23.1.26

முதல் இரவு அ.. அனுபவம் - JKC +

                                                                                                                                                                                                                                                                                                                             

 அலுவலக அனுபவங்கள்

JKC 

Main Building V S S C

(இந்த கட்டிடத்தில் தான் நான் 39 வருடம் பணி புரிந்தேன்.) 

 

நான் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவன் என்பது உங்களுக்கு தெரியும். முதன் முதலாக 1970 இல் purchase செக்சனில் comptometer assistant ஆக சேர்ந்து ஜூனியர் ப்ரோக்ராமர் ஆக கம்ப்யூட்டர் டிவிசனுக்கு மாறுதல் பெற்ற கதையும், என்னுடைய முதல் cobol program எப்படி 300 பிழைகள் என்று துப்பப்பட்டது என்ற கதையையும் முன்பே வாசித்திருப்பீர்கள்.

இன்று, ஒரு இரவு/பகல் வேலை என்ற நெருக்கடியை சமாளித்த விதம் பற்றி எழுதப்போகிறேன். அதற்கு முன் வேலை செய்த டிவிஷன் பற்றி சில விவரங்களை தர வேண்டி உள்ளது. அதையும் அறிந்திருந்தால் கதை விளங்கும்.

கட்டுரை தங்லீஷில் இருக்கும். தமிழில் கூற வார்த்தை இன்றி தவிக்கின்றேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

எங்களிடம் இருந்த mainframe computer IBM 360. மாடல் 44. மற்ற 360 மாடல்கள் போல் அல்லாத இது scientific computation சிறப்பாக (floating point operations) செயல் பட உதவும் மாடல். சாதாரண அக்கௌன்ட் பணிகள் செய்ய முடியாது. ஆனால் emulator வழி decimal arithmetic செய்யமுடியும்.  ஆகவே cobol compiler வாங்கப்பட்டது.  

இந்த கம்ப்யூட்டர் 24/7 என்ற முறையில் ஓய்வில்லாமல் லீவு எடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்கும்.

கம்ப்யூட்டர் டிவிசன் என்பதில் பல செக்சன்கள் உண்டு. அதில் ஒன்று CDP என்ற commercial data processing section. சுமார் 25 பேர் அடங்கியது, அதில் நான் ஜூனியர் புரோகிராமராக இருந்தேன். வேலை வரையறுக்கப்பட்ட நாட்களில் அனுப்பவேண்டிய ரிப்போர்ட்டுகளை பிரிண்ட் செய்து அனுப்பவேண்டியது, மற்றும் சின்ன சின்ன ப்ரோக்ராம்கள் எழுதுவது. மற்றவர்கள் எழுதிய ப்ரோக்ராம்களை debug செய்வது போன்றது. மற்ற செக்சன்கள் system (operation and maintenance), system programming, scientific programming, user assistance & liaision என்பன. இதில் சிஸ்டம் ப்ரோக்ராம்மிங் ஆட்கள் உச்சாணி கொம்பில் இருப்பார்கள் Assembler ப்ரோக்ராம் எழுதுபவர்கள்.  

1975-80 கால கட்டத்தில் சம்பளத்தில் கட்டாய சேமிப்பு திட்டம்  என்ற ஒன்று இருந்தது. மொரார்ஜி போட்ட ஒன்று, சுப்ரமணியம் போட்ட ஒன்று என்று இரண்டு கட்டாய சேமிப்பு திட்டங்கள் இருந்தன. இவை சாதாரண pf க்கு மேல் பிடிக்கப்பட்டவை. Pf போன்று தான். ஆகவே எல்லோருக்கும் கையில் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு.

இப்படி இருக்கும்போது திருவனந்தபுரத்தில் 1978 நவெம்பரில் அடாது மழை பெய்து ரயில் போக்குவரத்து எல்லாம் துண்டிக்கப்பட்ட நிலை வந்தது. அது போன்று தென் தமிழ் நாட்டிலும். அப்போது வெள்ள நிவாரணமாக தொழிலாளர்கள் கட்டாய சேமிப்பில் இருந்த தொகையை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் பெருந்தன்மையாக வெள்ளம் வந்த ஊர்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவரவர் கணக்கில் உள்ள முதல் கட்டாய சேமிப்பில் உள்ள தொகையை pf வட்டிவிகிதம் வைத்து வட்டி கணக்காக்கி வரும் தொகையை விநியோகிக்கலாம், முதல் கட்டாய சேமிப்பு திட்டம் நிறுத்தப்படுகிறது என்று ஒரு ஆணை பிறப்பித்தனர்.

தொழிலாளர்களை பற்றித்தான் தெரியுமே. அரியர்ஸுக்காக மட்டுமே வேலை செய்பவர்கள். அவர்களுடைய முக்கால்வாசி சம்பளம் கடனுக்கும் பிடித்தத்திற்கும் போய்விடும்.  எல்லோருமே கணக்கை தீர்த்து பணம் வாங்க விண்ணப்பம் தந்தனர்.

ஆக இந்த பட்டுவாடாவுக்கு நாள் குறிக்கப்பட்டு அதை செயலாக்க வேண்டிய திட்டம் தீட்டப்பட்டது. நான் சம்பள பிரிவில் இருந்ததால், என்னுடைய வேலை staff code, மாதம், வருடம், பிடிக்கப்பட்ட தொகை என்பனவற்றை தனியே தொகுத்து எடுத்து கொடுக்கவேண்டும். Pf போன்ற வைப்புத் தொகைகள் கணக்கு வழக்கு பார்த்துக்கொள்பவர் வேறு ஒருவர். அவர்  ஒவ்வொருவருக்கும் லெட்ஜர் போட்டு, acquittance roll போட்டு அக்கவுண்ட்ஸுக்கு தரவேண்டும். அவர்கள் அதன் பிரகாரமே தொழிலாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வர்.      

குறிக்கப்பட்ட நாளும் நெருங்கியது. நான் என்னுடைய வேலையை முடித்தேன். எனக்கு சீனியர் ப்ரோக்ராமர் லெட்ஜர் மற்றும் acquittance roll ப்ரோக்ராமை எழுதி விட்டதாக கூறினார். மறு நாள் பேமெண்ட்.

அந்த நேரம் பார்த்து அவர் அவசர தேவை என்று சொல்லி ( மனைவி பிரசவம்) விடுப்பு எடுத்து சென்று விட்டார். இந்த ப்ரோக்ராம்களை சரி பண்ணி காரியத்தை நிறைவேற்றும் பொறுப்பு என் தலையில் விழுந்தது.

டெஸ்ட் என்ற முறையில் கொஞ்சம் பேர்களின் ரிசல்ட் சரியா என்று பார்க்க டெஸ்ட் ரன் ஓட்டிப்பார்த்தேன். ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால் பேஷண்ட் டெட் என்ற கதையாய் இருந்தது. லெட்ஜர் ஓகே. ஆனால் acquittance roll சரியில்லை. பேர் ஒன்று, அமவுண்ட் வேறு ஒன்று என்று எல்லாம் குளறுபடி. ஒன்றுமே சரியில்லை, புரியவில்லை. அடுத்த நாள் பேமெண்ட் நடத்த வேண்டும். கம்ப்யூட்டர் பிரிண்ட்அவுட் மட்டும் போறாது. அதற்கப்புறமும் பல வழிமுறைகளும் உள்ளன. என்ன செய்வது என்று புரியவில்லை.

ஒரு ப்ரோசீஜருக்கு புதிய ப்ரோக்ராம் எழுதுவது சுலபம். ஆனால் வேறு ஒருவர் எழுதிய ப்ரோக்ராமை பிழை திருத்துவது என்பது மஹா பாடு. சில புரோக்ராமர்கள் அதை மேலும் கடினமாக அமைத்திட அனாவசியமாக சில வரிகளை சேர்த்திருப்பார்கள். Documentation என்ற ஒன்று அறவே இருக்காது, இருந்தாலும் பிரயோஜனம் இருக்காது.

IBM 360

நான் 360/44 கம்ப்யூட்டரை பற்றி முன்பே கூறியிருந்தேன். சாதாரணமாக எப்போதும் ps 44 என்ற os இல் ஓடி கொண்டிருக்கும். அந்த os இல் கோபால் ப்ரோக்ராம் ஓட்ட முடியாது. அதற்கு dos என்ற os வேண்டும். ஆக shutdown  செய்து disc எல்லாம் மாற்றி ipl என்ற boot செய்ய வேண்டும். அதன் பின்னர் emulator என்ற சப்போர்ட் ப்ரோக்ராம் லோட் செய்யவேண்டும். அதன் பின்னரே கோபால் ப்ரோக்ராம்களை ரன் செய்யமுடியும். இதற்கு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகும். வேலையும் அதிகம். ஆக நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே cdp என்ற commercial data processing க்கு  ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகவே டெஸ்ட் ரன் எல்லாம் சும்மா சும்மா ஓட்டமுடியாது.

இந்த இடத்தில் பண பட்டுவாடா பற்றி சில விஷயங்கள் கூற வேண்டி இருக்கிறது. கேஷ் இவ்வளவு வேண்டி வரும், டினாமினேஷன் மற்றும் தொகை இவ்வளவு வேண்டும் என்று பாங்கில் முதல் நாள் அன்றே அறிவித்து ரெடி ஆக்க வேண்டும். அடுத்த நாள் காலை கேஷ் வித்ட்ரா செய்யவேண்டும். மேலும் இத்தவணை தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் தொகை சம்பளத்தை காட்டிலும் கூடுதல் என்பதால் தொழிலாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம், ஒரு pf withdrawal போன்றது.

எங்கள் கேம்பஸ் பெரிது, 5 km நீளம். தொழிலாளர்கள் ஒரே இடத்திற்கு வந்து பணம் வாங்க சிரமம். ஆகவே ஒரு எலெக்சன் போல பட்டுவாடா நடக்கும். எலக்ஷன் பூத் போல் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு பட்டுவாடா நடக்கும்.

Aquittance roll இல் இரண்டு காபியில் ஒன்று ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு கையொப்ப மஸ்டர் ஆக பயன்படும். மற்றோன்று ஸ்லிப்புகளாக வெட்டப்பட்டு பட்டுவாடா கவர்களில் ஒட்டப்படும். கேஷியர் ஸ்லிப்பிற்கேற்ப பணத்தை வைத்து ஒட்டிவிடுவார். கவர்கள் கவுண்டர் வாரியாக பிரிக்கப்பட்டு பெட்டியில் போட்டு டிஸ்பர்ஸ் செய்பவர்களிடம் கொடுக்கப்படும். கேஷ் வேன் எல்லோரையும் அந்த அந்த கவுண்டர்களில் கொண்டு விடும்.   

இப்படி வரையறுக்கப்பட்ட முறையில் நடக்கும் வேலை தாமதமாகும் நிலை.

இரவாயிற்று. நல்ல வேளையாக கேன்டீனில் சாப்பாடு கிடைத்தது, சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ப்ரோக்ராமை படித்தாலும் ஒரு தவறையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் night jobs எனப்படும் நிறைய நேரம் எடுக்கும் ப்ரொகராம்களை load  செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த ப்ரோக்ராம்களை பாதியில் நிறுத்த முடியாது.

இப்படி பல முறை ப்ரோக்ராமை பார்க்கும்போது ஒரு சந்தேகம் வந்தது. இப்படி பெயர் மாறும் பொது ஏதேனும் ஒரு ஒழுங்குமுறை தோன்றுகிறதா என்று பார்த்தேன். ஆம். லெட்ஜெரில் இருக்கும் பெயர் சரி. ரோலில் அது அடுத்தவனுடைய பெயர்.

Employee விவரங்கள் தற்போதைய மாஸ்டர் ரெக்கார்டில் இருந்து பெயர், கவுண்டர் நம்பர் என்பவற்றை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால் தான் கவுண்ட்டர் பிரகாரம் சார்ட் செய்து பிரிண்ட் செய்யமுடியும். இந்த இடத்தில அவர் பிழை செய்துவிட்டார்.

பிடித்தம் பல ரெகார்டுகள். அவை employee code பிரகாரம் வரிசையாக வரும். அப்படி வரும் ரெக்கார்டுகளில் employee code மாறும்போது கிடைத்த  மொத்த அமௌன்ட் மற்றும் கணக்காக்கப்பட்ட வட்டியும் சேர்த்து acquittance லைன் பிரிண்ட்  செய்யவேண்டும்.

அப்படி மாறும்போது புதிய employee code மட்டுமே உள்ளது. Employee code மாறியதை கவனிக்கவில்லை.  அதை உபயோகித்து அவர் மாஸ்டர் தகவல் எடுத்திருக்கிறார். ஆக சரியான அமௌன்ட் தவறான employee பெயரில் போகிறது. இதைக் கண்டுபிடிக்க எத்தனை பாடு. தவறைத் திருத்தி டெஸ்ட் செய்தபோது சாம்பிள் ஓகே. பின்னர் ப்ரொடக்சனில் சென்று எல்லா வேலையும் முடித்தபோது இரவு 12 மணி. நைட் ஷிப்ட் பஸ் போய்விட்டது. இனி காலை 6.30க்கு தான். இப்படியாக அந்த நாள் ஆபீசில் தங்கும் முதல் இரவாக அமைந்தது.

காலை 6:30 பஸ்ஸில் 7 மணிக்கு வீட்டிற்கு சென்றால் மனைவி ஒரே தகராறு. ஆஃபிஸில் போன் இருந்தாலும் வீட்டில் போன் இல்லையே. லேட்டா வருவேன் என்று சொல்லவில்லையே. எப்படியோ குளித்து சாப்பிட்டு மீண்டும் 8:45 பஸ்ஸில் ஆபிஸ் சென்று எல்லாம் ஒழுங்காக்கி கொடுத்தேன்.

அவ்வாறு கலாம் சார் வலியுறுத்தும், 'mission mode' என்றால் என்ன என்ற படிப்பினை கிடைத்தது. மற்றவருடைய வேலை என்று ஒதுக்கவில்லை. OT இல்லை என்று தட்டவில்லை. இரவில் வேலை செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிக்கவில்லை. 

“மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே கண்ணாயினார்”

இது போன்று பல சிக்கல்கள், அவற்றை சமாளித்த விதம் பற்றி அவ்வப்போது எழுதுவேன். Isro culture பற்றி ஒரு அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கட்டுரை தங்லீஷில் அமைந்ததற்கு மன்னிக்கவும். ஆபீஸில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவோம். காரணம் பல மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். தங்லீஷ் பிடிக்கவில்லை என்றால் கூறவும். 

=============================================================================================


பேச்சு என்பது பெரும் பேறு!


​மூத்த தலைமுறை பற்றி இளையவர் மத்தியில் ஒரு ரத்னச் சுருக்க மதிப்பீடு :  "தொண தொண".   "சுருக்கமா சொன்னாலே நாங்க புரிஞ்சுக்குவோம்.  எதுக்கு நீட்டிப்பு பேசணும்?" இது முற்றிலும் தவறானதும் அல்ல.

நெருங்கிய உறவில் ஒரு பெரியவர், தான் எழுதிய கடிதத்தை தபாலில் சேர்க்க பள்ளியிலிருந்து திரும்பிய மகனிடம் கொடுத்து அனுப்புகிறார். அவன் திரும்பி வந்தததும் இந்த உரையாடல் :

"தபாலை பெட்டியில் போட்டுட்டியா?"

"ஆமாம்ப்பா.."

"பொட்டி மேலே 'கிளியரன்ஸ்' டைம் பார்த்தியோ?"

"பார்த்தேன்.  அப்படி ஏதும் வைக்கல்லே..."

"ஐயய்யோ..  கட்டு எடுத்துட்டாங்களோ என்னவோ...?"

"இன்னும் நேரம் இருக்கேப்பா.." - பையனுக்கு விளையாட்டுக்குப் போகும் அவசரம்.  தோழர்கள் காத்திருக்கிறார்கள்.  நகர முயன்றான்.  - "சரி, பொட்டிக்குள்ள 'டப்'னு தபால் விழுந்த சத்தம் கேட்டுதோ?"

யையன் விழிக்கிறான். "இல்லியேப்பா..." - பெரியவருக்கு கவலை வந்து விடுகிறது.  "மேலேயே சிக்கிகிட்டுதோ என்னமோ.".

​"முன்னாடி போட்ட கடுதாசிங்க உள்ளே நெறைய கிடந்தா எப்படி சத்தம் கேக்கும்?​" -  பெரியவருக்கு கொஞ்சம் நிம்மதி.

​"சரி சரி. தபாலை பொட்டியில் சரியாப் போட்டாச்சில்லையா.​" -. கேள்வி முடியும்வரை அவன் அங்கே இல்லை.

பெரியவரைக் குறை சொல்லக் கூடாது. அவருக்கு ஒவ்வொரு செயலிலும் பரிபூர் நிறைவு இருக்க வேண்டும். எது ஒன்றையும் அதனதன் அளவுக்கு மிகச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். இதை.அவர் ஒவ்வொருவ​ரிடமும் 
எதிர்பார்க்கும்​போதுதான் விமர்சனத்திற்குள்ளாகிறார்.

பேசுவதும் கேட்கப்படுவதும் முழுமையாக இருக்கும்போது செயலும் சிறப்பாகவே முடியும்.  பேச்சே அரைகுறையானால் அதன் எதிர்விளைவும் பாதிப்புக்குள்ளாகும்.

​தன் சக. ஊழியரைப்பற்றி அலுவலக நண்பரின் விமர்சனம்: "அவுரு பேசினா, பாதி அவுரு மனசிலேயே இருக்கும்​. மிச்சத்துல பாதி வெளியே வரும்: அதுலயும் பொருத்தமான வார்த்தைங்க இல்லாம  ​'வந்து... இது​'ன்னு ரொப்பி ஏதோ சொல்லிட்டு போயிடுவா​ரு... ​கேக்கிறவங்க பாடுதான் திண்டாட் டம்!  இவர் குறிப்பிட்ட நபர் அந்த அலுவலகத்தில் மிக முக்கியப் பொறுப்பான த​கவல் ஒருங்கிணைப்பில் இருப்பவர்! 

பேச்சு என்பது மனிதப் ​பிறவிக்கு மட்டுமே கிடைத்துள்ள பெரும் ​ வாய்ப்பு. ஒருவரின் முழு ஆளுமையையும் ​அதுதான் வெளிப்படுத்துகிறது. ​சாதனையாளர்களும், வெற்றியில் குறியாக இருப்பவர்களும் இதில் விழிப்போடு செயல்படுவர்.  இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஏனோதானோக்களே மிகுதி.


ஒருவர் ​இன்னொருவருக்குத் தகவல் தரும்போது அதில் முழுமை இருக்க வேண்டும். ​குறிப்பாக ஒரு பொறுப்பை ஓப்படைத்து அதற்குரிய தகவல்களைத் தரும்போது இது இன்னும் தெளிவாகவும் விவரமாகவும் இருத்தல் அவசியம்.

கூடுமானவரை, பேச்சு சுருக்கமாக சுவையாக, உரிய எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கியதாக இருப்பதே சிறப்பு. இரு தரப்பிலும் இதில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் இது போதும். பெரும்பாலும் அப்படி அமைவதில்லை எ​ன்பதே பிரத்தியட்சம். 'வெட்டிக்​ கொண்டு வா' என்றால் 'கட்டிக்​ கொண்டு' வருபவர்க​ளாக எல்லோரும்​ இருந்து விடுவதில்லை.

கதை மாதிரி ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை திரும்பத் திரும்பச் சொல்லி அனுப்பிக் கொண்டிருப்பது மகா அலுப்பான சமாசாரம்.

தெருக்கோடியில் உள்ள ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கி வர​ச் சொல்லி தம் கடைப் பையனை அனுப்புகிறார் ஒருவர். போன வேகத்தில் திரும்பி வரும் பையன் "இல்லியாம்' என்கிறான். ​அந்தக் கடையில் இல்லையென்றால் அடுத்தடுத்துள்ள கடைகளில் கேட்பது அவனுக்குத் தோன்றாது. பையனை அனுப்பும்போதே கூடுதலாய்​ பேசியிருந்தால்​ ​நேரமும் மனித சக்தியும் மிஞ்சியிருக்கும்​. 

பலருக்கு ஒரு கட்டத்திற்கு ​மேல் யோசிப்பதே அலுப்பு.  சித்தம் போக்கு சிவ​ம் போக்கு ரகம்​.  இத்தகையவர்களிடம் ஒரு பணி ​ஒப்புவிக்கும்போது முழுமையாக ஒவ்வொன்​றையும் விலாவரியாக  எதிர்மறை நிலைகளையும் எதிர்பார்த்து அவற்றுக்கேற்பவும் பேசி அனுப்புவதே பயனுள்ளது. ​எந்தத் ​தகவல் பரிமாற்றத்திற்கு  இது முக்கியம். ​கேட்பவர் புரிந்து கொண்டு விட்டார் என்ற உறுதி, ​ செல்பவருக்கு ஏற்பட்டால் அப்போது அதிகப் பேச்சு அனாவசியம். தகவல் பரிமாற்றத்திற்கும் இது முக்கியம்.  கேட்பவர் புரிந்து கொண்டு விட்டார் என்ற உறுதி சொல்பவருக்கு ஏற்பட்டால், அப்போது ​அதிகப் பேச்சு அனாவசியம்.  இது ​பழக்கத்தில் யாருக்கும் கைவரக் கூடிய​தே.  ​அந்நிலை இல்லாதவ​ரை பேச சோம்பல்படவே கூடாது - எதிரில் இருப்பவர் சலித்துக் கொண்டா​லும்.

தொண தொணவும் தப்பு: பாதிப் பே​ச்சும் தவறு. முழுமை என்பது இரண்டுக்கும் இடையில்தான் அடையாளம் கா​ணப்ப​ட வேண்டும். பேச்சின் முழுப்பயனும் அப்போ​துதான் கிட்டும்.

மெத்தப் படித்து பெரிய பதவியில் உள்ள ஒரு நண்பர் அடிக்கடி என்னைச் சந்தித்து தன் பிரச்சினைகளைச் சொல்வார். கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரியும் ஒரு தீர்வை நான் சொன்னதும் அவர் அதைத் தாண்டி ​அதன் எதிர்ப்பக்கம் சென்று 'அப்படி ஆகிவிட்டால்?' என்று அடுத்து கேட்பார். அதற்கும் ஒரு பதில் இருக்குமே!  சொன்னதும் இன்னும் கூடுதல் சந்​தேகம் - இன்னும் தாண்டி இன்னொரு கேள்வி... இப்போது நான்தான் பாவம்! இப்படியும் இருக்கிறார்கள்.

​- ஹேமலதா பாலசுப்ரமணியம் - தினமணி 15-07-2005 

==========================================================================================

சமீபத்தில் இந்தப் புத்தகம் எடைக்கு வாங்கினேன்.  அதிலிருந்து அவ்வப்போது 'கண்டதை' பகிரும் எண்ணம் உள்ளது!




இது படிப்பது சிரமம்தான்.  ஆனால் இப்படி ஒன்று இருக்கிறது என்பதற்காக...


1900 தொடங்கியதும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியானது இது.  எல்லாமே பிரிட்டனில் வெளிவந்ததவையாய் இருக்கும்.


இரு மலர்கள், அவர்கள் படங்களில் இந்த பொம்மை உபயோகபபடுத்தப் பட்டிருப்பது தெரிந்ததே... 

அப்போ சவூதி அரேபியா தோன்றி 100 வருடம்(தான்) ஆகிறது!

பவர் விஷயம்!
====================================================================================

கல்கி மறைந்த உடன் ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது.  எஸ் எஸ் வாசன் தலைமை வகித்தார்கீழே உள்ள படங்களிலிருந்து படிக்க முடிகிறதா?  உடையும் காகிதத்திலிருந்து ஸ்கேன் செய்வதும், டைப் அடிப்பதும் சிரமமாயிருக்கிறது.


முடிந்தவரை எழுத்துகளைக் கொண்டு வந்திருக்கிறேன்!

"எந்நாளும் போற்றுவோம்!"

சென்ற இருபது நாட்களாகத் தமிழ் மொழி பேசப்படும் இடங்களி லெல்லாம் தமிழ்ப் பெருமக்கள் "கல்கி"அவர்களின் பிரிவு காரணமாகத் துயரில் ஆழ்ந்திருக்கின்றார்கள். தமது எழுத்து வன்மையினாலும் இனிமையினாலும், பொது நல சேவைகளிலும் எல்லாருடைய இதய பீடத்திலும் வீற்றிருந்த அவருடைய எதிர்பாராத மறைவை எப்படிச் சகிப்பது என்ற ஏக்கம் தோய்ந்து காணப்படுகிறார்கள். அன்னாரிடம் தங்களுடைய பக்தியையும் அன்பையும், மதிப்பையும் மரியாதை யையும் வெளியிட்டு ஓரளவு மனச் சாந்தி பெற, ஏராளமான அனுதாபக் கூட்டங்களில் அவருடைய தனிப் பெருமையையும் பெருஞ் - ​சிறப்பையும் பற்றிப் பேசி வருகிறார்கள். அனுதாபத் தீர்மானங்கள் நிறைவேற்றி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.
அவை போன்ற பொதுக் கூட்டங்களில், மிகப் பெரும் அளவில் கூடிய அன்பர்களுடனும் விசேஷத் தன்மையுடனும் அமைந்தது, சென்ற வாரம் ராஜாஜி மண்டபத்தில் தலைவர் ராஜாஜி அவர்கள் முன்னிலையில், ஆனந்த விகடன் ஆசிரியர் ஸ்ரீ எஸ். எஸ். வாஸன் தலைமையில் நடைபெற்ற கூட்டமாகும்.

சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உழைக்கும் பத்திக்கையா​ளர்களால் நிரம்பியிருந்தது. ​திரளாகப் பொது மக்களை எதிர்பார்த்தே மண்டபத்தில் நாற்​காலியெல்லாம் அகற்றி, தரையில் நெருக்கமாக உட்கார வசதிகள் செய்வித்திருந்தார்க​ள்..

மண்டபம் வெரு விரைவி​லேயே ​நிரம்பிவிட, அன்பர்கள் படிகளிலும் மைதானத்திலும் நின்று ​பேச்சாளர்களின் உரைகளைக் கேட்டு, மறைந்த அமரருக்கு த​ங்கள் அஞ்சலியைச் செய்தார்கள்.

ராஜாஜி அவர்கள் திரளான கூட்டத்தைப் பார்த்து விட்டு, "அனுதாபக் கூட்டங்கள் என்றால் ஒரு சிலரே கூடிப் பிரிவதுண்டு. இம்மாதிரி பெரிய கூட்டம் 'கல்கி' அவர்கள் எத்தனை அன்புக்குப் பாத்திரமானவர் என்பதையே நிரூபிக்கிறது. நம்மை விட்டுப் பிரித்து போனவரைப்  பற்றி இத்தனை பேர் நினைக்கிறார்களே என்பதைவிட, குடும்பத்தினருக்கும் அன்பர்களுக்கும் ஒரு பெரிய ஆறுதல் இருக்க முடியாது" என்று குறிப்பிட்டார். எல்லாரும் ஆறுதல் கொள்ளும் வகையில் மேலும் பேசும் போது அவர், "சிரிக்க வைத்து தனது பணியைச் செய்து வந்தவர் 'கல்கி',  சிரிப்பது பெரும் இன்பம் நிறைந்த இந்த உலகத்தில் சங்கடத்திலும் நாம் சிரிக்கப் பயில வேண்டும்.

"தமிழ் மொழிக்கும் தேசத்துக்கும்​ '​கல்கி" ​நிகரற்ற பணி செய்து வந்தார்.
எந்தெந்த காலத்துக்கு யார் வேண்​டுமோ அவர்கள் தாமே தோன்றுகிறார்கள்.  நாடு ​சு​ந்திரம் பெறும் போது ஜனங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கவும், நம் தாய்மொழியின் உயர்வுக்கும்  பருவத்துக்கு எற்ற புஷ்பம்போல  பொக்கை மாற்றியமைத்தரிப்பு இயக்கமே கடத்தி தமான வழியிலே சிரிப் தணி மனிதர்கள் எத்தனை கணககான குழந்தை வாழ்க்கையையும் மாற்றிகளும், பெரியோர்களும் கிறார் அவர் பூசசக்தி பெற்றர்கள் எரும், அவருடைய சக்திகஷ்டம் தேசர் இயக்கி அகேகாடைய வாழ்ை இருந்த வேண்டிய அழகை அதன் மாய்க் குளித்து,வாழ்வில் ஆட்டார் இந்த அம் ஏற்பட்டவர்கள் வீரம் பயன் படுத்திக் கள்.மற்றும் பன்னாம் ன்றார். வர்கள், ஓரளவேனும் தவாக பரமஹம்ஸரின் கு அவருடைய வடைந்திருக்கிர்கள் ஆராய்ச்சி அறிவுடைய ஆயின் பற்றுமாறு வருக்கும் சில சமயம் கட இயல்பேயாகும். யைப் பற்றிச் சந்தேகம்ணத்தை வினக் இருந்தால் உலயில் வதாளுறும், இருக்கின் றன m என்ற முதலில் அவர் என்குகெ பின்பே எழுறவார். இது இத்தி லார். 

... முதலில் அவர் நன்கு புரிந்து கொள்ளுவார்.  தான் நன்றாகக் புரிந்து கொண்டபின்பே எழுதுவார். "இது இத்தனை சுலபமான விஷயமா?" என்று படிப்போர் திகைக்கும்படி இருக்கும். நடை எளிமையுடன் கண்ணாடி போலிருக்கும்.  மேலே மேலே படித்துக்கொண்டு போக விஷயம் விளங்கி வருமே அல்லாது படித்ததைத் திரும்பப் படிக்க வேண்டிய அவசியம் இன்றி தெள்ளது தெளிவாய் எழுதினர்.வார்த்தையை மறந்து விஷயத்தை கண்முன் நடமாடச் செய்வார்.கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் மாம்பழம் போல கருத்து தெளிவாகத் தெரியும்.  அந்த முறையை எழுத்தாளர்கள் பின்பற்றி பழகவேண்டும்"

தம்மை ஸ்ரீ வா​ஸன் 2​5 வருடங்களுக்கு முன்பு அணு​கி "கல்கி" யைத் தம்மிடம் அனுப்பும்படி விரும்பிய​தையும் , அவர்கள் இருவரும் சிறந்த அதிபர், சிறந்த ஆசிரியர் என்ற முறை  அமைந்த, தமிழ் காட்டிலே பத்திரிகை வளர்ச்சி செய்ததையும் ​விவரித்தார் ராஜாஜி,

"அவருடைய பிரிவு சங்கீதக்​கலைஞர்களுக்குப் பெரு ​நஷ்டம். சங்​கீம் என்றால் சனங்கள் . அம்மாதிரி பிடிக்காத எனக்கே அவருடைய விமர்சனம்........   கவர்ச்சியூட்டின  அம்மாதிரி ஓர் எழுத்தாளர் கிடைப்பது வெ​கு ​துர்லபம் என்று மேலும் தொடர்ந்து கல்கிக்குச் ​சிறந்த ஞாபகார்த்தம் அவருடைய சொல் மண்டபண்களைப்போற்றி  ​நல்ல எழுத்துக்கு மதிப்புக் கொடுப்பதேதான் " என்றார்.

உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது ஸ்ரீ எஸ். எஸ். வாஸன் அவர்களுடைய தலைமையுரை. '​கல்கியில் அதிக ​நன்மை பெற்றவ​ன் நான் அவரால் முன்னுக்கு வந்தவன்" என்று கூறி, "ஒரு வேளை அவர் பொதுத் துறை​களில் ஈடுபடாது எழுத்தில் மட்டும் ஈ​டுபட்டுப் பணி ஆற்றி வந்திருந்தால், இன்னும் பல காலம் வாழ்த்திருப்பாரோ​ என்று பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பது போல் பார்க்கிறேன் " என்றார்.

உண்மை ஹா​ஸ்யத்தைப் ​புரிந்து கொள்ள இயலாத காலத்திலே​  ஐன​ங்கள் விளக்கம் கொண்ட நிலையிலே அவர் ​தன்னுடைய ஹா​ஸ்​நடையைக் கையாண்டு மொழியை வளப்படுத்தித் தாமும் உயந்து, வாசசகர்களையும் உயர்த்தி​னார்" என்று சொன்னார்.
கல்கி" அவர்கள் ஆனந்த விகடனை ​விட்டுப் பிரிந்த பின்னர் அவர் 'விகட' னுக்கு தொடர்ந்து ஆசிரியராக இல்லையே யென்று தாம் வருந்தாத ​நாள்​ ​இல்லை யென்றும், "கல்கி" தாமே சொந்தப் பத்திரிகை ஆரம்பித்து, அக்தப் பத்திரிகை ​விகட னுக்கு மட்டும் இல்லாமல், "விகட ளை விட ஒரு படி அதிகமாக உயர்ந்து விட்டதைக் குறித்தும் தாம் மகிழ்ச்சி ​அடை​வதுண்டு என்றும் மனம் விட்டுப் பேசினார்..

இந்தக் கூட்டத்தில் அ​நே​ம் பேர் பங்கெடுத்துக் கொண்டு, 'கல்கி' யின் திமையையும் சேவையையும் பாராட்டிப் பேசினார்கள். .  ஸ்ரீமான்கள் ரா. பி.சேதுப் பிள்ளை, ராஜா ஸர்   எம்.ஏ. முத்தையா செட்டியார். என் எஸ் கிருஷ்ணன், காரை சுப்பரா​வ், கி வா . ஜ​கந்​நாதன், கி.சந்திரசேகரன், டி. செங்கல்வராயன்,  ஜி. ​நாரா​யணசாமி நாயுடு, சின்ன அண்​ணாமலை  ம.பொ. சிவஞான​ம், கிராமணி எஸ் பாஷ்யம், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் அவருடைய அரு​ங்குணங்களை ​எடுத்துச் சொன்னார்கள். ஸ்ரீ டி.கே.ஷண்முகம் உணர்ச்சி வசப்பட்டு, ​பேசுவதற்கு இயலாதவராக இருந்தார்.

'கல்கி' அவர்களின் எதிர்பாராத மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ​அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு ​நிமிஷ மௌனத்துடன் கூட்டம் கலைந்தது.

ராஜாஜி மண்டபத்தில் கூடிய "கல்கி" - மறைவு அனுதாபக் கூட்டத்தில் ஒரு பகுதியினர் 




இந்நிகழ்வைத் தொடர்ந்துதான் வாசன் அவர்கள், கல்கியின் பழைய படைப்புகளை விகடனில் மீள்பதிப்பு செய்தார்.
==========================================================================================================

அந்த நாளில் 

தகப்பனாரைக் கண்டால் இந்தப் பையனுக்கு ஒரே நடுக்கம். தாயாரிடம் அத்தனைக்கு அத்தனை அதிக செல்லம்!

தகப்பனார் செய்கிற காரியம் ஏதாவது சரி இல்லை என்று தோன்றினால், ரகசியமாக அதைச் சரிப்படுத்தும் அளவுக்குப் பையனிடம் துணிச்சல் மாத்திரம் இருந்தது. ஒரு நாள்  அவர் மேஜை மேல் இரண்டு பேனாக்கள் இருப்பதைக் கண்டான். " ஒரே சமயத்தில் அப்பா இந்த இரண்டு பேனாக்களையும் வைத்து எழுதப் போகிறாரா? இல்லை. என்னிடமோ ஒரு பேனா கூடக் கிடையாது. அதனால் ஒரு பேனாவை நான் எடுத்துக் கொள்ளலாம் என்று இவன் தீர்மானித்து, எடுத்தும் விட்டான். 

ஆறாவது வயதில் பையன் நிறைவேற்றிய சமதர்மக்  கொள்கை இது ! ஆனால் பேனா காணவில்லை என்று வீடு பூராவும் தேடிய தகப்பனார், கடைசியில் யாரிடம் இருக்கிறதென் பதைக் கண்டு பிடித்து, பையன் செவிட்டில் ஒரு அறை கொடுத்தார்.

மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டான் அங்கேதான் ஒரு போர்வீரனாக வேண்டும் என்ற ஆவல்மேலோங்கியது "இதாலிய வீரன் கரிபால்டி தாய்நாட்டு விடுதலைக்காகப் போராடியது போல, நானும் என் நாட்டு சுதந்திரத்திற்காகப் போர் புரியவேண்டும் " என்று உறுதி கொண்டான்.

எப்போதும் சண்டையைப் பற்றிய நினைப்பிலேயே இருந்ததால், பேச்சு பூஜ்யமாக இருந்தது. காலேஜ் மாணவர்களின் தர்க்கங்களில் கூடக் கலந்து கொள்ளாததால் பல தடவை அபராதம் செலுத்தி யிருக்கிறான்.

நார்வே தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது ஆங்கிலேய நண்பன் ஒருவனுடன். ஒரு ஆற்றில் ஸ்நானத்திற்குச் சென்ற சமயத்தில், கால் வழுக்கி ஜலத்தில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தான். நண்பன் மீட்டுக் கரையேற்ற வேண்டியதாயிற்று.

இங்கிலாந்தில் வெற்றி காணாத காரியம் ஒன்றில், தாய்நாடு திரும் பிய பிறகு இவன் வெற்றி பெற்றான். ஒரு பொதுக் கூட்டத்தில் தயக்கத்துடனேயே பேச எழுந்த வன், பிரமாதமாகச் சொற்பொழிவாற்றி, கரகோஷமும் பெற்று விட்டான். அப்படியே இவனை ஆலிங்கனம் செய்து முத்தமிட் டார் மிதவாதத் தலைவர் ஸர் ஸாப்ரு.

இவ்வளவு சூட்டிகையான பையன் வேறு யாராக இருக்க முடியும்? நமது ஜவாஹர்லால் நேருதான்! " அருண் "

=======================================================


கல்கி கட்டுரை :

சைனா என்றால் இத்தனை காலமாக சைனா பஜாரும், பட்டாசுக் கட்டுகளும், பட்டுத் துணிகளும்தான் நினைவிற்கு வரும். காகிதப் பூக்கள் செய்யும் சீனக் குடும்பத்தினரை சைனா பஜாரில் நேயர்கள் அவ்வப்பொழுது பார்த்திருப்பார்கள். அதிலிருந்து சீனர்களைப் பற்றி விசித்திரமாகக் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். தவிர, சீனரது வாழ்க்கையைப் பற்றியும் திடுக்கிடும்படியான கதைகள் வாசித்திருப்பார்கள்.

ஆனால், சமீபத்தில் நேருஜி, சைனா விற்குச் சென்று திரும்பியபிறகு, இந்திய மக்களுக்கு சீனர்கள் என்றால் ஒரு விசேஷ சிரத்தை ஏற்பட்டிருக்கிறாப் போலிருக்கிறது. ஆகவேதான், சென்ற வாரத்தில் சீனக் கலைவாணர்கள் சென்னையில் தங்கி, சங்கீத நடன கதம்ப நிகழ்ச்சிகளை நடத்திய பொழுதெல்லாம், ஆயிரக் கணக்கில் மக்கள் சென்று கூடினர்.

அவர்களது நடனங்களை அண்ணாமலை மன்றத்திலும், கலா மண்டபத்திலும் கண்டு களித்தவர்கள் சில ஸ்வாரஸ்யமான உண்மைகளைக் கண்டிருப்பார்கள்.

முதலாவதாக, சீனர்களிலும் அழகானவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதாகும். இரண்டாவதாக, அவர்களுடைய நடனங்களில் சில, பரத நாட்டியத்தில் உள்ள அடவுகளையும் அபிநயங்களையும், வேறு சில, கதக்களியையும்  நன்றாக ஞாபகமூட்டுகின் றன.

மூன்றாவதாக, இந்தியர்களைப் போலவே சீனர்களும் புராணக் கதைகளையும்,கிராமியக் கதைகளையும் பெரிதும் விரும்புகிறார்கள் அவர்  விரும்புகிறார்கள்; அவற்றை நடனங்களிலும் புகுத்தி யிருக்கிறார்கள். நான்காவதாக, சீனர்கள் தங்களுடைய தென்று நூதனமான வாத்தியங்கள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

..............................................
.........................................

தள்ளாடிப் பயந்து வியர்க்க வியர்க்கக் கீழே இறங்குகிறார்கள். இந்த ஆட்டத் தின் முயலின் தாத்தாவாக இருந்தது வெறும் பொம்மை என்பதை அந்த ஏடி காட்டியபோது, அதுவரை, மேடை மீது தோன்றியது இருவர் என நினைத்த அணைவரும் கொல்லென்று சிரித்தார்கள். நம் நாட்டுப் பொய்க்கால் குதிரை ஆட் டத்திலேயும், ஒரு படி உயர்ந்தது இது.

கடைசியாக, சீன கடர்கள் இரு அரசர்களிடை ஏற்பட்ட சண்டையையும், தேவலோகத்தில் ஒரு குரக்கு செய்த அட்டகாசத்தையும் ஆடிக் காட் டி.னார்கள். அடேயப்பா ! மேடை தவிடு பொடியாகிவிட்டதி எத்தனை விதமான சிலம்பச் சண்டைகள், குட்டிக் கர்ணங்கள், தமாஷ்கள், சாகசங்கள் எல்லாம் அந்த ஆட்டத்தில் கலந்திருந்தன தெரியுமா? குரங்கு வேடதாரி, அசல் குாங்கும் கண்டு திகைக்கும்படியான சேஷ்டைகளைச் செய்து, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.

மொத்தத்தில், சீனக் கலைவாணர்களின் நடனங்கள் கண்யமாகவும், கிழக்கத்திய பாணியிலும் அமைந்திருந்தன. சீனக் கலாசாரமும், ராகரிகமும் இந்தியாவுடையதைப் போலவே வெகு புராதனமானவையாயிற்றே!

சீனக் கலைவாணர்களுக்கு, நமது கலைவாணர்களும் தங்களது நடனத் திறமைகளைக் காட்டினர். கோபிநாத்தின் கதகளி நடனமும், வைஜயந்தி மாலா, லலிதா, பத்மினி, ராகினி, இந்திராணி, நிர்மலா விச்வநாதன் ஆகியோ ரின் நடனங்களும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தனவாம்.

வந்திருந்தோர் ஸ்ரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் கானத்தைக் கேட்டுப் பரவசம் அடைந்தனர். பல விருந்துகளை ருசித்து, தாங்களும் சென்னைக் கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நல் விருந்தளித்தார்கள். சென்னை ஒரு கலா நந்தவனம்; கலைக்கு இருப்பிடமே சென்னைதான்' என்று வாயாரப் புகழ்ந்து விட்டுப் போனார்கள் அவர்கள்.

கல்கி இப்படி எழுதி இருந்தாலும் சீனர்கள் சீக்கிரமே இந்தியா மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது!



ஊர்வம்பு என்கிற பெயரில் வந்த பகுதியிலிருந்து...

=========================================================================================


கீழே படத்தில் உள்ள பொருள்பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு விரைவில் வெளியாகும்!


=============================================================================================

படத்தைப் பார்த்தால் ஒரு கிழவர் தூங்குவது போலதானே உங்களுக்கும் தெரிகிறது?  அவர் தாவாங்கட்டையை உற்றுப் பார்த்தால் ஒரு பெண் தூங்குவது தெரியுமாம்.  எனக்கு எவ்வளவு முயன்றும் தெரியவில்லை.  உங்களுக்குத் தெரிகிறதா?!!

இதை ரீல்ஸில் பார்த்தேன்.  பகிர்ந்தவருக்கு டியூ க்ரெடிட்டுடன் பகிர்ந்துள்ளேன். கிழவர் மட்டும் இருக்கும் படத்தைப் பார்த்து முயற்சி செயுங்கள்!


69 கருத்துகள்:

  1. இன்று என்ன திரௌபதி ஒஸ்திராபரணம் மாதிரி படிக்கப் படிக்க பதிவு நீண்டுகொண்டே போயிற்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  அந்த க்ரானிக்கில் பகுதியை துண்டு  துண்டாக எடுத்த எடுப்பில் தரமுடியாது என்பதால் இந்தமுறை நீண்டு விட்டது...  பார்ப்போம்.

      நீக்கு
    2. ​நாங்கள் எல்லாம் நீளம் என்பதற்கு அனுமார் வால் என்று சொல்வோம். ஆனால் நீங்கள் வஸ்திராபரணம் மாதிரி என்று உவமை கூறுகிறீர்கள்!! முதல் இரவின் தாக்கமோ?

      Jayakumar

      நீக்கு
  2. ஜெயகுமார் சாரின் அலுவலக அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது.

    என் அலுவலகத்தில் நிகழ்ந்த பலவற்றை நினைவுபடுத்துகிறது. வேலை என்று வந்துவிட்டால் நேரம் பார்க்க இயலாது. அதிலும் ஃபேக்டரி தொழிலாளர்கள் அல்லது க்ரிட்டிகல் வேலைகள் சம்பந்தப்பற்றவற்றில் நம்முடைய சௌகரியத்தை நினைக்கக்கூட இயலாது.

    தமிழில் இவற்றை எழுதினால் புரிந்துகொள்ள முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சுவாரஸ்யமான அனுபவம்.  அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த மாதிரியான வேலைகளை செய்ய முடியாது.  எனக்குத் தெரியாது என்றோ, நானும் கவனிக்கவில்லை என்றோ சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.  அவர் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை!

      எனக்கும் சில அ அ உண்டு.  சில முன்பே பகிர்ந்திருக்கிறேன்.  சில மாமா சொல்லி நான் எழுதியவை!

      நீக்கு
  3. நேரமில்லை. பிறகுதான் வரணும். கல்கி பகுதி, தொணதொண தொளசிங்கம் பகுதிகள் நன்று. ஆங்கில ஸ்கேன்கள் விஷயம் இருந்தாலும் படிக்க அயர்ச்சி, நிறைய ஆங்கில கட்டிங்குகளைத் தவிர்க்கணும் அல்லது தமிழில் தரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னது போல இந்த முதல் அறிமுகத்துக்குப்[ பிறகு அவ்வப்போது வரும் அவை, ஒன்றிரண்டுதான் இருக்கும்!  தமிழ் படுத்த முடியாது.  நன்றாக இருக்காது.

      நீக்கு
    2. தொண தொண துளசிங்கத்தை எங்கே தேடியும் கண்டு பிடிக்க முடியலை. மற்றபடி கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. பதிவின் நீளத்தாலும் படிக்க முடியாத பக்கங்களாலும்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. இப்படியாக அந்த நாள் ஆபீசில் தங்கும் முதல் இரவாக அமைந்தது.//
    தலைப்புக்கு காரணம் தெரிந்து விட்டது.
    அலுவலக அனுபவம் நன்றாக இருக்கிறது.

    //7 மணிக்கு வீட்டிற்கு சென்றால் மனைவி ஒரே தகராறு. ஆஃபிஸில் போன் இருந்தாலும் வீட்டில் போன் இல்லையே. லேட்டா வருவேன் என்று சொல்லவில்லையே.//

    காலகாலத்துக்கு அலுவலகம் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்றால் பயமாக , கவலையாக இருக்கும்.
    அது கோபமாக வெளிபடும் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  என்னவென்று நினைத்துக் கொள்வார்கள் பாவம்.

      நீக்கு
  6. ஒரு நாள் முழுவதும் படிக்க வேண்டிய அளவு விஷயங்கள் பகிர்வு இருக்கு.

    பேச்சு என்பது பெரும் பேறு! கட்டுரையை ரசித்து படித்தேன்

    ஹேமலதா பாலசுப்ரமணியம் - தினமணி 15-07-2005

    அப்பா தானே இந்த கட்டுரையை எழுதியவர்கள்?
    மற்ற பகிர்வுகளை படித்து கருத்து சொல்ல பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்த வியாழன் பதிவு... நீ.....ள.....ம்.... அதிகம்! :) ஜேகேசி அவர்களின் அலுவலக அனுபவங்கள் சிறப்பு. பணி என்று வந்துவிட்டால் முடிக்கும் வரை நேரம் பார்க்க முடியாது. இரவு இரண்டு மூன்று என்று பணி புரிந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. நானும் எழுதலாம்... அதற்கு நேரம் வர வேண்டும்.

    மற்றவையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...   பதிவில் பாதி இடத்தை  படங்களே பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பது சோகையான சமாளிப்பு!

      நீக்கு
    2. /இந்த வியாழன் பதிவு... நீ.....ள.....ம்.... அதிகம்! :) /
      நாள் குழப்பம் ஒரு விநாடி வந்து போனது.

      நீக்கு
    3. மெல்ல மெல்ல மாறும்!!!!

      நீக்கு
    4. இன்று வெள்ளி இல்லையோ!!!

      கீதா

      நீக்கு
    5. அப்படி...  அப்படி குழப்பமாக இருக்கிறது என்கிறார் அக்கா!!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  9. ஜெ கெ அண்ணாவின் அனுபவம் இப்படியான பணிகளில் உள்ள கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

    நம்ம வீட்டிலும் இப்படியான அனுபவங்கள் உண்டு. குறிப்பாக ராக்கெட்/சாட்டில்லைட் ப்ராஜெக்ட்ஸ் போகும் சமயங்களில் பல நாட்கள் இரவு அலுவலகத்தில் தங்க வேண்டிய சூழல் நம்ம வீட்டவருக்கு ஏற்பட்டதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... வீட்டுக்கு வீடு ஆபீசுக்கு ஆபீஸ் அனுபவம்!

      நீக்கு
  10. அட! அப்பாவின் கட்டுரை!?

    சூப்பர்ப்! ரொம்ப அழகான கருத்துகளைச் சொல்லும் கட்டுரை! கொஞ்சம் உளவியலும் அடங்கியிருக்கிறது.

    இதைப்பற்றி நிறைய சொல்லலாம்.

    ஸ்ரீராம், ஒவ்வொன்றாக வாசித்துவிட்டு வருகிறேன்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா வாங்க...  பதிவு நீளம் என்பதால் இன்றைய பொழுது இதற்கே ஓடிவிடுமோ!

      நீக்கு
    2. ஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  11. கல்கி 1930ம் வருடத் தலையங்கம் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை. கம்யூனிஸ்டு ஆட்சியில் தனிமனித முன்னேற்றம் சுபிட்சம் சாத்தியமல்ல. அங்கும் எல்லாருக்கும் எல்லாமும் இல்லை. வர்க்க பேதம் இருந்தது. சிலருக்கு அதிக சம்பளம் சலுகைகள் என வேறுபாடுகள் இருந்தன. ஆனால் நம் நாட்டில் உழைத்தால் சுபிட்சம் என்ற நிலை. அதனால்தான் முழு கம்யூனிஸ்டு நாடுகள் மார்க்கெட் பொருளாதார முறையைக் கைக்கொள்கிறார்கள்

    நம்ம ஊரில் கம்யூனிஸ்டுகளே இப்போது கிடையாது. எல்லாருமே ஒரே மாதிரி அரசியல்வியாதிகள்தாம். அகப்பட்டதைச் சுருட்டு, லஞ்சம் வாங்கு, வேலை செய்யாமல் சம்பளம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தலையங்கம் இல்லை. நாம் வெளியிடும் கதம்பம் போல அது துக்கடா.. ஊர் வம்பு என்கிற பெயரில். கல்கி எழுதிய என்று வரவேண்டும். வந்தது விகடனில்.

      நீக்கு
  12. ​சீனர்களின் கலைநிகழ்ச்சி தமிழ் நாட்டில் என்றவுடன் இந்த சீன நடனமும் நினைவில் வந்தது. பாருங்கள் இணைப்பை சொடுக்கி
    பிரிந்தாவனமும் நந்தகுமாரனும் .....

    https://www.youtube.com/watch?v=v_-DISFp7MA

    பதிலளிநீக்கு
  13. இது என்ன தமிழ் ? கல்கி இரங்கற்க் கூட்டதில் ராஜாஜி இப்படியா பேசினார்? அப்படி என்றால் கட்டுரையே அனாவசியம்.
    உங்கள் எழுத்துக்கும் அப்பாவின் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம். அவரை அவர் காலத்திற்கிற்ப நடை உடை பாவனை மாறியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜாஜி பேசியதில் என்ன தவறு கண்டீர்கள்?  சொற்குற்றமா அல்லது பொருள் குற்றமா?!!!

      அப்பா எழுத்து - என் எழுத்து..  நீங்கள் எல்லாம் சொன்னால் சரிதான்!

      நீக்கு
    2. தேர்தல் காலத்துக்கு யார் வேண்​டுமானாலும் அவர்கள் தாமே தோன்று 378 ​சுத​ந்திரம் பெறும் போது ஜனங்களுக்கு மட்டும் உண்டாக்கவும், சொ தேவ உயர்கல் துவைத்துக்கு எற்ற புஷ்பம் பொக்கை மாற்றியமைத்தரிப்பு இயக்கமே கடத்தி தமான வழியிலே சிரிப் தணி மனிதர்கள் எத்தனை கணககான குழந்தை வாழ்க்கையையும் மாற்றிகளும், பெரியோர்களும் கிறார் அவர் பூசசக்தி பெற்றர்கள் எரும், அவருடைய சக்திகஷ்டம் தேசர் இயக்கி அகேகாடைய வாழ்ை இருந்த வேண்டிய அழகை அதன் மாய்க் குளித்து,வாழ்வில் ஆட்டார் இந்த அம் ஏற்பட்டவர்கள் வீரம் பயன் படுத்திக் கள்.மற்றும் பன்னாம் ன்றார். வர்கள், ஓரளவேனும் தவாக பரமஹம்ஸரின் கு
      அவருடைய வடைந்திருக்கிர்கள் ஆராய்ச்சி அறிவுடைய ஆயின் பற்றுமாறு வருக்கும் சில சமயம் கட இயல்பேயாகும். யைப் பற்றிச் சந்தேகம்ணத்தை வினக் இருந்தால் உலயில் வதாளுறும், இருக்கின் றன m என்ற
      முதலில் அவர் என்குகெ பின்பே எழுறவார்.

      நீக்கு
    3. உடைந்துபோன பக்கத்தின் இடம் தவிர மற்ற இடங்களை இப்போது மறுபடி கொஞ்சம் முயன்று சீர்திருத்தி இருக்கிறேன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் அலுவலக பணிச்சுமைகள் பற்றி படித்து தெரிந்து கொண்டேன். ஃபோன் வசதியில்லாத காரணத்தால், அந்த காலத்தில் வேலைக்கு சென்றவர்கள் இரவாகியும் திரும்பவில்லையென்றால் வீட்டிள்ளவர்களுக்கு கவலை, பயம் வரத்தானே செய்யும். ஆனால், பணியில் உள்ள சுமைகள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கே புரியும். இக்கட்டான சூழ்நிலைகள் சில சமயம் இவ்விதம் வந்து விடுவதுண்டு.

    உங்கள் அப்பாவின் கட்டுரை நன்றாக உள்ளது. நாம் பேச்சை எவ்வாறு கையாள வேண்டுமென அழகாக சொல்லியுள்ளார்கள். ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து, ரசித்து, கருத்திட்டதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  15. ஒவ்வொரு காலகட்டத்தையும் ஓவியத்தில் சொல்லியிருப்பதையும் விளக்கத்தையும் வாசித்தேன், ஸ்ரீராம்.

    ஹிட்லர் 2 வருஷம் ஆண்டது அப்பகுதியில் அந்த காலகட்டத்தில் எதிர்பார்ப்புகள் இருளில் என்பதும், அமெரிக்காவும் இங்கிலாந்தும் டிப்ரஷந் அதிர்ச்சியில் இருந்தாலும் எப்படியேனும் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு மயக்கத்தில் ஐரோப்பியா இருந்ததாகவும் ஓவியர் வரைந்திருப்பதாகத் தெரிகிறஹு. அப்போதைய கவிஞர் ஆடன் குறிப்பிட்டிருப்பதும் அதாவது கொஞ்சம் கொஞ்சமாக நேர்மை குறைகிறது என்பதாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையாகப் படித்தால் அது கொஞ்சம் சுவாரஸ்யமான புத்தகம்தான். ஆனால் அதன் சைஸைப்     பார்த்தால் உடனே தூக்கம் வந்து விடுகிறது!

      நீக்கு
  16. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அந்தக் கேலண்டர் மாதிரி இருப்பதில் முக்கியமனா நிகழ்வுகள்....பெரிது பண்ணிப் பார்த்தால் வாசிக்க முடிகிறது. 100ல் நியூயார்க்கில் முதல் எலக்ட்ரிக் ஆம்னி பஸ் நிறுவினார்களாம்.

    பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் சுரங்கப் பகுதிகளில் ஸ்ட்ரைக் காரணமாக கலவரம் ஏற்பட்டதாம் இப்படி சுவாரசியமாக இருக்கிறது தெரிந்துகொள்ள.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தைப் பார்த்தே வாசிக்க முடிகிறதா?

      நீக்கு
  18. 1900 ல் இந்தியாவில் 3 1/4 மில்லியன் மக்களுக்கு பஞ்சநிவாரணம் கிடைத்ததாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. 1900 லியெ இன்ஃப்ளுயெஸா அவுட்ப்ரேக் ஆகிருக்கு பாருங்க. இப்ப கொரோனான்னு பயந்தோமே....இன்ஃப்ளுயென்சாஅ கொரோனா ரெண்டும் வைரசும் பங்காளிங்களோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இப்போ இது பயமுறுத்தின மாதிரி அது அப்போ பயமுறுத்தி இருக்கு!

      நீக்கு
  20. அவர்களில் வரும் பொம்மை போலவே நம்ம ஊர்ல இதுல ஸ்பெஷலைஸ் பண்ணினவர் வெங்கி மங்கின்னு அப்ப ஜெயா டிவில ஷோஸ் செஞ்சப்ப, அடையார் பக்கத்துல இந்திராநகர்ல நாங்க இருந்த வீட்டில் அவர் மாடில இருந்தார், நாங்க கீழ வீட்டுல இருந்தோம்..... அதன் பின் நாங்களும் வீடு மாறினோம் அவரும் வீடு மாறிட்டார் இப்ப அவர் பெண்ணும் வெங்கி மங்கி ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு அவங்க பண்ணறாங்கன்னு சமீபத்தில் தெரிந்து கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  மாடி வீட்டிலேயே இருந்தாரா?  நான் இவர் பற்றி கேள்விப்பட்ட நினைவு..  பார்த்த நினைவு இல்லை.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம். இந்திராநகர் ல இருந்தப்ப இவர் மாடியில்.

      கோவை டு சென்னை வந்தப்ப முதல்ல இருந்த வீடு பண்ருட்டியார் வீட்டில். மாடியில் அவரும் அவர் மனைவியும். கீழே நாங்கள். பண்ருட்டியார் நன்றாகப் பேசுவார் கீழே வரும் போது.

      கீதா

      நீக்கு
  21. ஜேகேசியின் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன. அவர் சொன்ன வருடங்களில் நாங்க சிகந்திராபாதில் இருந்தோம். நம்ம ரங்க்ஸும் ஒரு தரம் காலை அலுவலகம் போனவர் சாயங்காலம் திரும்பி வரலை. நானோ அவ்வளவு பெரிய வீட்டில் குழந்தைகளுடன் தனியாக. மாலை ஏழு மணி வரை பார்த்துட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு வழி விசாரித்துக் கொண்டு அலுவலகமே போயிட்டேன். :))))) என்னைப் பார்த்துத் திகைத்த சக அலுவலர்கள் அவரை மட்டும் வீட்டுக்குப் போகச் சொல்லிப் பின் அவர் கிளம்பி என்னுடன் வந்தார். வீட்டுக்கு வர இரவு பத்து மணி ஆச்சு. அது கூட வரும்போது வண்டியில் வந்ததால். நான் தேடிக் கொண்டு போனப்போ ஆங்காங்கே வழி விசாரித்துக் கொண்டு பையரைத் தூக்கிக் கொண்டு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தே சென்றேன். முக்கியக் காரணம் அப்போ இந்த எமர்ஜென்சி நேரம். அதனால் கவலை, பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   சூப்பர் போங்க...   விட மாடீங்க போல!!!!

      நீக்கு
    2. ​என்னுடைய பையர் மூத்தவர் செகந்திராபாதில் சைனிக்புரி என்ற இடத்தில வாயுவிஹார் நோர்த் கேட் பக்கம் காப்ரா ஏரிக்கு அடுத்து யாப்ரால் என்ற இடத்தில் வீடு. த்ரிமுல்கறி (திருமால்கிரி) கோயில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

      Jayakumar​

      நீக்கு
  22. சவுதி அரேபியா பற்றிய தகவலை நேத்திக்கு முகநூலிலும் பார்த்தேன். மற்றவை படிக்க சிரமம். உங்கள் அப்பா எழுதினது நன்றாக அனுபவபூர்வமாக உணர்ந்து எழுதி இருக்கார் என்பது தெரிந்தது. மற்றவை பின்னர். ஒரு வழியா ஜேகேசிக்கு சனிக்கிழமையிலிருந்து ஸ்லாட் வெள்ளியாக மாறி இருப்பது சந்தோஷம். என்னோட சின்னமனூர்ச் சித்தியின் மாப்பிள்ளையும் திருவனந்தபுரத்தில் இதே அலுவலகத்தில் தான் வேலை பார்த்தார். பிறந்து வளர்ந்ததில் இருந்து திருவனந்தபுரம் தான்.

    பதிலளிநீக்கு
  23. 1926 லேயே ரேடியோ வழி மூவிங் பிக்சர்ஸா? ஆச்சரியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. சவூதி பற்றிய தகவலில் ஊர் இருந்திருக்கு பெயர்தான் வைச்சிருக்காங்க?

    அடுத்தாப்ல பவர் சப்ளை பத்திய தகவல். அப்போவே நேஷனல் க்ரிட் எல்லாம்....கருப்பு வெள்ளை காலத்திலேயே!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ராஜாஜி இருக்கும் போதே ராஜாஜி மண்டபம் இருந்ததோ?

    ராஜாஜி உரையை கூகுள் ஸ்கானரை விட ஃபோட்டா காப்பியை பெரிதுபடுத்தி வாசித்துவிட்டேன்! கல்கி இரங்கலுக்கு இவ்வளவு கூட்டம் கூடியதே பெரிய விஷ்யம் அப்படி என்றால் அவர் மக்களிடையே எவ்வளவு பாப்புலர் என்றும் தெரிகிறது.

    //இந்நிகழ்வைத் தொடர்ந்துதான் வாசன் அவர்கள், கல்கியின் பழைய படைப்புகளை விகடனில் மீள்பதிப்பு செய்தார்.//

    ஓ! கல்கியின் படைப்புகளை ஆவி தான் பதிப்பு செய்தாங்களா? கல்கி நிறுவனம் இல்லையா? அப்போ கல்கி பத்திரிகை இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசனுக்கும் கல்கிக்கும் நடந்த மனஸ்தாபத்தில் தான் வாசன் அவர்கள் கல்கியை ஆசிரியர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். சிறையிலிருந்து வெளிவந்த கல்கி என்ன செய்வது எனத் திகைத்த போது தான் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் சதாசிவம் அவர்களுடன் சேர்ந்து கல்கி பத்திரிகையைத் துவக்கினார். கல்கி தான் ஆசிரியர். அதில் தான் கல்கியின் பிரபலமான சரித்;திர நாவல்கள் வெளிவந்தன. பார்த்திபன் கனவு முதலிலும், பின்னர் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும், அலை ஓசையும் வந்தன. அலை ஓசை சுதந்திரப் போராட்டம், இந்தியப் பிரிவினை குறித்து எழுதப்பட்டதென்பதால் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. ஆனால் கல்கி இல்லைனு நினைக்கிறேன். கல்கி அமரதாரா நாவல் திரைப்படமாக எடுக்கணும் என்பதற்காகவே எழுதினார் என்பார்கள். அமரதாரா 20 அல்லது 25 அத்தியாயங்கள் எழுதும்போதே கல்கி அவர்கள் மரணம் அடைந்து விட்டார். பின்னர் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் கல்கியின் மகள் ஆனந்தி அமரதாராவுக்குக் கல்கி விட்டுப் போயிருந்த குறிப்புக்களை வைத்துக்கொண்டு எழுதி முடித்தார்.

      நீக்கு
  26. நேரு பற்றிய தகவல் இதுவரை அறியதது.

    கல்கியின் கட்டுரையில் சைனா பஜார் என்பது அப்போதே இருந்திருக்கு என்பதெல்லாம் தெரியவருகிறது. இப்பவும் சைனாபஜார்கள் நிறைய. இங்க கூட சில கடைகளில் பொருட்கள் சைனா மேக் என்று இருக்கும். இல்லைனா தைவான் மேக் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. சீன மக்களின் வாழ்க்கை முறையை நம் இந்திய வாழ்க்கையோடு ஒப்பிட முடியும். சென்னையில் இருந்தப்ப, சர்வதேச திரைப்படங்கள் திரையிட்டாங்களே அப்ப சீனப்படம் ஒன்று பார்த்த போது தெரிந்தது. அவங்களும் அலுத்துக்கறாங்க பையனுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆக மாட்டேங்குதே என்று...பையனுக்குப் பெண் பார்ப்பது என்று பல..வாழ்விய முறைகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. சீனக் கலாசாரமும், ராகரிகமும் இந்தியாவுடையதைப் போலவே வெகு புராதனமானவையாயிற்றே!//

    அட மேலே சொன்னது இங்கு வ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே இதற்கு முன் சொன்னது இங்கு அடுத்ததில் வந்திருக்கு...பாருங்க....கட்டுரையிலேயே

      கீதா

      நீக்கு
  29. ஊர் வம்பு கருத்து நியாயமான கருத்து.

    ஓ! கல்கி விகடன் அப்ப இல்லையா...இதுமட்டும் கேள்விப்பட்டதுண்டு இரண்டும் பின்னர் பிரிந்தன என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அந்தப் பொருள் என்னவென்று தெரியும் ஸ்ரீராம்...நான் சொல்லலாமா இங்கு ? இல்லை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் நீங்களே சொல்லிடுங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஜே.கே அவர்களின் அனுபவங்கள் நன்று.

    பொக்கிச பகிர்வுகள் பல தகவல்களையும் அறியத் தந்தன.

    பதிலளிநீக்கு
  32. ம்ஹூம் கிழவர்தான் தெரிகிறார் எவ்வளவு உற்றுப் பார்த்தும் பெண் தெரியவில்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. இரு மலர்கள், அவர்கள் படங்களில் இந்த பொம்மை உபயோகபபடுத்தப் பட்டிருப்பது தெரிந்ததே.//

    இரு மலர்கள் படத்தில் "ஒரு மகராணி , ஒரு மகராஜா" பாடல் இந்த பொம்மையை வைத்து கொண்டு பாடுவது மனதில் வந்து போகிறது.
    அவர்கள் படத்தில் "இருமனம் கொண்ட "பாடல் .. நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!