திருவிடவெந்தை.
ஜூலை மத்தியில் சென்னையிலிருந்த எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை விற்று ரெஜிஸ்தர் செய்வதற்காக வந்திருந்தோம். (அந்த 12ம் தேதிதான் ஜீவி சாரின் சதாபிஷேகம் போரூரில் நடந்தது. எங்க வீட்டு ரெஜிஸ்டிரேஷன் திருப்போரூரில். அதனால் அதில் நான் கலந்துகொள்ள இயலவில்லை)
எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் 15ம் தேதி காலி செய்து சாவியைக் கொடுக்கிறோம் என்று சொல்லியிருந்தார். அவர்கள் மிக நல்லவர்கள் (சாவி வாங்கும் அன்றுதான் அவரைப் பார்த்தேன்). வீட்டை வாங்கியவரோ, எங்கள் கையால் சாவியை வாங்கிக்கொள்ள எண்ணியிருந்தனர். அதனால் நாங்கள் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கவேண்டி வந்தது.
அதில் ஒரு நாள்தான், வழக்கமான யாத்திரை அழைத்துச் செல்பவர், ஒரு நாள் யாத்திரை என்று திருவல்லிக்கேணி, , திருக்கடல் மல்லை, திருவிடவெந்தை, பொன்விளைந்த களத்தூர், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் மற்றும் சில பல கோவில்களை தரிசனம் செய்யும் திட்டம் போட்டிருந்தார். என் மனைவியோ, அவற்றில் சில கோவில்களை ஏற்கனவே தரிசனம் செய்துவிட்டதாலும், காஞ்சீபுரம் வரதராஜரை தரிசனம் செய்யும் ஆசையாலும், கார் எடுத்துக்கொண்டு நாம் இந்தக் கோவில்களை தரிசனம் செய்யலாம் என்று சொன்னார். அதற்கு ஏற்றாற்போல், யாத்திரை நடத்துபவரும் அந்த ஒரு நாள் யாத்திரையை கேன்சல் செய்துவிட்டதால், ஒரு காரை எடுத்துக்கொண்டு அன்று முழுவதும் சில பல கோவில்களைத் தரிசனம் செய்தோம். அவற்றைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.
எந்த எந்தக் கோவில்களுக்குச் செல்லலாம் என்று மனைவி ஒரு திட்டம் போட்டுத் தந்தார். எனக்கோ யாத்திரை நட த்துபவருடன் சென்றால் எந்தக் கோவிலும் மிஸ் ஆகாதே என்ற எண்ணம். இருந்தாலும் நாமே கார் எடுத்துக்கொண்டு சென்றால், நாம் நினைக்கும் இடத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியும். முதலில் திருவிடவெந்தை செல்லலாம் என்று நினைத்தோம். காலை 6 ½ மணிக்கு விஸ்வரூபம் என்று இருந்ததால், நாங்கள் காலை 5 ½ மணிக்கு தங்கியிருந்த இடமான தி.நகரிலிருந்து கிளம்பினோம்.
எனக்கு தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கவேண்டும். இதனை முடிந்த அளவு விடாமல் தொடர்கிறேன் (கடந்த 525 நாட்களுக்கு மேல்). அதனால் பயணங்கள் என்றாலே எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கும், எங்கே அந்த 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதற்கு பங்கம் வந்துவிடுமோ என்று. காலை 5 ½ மணிக்கு கிளம்பவேண்டும் என்றால் நான் 4 மணிக்கு நடைப்பயிற்சி ஆரம்பித்துவிடுவேன். சில யாத்திரைகளில் காலை 3 மணிக்கும் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.
அதுபோல திருவிடவெந்தைக்கு அதிகாலையிலேயே கிள்ம்பவேண்டும் என்பதால் 4 மணிக்கே நடக்க ஆரம்பித்து என் நடைப்பயிற்சியை முடித்துவிட்டுக் கிளம்பினேன். அப்போ என் மனதில் தோன்றவில்லை, கோவில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வதால் அதுவே 5000 ஸ்டெப்ஸ் ஆகிவிடுமே என்று.
ஞாயிறு காலை என்பதால், சாலைகளில்
கூட்டமில்லை. அதனால் கோயிலை விரைவாகவே அடைந்துவிட்டோம்.
இந்தக் கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டது. தலத்தின் வரலாறு 2000 வருடங்களுக்கு மேல் பழைமையானது. கோயில் வராஹ அவதாரத்தில் பெருமாள் தரிசனம் தரும் இடம். 7ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. பிறகு 11ம் நூற்றாண்டில் சோழர்களும் இதனைத் திருத்தியிருக்கின்றனர். வைணவ மரபு சொல்வதில் கால மாறுபாடுகள் இருந்தாலும், பல்லவ மன்ன ன் பரமேச்வரன் நிர்மாணித்த காஞ்சீபுரம் கோவிலைப் பற்றிப் பாடும்போது, திருமங்கையாழ்வார், அந்த மன்னனைப் பற்றியும் பாசுரங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் திருமங்கையாழ்வார் 7-8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கொள்ளலாம். அவர் இந்தத் தலப் பெருமாளைப் பற்றி பாசுரங்கள் பாடியுள்ளதால் இது வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக இருக்கிறது.
திருமங்கையாழ்வார் ஆழ்வார் பன்னிருவர்களில் கடைசியாக அவதரித்தவர். திருவாலி நாட்டில், திருக்குறையலூர் என்ற இட த்தில் பிறந்தவர். அவர் நாலாயிர திவ்யப் பிரபந்த த்தில், அதிகமான பாசுரங்களைப் (1250க்கும் மேற்பட்ட) பாடியவர். ஆழ்வார்களிலேயே அதிகமான திவ்யதேசங்களைப் பாடியவர் இவரே (108 வைணவ திவ்யதேசங்களில் 86 திவ்யதேசங்கள்). இவர் பாடியுள்ள பிரபந்தங்கள், பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவை ஆகும். இங்கு இதனைக் குறிப்பிடக் காரணம், திருமங்கை ஆழ்வார் இல்லையென்றால் நமக்கு 50க்கும் மேற்பட்ட திவ்யதேசங்கள் தெரிந்திருக்காது.
திவ்யதேசங்கள் என்று இங்கு குறிப்பிடுவது, அவர் பாடிய கோயில்கள். சில பல கோயில்களின் பெயர் மாத்திரம் அவர் பாசுரங்களில் குறிப்பிட்டிருப்பார். அதனால் அந்தக் கோவில்கள் வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக க் குறிப்பிடப்படும். அதே சமயம், மிகப் பெரிய கோயில்களை ஆழ்வார்கள் பாடாதுவிட்ட உதாரணங்களும் உண்டு. அந்தக் கோயில்கள் அளவில் பெரியன, கோயில் வரலாற்றிலும் பழைமையானவை, பக்தர்கள் மனதிலும் இடம் பெற்றவை. ஆனாலும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அந்தக் கோயிலின் பெயரோ இல்லை கோவில் மூர்த்தங்களைப் பற்றியோ குறிப்பு இல்லாததால், அவைகள் வைணவ திவ்யதேசமாகக் கொள்ளப்படுவதில்லை, அபிமானத் தலங்களாகக் கொள்ளப்படுகின்றன.
ஏன் இந்தக் கோயில்களை ஆழ்வார்கள் பாடவில்லை என்பதற்குக் காரணம் தெரியாது. பிற்காலத்தில் இராமானுஜரும் மற்ற வைணவ ஆச்சார்யர்களும் சில கோயில்களை, இந்தப் பாசுரம் கொள்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தாலும், 108 திவ்யதேச எண்ணிக்கையில் அவைகள் வராது. உதாரணமாக காஞ்சீபுரம் வரதராஜர் கோயில் (காஞ்சீபுரத்தில் இருப்பதிலேயே மிகப் பெரிய கோயில்.. இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்), மன்னார்குடி இராஜகோபாலன் கோயில், வடுவூர் இராமர் கோயில், கேரளாவில் குருவாயூர் கோயில், கர்நாடகத்தில் பல கோயில்கள், மேல்கோட்டை (திருநாராயணபுரம்) கோவில் உட்பட.
இந்தத் தொடரின் நோக்கம் நான் சென்ற கோயில்களின் படங்கள், அங்கிருக்கும் சிற்பங்கள் என்ற அளவில் ஞாயிறு பட உலாவாக வாசகர்களுக்கு அளிப்பதாக இருப்பதால், புராணங்கள், பாசுரங்கள், தல வரலாறு போன்றவற்றை இங்கு எழுதுவதில்லை. இன்னொரு காரணம், வெறும் புராணங்கள் மாத்திரம் என்னை ஈர்ப்பதில்லை. நாம் வழிபடும் தெய்வம் (நாராயணன், விஷ்ணு) பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு கோயிலிலும் காட்சி தருகிறான், அவனைத் தரிசிப்பதே என் நோக்கம். அப்படி தரிசிக்கும்போது, இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள், இங்கிருக்கும் படங்களையும் அங்கு காண்பார்கள், அந்தத் தலத்தை மனதில் இருத்த புகைப்பட உலா உதவும் என்பதுதான்.
இராமானுஜர் சிற்பம் இருப்பதால் இந்த மண்டபம் பிற்காலத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் பெரும்பாலான திவ்யதேசக் கோவில்களில் அந்தக் கோவில் சம்பந்தமான பிரபந்தப் பாசுரங்களை இவ்வாறு அமைத்துவைத்துள்ளார்கள் (பாசுரங்கள் பத்துப் பதினைந்துக்குள் இருந்தால் இப்படி அமைக்க முடியும். முக்கியக் கோவில்களில் பாசுரங்கள் நூறுக்கும் மேலாக இருந்தால் அந்தக் கோவில்களில் கல்வெட்டில் இப்படிப் பொறித்திருக்க மாட்டார்கள்). இதனால் எனக்கு கோவில் மண்டபத்திலேயே சேவிப்பதற்கு எளிதாக இருக்கும்.
இன்னும் கருவறையின் திரை விலகவில்லை. நாமும் அடுத்த வாரம் வரை காத்திருக்கவேண்டியதுதான் போலிருக்கிறது.
(தொடரும்)
முருகன் திருவருள் முன் நின்று காக்க
பதிலளிநீக்குதிருச்செந்தூர் வேலவன் நம்மைக் காக்கட்டும்.
நீக்குவராஹ மூர்த்தயே
பதிலளிநீக்குஹரி நாராயணா..
எந்தையே
இணையடி போற்றி..
போற்றி போற்றி.
நீக்குஇன்று கும்பகோணம் அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு பவித்ரோத்ஸவத்திற்காக பிரபந்தம் சேவிக்க வந்திருக்கிறேன். மூன்று நாட்கள்
வருக.. வருக..
நீக்குஇன்றொரு பயணம்...
தவிர்க்க முடியாதது..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குவைணவ திருத்தலங்களின் பெயர்கள் சுத்த தமிழில் இருப்பதால் அவையின் பெயர்க்காரணம், ஊர் முதலியவற்றை அறிந்துகொள்வதில் தற்காலத் தமிழனாகிய எனக்கு கடினமாக உள்ளது.
பதிலளிநீக்குதிருவிடவெந்தை, திருகோழியூர், திருவிண்ணகரம் என்றெல்லாம் பெயர்கள் புரியவில்லை. திருவிடவெந்தை பெயர்க்காரணம், ஊர் முதலியவற்றை கூறினால் நன்று.
வழக்கம் போல காமெரா திறமையை பதித்துள்ளீர்கள். அழகு. பாராட்டுக்கள். அதிலும் மண்டபம் வாயில் கொடிக்கம்பம் என்று ஒரே நேர்கோட்டில் அமைத்து எடுத்த புகைப்படம் ரசனையைக் காட்டுகிறது.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். இனி திவ்யதேச பெயர் காரணம் எழுதுகிறேன்.சில நேரங்களில் புகைப்படம் எடுக்கும்போது நன்றாக அமைந்துவிடுகிறது.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள். சென்ற கோவில்கள் பற்றிய செய்திகளும், எந்தெந்த கோவில்களை தேர்ந்தெடுக்க முடிந்தது என்ற விளக்கத்தையும் விளக்கி விபரித்த விதங்களும் நன்றாக உள்ளது சதாபிஷேகம் செய்து கொண்ட சகோதரர் ஜீவி அவர்களுக்கு என் தாமதமான நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் தாங்கள் சென்று வந்த திருவிடவெந்தை கோவிலைப் பற்றிய தகவல்களும், அங்கு எடுத்த புகைப்படங்களும் மிக அருமையாக உள்ளது.
திருமங்கையாழ்வரைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொண்டேன். கோவில் தூணிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. நீங்களும் சரியான கோணம் பார்த்து ஒவ்வொன்றையும் அருமையாக எடுத்துள்ளீர்கள். பள்ளி கொண்ட பெருமாள், படமெடுக்கும் நாகத்திற்கு முன் மகுடி ஊதும் சிறபமும் கவர்ந்தது. எல்லா படங்களுமே அழகுதான். .
பெருமாளை தரிசிக்க நானும் உங்களுடன் காத்திருக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். கோயில் உலாவில் கலந்துகொட்டூற்கு நன்றி
நீக்குமனம் நெகிழ்ந்த ஆசிகள் சகோதரி.. எல்லாம் வல்ல இறைவனின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
நீக்குதிருவிடவெந்தை கோவில் வளாகத்துடன் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇங்குள்ள சிற்பங்களும் காணத் தந்திருந்தீர்கள் நன்றாக இருக்கின்றன.
தரிசனத்துக்கு காத்திருக்கிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். வருகைக்கு நன்றி
நீக்குஇன்றைய தரிசனம் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் அழகு அருமை.
நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குஎல்லாத் திரைகளுமே விலகட்டும்...
பதிலளிநீக்குஓம் ஹரி ஓம்..
அததற்கு நேரம் வரவேண்டும் அல்லவா?
நீக்குசதாபிஷேகம் செய்து கொண்ட ஜீவி சாரை வாழ்த்தி வணங்குகிறேன்.
பதிலளிநீக்குபயணம் அருமையாக அமைந்து இருக்கிறது.
திருவிடவெந்தை கோயில் படங்கள் எல்லாம் அருமை.
பார்த்து பல வருடம் ஆச்சு. இப்போது மீண்டும் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
பறவை பார்வையில் கோயில் படம் அழகு.
//இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள், இங்கிருக்கும் படங்களையும் அங்கு காண்பார்கள், அந்தத் தலத்தை மனதில் இருத்த புகைப்பட உலா உதவும் என்பதுதான்.//
ஆமாம், பார்த்தவர்கள் நினைவு படுத்தி கொள்ளவும் உதவும்.
அனைத்து படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
வாங்க கோமதி அரசு மேடம். நன்றி
நீக்குதங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. என் மனம் நிறைந்த ஆசிகளும் சகோதரி.
நீக்கு
பதிலளிநீக்குதிருவிடந்தை தான். திருவிடவெந்தை அல்ல என்று விக்கி கூறுகிறார். திருவிடந்தை என்பது கோயில் இருக்கும் கிராமத்தின் பெயர்.
Jayakumar
விக்கி என்பது யார் உள்ளீடு செய்கிறாரோ அதைப் பொறுத்தது. திரு இட எந்தை என்பது கோவிலின் பெயர்
நீக்குவித்தியாசமான சிற்பம் இரண்டாம் தூணில். //
பதிலளிநீக்குதலையை கழற்றி கையில் வைத்து இருப்பது போல இருக்கிறது.
தூண் சிற்பங்கள் எல்லாம் அழகு.
ஹா ஹா ஹா. வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை முகமூடியைக் கழற்றியிருக்கிறாரோ என நினைத்தேன்
நீக்குஅந்த 12ம் தேதிதான் ஜீவி சாரின் சதாபிஷேகம் போரூரில் நடந்தது. //
பதிலளிநீக்குஅட! நன்றாக ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே, நெல்லை!
இங்கு இதைக் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.
வாங்க ஜீவி சார். போரூரும் திருப்போரூரும் அடுத்தடுத்துதான் அதனால் ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்ததும் உங்களிடம் வாழ்த்துப்பெற வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இது ஒரு கோடி, அது ஒரு கோடி என்றாகியதில் வாய்ப்பு போயிற்று
நீக்குவழக்கம் போலவே படங்கள் அழகுற தெளிவாக இருந்தது, நெல்லை. நான் இப்பொழுது கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சிற்பங்களில் ஆய்வு நோக்கில் ஆழ்ந்து இருப்பதால் கோயில் சிற்பங்க்கள் என்றாலே மனதிற்கு உவகையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயில் என்றால் இப்பொழுது திருவிடந்தை என்று அழைக்கப்படும் திருத்தலம் தான்.
விரைவில் நான் கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் சென்றிருந்ததும் இங்கு வரும் நான் மூன்று இடங்களுக்கும் சென்றிருந்தேன். தலைமுறை இடைவெளி பற்றியும் எழுதுவேன்
நீக்குஇன்னொன்று ஜீவி சார். நீங்க கம்பனை இழுத்தது தவறு. அவர் நயத்துடன் எழுதினார் ஆனால் நடந்ததை அல்ல. ஆறு வயதுப் பெண்ணும் பதினோரு வயது ஆணும், அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கேடகரில வருமா?
நீக்குநாமே கார் எடுத்துக்கொண்டு சென்றால், நாம் நினைக்கும் இடத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியும். //
பதிலளிநீக்குமீக்கும் இதுதான் பிடிக்கும். நெட்டில் பல விஷயங்கள் தெரிந்து கொண்டு திட்டம் போட்டு செல்வது ரொம்பப் பிடிக்கும். இதில் டூர் ஏற்பாடு செய்பவர்கள் நமக்குப் பொதுவாக எல்லாரும் பார்க்கும் ஃபேமஸான இடங்களை மட்டுமே அழைத்துச் செல்வர். நாம் என்றால் யாரும் அதிகம் போகாத இடங்களுக்குச் செல்லலாம். என் அனுபவம்.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. நாமே சென்றால் நினைத்த இடங்களுக்குச் செல்லலாம், நினைத்த இடத்தில் அதிக நேரம் செலவழிக்கலாம்
நீக்குநான் வெளியில் செல்வதென்றால் நடக்க வேண்டி வரும் என்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் நடைப்பயிற்சியில் கவனத்தில் கொள்வதுண்டு நெல்லை
பதிலளிநீக்குபறவைப்பார்வை எப்பத்த படம்!!!??
இப்ப இப்படியா இருக்கு? ஹாஹாஹாஹா
நான் நானாகச் சென்றது ஒரு முறைதான் ஆனால் வீட்டிற்கு வந்தவங்க போகணும் என்றால் அப்படிப் பல முறை சென்றதுண்டு. அதில் பெரும்பாலும் பரிகாரம், திருமணம் வேண்டுதல் இப்படித்தான்
கீதா
உண்மையாகவே எனக்கு பலகாரத்தில் இருக்கும் நம்பிக்கை பரிகாரத்தில் இல்லை. ஹி ஹி ஹி. இன்னொருவனைக் கொலை செய்துவிட்டு பாவத்திற்கு பரிகாரம் தர்ப்பையை குழந்தையாக வரித்து பிறகு பிய்த்துப்போடுவது பரிகாரம்னா எப்படி?
நீக்குபடங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு நெல்லை. கோயில் பற்றிய விவரங்களும்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன் க்கா. என்ன ஒண்ணு.. பதிவு படிக்க நடந்து வந்திருக்கீங்க
நீக்குபடங்கள் அனைத்தும் நன்று. சிற்பங்களை நின்று நிதானித்து தரிசிப்பது, அதன் அழகில் மயங்குவது எனக்கும் பிடித்த விஷயம். தொடரட்டும் ஆலய உலா!
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட் ஜி. கோயிலில் சிறிது நேரம் செலவழிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும்.
நீக்கு