புதன், 14 டிசம்பர், 2022

சு நா மீ 04 : சுந்தரி வந்தாள் !

 

சென்ற வாரம் யாரும் கேள்விகள் கேட்காததால் இன்று சு நா மீ நான்காம் பகுதி வெளியாகிறது. 

முந்தைய பகுதி : சு நா மீ 03 சுட்டி 

திருவாரூர் தியாகராஜனுக்கு  மிகவும் மகிழ்ச்சி. இருபது வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன்னுடைய மகள் தன்னிடம் வந்து சேர்ந்ததில் அவருக்கு அளவிலா சந்தோஷம். 

ஆம். 

நாகையில் மீனாக்ஷி பாட்டியின் வளர்ப்பில் இருந்த சுசீலாதான் சுந்தரி. அவளையும் மீனாக்ஷி பாட்டியையும் தியாகராஜன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் எங்கள் blog ஆசிரியர்களில் ஒருவரான காசு ஷோபனா. 

மின்நிலா சில முந்தைய இதழ்களின் மின்நிலா 128 to 131 கடைசி பக்கங்களைப் படித்தவர்கள் இதை எளிதில் யூகித்திருக்கலாம். 

இதோ அந்தக் கடைசி பக்கங்கள் : 






காசு ஷோபனா, சுசீலா மற்றும் மீனாக்ஷி பாட்டி ஆகியோருடன் சென்ற போலீஸ் அதிகாரி, தியாகராஜன் பங்களாவில் இருந்த தியாகராஜனின் மைத்துனன் மற்றும் தோட்டக்காரர் இருவரையும் கைது செய்து, அவர்களை தன்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். 

ஏன் ?

சிங்கப்பூரில் இருக்கும் சுந்தரியின் சகோதரன், பூர்வ கதையை சுருக்கமாக எங்கள் blog ஆசிரியர் குழுவிற்கு இமெயில் மூலம் தெரிவித்திருந்தார்.  

சுருக்கமான முன் கதை இதுதான் : 

தியாகராஜனின் முதல் மனைவி பெயர் சந்தானலக்ஷ்மி . அவருக்குப் பிறந்த குழந்தைகள் நாகராஜும் சுந்தரியும். சந்தானலக்ஷ்மி அகால மரணம் அடைந்ததால், தியாகராஜன் காந்தாமணியை கல்யாணம் செய்துகொண்டார். 

காந்தாமணி, தியாகராஜனின் சொத்துகள் யாவும் தனக்கே வரவேண்டும் என்று விரும்பி - அதற்கு இடைஞ்சலாக இருந்த நாகராஜ் மற்றும் சுந்தரி இருவரையும் எப்படியாவது வீட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று முனைப்பாக இருந்தாள். அதற்கு அவளுக்கு உதவ முன் வந்தான் காந்தாமணியின் தம்பி தயாளன். 

தியாகராஜன் தஞ்சாவூருக்குச் சென்றிருந்த சமயத்தில், காந்தாமணியும் தயாளனும் பேசிக் கொண்டிருந்ததை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய சமையல்காரர் சுப்பாராவ் எதேச்சையாக கேட்க நேர்ந்தது. 

காந்தாமணி - நாகராஜ் & சுந்தரி சம்பந்தப்பட்ட போட்டோக்கள், நகை, உடை, எல்லாவற்றையும் மூட்டை கட்டி தனியே எடுத்து வைத்துவிடுவதாகவும், தயாளன் அவற்றை எடுத்துக்கொண்டு - வெளிநாட்டிற்கு குழந்தைகளை விற்கும் நண்பர் ஒருவரிடம் நகைகளையும் குழந்தைகளையும் ஒப்படைத்து அவர்களை எங்காவது தூர தேசத்திற்கு அனுப்பி வைத்துவிடுவதாகவும் திட்டம் போட்டனர். 

அந்தத் திட்டத்தை, - அன்று இரவே செய்துமுடித்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர். அன்று வெள்ளிக்கிழமை, டிசம்பர் 24, 2004. 

திட்டத்தைத் தெரிந்துகொண்ட சுப்பாராவ் சத்தம் செய்யாமல் திரும்பச் சென்று அருகில் உள்ள மருந்துக் கடையில், தூக்க மாத்திரைகள் சில வாங்கிக்கொண்டு  சற்று நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வந்தார். 

திரும்ப வந்த அவரிடம் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த நாகராஜும் சுந்தரியும், " சுப்பா மாமா - நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கி ராத்திரி தயா மாமா கூட டூர் போகப்போறோம். ரெண்டு நாள் கழிச்சுத்தான் திரும்பி வருவோம். " என்றார்கள். 

" அடேடே - எப்போ கிளம்பப் போறீங்க? " 

" இன்னிக்கு ராத்திரி - சாப்பிட்டு முடித்ததும் எங்களைக் கூப்பிட்டுக்கொண்டு போகிறேன் என்று சொல்லியிருக்கார் தயா மாமா " 

" அப்படியா ! சந்தோஷமாக போயிட்டு வாங்கோ. "

= = =  = = = =

அதன் பின்பு, இரவு சமையல் வேளைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் சுப்பாராவ். இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல எல்லோருக்கும் சூடான பால் கொண்டுவந்து கொடுத்தார். காந்தாமணி, தயாளன் இருவருக்கும் கொடுத்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருந்தார். 

பிறகு காந்தாமணியிடம், " அம்மா நான் நாளை காலையில் கிளம்பி, நாகூரில் இருக்கும் என்னுடைய பெரியப்பா பையனைப் பார்த்து பேசிவிட்டு ரெண்டு நாளில் திரும்பி வந்துவிடுகிறேன்"  என்று சொன்னார். 

காந்தாமணி, " சரி. குழந்தைகள், தயாளன் எல்லோரும் டூர் போகிறார்கள். இவர் திரும்பி வருவதற்கும் இன்னும் ஒரு வாரம் ஆகும். நான் மட்டும்தானே - எனக்கு வேண்டியதை நானே சமைத்துககொள்கிறேன்" என்று சொன்னாள். 

காந்தாமணி, " குழந்தைகளா - தயா மாமா கூட சந்தோஷமாக போய் ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு, ரெண்டு நாள் கழிச்சு,  பத்திரமா திரும்பி வாங்க " என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு உறங்கச் சென்றாள். 

தயாளன் " சுந்தரி, நாகராஜ் ரெண்டு பேரும் உங்க ரூம்ல தயாரா இருங்க - நான் கொஞ்ச நேரத்தில் வந்து உங்களைக் கூப்பிட்டுக்கிட்டு  போறேன் " என்று சொல்லி, தன்னுடைய அறைக்குச் சென்றான். அறைக்குச் சென்று உடைகளை மாற்றி வரச் சென்ற தயாளன் - கண்கள் கெஞ்சியதால், சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்று தன் கட்டிலில் படுத்தான். 

(தொடரும்) 



48 கருத்துகள்:

  1. கதை பழைய சினிமா கதை போல் உள்ளது. காசு சோபனா தான் கதை ஆசிரியரா?


    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஹைவேயில் போய்க்கொண்டிருந்த கார் திடீரென்று ஒரு குறுக்குப் பாதையில் நுழைந்து வளைந்து திரும்பி வெவ்வேறு வழிகளில் பயணித்து மீண்டும் பழையபடிக்கு ஹைவேக்கே வந்து பயணத்தைத் தொடர்கிற உணர்வு.

    பயணம் தொடர்வது குறித்து சந்தோஷம் என்றாலும் ஒழுங்காக
    நேர்வழியில் போய்க் கொண்டிருந்த காரை குறுக்குப்பாதையில்
    திருப்பாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

    ஏற்கனவே இதே ஹைவே நேர்பாதையில் எங்கேயும் திரும்பாமல் எனக்குத் தெரிந்து பயணித்தவர் தானே நீங்கள்? இப்போ மட்டும் ஏன் இந்த த்ரில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா..
      நேற்றைய கதைக்குத் தாங்கள் வரவில்லையே!..

      நீக்கு
    2. இன்று வாசித்தேன், தம்பி. குட்டிக் கதையாயினும் பாத்திரப் படைப்பில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
      கதை ஓட்டத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் இந்த வேலை நடந்திருப்பதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
      ஐயம்பேட்டை அத்தை ஒருவர் போதுமே!

      நீக்கு
    3. தங்களது கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி...

      நன்றி அண்ணா..

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. 6:30 மணிக்குத் தொடங்கிய திரைப்படம் 9:30 மணிக்கு முடியவிருக்கும் சமயத்தில் திரைக்கதை இடது பக்கம் வளைந்து திரும்பி புயல் வெள்ளம் பூகம்பம் என்று சிக்கிக் கொள்வது மாதிரி இருக்கின்றது...

    எபி திரையரங்கில் சோடா.. கலர்.. என்ற சத்தம் கேட்கிறது!..

    பதிலளிநீக்கு
  5. காசு ஷோபனா தான் என்பதை நான் முன்னாடியே யூகித்துச் சொல்லி இருக்கேன். ஆகவே நாகராஜ் + சுந்தரியின் தகப்பனார் கொடுக்கப் போகும் பரிசு எனக்கே எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்லா இருக்கே! முதல் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி என்ன என்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

      நீக்கு
    2. காசு சோபனாவா? அவசரப்படாதீங்கோ.
      கதாசிரியர் from Nagapattinam. !!

      நீக்கு
  6. கேள்வி/பதில் இல்லாமல் இந்த புதன் சோபிக்கவே இல்லை. அது சரி, கதை என்ன புதுசாக ஒரு கோணத்தில் போகிறது? ஆனால் எல்லாம் வழக்கமான ஃபார்முலாக்கதையாத்தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'புதுசாக ஒரு கோணத்தில்' .. அப்புறம் வழக்கமான ஃபார்முலா கதை ! இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக சொல்கிறீர்களே!

      நீக்கு
    2. இல்லை அது கதாசிரியரின் தடுமாற்றம் இல்லையோ? கதையைப் புதுக்கோணத்தில் கொண்டு செல்ல முயற்சி செய்துட்டுப் பின்னர் வேறே வழி தெரியாமல் வழக்கமான குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்கும் ஃபார்முலா1

      நீக்கு
    3. கதை இன்னும் முடியவில்லை.

      நீக்கு
  7. ரயில் பயணம்/பேருந்துப் பயணங்களின் போது மழை/வெள்ளத்தினால் பயணம் தடைப்பட்டுப் பாதி வழியில் நின்று தவித்திருக்கிறீர்களா?

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை! அந்த நல்லார் இப்போ யாராயிருக்கும்?

    மழை/வெள்ளத்தின் போது உங்கள் வீட்டில் தண்ணீர் புகுந்து அவதிப்பட்ட அனுபவம் உண்டா?

    பதிலளிநீக்கு
  8. கதை பழைய பாட்டையில் திரும்பியதும் ஜோரா வேகமெடுத்திருக்கிறது.
    வெல்டன்!! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமே வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தொடரும் இந்தக் கதை நன்றாக உள்ளது. இது கதையா? இல்லை உண்மை சம்பவமா? சிங்கப்பூரில் இருப்பவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்குமென்று தோன்றுகிறது. ஆனால் மீண்டும் கதை போன்ற எண்ணத்தை எங்களுக்குள் வரவழைப்பது ஏன்? இல்லை இதுவும் தங்கள் கதைக்கு ஒரு திருப்பு முனையா? கதையின் சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் இருவரும் தங்கள் தந்தையாரிடம் சென்று பத்திரமாக சேர இறைவனை வேண்டுகிறேன்.

    ஆகா.....! ஆக மொத்தம் அடுத்த உபாதைக்கு (ஹை பிரஷர் ஏறி தலைச் சுற்றல்) நான் தயாராகி வருகிறேன் என்பது மட்டும் புரிகிறது. :))))) பார்க்கலாம்.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. திரை அரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் இப்போதும் உண்டா?
    அங்கே கட்டாயமாய்ப் பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை அங்கே விற்பவரிடமே வாங்க வேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாய்ச் சொல்லுவது உண்மையா? இது அநியாயம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  12. பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் பார்த்தாச்சா? எங்கே? திரை அரங்கு? ஓடிடி?
    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உரிய நேரத்தில் நிவாரணங்கள் செய்து விட்டது என்னும் மனத் திருப்தி உங்களுக்கு உண்டா?

    புயல் சென்னையை நெருங்கும்போது பலவீனம் அடைந்து விட்டது. அதிகம் பாதிப்பு இல்லை. ஆனாலும் அரசு பெரும்புயலையும் இந்த அரசு சாமர்த்தியமாகச் சமாளித்துவிட்டது எனச் சொல்லுவது ஏன்?

    பதிலளிநீக்கு
  13. எப்போதுமே இரண்டாம் மனைவி கொடுமைக்காரியாகவே சித்திரிக்கப்படுகிறார்கள். அல்லது உண்மையாகவே அப்படி நடக்கிறது. அது ஏன்?

    எனக்குத் தெரிந்து என் பெரியம்மா (அப்பாவின் மன்னி) இரண்டாம் மனைவி, அதே போல் என் சித்தியின் கடைசி நாத்தனார் இறந்ததும் அவர் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த மனைவி தான் குழந்தைகளே பெற்றுக்கொள்ளாமல் மூத்த மனைவியின் நான்கு மகன்களையும் நன்கு வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுத்துப் பேரன், பேத்திகள் எடுத்துச் சமீபத்தில் தான் இறந்தார். இவரை வைத்து ஒரு கதை எழுத ஆரம்பிச்சு அது எங்கேயோ வேறே கோணத்தில் போய்விட்டது! :(

    பதிலளிநீக்கு
  14. அதே போல் அம்பத்தூரில் எங்க அக்கம்பக்கத்தில் சிநேகிதர்கள் இருவரின் தாய் இல்லை. சித்தி தான் வளர்ப்பு. சித்தி குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் மூத்தாள் குழந்தைகளையும் சேர்த்து அன்புடன் வளர்த்து வந்தார். ஒரு உதாரண புருஷி எனலாம். இப்போ இருக்காரோ இல்லையோ!

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதையமைப்பு என்பது இந்தக் கதை முடிந்த பிறகு தான் தெரியப் போகிறது. அதனால் கோர்வையாக கதையைத் தொடர்ந்து போடவில்லையே என்று பின்னால் யாரும் வருந்தக் கூடாது.

    பதிலளிநீக்கு
  16. ** கதையைத் தொடர்ந்து பின்னூட்டம் போடவில்லையே என்று

    (என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்)

    பதிலளிநீக்கு
  17. கதை சிக்கி சிக்கி இப்பத்தான் ஒவ்வொன்றாக அவிழ்கிறது போலும்!!!

    கதையை எழுதியதும் நானே, சுந்தரியைத் தன் அப்பாவுடன் சேர்த்த காசு ஷோனாவும் நானே, குரோம்பேட் குறும்பனும் நானே, எபியில் அவ்வப்போது பேயார் என்று சொல்லிக் கொண்டு அலைபவரும் நானே, இக்கதையை எழுதியதும் நானே!!!!! இப்படிப் பல அவதாரங்கள் எடுக்கும் கௌ அண்ணா, செம ட்விஸ்ட் வைச்சு வைச்சு கடிதம் மூலம் கதையைக் கொஞ்சம் நகர்த்தி, கொஞ்சம் மீண்டும் வாசிக்க வைத்து....அப்ப நாகராஜ், சேகர், சுசீலா, சுந்தரி வேறு வேறா...இப்பக் கடைசி முடிச்சு அவிழ அடுத்த வாரம் வரை...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கதை பழைய சினிமா பார்ப்பது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!