14.7.25

"திங்க" க்கிழமை உள்கலவை உருளைக்கிழங்கு - ஸ்ரீராம்

 


உள்கலவை உருளை!

முன்னர் ஒருமுறை செய்ததுதான்.  வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், இரண்டு மூன்று பல் பூண்டு, கொஞ்சமாக முட்டைகோஸ், மிகக் கொஞ்சமாக பீட்ரூட் முதலானவற்றை மிக மெல்லிசாக நறுக்கி, தேவையான உப்பு,, காரப்பொடி, தேவைப்பட்டால் மசாலாப் பொடி சேர்த்து  வதக்கிக்கொண்டு, 




உருளைக்கிழங்கை ஒரு விசில் மற்றும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வைத்து எடுத்து தோலுரித்துக் கொண்டு, 


மசாலாவை வதக்கி தனியாக எடுத்துக்கொண்டு 


உருளைக்கிழங்கை இதுபோல இடம் செய்து, நறுக்கப்பட்ட பகுதியை தனியாக வைத்துக்கொண்டு, 



உள்ளே அந்தக் கலவையை நிரப்பிக்கொண்டு, 
 கொஞ்சம்தான் கொள்ளும் என்பதுபோல இருக்கும்.  ஆனால் மெதுவாக ஸ்பூனின் காம்பால்  அல்லது ஃபோர்க்கால குத்தி குத்தி இடம் செய்து அந்தக் கலவையை இன்னும் உள்ளே செலுத்தி,

நறுக்கியபின் தனியாக வைத்திருந்த மூடியால் மூடி.  மென்மையாய் அமுக்கி விட்டு, 




ஒரு பேசினில் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி கலந்து குழைத்து வைத்துக் கொண்டு,  உள்ளிருக்கும் கலவை வெளிவந்துவிடாமல் அதில் இந்த உருளைக்கிழங்கை புரட்டி,
               

                               




                              

         


சல்லடைக்கரண்டியில் ஒவ்வொன்றாய் வைத்து வாணலியில் சூடாக தயாராக இருக்கும் எண்ணெயில் இறக்கி, (இல்லைங்க...  எண்ணெய் குடிக்காது ) மெதுவாக புரட்டி விட்டு..



இறக்கி சாப்பிட வேண்டியதுதான்.

பின் குறிப்பு  :  தோல் உரிக்கும்போதே சிக்கனம் பார்க்காமல் கெட்டியாய் இருக்கும் உருளைக் கிழங்குகளை கடாசி விடுதல் நலம்!  பெரிய உருளைக் கிழங்காய், முழுசாய் அப்படியே ஸ்கூப் செய்யாமல், பாதிப் பாதி உருளையாய் எடுத்துக் கொண்டு ஸ்கூப் செய்து கலவை வைத்து மூடுதல் நலம். சாப்பிட வசதி. 

40 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. மிக அழகாக வந்திருக்கிறது இந்த மசாலா உருளைக்கிழங்கு.

    சிவப்பு நிறத்துடன் யம்மி. அப்படியே சாப்பிடலாம், இல்லை தயிர் சாத்த்திற்குத் தொட்டுக்கொள்ளலாம். உடனே செய்யத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   இப்போது இருந்தாலும் கொஞ்சம், டேஸ்ட் பார்க்கலாம்!  இனிப்பு உருளை வாங்காமல், மண்ணுருளை என்று வாங்கினால் சரியாய் இருக்கும்.

      நீக்கு
  3. மூடி வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பொரிக்கச் சொல்லியிருக்கிறீர்களோ? கொஞ்சம் குறைந்த எண்ணெயில் வதக்கிவிடலாமோ? (கத்தரி பொடி அடைத்த கறி செய்வதுபோல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற முறை தோசைக்கல்லில் போட்டு எடுத்தேன் என்பதால் இந்த முறை பொரித்தெடுத்தேன்.  எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.  மூடி வராது.  கலவை பிடித்துக் கொள்ளும்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் தங்கள் செய்முறையான உ. கி. காரமசாலா நன்றாக உள்ளது. படங்கள் பக்குவங்கள், செய்முறைகள் அனைத்துமே சிறப்பு. பீட்ரூட்க்கு பதிலாக காரட் பயன்படுத்தலாமா? பீட்ரூட் கலர் மாறி விட்டால், அதனால் கேட்கிறேன். இது மோர்/ தயிர் சாதத்திற்கு தொட்டுகையாக பிரமாதமாக இருக்கும். (இவ்விதம் புடங்காயிலும் செய்யலாம் என கேள்விபட்டுள்ளேன். எண்ணெய்யில் இறக்காமல் கடாயில் இட்டு மூடி வைத்து ஆவியில் வேக வைத்து ) நான் இப்படி முயற்சித்ததில்லை. இது நன்றாக உள்ளது. ஒரு தடவை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று என்னிடம் கேரட் இல்லை.  அதனால் இருப்பதைச் சேர்த்தேன்.  உள்ளே நீங்கள் மேகி செய்து கூட நிரப்பலாம்.  என்ன இட்டு நிரப்புவது என்பது அவரவர் கற்பனை!  பால்கோவா கூட உள்ளே வைக்கலாம்!!  என் மகன்கள் அடுத்தமுறை இப்படி செய்யும்போது கெட்டியாக இல்லாமல், கிரேவியாக வைக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
  5. ​கொஞ்சம் வேலை கூடுதல்.
    ஏன் இதற்கு சைவ முட்டை வறுவல் என்று பெயர் வைக்கக் கூடாது?
    சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.

    ​இதைக்காட்டிலும் உருளைக்கிழங்கு போண்டா தான் எனக்கு பிடிக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்முறை செய்யும்போது முதல் நாள் படம் மட்டும் பேஸ்புக்கில் பகிர்ந்து இது என்ன என்று சொல்லுங்கள்..  'நாளை எங்கள் பிளாக்கில் இதுதான் சமையல் குறிப்பு' என்று சொன்னதும் ஏஞ்சல், மற்றும் நெய்வேலி மாலா ஆகியோர் முட்டை என்றே சொன்னார்கள்!

      எனக்கும் இதைக் காட்டிலும் உருளைக்கிழங்கு போண்டா (சிலர் போண்டோ என்பார்கள்!!!) தான் பிடிக்கும்.  பொதுவாக சொல்லப்போனால் நான் உருளையின் ரசிகன் இல்லை!  அதனாலேயே அதை இப்படி எல்லாம் கொலை செய்கிறேன்!!!

      நீக்கு
  6. இவ்வளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டு அது உண்டாக்குகிற gas ஐ எங்கே கொண்டு போய் விடுவீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன மொத்தத்தையும் நான் மட்டுமா சாப்பிடப் போகிறேன்!  ஆளுக்கு இரண்டு பீஸ் வரும்.  மகன்கள், மருமகள்  இரண்டு கூடுதலாக எடுத்துக் கொள்வார்கள்... 

      யு ஸீ..  எங்கள் வீட்டில் டிக்கெட் ஜாஸ்தி! 

      பாஸ் ஏனோ இதைச் செய்ய ஆரம்பிக்கையிலிருந்து கோபமாக இருந்தார்.  பசிக்கிறது லேட் செய்கிறேன் என்றார். தனக்கு வேண்டாம் என்றார்.  அப்புறம் அவரும் எடுத்து ரசித்து ருசித்தார்.  அல்லது ருசித்து ரசித்தார்!

      நீக்கு
    2. இந்த உருளைக்கறி செய்கையில் உங்கள் பங்கு எதுவும் இல்லை என்பதால் பாஸுக்கு கோபமா ஸ்ரீராம்?

      நீக்கு
    3. Grrrrrr.... செய்தது நான். சாப்பிடக் காத்திருந்து பொறுமை இல்லாமல் சாப்பிட உட்கார்ந்து விட்டவர் அவர். போட்டு வாங்கறீங்க...

      நீக்கு
    4. நெல்லை...ஹாஹாஹாஹா செய்ததே ஸ்ரீராம்தான். அவர் தான் இப்படி விதம் விதமாகச் செய்து பார்ப்பார். செய்வார், அவர் மகன்களுக்கும் ரொம்பப் பிடிக்கும் இப்ப வர்ஷினிக்கும்!!! பாஸிற்கும்தான்.

      கீதா

      நீக்கு
    5. சூப்பர ஶ்ரீராம். ரொம்ப நல்லா வந்திருக்கு. கிரேவியா பண்ண என்ன செய்வீங்க? எனக்கு இதுவும் மோர் சாதமுமே யதேஷ்டம் (ஆனால் மோர் சாத்த்தில் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் தீளித்திருக்கணும். அதையே விருந்தாக நினைத்துக்கொள்வேன். எப்போ வரட்டும்?

      நீக்கு
    6. தக்காளி, பமி,  வெங்காயத்தை அரைச்சு கிரேவியாக்கிக்கலாம், உப்பும் காரம், வாசனை சேர்த்து. 

      வித்தியாசமா, வெல்லத்தை மிக்சியில் அடிச்சு நெய்யைக் குழைத்து கொஞ்சம் பாகு பதத்தில் செய்யலாம். 

      மிளகாய்ப்பொடி எண்ணெய் சேர்த்து குழைத்து விடலாம்...

      கோவாவில் காரம் சேர்த்து உள்ளே விடலாம், பால்கோவாவே இணைக்கலாம்!!!

      நீக்கு
  7. பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறுகிறது. இங்கே இப்போது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை, snack,snack என்று குடைகிறார்கள். இப்படி ஏதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.... செய்து கொடுத்து விட்டு சொல்லுங்களேன், என்ன சொன்னார்கள் என்று!

      நீக்கு
  8. அட்டகாசமாகச் செய்திருக்கீங்க ஸ்ரீராம். பொறுமையாக.

    மீண்டும் இதை எல்லாம் செய்யத் தூண்டிட்டீங்களே!

    ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  ஒருமுறை அப்போது செய்ததை பத்து வருடங்களுக்கு முன்னரே இதை பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  9. மகன் சின்னவனா இருந்தப்ப, அப்புறமும்தான், இப்படி அவனுக்கு விதம் விதமாகச் செய்து கொடுத்து....

    இதையே "oven" ல் வைத்து பேக் பண்ணியும் செய்யலாம் ஸ்ரீராம். நீங்கள் சொல்லியிருப்பது போல் பெரிய உருளைக் கிழங்கில் செய்தால் எளிதாக இருக்கும்.

    இதிலேயே இதே போல பனீர் எல்லாம் உள்ளே அடைத்து, பேக் செய்தோ அல்லது, நீங்க செஞ்சிருக்காப்ல பொரித்தோ, கிரேவியில் மிதக்கவிட்டு உருளைப் படகு என்று சொல்லிக் கொடுத்தால்
    மகன் உடனே அதை கிரேவியில் இருந்து வெளியே வைத்து, பாரு இப்ப கரைக்கு வந்திருச்சு என்பான்!!!

    சரி வயித்துக்குள்ள எப்ப போகும் என்று கேட்டால், அவன் அதை வைத்து என்னவோ, தண்ணீரில் கப்பல் விட்டு அழகு பார்ப்பது போல் விளையாடிவிடுத்தான் சாப்பிடுவான்.

    நிறைய நினைவுகளும் கூடவே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதையே "oven" ல் வைத்து பேக் பண்ணியும் செய்யலாம் ஸ்ரீராம். நீங்கள் சொல்லியிருப்பது போல் பெரிய உருளைக் கிழங்கில் செய்தால் எளிதாக இருக்கும்.//

      அப்படியா சொல்லி இருக்கிறேன்? பார்க்கிறேன். ஏனென்றால் சாப்பிட எளிது என்பது பெரிய உருளையை பாதியாக வெட்டி அதில் செய்வதுதான். பெரிய சைஸ் வேலைக்காகாது! பேபி உருளைக்கிழங்கில் நன்றாக இருக்கும். ஃபோர்க்கால் சுற்றிலும் துளையிட வேண்டும்!

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம், ஓவனில் நான் வைத்துச் செய்திருக்கிறேன்.

      பெரிய உருளையை பாதியாக வெட்டி உள்ளே ஸ்கூப் செய்து இப்படி அடைத்துச் செய்வது ...அது பத்தி சொன்னேன்.

      கீதா

      நீக்கு
    3. ஓ... ஆனால் நான் ஓவனில் வைத்து செய்வதற்கு ஒன்றும் சொல்லவில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்!

      நீக்கு
    4. ஹாஹஹாஹ்ஹஹ....ஸ்ரீராம்....

      //பெரிய உருளைக் கிழங்காய், முழுசாய் அப்படியே ஸ்கூப் செய்யாமல், பாதிப் பாதி உருளையாய் எடுத்துக் கொண்டு ஸ்கூப் செய்து கலவை வைத்து மூடுதல் நலம். சாப்பிட வசதி. //

      உங்க பின் குறிப்புல இதைப் பார்த்துவிட்டுத்தான், நான் சொன்னது....

      இன்னிக்கு என் கருத்துகள் ஒரே பேஜாரா கீது!! போல. இல்லைனா உங்க கருத்தை நான் சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன்.....விடுங்க...போனா போவுது.

      கீதா

      நீக்கு
  10. இதை இப்படியே நீங்க செய்திருப்பது போன்றோ இல்லை பேக் செய்தோ, ஒரு தட்டில் கொஞ்சம் கொத்தமல்லித் தழையை ப் பொடியாக நறுக்கிப் போட்டு, பரத்தி, அதன் மேல் சீஸ் அல்லது பனீர் துருவிப் போட்டு மிளகுப் பொடி....இத்யாதிகள் எல்லாம் தூவி, நடுவில் இந்த உருளைக் கிழங்கை வைத்து birds nest என்று பெயரிட்டு.....ஹிஹிஹி...

    இப்படி குடை மிளகாயிலும் செய்யலாம், இப்படி எல்லாமே இங்க சொல்லியிருக்கும் எல்லா விதத்திலும்.

    இது போல பாகற்காயில் அடைத்தும் செய்யலாம். நல்லாருக்கும், ஸ்ரீராம்

    உங்க கற்பனையைத் தட்டிவிட்டால் நீங்க நிறையவே செய்வீங்க!!!! விதம் விதமாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வருத்தப்படுகிறேன், அப்படி அலங்காரம் செய்து படமெடுக்கவிலையே என்று...  கண்ணைக் கவரும் அதே நேரம் நாவூற்றெடுத்து பசி அலார்ம் அடிக்கும்!  கடைகளில் அப்படி அலங்காரம் செய்துதானே காசு பார்க்கிறார்கள்!

      நீக்கு
    2. ஆமாம் அதேதான் ஸ்ரீராம்.

      ....கூடவே கோஸையும் மெலிதாகச் சீவி....கொத்தமல்லி நடுவில் போட்டு சுற்றிலும் தக்காளியை வட்ட வட்டமாக வைத்து....இப்படில்லாம் நம்ம வீட்டுல எல்லாரும் கூடும் சமயம் (அதாவது இளசுகள்!! யாரெல்லாம் வெங்காயம் சாப்பிடுவாங்களோ அவங்க கூடும் போது) செய்ததுண்டு.

      வெங்காயம் பூண்டு சாப்பிடாதவங்களுக்கு இப்படி வடையைக் கூட அலங்காரம் செய்து வைச்சு...அதெல்லாம் ஒரு காலம். இப்ப யாரும் வருவதில்லை.

      கீதா

      நீக்கு
    3. இனி ஃபோட்டோ எடுப்பதற்காகவாவது இது மாதிரி சில அலங்காரம் செய்து எடுக்கணும்!

      நீக்கு
    4. சாதாரணமா இப்படிப் பண்ணுவதற்கே லேட்டாகிறது என்று கம்ப்ளெயிண்ட். இதுல அழகுபடுத்தப் போறீங்களா?

      நீக்கு
    5. இவ்வளவு செஞ்ச நாம் அதையும் செய்ய மாட்டோமா?  எவ்வளவு நேரம் ஆகப் போகுது?  இரண்டு வெங்காயம் ஸ்லைஸ், கொத்துமல்லி இப்படி...   

      ஃபோட்டோவுக்காக சும்மா ஷோதானே!

      நீக்கு
  11. மகனை, பாகற்காய் சாப்பிடப் பழக்கியதே இப்படிச் செய்து அப்புறம் எப்படிக் செய்தாலும் நம் பழைய செய்முறைகளையும் அவன் விரும்பிச் சாப்பிடுவான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குடைமிளகாயில் செய்ததை முன்னர் பகிர்ந்திருந்தேன் கீதா.  பாகற்காய், வெண்டை, புடலை முயற்சித்ததில்லை!

      நீக்கு
    2. குடைமிளகாய் நீங்க செய்தது நினைவுக்கிறதே!!!

      கீதா

      நீக்கு
    3. Yes.  அது ஒரு கொரோனாக் காலம்!!!

      நீக்கு
  12. உங்கள் ஸ்ரப் உருளை நன்றாக வந்துள்ளது.கலரும் நன்றாக இருக்கிறது.படங்களும் சூப்பர்.

    குடமிளகாய் , பீர்க்கு ,பாகல், புடோல், கறிமிளகாய், தக்காளியிலும், செய்யலாம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். செய்திருக்கிறேன். நன்றி மாதேவி.

      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கேள்வியைப் பார்த்ததும் எனக்கு என் அக்கா நினைவு வருகிறது.  
      அஞ்சலி சாப்பரில் அந்த கைப்பிடியை சுழற்றினால் வெங்காயம் பொடிப்பொடியாக கீழே உள்ள கண்டெயினரில் சேரும்.  நன்றாக வேலை செய்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!