30.11.25

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம்-லண்டன் 2/3 :: நெல்லைத்தமிழன்

 

நான் லண்டனில் பார்த்த, ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் உள்ளவற்றின் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

முதன் முதலில் பிரிட்டனுக்கு நான் 2002ல் சென்றேன். அது அலுவலகப் பயணம். அப்போதுதான் நான் இனி என் துறையின் தலைவன் என்று எனக்கு மேலுள்ளவர்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரம். கம்பெனியின் சிலபல துறைத் தலைவர்களுடனும், என் பாஸுடனும் (CFO) சென்றிருந்தேன். அந்தப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன். அப்போது ஐந்து நாட்களில் சுமார் 800 கிமீ தூரம் பல்வேறு இடங்களுக்கு அலுவல் விஷயமாகச் சென்றோம். முதன் முதலில் லண்டனில் காலடி எடுத்து வைத்தபோது எனக்கு ஒரு பெருமித உணர்ச்சி. 

அப்போதுதான் மற்றவர்களுக்கு, நான் வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை என்பது தெரிந்த து. கம்பெனியின் இன்னொரு பெரிய துறையின் தலைவராக இருந்த கோவாவைச் சேர்ந்தவர்,  நான் பழங்களையே சாப்பிட்டு காலத்தை ஓட்டுவதைப் பார்த்து, நான்காவது நாள், ஒரு தாய் ரெஸ்டாரண்டில், இந்த இந்த உணவுகளைச் சாப்பிடு என்றார். தயக்கத்துடன் சாப்பிட்டேன். 

அதன் பிறகு தனியாக பல தேசங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் நாமே தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும். ஜாக்கிரதையாக இருக்கவும் வேண்டியிருக்கும். எங்கள் கம்பெனியில், எனக்கான டிக்கெட், தங்குமிடத்துக்கான புக்கிங் என்று எல்லாவற்றையும் கையில் கொடுத்துவிடுவார்கள்.  நான், எப்படி தங்குமிட த்துக்குச் செல்லணும், அங்கிருந்து நான் செல்லவேண்டிய இடத்துக்கு எப்படிப் போகணும் என்றெல்லாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.  கல்ஃபில் உள்ள ஆறு தேசங்கள் தவிர, பிற இடங்களுக்குச் செல்லும்போது எல்லாம் சரியாக நடக்கணுமே என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும். சில பல வருடங்கள் கழிந்த பிறகுதான் தயக்கம் முழுமையாகப் போய், தைரியம் வந்தது. இருந்தாலும் முதன் முதலில் ஒரு தேசத்துக்கு, இடத்துக்குச் செல்லவேண்டும் என்றால் இப்போதும் தயக்கம் இருக்கும். 

இனி, இன்றைய படங்கள்.

முழுவதும் தீக்குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட லண்டன் டவர் பிரிட்ஜ்.

முழுவதும் தீக்குச்சிகளால் ஆன டைட்டானிக் கப்பல்.   டைட்டானிக் என்ற படம் வந்திருக்கவில்லை என்றால், இவ்வளவு பேர், அந்தக் கப்பலைப் பற்றி நினைத்துப்பார்த்திருப்பார்களா?

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த கடல் நீர் மைனஸ் 2 டிகிரியிலிருந்து 2 டிகிரி வரை இருந்ததாம். தொட்டுப் பாருங்கள் உங்களால் தாங்கமுடிகிறதா என்று  எனக் கேட்டு, அங்கு அந்த டெம்பெரேச்சரில் நீர் வைத்திருந்தார்கள். 

இதை எழுதும்போது என் சமீபத்தைய முக்திநாத் பயணம் நினைவுக்கு வருகிறது.  அது மிகுந்த குளிர் பிரதேசம். கோயிலின் முன்பு, இரண்டு தண்ணீர் தொட்டிகளும்  (அதை பாவ புண்ணிய தீர்த்தம் என்கிறார்கள்), கோயிலைச் சுற்றி கண்டகி நதி நீர், 108 தாரைகளாக விழும்படிச் செய்திருக்கிரார்கள். எங்களை யாத்திரை கூட்டிச் சென்றவர், அந்தத் தண்ணீரை ப்ரோட்சித்துக்கொள்ளலாமே தவிர (அதாவது தலையில் தெளித்துக்கொள்ளலாம்) யாரும் குளிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். இந்தப் பயணத்தில் நாங்கள் கண்டகி நதியில் குளிக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. (காரணம் கடுமையான டிராபிக் என்பதாலும், மலைப் பகுதியில் பல்வேறு சாலை பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்த தாலும், எங்கள் வாகனம் நாராயண Gகாட் எனப்படும் இடத்தை அடையும்போது மாலை 6 மணி ஆகிவிட்ட து. அங்குதான் கண்டகி நதியில் குளிப்போம் (இதற்கு முன்பு 2008ல் சென்றபோது அங்குதான் குளித்தோம்). சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நதியில் நீராடக்கூடாது என்பதால் நாங்கள் யாரும் குளிக்கவில்லை. அதனால் எப்படியும் முக்திநாத்தில் குளித்துவிடவேண்டும் என்று எண்ணி, அதற்கான உடை ஆயத்தங்களோடு வேகமாக நடந்து மற்றவர்களுக்கு முன்பு சென்று குளித்துவிட்டேன். கொஞ்சம் பயம் இருந்தது. மிகுந்த குளிர் என்பதால், பலருக்கு நிமோனியா வந்திருக்கிறது என்றெல்லாம் பயமுறுத்தியிருந்தார்கள்.  அந்தத் தண்ணீர் 2-3 டிகிரிகள் இருக்கலாம். அதிலேயே பத்து நிமிடங்கள் குளிப்பது என்பதெல்லாம் ரொம்பக் கடினம். வெதுவெதுப்பா நீர் இருந்தாலே, கடலில் விழுந்துவிட்டால் பயத்திலேயே உயிர் போய்விடும். இதில் மைனஸ் 2-ப்ளஸ் 2 டிகிரி தண்ணீரில் இரவில் டைட்டானிக்கிலிருந்து விழுந்தவர்கள் எப்படி உயிர் பிழைத்திருப்பார்கள்?

ஜேட் (Jade) எனப்படும் விலையுயர்ந்த ரத்தினக் கல்லால் ஆன சீன கோயிலின் மாதிரி. (ஆழ்ந்த பச்சை நிறக் கல். நான் தாய்வானில் இத்தகைய கற்களால் செய்த மாலை, மற்றும் வளையல்களை என் மனைவிக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். தாய்வான் பயணத்தைப் பற்றி எப்போதாவது எழுத நேர்ந்தால் படங்கள் பகிர்கிறேன். அங்கு ஒரு மிகப் பெரிய நினைவகத்தில் இருந்த கடையில் இத்தகைய மாலைகள், பவழம், Jade, நீலக்கல் என்று பலவித ரத்னங்களால் ஆனவை விற்பனையில் இருந்தன. நானோ நினைவகம் திறக்கும் சமயத்தில் அங்கு சென்றுவிட்டேன். அந்தக் கடையின் ஓனர்தான் விற்றுக்கொண்டிருந்தார். நான் ரொம்பவே பேரம் பேசி மிக க் குறைந்த விலையில் மாலையும் வளையலும் வாங்கினேன். அவரிடம் இன்னொரு செட்டும் தர்றீங்களா என்று கேட்டதற்கு-அதே விலையில் இன்னொரு செட்டும் வாங்கிடலாம் என்று நினைத்ததால், ரொம்ப விலை குறைவாக வாங்கிட்டீங்க. இன்னொரு செட் தருவது கட்டுப்படியாகாது என்று சொல்லிக் கும்பிட்டார்)


இந்த மைக்கேல் ஜாக்சன் ஓவியம் முழுவதும் மிட்டாய்களால் வரையப்பட்டது. நிறத்திற்கு வித வித மிட்டாய்களை உபயோகித்திருக்கிறார்கள். நிறம் சேர்க்கப்படவில்லை.

கேசட் டேப்பை மாத்திரமே உபயோகித்து வரையப்பட்ட ஓவியம். இது விட்னி ஹூஸ்டன் என்றால் மாத்திரம் நமக்கு யாரென்று தெரிந்துவிடப்போகிறதா என்ன?

டெலெபோன் டைரக்டரி பார்த்திருக்கிறீர்கள்தானே (முன்பெல்லாம் கடமையே என்று அதனை ஒவ்வொரு வருடமும் தருவார்கள்- போன் வைத்திருப்பவர்களிடம். அது எதுக்கு தர்றாங்க, அதனால என்ன உபயோகம்னே தெரியாது). அந்த டெலெபோன் டைரக்டரியில் முப்பரிமாணத்தில் செய்யப்பட்ட சிற்பம் இது.  இதனை மடித்தால் டெலெபோன் டைரக்டரி . எப்படிச் செதுக்கியிருக்கிறார்கள் என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  (நம்ம ஊர்ல, டைரக்டரியை வாங்கினோமா, பழைய பேப்பர் கடையில் போட்டோமா என்றுதான் தோன்றும். இதில் உள்ளே ஒவ்வொரு பேப்பரையும் அளவாகக் கத்தரித்து உள்ளே ஒரு சிற்பம் போன்று செய்யலாம் என்று யோசித்திருப்பது ஆச்சர்யம்தான்)

ஒரே சிற்பத்தில் தேவதையும் சாத்தானும் (நல்லவரும் தீயவரும்). இரண்டும் ஒரே சிற்பம்தான். ஒரு பக்கத்தில் தேவதையாகத் தெரியும். மறுபுறம் சாத்தான். 19ம் நூற்றாண்டுச் சிற்பம் இது. (ஆளுயரச் சிற்பம் இது) இதனைப் பார்க்கும்போது பாரிஸ் லூவர் மியூசியத்தில் நான் பார்த்த, பஞ்சு மெத்தையில் படுத்திருக்கும் சிற்பம் நினைவுக்கு வருது. அதில் ஒரு பக்கம் பார்த்தால் பெண் படுத்திருப்பது போலத் தெரியும். இன்னொரு பக்கத்தில் கட்டழகு ஆண் படுத்திருப்பது போலத் தெரியும். அந்தப் பஞ்சு மெத்தையோ, நிஜமான மெத்தைபோலவே இருக்கும். நான் என்னை மறந்து அந்தப் பஞ்சு மெத்தையைத் (மெத்தையைத்தான், நம்புங்க) தொட்டுப் பார்த்தேன். அங்கிருந்த ஒருவர், சிற்பங்கள் மீது கையை வைக்காதீர்கள் என்றார். பளிங்கில் செய்த அந்த மெத்தை நிஜ மெத்தை போலவே இருந்தது. 


உங்கள் கலைக்கண்ணோடு இந்தப் பட த்தைப் பாருங்க. இடது பக்கம் போய்ப் பார்த்தால் ஆண் படுத்திருப்பது தெரியும். வலது பக்கம் போய்ப் பார்த்தால் பெண் படுத்திருப்பது தெரியும். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜ மெத்தையில் ஒருவர் படுத்திருப்பது தெரியும். மெத்தை நிஜ மெத்தைபோலவே இருந்தது. (பாரிஸ் லூவர் மியூசியத்தில் இந்தச் சிற்பம்)

இறைமகன் இயேசு கிறித்துவின் முழு வரலாற்றையும் ஓவியமாக இந்த மனித எலும்புக்கூடில் வரைந்திருக்கிறார்கள் (பச்சை குத்தியிருப்பது போல)  (அந்த மனித எலும்புக்கூடு பேச முடிந்தால், செத்த பிறகும் என்னைச் சிலுவையில் அறைந்துவைத்திருக்கிறாயே.. என்ன கல் மனது உனக்கு என்று சொல்லுமோ? இல்லை… இடுப்புக்காவது ஒரு உடையை அணிவித்திருக்கக் கூடாதா என்று கேட்குமோ?)

இந்த மாதிரி ஓவியங்கள் வரைவதற்கு மிகப் பெரும் திறமை வேண்டும். ஓவியம் நன்றாகத் தெரிய வேண்டுமானால், 10-15 அடிகளுக்கு அப்பால் இருந்து பார்த்தால்தான் தெரியும். அருகே செல்லச் செல்ல வெறும் புள்ளிகளே கண்களுக்குப் புலப்படும். இந்த ஓவியங்களுக்கு இங்கிலாந்தின் சிறிய coinஆன Pennyயை உபயோகித்திருக்கின்றனர். வேறு நிறங்களை உபயோகிக்கவில்லை. இத்தகைய ஓவியங்களைப் பற்றி நாமக்கல் கவிஞர் தன்னுடைய தன் வரலாற்றுப் புத்தகத்தில், தான் 1900களின் ஆரம்பத்தில் கண்ட பெரிய ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சொல்லியிருக்கிறார். இத்தாலியைச் சேர்ந்த ஓவியர்கள் இத்தகைய ஓவியங்களில் மிகப் புகழ் பெற்றவர்கள் என்று சொல்லியிருந்த நினைவு.

லைட் ஹவுஸ் மனிதன் எனப்படும் இந்த மனிதனை ‘நம்பினால் நம்புங்கள்’ என்ற இந்த கான்சப்டை உருவாக்கிய ரிப்ளே, 1923ல் தென் மேற்கு சீனாவில் சந்தித்திருக்கிறார். தன் தலையில் சிறிய ஓட்டையைப் போட்டுக்கொண்டு (அதற்காக drill செய்திருந்தானாம்), அதில் இரவில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு ஊரைச் சுற்றிக்காண்பிப்பானாம் (வழிகாட்டி). அப்போதெல்லாம் நகரின் பல பகுதிகளில் இரவில் வெளிச்சம் இருக்காதாம். எப்படி விநோத மனிதர்கள் பாருங்கள்.

ஜார்ஜியாவில் இருந்த செய்லர் என்பவரால், கீழுதட்டைக் கொண்டு மூக்கு வரை பொத்திக்கொள்ள முடியுமாம். மற்ற நேரத்தில்,…. வேண்டாம், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் யாராவது கொண்டு தரும்போது இப்படி கீழுதட்டை வைத்து வாயை முழுவதும் மூடிக்கொண்டுவிட்டால், எடை எப்படி ஏறும்?

சீனாவில், தலையில் இவ்வளவு நீளக் கொம்புடன் காணப்பட்டவர் (1930களில்) இராணுவத்தில் அல்லது செக்யூரிட்டி, போலீஸாக இருப்பவர்கள், நீளமாக முடி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்வதன் காரணம், அதனைப் பிடித்து மடக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பார்கள். சண்டையிடும்போது இவரது குடுமியைப் பிடித்து வென்றுவிடலாமோ?

கிரேஸ் மெக்டேனியல்ஸ் என்னும் இந்தப் பெண்மணி, பிறந்ததிலிருந்து அவரது வாயின் இப்படிப்பட்ட தோற்றத்தால் கழுதை முகம் கொண்டவர் என்ற பெயர் பெற்றார் (1888-1950). சர்கஸில் சேர்ந்து மக்களை தன்னுடைய இந்தக் குறையினால் ஆச்சர்யப்படவைத்தார். அவருக்கு வாரத்துக்கு 175 டாலர் சம்பளம். பலர் இவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தனர். திருமணம் ஆனபிறகு அழகிய குழந்தை ஒன்றைப் பெற்றார்.

ஜானி எக் (Eck) என்னும் இவர் 1910ல் பிறந்தவர். இடுப்புக்குக் கீழே ஒன்றுமே இல்லை (உடம்பே அவ்வளவுதான்). இருந்தாலும் இவரின் திறமை லிஸ்ட் மிகப் பெரியது (ஹானர் படிப்பு படித்த மாணவர், ஓவியர், பாடகர், இசையமைப்பவர், நடிகர், நல்ல நீச்சல்காரர்.  கையினாலேயே நன்றாக இருப்பவர்களைவிட வேகமாக ஓடக்கூடியவர். நடனத்தில் வல்லவர். 

பாருங்க ஔவையார் அப்போவே சொன்னார்.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது .. 

குறையில்லாமல் பிறந்த நம்மில் பலருக்கு எவ்வளவு மனவருத்தம் இருக்கிறது. அது இல்லையே, இது இல்லையே என்று.  சரி… எனக்கு இந்தக் குறை இருக்கிறது. அது இருந்தாலும், அதனையும் மீறி வாழ்க்கையில் உயர்வது என்னுடைய முயற்சியில் இருக்கிறது. என்று எண்ணுவதுதான் சரி.  நான் குறையுடன் பிறந்தவர்கள் வாழ்க்கையில் தங்கள் முயற்சியால் முன்னேறுவதைப் படித்திருக்கிறேன். ஜானி எக்கின் கதை நிச்சயம் பலருக்கு உத்வேகம் அளிக்கும். 


ஜெரெமி பெந்தம் என்பவர், 1823ல் (தான் இறப்பதற்கு 9 வருடங்களுக்கு முன்பாக) தன்னைப் போலவே ஒரு சிற்பம் செய்ய மாடலாக இருந்தார். அந்தக் காலத்திலேயே எப்படீல்லாம் மனுஷனுக்கு ஆசை இருந்திருக்கிறது பாருங்கள். இது போல இன்னொரு சிற்பம் அங்கிருந்தது.  மரத் தச்சர் மசாகிஸி என்பவர், தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்து தன்னைப் போலவே மரத்தில் ஒரு உருவம் செய்து, கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு தன்னுடைய தலைமுடி ஒவ்வொன்றாகப் பிடுங்கி அந்த மரச்சிற்பத்தில் பொறுத்தினாராம். அதுபோலவே தன்னுடைய பற்கள், கை, கால் நகங்களையும். வலியைப் பொருட்படுத்தாமல் பிடுங்கி அந்தச் சிற்பத்தில் பொறுத்தினாராம். அதனுடைய நகல் ஒன்றையும் வைத்திருந்தார்கள்.

எப்போப் பார்த்தாலும் வம்புப் பேச்சில் ஈடுபடும் மனைவியின் மீது எரிச்சலடைந்த நைஜீரிய நாட்டு பழங்குடித் தலைவன் ஒருவன், தன் மனைவியின் மூக்கில் பூட்டுப்போட்டுவிட்டானாம். இனியும் திருந்தவில்லை என்றால் வாயைப் பூட்டிவிடுவேன் என்று சொல்லிவிட்டானாம். அந்தப் பழங்குடியின் மற்ற பெண்கள் இதனைப் பார்த்து, இந்த டிசைன் நல்லா இருக்கே என்று, மூக்குத்திக்குப் பதிலாக (அதாவது புல்லாக்குக்குப் பதில்) விதவித பூட்டை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தார்களாம்.

ருஷ்யாவில் பிறந்த ஜோஜோ என்பவர், அபூர்வ உடற்குறைவு காரணமாக உடம்பெல்லாம் முடியுடன் இருந்தாராம். முகத்தில் 20 செ.மீ அளவு நீளமான முடிகளாம். இத்தகையவர்களுக்குப் போக்கிடம் எது? ஒரு சர்கஸில் சேர்ந்து தன் வாழ்க்கையை ஓட்டினாராம்.

சீனாவைச் சேர்ந்த சிங்ஃபூ என்பவரின் முகம் நீல நிறத்தில் இருந்ததாம். உடலின் மற்றப் பகுதிகள் சாதாரணமாக இருந்தாலும் முகம் மாத்திரம் நீல நிறமாம். இதற்கும் உடற்கூறுப் பிரச்சனை என்கிறார்கள். அவருடைய உறவினர்கள் பலருக்கும் அதே பிரச்சனையாம். (நீல வண்ண கண்ணா வாடா - நீ ஒரு முத்தம் தாடா பாடல் நினைவுக்கு வருகிறதா?) இரண்டாவது படத்தில் உள்ளது சுமத்ராவில் உபயோகிக்கப்பட்ட ஜாக்கெட். அங்குள்ளவர்கள், உடையில் சில பல எண்கள், குறியீடுகள் போன்றவைகளை எழுதிக்கொண்டால் உடல்நிலை எப்போதும் நன்றாக இருக்கும், ஆவிகள் அண்டாது என்றெல்லாம் நம்பினார்களாம். அப்படிப்பட்ட ஜாக்கெட்டில் ஒன்று இது.

இது யாருப்பா இவ்வளவு உயரமாக? அவர்தான் உலகிலேயே உயரமான மனிதராம். Real life sizeல் வைத்திருந்தார்கள். ஆமாம் என்ன உயரம்?

அவர் (அந்த உண்மையுருச் சிலை) அருகில் நான் நின்றால் எவ்வளவு குள்ளமாக நான் தெரிகிறேன் பாருங்கள். ஆமாம் உயரமாக இருப்பதில் என்ன நன்மைகள்? நின்ற இடத்திலிருந்தே கூட்டத்தில் யாரையும் பார்த்துவிட முடியும். அவங்களுக்கு ஸ்டூல்லாம் தேவைப்படாது. மரங்களிலிருந்து காய் கனிகள் பறிப்பது ரொம்பவே சுலபம். விளையாட்டு வீரர்களாக ஆனால் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்வார்கள். ஆனால் உலகில் அத்தகைய உயரமானவர்களுக்காக எதுவுமே கிடையாது, வாசல்படி நிலைக்கதவு, வாகனம், வீடு, கட்டில் என்று எதை எடுத்தாலும் அவங்களுக்கு மிகவும் கஷ்டம்தான்.

இனி சித்திரவதைகளுக்காக என்ன என்னவற்றை உபயோகித்தார்கள் என்று சிலவற்றைப் பார்ப்போம்.

பார்க்க அழகாக இருக்கும் இந்த இரும்புக் கன்னி, குற்றவாளியை உள்ளே வைத்து மூடி சித்தரவதை செய்வதற்கானது. இதில் அடைபடுபவர் இரத்தம் சிந்தி மூச்சுவிட முடியாமல் இறப்பார். இதை எழுதும்போது, நான் வேலை பார்த்த தேசத்தில், அரசுக்கு எதிராகச் செயல்படும் சிலருக்கான சிறை நினைவுக்கு வருகிறது. கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற கேடகரியில் வரும் அரசியல் குற்றவாளிகளுக்கு, 4 அடி உயர அறை ஒதுக்கப்படுமாம். தண்டனை முடிந்து வெளியில் வந்தால் நிமிரவே முடியாமல் போகுமாம். கேட்க கஷ்டமாகத்தான் இருந்தது. அதற்காக நான் இருந்த தேசத்தின் சிறைச்சாலைகளை பற்றி தவறாக நினைத்துவிடாதீர்கள். அங்க இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு நான் போயிருக்கிறேன். சிறையைப் பற்றி பலர் நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

இது அதீதக் குற்றவாளிகளின் தலையைத் துண்டிக்க அல்ல, மண்டையை அப்படியே உடைக்க உருவான ஆயுதம். இதில் குற்றவாளியின் தலையை வைத்து நசுக்கிவிடுவார்களாம். என்ன ஒரு கொடூர தண்டனை பாருங்கள். (நம்ம ஊர் மாத்திரம் என்ன வாழ்ந்ததாம். இங்கு கழுவேற்றம் என்பது எவ்வளவு கொடிய தண்டனை தெரியுமா? மதுரையில் ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவேற்றினார்கள் என்று ஒரு வரியில் படித்துக் கடந்துவிடுகிறோம்)

ஒரேடியாக சித்திரவதை சம்பந்தமாக எல்லாப் படங்களையும் இந்த வாரத்திலேயே கொடுத்துவிட்டால் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். அடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 


60 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ​படங்கள் துல்லியமாக உள்ளன வருணனையும் சிறப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    படங்களும் தகவல்களும் நன்று... சில விஷயங்கள் நம்ப முடியாத வகை தான். ஒரு சமயத்தில் இந்த ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் ஒரு வாராந்திரியில் வாரா வாரம் வந்தது நினைவில் இன்னும் பசுமையாக.....

    பதிலளிநீக்கு
  5. ///கோயிலைச் சுற்றி கண்டகி நதி நீர், 108 தாரைகளாக விழும்படிச் செய்திருக்கிரார்கள்///

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
  6. பிரமிப்பூட்டும் தகவல்கள்...
    ஆனாலும் பதிவு நீளம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தகவல்கள் குறைவோ என நினைத்தேன். மூன்று வாரங்கள் என்ற எண்ணமும் காரணம்

      நீக்கு
  7. ///இறைமகன் இயேசு கிறிஸ்துவின் முழு வரலாற்றையும்
    ஓவியமாக இந்த மனித எலும்புக்கூடில் வரைந்திருக்கிறார்கள் ///

    அவரவர் நம்பிக்கை...

    பதிலளிநீக்கு
  8. சுருக்கமான, தெளிவான விளக்கங்களோடு வித்தியாசமான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். நன்றி

      நீக்கு
  9. டைட்டானிக் பற்றி படிக்கும்போதே சிலீர் என்கிறது! 

    டெலிபோன் டைரக்டரி ஆச்சர்யம்தான்.  எனக்கு முன்பு வருடா வருடம் வாங்கும்போது முன்னர் வானொலியில் வந்தபோது இருந்த மாதிரி அட்லீஸ்ட் சிறு கதைகள், கவிதைகள், நாவல்களும் கூட கொடுக்கலாம் என்று தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். டெலெபோன் டைரக்டரி என்ன கல்கி தீபாவளி மலரா?

      நீக்கு
  10. ஒருபுறம் ஒரு மாதிரியும் இன்னொரு புறம் அதே சிற்பம் இன்னொரு மாதிரியும் தெரியும்படி வடிக்கச்செய்ய தோன்றிய கற்பனையாளனைப் பாராட்ட வேண்டும்.  மாற்றி யோசிக்க தோன்றி இருக்கிறது! 

    சிற்பம் என்பது சிறிது; சிலை என்றால் பெரிசு... ரைட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சிற்பம் ரொம்ப நல்லா இருந்தது. சிற்பம் என்றால் முழுவதும் தெரியாதது, சிலை முழுவதும் தெரியும் என நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். அதாவது சிலை சுற்றிவந்து பார்க்கும்படி இருக்கும்

      நீக்கு
  11. நைசாக கட்டழகு பெண் தெரியும் பக்கம் மட்டும் அந்தச் சிலையை படம் எடுத்திருக்கிறீர்களோ..   அல்லது

    அதை மட்டும் வெளியிட்டிருக்கிறீர்களோ...  எனக்கு பெண் வடிவம் மட்டும்தான் தெரிகிறது! 

    ஒருவேளை என் கண்களில்தான் கோளாறோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பல படங்கள் அதனைச் சுற்றி எடுத்திருக்கிறேன். லூவர் மியூசிய பதிவுகள் எழுத எண்ணியிருக்கிறேன். பெண் ஆண் என வித்தியாசப்படுத்துபவைகளை மிக அழகாக அந்தச் சிற்பம் காண்பிக்கிறது

      நீக்கு
  12. 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்ற திருக்குறள் செயல் வடிவத்துக்கு வந்து விடப்போகிறதே என்றுதான் கைகளையும் சிலுவையில் அறைந்து விட்டார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா. ரொம்பவே நெகிழ்ந்துவிடும் நிவையில் ஆடை

      நீக்கு
  13. புள்ளி ஓவியங்கள் மிகச்சிறப்பு,  நானும் ஆங்காங்கே எங்கோ புத்தகங்களில் பார்த்திருக்கிறேன், இது போன்ற ஓவியங்களை.

    பதிலளிநீக்கு
  14. தலையில் ட்ரில் போட்டு மெழுகுவர்தியா...  என்ன கொடுமை சாமி!  கீழுதட்டால் மூக்கை மூடுவதா...  எப்படி சாத்தியம்?  அவர் காதலி அவர் கீழுத்தட்டைக் கடித்து உறிஞ்சி உறிஞ்சி முத்தம் கொடுத்து பழக்கி இருப்பாளோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும் ஒவ்வொருவகை. அவருக்கு காதலி இருந்திருப்பாளா? ஹா ஹா ஹா.

      நீக்கு
  15. கொம்பு சீனன்தான் விகடன் தாத்தாவுக்கு இன்ஸ்பிரேஷனோ....    அந்தப் பெண்ணின் வாயமைப்பு புரியவில்லை.  எப்படி சாப்பிட்டிருப்பார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்தப் பெண் எப்படிச் சாப்பிட்டிருப்பாள் என்று விளங்கவில்லை. கொம்பு சீனன் காப்பிதான் விகடன் தாத்தாவாக இருந்திருக்கும்

      நீக்கு
  16. படங்களும், தகவல்களும் சிறப்பாக வந்தது இறுதியில் மனதை கலங்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இன்னும் சக மனிதனை (கொலையாளியோ இல்லையோ) துன்புறுத்தும் கருவிகள் அடுத்த வாரம் வரும். நான் லண்டன் டவரில் பார்த்த ஒரு கருவி, ஐயோ பாவம்.

      நீக்கு
  17. எனக்கும் அமிதாப், வெங்கட் மாதிரியெல்லாம் உயரமாக இல்லையே என்கிற குறை இருக்கும்.  இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லை என்னும் இவர் மாதிரி ஆட்கள்  அந்த மனக்குறையைப் போக்குவார்கள் என்று பார்த்தால், அவர் மாதிரி திறமைகள் நம்மிடம் இல்லையே என்று குறை வந்து விடுகிறது.. 

    ஆக, மனித மனதுக்கு குறைகள் நிரந்தரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழும் மனம் பெரும்பாலும் மனிதர்களுக்கு இருக்காது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்றே தோன்றும். என்னுடைய அனுமானம், ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு கவலைகள், திருப்தியின்மை, பிறர் தன்னைவிட நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கும்

      நீக்கு
  18. கடைசி இரு தண்டனை முறைகளும் பயமுறுத்துகின்றன.  குறுகிய இடத்தில் குறுகி வாழ்வதை விட, மண்டை உடைந்து செத்து விடலாம் என்றால் தலையை நசுக்குவார்களா? 

    அம்மாடி.... 

    நம்மூரில் சில பாலியல் குற்றவாளிகளுக்கு வேறு இடத்தை நசுக்கலாம்.  ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனையை சிபாரிசு செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரு தண்டனைகளைவிடக் கொடியவைகள் அடுத்த வாரம் வருமோ? எத்தனையோ கொடிய தண்டனைகளை மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். அதில் எத்தனை குற்றமற்றவர்கள் மாட்டிக்கொண்டார்களோ.

      பாலியல் குற்றவாளி- இந்தச் சொல் திராவிட மாடலில் தவறான பிரயோகம். அதீத ஆசைப்பட்டவர் என்றுதான் அவங்களை அழைத்து சர்டிபிகேட் கொடுக்கணும்.

      அரசியல்வாதிகளுக்கு ஒரு தண்டனையும் கிடைக்காது. அவங்க ஒண்ணுகுள்ள ஒண்ணு. ரமதான் மாதம் என்பதால் தண்டனை ஒத்திவைக்கப்படுகிறது, அமைச்சரின் வயதைக் கருத்தில்கொண்டு தண்டனை நிறுத்தப்படுகிறது, பேண்டில் மூத்திரம் போய்விட்டார் என்பதால் ஜாமீன் என்றெல்லாம் தீர்ப்புகள் வருகிறது போலிருக்கே

      நீக்கு
  19. வித்தியாசமான சிற்பங்கள் ஓவியங்கள், என பலதும் கண்டோம் .படங்களும் நன்றாக இருக்கின்றன.

    விரிவான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி. ஸ்ரீலங்காவில் இப்போது எப்படி இருக்கிறது நிலைமை?

      நீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. பயண அனுபவங்கள் மற்ரும் படங்கள் எல்லாம் அருமை.


    ‘நம்பினால் நம்புங்கள்’ மியூசியத்தில் எடுத்த படங்களை தேர்வு செய்து கொடுத்து இருப்பதும் படங்களுக்கு உங்களின் விளக்கங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. முக்தி நாத்தில் நாங்கள் குளிக்க வில்லை, தலையில் தெளித்து கொண்டோம்.மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந் தாலே இதில் நீராடலாம் என்று சிறு வயதுக்காரர் குளித்து விட்டு சொன்னார். விலா எலும்பு நொறுங்கியது போல இருக்கு என்றார்.
    உடல் சிலிர்த்து அடங்கியது அவரை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது.

    கண்டகி நதியில் யாரும் குளிக்கவில்லை. அது வெகு வேகமாக கரை புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. மேலே இருந்து பார்த்து ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்திநாத்தில் நான் குளித்தேன். ரொம்பவே குளிரும் என்று எதிர்பார்த்ததாலும், எல்லோரும் ரொம்ப பயமுறுத்தியதாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தேன். 108 நீர் தாரையிலும் குளித்து படம்/காணொளி எடுத்துக்கொண்டேன் (பிறகு எப்போ இங்கெல்லாம் வரப்போகிறோம் என்று நினைத்து)

      கண்டகி நதி - நாராயண Gகாட் என்ற பகுதியில் குளிக்கும்படியாக இருக்கும். ஜொம்சொம் பகுதியில் மலை என்பதால் வேகமாகச் செல்லும். குளிப்பது மிகக் கடினம்.

      நீக்கு
  23. தீக்குச்சிகளால் லண்டன் டவர் ப்ரிட்ஜ் சூப்பர் குச்சிகள்னு தெரிந்தது ஆனால் தீக்குச்சியா அது? அசாத்தியமாக இருக்கிறது.

    நான் சார்ட்டில், வீட்டில் பயன்படுத்திய பிறகு உள்ள குச்சிகளைச் சேகரித்து ஓவியங்கள், வீடுகள் என்று ஒட்டிச் செய்திருக்கிறேன். தீப்பெட்டிகள் குச்சிகளை வைத்து மேசை, ஸோஃபா, நாற்காலி என்றும். அதெல்லாம் ஒரு காலம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். அப்படி நீங்க பண்ணியபோது பலரின் பாராட்டுகளும் ஆதரவும் இருந்திருந்தா இன்னும் பலவற்றை முயற்சித்திருப்பீர்கள்.

      நீக்கு
  24. டைட்டானிக் கப்பல் பிரமிப்பு!!!

    நெல்லை, டைட்டானிக் விபத்து அந்தச்சில் தண்ணீரில் எப்படி? உறைந்தே போயிருப்பார்கள் அதாவது ப்ளட் உறைந்தால் அவ்வளவுதானே,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஒரு காணொளி பார்த்தேன். டைட்டானிக்குக்கு அருகில் (கடலில் பல மைல்கள் தள்ளி) இருந்த கப்பலில் இருந்து, அருகிலிருந்த கப்பல்கள் எல்லாவற்றிர்க்கும், ஜாக்கிரதை, நிறைய பனிப்பாறைகள் இருக்கின்றன, மெதுவாக கவனித்துச் செல்லவும் என்ற மெசேஜ் அனுப்பினார்களாம். ஆனால் டைட்டானிக் கப்பலில் இருந்த மெசேஜ் அதிகாரி, அதனைக் கவனிக்காமல், பயணிகளின் தகவல்களை பிறருக்கு அனுப்புவதிலேயே பிஸியாக இருந்தாராம். எமெர்ஜென்சிக்காக ஒருவரைக் கூப்பிடும்போது, அவர் போன் பிஸியாக இருப்பது போல

      நீக்கு
  25. ஆமாம் நெல்லை, ஜேட் ரத்தினம் ரொம்ப விலை உசத்தி. இதில் அந்த சீன கோயில் சூப்பர். கோயில் என்பதே மதிப்பீடில்லாத ஒரு தலம்! அதை இந்த விலை உயர்ந்த ரத்தினத்தால் செய்தாலும் ஈடாகாது.....அழகா இருக்கு. கோவில்

    ஆமாம் ஜேட் ரத்தினத்தில் மாலைகள் நெக்லஸ் என்றெல்லாம் நகைகள் உண்டே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தாய்வானில் ஜேட் ரத்தினத்தில் சில மாலைகள் வாங்கியிருக்கிறேன். நான் காலையில் பேரம் பேசி மாலை, வளையல் வாங்கினேன். சல்லிசு விலைக்குப் பேரம் முடிந்ததால் இன்னும் சில மாலைகள் வாங்க முனைந்தபோது கடை ஓனர், மத்தவங்க இவ்வளவு பேரம் பேசமாட்டாங்க. அவங்களுக்கு வித்து இன்னும் சம்பாதிச்சுக்கறேன், சாரி என்று சொல்லிட்டார்.

      நீக்கு
  26. நெல்லை, சீனக் கோவில் பிரமாதம்..அடுத்த படத்தின் கோணம் ....சொல்கிறேன்...

    நிறமி இல்லாத ஆர்கானிக் மிட்டாய்களால், inorganic மைக்கேல் மிளிர்கிறார்!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  27. கேசட் டேப் மாத்திரம் பயன்படுத்தி ஓவியம் நல்லாருக்கு.

    டெலெஃபோன் டைரக்டரி ஓவியம் மிக மிக ஆச்சரியம்...

    ஆளுயரச்சிற்பம் படத்தில் சின்னதாகத் தெரிகிறதே. ஆனாலும் தேவதையும் சாத்தானும் ஒரே சிற்பத்தில் பிரமாதமாக யோசித்துச் வடிமவைச்சிருக்காங்க. அருமை.

    இதற்கு அடுத்த சிற்பத்தைப் பார்த்ததுமே பாரீஸ்? என்று கேட்க நினைத்தேன்...நெல்லை. ஆனால் நீங்கள் சொல்லிருக்கீங்க.

    "ஆட நீங்க பாரீஸ் போயிருக்கீங்களா" ன்னு கேட்காதீங்க. ஹிஹிஹிஹி

    அதெல்லாம் படம் பார்த்து தெரிந்துகொண்டவைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாரீஸ் பல முறை சென்றிருக்கிறேன். மூன்று தடவைகள் லூவர் மியூசியத்திற்குச் சென்றிருக்கிறேன். இதனை ஒரு தொடராக எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
  28. இயேசு கிறிஸ்துவின் வரலாறு....ஆச்சரியமாக இருக்கிறது. உங்க கருத்தை ரசித்தேன் நெல்லை. அதானே இறந்த பிறகும் சிலுவையிலான்னு...ஆனா பாருங்க அது வேற யாருடைய கூடோ?!

    காயின் ஓவியம் பிரமிப்பு.

    வினோத மனிதன் தலையில் ஓடை மெழுதுவர்த்தி என்றெல்லாம்...பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறது.

    //நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் யாராவது கொண்டு தரும்போது இப்படி கீழுதட்டை வைத்து வாயை முழுவதும் மூடிக்கொண்டுவிட்டால், எடை எப்படி ஏறும்?//

    ஹாஹாஹாஹா உங்களை நினைச்சு சொல்லிக்கிறீங்களா நெல்லை?

    யுனிகார்ன் ஹ்யூமன் - நம்ம சின்னப் பசங்களா இருக்கறப்ப குறிப்பாகக் குழந்தைகளின் முடியைப் பிடித்து இழுத்து தானே சண்டை போடுவாங்க.! அது நினைவுக்கு வந்தது.

    உடல் முழுவதும் முடி - அது முதலில் ஏதோ பொம்மை என்று நினைத்தேன்.

    இப்படி ஒவ்வொரு குறைபாடு மனிதர்களையும் பார்க்கும் போது பாவம் என்று தோன்றும் ஆனால் அவங்க எவ்வளவு திறமையுடன் இருந்திருக்காங்க இருக்காங்க என்பது ஆச்சரியமும் நமக்கு உதாரணங்களுமாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களை நினைச்சு சொல்லிக்கிறீங்களா நெல்லை?// அப்படி அல்ல. எனக்கு நிறைய இத்தகைய உணவுப் பொருட்களை உண்ண ஆசை. ஆனால் எடை கூடக்கூடாது. நேற்று மைசூரில் ஃபேமஸ் ஹோட்டலில் மதிய உணவு, ஆந்திரா ஸ்டைல் சாப்பிட்டேன் (வெகு வாரங்களுக்குப் பிறகு அரிசி உணவு, பருப்புப்பொடி, மோர்க்குழம்பு, தயிர்சாதம்-மற்றவைகளைச் சாப்பிடலை ஆகியவற்றிர்க்கு சாதம். இது தவிர போளி, ஜவ்வரிசி பாயசம். இன்று 900 கிராம் எடை ஏறிவிட்டது. நிமிஷாம்பா கோயிலில் வாங்கிய அருமையான இரண்டு லட்டுகளை பார்க்கத்தான் முடியும். சாப்பிட்டால் மீண்டும் நாளை எடை அதிகரிக்கும். ரொம்பவே அப்சட். என்ன பண்ண?

      நீக்கு
  29. ஜாதகத்தையே வரைஞ்சு வைச்சு தைத்த சட்டை போல இருக்கு!!!

    நீங்களே உயரம்தான் இன்னும் டபுள் மடங்கு இருப்பார் போல அந்த மனிதர் நீங்க அவருக்குப் பக்கத்துல நிக்கறதை வைத்துச் சொன்னேன்.

    கொடூரமான தண்டனைகள். நீங்க சொல்லியிருப்பது போல் இங்குமட்டும் என்னவாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் கொடூரமான தண்டனைகள் உண்டு. கழுவில் ஏற்றுவது, மாட்டுத் தோலை தண்ணீரில் ஊறவைத்து உடலில் கட்டிவைத்து வெயிலில் காயவைப்பது... தண்டனையைப் பற்றி எனக்கு பெரிய அபிப்ராயபேதம் இல்லை. ஆனால் அப்பாவிகளைத் தண்டிப்பது நியாயமா? வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் (சமண பௌத்த) என்பதால் அவர்களைத் தண்டிக்கலாமா?

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ரிப்ளியின் மியூசியம் படங்கள் விபரங்கள் என அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்க்கும் போது "இப்படியா" என்ற வியப்பு வருகிறது. உங்களின் வேலை சம்பந்தபட்ட இடங்கள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் திறமையாக சென்ற வந்து அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.

    மியூசியத்தில் உள்ள உண்மையான மனிதர்களைப்பற்றிய விளக்கங்கள் அனைத்தும் ஆச்சரியமூட்டுகின்றன.தீக்குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட லண்டன் டவர் பிரிட்ஜ், டைடானிக் கப்பல் போன்றவை அழகாக இருக்கிறது. நதி நீரின் ஜிலிப்பை பற்றி கூறும் போதே உடல் நடுங்குகிறது. இப்போதைய பெங்களூரின் குளிரே இந்த வருடம் அதிகந்தான். காலையில் பைப்நீரை தொட இயலவில்லை.

    ஒவ்வொரு புகைப்படங்களும் ஆச்சரியம். அதன் விளக்கங்களை குறிப்பிட்டு அசத்தி விட்டீர்கள். கொடூர கொலைகள் பற்றிய விபரம் மனதை கலங்க வைக்கிறது. அது பயங்கரமான குற்றம்சாட்டப் பெற்றவர்களுக்கு என்ற போதும் நம் மனது ஏனோ கலங்குகிறது. இன்னமும் அடுத்தப்பதிவில் கொலைகளங்கள் இன்னமும் பயமுறுத்தும் என வேறு சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      பயணங்களில் நேரத்தை அறையில் உட்கார்ந்து வீண்டிக்காமல் புதிய இடங்களைக் காணச் செல்லும் ஆர்வம் எனக்கு உண்டு. படங்களையும் எடுத்திருப்பதால் பகிர முடிகிறது.

      பெங்களூரின் குளிர் கொஞ்சம் அதிகம்தான். இதனால் ஃபெப்ரவரி-மே ரொம்ப சூடாக இருக்குமோன்னு தோணுது.

      கொடூர தண்டனைகள், மனிதன் மனத்தில் இப்படி விதவிதமாகத் தோன்றியிருக்கிறதே.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!