி, நம் பதிவில் embed செய்துவிடலாம்.

   நீக்கு
 28. நெல்லை நாம் எடுக்கும் க்ளிக்ஸ் நமக்கு பின்னாளில் அதைப் பார்த்து நினைவுகளை மீட்டு ஒரு புத்துணர்வு கிடைக்கும்...அட என்று...

  நீங்கள் சென்றிருந்த வருடத்துலதான் முதன் முதலா பாண்டா ஜோடி சைனாவிலிருந்து தைவானுக்கு வந்திருக்காங்க!!! அதான் நீங்கள் பார்த்திருக்கீங்க...

  flamingo-பூநாரைகள் மிக அழகு!!!

  //அவ்வளவு தூரம் சென்று ஒரு உயிரியல் பூங்காவுக்கா செல்லவேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. //

  ஏன் நெல்லை எங்கு போனாலும் உயிரியல் பூங்கா இருக்கான்னு நானும் பார்ப்பதுண்டு....இதில் என்ன கேள்வி.....யாரும் போக மாட்டார்களா என்ன?

  கடைசிப் படம் செம க்யூட் பொதுவாகவே வெளிநாட்டினர் தங்கள் செல்லங்களையும் எல்லா இடத்துக்கும் கூட்டிப் போய்விடுவார்கள்.....

  எல்லாப் படங்களையும் ரொம்ப ரசித்தேன் நெல்லை. அழகா எடுத்துருக்கீங்க...வாழ்த்துகள் பாராட்டுகள்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லங்களைக் கூட்டிக்கிட்டுச் செல்லும் இடம் அவங்களுக்கு இருக்கிறது. அது கடல் முகத்துவாரம். அங்கு நம்மைப் பார்த்து வரைந்து தரும் ஆட்கள் உண்டு. நிறைய விளையாட்டுகள் உண்டு. உணவு உண்ணும் இடங்கள் ஏராளம். எப்படியோ அந்த உணவு வாசனையைப் பொறுத்துக்கொண்டு படங்கள் எடுப்பேன். (பெண்கள் அழகு. ஆனால் அவங்க உணவின் வாசம் எனக்குப் பிடிப்பதில்லை)

   "நீங்க வெஜிடேரியன்னுதானே சொன்னீங்க. அப்போ பீஃப் நூடுல்ஸ் சாப்பிடலாமே" என்றுதான் நான் அங்கு ஆபீஸ் விஷயமாகச் சந்தித்த தாய்வானீஸ் பெண் சொன்னார். ஹா ஹா

   நீக்கு
  2. இன்றைக்கு வெகு நீளமாக இதற்கும் இதற்கு முந்தைய அதிராவின் பின்னூட்டத்திற்கும் எழுதிய கருத்து காணாமல் போய்விட்டது. இது எனக்குப் புது அனுபவமாக இருக்கிறது. எபி ப்ளாக்ஸ்பாட்டில் ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை

   நீக்கு
  3. நிறைய இடங்கள் போவதற்கு இருந்தால், யானை மான்லாம் எல்லா இடத்திலும் பார்த்திருக்கிறோமே என்று போகமாட்டார்கள். ஆனால் வாங்கின மெட்ரோ டிக்கெட் காசுக்கு, மேப்பை வைத்துக்கொண்டு, செல்ல முடிந்த இடங்களுக்கெல்லாம் சென்றுவிட்டேன்.

   நான் எங்கு பயணம் சென்றாலும் நிறைய படங்கள் எடுப்பேன். அதனால் என் கேமராவைச் செக் பண்ணினாலே, நான் என்று எங்கு சென்றிருந்தேன் என்பதெல்லாம் தெரிந்துவிடும். கேமரா அனுமதிக்காத இடங்களுக்குப் போக நான் ரொம்பவே விரும்புவதில்லை. (தாய்வானில் ஒரு மியூசியம் பார்த்தேன். ஏகப்பட்ட கைவினைப் பொருட்கள், பழங்காலப் பொருட்கள். ஆனால் கேமராவை அனுமதிப்பதில்லை.

   நீக்கு
 29. ஆமா மீயும் முடிவுரை எழுந்த மறந்து கொமெண்ட்டுக்கு கமென்ட்:) பண்ணிக்கொண்டிருந்திட்டேன்...

  படங்கள் அழகு, கோயில் படங்களைக் காட்டிலும் இவை மிகத் தெளிவாக இருக்குது, கமெராவிலதான் அப்போ எடுத்திருப்பீங்கபோலும்... அதை விடக் கப்ஸன்ஸ் நன்றாக எழுதப் பழகிட்டீங்க... :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. ஒரு பதிவில் என் ஓவியத்துடன் படங்கள் வரும். இரண்டு படங்களுக்கு மேல் சேர்த்தால், அழகு போய்விடுகிறது.

   நீக்கு
  2. கோவில் படங்களும் நல்லாவே வந்திருக்கின்றன. ஆனால் ஒரே வரிசையில் இரண்டு படங்களுக்கு மேல் சேர்க்கும்போது அழகு போய்விடுகிறது. சில ஞாயிறுகள் கழித்து நான் வரைந்த படம் ஒன்றும் இங்கு வரும், சிற்பங்கள் வரிசையில்

   நீக்கு
  3. கோவில் படங்களும் மிக அழகாக வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இரண்டுக்கு மேல் ஒரே வரிசையில் வெளியிடும்போது அழகு குறைந்துவிடுகிறது. இனி இன்னும் கவனம் செலுத்துகிறேன்.

   நீக்கு
 30. எனக்கொரு டவுட்டூஊஊஉ:)) அந்த ஆனைப்பிள்ளைக்கு ஆண், பெண் வித்தியாசம் தெரிஞ்சிருக்கே அது எப்பூடி?:))... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 31. தைவான் பத்தியும் நிறைய தகவல்கள் அங்கு பொருட்கள் தரமானவை விலையும் குறைவு என்பது தெரிந்த விஷயம் என்றாலும் உங்கள் அனுபவங்களுடனான தகவல்கள் சூப்பர்.

  பெரும்பாலான விலையாட்டு சாமான்கல் பாட்டர் ஆப்பரேட்டட் எல்லாம் தைவான் தான் முன்பு வரும் என் மகன் சின்ன வயசில்

  கீதா

  பதிலளிநீக்கு
 32. யாரது இங்கே பாகிஸ்தான் தொட்டவங்க  :))நாங்கல்லாம் அகிலத்தையே தொட்டவங்க தெரியுமோ :)))
  இப்படிக்கு ஆல்ப்ஸ் தொட்ட அஞ்சு  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரிந்து, 'அகிலம்..அகிலம்...இந்தா அகிலாண்டம்' னு சீரியலில் ஒரு ஆண்டியைக் கூப்பிடுவதைத்தான் (பல சீரியல்களில் இந்தப் பெயரை வயதான பெண்ணுக்கு வச்சிருவாங்க) பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
  2. ஹாஹா வாங்க ஏஞ்சல்!!! அதானே வானையே தொட்டவங்கன்னு சொல்லிக்கலாம்!! இதுல வேற அவங்களுக்குத் தற்பெருமை புய்க்காதாம்!! கேட்டுக்கோங்க!

   கீதா

   நீக்கு
  3. ஆமாம் கீதா கொஞ்சம் அப்படி இப்படி பிசியா இருந்தா அதுக்குள்ள எவ்ளோ அட்டகாசம் :))) வாய்ப்பில்லை ராணி (அதிரா ) உங்களுக்கு வாய்ப்பில்லை :) இதோ வந்திட்டேன் :))

   நீக்கு
  4. எனக்குத் தெரிந்து சீரியல்கள்ளதான், 'அகிலம்..அகிலம்...அகிலாண்டம்'னு கத்திக்கிட்டு வருவாங்க. இவங்க அகிலத்தையே தொட்டவங்கன்னு சொல்றாங்களே. அவங்களை எப்போ பாத்திருப்பாங்க?

   நீக்கு
  5. அவ்வ்வ் நான் சொன்னது அகிலம் உலகம் :)) கொஞ்சம் நாளுக்கு முன்னாலே ஒரு சீரியல் பார்த்தேன் தொடர்ந்து 5 நாள் 6 வது நாள்  எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் பொது  நலன் கருதி பார்ப்பதை நிறுத்திட்டேன் :))) யப்பா சாமீஈ ஏஞ்சல் devilaa மாறிடும்போலிருந்துச்சி 

   நீக்கு
  6. என்னடா எங்கள் புளொக் இப்பூடி ஆடுதே என ஓசிச்சேன்ன்ன்ன்ன்:) என் செக் லாண்டட்டாஆஆஆஆ

   நீக்கு
 33. //நல்ல English bread வாங்கி, ஊறுகாய் தடவிச் சாப்பிட்டுவிடுவேன்.//
  எனக்கும் ப்ரெட் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதில் மாங்காய் தொக்கு ,களாக்காய் ஊறுகாய் sandwich போல சாப்பிட பிடிக்கும் .இப்போ ரீசன்ட்டா உலத்திய நெல்லிக்காய் ஊறுகாய் ஒரு பாட்டிலை சும்மா ஸ்வீட் சாப்பிடறாப்ல 3 நாளில் முடிச்சிட்டேன் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊறுகாய் கம்பெனிகள் உங்களுக்குச் சிலை வச்சிடப்போறாங்க ஏஞ்சலின். பார்த்து... ஆமாம் என்ன பிராண்ட் ஊறுகாய் அங்கே கிடைக்கிறது? வட இந்திய ஊறுகாய்களைவிட தென்னிந்திய ஊறுகாய்கள்தாம் ருசி.

   நீக்கு
  2. 777, ganesh brand thangam brand ,
   more from aha bazaar :)

   and eastern ,kerla brand grandma brand .i would never buy the other varieties

   நீக்கு
  3. நீங்கள் குறிப்பிட்டுள்ள பிராண்டுகள் நல்லா இருக்கும். ஊறுகாய்க்கு பூண்டுக்குப் பதிலா பெருங்காயம் போட்டிருக்காங்களா என்று நான் பார்ப்பேன்.

   நீக்கு
  4. யாரிபி :) பிராண்ட் வாங்கவே மாட்டேன் காரணம் எதை கசட்டு வாசனை வருது .அப்புறம் கேரளா வகையில் லொலொலிக்கா என்று ஒரு ஊறுகாய் இருக்கு களாக்காய் மாதிரியே ஆனா அது சின்ன இலந்தை பழ சைசில் ஊறுகாய் செஞ்சிருக்காங்க .சிவப்பரிசி மாப்பிள்ளை சம்பா கஞ்சி இந்த ஊறுகாய் போட்டிக்கு சாப்பிடுவேன் :)

   நீக்கு
  5. அடடா ஸூஊஊ வில ஆரம்பிச்சாலும் சாப்பாட்டிலதான் வந்து நிற்கிறார் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. எனக்கு நான் செய்யும் ஊறுகாய் தவிர எதுவும் பிடிக்குதில்லை, டெல்கியில விதம் விதமாக் கிடைக்குது சுண்டங்காய், கலாக்கா என ஆனா அத்தனையும் நிறைய எண்ணெய் ஊற்றி அவிச்சிருக்கினம்.. எனக்கு ஊறுகாயில் எண்ணெய் இருந்தாலே பிடிக்குதில்லை..

   நீக்கு
 34. அந்த ஆமை வகை terrapins .இங்கே வீடுகளில் செல்ல பிராணியா வாங்குறாங்க அதில் பலர் இவற்றை பராமரிக்க முடியாம canal பக்கம் தண்ணியில் விட்டுடுவாங்க .அதுங்க அப்படியா சர்வைவல் of தி fittest என்று பிழைச்சுக்குதுங்க .வெயில் கொஞ்சம் முகம் காட்டினா மாற கட்டைகள் மேலேறி கைகளையெல்லாம் விரிச்சி சூர்யகுளியல் எடுக்கும் காட்சி இங்கே பார்த்திருக்கேன்.அதுவும் வரிசையா எறும்பு   போல ஒரே லைனில் போவது அழகா இருக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரு நாய்கள் பெரும்பாலும் இந்த வகைதான். அழகா வளப்பாங்க, பிறகு அம்போன்னு விட்டுடுவாங்க. செல்லப் பிராணியா வளர்க்க ஆரம்பித்தால் கடைசி வரை வைத்திருக்கவேண்டாமோ?

   நீக்கு
  2. true:( if they can't maintain why should they go for it.

   நீக்கு
  3. //
   Angel9 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 7:53
   true:( if they can't maintain why should they go for it.///

   நோஒ இங்கிலீசுக் கொஸ்ஸன் பிளீஸ்ஸ் ஹா ஹா ஹா அந்த நேரம் அவிங்களுக்கு என்ன பிரச்சனையோ.. ஆசையில எடுத்து வளர்த்திருப்பாங்க பின்பு என்ன குடும்பத்தில குழப்பம் வந்துதோ ஆரு கண்டா:)).. அந்தத் திருச்செந்தூர் வைரவருக்கே வெளிச்சம்..

   நீக்கு
 35. தாய்வான் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 36. ஆஆஆஆஆஆஆ மீதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் 114 ஊஊஊஊஊ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ நீங்க பதினாறு இல்லையா? நாங்கதான் ஏமாந்துட்டோமா?

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ இந்தக் கொமெண்ட் ஸ்பாமுக்குப் போயிருக்கப்பிடாதோ:)) ஏதேதோ கொமெண்ட் எல்லாம் ஸ்பாமில போய் ஒளிக்குதாமே:)).. துக்கடையூர்ச் செந்தில் ஆண்டவா டெய்வானைக்கு ஒரு குட்டி நீலக்கல்லு மூக்குத்தி போடுவேன்:).. இந்தக் கொமெண்ட் மட்டும் அஞ்சுட கண்ணில பட்டிடப்பிடாதூஊஊஊஊஉ:))..

   நீக்கு
  3. //Angel9 அக்டோபர், 2022 அன்று பிற்பகல் 7:54
   hahahhaaaaa :) this is what i expected :))))))))))///

   சே..சே.. நேர்த்தி வைக்க லேட்டாயிட்டுதே:)).. இதெல்லாம் கரீட்டா கண்ணில பட்டிடும் ஆனா அதிரா போய் மும்தாஜ் இருந்த அறை ஜன்னலைத் தொட்டுப்பார்த்ததெல்லாம் கண்ணில படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
 37. ஹா ஹா ஹா நீண்ட நாட்களுக்குப் பிறகு நெல்லைத்தமிழனை ஓட வச்சிட்டோம்ம்.. ஸ்ரீராம் தலைமறைவாகிட்டார்ர்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன்...... எனக்கென்னவோ ஏஞ்சலின் தான், பாகிஸ்தானைக் கைப்பற்றிய அதிராவை ஓட ஓட விரட்டிவிட்டார் என்று தோன்றுகிறது...ஹாஹாஹா

   நீக்கு
 38. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  இந்த ஞாயிறு பதிவாக தாங்கள் வெளிட்ட தைவான் உயிரியல் பூங்கா படங்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளது. படங்களை, தெளிவாகவும், நல்ல கோணத்திலும் எடுத்துள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படங்களுக்கு தகுந்தாற் போன்ற விமர்சன வாசகங்களும் மிக நன்றாக இருந்தது. நன்றாக எழுதியுள்ளீர்கள். தைவான் பற்றிய விபரங்களும் தெரிந்து கொண்டேன். இதன் தொடர்பான அடுத்தப் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  நான் இன்று தாமதமாக வந்து கருத்து தருவதற்கு மன்னிக்கவும். எனக்கு இரண்டு நாட்களாக பல்வலி.. அதன் காரணமாக நேற்று மிகுந்த ஜுரமும் வந்து விட்டதால் எந்த பதிவுக்கும் வர இயலவில்லை. பின் இரவு (உடம்பு முடியாவிட்டாலும்) சகோதரி அதிராவுக்கும் உங்கள் மற்றும் அனைவருடனான கருத்துக்களை பார்த்து படித்து ரசித்தேன். அதை இன்று அதிராவின் கருத்திலும் பதிலாக குறிப்பிட்டுள்ளேன். இன்று எனக்கு பல்வலியும், ஜுரமும் குறைந்துள்ளது. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனாலென்ன கமலா ஹரிஹரன் மேடம்... பல்வலினா நிம்மதியாவே இருக்கமுடியாது.. சரியாகிவிட்டதில் சந்தோஷம்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!