புதன், 7 டிசம்பர், 2022

இரவு படுத்த உடனே தூங்கும் ரகமா நீங்கள்?

 

நெல்லைத்தமிழன்: 

ஏன் அசையாச் சொத்துக்களை விற்கக்கூடாது என்று சொல்லியிருக்கீங்க?

# விற்காமல் வைத்திருந்தால் அசையா சொத்துக்கள் மதிப்பு மிக அதிகமாக உயர  வாய்ப்பு இருப்பதால்,  அவற்றை ஒரு பாதுகாப்பு கருதி, விற்காமல் வைத்துக் கொள்வது நல்லது என்ற கருத்தில் சொல்லப்பட்டது.

குறைந்தபட்சம் 15 லட்சம்... இது இன்ஷ்யூரன்ஸ் -மெடிக்ளெய்ம் லிமிட்டா? ஒருவருக்கு?

# இன்றைய விலைவாசியின் படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கு வைத்தியம் செய்ய குறைந்தபட்சம் 15 லட்சம் தேவைப்படும் என்ற உத்தேசமான மதிப்பீட்டில் சொல்லப்பட்ட கருத்து இது. மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவு செய்து உயிரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை. அந்த குறிப்பிட்ட அளவு நபர் ஒருவருக்கு 15 லட்சம் என்பது என்  மதிப்பீடு.

ஒரு பெரும் தொகை நம் கையில் இருக்கும் பட்சத்தில் அது மிகவும் அத்தியாவசியமாக செலவழிக்க மட்டுமே  ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் ஒரு இக்கட்டான அவசரமான செலவு வரும் போது அதை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். அதை தேவையில்லாத வைத்திய செலவுக்குக் கூட பயன்படுத்தக் கூடாது. இது எந்த அளவு சாத்தியம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. " எனக்கு ஐசியூவில் இரண்டு நாட்களுக்கு மேலாக இருக்க விருப்பமில்லை. என் வாழ்க்கையை முடித்து விடுங்கள் " என்று உயில் எழுதி வைக்க வேண்டும் என்று கூட இப்பொழுது முதியவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

ஜீவி : 

சமூக குழுக்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று 65+ காரர்களுக்கு ஆலோசனை சொல்லி விட்டு இன்னொரு பக்கம் அனாவசியமாய் பேசாதீர்கள் -- கேட்டாலொழிய சொல்லாதீர்கள் என்று உபதேசிப்பது முரண்பாடாக இல்லையா? (இது 65+ காரர் சொன்ன ஆலோசனையா என்று சந்தேகம் வேறு)

# சமூகக் குழுக்களில் பாடுங்கள் தேகப் பயிற்சி செய்யுங்கள் கதை சொல்லுங்கள் நடனமாடுங்கள்.  எல்லாம் செய்யலாம். 

பேசக்கூடாது என்று சொல்வது , குடும்பப் பிரச்சினைகளில் இளைய தலைமுறைக்கு அதிகாரம் மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து,  தேவையில்லாத ஆலோசனைகளையும் அபிப்ராயங்களையும் சொல்லி,  வீணான மன சஞ்சலத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதுதான்.   

 கீதா சாம்பசிவம் : 

இரவு படுத்த உடனே தூங்கும் ரகமா நீங்கள்?

& படுத்த உடனே தூக்கம் வராது. ஆனால், கொஞ்ச நேரம் எண்ண ஓட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தால் உடனே தூக்கம் வரும். 

நல்ல தூக்கம் வர என்ன செய்யணும்?

& இரவு உணவுக்குப்பின் இரண்டு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். 

நடு இரவில் திடீரெனக் கண் விழித்தால் சிறிது நேரத்தில் தூக்கம் தொடருமா உங்களுக்கு? எனக்குச் சுத்தமாத் தூக்கம் போயிடும்.

& மீண்டும் தூங்கவேண்டும் என்று நினைத்தால் தூங்கிவிடுவேன். 

தூக்கம் வராதவங்களுக்கெல்லாம் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது!" என எடுத்துக்கலாம் தானே? :)))))))

& ஹி ஹி !!

பகல் தூக்கம் தூங்கும் வழக்கம் உண்டா? அது நல்லதா?

& நான் தூங்குவது உண்டு. நல்லதோ கெட்டதோ - தூக்கம் வந்தால் தூங்கிடணும் என்பது என்  கொள்கை! 

இரவில் எப்படிப் படுத்தாலும் அசௌகரியமாக உணருகிறேன். அதே காலங்கார்த்தாலே ரொம்பவே சௌகரியமாகவும் தூங்க வசதியாகவும் தோன்றுவது ஏன்?

& இரவு உணவு செரிக்கும் முன்பு படுக்கக் கூடாது. அல்லது இரவு உணவு மிக மிக லேசானதாக (உதாரணம் : ஒரு டம்ளர் மோர் + ஒரு வாழைப்பழம் ) உட்கொண்டால் படுக்கும்போது அசௌகரியமாக இருக்காது.  

# தூக்கம் பற்றி மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் என் பதில் : நீங்கள் குறிப்பிடும் எல்லா தொந்தரவும் எனக்கும் இருக்கிறது. இதை சரி செய்ய சிகிச்சை ஏதேனும் தெரிய வந்தால் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

எங்காவது வெளியே போகணும்னா காலை எழுந்திருக்க அலாரம் வைச்சுப்பீங்களா?

& முன் காலத்தில் உண்டு. இப்போதெல்லாம் அலாரம் தேவை இல்லை - என்று சொல்வதைவிட அதிகாலையில் எங்கும் போகவேண்டிய நிர்பந்தம் இல்லை. 

# அதிகாலையில் விழிப்பு வந்து விடுவதால் நான் தூக்கத்திலிருந்து எழ , அலாரம் உபயோகிப்பது இல்லை.

எனக்கு அலாரமே தேவைப்படுவதில்லை. வைத்தாலும் அது அடிக்கப் பத்து நிமிஷங்கள் முன்னரே விழிப்பு வந்துடுது. அது ஏன்?

& நம்முடைய உடம்பிலேயே ஒரு கடிகாரம் (body clock) உண்டு என்று சொல்கிறார்கள். அது நம்மை எழுப்பிவிட்டுவிடுகிறது. 

குக்கரிலேயே காய்களை வேக வைப்பது நல்லதா?{ நானெல்லாம் எந்தக் காய் என்பதைப் பொறுத்து அதைக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு பின்னர் ஜலம் ஊற்றிக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கும் ரகம். பாதி வெந்ததும் உப்புச் சேர்ப்பேன். அநேகமாக எல்லாக் காய்களும் (வதக்குவது தவிர்த்து) இப்படித்தான்.} ஆனால் பலரும் கீரையைக் கூடக் குக்கரில் வைக்கிறாங்க. இது உடலுக்கு நல்லதா?

& நான் குக்கரில் காய்களை வேகவைப்பது இல்லை. என் உதவியாளர் அடிக்கடி அப்படி செய்வதுண்டு. கீரையை பறித்த சில நிமிடங்களுக்குள் சமைக்கவேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் அப்படியே இருக்குமாம். இதெல்லாம் நம்மைப் போன்று நகர வாழ்க்கை ஆட்களுக்குச் சரிப்பட்டு வராது! 

குக்கரிலேயே சாம்பார் வைத்தால் பிடிக்குமா?

& இல்லை; சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்தான் பிடிக்கும். 

இந்த ஓபோஸோ, ஓபிஎஸ்ஸோ எதுவோ ஒண்ணு அந்த முறையில் நீங்க சமைச்சுப் பார்த்திருக்கீங்களா?

 & OPOS என்பது One Pot One Shot என்பதின் சுருக்கம். அந்த வகையில் சமைத்தால் நேரம் மிச்சமாகும், எண்ணெயும் அதிகம் செலவாகாது என்கிறார்கள். அதற்காக தனியே குக்கர் கூட உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் என்னுடைய சமையல் எல்லாம் இரண்டு பேருக்கு மட்டுமே என்பதால் நான் ஓபோஸ் பக்கம் போவதில்லை. மேலும் என் சமையலில் எண்ணெய் பெரும்பாலும் தேவைப்படுவாதில்லை. 

சென்னையில் இருக்கும்போது வெயில் காலங்களில் சோலார் குக்கரில் சமைப்பேன். அது கிட்டத்தட்ட OPOS முறைதான். நான்கு அலுமினியப் பாத்திரங்களில் தனித் தனியே ஒன்றில் அரிசி, ஒன்றில் பருப்பு, ஒன்றில் காய்கறி ஒன்றில் ரசம் அல்லது சாம்பார் என்று காலையில் வெயிலில் வைத்துவிடுவேன். காலை எட்டு மணிக்கு வைத்தோம் என்றால் பகல் பன்னிரெண்டு மணிக்கு எல்லாம் தயார். காஸ் / மின்சாரம் எதுவும் தேவை இல்லை. 

இந்த சிபில் ஸ்கோர் Cibil Score என்றால் என்ன? இப்போதைய இளம்பெண்கள் தங்களுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கும் இளைஞனை இதை வைத்தே எடை போடுவதாகச் சொல்கின்றனரே? அது ஏன்?

# Cibil score என்பது ஒருவர் கிரெடிட் கார்டு போன்ற தமது கடன் விவகாரங்களை, உரிய நேரத்தில் சரியாக திருப்பிச் செலுத்தி நிர்வகிக்கிறாரா என்பதை சரிபார்க்கும் ஏற்பாடு.  ஒருவரது நிர்வாக திறமையை  எடை போட இது நல்ல ஏற்பாடு இல்லையா ?

The Credit Information Bureau (India) Limited (CIBIL) is the most popular of the four credit information companies licensed by Reserve Bank of India.

சிபிள் ஸ்கோர் தெரிந்துகொள்ள பல இணைய தளங்கள் உள்ளன. என்னைப்போன்ற ஓய்வு பெற்ற ஆட்களுக்குத் தேவை இல்லாத விஷயம். 

= = = = = = = = = = = = = = = =

 தூக்கம் வர : 


= = = = =
தூக்கமும் உடல் நலமும்: இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த   வழிகளை பின்பற்றுங்கள்
 
நிம்மதியான தூக்கம்
 
நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

1. மாலைநேர வெளிச்சத்தில் கவனம் தேவை

உங்களால் செல்பேசி, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிரியமுடியாமல் தவிக்கிறீர்களா? நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறீர்களா?

இதற்கு உங்கள் விடை ஆம் எனில், உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவராக இருக்கக்கூடும்.

ஏனெனில், இந்த சாதனங்கள் வலிமையான நீல நிற வெளிச்சத்தை உமிழ்கின்றன. இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்தும்போது நமக்கு தூக்கம் வருவதுபோல உணரும் சமயங்களில் நமது உடலுக்குள் வெளியாகும் மெலட்டோனினுக்கு இந்நீல நிற வெளிச்சம் தடைபோடுகிறது.

எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அது நாம் தூங்குவதற்கான நேரம் என்பதற்கான சைகை.

சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மால்கம் வான் ஸ்கான்ட்ச், இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக நீல நிற ஒளியை உமிழும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

இல்லையெனில், நீல நிற வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகள் அணிவது அல்லது இவ்வெளிச்சத்தை குறைக்கும் செயலிகளை பயன்படுத்துவது ஆகியவை உங்களுக்கு உதவக்கூடும்.

நமது தூக்கத்திற்கு எதிரியான டிஜிட்டல் சாதனங்களில் உமிழப்படும் நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி. மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்தவித மின்சார வெளிச்சத்தையும் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தரும்.

படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதைச் சாதிக்கமுடியும்.

2. தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்

வார இறுதிகளில் அதாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் வாரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது.

ஏனெனில் இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் நமது தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

தூங்கும் நேரத்தில் வார இறுதி மற்றும் வார நாட்களில் எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பை இவை அதிகரிக்கின்றன.

வார இறுதியில் தூங்காமல் படுக்கையில் மட்டும் அதிக நேரம் படுத்திருப்பது உங்களது உடலுக்கு மேலும் தூக்கம் தேவை என்பதற்கான ஓர் அறிகுறி என்கிறார் பேராசிரியர் வான் ஸ்கான்ட்ச்.

3. படுக்கையறையை ஓய்வுக்கான இடமாக்குங்கள்

மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன.

உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.

படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.

4. 'காலை' சூரிய வெளிச்சம் அவசியம் :-

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தைய வெளிச்சத்தை அதிகளவில் பெறுகிறோம்.

தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக காலை நேரத்தில் திரைசீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதி காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால் பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படக்கூடிய வெளிச்சப் பெட்டிகளை இச்சயமங்களில் பயன்படுத்துவது பலன் தரும்.

5. படுக்கைக்கு செல்வதற்குமுன் செய்யும் வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்

இது தூங்குவதற்கான நேரம் என உடலை தயார்படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும்வகையில் சில வேலைகளை செய்வது நல்ல தூக்கம் பெற உதவும் என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பென் கார்ட்டர்.

புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் நாம் படுக்கைக்குச் செல்ல தயாராகவும் உதவும்.

'பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கத்துக்கு தயார்படுத்த இவற்றைச் செய்கிறார்கள்'' என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.

'' உணவு ஊட்டுவது, குழந்தைகளை குளிப்பாட்டுவது அதன் பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைக்கின்றனர் பெற்றோர்கள். அது சரியான நடைமுறை.

தூக்கத்துக்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவாது'' என குறிப்பிடுகிறார் மருத்துவர்.

இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.
 
6. கஃபைனை (caffeine) தவிருங்கள்

இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு தெரிந்திருக்காமல் போயிருக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில், கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்களான டீ, கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் அருந்தியிருந்தால், அவை உங்களுக்கு தூக்கம் வருவதை கடினப்படுத்தலாம்.

ஏனெனில், நமது உடலின் இயக்கத்தில் கஃபைன் தாக்கம் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.

 ======

83 கருத்துகள்:

  1. நான் உறங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. கண்களிலோ, உடலிலோ அதன் அயர்ச்சி கிடையாது.

    காணொளி கண்டேன் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இரவில் படுக்கும் முன்பு ஐம்பது கிராம் புடலங்காய் மென்று சாப்பிட்டால் அயர்ந்த தூக்கம் வரும்.

      நீக்கு
  2. நிம்மதியான தூக்கத்துக்கான கட்டுரையைப் படிக்கும்போதே தூக்கம் கண்ணைச் சுழற்றுகிறதே... ஒருவேளை இதுவும் ஒரு உத்தியாக இருக்கக்கூடுமோ?

    பதிலளிநீக்கு
  3. அலைபேசியின் வெளிச்சம் கண்ணைப் காதிப்பது மட்டுமல்ல... தூக்கத்தையும் பாதிக்கும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  4. #ன் முதல் இரண்டு பதில் பளிச் எனப் புரியும்படி இருக்கிறது. உயில்லாம் எழுதிவைத்தால் டாக்டர்கள் விட்டுடுவாங்களா? எங்க...சும்மா தலைவலின்னு ஐசியூவில் படுங்க... அவங்க அடுத்த பேஷன்ட் வரும்வரை டிஸ்சார்ஜ் பண்ணவே மாட்டாங்க. நீங்களே எகிறிக் குதித்து வந்தால்தான் உண்டு.

    #ன்.. எனக்கும் அந்தத் தொந்தரவு இருக்கு என்ற பதிலை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. இரவு உணவுக்குப் பின் நடப்பது... மிக நல்ல முறை. எனக்கு உணவு உண்டபிறகு உடனேயே எக்சர்சைஸில் ஈடுபட்டால் அலர்ஜி வருகிறது. 9 மணிக்கு மேல் இரு கிமீ நடப்பதை தற்போது ஆரம்பித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  7. 65+ கேள்விக்குப் பதிலளித்திருப்பதற்கு நன்றி.

    அதிகம் பேசக்கூடாது பற்றி:

    எங்கள் வீட்டில் முதியவர்கள் ஆலோசனை கூறக்கூடாது என்றெல்லாம் இல்லை. இவ்வளவுக்கும் மகன் குடும்பம் வெளி நாட்டில் இருந்தாலும் முக்கியமான விஷயங்களில் எங்களிடம் ஆலோசனை கல்ந்தே செயல்படுவார்.
    இந்த விஷயத்தில் அந்தக்கால நடைமுறைகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும்
    கொண்ட குடும்பம் எங்களது என்பதில் எனக்கும் கூடுதல் மகிழ்ச்சி உண்டு. ஜஸ்ட்
    தகவலுக்காக.

    பதிவுகளில் தான் இந்த ஆலோசனை கூறும் சமாச்சாரங்களை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சமீபகாலமாக நினைத்துக் கொள்கிறேன்.

    நேற்று செவ்வாய்க்கிழமை பதிவில் கூட இறுதி பின்னூட்டமா ஆலோசனை, ஆலோசனை அப்படி ஒரு ஆலோசனை. தவிர்த்திருக்கலாம் என்று சில சமயங்களில் நினைப்பதும் உண்டு..

    பதிலளிநீக்கு
  8. மேல் நாட்டு விஞ்ஞான கிருமிகளின் புள்ளி விவரங்களை உற்றுக் கவனிப்பதில்லை..

    நாம உண்டு.. நம்ம வேலை உண்டு...

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. தற்போதைய நிலவரப்படி மாலை ஆறு மணிக்கு மேல் செல்போனில் எதுவும் செய்வதில்லை...

    இன்னும் அதனுடன் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்..

    தூங்க வேண்டிய நேரத்தில் நன்றாகத் தூங்கி விட வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. கணினி, செல்ஃபோன் ஆகியவற்றை மாலை ஆறுமணிக்கு மேல் பயன்படுத்துவது இல்லை. ஆகவே அவற்றின் தாக்கம் இருக்க வாய்ப்பே இல்லை. குஞ்சுலு வந்தால் மட்டுமே இரவில் செல்ஃபோனில் பார்ப்போம். அது வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  13. எண்ணங்களைக் கவனிச்சால் தூக்கம் வந்துடும் என்கிறார் திரு கேஜிஜி அவர்கள். எண்ணங்களைக் கவனிக்க ஆரம்பித்தால் அப்புறமாத் தூங்குவது என்பது ஏது? ம்ஹூம்! தொடர்ந்து எண்ணங்க்ள் அலை அலையாய் வந்து மோத ஆரம்பிச்சுடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய அடுத்த எண்ணம் என்ன என்று கேட்டுக் கொண்டே இருங்கள். ஒரு வெற்றிடம் தோன்றி உறக்கம் வந்து விடும்.

      நீக்கு
    2. தொடர்ந்து எண்ணங்க்ள் அலை அலையாய் வந்து மோத ஆரம்பிச்சுடாதோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  14. இரவு படுக்கையில் அசௌகரியமாய் உணர்கிறேன் என்பதைத் தப்பாய்ப் புரிஞ்சுட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன். நான் சொல்வது உணவினால் ஏற்படும் அசௌகரியம் அல்ல.வயிற்றுத் தொந்திரவெல்லாம் இல்லை. ஏனெனில் பல வருடங்களாக இரவு உணவை ஏழு மணிக்கு முன்னால் முடித்துவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  15. இது படுத்துக்கும்போது உள்ள நிலை பற்றியது. எப்படிப் படுத்தாலும் கை,கால்கள் அசௌகரியமான நிலையில் உள்ளதாகவே தோணும். காலுக்குத் தலையணை எல்லாம் வைச்சு உயரே தூக்கிப்படுத்தாலும் அது என்னமோ வானத்தில் தொங்குவது போல் இருக்கும். அதோடு ஸ்க்ரூ போட்டுக் குடைவது போல் கால்களில்,விரல்களில் எங்கேனு சொல்ல முடியாது. ஏதேனும் ஓர் இடத்தில் வேகமாக வலி ஊடுருவும். அப்போ ஏற்படும் வலி! அந்த இடமே சிறிது நேரம் ஆட்டம் கண்டுவிடும். சில சமயம் மறுபடி மறுபடி நீடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. நரம்புகள் எல்லாம் சரியாகி ரத்தஓட்டம் சீராக மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன் என்றாலும் அவ்வப்போது இந்த வலி வந்து விடும். ரொம்பவே என்னோட உடல்நிலை பற்றி எழுதிக் கொண்டு இருக்கேனோ எனத் தோன்றுகிறது. ஆனால் நான் சொன்ன அசௌகரியம் உணவினால் ஏற்படுவது இல்லை.

    பதிலளிநீக்கு
  17. சோலார் குக்கரில் சமைக்க அவ்வளவு நேரம் எடுக்குமா? அப்போ மின்சாரமும் அதிகமாகச் செலவழியாதோ? எனக்கு இதை நேரடியாக ஒரு முறை பார்த்தால்தான் புரியும். அதே போல் ஓபோஸும். ஆனால் எங்க வீட்டிலும் நாங்க இரண்டு பேர் தான் என்பதால் எல்லாம்தயாராக வைத்திருந்தால் அரை மணி நேரத்தில் ஆகிவிடும். சாதம் மட்டும் ரைஸ் குக்கரில் வைத்தால் எப்படியும் 40 நிமிஷங்கள் ஆகிவிடும். மற்றவை விரைவில் ஆயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி. நான் சொல்லியிருக்கும் சோலார் குக்கர் வெயிலில் மட்டுமே வேலை செய்யும். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் காலை ஒன்பது மணியிலிருந்து பகல் பன்னிரெண்டு மணிக்குள் எல்லாம் தயாராகிவிடும்.

      நீக்கு

  18. @ கீதாக்கா..

    //எண்ணங்களை
    க் கவனிக்க ஆரம்பித்தால் அப்புறமாத் தூங்குவது என்பது ஏது? ..//

    உண்மை.. உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்தாலே அது அடங்கி விடும். அதுதான் சூட்சுமம்.

      நீக்கு
  19. //கஃபைனை (caffeine) தவிருங்கள்

    இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.//

    குவைத்தில் இருந்தவரைக்கும் காஃபி தான் அதிகம்..

    இரவு உறங்கச் செல்லும் முன் காஃபி அருந்துவதும் உண்டு..

    இங்கே வந்த பின் ஒரு சிக்கலான நேரத்தில் சித்த வைத்தியத்தின் போது மருத்துவர் சொன்னார் - குறைத்துக் கொள்ளுங்கள் என்று...

    நான் காஃபி,டீ இரண்டையும் முற்றாக விட்டு விட்டு விட்டேன்..

    ஒன்பது மாதங்கள் ஆகின்றன..

    பதிலளிநீக்கு
  20. மனதிற்கு உழைப்பை கொடுக்காமல், உடலுக்கு உழைப்பைக்# கொடுத்து விட்டால்...

    கனவில்லாத சிறப்பான தூக்கம் தானே வரும்...!

    # இரவு நடைப்பயிற்சி, இரவு மிதமான உணவு, தொல்லைக்காட்சி (வெளியே/கையில் [கைப்பேசி]), தன் மனத்துக்கண் மாசிலன் ஆக முயற்சி செய்யாமை உட்பட, மேலும் பலவற்றும் சும்மா + மனம் குழப்பும் பேதைமை...!

    பதிலளிநீக்கு
  21. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    பதிலளிநீக்கு
  22. நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
    பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
    மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றித் தாள் தவழ்ந்து வாங்கி
    உரம் கெட்டு உறுப்பு அழுகிப் புல் உண்ணா பொன்றும் (சீவக சிந்தாமணி)

    தாத்தா :-

    மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

    +

    உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

    பதிலளிநீக்கு
  23. இன்றைய பகிர்வில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார்கள் .

    பதிலளிநீக்கு
  24. படுத்தவுடன் தூக்கம்தான். பிரர்த்தனை செய்துவிட்டுப் படுப்பது வழக்கம்.

    இரவு தூங்கும் முன் நடப்பது வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் உடனே வரணும்னு ப்ரார்த்திக்கணுமா? இது என்ன புதுக் கதை?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......அது தூக்கத்துக்கு இல்லை...எப்பவுமே வழக்கம் னு சொன்னது....நம்மை மீறிய சக்திக்கு நன்றி நவிலல்.

      கீதா

      நீக்கு
  25. மனதில் உளைச்சல் இருந்தால் தூக்கம் வருவது சிரமம். எனவே மனதை லைட்டாக வைத்துக் கொண்டால், உடலுழைப்பு இருந்தால் (இது அதீதமாக இருந்தாலும் நல்லதில்லை தூக்கம் வராது உடம்பு வலியினால்) தூக்கம் வரும்.

    மதியம் தூங்குவது என்பது வெகு வெகு அபூர்வம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைகள் தொடர்ந்து இருந்தால் மதியம் எப்படி தூங்குவது?

      நீக்கு
    2. அதென்னவோ உண்மைதான் நெல்லை. இப்ப கிடைக்கற கேப்ல வந்து இங்கு பார்த்து பதில்....இப்ப அடுத்த வேலை வந்தாச்சு...இன்னும் அரை மணி நேரத்தில் அடுத்த ஃபிசியோ செஷன்....கடைக்குப் போற வேலை

      கீதா

      நீக்கு
  26. சட்டென்று தூக்கம் வரணும்னா புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருடைய புத்தகம் என்று எழுதியிருந்தால் 100 கருத்துகள் பின்விளைவாக வந்திருக்கும்.

      நீக்கு
    2. அதெல்லாம் பரம ரகசியம்!!!

      கீதா

      நீக்கு
    3. புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சா வரும் கொஞ்ச நஞ்ச தூக்கம் கூடப் போயிடும். அதுவும் சுவாரசியமான புத்தகம் எனில். முடிக்கும் வரை தூக்கம் வராது.

      நீக்கு
  27. கீரையை குக்கரில் செய்வது நல்லதல்ல, மூடி போட்டு வேக வைத்துச் செய்வது உட்பட என்பது என் பாட்டிகள் சொல்லித் தந்த பாடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அலாரம் வைக்கும் பழக்கம் இல்லை. மனதுள் நினைக்கும் நேரத்த்ற்கு எழுந்துவிடுவேன். அலாரம் வைச்சா அதுக்கு முன்னரே முழிப்புவந்துவிடும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்களை மாதிரி எல்லாரும் இருந்தால் கம்பெனியை இழுத்து மூடவேண்டியதுதான்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை ஏந்த கம்பெனிய??!!!

      அது சரி, நெல்லை, என்ன நீங்க வீட்டுல கார்த்திகை பொரி உருண்டை கடலை உருண்டை தேங்குழல் உருண்டை நெய் அப்பம் எல்லாம் பண்ணாம இங்க வந்து கும்மி அடிச்சுட்டுருக்கீங்க!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  29. தூக்கம் வர டிப்ஸ் அருமை. இதில் ஒரு சில தவிர பின்பற்றப்படுகின்றன இங்கு. Early to bed early to rise

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்? இரவு ஒன்பது மணிக்குப் பதிலாக மதியம் அரண்டு மணிக்கே தூங்க ஆரம்பித்து, காலை ஐந்து மணிக்குப் பதிலாக இன்னும் சீக்கிரமாக இரவு 11 மணிக்கே எழுந்துடறாங்க.. நெல்லை

      நீக்கு
    2. நிறைய வயதானவர்கள் அதைத்தானே செய்யறாங்க கீதா ரங்கன்? //

      ஹாஹாஹாஹா புரியுது எங்க வரீங்கன்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!

      //இரவு ஒன்பது மணிக்குப் பதிலாக மதியம் அரண்டு மணிக்கே தூங்க ஆரம்பித்து, காலை ஐந்து மணிக்குப் பதிலாக இன்னும் சீக்கிரமாக இரவு 11 மணிக்கே//

      ஆமாம் நெல்லை....நான் பார்த்திருக்கிறேன்....

      மதியம் தூங்கிவிட்டு ராத்திரி தூக்கமே வரலை என்று சொல்வாங்க.

      கீதா

      நீக்கு
  30. //பகல் தூக்கம் தூங்கும் வழக்கம் உண்டா? அது நல்லதா?

    & நான் தூங்குவது உண்டு. நல்லதோ கெட்டதோ - தூக்கம் வந்தால் தூங்கிடணும் என்பது என்  கொள்கை! //

    ஆபீஸ் வழக்கம் தொடர்கிறது எனக்கும். ஹி ஹி ஹி.

    //குக்கரிலேயே சாம்பார் வைத்தால் பிடிக்குமா?

    & இல்லை; சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்தான் பிடிக்கும். // 

    நல்ல குசும்பு!!!
    Jayakumar

    பதிலளிநீக்கு
  31. காலில் நரம்பு சுருக் வலி B12 குறைப்பாட்டால் வருகிறதாம். sugar செக் செய்வது நல்லதாம். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது போன்று வருகிறது என்கிறார்கள்.

    உடல் நலக்குறைவு வந்தால் நம் கர்மா கழிகிறது, முக்தியை நோக்கி செல்கிறோம் என்று ஆறுதல் கொள்வோம்! :-)

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  32. நான் ராக்கோழி. எப்போதுமே. பகல் முழுவதும் வேலைகள். கல்லூரிப் பணி, வீட்டில் சில வேலைகள், ரப்பர் தோட்ட வேலைகள், தென்னந்தோப்புப் பணிகள், தோட்டத்தில் இருக்கும் வயதான மரங்கள் சாயும் நிலையில் அவற்றை வெட்டி இப்படிப் பல பணிகள். இரவுதான் என் தனிப்பட்ட பணிகளைப் பார்க்க முடிகிறது.

    நான் உறங்கும் நேரம் பெரும்பாலும் இரவு 1.30 மணி. அதனால்தான் அந்தச் சமய்த்தில்தான் பதிவுகளுக்கான கருத்துகளை அனுப்புவது வழக்கம். என் உறக்க நேரம் இதுதான். விடுமுறை நாட்களில் மதியம் உறங்குவதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. அசையா சொத்துக்களை விற்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக வீடு. தோட்டங்களிலும்/நிலங்களிலும் முதலீடு செய்யலாம் அதற்கான உழைப்பு இட முடியும் என்றால். அல்லது வெறும் நிலமாக வேலி போட்டு வைத்துக் கொண்டால் அதன் மதிப்பு உயரும் போது தேவைப்படும் நேரத்தில் உதவும். இப்படியான முதலீடுகள், தங்கத்தில் முதலீடு என்பவை நல்ல முதலீடு. சகாயமுண்டு..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. அருமையான டிப்ஸ்.நன்றி. தூக்கம் சிலசமயம் பிரச்சனைதான். ஆனால்காலையில் சொக்குதே அதுக்கு என்ன செய்ய :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!