வெள்ளி, 21 அக்டோபர், 2022

வெள்ளி வீடியோ : ஸ்ரீரங்கம் காவேரி கடலோடுதான் இணையும் எப்போதும்..

 TMS பாடிய தனிப்பாடல்களில் இதற்கு எப்போதும் தனியிடம்.

என்ன ஒரு அழகான கற்பனை....  என்ன செய்தாலும் உன்னைப் பிரியேன்..  உன்னோடே இருப்பேன் என்று அன்புப் பிடிவாதம்.  அதற்கும் அவன் அருளையே வேண்டும் பணிவு...  தமிழ் நம்பி எழுதிய பாடல்.  இசை புகழேந்தியாய் இருக்கலாம் அல்லது டி எம் எஸ்ஸே இசை அமைத்து பாடியிருக்கலாம்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் 
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் 
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... 
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் 

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் 
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன் 
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் 
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான்... 
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன 

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் 
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் 
அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன் 
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான்... 
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் க
ருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் 
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. 
நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்======================================================

மனைவி உருவாகிறாள் ! 1979 ல் வெளியாகாத படம்!  ஆம்.  படம் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன்.  கண்ணதாசன் பாடல்.  இசை சங்கர்-கணேஷ்.  S P பாலசுப்ரமணியம் தனது தங்கை S P ஷைலஜாவுடன் இணைந்து பாடும் பாடல். 

ஸ்ரீகாந்த், சுபாஷினி நடித்து வெளிவராத படம் என்று நினைக்கிறேன்.

என்ன இருக்கிறது இந்தப் பாடலில்?  ஒன்றுமில்லையே...   ஒன்றுமில்லைதான்.  ஆனால் கேட்டு முடித்த பின் மறுநாள் அந்தப் பாடல் டியூன் மனதில் மறுபடி வருகிறதே, ஏன்?  கேட்காமல் சொல்ல முடியாது!  கேட்டுதான் பாருங்கள்.  கிராமிய மெட்டு என்று சொல்லலாம்.  இரண்டாவது முறை அறியாத புரியாத என்னும்போது இழையும்  SPB குரல், தொடரும் சிரிப்பு...

நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளணும் 
நெல்லும் நீரும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளணும் 
மெல்ல பாய்வதிலும் தலை சாய்வதிலும் ஒன்று சேர்வதிலும் 
இளம் தென்றல் தொட்டு பின்னல் இட்டு கலகலவென புது சுகம் வர 

அறியாத புரியாத தெரியாத ஒரு பெண்ணை நான் மணந்தேன் 
அந்த மகராசி திருமாலின் திருமங்கைபோல் மலர்ந்தாள் 
அறியாத புரியாத தெரியாத ஒரு பெண்ணை நான் மணந்தேன் 
அந்த மகராசி இப்போது திருமாலின் திருமங்கைபோல் மலர்ந்தாள் 
இன்று என் தாரம் சம்சாரம் அவதாரம் ஆரமல்ல  (நெல்லும்)

கவிஞர்கள் உருவாக தெய்வங்கள் துணைவேண்டுமே அறிந்தேன் 
நல்ல மனையாளை உருவாக்க மணவாளன் துணை வேண்டுமே அடைந்தேன் 
ஒரு அரசன் ஒரு அடிமை இந்த சுகமே போதுமய்யா  (நெல்லும்)

ஸ்ரீரங்கம் காவேரி கடலோடுதான் இணையும்  எப்போதும் 
நல்ல தேவார தமிழ்ப்பாட்டு சிவன்மீதுதான் மலரும் எந்நாளும் 
ஒரு நிலையில் பல கலைகள் இ(ரு)ள மனதி(ன்)ல் தேனலைகள்  (நெல்லும்)

39 கருத்துகள்:

 1. முருக பெருமானின் பெருமைகளும், அவன் அடியார்களின் நெகிழ்ச்சியும் சொல்லச் சொல்ல நாவினிக்கும்.
  முதல் பாடல் அந்நாட்களில் ஒலிக்காத இடம் இல்லை என்று பெருமை பெற்றது.
  ஆறுமுகன் திருவடி சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... உள்ளமெல்லாம் உன் பெயரை.."

   ​"சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா..."

   நீக்கு
 2. வெள்ளிக் கிழமை
  விடியும் நேரம்
  செந்தூரின் பாட்டு
  செவியாரக் கேட்டு
  தொல்லைதனை ஓட்டு
  தூயோனைப் போற்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற்றிடுவோம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

   நீக்கு
 3. தமிழ்நம்பியின் பாட்டுக்கு TMS இசை என்பதாக 40 வருடங்களுக்கு முன் இசைத் தட்டில் படித்த நினைவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் இணையத்தில் பல விவரங்களை மறைக்கிறார்கள், அல்லது தவறாக எழுதுகிறார்கள். முன்பு நாம் கேள்விப்பட்ட நினைவு இருந்தால் தரலாம்.

   நீக்கு
 4. முதல் பாடல் கேட்டு ரசிக்காதோரும் உண்டோ ?

  இரண்டாவது கேட்டதாக நினைவு இல்லை. மனைவி உருவாகிறான் பெயர் கேட்டதில்லையே...

  மனைவி ரெடி தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் அனைவரும் கேட்டிருப்பார்கள். இரண்டாவது பாடல் ரேர் வகை...

   நன்றி ஜி.

   நீக்கு
 5. 1. சிறப்பான பாடல்...

  2. SPB குரல், தொடரும் சிரிப்பை ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 6. முதற் பாடல் நிறையக் கேட்டு உருகியது. இரண்டாவது பாடலைக் கேட்டதுல்லை. பிறகு கேட்டுப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. முருகன் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். பிடித்த பாடல்.
  அடுத்த சினிமா கேள்வி பட்டதே இல்லை, பாடலும் கேட்டது இல்லை முதல் முறையாக கேட்கிறேன்.
  நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய முதல் தனிப் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். டி. எம் எஸ் அவர்கள் பாடிய முருகன் பக்திப் பாடல்கள் ஹிட்ஸ்களில் இதுவும் ஒன்றல்லவா... அதனால் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன் .

  இரண்டாவது பாடல் கேட்டதில்லை. படம் பெயரும் கேள்விப்பட்டதில்லை. இப்போது எஸ். பி. பி பாடிய பாடல் என்பதற்காக கேட்டேன். நன்றாக உள்ளது. பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம் முதல் பாடல் நிறைய தடவை கேட்டு ரசித்து அதில் ஊறித் திளைத்ததுண்டு.

  அருமையான பாடல். இப்பவும் ரசித்தேன்'.

  கீதா

  பதிலளிநீக்கு
 11. இரண்டாவது பாட்டு கேட்டது போல் இருக்கிறது ஸ்ரீராம். இப்போது கேட்டு செமையா ரசித்தேன்...எஸ்பிபி ஹையோ சொல்ல வார்த்தைகள் இல்லை, ரொம்ப கேட்ட ட்யூன் போலவே இருக்கிறது...கூடவே இதே ட்யூனில் வேறொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது ஆனால் வார்த்தைகள் டக்கென்று பிடிபடவில்லை யோசிக்கிறேன், ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  எனக்கும் மனசுக்குள் அலையடிக்குது.  சட்டென நினைவுக்கு வரவில்லைதான்.  சரணத்தின் கடைசி வரி கேட்கும்போது இன்னொரு பாடல்வரியும் நினைவுக்கு வரும்.

   நீக்கு
 12. அவதாரம் ஆரமல்ல //

  இந்த இடம் ஆஹா.....

  கீதா

  பதிலளிநீக்கு
 13. முதல் பாடல் நிறையக் கேட்டது தான், இரண்டாவது படம் பெயரும் தெரியலை, பாட்டும்கேட்டது இல்லை. எங்கே இருந்து தான் எடுக்கறீங்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ்பிபி பாட்டு என்றால் எலி வளைக்குள் இருந்தும் கிடைக்கும்!..

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா...   பாட்டு கேட்டீங்களோ?  இதெல்லாம் முன்னர் சிலமுறை கேட்டு மனதில் ஆழத்தில் இருப்பில், நினைவில் இருக்கும் பாடல்கள்!

   நீக்கு
  3. // எஸ்பிபி பாட்டு என்றால் எலி வளைக்குள் இருந்தும் கிடைக்கும்!..//

   ஹா.. ஹா.. ஹா...

   நீக்கு
 14. ஹா ஹா ஹா.

  / எஸ்பிபி பாட்டு என்றால் எலி வளைக்குள் இருந்தும் கிடைக்கும்!..//

  ஆம்... அவரே எலி வளைக்குள் இருந்து பாடினாலும், இல்லை, நாமே எலி வளைக்குள் மாட்டிக் கொண்டிருந்தாலும், அவர் பாட்டு என்றால் என்றும் இனிக்கும். நானும் அவர் பாட்டுக்கு ரசிகை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.
   உண்மை..

   நான் அந்த மாகலைஞனைக் குறைத்து எதுவும் சொல்லவில்லை..

   மனதை மயிலிறகால் வருடும் குரலுக்கு உரியவர்..

   தமிழுலகம் இன்னும் பல காலங்களுக்கு அவரைப் பேசிக் கொண்டிருக்கும்..

   பாடும் நிலா பாலு வாழ்க!..

   நீக்கு
  2. நானும் உங்களை ஏதும் சொல்லவில்லை. நீங்கள் எழுதியதை நகைச்சுவையாக ரசித்து த்தான் அதற்கு நானும் நகைச்சுவையாக கருத்து எழுதினேன். தங்களுக்கு என் கருத்து தவறாக பட்டிருந்தால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.

   பாடும் நிலா.. அவர் புகழ் என்றும் பிறை போல் கூட தேயாது, எப்போதுமே வற்றாது இருக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.

   நீக்கு
 15. மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் பாடல் தமிழ்நாட்டில் இருந்தவரை கேட்டுக் கேட்டு ரசித்த பாடல். கூடவே டி எம் எஸ்ஸின் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (நீங்கள் இங்கு பகிர்ந்த நினைவு இருக்கிறது) பாடலும் நினைவுக்கு வந்தது. அந்த வரிசைப் பாடல்கள் பலவும் நினைவுக்கு வருகிறது.

  அது போல இரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன். இலங்கை வானொலியில். அதிகம் இல்லை என்றாலும் சில முறை. படம் பெயர் தெரிந்திருக்கவில்லை. ஆனால் படம் வெளி வரவில்லை என்பதும் தெரிகிறது. 70, 80 களின் நினைவுகள் அலைமோதியது. (தமிழ்நாட்டில் இருந்த காலங்கள்)

  மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 16. #ரஜினிகாந்த்-வெளிவராத திரைப்படங்கள்:

  போக்கிரி பொன்னம்மா
  மனைவி உருவாகிறாள்
  எந்த ஊர் எந்த பஸ்
  மோதிரக் கை
  மனிதனின் மறுபக்கம்
  காலம் மாறிப்போச்சு
  ஜில்லா கலெக்டர்
  ஜக்குபாய்
  ராணா
  திகமக திருப்பதி (தெ)
  இந்தி:
  டக்ராவ்
  தூஹி மேரி ஸிந்தகி
  ஸமீன்
  ஷனாக்த்
  ருத்ரா
  சாந்தி கிராந்தி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதனின் மறுபக்கம் தலைப்பு எடுத்துக்கொள்ளபப்ட்டு சிவகுமார் ஜெயஸ்ரீ நடிப்பில் பின்னர் வெளிவந்தது.  காலம் மாறிப்போச்சு என்று ஒரு படம் உள்ளது.  ருத்ரம் தமிழில் பாக்கியராஜ் கௌதமி நடித்து வெளியானது.

   நீக்கு
 17. முதல் பாடல்பலதடவை கேட்டபாடல் பிடித்தமானது .இரண்டாவது இப்பொழுதுதான் தெரியும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!