வெள்ளி, 28 அக்டோபர், 2022

வெள்ளி வீடியோ : கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது

 இன்றைய தனிப்பாடல் கூட திரைப்பாடலாகவே மலர்கிறது. 

1966 ல் வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் (ராதா) ஜெயலட்சுமி பாடிய 'மனமே முருகனின் மயில் வாகனம்'.  கொத்தமங்கலம் சுப்பு எழுதி இருக்கும் இந்தப் பாடலை அவர் அடாணாவில் இசை அமைக்கச் சொல்லி எம் எஸ் வியிடம் சொல்ல, அவர் இதை ஹிந்தோளத்தில் இசை அமைத்துத் தர, சுப்புவும் ஒத்துக்கொண்டாராம்.

மனமே முருகனின் மயில் வாகனம் 
என் மாந்தளிர் மேனியே குகனாலயம் 
என் குரலே செந்தூரில் கோயில்மணி  
அது குகனே ஷண்முகனே அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!

===================================================

கேபி மனிதனின் மறுபக்கம் என்கிற பெயரில் ஒரு படத்தை ரஜினிகாந்த்தை வைத்து எடுக்கத் திட்டமிருந்தார்.  என்ன கதை வைத்திருந்தாரோ, படம் எடுக்கப்படாமல் கிடப்பில் இருக்கவே கே ரங்கராஜ் அந்தத் தலைப்பை வாங்கி சிவகுமாரை வைத்து எடுத்து வெளியிட்டார்.

சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ நடித்த படத்துக்கு இசை இளையராஜா.  இயக்கம் ரங்கராஜ்.

மனைவியைக் கொன்று விட்டு ஜெயிலில் இருக்கும் தொழிலதிபர் ரவிவர்மாவை நிருபர் சுஜாதா பேட்டி காண வருகிறார்.  செய்தி வெளியாகிறது.  ரவிவர்மா ஜெயிலிலிருந்து தப்புகிறார்.  சுஜாதா வீட்டிலேயே (தெரியாமல்) அடைக்கலம் புகுகிறார்!

இந்தப் படத்திலிருந்து இரண்டு இனிய பாடல்கள்.  இரண்டுமே வைரமுத்து எழுதிய பாடல்கள்.

முதல் பாடல் சித்ரா குரலில் இனிய பாடல்.  ராதாவின் அபிநயங்கள் சுவாரஸ்யமாய் இருக்கும்!
 
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோசம் இன்று சந்தோஷம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா

சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்

மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி
மாலை கூடினால் கண்ணா இவள் காவல் நாயகி
சுகமா…..ஹ…..ஹா….உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்

உன்னை ஒரு பூ கேட்கவே ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே (சந்தோஷம்)

உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது

தெய்வம் வந்து என்னை கண்டு தேதி ஒன்று கேட்கும்
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும்

சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
=============================================================

இரண்டாவது பாடல் ஊமை நெஞ்சின் சொந்தம் ஒரு உண்மை சொல்லும் பந்தம்... கே ஜே யேசுதாஸ் குரலில் வரும் பாடல்.

பாடல் தரம் நன்றாக இருந்ததாலும், காட்சியைப் பார்த்தால் பாடலின் இனிமையில் கவனம் போகாது என்பதாலும் காட்சியில்லா காணொளி பகிர்கிறேன்.

யேசுதாஸ் குரலும், சரணங்களில் வரும் பொருளும், குழைவும் இனிமை. ஸ்கிப் செய்யாமல் கேட்டுப்பார்க்க சிபாரிசு செய்கிறேன்.


ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது (2)

பாறை மனதில் பாசம் வந்தது 
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன இது 
சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல 

கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது (2)

ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும் இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும் மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம் 
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்

47 கருத்துகள்:

 1. முருகா
  அழகா
  ஆறுமுகா
  என்று பொழுது புலர்ந்ததில் மனமெல்லாம் மகிழ்ந்தது.

  பதிலளிநீக்கு
 2. சின்ன திருத்தம்.
  ஆரம்ப இரண்டாவது பாராவில்--
  மனமே முருகனின்
  மயில் வாகனம்.

  பதிலளிநீக்கு
 3. மூன்றும் கேட்டு ரசித்த பாடல்களே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அடாணாவில் இசையமைக்க கேட்டுக் கொள்ள ---
  ஆக அந்த நாட்களில் பாடலுக்குத் தான் இசையே தவிர மெட்டுக்குப் பாட்டில்லை என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 5. அப்பாவி கதாசிரியனிடமிருந்து
  கதையை வாங்கி வைத்துக் கொள்வது
  அதை இன்னொரு தயாரிப்பாளருக்கு தான் தீர்மானிக்கும் விலைக்கு விற்பது ---
  இப்படி கூட ஒரு பிஸினஸ் இருந்திருக்கா, என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இதல் நிறையச் சம்பாதிப்பார்கள். படம் தமிழில் ப்ப்படமாகப் போனால் முதலீடு அடிவாங்கும். Gamblingதான். ஒருவேளை கதையை பிறர் வாங்காமலிருந்தால், படம் சூப்பர்ஹிட் என்றால் பெரும் பணம் கதைக்குக் கிடைக்கும். பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது. வாங்கி விற்பவன் மாடிவீடு கட்டுவான்.

   சமீப உதாரணம், மாதவன், விஜய் சேதுபதி நடித்த படம்.

   நீக்கு
  2. கதை என்றில்லை.  படைத்தலைப்புகளே தங்களுக்குத் தோன்றும் தலைப்புகளை பதிவு செய்து வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்கும் வியாபாரம் உண்டு.

   நீக்கு
 6. மனமே முருகனின் மயில் வாகனம்!...

  மறுபேச்சு ஏது?..

  அன்பின்
  வணக்கங்களுடன்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. விஷயத்தை
  விடயமென்று உச்சரிக்கிற தமிழ் ஆர்வலர்கள் நினைப்பில்

  சந்தோஷம் இன்று
  சந்தோஷம்

  என்பதை

  சந்தோடம் இன்று
  சந்தோடம்

  என்று முழுப்பாடலையும் பாடிப்பார்த்தேன்.
  வேடிக்க்கையாக இருந்தது.
  நீங்களும் ரசித்துத் தாண் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 9. வைரமுத்துவோ என்னன்ன சித்துவேலைகள் தெரிந்திருக்கிறது!!

  அவர் நினைத்தால்
  இரவை நீட்டவும்
  சுருக்கவும் முடியும் போல இருக்கிறதே!
  பிரமிப்பாகத் தான் இருக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீரில் மூழ்காது
   காற்றுள்ள பந்து - மாதிரியான மகோன்னதமான தத்துவ வரிகள்..

   அடே.. எங்கப்பா!..

   நீட்டுறதும் சுருக்குறதும் ஏன் முடியாது?..

   நீக்கு
  2. ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
   நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
   பாரெல்லாம் உண்டுமிழ்ந்த நம் பாம்பணையான் வாரானால்....

   தலைவிக்கு தலைவன் இன்னும் வரவில்லையே என்ற கவலை. ஊரோ நன்றாக உறங்குகிறது. அலை சப்தமே எழும்பவில்லை. உலகுக்கு நள்ளிருள். ஆனால் இவளுக்கோ... இரவு நீண்டுகொண்டே போகிறது. அவனைக் காண முடியவில்லையே.. என் உயிரைக் காக்கப் போகிறவர் யார்? எனத் தலைவி துயருறுகிறாள்.

   சட்னு படுத்த மாதிரி இருக்கு. உடனே விடிஞ்சிருச்சே... எப்படா விடியும்னு இருக்கு. தூக்கமே வரலை. ரொம்ப நேரம் படுத்திருக்கிற மாதிரியே இருக்கு. சட்னு விடிஞ்சுடாதா... குளித்துப் புத்தாடை அணிந்து வெடி போட மாட்டோமா?இவை நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள்..

   இப்போது புரிகிறதா... இரவு நீண்டதாகவும் இருக்கும், சுருங்கினதாகவும் இருக்கும் என்று?

   நீக்கு
  3. தமிழ்... தமிழ்..

   இதற்கு அது ஈடாகுமோ!..

   நீக்கு
  4. எபிக்காரங்க எப்படி வேணா நீங்க அடிச்சிக்கங்க.. நாங்க இந்தப் பக்கமே வரமாடோம்ன்னு...
   நீள் இரவு நீண்டால் என்ன குறுகினால் என்னன்னு போயிட்டாங்க
   போலிருக்கு... :))

   நீக்கு
  5. நெல்லை அருமையான பாடல் ஒன்றைச் சொல்லி உள்ளீர்கள்.  "ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் நீருறங்க சீரங்கம் தானுறங்க திருவானைக்கா உறங்க நானுறங்க வழியில்லையே ராசா...  இங்கே நாதியத்து கிடக்குது உன் ரோசா என்ற ஒரு திரைப்பாடல் உண்டு!

   நீக்கு
  6. //எபிக்காரங்க எப்படி வேணா நீங்க அடிச்சிக்கங்க.. நாங்க இந்தப் பக்கமே வரமாடோம்ன்னு...
   நீள் இரவு நீண்டால் என்ன குறுகினால் என்னன்னு போயிட்டாங்க
   போலிருக்கு... :))//

   உடனடியாக பதில் சொல்ல முடியாத நிலை ஜீவி ஸார்..  மன்னிக்கவும்.

   நீக்கு
 10. முதல் பாடல் கேட்டேன். மனம் வேறு எதிலும் லயிக்கவில்லை

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. முதல் பாடல் தவிர்த்த வேறு
  எதிலும் மனம் லயிக்க வில்லை என்பதே உண்மை..

  ஒருவேளை, மனமே முருகனின் ... - பாடல்

  பதிவில் இல்லாதிருந்தால்?...

  வாய்ப்பே இல்லை ராஜா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தட்டில் அக்காரவடிசில் வைத்துவிட்டு, அதற்குப் பக்கத்தில் பிட்சா, பர்கர் வைத்தால் மனம் பிட்சா, பர்கர் பக்கம் திரும்புமா?

   நீக்கு
  2. ஆகா...

   அருமையான கருத்து..
   நான் சொல்ல வேண்டும் என்று இருந்தேன்..

   அதனால் என்ன!..

   நீக்கு
 13. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி சிறு வயதில் பாடி கொண்டு இருந்த பாடல்.
  நெல்லைத் தமிழன் சொல்வது போல இந்த பாட்டு கேட்டால் அன்று நாள் முழுக்க மனதில் ஒலித்து கொண்டே இருக்கும் இந்த பாடல்.வேறு எதிலும் மனம் போகாது.

  மற்ற இரண்டு பாடல்களும் வனொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
  முதல் பாடல் மகிழ்ச்சி, இராண்டாவது சோகம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்றையும் கேட்டு ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 14. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடலும் கூட. இந்தப் படம் தூர்தர்ஷன் சென்னையில் ஒரு ஞாயிறு மாலை போட்டப்போ எங்க வீட்டில் ஹவுஸ் ஃபுல். உட்கார இடம் இல்லை. அன்னைக்குனு தேங்காமாங்கா பட்டாணிச் சுண்டலும் பண்ணி இருந்தேன். சென்னையில் இருந்தவரை அநேகமாக ஞாயிறு மாலை படம் பார்த்துண்டே கொரிக்கும்படியாகச் சுண்டலே பண்ணிக் கொண்டிருந்தேன். என் மாமனார் கூட மிக ரசித்து இந்தப் படம் பார்த்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... அனைவராலும் விரும்பப்படும் படம், பாடல்கள்!

   நீக்கு
 15. மற்ற இரு பாடல்களும் தெரியாது. படம் வந்ததும் தெரியாது. இங்கே தான் முதல் முதலாகக் கேட்கிறேன். மற்றவை சாப்பிட்டு வந்து.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இரண்டாவது, மூன்றாவது பாடல்களை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. முதல் பாடல் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இப்பொழுதுதான் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!