நான் இங்கு பகிரும் சிலைகளைப் பற்றிய விவரங்களை எல்லாப் படங்களுக்கும் எழுதுவதில்லை. அவ்வளவு விவரமாக எழுதுவது தேவையில்லை என்று தோன்றியது. இவற்றில் என்னை ஆச்சர்யமூட்டியது, இது திருஞானசம்பந்தர், இது நர்த்தன கிருஷ்ணர் என்று எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். சில முக்கியமான சிலைகளை நாமே சொல்லிவிடமுடியும், இது விஷ்ணு, இது மஹாலக்ஷ்மி, இது பிறையேறு செஞ்சடையன், நடராஜர் என்று. ஆனால் பல சிலைகளை எப்படி அனுமானிக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை அவை கிடைத்த இடம்/கோயில்களை வைத்தும் சில்ப சாஸ்திரத்தின் கூறுகளைக் கொண்டும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
மராட்டியர் வரலாறு படித்துக்கொண்டிருந்தபோது, வர்த்தகர்கள் பொதுவாக செட்டியள் வர்த்தகர் என்று அழைக்கப்பட்டனர் என்றும், பொருட்களை மொத்தமாகக் கொண்டு சேர்த்து விற்கும் இடங்கள் பேட்டை என்று அழைக்கப்பட்டனர் என்றும் படித்தேன். (அரிசிப்பேட்டை, ஆட்டுப்பேட்டை என்பது போன்று). தனித் தனியாக ஒரு பொருளை விற்கும் நிலையங்களை கடை என்று அழைத்தனர். இப்போதும் அதே பெயரில் நாம் தேங்காய்கடை, ஜவுளிக்கடை, கசாப்புக்கடை, கறிகாய்கடை என்றெல்லாம் அழைக்கிறோம். ஒரே கடையில் பலவிதப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அவை, சரக்குக்கடை, மளியக்கடை என்று அறியப்பட்டன. பலசரக்குக்கடை, மளிகைக் கடை என்பது அவற்றிலிருந்து ஏற்பட்டதுதான். அதுபோலவே நில அளவைகளும் பொருள் அளவைகளும். (நெய் என்றால் தோண்டி என்ற அளவையிலும், எண்ணெய், குடம் என்றும், மற்றவை சேர், மரக்கால் என்பது போன்ற அளவைகளிலும் அளக்கப்பட்டன. நான் சிறிய வயதில் சேர் என்ற அளவை உபயோகிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறேன். என் அப்பா எப்போதும் முழம், மைல், கஜம் போன்ற பல அளவுகளில் சொல்லுவார். தூரத்திற்கும் அவர் உபயோகப்படுத்திய வார்த்தை சட் என்று நினைவில் இருந்து வரமாட்டேன் என்கிறது. அப்போது நினைவுக்கு வரவில்லை. பதிவுகளை அனுப்புவதற்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்தபோது நினைவுக்கு வந்துவிட்ட து. ஃபர்லாங்க். என் அப்பா எப்போதுமே தூரத்தை ஃபர்லாங் அளவீடுகளில்தான் சொல்லுவார். (அவர் வீடு சுமார் 3 ஃபர்லாங் இருக்கும் என்று)
நாணயத்தை கம்பட்டம் என்ற இடத்தில் உருவாக்கினார்கள் (தற்காலத்தில் தங்கசாலை என்று சொல்வதுபோல). முதன் முதலில் மராட்டிய அரசு, டச்சு நிர்வாகத்துடன் சேர்ந்து நாணயங்களை அச்சிட்டனர். தஞ்சாவூர் சீமைக்காக காசு அச்சடித்துக்கொடுத்ததில் வரும் லாபம், டச்சு கம்பெனிக்கும் மராட்டிய மன்னரான ஏகோஜிக்கும் சரி சமமாகப் பிரித்துக்கொண்டார்கள்.
இதனை எழுதும்போது எனக்கு எழுந்த சந்தேகத்தைப் பகிரவேண்டும் என்று தோன்றியது. அரசர், அவருடைய குடும்பத்தினர் போன்றவர்கள் நாட்டின் தலைவர்கள். அவர்களுக்கென்று அரண்மனை, நகைகள், படாடோபமான உடைகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவை இருக்கும். அவருக்கான பாதுகாப்பு மற்றும் அரண்மனையின் செலவுகள் எல்லாமே அரசாங்கத்தைச் சார்ந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த சொத்து எங்கிருந்து வரும்? போரின் வெற்றிகளால் வரும் செல்வத்தில் அரசருக்கு ஒரு பங்கு போகும். அதுபோல வருவாயிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசருக்கு, அவருடைய நெருங்கிய சொந்தங்களுக்குச் செல்லும் என்று நினைக்கிறேன். அது தவிர, இளவரசர்கள், இளவரசிகள் அவரவர் வகிக்கும் பதவி, பொறுப்பு ஆகியவைகளைப் பொறுத்து மாதாமாதம் சம்பளம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். கல்ஃபைப் பொறுத்தவரையில், நாட்டின் வளங்கள் அரசருக்குச் சொந்தம். அதிலிருந்து கணிசமான பகுதி அரசரைச் சேரும். அதனால்தான் மன்னர்கள் மிக மிகப் பணக்காரர்களாக இருப்பார்கள். (பில்லியன் கணக்கில் சொத்து இருக்கும்) பிரிட்டனைப் பொறுத்தவரையில் அரசியிடம் இருக்கும் நகைகள், சொந்தச் சொத்துகளை தன்னுடைய வாரிசுகளுக்கு தங்கள் விருப்பம் போலக் கொடுத்துவிடுவார்கள். உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தோன்றினால் எழுதுங்கள்.
மராட்டிய மன்னர்கள் பொதுவாக எல்லாச் சமயங்களுக்கும் இடம் கொடுத்திருந்தாலும், சைவ சமயத்தையே பெரும்பாலும் ஒழுகினார்கள். அவர்கள் காலத்தைய 50க்கும் அதிகமான செப்புப் பட்டயங்களில் 40க்கும் மேற்பட்டவை சிவாலயம் தொடர்பானவை.
சரி..இந்த வார செப்புத்
திருமேனிகளைக் காணலாம்.
இவை
எல்லாமே ஒரு காலத்தில் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போதுமே பல்வேறு
கோயில்களில்,
அந்த
ஊர் மக்கள் வெளியேறிவிட்ட தால், செப்பு/பஞ்சலோகத் திருமேனிகளைப் பராமரிக்க முடியாமல், ஏதேனும் பெரிய கோயிலில்
பத்திரமாக வைத்திருக்கிறார்கள். நான் சில கோயில்களில் இத்தகைய திருமேனிகள் பலவற்றை ஓரிட
த்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உதாரணங்களை நான் எடுத்த
படங்களுடன் பகிர தயக்கமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு பெரிய கோயிலில் 106 விஷ்ணு கோயில்களின் (திவ்யதேசங்கள்) தெய்வங்களின் சிறிய
சிற்பங்களை வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். சமீப வருடங்களில் அவை
எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.
மஹாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி
நரசிம்ஹர், லக்ஷ்மியுடன்
வள்ளி, முருகன், தெய்வானை…. 11ம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை
சிவன் – சுஹாசனத்தில்
பிக்ஷை
உகந்த பெருமான் – சிவன்
கல்யாணசுந்தரர். மூன்று நாலு சிலைகளை ஒரே வார்ப்பில் உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பார்க்க முடியாத திறமை அது. அவர்களின் நோக்கம் (உருவாக்கியவர்கள், உருவாக்கச் செய்தவர்கள்) மக்களிடையே நம் கலாச்சாரத்தையும் பக்தியையும் வளர்ப்பது. அதனால்தான் பாரத தேசச் சமயங்கள் தொய்வில்லாமல் வளர்ந்திருக்கின்றன.
சுதர்சனம், நந்தி மற்றும் கோயில் மணி
தஞ்சை
அரண்மனையில் இருக்கும் தஞ்சை பெரியகோயிலின் மாதிரி உருவம்
சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார். அடுத்த படம் ரிஷபவாஹன தேவர், பார்வதி. அனைத்தும் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
கல்யாணசுந்தரர், அடுத்த படம் கோதண்டராமர், சீதை…
மஹாலக்ஷ்மி
ஸ்ரீதேவி பூதேவியுடன் மஹாவிஷ்ணு.
நம்மால் தற்போது காணக் கிடைப்பவையே இத்தனை திருமேனிகள் என்னும்போது நம்மிடம் (தமிழகக் கோயில்களில்) எத்தனை சிலைகள் இருந்திருக்கவேண்டும், அந்நியர் படையெடுப்பில் எவ்வளவோ கொள்ளையடிக்கப்பட்டு உருக்கப்பட்டது. முக்கியமான கோயில்களின் உற்சவ விக்கிரகங்கள் மண்ணுக்கடியில், அருகில் இருந்த கிணறுகளில் என்று பத்திரப்படுத்தப்பட்டன. இதனைப் பற்றிய தகவல்கள், வரலாற்றைப் படிக்கும்போது நமக்குக் கோபமும் வெறுமையும் எழும்.
அடுத்த வாரம் தொடரலாம்.
(தொடரும்)
செப்புத் திருமேனிகள் பார்க்கும் போது அவை உருவாக்கியவர்கள், அதனை பூஜித்தவர்கள் என பலரையும் நினைவு கூர வைக்கும்...... பல செப்புத் திருமேனிகள் அழிக்கப்பட்டன என படிக்கும்போதே நெஞ்சில் ஒரு வித கலக்கமும் வலியும்...... பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்...... மீதம் இருக்கும் சிலைகள், செப்புத் திருமேனிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் அனைவரும் உணர்ந்தால் நல்லது.
பதிலளிநீக்குஆனால் பல சிலைகளை எப்படி அனுமானிக்கிறார்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை. //
பதிலளிநீக்குநெல்லை, எனக்கும் சில சிற்பங்களைப் பார்க்கறப்ப தோன்றியிருக்கிறது. நீங்க சொல்லியிருப்பது போல் துர்கை, விஷ்ணு லக்ஷ்மி பிரம்மா, சிவன் இதெல்லாம் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் சில உண்டு இல்லையா அவை இடம் பெற்றிருக்கும் என்பதால்
ஆனால் முனிவர்கள் ரிஷிகள் போன்றவற்றில் ஒரு சில அடையாளங்களை வைத்துக் சொல்லிவிடலாம். ராமானுஜர் தேசிகர் இரண்டையும் வித்தியாசப்படுத்தி அடையாளங்களோடு இருப்பது போல.
இல்லைனா எனக்கு ரொம்பவே புரிவதில்லை
கீதா
தூரம் பற்றி இன்னொரு வார்த்தை - ஃபர்லாங்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் பாட்டி தாத்தா அப்பா எல்லாம் சொல்லிய வார்த்தைகள். அதுவும் பாட்டி சேர், படி, மாகாணி, குன்னுமணி அளவு எடுத்துக்கோ என்பார் அப்படினா குன்னுமணி என்ன சைஸ் என்று சின்ன வயதில் கேட்டப்ப பாட்டி அதைக் காட்டிச் சொல்லிக் கொடுத்தார் அது போல விரக்கடை அளவு. கைவிரல்கள் நான்கும் சேர்த்து வைத்து எடுப்பது.
கீதா
அடுத்தாப்ல நீங்களே சொல்லிட்டீங்க ஃபர்லாங்! நான் வாசிக்க வாசிக்கக் கருத்து போடுவதால் சிவப்பு எழுத்துகளுக்குப் பின்னர்தான் வந்தேன்.
பதிலளிநீக்குகடைகள் சந்தைகள் பற்றியதும் ஓரளவு தெரியும் ஆனால் நாணயம் உருவாக்கிய இடம் கம்பட்டம் இது இப்போதுதான் தெரிகிறது.
//ஆனால் அவர்களுடைய சொந்த சொத்து எங்கிருந்து வரும்?//
நெல்லை ஹைஃபைவ்! இதை நானும் போன சில பதிவுகளிலேயே கேட்க நினைத்து அப்படித்தான் இப்பவும் பெரிய புள்ளிகள் சொத்து சேர்க்கின்றனரோ என்று சொல்ல நினைத்தேன்!! அந்தக்காலம் முதல்னு!!!
மற்றொன்றும் தோன்றியது ஒரு வேளை அவங்களுக்குச் சம்பளமாக இத்தனை காசுகள் என்று இருந்திருக்குமோ? அரண்மனை எல்லாம் ராஜாக்கள் தானே அரசாங்க பணத்திலிருந்து கட்டுவாங்க இல்லையா?
வெற்றி பெரும் போதும் அவர்களுக்கும் பங்கு இருக்குமாக இருக்கும். சில அரசர்கள் நிறைய தான தர்மம் பண்ணினாங்கன்னு வருமே அது அரசுப் பணமா இல்லை அவங்க சொந்தப்பணமா என்ற கேள்வியும் எனக்குள் வந்ததுண்டு.!
கீதா
அது தவிர, இளவரசர்கள், இளவரசிகள் அவரவர் வகிக்கும் பதவி, பொறுப்பு ஆகியவைகளைப் பொறுத்து மாதாமாதம் சம்பளம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். //
பதிலளிநீக்குசேம் இதேதான் எனக்கும் தோன்றியது. இதற்கும் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கலாம். நான் நெட்டில் பார்த்தபடி, கிட்டத்தட்ட நீங்க கல்ஃப் மன்னர்களுக்குச் சொன்னதுதான் முந்தையகாலத்திலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்குச் சம்பளம் என்று இல்லையாம். அவர்கள் ஆளும் நிலத்திலிருந்து வரும் வரி, மதிப்பு இவற்றின் அடிப்படையில் வரும் பணத்தில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்ப இது இப்போதைய காலத்துக்கும் அப்ளை பண்ணிக்கறாங்க!!!!!???????????? நம்ம ஊரைச் சொல்கிறேன் ஹிஹிஹி....பண்டைய நீதி நெறி சட்டம் எல்லாம் இவால்வ் ஆகி இப்போதைய சட்டங்கள் மாற்றப்பட்டு வந்தாலும்.....கூட பண்டைய முறையைத்தான் பின் பற்றுகிறார்கள் போலும்...இதொன்னும் புதிசில்லை நம்ம மூதாதைய அரசர்கள் செஞ்சதுதானே ....இதுல என்ன நீங்க ED ரெய்டு அது இதுன்னுட்டு......நெல்லை இதற்குள் இருக்கும் உட்பொருளைத் தனியாகச் சொல்லவில்லை!! பாத்துக்கோங்க...!!!!
கீதா
மராட்டிய மன்னர்கள் பொதுவாக எல்லாச் சமயங்களுக்கும் இடம் கொடுத்திருந்தாலும், சைவ சமயத்தையே பெரும்பாலும் ஒழுகினார்கள்.//
பதிலளிநீக்குமராத்திய மன்னர்கள் பற்றி ஏதோ படம் இப்ப வந்துருக்காமே சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டு. வரலாற்றில் இல்லாததையும் எடுத்திருப்பதாகவும் சொல்றாங்க.
கீதா
நெல்லை அப்பர், சுந்தரர் எல்லாருக்கும் ஒரு அடையாளம் இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்பர் அடையாளம் தெரிகிறது. ஆனா அப்பர் னு எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்ற உங்கள் கேள்வியும் எனக்கும் தோன்றுவதுண்டு. ஒருவேளை பல குறிப்புகளில் இருப்பவற்றின் படிதான்..இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
சண்டிகேஸ்வரர் என்பது தெரியவில்லை. சாதாரணமாக சண்டிகேஸ்வரர் இப்படியா இருப்பார் கோவில்களில்? வித்தியாசமாக இருக்கும் இல்லையா?
பதிலளிநீக்குகீதா
பாருங்க இரண்டாவது படத்தில் இருக்கும் அப்பர் வித்தியாசமாக.....ஆனால் நான் தலை அமைப்பை வைத்து யூகித்தேன்....சில எழுத்துகள் புரியவில்லை. படத்தைப் பெரிதுபடுத்தியு பார்க்க முடியலையே நெல்லை.
பதிலளிநீக்குகீதா