கடந்த வருடம் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைத் தொடர்ந்து நான் ஃபேஸ்புக்கில் எழுதியது இது. இங்கு பகிராமலேயே விட்டிருக்கிறேன்.
சென்ற வார செய்தியில் பாகிஸ்தான், பலுசிஸ்தான் பற்றி செய்தி படித்ததும் இது நினைவுக்கு வந்தது.
OTT புண்ணியத்தில் எத்தனை தமிழ், மலையாள க்ரைம் படங்கள் பார்த்திருக்கிறோம்?
தமிழக காவல் துறையிடம் பிளாக்போர்ட் இல்லையா? அதில் சில பெயர்கள், க்ளூக்கள் எழுதி, டிக் செய்து, இண்ட்டு மார்க் செய்து, ஓரிடத்தில் வட்டமிட்டு, சுற்றிலும் குட்டி குட்டியாய் புகைப்படங்கள் ஒட்டி,
சற்றே பெரிய ஒரு தனி மேஜையில் பாதி குடித்து வைத்த தண்ணீர் க்ளாஸ் இருக்க, சில பேப்பர்கள் கலைந்து கிடக்கின்றன. ஆஷ் ட்ரே ஒன்றும் கண்ணில் படுகிறது.
முக்கிய விசாரணை அதிகாரி, கலைந்த உடைகளுடன் களைத்த முகத்துடன் கையில் புகையும் சிகரெட்டுடன் ஜன்னலோரம் நின்று தூரத்து மேகத்தை பார்த்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
[ cigarette smoking is injurious to health ]
சுற்றிலும் சில குட்டி குட்டி மேஜைகள் நாற்காலிகளில் சிலர் அமர்ந்து கம்ப்யூட்டரைப் பார்த்து சடசடசடவென தட்டி சட் சட்டென விவரங்கள் எடுத்துக் கொடுக்க,
"ஏதாவது பேட்டர்ன் இருக்கா... ஒரே கோஷ்டியா? மூணு கேஸையும் கனெக்ட் பண்ண முடியுதா பாருங்க..."
டைட்டாக உடை அணிந்த இளம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளே வந்து இறுக்கமாக சல்யூட் அடித்து குற்றவாளியின் ஃபோன் நம்பரிலிருந்து எடுத்த 'கால் லாகை'க் கொடுக்க..."அந்த ஸார் யாருன்னு தெரிஞ்சுதாம்மா... "
CCTV Footage நோண்டிக் கொண்டிருந்த ஒரு அதிகாரி துடிப்பாக "ஸார்.. இதோ பாருங்கள்.." என்று காட்ட...
வேகமாக அங்கு சென்று அதைப் பார்க்கும் முக்கிய அதிகாரி.."அந்த மூன்றாவது footage காட்டுங்க... ஓட்டுங்க.... ஸ்டாப்.. ஸ்டாப்... கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுங்க... இன்னும் கொஞ்சம்... இன்னும்... ஆங்... அங்கே... அங்கே... அது யாரு.. ஜூம் பண்ணுங்க" சட்டென திரும்பி சுவரில் ஒட்டியிருந்த மூன்று புகைப்படங்களைப் பார்த்து விட்டு திரும்புகின்றன அவர் கண்கள்.
"ம்ம்ம்.. இந்த ரெண்டு படத்தையும் பிரிண்ட் எடுத்து எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புங்க... கொஞ்சம் பேப்பர் பிரிண்ட் எடுத்துக்கிட்டு, ராஜேஷ்... லதா.. நீங்க ரெண்டு டீமா பிரிஞ்சு அந்த ஏரியால இவர்களை யாருன்னு அடையாளம் தெரியுதான்னு பொது இடங்கள்ல கேளுங்க.."
என்று இந்நேரம் குற்றவாளிகளைக் கண்டு பிடித்திருக்க வேண்டாமோ....
இருங்க.. இன்னொரு காட்சி கற்பனை பண்ணுவோம்...
அங்கு ஓரமாக இருந்த ஃபோன் அடிக்கிறது. 'செல்ஃபோன் இருக்க எதற்கு லேண்ட்லைன் அடிக்கிறது' என்று கேட்கக்கூடாது. அதெல்லாம் பாதுகாப்பு சமாச்சாரம். யாருடைய பாதுகாப்பு என்றும் கேட்கக் கூடாது! ஃபோனை ஒரு ஜூனியர் அதிகாரி எடுக்கிறார்.
ஏதோ கேட்டுவிட்டு விசாரணை அதிகாரியிடம் நீட்டுகிறார். வி அ அதை வாங்கிப் பேசுகிறார். போனில் "ம்ம்...ம்ம்ம்... எஸ் மேடம்.." என்று சொல்லியபடியே திரும்பி கட்டை விரலை கவிழ்து காட்டுகிறார், அவர் முகத்தில் ஒரு சோர்வு தெரிகிறது.
சட்சட்டென மேஜை கம்ப்யூட்டர்கள் உயிரிழக்கின்றன,. அவர்கள் மௌனமாக எழுந்து நிற்கிறார்கள்.
போனை வைத்து விட்டு வி அ சொல்கிறார்..."ஓகே... டிஸ்பர்ஸ் ப்ரெண்ட்ஸ்,, மீட் யு ஆல் லேட்டர்.." என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டு "இஃப் எனி சான்ஸ்" என்று சொல்லிக் கிளம்புகிறார்.
அந்த இறுக்க உடை இளம்பெண் அதிகாரி அவரை அணுகி "என்ன ஆச்சு ஸார்?" நாங்க தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்கிறாள். பின்னணியில் மற்றவர்கள் மௌனமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
"எல்லாத்தையும் அப்படியே ஸ்டாப் பண்ண சொல்லிட்டாங்க"
"சரி ஸார்.. ஆனால்..."
"என்னை பாகிஸ்தான் பக்கத்துல பலுசிஸ்தானுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க"
இதற்கு வந்த கமென்ட்ஸில் அமைதிச்சாரல் இதை ஏதோ நிஜமான ஓ டி டி படம் என்று நினைத்து விட்டது சந்தோஷமாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..
============================================================================
ரோஜாவுக்கு நான் எழுதிய கவிதைக்கு பதில் கவிதை ஒரு 20 வயது தம்பி எழுதி இருந்ததைச் சொல்லி இருந்தேன். நான் என் ஸ்டேட்டஸில் வைப்பது போலவே அவனும் அவன்
ஸ்டேட்டஸில் ஒரு படம் போட்டு கவிதை எழுதி பெயரிட்டிருந்தான். அது கீழே..
ஒளியால் ஒழிந்தது இருள்
என்பார் பலர்...
ஒளியே இருளின் எதிர்
என்பார் சிலர்...
ஆனால்
ஒருவருக்கும் புரியவில்லை...
தினம் தினம் இருளின்
அழகைக் காண
உயிர்த்தெழுந்து வருகிறது
ஒளி என்று...
பாவம்...
ஒலி கேட்க இயலாத
ஒளிக்கு தெரியவில்லை...
அவளின் அழகைக்காண,
"ஒளி" என்று பெயர் பெற்ற அவன்
ஒளிந்து இருக்க வேண்டும்
என்று
கீதா அக்கா தளத்தில் திருப்பாவை பாடல் விளக்கம் சொல்லிப் போட்ட பதிவில் அவர் சொன்ன பொருல்கலைப் படித்ததும் மனதில் தொன்றுவதை - அந்தப் பாடலின் பொருளை உள்வாங்கி மாற்றி நானும் கிறுக்கியது கீழே.. இது எந்தப் பாடலுக்கு என்று கேட்காதீர்கள். அது எனக்கு நினைவில்லை!
பட்சிகளும் அழைக்கின்றன பார்
படபடத்துப் பறந்து கூவி அழைத்து
பகலவன் வந்துவிடுவான், பார்ப்பதற்குள்
பல்துலக்கி பலகாரம் செய்யாமல்
படித்துறைக்கு வருவாய் தோழி
பாடிப் பரவசமாய் சேர்ந்து நாம் நீராடி
பலபேர் சொல்லி பரமனைத் துதித்து
பாற்கடல் பள்ளிகொள் பரமனைச்
சரணடைவோம் பாவைகளே
====================================================================================
நாபார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன் விக்ரமன் பற்றி ஜீவி ,
ஒரு தடவை நா.பா.வைப் பார்க்க எக்ஸ்பிரஸ் எஸ்டேட் போயிருந்தேன். அப்போ நா.பா. தினமணிக்கதிர்க்கு ஆசிரியர். நா.பா. ரூமிற்கு வெளியே திருப்பூர் கிருஷ்ணன் அமர்ந்தபடி ஏதோ வேலையாக இருந்தார். அப்பொழுதெல்லாம் நா.பா விற்கு நேரடி உதவியாளர் மாதிரி தி.கி.
என்னைப் பார்த்ததும், "வாங்க, ஜீவி.." என்று சுற்றும் முற்றும் பார்த்தார் நா.பா. நான் கொண்டு போயிருந்த கதைக் கவரை அவரிடம் கொடுத்து, "வேறே ஒண்ணும் இல்லே.. இதைக் கொடுக்கலாம் என்று வந்தேன்.. அப்புறம் உங்களிடம் ஃபோனில் பேசுகிறேன்.." என்று சொல்லி வெகு நாகரிகமாக வெளியே வந்து விட்டேன்.
திருப்பூர் கிருஷ்ணன் ரொம்பவும் சிம்பிளானவர். எப்பொழுதும் கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா, கதர் துண்டு தான். அந்த தோள்த்துண்டு கீழே நழுவி விழுந்து விடாமல் வெகு வேகமாக சைக்கிள் ஓட்டியபடி மாம்பலம் ஆர்ய கவுடர் தெருவில் அவர் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
திருப்பூர் கிருஷ்ணனை நினைக்கும் பொழுதெல்லாம் அது என்னவோ தெரிலே, இதெல்லாம் தான் என் நினைவுக்கு வரும்.
நா.பா.விடம் அவ்வளவு நெருங்கிப் பழகிய திருப்பூர் கிருஷ்ணன்,
சுரதாவிற்கு வித்வத் கர்வத்தைப் பற்றி பாடம் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
தோள் துண்டை அணிந்தபடியே சைக்கிள் பயணமா?
துண்டு நழுவி விடாமல் சைக்கிள் ஓட்டுவதில் திருப்பூர் கிருஷ்ணனுக்கோ அவ்வளவு திறமை இருந்தது..
அமுதசுரபியின் இலக்கிய வட்டச் செய்திகளில் அவ்வப்போது திருப்பூர் கிருஷ்ணனைப் பார்த்ததுண்டு. பிற்காலத்தில் அமுதசுரபியின் ஆசிரியர் இவர் தான் என்று காலம் தெரியப்படுத்தாமல் இருந்தது.
மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமனின் (வேம்பு) இல்லம் இருந்தது.
அமுதசுரபியின் இலக்கிய வட்டச் செய்திகளில் அவ்வப்போது திருப்பூர் கிருஷ்ணனைப் பார்த்ததுண்டு. பிற்காலத்தில் அமுதசுரபியின் ஆசிரியர் இவர் தான் என்று காலம் தெரியப்படுத்தாமல் இருந்தது.
மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமனின் (வேம்பு) இல்லம் இருந்தது.
தேசம் சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் அமுதசுரபி.
ஸ்ரீராம் சிட்ஸால் நடத்தப்படும் பத்திரிகை. ஆரம்ப இதழிலிருந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் அதன் ஆசிரியராய் இருந்தவர் விக்கிரமன். பொன்னியன் செல்வன் முடிந்ததும் அதன் கடைசி அத்தியாயத்தில் கல்கி விட்டுச் சென்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிற விதமாய் நந்திபுரத்து நாயகி நாயகி சரித்திர நாவலை மூன்று பாகங்களாய் எழுதியவர் விக்கிரமன்..மிகச் சிறந்த வரலாற்று கதை ஆசிரியர். இலக்கிய விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்.
சென்னை வெள்ளம் வந்த பொழுது.,, விக்ரமன் மறைந்து பட்ட பாடு நினைக்கவே வருத்தம் மேலிடுகிறது.
விக்கிரமனிற்குப் பிறகு அமுதசுரபியின் ஆசிரியரானவர் திருப்பூர் கிருஷ்ணன்.
===================================================================================================
“பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளீர்கள். அதன் பிறகு நீங்கள் சினிமாவில் எழுதவில்லையே..?”
“அது பாரதிராஜா வளர்ந்து கொண்டிருந்த காலம். தயாரிப்பாளர் ராஜ் கண்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர். எனக்கு தெரிந்த பலர் அதில் இருந்தனர். அப்போது ஒரு படம் வெளியாகிறது என்றால், அதுகுறித்து நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் கொடுப்பார்கள். அந்தப் படத்துக்கு நான் நோட்டீஸ் எழுதிக் கொடுத்தேன். அதை பாரதிராஜா பார்த்துவிட்டு, பாடல் எழுதுவதற்காக என்னை அழைத்தார். பாரதிராஜா திறந்த மனதுடன் இருந்திருக்கக் கூடும். ஆனால், அங்கு நிலைமை வேறு விதமாக இருந்தது. இளையராஜா, அவரின் தம்பி கங்கை அமரன், பாக்கியராஜ் எல்லோரும் இருந்தனர். இரண்டு பாடல்களுக்கான டியூன் போட்டு என்னிடம் கொடுத்தனர்.
முத்துலிங்கத்துக்கும் இரண்டு டியூன் போட்டு கொடுத்தனர். அதற்கு முன்பு கங்கை அமரனுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், இதில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று இளையராஜா மற்றும் பாரதிராஜா கருதியிருக்கலாம். 'ராஜா ரகசியம் தெரிஞ்சாச்சு.. ராணிக்கு சேதியும் வந்தாச்சு..’, ‘மலர்களே நாதஸ்வரம்..’ என்று இரண்டு பாடல்கள் எழுதினேன். இரண்டையும் இளையராஜா இசையமைக்க ஏற்றுக் கொண்டார்.
முத்துலிங்கத்தின் இரண்டு பாடல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அப்போது முத்துலிங்கம், ‘நாங்கள் இதை நம்பிதான் இருக்கிறோம் வெளி ஆள்களை உள்ளே விடாதீர்கள்.’ என்பது போல என்னை சொல்லிக் கொண்டிருந்தார். அதைத் தனிப்பட்ட முறையில் அவர் சொல்லியிருக்கலாம்.
அப்படி இல்லாததால், எனக்கு அது அருவருப்பாக இருந்தது. முத்துலிங்கம் இப்போது எனக்கு நண்பர்தான். அப்போது அப்படி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் பாடல் பதிவு செய்வதை பார்க்கக் காத்திருந்தேன். திடீரென்று வந்த முத்துலிங்கம், ‘உங்களுக்கு இரண்டு பாட்டு கொடுத்தார்கள் தானே. அதில் ஒரு பாட்டுதான் வரும். இன்னொன்று கங்கை அமரனுக்கு கொடுத்து விட்டனர்.’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். ‘என்னடா சினிமா உலகம் இப்படி வாய்ப்பு வரக்கூடாது என்று நினைக்கிறதே.’ என்று யோசித்தேன்.
மலர்களே நாதஸ்வரம் பாடலை மலேசியா வாசுதேவன், ஜானகி பாடினார். ஜானகிக்கு இந்தப் பாடல் பிடித்திருந்தது. அந்தப் பாடலை படம் பிடிக்க செலவு அதிகமாகும் என்பதால், படமாக்கவில்லை என்று கூறினர். பாடல் சூழல் சொல்லும்போது, ‘உங்களுக்கு கதைத் தெரியும். உங்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருப்பார்கள்.’ என்று பாரதிராஜா சொன்னார். ஆனால், ஒருவரும் எனக்கு கதை சொல்லவில்லை. சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்துள்ளனர். அதற்கு முன்பு சினிமாவில் இவ்வளவு போட்டி, பொறாமை இருக்கும் என்று எனக்கு தெரியாது. திரும்பி ஊருக்கு வரும்போது இனிமேல் சினிமாவுக்கு போகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
சென்னை தியாகராஜா அரங்கத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில், நான் தலைமை தாங்கிய அமர்வில் பாரதிராஜா பேசினார். அப்போது ‘அந்தப் பாடல் வராததற்கு நானே காரணம்.’ என்று சபையில் மன்னிப்பு கேட்டார். அவர் இப்போதும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது போல பேசினார். பிறகு இளையராஜா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு என்னை தேர்ந்தெடுக்க சொல்லி நடுவராக போட்டார். அந்தப் பாடல் மறுக்கப்பட்டதால்தான் பிற்காலத்தில் இளையராஜா எனக்கு பிரியமானவராக மாறினார்.”
- சிற்பி பாலசுப்பிரமணியம்
நன்றி: விகடன்
====================================================================================
டாக்டர் நாராயணன் அவர்களின் நிகழ்ச்சிகள் ரொம்ப விரும்பிப் பார்ப்பேன். கீதா ரெங்கணும் பார்ப்பார் என்று தெரியும். ஹம்சத்வனி ராகம் பற்றி அவர் நிகழ்ச்சி...
=========================================================================================
இன்று பகிரப்போகும் பாடல்கள் இரண்டும் ஹம்சத்வனி ராகம். இரண்டும் இளையராஜா இசையில்.
முதலில் கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து 'மலர்களே நாதஸ்வரங்கள்' பாடல். இதற்கான விளக்கம் மேலே திரைச்செய்தியாக கொடுத்திருக்கிறேன். பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
மலேஷியா வாசுதேவன், ஜானகி அம்மா குரல். படத்தில் பாடல் இடம்பெறவில்லை ஆதலால் காட்சி கிடைக்காது.
மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே……….
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பெண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ……ஆஅ…….
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….
குழு : ………………………
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…..
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
====================================================================================
அடுத்த பாடல் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் படத்தில் வரும் இந்தப் பாடல்.
விஜயகாந்த், சுஹாசினி, ரேகா நடிப்பில் மனோபாலா இயக்கத்தில் 1989 ல் வந்த படம். வாலியின் பாடல். ஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடிய பாடல்.
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……
PJ : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்
PJ : மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்
கை தீண்டினால் தான் கல்யாணி பாடும்
சுனந்தா : எழுதாத புது இலக்கியம்
உயிர்க் காதலில் விளையும்
இதழோடு இதழ் இணைந்திட
இசைக் கோலங்கள் வரையும்
PJ : மேளம் முழங்கவும் மாலை வழங்கவும்
வேளை வருகையிலே
சுனந்தா : பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும்
கானக் கருங்குயிலே
PJ : ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில்
ஆனந்தப் பூஜை தொடங்குமோ…..
PJ : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
சுனந்தா : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
PJ : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……
PJ : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
குழு : ……………………
சுனந்தா : கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி
நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி
PJ : நிறுத்தாமல் மலர்க் கணைகளை
விடும் வாலிபம் இதுதான்
அரங்கேற தினம் இரவினில் வரும்
நாடகம் இதுதான்
சுனந்தா : பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம்
மூடிக் கிடக்கட்டுமே
PJ : கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம்
ஆடிக் கிடக்கட்டுமே
சுனந்தா : மூச்சு இருக்கின்ற காலம் வரையினில்
மோகத்தின் வேகம் குறையுமோ….
PJ : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
சுனந்தா : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
PJ : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா……
PJ : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
சுனந்தா : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
==========================================================================================
.jpg)



.jpg)
.jpg)

.jpg)
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குநாபா திருப்பூர் கிருஷ்ணன் விக்ரமன் பற்றிய ஜீவி சார் பகுதி சுவாரசியம்
பதிலளிநீக்குஅதுதான் பகிர்ந்தேன்!. வாங்க நெல்லை..
நீக்குசிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பகுதி, தனக்கு கிரீன் கார்டு, சிடிசன்ஷிப் கிடைத்ததும் இனி வெளிநாட்டு மக்களுக்கு சுலபமாக ஹெச்ஒன் கிரீன் கார்டு சிடிசன்ஷிப் கிடைக்கக்கூடாது என நினைக்கும் முன்னாள் புலம்பெயர்ந்தோர் கூட்டத்தை நினைவுபடுத்தியது
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா.. இப்போது கூட அமெரிக்கா H1B விசா பற்றி ஆலோசனை செய்கிறதாமே....
நீக்குபத்து சிறுகதைகள் படித்துவிட்டு தானும் சிறுகதை ஆசிரியர் ஆகிவிடுவதுபோல பத்து திரில்லர் படங்களை ஓடிடியில் பார்த்துவிட்டு புது திரில்லர் எழுத முயன்றிருக்கிறீர்களே. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஆனால் அது போன வருஷம்! ஆமாம், இது சிறுகதை ஆசிரியர்களை பாராட்டுகிறீர்களா, இல்லை...?
நீக்குஏனென்றால் அதுதானே எனக்கும்!!!
கடைசி வரி பரவசமாய் பரமனைச் சரணடைவோம் என வந்திருந்தால் பல னாவுக்குப் பானா கவிஞராகியிருந்திருக்கலாம்
பதிலளிநீக்குலாம். திருப்பாவை பாசுரம் படித்ததால் பாவையைக் கொண்டு வரும் அவசரம்!!
நீக்குஎனினும் அதுவரை 95 மார்க் வாங்கிட்டேன் என்று எடுத்துக் கொள்ளலாமா??!! (பேராசை!!)
சிலநாட்கள் பகுதி சுருக்கமாக முடிந்துவிட்டதே எனத் தோன்றும் இன்று போல
பதிலளிநீக்குஆ.... தண்ணீர்.. தண்ணீர்... மயக்கம் வருகிறதே எனக்கு!
நீக்குமுகநூலில் வந்தவையின் மறுபதிப்பு பிளாக் மாறிவிட்டதால் வருத்தம். படம் பொருத்தம்.
பதிலளிநீக்குஜோக்குகள் யாரையோ சுட்டுவது போல் தோன்றுகிறது. முக்கியமாக தற்போதைய எதிர் கட்சித் தலைவரை.
கீதா மாமிக்கு கவிதையும் எழுத வரும் என்பது ஆச்சர்யம்.
இருள் கவிதை சிந்திக்க வைத்தாலும் கண்கள் இல்லையேல் இருள் ஒளி என்பவற்றின் defenition எவ்வாறு இருக்கும்?
Jayakumar
வாங்க JKC ஸார்.. எல்லாவற்றையும் முகநூலிலிருந்து இங்கு கொண்டு வருவதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். இது நடனராக இருந்ததது மாதிரி தோன்றியது. எனவேதான்...
நீக்குஜோக்குகள் அப்போது வந்தவை! அதை தேடி, தெரிவு செய்து இங்கு போட நேரமோ, பொறுமையோ இருக்காது! யதேச்சையாக அமைவதுதான்!
// கீதா மாமிக்கு கவிதையும் எழுத வரும் என்பது ஆச்சர்யம். //
நீங்களுமா தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்?!! ஆச்சர்யம். வரிகளுக்கிடையே மறைபொருளாய் வருபவையையே வாசிப்பவராயிற்றே நீங்கள்...
இருள் கவிதைக்கு நல்லதொரு இஸ்ரோ கேள்வி!
நான் எழுதிய திருப்பாவை விளக்கத்தைப் படிச்ச ஸ்ரீராம் எழுதின கவிதை அது. எனக்குக் கவிதை என்ன, பதிவுகளே ஏதோ எழுதுவேன் என்னும் ரகம் தான். இதில் கவிதைக்கெல்லாம் எங்கே போறது?
நீக்கு///அந்த இறுக்க உடை
பதிலளிநீக்குஇளம் பெண் அதிகாரி ///
ஏன் அப்படி?..
அப்படிதானே தொடர்களில் பார்த்திருக்கிறேன்...!!
நீக்குமலர்களே.
பதிலளிநீக்குநாதஸ்வரங்கள்
மங்களத்தேரில்
மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே..
இனிய பாடல்...
இல்லையா பின்னே?
நீக்குபூ முடித்து பொட்டு வைத்த
பதிலளிநீக்குவட்ட நிலா
புன்னகையில்
பாட்டெழுதும் வண்ணப் புறா...
இதுவும் இனிய தேர்வு...
அட, நிஜமாத்தான்ங்கறேன்...!!! :))
நீக்குபிடித்த பாடல்கள்.
ஆசைக் குளத்தினில்
பதிலளிநீக்குநீந்திக் குளிக்கையில்
ஆனந்தப் பூஜை
தொடங்குமோ…
இனிய இசையமைப்பு மட்டும்
இல்லையெனில்!?.....
அதுதான் இளையராஜா இருக்கிறாரே....
நீக்குஇந்த மாதிரிப் பாடல்களை
பதிலளிநீக்குவிட்டுவிட்டு வரமுடியாதா?...
நிச்சயம் என்னால் முடியாது!
நீக்குமுதல் பகுதி கதை - நல்லாருக்கு ஸ்ரீராம்....நிஜமாகவே ஒரு படம் பார்க்கும் ஃபீல். அதாங்க நாம பார்க்கறதுதானே! ஒரே டோன்லதானே எல்லாமே இருக்கு.
பதிலளிநீக்குநானும் இந்த நிகழ்வுக்கு ரெண்டு கதை முயற்சி செய்து அப்படியே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று நீங்க எழுதிய இரண்டாவது போல. இன்வெஸ்டிகேஷன் ஊத்திப்பது போல அதுவும் ....வேண்டாம் இதுக்கு மேல சொல்லலை. ஒரு வேளை நான் முடிச்சாலோ?!!!
கீதா
வாங்க கீதா... இதை இப்போதுதானே புதிதாக படிக்கிறீர்கள்? ஏற்கனவே ஷேர் செய்திருப்பேனோ என்று ஆராய்ந்து ஆராய்ந்து வெளியிட்டேன்!
நீக்குவாசிக்கக் கொடுக்கலை....ஆனா லைட்டாகச் சொன்னீங்க!!! அந்த சீன்ஸ்!
நீக்குகீதா
ஓ...
நீக்குடைட்டாக உடை அணிந்த இளம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா....நிஜமாகவே!!! அப்படித்தான் வருவாங்க. என்னவோ ஆனா பாருங்க உங்களுக்கு ஏ ஐ கொடுத்த படத்துல அப்பெண்ணை நல்லா காமிச்சிருக்கே....நீங்க இந்தக் குறிப்ப ஏ ஐக்குக் கொடுக்கலையோ!!!!!!!!!!!!ஹிஹிஹி
கீதா
கொடுத்தேனே... ஹா ஹா ஹா... ஒரு துப்பறியும் கதை பெரிதாக உதக் வேண்டும் என்று ரொம்ப ஆசை.
நீக்குஎங்கே.. சாதா கதையே வரமாட்டேன் என்கிறது..
ஸ்ரீராம் நான் எழுதி பாதியில் நிற்கின்றன.
நீக்குகீதா
ஓ...
நீக்குஸ்ரீராம், அப்ப வெப் சீரிஸுக்கு ரெடியாகிடுங்க! அதான் சாந்திமாரியப்பனக்கா கேட்டிருக்காங்களே! ப்ரொட்யூசர் யாரையாச்சும் பிடிங்க.
பதிலளிநீக்குஎன்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்க சீன் வைக்க டிஸ்கஷன்...லொக்கேஷன் எல்லாம்....ஆனா போலீஸ் அதிகாரியா நடிக்கறீங்களான்னு மட்டும் கேட்டுறாதீங்க! ஹாஹாஹாஹா....
கீதா
கற்பனையோ.. கைவந்ததோ... சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்.... சுகமோ சுகம்.. சுகமோ சுகம்...
நீக்குதம்பியின் கவிதை அசாத்தியம் ஸ்ரீராம்!!! என்னமா சிந்திக்கிறார்!!
பதிலளிநீக்குஎன் பாராட்டுகளைச் சொல்லிடுங்க!
கீதா
கண்டிப்பாக சொல்கிறேன். முடிந்தால் லிங்க் கொடுத்து வாசிக்கச் செய்கிறேன்!
நீக்குதிருப்பாவைக்கு எதிர் பாடல் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்!
பதிலளிநீக்குகீதா
அப்பாடி.. புரியும்படிதான் எழுதி இருக்கேன்! நன்றி கீதா.
நீக்குநல்லாவே புரிகிறதே, ஸ்ரீராம். அதிலென்ன சந்தேகம்.
நீக்குகீதா
அப்போ சரி.. JKC ஸார் தப்பா புரிஞ்சிண்டிருக்கார்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி அமர்க்களமாக இருக்கிறது. துப்பறியும் போஸீஸ் இலாக்காவை படம் எடுப்பது போல அப்படியே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கான படமும் பொருந்தியிருக்கிறது. அதற்கு முகநூலில் வந்த கருத்துகள் அனைத்தையும் ரசித்தேன். .நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஜீவி அண்ணாவின் பகுதி ரொம்பவே ரசித்தேன். நாபா அவர்கள், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், விக்ரமன் அவர்கள் என்று பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பரிச்சயம் என்பதெல்லாம் தனிக்கலை அது எழுத்தால் வாசிப்பால் இலக்கிய ஆர்வத்தால் ஏற்படும் ஒன்று.
பதிலளிநீக்குஸ்ரீராம் நீங்க கூட திலகவதி அவங்க, இப்ப காலச்சக்கரம் நரசிம்மா அவர்களுடன் எல்லாம் பரிச்சயமாக இருக்கீங்களே! அதற்கு நல்ல வாசிப்பும் இலக்கிய ஆர்வமும், அதைப் பற்றிப் பேசும் திறனும் இருப்பது அவசியம் அது உங்களுக்கும் வசப்பட்டிருக்கிறது ஸ்ரீராம்!
கீதா
அவர்களுக்கு நான் வாசகன். ஆனால் இவர் சக எழுத்தாளர் கீதா...
நீக்குபிரபலங்களுடன் பழகும் பொழுது சில சமயங்களில் நமக்கு ஏமாற்றம் ஏற்படும் கீதா.
நீக்குஆமாம். பானுக்கா. தெரியும். ஆனா அதையும் நாம் மனதில் வைத்துக் கொண்டு ப்ளஸ் மட்டுமே பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்பதும் என் அனுபவங்களில் கற்றது.
நீக்குதிறமை உள்ளவர்களிடம்/ஜீனியஸ் களிடம் பிரத்தியேகமாகத் தெரியும் ஒரு மைனஸ் இருக்கும். பெரும்பாலும்...விதிவிலக்குகள் இருக்கலாம். குறைகளை மனதில் வைத்தால், அப்புறம் அவர்களின் திறமையை ரசிக்கும் மனோபாவம் போய்விடுமே. எனவே ...
கீதா
சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் பகுதி சுவாரசியம். ஆனால் மலர்களே பாடல் இருக்கிறதே. படத்தில் கிடையாதோ?
பதிலளிநீக்குகீதா
படத்தில் வைக்கவில்லை.
நீக்குயெஸ் யெஸ் ஸ்ரீராம், நாராயணன் அவர்களின் காணொளிகளை ரொம்பவே ரசித்துப் பார்ப்பேன். என்ன ஒரு வித்வத் அவருக்கு!
பதிலளிநீக்குநல்ல அழகும் வெல்லும் திறனும் - இடத்தில் அவர் கொடுக்கும் கமகம் சங்கதிகள் பாருங்க....அசாத்தியம்...அவர் ஸ்வரம் போடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும் ..... அவர் ஸ்வரம் பாடினப்ப, ஹம்ஸத்வனி வர்ணம் கற்றதும் பாடியதும் நினைவுக்கு வந்தது. பெருமூச்சுடன்!!!!
கீதா
ஆமாம்.. செமையா படுவார். இளசின் பெருமையை அவர் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும்.
நீக்குஅதே அதே!
நீக்குகீதா
யார் அந்த சார் என்று கதைக்கு தலைப்பு கொடுத்திருக்கலாமோ?
பதிலளிநீக்குசிற்பி பாலசுப்பிரமணியம், ஜீவி. சார் பங்களிப்பு இரண்டுமே சுவாரஸ்யம்.
எல்லாமே அரசியல் ஜோக்குகள், ரசிக்க முடிந்தது.
வாங்க பானு அக்கா.. நன்றி. அது தலைப்பில்லாத கதையாகப் போய்விட்டது.
நீக்குஅருள்புரிவாய் கருணைக்கடலே பாடல் கற்றது எல்லாமே நினைவுக்கு வந்தது. இவருடைய வீடியோக்களைப் பார்க்கறப்ப எனது சில நாட்கள் நினைவுக்கு வரும்.
பதிலளிநீக்குபாலமுரளி அவர்களைப் பற்றிச் சொல்லும் இடமும் அப்பாடல் கேட்டதுண்டு பாலமுரளி பாடி...ஹம்ஸத்வனியின் பரிமாணங்கள் செமையா இருக்கு பாமு அவர்களின் குரலில்..
ஹம்ஸத்வனி ராகத்தை கனமாக அழுத்திப் பாட வேண்டும் ரொம்ப கம்பீரமான ராகம். டாக்டர் நாராயணன் பாடுவதைக் கேட்கும் போது.... //முடியாததை.....//
கடைசியில் மலர்களே பற்றிச் சொல்லும் போது....கச்சேரி ஹம்ஸத்வனி எப்படி சினிமாவில் இவ்வளவு அழகா எல்லாருக்கும் ரீச் ஆவது போல் கொடுத்திருக்கிறார் ராஜா!! நிஜமாகவே ராஜா ராஜா!
கீதா
அதேதான். நான் ரசிக்கும் அதே அளவு நீங்களும் ரசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. அல்லது நீங்கள் ரசிக்கும் அதே அளவு நானும் ரசிக்கிறேன் என்று தெரிகிறது.
நீக்குஹாஹாஹா ...எப்படி வேணுமானாலும் சொல்லிக்கலாம்.
நீக்குகீதா
மலர்களே பாடல் ரொம்பப் பிடித்த பாடல், ஸ்ரீராம். எப்ப கேட்டாலும் ரசிக்க முடியும். அசாத்தியமான பாடல் ரசித்த பாடல் இப்பவும் ரசிக்கும் பாடல்!
பதிலளிநீக்குகீதா
ஆமாம்... ஆமாம்.. ஆமாம்..
நீக்குபாடலுக்கு ஆரம்ப இசை கேட்க என்ன ஒரு சுகம் இல்லையா!!?
பதிலளிநீக்குகீதா
ஆமாம்ம். கண்டிப்பாக...
நீக்கு//அவர் சொன்ன பொருல்கலைப்// இந்த மாதிரி தவறுகளை உங்கள் படைப்பில் பார்க்க முடியாதே? எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்? நெல்லை கண்ணிலும் படாதது ஆச்சர்யம். எனக்குதான் உறுத்துகிறது.
பதிலளிநீக்குஇல்லை பானு அக்கா.. நிறைய தவறுகள் வரும். ஆனால் இது எந்த இடத்தில்..?
நீக்குஇரண்டாவது பாடல் பூ முடித்து பாடல் கேட்டதில்லையே...இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். மனோபாலா இயக்கமா??!!!
பதிலளிநீக்குபாரதிராஜாவின் சிஷ்யனோ? மனோபாலா?
பாட்டு சீன் வைத்திருப்பது அப்படி இருக்கு.
பாட்டு சூப்பர். ஹம்ஸத்வனியின் மற்றொரு பரிமாணம். இடையில் கொஞ்சம் நகர்ந்து சென்று மீண்டும் இணைவதையும் ரசித்தேன்.
கீதா
கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்தான் கீதா. ஜெயச்சந்திரனின் இனிமையான குரல் ப்ளஸ் இளையராஜா.
நீக்குஆமாம் ஜெயசந்திரனின் குரல்...ராஜா காம்போ!! செமை..
நீக்குகீதா
ஜோக்குகள் புன்னகைக்க வைத்தன!
பதிலளிநீக்குகீதா
//நானும் கிறுக்கியது கீழே// சரி சரி கவிதை நீங்களே கிறுக்கியது தான். தப்புதான் பாவம் கீதா மாமி 5 நிமிச சந்தோசம் போயி போச். பாடல் பற்றி காண
பதிலளிநீக்கு//https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=50327// செல்லவும்
Jayakumar
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கவிதைகள் அருமை. ஒளி, ஒலி, ஒழி வைத்து அந்த இளைஞர் (தம்பி) எழுதி வார்த்தைகளினால் நர்த்தனம் ஆடியது நன்றாக உள்ளது அவருக்குப் பாராட்டுக்கள்.
ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்ற பாரதியின் பாடலும் நினைவுக்கு வந்தது.
நீங்கள் தந்த திருப்பாவை பாசுரமும் எளிதில் பொருள் உணரக் கூடியதாக நன்றாக உள்ளது. கோதை நாச்சியாரின் முப்பதுபாசுரங்களுக்கும் இப்படி எழுத முயற்சி செய்யுங்கள். எளிதான உரையில் உங்களுக்கு எளிதாக கைகூடும். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.