21.7.25

"திங்க"க்கிழமை : வேப்பம்பூ மணத்தக்காளி வத்தல் சாதம் - ஸ்ரீராம்

 

பழைய வீட்டின் மொட்டை மாடியில் போர்வை விரித்தாற்போல வேப்பம்பூ விழுந்திருக்கும்.  அந்த இடத்தில இரவு ஒரு துணியை விரித்து வைத்தால் காலை அந்தத் துணியில் விழுந்திருக்கும் பூக்களை மட்டும் சேமித்து வைத்துக் கொண்டாலே நிறைய தேறும்.  பழைய வீட்டை ஒட்டி இருந்த அந்தப் பெரிய வேப்பமரம் நல்ல நிழலையும், காற்றையும் பூக்களையும் கொடுத்துக் கொண்டிருந்தது.  வருடப்பிறப்பில் கசப்பு புளிப்பு இனிப்பு பச்சடி செய்யவும் உதவியாய் இருந்தது.  அன்று அது Must அல்லவா?  "எமனுக்கு கசப்பாக, மனிதனுக்கு இனிப்பாக" என்று சொல்லி மூன்று முறை ஒவ்வொரு ஸ்பூன் கையில் விடுவாள் அம்மா.  

"புளிப்பு தெரிகிறதே..  அதைச் சொல்லவில்லையே" என்று கேட்டால், "அதை கண்டு கொள்ளக்கூடாது என்று அர்த்தம்" என்பாள்.    

வீட்டை விட்டு வெளியே வந்தால் காம்பவுண்டில் ஆங்காங்கே மணத்தக்காளி செடிகள் காணப்படும்.  கொஞ்சம் கொஞ்சமாக மணத்தக்காளி காய்கள் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த வீட்டுக்கு வந்தபின்னே இதை எல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.  மாம்பலம் சென்றிருந்தபோது வேப்பம்பூ இரண்டு கால்படி ஐம்பது ரூபாய் என்று வாங்கி இருந்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.  கொஞ்சம் கருப்பு தட்டி இருந்த வேப்பம்பூ.  எங்கள் பழைய வீட்டில் நாங்கள் சேமித்த வேப்பம்பூக்களின் தரத்துக்கு ஈடாகாது.  

எனினும் வேப்பம்பூ!

​,மணத்தக்காளி வத்தல் நாமே போட்டு வைத்துக் கொண்டால் சிறப்புதான்.  காய்களை பறித்து சுத்தம் செய்து ஊசியால் சிறு துளை செய்து மோரில் உப்பு போட்டு ஊற வைத்து காயவைத்து எடுத்துக் கொண்டால் நல்லதுதான்.  ஆனால் செடிகளிலிருந்து நாமே பறிக்கக் கூடிய மணத்தக்காளிக்காய் ஒரு கைப்பிடி கூட தேறாது.  அதை மோரில் ஊறவைத்து இரண்டு நாளில் மோர் சாதத்துக்கு அதை வெடுக் வெடுக் அல்லது சதக் சதக் என்று கடித்து தொட்டுக்கொள்ளும் சுவையும் தனிதான்.  பச்சை மணத்தக்காளிக்காயும் கடைகளில் விலைக்கு கிடைக்கும்.  அதை வாங்கி கூட நாமே ஊற வைத்து காய வைத்து வத்தல் போட்டுக்கொள்ளலாம்.  அளவான உப்புடன் இருக்கும்.

வேப்பம்பூ ரசம் பேமஸ். அதுபோல மணத்தக்காளி வத்தக்குழம்பு. கசப்பு, அளவான காரம் புளிப்பும் சேர்ந்து நல்ல சுவை. நல்லகாம்பினேஷனில் அமைந்துவிடும் 

மணத்தக்காளி வத்தக் குழம்புக்கு ஈடு இணை கிடையாது.  அப்படி அமையும் நாளில் ரசம் சாதம், மோர்சாதங்களை மறந்து இதையே ஓருணவாக நிறைய சாப்பிடலாம்!  ஆனால் நான் சொன்னபடி புளிப்பு, உப்பு, காரம் சரியான அளவீடுகளில் அமைய வேண்டும்.  அதற்கு கைப்பக்குவம், ராசி வேண்டும்.  அதே வத்தக்குழம்பை மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் சுகமும் தனிதான்.

வறுத்த மணத்தக்காளி வத்தலை மோர்சாதத்துக்கு நறுநறுவென தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். லேசான உப்புச்சுவையுடன் அமிர்தமாய் இருக்கும். கடைகளில் விற்கும் வத்தல்களில் சீக்கிரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக நிறைய உப்பு சேர்த்து உப்புக்காடியாக கொடுப்பார்கள். உதாரணம் மோர்மிளகாய்!

இப்போ இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்...  வாருங்கள் நேயர்களே....!

கொஞ்சம் வேப்பம்பூ, மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.  ஒன்றாகத்தானே போடப்போகிறோம், அப்புறம் ஏன் தனித்தனியாக என்றால், இவற்றில் நம் சுவைக்கேற்ப ஏதாவது ஒன்றை கூட்டி குறைத்து சேர்த்துக் கொள்ளலாம் என்பதால்.

தேவைப்படுபவர்கள் சுண்டைக்காய் வத்தலை, வீட்டில் செய்த தஞ்சாவூர் குடைமிளகாய் வத்தலை கூட வறுத்து தனித்தனியாய் வைத்துக் கொள்ளலாம்.

தட்டில் சூடான சாதத்தைப் போட்டு, தேவைப்படுபவர்கள் நெய்யோ, நல்லெண்ணெயோ ஊட்டி, அதில் முக்கியமாக வேப்பம்பூ வறுத்ததையும், மணத்தக்காளி வறுத்தையும் உங்கள் விருப்பமான ரேஷியோவில் சேர்த்து மெல்லக் கிளறி, கவனியுங்கள், பிசைந்து அல்ல, மெல்லக் கிளறி, சாப்பிடலாம்.  
ஆரோக்கியம்.

இதில் அந்த சுண்டை வத்தலை சேர்த்துக் கொள்ளலாம்.  காரத்துக்கு ஒன்றிரண்டு -  அவரவர்கள் காரத்தேவைக்கேற்ப - மிளகாய் வத்தலையும் சேர்த்துக் கொள்ளலாம்.  வீட்டிலேயே தயாரித்த வத்தல்கள் என்றால் சாதத்துக்கு கொஞ்சம் உப்பு தேவைப்படலாம்.  .  கடையில் வாங்கியது என்றால் சாதத்தில் அளவுக்கதிககமாகவே உப்பு சேர்ந்திருக்கும்!

வேப்பம்பூ மணத்தக்காளி வத்தல்கள் மட்டும் சேர்த்தி பிசைந்து சாப்பிடலாம்.  அவற்றுடன் சண்ட வத்தல் மட்டும் அல்லது மிளகாய் வத்தல் மட்டும் அல்லது இரண்டும் சேர்த்து பிசைந்து என்று வகை வகையான காம்பினேஷனில் சாப்பிடலாம்.


  சாப்பிட்டுப் பாருங்கள்.  சுவைக்கு சுவை; ஆரோக்கியத்துக்கு ஆரோக்யம்.  

84 கருத்துகள்:

  1. சென்னையில் இருந்தப்ப மாமியார் வீட்டில் வேப்பமரம் இருப்பதால் அங்கு வேப்பம் பூ கிடைத்துக் கொண்டிருட்நது. இப்ப இங்கு பெங்களூரில் முன்பு குடியிருந்த வீட்டில் நான் நட்டு வைத்திருந்த சுண்டைக்காய் மரம் காய்த்துக் குலுங்கி பறித்துப் பறித்து ஊறப் போட்டு மகனுக்கும், எல்லாருக்கும் கொடுத்ததோடு எங்களுக்கும் நிறைய இருந்தது.

    எங்கள் தளத்தில் மரத்தோடு பதிவும் போட்டிருந்த நினைவு.

    சென்னையில் உப்பு போட்டது போடாதது என்று கிடைக்கும்.

    இப்ப பாருங்க இங்கு கடையில் வாங்குவது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப உப்பு. முன்பு ஜெயநகரில் ஒரு கடையில் உப்பு போடாததும் கிடைத்துக் கொண்டிருந்தது. அதுக்காக நேத்து ஜெயநகர் போய் கடைகள் பார்த்துப் பார்த்து நடந்து சென்றும் உப்பு கூடுதல் என்று வாங்காமல் கடைசியில் கொஞ்சம் உப்பு கம்மியா இருக்கு என்று வாங்கினேன்.

    மகனுக்கு அனுப்ப. வறுத்து அனுப்பிவிடுவேன்.

    நான் ஜெயநகர் போகிறேன் என்றதும், நம்ம நெல்லையும் அவர் மனைவியும் வந்தாங்க. நிறைய நடந்தோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! எனக்கும் வேண்டும்.

      நீக்கு
    2. வாங்க கீதா...  நேற்று கடைத்தெருவில் அலைச்சலா?  சூப்பர்.  என்னென்ன அறுவடை?  இப்போதெல்லாம் கடைகளில் மக்களின் தேவையறிந்து எல்லா வகையிலும் - உப்பு  போட்டு, போடாமல், - என்று வியாபாரம் செய்கிறார்கள் போல..  அவர்களுக்கும் லாபம்.  மக்களுக்கும் வசதி!

      நீக்கு
    3. கேஜிஜி....  ஜெயநகர் மார்க்கெட் உங்கள் வீட்டுக்கு பக்கமா?  வாங்கி விடலாமே...

      நீக்கு
    4. ஜெயநகர் பகுதியை நன்கு அறிந்தவர்
      என் சம்பந்தி. மாதத்தில் ஒரு முறையாவது
      அவர்கள் சென்று வேண்டியதை வாங்கி
      வருவார்கள்.

      நீக்கு
    5. ஆன்லைனில் கூட கிடைக்கலாம்.

      நீக்கு
    6. இங்கு உப்பு போடாமல் கிடைப்பதில்லை, ஸ்ரீராம்.

      கௌ அண்ணா எனக்கும் ஜெயநகர் பகுதி பழக்கமாகிவிட்டது. நெல்லைக்கும் நல்ல பழக்கம் அப்பகுதி.

      நான் அடிக்கடிச் செல்வதுண்டு. நெல்லையும் அங்கு அடிக்கடிச் செல்வார்

      ஆனால் நேற்றுதான் இருவருமாகச் சென்றது.

      5, 4 9 ஆம் ப்ளாக் என்று எல்லாம் நடந்து சென்றே .....

      கீதா

      நீக்கு
    7. அண்ணா வேண்டுமா உங்களுக்கு வேண்டுமா? கொண்டு வந்து தருகிறேன்.

      அண்ணா 19த் மெயின் நம்ம செக்டர்ல, உடுப்பிக்கு டய்naக்னலாக மங்களூர் கடை இருக்கிறது அங்கும் கிடைக்கிறது. இரண்டுமே. மோர் மிளகாய் எல்லாமே கிடைக்கிறது ஆனால் உப்பு ரொம்பத் தூக்கலாக.

      அக்கடையில் ரெடி சேவை, சுடச் சுடப் போண்டா, உப்புமா கொழுக்கட்டை, நீர் தோசை, கடுபு இட்லி, Sanna (கப் ஷேப்பில் இட்லி போல!!) எல்லாம் கிடைக்கின்றன.

      ஜெயநகரில் உப்பில்லாமல் சுண்டைக்காயும் மணத்தக்காளியும் பிபிஏ காம்ப்ளெக்ஸ் பேஸ்மென்டில் ஒரு கடையில் கிடைத்தது. அங்கு நேற்று போனால் பேஸ்மென்ட் முழுவதும் இப்ப கார்பார்க்கிங்க் பண்ணியதால் கடை இல்லை. எனவே முதல் ஃப்ளோரில் இருந்த மலையாளக் கடைக்குச் சென்று அங்கும் கிடைக்கும் ஆனால் உப்பு கூடுதல். எனவே அங்கு வாங்கவில்லை. அப்புறம் அவர் சொன்னார் கீழ இருந்த கடை இப்ப மாறிய இடம் சொன்னார்.

      நாங்கள் நடந்தோம்....அப்படித் நிறைய கடைகளுக்குப் போய் டேஸ்ட் பார்த்து ஹிஹிஹிஹி....9 வது ப்ளாக் மார்க்கெட் வரை நடந்து போய் அங்கு நெல்லையின் வழக்கமான கடை காயத்ரி கடைக்குப் போய் கொஞ்சம் வாங்கிக் கொண்டு (உப்பு ஏதோ பரவால்லனு) அப்புறம் நேரே ராகிகுடா ஆஞ்சுகோயில் தெருவில் புதிய மங்களூர்க்கடைன்னு அதில் கொஞ்சம் பரவால்லைன்னு வாங்கி வந்தேன்

      இப்ப ஒவ்வொன்றாகத் திறந்து டேஸ்ட் பார்த்தால், என் பையன் என்னை அனுப்பாதே என்று சொல்லிவிட வாய்ப்புண்டு.

      எனவே எனக்கும், மகனுக்கும் என்ன செய்யப் போகிறேன் என்றால்.....ரீ ப்ராஸஸிங்க்!!!!

      கீதா

      நீக்கு
    8. ரீ ப்ராஸஸிங்க் - இப்ப எல்லாத்தையும் கொஞ்சம் தண்ணீரில் போடுவிட்டு, தூக்கலான உப்பு கொஞ்சம் இறங்கிவிடும். அதை வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்துவிட்டு, துணியில் பரத்தி கொஞ்சம் ஈரம் போனதும், இப்பதான் வெயில் இல்லையே....இருந்தாலும் நம்ம வீட்டில் வெயில் வருவது சிரமம்...மரங்கள் நிறைய உண்டு தெருவில். நம்ம OTG யில் அதை 100-150 டிகிரியில் வைத்து காய வைப்பது போல் வைத்து அப்புறம் வெப்பத்தைக் கூட்டி அதிலேயே வறுத்தும் விட்டு vacuum packing பண்ணிவிட்டால் போச்சு என்று.

      கீதா

      நீக்கு
    9. ஆமாம் ஸ்ரீராம் உப்பு போடாதது சென்னையில் கிடைத்தது.

      இப்ப ஆன்லைனில் பார்க்கலாம் என்று நானும் நினைத்திருக்கிறேன்

      கீதா

      நீக்கு
    10. திருவனந்தபுரத்தில் இவை எல்லாம் சல்லிசாகக் கிடைக்கும். உப்பு போட்டு போடாமல் என்று.

      கீதா

      நீக்கு
    11. 19 ஆவது மெயின் ஞான சிருஷ்டி ஸ்கூல்தான் நான்
      வோட்டுப் போடும் வாக்குச்சாவடி. நீங்க சொல்லும்
      உடுப்பி, மங்களூர் கடை லொகேஷன் லிங்க் அனுப்பவும்.

      நீக்கு
    12. ஆஹா... இன்னிக்கி பல விஷயங்கள் வெளியே வரும் போலிருக்கே...

      நீக்கு
  2. தட்டில் சூடான சாதத்தைப் போட்டு, தேவைப்படுபவர்கள் நெய்யோ, நல்லெண்ணெயோ ஊட்டி, அதில் முக்கியமாக வேப்பம்பூ வறுத்ததையும், மணத்தக்காளி வறுத்தையும் உங்கள் விருப்பமான ரேஷியோவில் சேர்த்து மெல்லக் கிளறி, கவனியுங்கள், பிசைந்து அல்ல, மெல்லக் கிளறி, சாப்பிடலாம். //

    ஆஹா ஆஹா அமிர்தம். நாங்கள் அடிக்கடிச் சாப்பிடுவதுண்டு.

    யெஸ் மெல்ல கிளறி.....கடிக்கும் போது அது நறுக்கென்று கடிபட்டும்....

    ரொம்பக் கறுப்பாக வறுக்காமல் கொஞ்சம் கடும் ப்ரௌன் நிறத்தில் வறுத்துச் சாப்பிடும் போது கசப்பும் ருசியும்...ஆஹான்னு கண்ணை மூடி ரசித்துச் சாப்பிடுவேன்!! இயற்கை தந்த வரப்பிரசாதத்துக்கு நன்றி சொல்லிக் கொண்டே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணத்தக்காளி மற்றும் சுண்டை வத்தல்களை
      நான் மைக்ரோவேவ் ஓவனில் எண்ணை இல்லாமல்
      வறுப்பது உண்டு.

      நீக்கு
    2. ஆமாம்.  கருப்பாக வறுத்தால் இவ்வளவு கஷ்டப்படுவதும் வேஸ்ட்.  ஆனால் இந்த குடைமிளகாயை மட்டும் அப்படி பிரௌனாக வறுக்க முடியாது! 

      நீக்கு
    3. // மணத்தக்காளி மற்றும் சுண்டை வத்தல்களை
      நான் மைக்ரோவேவ் ஓவனில் எண்ணை இல்லாமல்
      வறுப்பது உண்டு. //

      மிக நல்ல ஐடியா.  இப்போது எண்ணெய் இல்லாமல் வறுபபதற்கு என்று தனியாக ஒரு சாதனம் கூட மார்க்கெட்டில் விற்கிறார்கள். என் (ஒன்றுவிட்ட) மைத்துனர் வீட்டில் வாங்கி இருக்கிறார்கள்!

      நீக்கு
    4. சாதனம் பெயர், பிராண்ட் மாடல் விவரங்கள்
      கொடுக்கவும்.

      நீக்கு
    5. கேட்டுவிட்டு வாட்ஸாப் செய்கிறேன்.

      நீக்கு
    6. கௌ அண்ணா நான் எண்ணை இல்லாமல் oven - OTG யில் வறுத்துவிடுவேன்.

      இல்லைனா நல்லெண்ணை கொஞ்சமாகத்தான் பயன்படுத்துகிறேன். நல்லெண்ணை நல்லதுதானே என்று

      ஆனால் மகனுக்குப் பொதுவாக சும்மா எண்ணை தடவிவிட்டு OTG யில் வறுத்து அனுப்புகிறேன்.

      இல்லைனா குழம் பு பேஸ்ட் செய்து அதில் போட்டு ready to use போல அனுப்புகிறேன்

      கீதா

      நீக்கு
    7. தகவல்களுக்கு நன்றி

      நீக்கு
    8. //எண்ணெய் இல்லாமல் வறுபபதற்கு என்று தனியாக ஒரு சாதனம் கூட மார்க்கெட்டில் விற்கிறார்கள்.// அவர்கள் Air fryer பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். amazon.in

      நீக்கு
  3. நேற்று வேப்பம்பூ கிடைக்கவில்லை.

    சுண்டை வற்றலும், மணத்தக்காளி வற்றலும் வாங்கினேன்.

    இங்கு வீட்டருகில் 15 நிமிட நடையில் இருக்கும் மங்களூர் கடையில் கிடைக்கின்றன இந்த இரண்டும் ஆனால் உப்போ உப்பு.

    இதை வைத்துக் குழம்பு செய்தால் குழம்பில் உப்பு போடவே மாட்டேன். இதைக் கலந்தால் அந்த உப்பே போதும் எனும் அளவில் இருக்கும்.

    சும்மா சாதத்தில் கலந்து சாப்பிட்டாலே உப்பு தூக்கலாக இருக்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைகளில் வாங்கும் வத்தல்களில்
      இதுதான் பிரச்சினை. ஒன்று உப்பே
      இருக்காது. அல்லது உப்ப்ப்பாக இருக்கும்.

      நீக்கு
    2. // நேற்று வேப்பம்பூ கிடைக்கவில்லை. //

      அல்லது அது கிடைக்கும் கடைக்கு நீங்கள் செல்லவில்லை! அல்லது உங்களுக்கு இதை வாங்க வேண்டும் என்று நினைவில்லை!!

      // உப்பு தூக்கலாக இருக்குது. //

      வேலையில்லாத வேலை ஒன்று செய்யலாம்.   கடையிலிருந்து வேங்கை வந்த அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின் மறுபடி காய வைத்து எடுக்கலாம்!  பாதி பயன் கிடைக்கும்.

      நீக்கு
    3. // கடைகளில் வாங்கும் வத்தல்களில்
      இதுதான் பிரச்சினை. ஒன்று உப்பே
      இருக்காது. அல்லது உப்ப்ப்பாக இருக்கும். //

      நாமே வீட்டில் வாங்கி போட்டு வைத்துக் கொள்வது நலம்தானே?  காய்ந்ததாக இல்லாமல் பச்சையாகவே வாங்கி நாமே தயார் செய்து கொள்ளலாம்.

      நீக்கு
    4. பெங்களூரில் ப சுண்டைக்காய் கிடைப்பதில்லை.

      நீக்கு
    5. சோகம்தான். சென்னையிலிருந்து வரும் உறவினர்களிடம் வாங்கி வரச்சொல்லி ஆர்டர் கொடுக்கலாம்!

      நீக்கு
    6. கேஜிஜி சார்... என்னாது பெங்களூரில் பச்சை சுண்டைக்காய் கிடைக்காதா? இங்கு கிடைக்காதது தமிழக பாணி தோசை மற்றும் உளுந்தவடை. மற்றதெல்லாம் நிறைய கிடைக்கும். கே ஆர் மார்கெட்டில் அடிக்கடிப் பார்ப்பேன். நேற்று ஜெயநகர் 4பிளாக்கில் இருந்தது

      நீக்கு
    7. அல்லது அது கிடைக்கும் கடைக்கு நீங்கள் செல்லவில்லை! அல்லது உங்களுக்கு இதை வாங்க வேண்டும் என்று நினைவில்லை!!//

      இல்லை ஸ்ரீராம் ஜெயநகரில் முன்பு கிடைத்த கடை மாறிவிட்டது எங்கு என்று பார்க்கா வேண்டும். மங்களூர் கடைகளில் கிடைக்கலை.

      மல்லேஸ்வரம் பகுதிக்குப் போனால் வேப்பம்பூ கிடைக்கும். அங்கு ஒரு நாள் போக நினைத்திருக்கிறேன். பொழுது நன்றாக ஓடிவிடும், மல்லேஸ்வரம், ஜெயநகர் பகுதிகளுக்குப் போனால்.

      கீதா

      நீக்கு
    8. நான் இருக்கும் பகுதியில் கிடைப்பதில்லை

      நீக்கு
    9. கௌ அண்ணா, நேற்று கூட பச்சை சுண்டை பார்த்தோம். இங்கு நன்றாகக் கிடைக்கிறது பச்சை சுண்டை.

      நான் பெரும்பாலும் அது வாங்கிப் போட்டுவிடுவேன் இந்த வீட்டிற்கு வந்த பிறகு வெயில் வருவது குறைவு. மொட்டை மாடி போக வேண்டும். அதனால் இப்படி ப்ராஸஸ் செய்ததை வாங்கினேன்.

      ஸ்ரீராம் நீங்க சொன்ன பராஸஸிங்க் தான் ...மேலே சொல்லியிருக்கிறென்

      கீதா

      நீக்கு
  4. மணத்தக்காளிக் குழம்பு, வேப்பம்பூ ரசம்... ஆஹா... இரண்டுக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது.

    மணத்தக்காளி, சுண்டை வற்றல், வேப்பம்பூ இவற்று வறுத்து தனித்தனியாக சுட சாத்த்தில் நெய்யூற்றிச் சாப்பிட்டால் அவ்வளவு நன்றாக இருக்கும். இன்றைக்கு, ஏகாதசி, ஜலம் மாத்திரமா, இல்லை ராகி கஞ்சி மாத்திரமா அல்லது ஒரு வேளைக்கு சுண்டை வற்றல் சாதமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      எப்படி?  பதிவின் மூலம் ஐடியா கொடுத்து விட்டேனா?  உங்கள் நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி விட்டு விட்டேனா?!!

      நீக்கு
    2. பார்லி பவுடர் வாங்கி கஞ்சி செய்து
      குடிக்கலாம்.

      நீக்கு
    3. அவர் இன்றைய பதிவின் ஐட்டம் ஒன்றையாவது உபயோகிக்க நினைக்கிறார்!

      நீக்கு
    4. நெல்லை, சுண்டை நாளைதான் சாப்பிடும் வழக்கம் பாரணை முடிக்க என்று அதை சாதத்தில் கலந்து முதலில் சாப்பிட்டுவிட்டு....

      என் பாட்டி தாத்தா மாமியார் மாமனார் எல்லாரும் செய்ததைப் பார்த்துதான் ....

      நான் விரதம் இருப்பதில்லையே அதனால தெரியாது..

      கீதா

      நீக்கு
  5. கொஞ்சம் வேப்பம்பூ, மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஒன்றாகத்தானே போடப்போகிறோம், அப்புறம் ஏன் தனித்தனியாக என்றால், இவற்றில் நம் சுவைக்கேற்ப ஏதாவது ஒன்றை கூட்டி குறைத்து சேர்த்துக் கொள்ளலாம் என்பதால்.//

    டிட்டோ.

    வேப்பம் பூ பார்க்கவே அழகா இருக்கு நல்ல நிறம்.

    போன முறை என் மைத்துனர் மாமியார் வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்த வேப்பம்பூ தீர்ந்துவிட்டது. அதான் கடையில் இங்கு கிடைக்கவில்லை.

    நம்ம தெருவில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கு. பங்குனி சித்திரை மாசம் பூத்து விழும். அது எடுக்க முடியாது. வீட்டின் பின்புறம் என்றால் துணி விரித்து எடுக்கலாம். இங்கு யாரும் சீண்டுவதில்லை. வருஷப் பிறப்பின் போது நம் தெருவில் கார் எல்லாம் துடைத்துக் கொடுப்பவர் ஒருசிலருக்காக மரத்தில் ஏறி கொஞ்சமே கொஞ்சம் பறித்துக் கொடுப்பார் இங்குள்ள கன்னட தெலுங்கு மக்களுக்கு அவங்களும் பச்சடி செய்வாங்களே.... கொப்பாகப் பறிப்பார்.

    நான் கேட்கலாமா என்று கேட்டால் நம்மவர் கூடாது என்று சொல்லிவிட....கிடைத்தாலும் ஒரு ஸ்பூன் பூ கூடக் கிடைக்காது சிறிய கொப்பில் எவ்வளவு இருக்கப் போகுது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெருவில் உள்ள வேப்ப மரத்தில் கள் இறக்குவது போல சிறிய இடத்தில் தாழ்க்கிளையில் ஒரு கர்சீப்பை கட்டிவைத்துக் கூட கொஞ்சம் கொஞ்சமாக பூ சேகரிக்கலாம்!  அதிகாலை எழுந்ததும் முதல் வேலை அறுவடை!

      நீக்கு
    2. என் உதவியாளர் சேலம் (ஆத்தூர்) சென்றபோது அவரிடம்
      சொல்லி, வேப்பம்பூ வாங்கி வரச் சொல்லி அப்பப்போ வே பூ ரசம்
      சமைக்கச் சொல்லி சாப்பிடுகிறேன்.

      நீக்கு
    3. நல்லது.  அதோடு இந்த கலவை சாதமும்!

      நீக்கு
    4. ஒரு கர்சீப்பை கட்டிவைத்துக் கூட கொஞ்சம் கொஞ்சமாக பூ சேகரிக்கலாம்! அதிகாலை எழுந்ததும் முதல் வேலை அறுவடை!//

      ஹாஹாஹா ஸ்ரீராம் இந்த நாடடியார்கிட்ட போய் சொல்றீங்களே!!! ம்ஹூம் ரொம்பவே உயரத்தில் இருக்கின்றன கிளைகள். இல்லைனா நான் பறிச்சிருக்க மாட்டேனா யார்கிட்டயும் கேக்காமல். அது தெருவுக்கே ஆன மரம் தான். யாருக்கும் சொந்தமெல்லாம் இல்லை. பிபிஏ நம்பர் எல்லாம் போட்டிருக்காங்களாக்கும்

      கீதா

      நீக்கு
    5. காவலாளியோ, கடைக்காரரோ இருக்க மாட்டார்களா?!

      நீக்கு
  6. வேப்பம்பூ ரசம் பேமஸ். அதுபோல மணத்தக்காளி வத்தக்குழம்பு. கசப்பு, அளவான காரம் புளிப்பும் சேர்ந்து நல்ல சுவை. நல்லகாம்பினேஷனில் அமைந்துவிடும் //

    அதே அதே.....

    //மணத்தக்காளி வத்தக் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. அப்படி அமையும் நாளில் ரசம் சாதம், மோர்சாதங்களை மறந்து இதையே ஓருணவாக நிறைய சாப்பிடலாம்! ஆனால் நான் சொன்னபடி புளிப்பு, உப்பு, காரம் சரியான அளவீடுகளில் அமைய வேண்டும். அதற்கு கைப்பக்குவம், ராசி வேண்டும். அதே வத்தக்குழம்பை மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் சுகமும் தனிதான்.//

    டிட்டோ டிட்டோ....

    //வறுத்த மணத்தக்காளி வத்தலை மோர்சாதத்துக்கு நறுநறுவென தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். லேசான உப்புச்சுவையுடன் அமிர்தமாய் இருக்கும். //

    டிட்டோ டிட்டோ...

    //கடைகளில் விற்கும் வத்தல்களில் சீக்கிரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக நிறைய உப்பு சேர்த்து உப்புக்காடியாக கொடுப்பார்கள். //

    அதை ஏன் கேக்கறீங்க அதைத்தான் மேலே கருத்துகளில்

    ஆனால் உப்பு சேர்க்காமல் காய வைத்தாலும் கெடுவதில்லை. நான் வீட்டில் அப்படித்தான் சுண்டைக்காய் போட்டு வைத்தேன் கெடவே இல்லை அது போல முன்பு மணத்தக்காளியும்.

    என் பாட்டி, மாமியார் எல்லாம் க்டையில் வாங்குவதென்றால் உப்பு போடாதது கிடைத்தால் வாங்கு என்பார்கள். அவங்க அது ஆச்சாரத்துக்காகச் சொல்வாங்க. உடல்நலத்துக்கும் நலல்துதானே. நாம கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் வறுக்கறப்ப.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  நன்றி கீதா..  வரிக்கு வரி டிட்டோ செய்து விட்டீர்கள்.  உங்கள் குரலில் எனக்கு காதில்  "எக்ஸாக்ட்லி" ஒலிக்கிறது!

      நீக்கு
    2. ஹாஹாஹா.... ஆமாம் நான் அடிக்கடி பயன்படுத்தும் சொல் இல்லைனா absolutely எனும் சொல்!

      கீதா

      நீக்கு
  7. நெல்லை அவர் வாங்கும் கடைக்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கும் வாங்கினேன். நாங்கள் சாப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் உப்பு குறைவாக இருக்கு என்றதும் வாங்கினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   மார்க்கெட் சென்று வந்த விவரத்தையே பதிவாக்கலாம்.

      நீக்கு
    2. நினைத்தேன் ஆனால் இங்கேயே இன்னிக்குக் காலைல சொல்லிட்டேனேன்னும் நினைத்தேன்...சொல்லிட்டா போச்சு அங்கும் விவரமாக!!!!

      கீதா

      நீக்கு
  8. இந்தப் பதிவின் தாக்கம்: இன்றைக்கு
    சு வ கு, வே பூ ர, வெண்டைக்காய் விக்கல்
    செய்யச்சொல்லி உள்ளேன் உதவியாளரிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு வரியில் கடந்தவை இன்றைய சமையலில் சேர்ந்து இடம் பிடித்துள்ளன!!   மணத்தக்காளி வேப்பம்பூ சாதம்?

      நீக்கு
    2. வெண்டைக்காய் விக்கல் என்றால் என்ன? வெண்டையை வைத்து புது மாதிரியான ரெசிபியா ?

      நீக்கு
    3. :))

      வத்தல் என்று டைப்பும்போது விக்கல் வந்து விட்டதாம்!

      நீக்கு
    4. அவ்வளவு காரமா? :))))

      நீக்கு
    5. வத்தல் என்பதை விட வதக்கல் என்பதும் சரியாக இருக்குமோ..?

      நீக்கு
    6. வத்தல் வேறு, வதக்கல் வேறு இல்லையா அக்கா?

      நீக்கு
    7. வதக்கல் விக்கலாகி சிக்கலாகி விட்டது! மன்னிக்கவும்

      நீக்கு
    8. ஸ்ரீராம், நான் இன்னிக்குக் காலைல நினைச்சதே அட நாம வாங்கி வந்து ஒவ்வொரு பாக்கெட்டா உப்பு பார்த்துவிட்டு ரீ ப்ராஸஸிங்க் செய்ய நினைச்சு பதிவு பார்த்தா அட என்ன பொருத்தம் என்று!!!

      கீதா

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு நன்றாக உள்ளது. சின்ன சின்ன பொருளாக இருக்கும், வேப்பம்பூ, சு. வத்தல், ம. வத்தல் போன்றவை உணவாக உட்கொள்ளும் போது எவ்வளவு பயனாகிப் போகிறது என்பதை இன்றைய பதிவும், அதற்கு ஆர்வத்தோடு வந்த கருத்துகளும் உறுதி செய்து விட்டன.

    நீங்களும் சுவையாக கலந்து எழுதியுள்ளீர்கள். ரசித்தேன். இந்த உணவுகளை நாங்களும் விரும்பி சாப்பிடுவோம். இங்கும் போன மாதம் எனக்கு சிறிது வயிற்று பிரச்சனைக்காக சுண்டைக்காய் வற்றல் ஒரு கடையில் வாங்கினோம். உப்பு விஷமாகத்தான் இருந்தது. வறுத்து பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டேன். ஒரு நாள் வத்தக் குழம்பு செய்தும் சாப்பிட்டோம். வேப்பம்பூ எங்கிருக்கிறதோ ?

    அம்மா வீட்டில் முன்பு இதற்காகவே (வேப்பம்பூ, சு.ம. வத்தல்கள், ஊறுகாய்கள்.) ஒரு செல்ஃப் ஒதுக்கியிருப்பார்கள். வீட்டின் முன்பும், முற்றத்திலும் வேப்பமரங்கள். அந்தக்காலம் போய் விட்டது. அப்போது இதன் அருமைகள் எனக்கு அப்போதைய சின்ன வயதில் தெரியவில்லை என்பதும் நிஜம். ஆனாலும் எங்கள் பாட்டி, அம்மா உடம்புக்கு நல்லதென்று செய்வதை தட்ட மாட்டோம். இப்போதுள்ள குழந்தைகள் விரும்புவார்களா எனத் தெரியவில்லை.

    எங்கள் மாமியார் (சென்னையிலிருந்து போது) தினமும் வேப்பிலைகட்டி, ஊறுகாய்கள் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். கந்தர் கோட்டம் சென்று இதுபோல் சில ஐயிட்டங்களை என் மைத்துனர் வாங்கி வருவார். என் பழைய நினைவுகள் உங்கள் இன்றைய பதிவில் மீட்டெடுக்கப்படுகின்றன.

    ஜெய்நகரில் எந்த பகுதி, எந்த கடையில் என்பது தெளிவாக தெரிந்தால் நாங்களும் போகும் போது வாங்கி வருவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்.  அதுபோல சின்னப் பொருள்களில் பெரிய விஷயம் அடங்கி இருக்கு.  ஆரோக்யம்!

      வயிறு சம்பந்தப்பட்ட சிரமங்களுக்கு சுண்டைவத்தல் சாதம் நன்றாய் இருக்கும்.  அதோடு கூட இன்னொன்றும் சாப்பிடுவார்கள்.   சிலபொருள்களின் கூட்டாக 'அங்கயப்பொடி' சாதத்தில் கலந்தும் சாப்பிடுவார்கள்.  நீங்களும் அங்கயப்பொடி வைத்திருப்பேர்கள், சுவைத்திருப்பேர்கள் என்று நம்புகிறேன்.

      தனியாக ஒரு Rack ஒதுக்கி இருப்பதற்கு பாராட்டுகள்.  சாப்பிடும்போது கூடவே எடுத்து வைத்துக் கொள்ளா விட்டால் நடுவில் எழுந்து எடுக்க சோம்பல்பட்டு சில விஷயங்கள் எடுக்காமலேயே இருந்து விடுகின்றன.  உதாரணம் மாவடு, மாகாளிக்கிழங்கு!

      நீக்கு
    2. ஸ்ரீராம் வேப்பிலைக்கட்டி என்றால் என்ன என்று கேட்பார் என நினைத்தேன். திருவனந்தபுரம் பாலக்காடு வழியா நெல்லைக்கு வந்த வார்த்தை அது

      நீக்கு
    3. // ஸ்ரீராம் வேப்பிலைக்கட்டி என்றால் என்ன என்று கேட்பார் என நினைத்தேன். //

      அடக் கடவுளே...

      நீக்கு
    4. ஆமாம் ஐங்காயப்பொடி என் கிட்டயும் உண்டு. இப்ப தீர்ந்து போச்சு செய்யணும் அதுக்குத்தான் வேப்பம் பூவும் தேடினேன் மகனுக்கும் ஐங்காயப்பொடி அனுப்ப.

      அவனுக்கு வேப்பிலைக் கட்டியாக அனுப்ப முடியாது எனவெ பொடியாக அனுப்பிவிடுவது வழக்கம்.

      நெல்ல உங்க லைனுக்கு - அதே...

      கீதா

      நீக்கு
    5. வேப்பிலை கட்டிதானே ! எனக்குத் தெரியும்.
      வடிவேலு கூட ஒரு நகைச்சுவை காட்சியில்
      இடுப்பை சுற்றி வேப்பிலை கட்டிக்கொண்டு வருவார்.

      நீக்கு
  11. சிறப்பான வித்தியாசமான சமையல் குறிப்பு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. /ஸ்ரீராம் வேப்பிலைக்கட்டி என்றால் என்ன என்று கேட்பார் என நினைத்தேன். திருவனந்தபுரம் பாலக்காடு வழியா நெல்லைக்கு வந்த வார்த்தை அது. /

    ஆனால். இதில் வேப்பிலைக்கும், இந்த வேப்பிலைகட்டிக்கும் சிறிதும் தொடர்பில்லை. நார்த்தங்காய் இலைகளை வைத்து செய்யப்படுவது. (எப்படியோ வேப்பிலையின் பெயரை இது களவாண்டு கொண்டு விட்டது.) கல்லிடையில் என் நாத்தனார் வீட்டிலும் இதை வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும், இந்த அந்தந்த காலத்திய ஊறுகாய்கள், இந்த வேப்பிலைகட்டி இல்லாமல் மதிய உணவு சாப்பிட இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவும் இதை வீட்டிலேயே தயார் செய்வார்.  சிறு உரலும், (என்னைத் தவிர) உலக்கையும் வீட்டில் இருந்தன.  நானே இடித்து தந்திருக்கிறேன்.  என் அம்மா தயார் செய்யும் பொடி அருமையாக இருக்கும்.  பூண்டுப்பொடியும் அங்ஙனமே 

      நீக்கு
  13. ஆகா! இன்று வேப்பம்பூ, வற்றல் சாதம். மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட்டதில்லை நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.

    வேப்பம்பூ நாங்கள் நினைக்காத நேரமில்லை. சுவருக்கு பக்கத்து நின்றது பாய் விரித்து எடுத்து விடுவோம். வீட்டு மதிலை பழையதுதான் உடைக்கப்போகிறது என தறித்துவிட்டார்கள்.:( இப்பொழுது புது மதிலும் கட்டியாகிவிட்டது. எமக்கு வேப்பம் பூ தான் இல்லை.

    பூ ரசம் செய்வோம் .நாங்கள் உழுந்து சோம்பு, காய்ந்த மிளகாய் ,உப்பு அரைத்து எடுத்து வெங்காயம், கறிவேப்பிலை,சோம்பு கலந்து சிறிய வடைகளாக தட்டி வெயிலில் காயவைத்து தேவையானபோது பொரித்து சாப்பிடுவோம். காய்ந்த பூவை நெய்யில் வறுத்து உண்போம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருக்கும் தின்பண்டத்தை படங்களுடன் ரெசிப்பியாக எழுதி அனுப்புங்களேன் மாதேவி.  என் மெயில் ஐடி தெரியும் இல்லையா?

      நன்றி.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. வற்றல்கள் பற்றி அருமையான பதிவு.

    //"எமனுக்கு கசப்பாக, மனிதனுக்கு இனிப்பாக" என்று சொல்லி மூன்று முறை ஒவ்வொரு ஸ்பூன் கையில் விடுவாள் அம்மா. //

    சித்திரை வருஷபிறப்பில் எப்போதும் நீங்கள் அம்மாவின் நினைவை பகிர்வீர்கள்.

    வற்றல் டப்பாக்களில் அழகாய் இருக்கிறது.
    உங்கள் சமையல் குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. வெயில் காலத்தில் எல்லா வற்றல்களும் தயார் செய்து வைத்த காலங்கள் போனது இப்போது வாங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கடையில் வாங்கு வற்றில் கொஞ்சம் உப்பு அதிகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. வாங்கும் வற்றில் கொஞ்சம் உப்பு அதிகமாக இருக்கிறது.
    குழம்பில், பொடியில் உப்பை குறைத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!