புதன், 1 மார்ச், 2023

மால டும் டும் மஞ்சர டும் டும் .. ..

 

கீதா சாம்பசிவம் : 

முகநூல் பதிவுகளுக்கு முக்கியமா மத்யமர் என்னும் குழுமப் பதிவுகளில் ஏன் எல்லோரும் லைக்ஸ்/கமென்ட்ஸ் நு அடிச்சுக்கறாங்க? அது வாங்காட்டி புலம்பல்/பொருமல்/என்னை ஒதுக்கி வைச்சுட்டாங்க. மத்யமரில் சிலருக்குத் தான் லைக்ஸும் கமென்ட்ஸும் கிடைக்கும் என்றெல்லாம் சண்டை! இது என்ன மாதிரியான மனப்பான்மை?

# நாம் இடும்  பதிவுகளுக்கு வரும் மறுமொழிகள் அவை எதிர்க்கருத்தானலும் கூட ஒரு மகிழ்ச்சி உணர்வைத் தருவது முக்கியமான காரணம். ஆர்வம் எல்லை மீறினால் ஒரு வெறி ஆகிவிடுகிறது. 

" என் பேரனுக்கு like போடுங்கள்  "  வேண்டுகோள்களை நிறைய பார்க்கிறோமே. மேலும் அதிக நேயர்கள் இருந்தால் வருமானம் என்றும் சொல்கிறார்கள்.

& என்ன செய்வது! காலத்தின் கோலம் !! facebook பதிவுகளுக்கு like / comments எல்லாம் காகிதப்பூ - போன்றவை. யாருக்கும் அதனால் பைசா பிரயோஜனம் இல்லை. 

மதியச் சாப்பாடு முடிந்து ஓய்வாகப் படுத்திருக்கையில் இன்ஷூரன்ஸ், ட்ரேடிங், டெபாசிட்கள்,மனைகள் விற்பனை என வரும் தொலைபேசி அழைப்புக்களால் கஷ்டப்பட்டிருக்கீங்களா? எங்களுக்கு அநேகமா தினமும் வரும். அதுவும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸும் பெண்களூரில் உள்ள ஒரு ட்ரேடிங் கம்பெனியும் விடாமல் அழைப்பாங்க. நம்பரை ப்ளாக் செய்தும் கூட எப்படியோ வேறொரு நம்பரில் அழைச்சுடறாங்க! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? 

# வியாபார வளர்ச்சி நோக்கம் கொண்ட அழைப்புகள் வராத அதிர்ஷ்டசாலிகள் இருக்க இயலாது.  அகாலத்தில் வருவதும் தவிர்க்க இயலாது.  "பாவம் இவர்கள் தங்கள் வேலையை செய்கிறார்கள் " என்று அனுதாபப் பட்டு ஓரிரு நிமிஷம் பேசி வேண்டாம் என்று உணர்த்தி விடுவேன். 

மோசடி அழைப்புகள் என்று தெரிந்தால் நீண்ட நேரம் ஏடாகூடமாக பேசி வெறுப்பேற்றுவேன்! 

& அந்த வகை அழைப்புகள் வந்தால் - கிளிக் செய்துவிட்டு - ஒன்றுமே பேசாமல் இருப்பேன். அடுத்த முனையில் பேசுபவர் பேசிப் பேசிப் பார்த்து அலுத்துப் போய் இணைப்பை தூண்டித்துவிடுவார். 

ஓடிடியில் திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் உண்டா?

# OTT யில் படம் பார்ப்பது ... ? அமேசான் prime ல் படம் பார்ப்பது உண்டு.

& Amazon prime only. 

ஏராளம்! நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், சோனி லைவ், சான் நெக்ஸ்ட், ஆஹா, ஜீ5..  பிடித்த ஜானர் தெரிவு செய்து பார்ப்பேன்.

============================

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

மால சத்தம், மந்திர சத்தம்..' பாடலின் நான்கு வரிகளுக்கு நம்மூர் சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடங்கி பாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடி இண்ஸ்டாவில் பதிந்து வருகிறார்களே? பார்த்து ரசித்தீர்களா? யார் நடனம் உங்களை கவர்ந்தது?

கேள்வி கேட்டவர் அனுப்பிய காணொளி : 


# நான் பார்க்கவில்லை.

& இன்ஸ்டா பார்க்கவில்லை - நான் இந்தக் காணொளியில் பார்த்ததை வைத்துச் சொன்னால் - விஷாலுக்கு வலது பக்கம் இரண்டாவதாக ஆடுபவர் நன்றாக ஆடுகிறார். (அது சரி அது என்னங்க 'மால' சத்தம்?) 
(பாடல் வரிகள் : 
மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும்
ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும்.. ) 

* நான் இதைவிட திருச்சிற்றம்பலம் பட டான்ஸை ரசித்தேன் (மேகம் கறுக்காதா)  பாஸுக்கும் பிடிக்கும்!  சொல்லப்போனால் அவருக்குதான் முதலில் பிடிக்கும்!


நடனத்தில் கலக்கும் நடிகர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?

# தற்போதைய "நடனம்" எனக்குப் பிடிக்காத ஒன்று.

& நாகேஷ் ஒருவர்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அப்புறம் கமல். 
* யார் சுவாரஸ்யமாக நடனம் ஆடினாலும் பிடிக்கும்.  நாகேஷ், ஆனந்த்பாபு, பிரபுதேவா, கமல், மிதுன் சக்கரவர்த்தி, ரிஷி கபூர், கமல்,....

= = = =
பதிவர் கில்லர்ஜி அவர்களுக்கு நாங்கள் அனுப்பிய கேள்வி : 

கில்லர்ஜி என்ற பெயரைப் பார்த்தாலே பய உணர்வு தோன்றுகிறதே. பெயர்க்காரணம் என்ன? 
வேறு சாத்வீகமான பெயர் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

கில்லர்ஜி அவர்கள் அனுப்பிய பதில் : 

எமது பதில்.

கில்லர்ஜி இந்த பெயர் எனது பார்வையில் கனிவாக தெரிகிறது.
ஒருவேளை எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கொன்று வைத்ததுகூட காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை நான் வைத்து இருந்தால் கோந்தைமலை,  கோடரி வேந்தன் கோச்சடையான் என்ற இனிமையான நாமம் சூட்டிக்கொன்று இருப்பேன் - கில்லர்ஜி தேவகோட்டை. 

அப்பாதுரை பக்கம் ! 

அப்பாதுரை சாரின் பதில் தொடர்கிறது : 

(எங்கள் கேள்வி : சமீபத்தில் நீங்கள் பார்த்த / படித்த / கேள்விப்பட்ட வித்தியாசமான செய்தி எது?) 

ஜெர்மனியின் வைஸ்பேடன் குழு ஹோட்டல்கள் உலகப் பிரபலம். ஆட்ரி ஹெபர்ன், ஜான் கென்னடி, நம்மூர் உலகநாயகன் உள்பட நிறைய பிரபலங்கள், பெரும் தொழிலதிபர்கள், பிரதம மந்திரிகள், அரபி இளவரசர்கள் தங்கும் ஹோட்டலகள். 

இதில் நம் நாயகர்கள், ஜித்தன் மற்றும் ஜித்தி என்று பெயர்களை வைப்போம், எப்படி இலவசமாகத் தங்கி எஞ்சாய் மாடினார்கள் என்பது இந்த வித்தியாசமான.. இல்லை.. விசித்திர செய்தி.

இந்த ஹோட்டலில் ஒரு சாதாரண அறைக்கு ஒரு நாள் வாடகை 250 யுரோ. ஐந்து நாளுக்கான வாடகையை முன் பணமாகக் கொடுத்து இவர்கள் பதிவு செய்த அறையின் ஒரு நாள் வாடகை 600 யுரோ.
அதற்குப் பின் ஒரு வருடம் இவர்கள் வாடகை தரவில்லை.

முதலில் பணம் இதோ அதோ என்றவர்கள் பிறகு ஹோட்டலில் இது குறை அது குறை என்று அடம் பிடிக்கத் தொடங்கினர். ஆறு மாதங்களுக்குப் பிறகு (!) இவர்களை வெளியே தள்ள முயற்சி செய்ய உடனே ஜித்தர் தன் மனைவிக்கு மன நோய் மருத்துவம் என்று ஒரு சான்றிதழ் வாங்கி சமர்பிக்க ஹோட்டல் நிர்வாகி அவர்களை எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். போன மாதம் புதிதாக வந்த நிர்வாகி (பழைய நிர்வாகிக்கு வேலை ஏன் போனது? ஹ்ம்) ஜித்தரைப் பார்த்து கைல காசு ரூம்ல பாஸு என்று சொல்லி மனைவியின் உடைமைகளை எடுத்தெறிய உத்தரவிட்டார். பிறகு மனைவியையும் எடுத்தெறிய முனைந்த போது ஜித்தர் தம்பதிகள் வெளியேறினர். 

வெளியே வந்த சூட்டில் போலிசில் புகார் கொடுக்க, அவர்கள் பாதுகாப்பாக இருக்க ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்தனர் போலீசார். அந்த ஹோட்டல் எதுவென்று நினைக்கிறீர்கள்?!

இரண்டரை லட்சம் யுரோ கணக்கில் பாக்கி. ஜித்தர்கள் ஜாலி. ஹோட்டல் கஜானா காலி.

சுருளிராஜன் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது.

மேரா பாரத்து மக்கா

வாங்கிய கடனை செலுத்தாமல் அடம் பிடிக்கிறீர்கள். கடன் கொடுத்தவர் உங்களுக்கு சிக்கல் தருகிறார். உடனே அவர் மீது நீங்கள் கேஸ் போடுகிறீர்கள். அவர் மிரண்டு  நீங்கள் கடன் திருப்ப வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து கைச் செலவுக்குப் பணம் கொடுத்து உங்களை ஆளை விடு சாமி என்று ரயிலேற்றி அனுப்பி வைக்கிறார். 
இது எப்படி இருக்கு?. 

= = = =   

வாசகர்களுக்கு எங்கள் கேள்வி : 

இந்த வாரம் ரொம்ப சிம்பிள் கேள்விகள் : (சிவாஜி கணேசன் படங்களிலிருந்து)  !

திருவிளையாடல் படம் பார்த்திருப்பீர்கள். 

1) பாண பத்திரரின் மனைவி பெயர் என்ன (கவனிக்கவும் - நடிகையின் பெயர் கேட்கவில்லை - பாத்திரத்தின் பெயர் என்ன ? ) 

2) ஹேமநாத பாகவதரை ஊரை விட்டே ஓடச் செய்த விறகுவெட்டியின் பெயர் என்ன ? 

3) சீதையின் பேத்தி சகுந்தலை என்று எப்படி நிரூபிப்பீர்கள் ? 

= = = =  

அடுத்த வாரம் சந்திப்போம் ! 

==   ===   


100 கருத்துகள்:

  1. ஆஹா! நான் தான் ஃபர்ஷ்ட்டோ ஃபர்ஷ்ட்டு!

    பதிலளிநீக்கு
  2. அப்பாதுரை பக்கம்? எப்போ? என்னிக்கு ஆரம்பிச்சது? இதன் ஆரம்பம் எங்கே? அந்த ஓட்டலில் தங்கிக் காசு கொடுக்காமல் ஏமாற்றிய இந்திய ஜித்தர்கள் யாராயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  3. பானுமதிக்கு எப்படி இந்த மாதிரியெல்லாம் கிடைக்குது? நான் இன்ஸ்டாவில் இல்லை என்பதால் எனக்குத் தெரியலைனு நினைக்கிறேன். இப்படி எல்லாம் ஓடுது என்பதே இப்போத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) நான் இன்ஸ்டாவில் உள்ளேன். ஆனால் அந்தப் பக்கம் செல்வதில்லை!

      நீக்கு
    2. //பானுமதிக்கு எப்படி இந்த மாதிரியெல்லாம் கிடைக்குது?//என்னைப் போன்ற யூத்துகள் வலம் வரும் இடம் இன்ஸ்டா.

      நீக்கு
  4. ரொம்பவே எளிமையான கேள்விகள் என்பதால் நான் இதை எல்லாம் சாய்ஸில் விட்டுடறேன். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ! சும்மா சமாளிக்காதீங்க!!

      நீக்கு
    2. hehehehehehe!பின்னே! ஹேமநாத பாகவதர் பெயர் தவிர்த்து மத்தது நினைவில் இல்லைனு சொல்லிக்க வெட்கமா இருக்காதோ? :))))))

      நீக்கு
  5. சந்திரபாபு பிரமாதமாக ஆடுவாரே! நாகேஷும் ஆடுவார். மத்ததெல்லாம் ஆட்டமே இல்லை! நடிகர்களில் முன்னாலே "விநீத்"னு ஒருத்தர் இருந்தார். அவர் நன்றாக ஆடுவார். உலக்கையை விட நன்றாக! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரபாபு அவர்களை மறந்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை!..

      நீக்கு
    2. நான் விபரம் அறிந்து சினிமா பார்க்கத் தொடங்கியது நாகேஷ் காலத்தில்தான்.

      நீக்கு
    3. @கௌதமன் சார், நான் சந்திரபாபு படமெல்லாம் பார்த்ததே எங்க வீட்டில் தொ.கா.பெ. வந்தப்புறமாத் தான். அதிலும் "சபாஷ் மீனா!" ரொம்பவும் ரசிச்சுப் பார்த்தேன். ரிக்ஷா ஓட்டியை பங்களாவில் உட்கார்த்தி வைக்க அவரோ ரிக்ஷா ஓட்டியே தீரணும்னு அடம் பிடிக்க! நகைச்சுவை என்றால் தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் காலத்துக்கப்புறமா வரதெல்லாம் நகையும் இல்லை, சுவையும் இல்லை.

      நீக்கு
  6. ஸ்ரீராமும் இந்த வார பதில் அளிப்பவர்களில் சேர்ந்திருக்காரே! பாடல் பற்றிய கேள்வி என்பதாலோ?

    பதிலளிநீக்கு
  7. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. 2) விறகு வெட்டியின் பெயர்
    சடை

    பதிலளிநீக்கு
  9. வங்கிகளிலிருந்தது வரும் அழைபேசி தொல்லை சில நேரங்களில் வெறுப்பு ஏற்றுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. நான் தேவகோட்டையாரே என்று தான் அவரை விளிப்பது நெடு நாளைய வழக்கம்.

    பதிலளிநீக்கு
  11. பாணபத்திரர் அவரது மனைவியிடம் திலகா எனப் பேசுவதாக நினைவு..

    முழுப்பெயர் நமது விருப்பப்படி -
    திலகா - திலகவல்லி அல்லது திலகவதி!..

    இங்கே பரிசு எதுவும் வழங்கப் படாது என்பதை யும் அறியவும்!..

    பதிலளிநீக்கு
  12. ஹேமநாதரிடம் உள்ள இசையின் மகத்துவம் அறியாமல் பேசுகிறாய்!..

    பதிலளிநீக்கு
  13. இன்ஸ்டா பார்க்கவில்லை// பாருங்கல் ஸ்ரீராம். வித்யா பாலன், மாதுரி தீக்ஷித், சுதா சந்திரன் போன்ற பலரும் இந்த பாடலின் நாங்கு வரிகளுக்கு ஆடியிருகிறார்கள். என் ஓட்டு வித்யா பாலனுக்கு.

    பதிலளிநீக்கு
  14. அது சரி அது என்னங்க 'மால' சத்தம்?// அதுவாவது பரவாயில்லை,மஞ்சர சத்தமாமே..? மஞ்சளின் சத்தமாம்.. அப்படி ஒன்று உண்டா? அபத்தங்களை அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாதா??

    பதிலளிநீக்கு
  15. முன்னொரு காலத்தில் புதன் கிழமைகளில் பொது அறிவு கேள்விகள் கேட்பீர்களே..? அதை அவ்வப்பொழுது தொடரலாமே.:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவைகளுக்கு வரவேற்பு அதிகமாக இல்லை.

      நீக்கு
    2. அதுக்குக் காரணம் கௌதமன் சார் கருத்துரைக்கு நன்றி என்று எழுதி கதவைச் சாத்துவதால் என்பது என் எண்ணம்...ஹிஹிஹி

      நீக்கு
    3. ஆஹா !! இப்படி ஒரு பழி வாங்கல்! - பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு விவரமான மறுமொழி கொடுப்பேன். மேலும் அவர்களின் பதில்கள் அடுத்த வார மின்நிலா இதழிலும் வெளியாகும்.

      நீக்கு
  16. இந்த டான்ஸ், பாட்டுப் பக்கங்கள் எல்லாம் நான் போவதே இல்லை. படம் எப்போதாவது பார்ப்பேன் நெட்ஸ்பிளிக்ஸ் ,பி ரைம், அதுவும் நல்லது என அறிந்தால் மட்டும்.

    அண்மையில் மம்முட்டியின் 'மதியநேரத்து மயக்கம்' பார்த்தேன்.

    மற்றைய கேள்வி பதில்களுக்கு எனக்கு விடை தெரியாது. சிலர் விடை கூறியுள்ளார்கள் அறிந்தேன்.

    இன்றைய பகிர்வும் நிறைவானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'மதியநேரத்து மயக்கம்' பார்த்தேன், எனக்கு பிடித்து இருந்தது.

      நீக்கு
  17. நிறைய நாட்கள் கழித்து, இன்றைய புதன் பொலிவு பெற்றுள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வந்திருகிறேனே.. ஹி ஹி!

      நீக்கு
    2. பானுமதி நீங்கள் வந்து இருப்பது மகிழ்ச்சி. பேத்தி இப்போதுதான் கொஞ்சம் விட்டு இருக்கிறார் போலும்.

      நீக்கு
  18. தமிழக முதல்வருக்கு பிறந்த நாளில் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு விருந்தாளிகளில் நீங்களும் ஒருவர் என்று உங்களுக்குஅழைப்பு வருகிறது. அவருக்கு என்ன பரிசு கொண்டு செல்வீர்கள்? அவரிடம் என்ன கூறுவீரகள்? பிறந்த நாள் வாழ்த்து என்று கூறி டபாய்க்கக் கூடாது

    பதிலளிநீக்கு
  19. இன்று காலை ஒரு கனவு, நான் காஞ்சீபுரம் செல்கிறேன், அங்கிருக்கும் நெல்லை தமிழனிடம் எனக்கு இந்த ஊர் கோவில்களைப் பார்க்க வேண்டும் என்று கூற, அவர் "உங்களுக்கு முதலில் தாயாரை சேவிக்க வேண்டுமா? பெருமாளை சேவிக்க வேண்டுமா?" என்று கேட்கிறார், "நான் அப்படியெல்லாம் இல்லை, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்கிறேன்" இதோடு கனவு முடிந்து விட்டது. இந்த கனவிற்கு என்ன பொருள்? பி.கு.: நான் நெ.தெ.யை பார்த்ததே கிடையாது, என் கனவில் வந்தவர் நெ.தெ. என்று எனக்குத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  20. நம்பரை ப்ளாக் செய்தும் கூட எப்படியோ வேறொரு நம்பரில் அழைச்சுடறாங்க! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? //

    கீதாக்கா எனக்கும் நிறைய வரும். நான் எடுப்பதே இல்லை. அறியாத எண் வந்தால் எடுக்க மாட்டேன். இணையத்தில் ஒரு தளம் உண்டு அதில் அந்த நம்பரைப் போட்டுப் பார்த்து நமக்குத் தெரியாதது என்றால் ப்ளாக் செய்துவிடுவேன். வேறு நம்பரிலிருந்தும் வரும், தெரியாத/ கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நம்பரை எடுப்பதே இல்லை. அப்படி வேண்டப்பட்டவர் என்றால் நான் எடுக்கலைனா எஸ் எம் எஸ் கொடுக்கலாமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமளும் அப்படித்தான். நம்பரைப் பார்த்தாலே புரிஞ்சுடும். இதுவரைக்கும் எத்தனை எண்களை ப்ளாக் செய்திருப்பேனோ! கணக்கே இல்லை.

      நீக்கு
    2. // இணையத்தில் ஒரு தளம் உண்டு அதில் அந்த நம்பரைப் போட்டுப் பார்த்து நமக்குத் தெரியாதது என்றால்// அது என்ன தளம் ?

      நீக்கு
    3. கூகிளாரே நமக்கு வரும் தொலைபேசி எண்ணைப் போட்டால் முழுத்தகவல்களையும் கொடுத்துடுவார்.

      நீக்கு
  21. மால சத்தம், மந்திர சத்தம்..' //

    எந்தப் படம் இந்தப் பாட்டு? இது வரை கேட்டதில்லை இப்பத்தான் கேட்கிறேன்....

    அது சரி அக்கா கேட்ட கேள்விக்கான வீடியோ இல்லை போல இருக்கே...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அந்த வீடியோ கொடுத்திருந்தா பார்த்து சொல்லியிருக்கலாம்...கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  23. விஜய் நடனத்தை பார்க்கும் பொழுது என்ன கண்ட்ரோல்! என்று பிரமிப்பாக இருக்கும். கமல் நடனம் ரசிக்க முடியும். சலங்கை ஒலியில் ஒரு தீவிர நடன வேட்கை கொண்டவன் போல் ஆடியிருக்கும் இவர் விஸ்வரூபதில் 'உன்னைக் காணமல் நான் இங்கு நான் இல்லையே..' பாடலுக்கு நடன ஆசிரியரைப் போல ஆடியிருப்பார். நடனக்காட்சிகளில் இவரின் தலை அசைவுகள் எனக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  24. மந்திர சத்தம்

    என்பது அபஸ்வரமாக ஒலிக்கவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பாடல் வரிகள் அவை இல்லை. அதையும் பதிலில் சொல்லியிருக்கிறேன். பாடலின் வரிகளில் மால (மாலை?) மஞ்சர என்றுதான் வருகின்றன.

      நீக்கு
    2. ஆமாம். நானும் பாடலைக் கேட்டேன்.
      இது 'மந்திர சத்தம்'
      என்று தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கும்
      சகோ. தி. கீதாவிற்கான பின்னூட்டம்.
      பாடலை எபி வாட்ஸாப் க்ரூப்பில் பதிவு செய்திருக்கிறேன். கேட்பவர்கள் கேட்டு
      மெய் மறந்து போகலாம். :))

      நீக்கு
    3. "மந்திர சத்தம்/சப்தம்" என்பது நாங்கல்லாம் பொதுவாகப் பயன்படுத்துவது.யார் வீட்டிலிருந்தாவது மந்திர சப்தம் கேட்டால், எங்கேயோ மந்திர சப்தம் எனப் பேசிப்போம். அபஸ்வரமாகவோ அபசகுனமாகவோ நினைத்தது இல்லை.

      நீக்கு
  25. கில்லர்ஜியின் பதில் ஹாஹா அவரது பாணியில்...

    அப்பாதுரை கொடுத்திருக்கும் செய்தி நம்ம ஆளுங்க வெளிநாட்டில் போய் அடிக்கும் கூத்து நிறைய உண்டு என்பதில் ஒன்று. ஆனா இந்த ஜித்தன் யாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  26. 1. திலகா 2. சடை?

    3. Family tree போட்டுப் பாத்தா விடை கிடைக்கும்!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நடனத்தில் கலக்கும் நடிகர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?//

    அக்காலத்தில் சந்திரபாபு, நாகேஷ்

    அப்புறம் கமல் - விஸ்வரூபத்தில் அவரது நடனம் நன்றாக இருக்கும்

    விஜய், தனுஷ் நன்றாக ஆடுவார்கள். தனுஷிற்கு உடம்பு ஒத்துழைக்கும். பிரபுதேவா நடனம் உடம்பின் flexibility ரப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே - ஆரம்ப இசை - கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே பாடலின் இசை போல...ஆரம்பமும் டக்கென்று அதோடு ஒட்ட முடியும்......அதன் பின் பாட்டு பாடவா பாட்டு கேட்கவா பாடல்கள் போன்று ஆனால் கொஞ்சம் மேற்கத்திய இசையில்....இப்போதைய ட்ரெண்டிற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  29. தனுஷ் பாடியிருக்கிறாரேமே இப்பாடல்...பரவாயில்லையே நல்லா பாடியிருக்கிறார்.

    ஆனால் இப்பல்லாம் சுருதி சேராம பாடினாலும் அதுக்கு ஏதோ டெக்னாலஜி இருக்காமே அதுல எல்லாம் சரி பண்ணிடுவாங்களாமே...சமீபத்தில் பிரபல பாடகரோ பாடகியோ சொன்ன நினைவு....

    அப்படினாக்க ஸ்ரீராம் நாமளும் ஒரு சான்ஸ் கேட்டுப் பாக்கலாம்!!! என்ன சொல்றீங்க....ஹிஹிஹிஹீ ...சுருதி எல்லாம் அவங்க பாடு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. //ஆஹா! நான் தான் ஃபர்ஷ்ட்டோ ஃபர்ஷ்ட்டு!// அதான் இன்னிக்கு போணி ஆயிருக்குப் போல. நெல்லை தான் பிசி போல. வரலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவாயூரில். இப்போ மாலைல திருவித்துவக்கோடு பிறகு திருநாவாய். இப்போ குருவாயூர் நோக்கி

      நீக்கு
    2. ஒரே முறை போனோம் குருவாயூருக்கு. கனவு போல நினைவுகள். கேரள சேட்டன்களும், சேச்சிகளும் தரிசனம் செய்யவே விடலை. :( அதே கர்நாடகாவில் நேர்மாறாக உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு அதிகம்..

      நீக்கு
    3. கேஷவின் இன்றைய ஓவியம் குருவாயூரப்பன் தான். உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் நெல்லை!

      நீக்கு
  31. கேள்விகளும், பதில்களும், பின்னூட்டங்களும் மிக அருமை.
    பாடல்கள் கேட்டேன்.
    தேவகோட்டை அவர்கள் பதில், அப்பாத்துரை சார் பக்கம், எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் கேள்விகள் அனைத்தும் அருமை. விளக்கமாக பதில் தந்திருப்போருக்கும் நன்றி.

    எங்களுக்கான கேள்விகளுக்கு அனைவரும் பதில் தந்து விட்டமைக்கும், அனைவருக்கும் நன்றி. (முதலிலேயே வந்திருந்தால், நானும் முடியும் வரை முயற்சித்திருப்பேன். அதனாலென்ன பாதகமில்லை... அடுத்த முறை பார்க்கலாம். என சமாதான படுத்திக் கொண்டேன். :) ) இரு தினங்களாக தடுமன், ஜுரம் போன்ற உடல்நல குறைபாட்டால் வர இயலவில்லை. வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால மாற்றத்தால் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கிறது உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் கமலா.

      நீக்கு
    2. உங்கள் சீரான உடல் நலத்துக்குப் பிரார்த்தனைகள் கமலா ஹரிஹரன். சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுவதாகச் சொல்கின்றனர். கவலையாகவும்/பயமாகவும் இருக்கிறது. "பெண்"களூரில் உள்ள உங்களுக்கு மாறுபட்ட சீதோஷ்ணத்தால் ஜூரம் வந்திருக்கலாம். கவனமாக இருங்கள்.

      நீக்கு
    3. நாம் ஒரு பொருளை வாங்கினால் அதைப் பற்றிய விளம்பரங்கள் முகநூலிலும் ஜிமெயிலிலும் அதிகமாய் வருவது எப்படி? இணையம் நம்மைக் கண்காணிக்கிறது என்பதாலா?

      எல்லோருக்கும் அவரவர் தாய்மொழி எனில் மதிப்பும், மரியாதையும் அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் தமிழர்கள் மட்டும் இதில் தனித்துவம் பெற்றவர்கள் எனச் சொல்லுவது எப்படி?

      இன்றைய ஆரம்பக் கல்வி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருப்பதற்கும் தாய்மொழி குறித்த அறிவு அவர்களுக்கு இல்லாததற்கும் என்ன காரணம்?

      நீக்கு
    4. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      தாங்கள் நலமா? என் உடல் நலம் குறித்த தங்களின் அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி

      ஆம் இப்போதைய கால மாறுதல்கள் சாதாரண ஜலதோஷம் ஏழுநாட்களுக்குப் பின்னும் விடாமல் நீடிக்கிறது. எங்கள் வீட்டில் குழந்தைகள், பெண், மருமகள் என ஏதோ ஒரு வகையில் இதனால் அசௌகரியங்கள் தொடர்கின்றன. மருந்து, மாத்திரை என மருத்துவ செலவுகள் செய்தும் உபத்திரவபடுத்துகிறது. இப்போது கொஞ்சம் சரியாகி வருகிறது. அக்கறையுடன் விசாரித்த உங்கள் அன்புக்கு ரொம்பவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      உங்களுக்கு உங்கள் அன்பான விசாரிப்பு குறித்து நன்றி யுடன் ஒரு பதில் கருத்து தெரிவித்திருந்தேன். அதைகக்காணவில்லை. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  33. வடமாநில இளைஞர்கள் இங்கே வந்து பிழைப்பு நடத்துவதை ஆதரிக்கிறீர்களா? அதனால் தமிழர்களில் வேலை வாய்ப்புக் குறைகிறது என்பதும் சரியா?

    கிராமங்களில் நூறு நாள் வேலைக்கே ஆள் கிடைப்பதில்லை. அப்போ கிடைக்கும் வடமாநில ஆட்களை வைத்து வேலை வாங்குவது தவறானதா?

    பதிலளிநீக்கு
  34. மத்திய அரசு வேலைக்கான தேர்வில் பங்கு பெற்றுத் தேர்ச்சியடையும் விதத்தில் நம் தமிழ்நாட்டுக் கல்வி முறை தரமானதாக உள்ளதா?

    தொழில் முனைவோராகப் பயிற்சி பெறவோ அல்லது மத்திய அரசு வேலைக்கான தேர்வுகளில் பங்கெடுக்கப் பயிற்சி பெறவோ தமிழக இளைஞர்கள் ஏன் முன் வருவதில்லை?

    பதிலளிநீக்கு
  35. ஈரோடு, திருப்பூர்ப் பகுதிகளில் நடைபெற்று வரும் பின்னலாடைப் பயிற்சி, ரெடிமேட் ஆடைகளில் அலங்காரங்கள் செய்யும் பயிற்சி, உடை தயாரிப்புக்கான பயிற்சி போன்றவற்றிற்கு மத்திய அரசு இளைஞர்கள், இளம்பெண்களைத் தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு உதவித்தொகை, தங்குமிடம், உணவு இவற்றோடு பயிற்சி கொடுக்கவும் ஏற்படுத்தப் பட்டிருக்கும் கல்லூரிகள் குறித்துத் தமிழக அரசோ, தமிழகத்தின் கட்சிகளோ அறிந்திருக்கிறதா? பெரும்பாலும் அவற்றில் வட மாநிலப் பெண்களும்/ஆண்களுமே இடம் பெறுவதும் தெரியுமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!