கவிஞர் ராதா எழுதிய பாடலை தானே இசை அமைத்து பாடி இருக்கிறார் T M சௌந்தரராஜன்.
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
அள்ளிக் கொடுப்பதில் வள்ளலவன்
கவிகள் ஆயிரம் பாடவைத்து கேட்பதில் ரசிகன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்
வள்ளி இள மயிலுக்கு இன்பமாய்
வாய்த்த பெருமை தரும் கட்டழகன்
தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை
தெள்ளு தமிழ் அமுதுடன் நல்லிசை
தெளிவும் தந்து வைத்த பேராளன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்
வெற்றி வடிவே..லன் அவன் தென்னவன்
வெள்ளை மனம் கோயில் கொள்ளும் மன்னவன்
வெற்றி வடிவேலன் அவன் தென்னவன்
உள்ளமுடன் உயிர்இனிக்க செய்தவன்
உள்ளமுடன் உயிர் இனிக்கச் செய்தவன்
எங்கும் உவமை இல்லா அன்புமலர் கொய்தவன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
அள்ளிக் கொடுப்பதில் வள்ளலவன்
கவிகள் ஆயிரம் பாடவைத்து கேட்பதில் ரசிகன்
மெல்ல சிரிக்கும் கந்தன் புன்னகையில்
எந்தன் பிள்ளை மனம் பறி கொடுத்தேன்
================================================================================================
1975 ல் வெளியான அமெரிக்க படமான Race with the Devil என்கிற படத்தை கட்டிப்பிடித்து - அதாங்க தழுவி - 1981 ல் தமிழில் ஒரு படம் எடுத்தார் பஞ்சு அருணாச்சலம். அதற்கு கழுகு என்று பெயரிட்டார். S P முத்துராமன் இயக்கிய அந்தப் படத்துக்கு பாடல்களை பஞ்சு அண்ணனே எழுத, இசை அமைத்தார் இளையராஜா.
தெரியும் இல்லையா, பஞ்சு அண்ணன்தான் இளையராஜாவை அன்னக்கிளி மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். அப்போதைய காலகட்டத்தில் ஒரு பஸ்ஸில் பயணம், சாமியார் திருடர், திகில், நரபலி, ஹிப்னாடிஸம் என்று படம் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தாலும் முதலில் வெற்றி பெறவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு பிற்காலத்தில் சொல்லிச் சொல்லி ரசிக்கும் ஒரு படமாக அது மாறியது.
ரஜினி, YGM, ரத்தி, VKR, தேங்காய் நடித்த இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாமே ரசிக்கத் தக்கவை. இந்தப் படத்தில் 'காதல் என்னும் கோவில்' என்னும் ஒரு பாடலை சூலமங்கலம் சகோதரிகள் மகனான சூலமங்கலம் முரளி பாடி இருந்தார்.
இந்தப் படத்திலிருந்து SPB பாடிய ஒரு இனிமையான பாடல் இன்று... சரணங்களில் நெளிவையும் குழைவையும் கேட்டு கேட்டு ரசிக்கலாம். புல்லாங்குழல் ஒலிக்கு பாடலில் முக்கிய இடம்.
ஒரு பூவனத்திலே...
சுகம் குளு குளுங்குது...
வண்டு தேன் குடிக்குது...
மனம் கிளு கிளுக்குது...
ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளு கிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே பல கோடி எண்ணங்களே…
மலர்ச் சோலை வண்ணத்திலே பல கோடி எண்ணங்களே… ஒரு பூவனத்திலே...
தென்றல் என்னும் தேரில் ஏறி….
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி ..ஒரு வேகம் வந்ததடி……
ஜோடிக் குயில் கூடு கண்டேன்
கூட்டில் ஒரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி ..உனை காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய திராட்சை கொண்டவள்…..
உன் பூஞ்சிரிப்பில் வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே…
ஒரு பூவனத்திலே..
மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி இளம் காதல் வந்ததடி …ஹா...
காற்று வந்து மூங்கில் மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது……
கொடி தேன் மணக்கும் உடல் பூ மணக்கும்
விழி தான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே
ஒரு பூவனத்திலே
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஇரண்டாவது பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்
பதிலளிநீக்குநானும்!
நீக்குஇரண்டாவது பாடலில் 'பூவனம்' பிடித்த வார்த்தையாயிற்று. :))
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒன்று தெரியுமா ஜீவி ஸார்?
நீக்குஒவ்வொருமுறை உங்கள் தளத்தின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் நான் இந்தப் பாடலை மனதுக்குள் பாடுவேன் என்று...
வெங்கட் தளம் பார்க்கச் செல்கையில் முத்துக்களோ கண்கள் பாடல் மனதில் ஓடும். ராமலக்ஷ்மி தளம் பார்க்கச் செல்கையில் முத்துதேரே தேரே பாடல் மனதில் வரும்.
ஹஹ்ஹஹா... எனக்கோ எங்கள் பிளாக் வரும் பொழுதெல்லாம் You visit often என்று குத்தப்பட்ட முத்திரை என்னைப் பார்த்து சிரிக்கும்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஅடுத்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல், இனிமையான பாடல்.
இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குசிறப்பான பாடல்களே... ஜி
பதிலளிநீக்குகழுகு படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த பேருந்து செலவு ஐந்து லட்சம் ரூபாய் மிகப்பெரிய செலவாக பேசப்பட்டது.
இன்று கூத்தாடனின் சம்பளம் மட்டுமே இருநூறு கோடி.
நடுத்தர மக்களின் வாழ்வு உயராமலேயே இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
எஸ்.பி.முத்துராமன் டமால் ஆகி விட்டாரே... ஹா.. ஹா.. ஹா..
எல்லாம் காலத்தின் கோலம் ஜி. கோடிகள் அவர்களுக்கெல்லாம் சர்வசாதாரணமாக விட்டன.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள். இரண்டாம் பாடல் அதிகம் கேட்டு இருக்கிறேன்.
S P முத்துடாமல் - S P முத்துராமன்
வாங்க வெங்கட்...
நீக்குமுத்துடாமல் - விரல் ஒரு விசை தள்ளி விழுந்து விட்டது!!! மாற்றி விட்டேன்! நன்றி.
அந்தப் பாடல் நினைவு வரக்காரணம் முன்னர் உங்கள் அப்பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். தளம் திறந்ததும் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்று இருக்கிறது. 'சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை....' எனும் பாடல் வரிகள் இடம்பெற்ற பாடல் முத்துக்களோ கண்கள்...
முன்னர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்பது சந்தித்த வேளையில் என்றிருந்ததோ....
என் தளம் குறித்தும் தளம் நினைவுபடுத்தும் பாடலும்… :) எதனால் என்று சொல்லுங்களேன்.
பதிலளிநீக்குஓ.. காரணத்தை மேலே பதிலிலேயே சேர்த்து சொல்லி விட்டேன்!
நீக்குமுதல் பாடல் இனிமை
பதிலளிநீக்கு__/\__
நீக்குஇரண்டாவது பாடல் அந்தக் காலத்திலேயே பிடிக்காது..
பதிலளிநீக்குஅந்தப் பேருந்து அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது..
இத்தனைக்கும் கழுகு திரைப் படத்தை
நான் பார்த்ததில்லை..
அதுதானே பார்த்தேன்... எங்கே பிடிக்கும் என்று சொல்லி விடுவீர்களோ என்று பார்த்தேன்!!
நீக்குநான் படமும் பார்த்தேன். நல்ல பொழுதுபோக்கு படம். ரத்து அப்பாவை ஹிப்னடைஸ் செய்து பேசச்செய்வார் ரஜினியின் நண்பன். அதில் அண்ணன் தத்தி என்றும் சேர்த்து சொலல்ச் செய்வார். சிறிய ஙகைச்சுவை அது.
அருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஒரு ஆங்கில படத்தை *கட்டிப்பிடித்து * அதாங்க
பதிலளிநீக்கு*தழுவி* ஆகா என்ன அருமையான விளக்கம்.
கே. சக்ரபாணி
சென்னை 28
ஹிஹிஹி... நன்றி சக்ரபாணி ஸார்.
நீக்குஐப்பசி வெள்ளி நாளில் முருகன் பாடல் பகிர்வு சிறப்பு.
பதிலளிநீக்குஇரண்டுபாடல்களுமே கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்கள்.
நன்றி மாதேவி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே இதுவரை நான் கேட்டதில்லை. இன்று கேட்டு ரசித்தேன்.இரண்டு பாடல்களும் நன்றாக உள்ளது.
இரண்டாவது பாடலுக்கு தந்த தகவல்கள் அருமை.படிக்க நன்றாக இருக்கிறது.
பஸ்ஸில் பயணம் என்றதும் எனக்கு "சிட்டுக்குருவி" படப்பாடாலான "என் கண்மணி உன் காதலி" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. எனக்கு எஸ். பி. பி, சுசீலா அவர்களின் இரு குரல்களுடனும் ஏற்ற தாழ்வுகளுடனும் ஒலிக்கும் அந்த பாடல் மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் ஏற்கனவே இங்கு பகிர்ந்து விட்டீர்களா? இன்றைய பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆ... இரண்டு பாடல்களுமே கேட்டதில்லையா? தன்யனானேன். என்னால் இன்று உங்களுக்கு இரு அறிமுகங்கள்!
நீக்குபஸ்ஸில் பாடும் பாடல் மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் பாடல் ஏற்கெனவே பகிர்ந்து விட்டேன்.
நன்றி கமலா அக்கா.
முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். அதிகம் கேட்டதில்லை. கேட்டதும் நினைவுக்கு வந்துவிட்ட பாடல்
பதிலளிநீக்குகீதா
ஓ.. அப்படியா? எனக்கும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாடல்களைக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்!
நீக்குகவிஞர் ராதா என்ற பெயர் எல்லாம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
நானும்!
நீக்குஇந்தப் படத்தில் 'காதல் என்னும் கோவில்' என்னும் ஒரு பாடலை சூலமங்கலம் சகோதரிகள் மகனான சூலமங்கலம் முரளி பாடி இருந்தார்.//
பதிலளிநீக்குஇப்படி ஒரு பாடகர் என்பதும் இப்பதான் அறிகிறேன்.
கீதா
இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம் மிகவும் பிடித்த பாடல். நீங்க சொல்லியிருப்பது போல சரணம் ஆஹா!!! எஸ்பிபி கலக்ஸ்! அவருக்கே உரித்தான ஸ்டைல்!!
பதிலளிநீக்குகீதா