அப்புறம் என்ன ஆச்சு?
JKC
ஐந்திலே ஒன்றை வைத்தேன்
ஐந்திலே ஒன்றை பெற்றேன்
அதாவது ஐந்தில் ஒன்றாகிய தீயை pant பாக்கெட்டில் வைத்து விட்டேன்.
ஐந்து வருடங்களில் ஒரு ப்ரோமோஷனையும் பெற்றேன். இவ்வாறு
கூறிவிட்டு அடுத்த ப்ரோமோசனும் எத்தனையோ தடங்கலுக்குப் பின் தான்
கிடைத்தது என்று கூறியிருந்தேன்.
ஒன்றா இரண்டா, மூன்று தடங்கல், ஆனாலும் இருந்த கிரேடில் 8 வருடங்கள் முடிந்த பின் ப்ரோமோஷன் கிடைத்தது.
இருந்த கிரேடில் 5 வருடம் பூர்த்தியாகி விட்டது. அடுத்த ப்ரோமோஷனுக்கு
தகுதி என்ற அடிப்படை நிலையை அடைந்தேன். CR, peer review ஓகே. Eligible
for dpc இண்டெர்வியு. .
சென்ற இண்டெர்வியுக்களைப் போல் அல்லாது தற்போதைய இன்டெர்வியு பல மாற்றங்கள் கொண்டது. இது வரை என்னுடைய இன்டெர்வியூக்கள் எல்லாம் அந்த அந்த சென்டர் அளவில் நடைபெற்றன. தற்போது போகப்போகும் இன்டெர்வியூ அகில இந்திய அளவில் பெங்களூரில் நடைபெறும் ஒன்று. Isro வின் எல்லா சென்டர்களில் இருந்தும் தகுதியானவர்கள் பெங்களூரில் நடைபெறும் இன்டெர்வியூக்கு அழைக்கப் படுவார்கள். DPC (departmntal promotion committee) பெரிது, சுமார் 16 பேர் இருப்பார்கள்., மேலும் ஒவ்வொரு கேண்டிடேட்க்கு ஏற்ப டெக்னிகல் எக்ஸ்பெர்ட்ஸ் 2 பேர் மாறுவார்கள். அவர்கள் சாதாரணமாக IIT ப்ரோபஸர்களாக இருப்பார்கள். இன்டெர்வியூ முக்கால் மணி நேரம் நடைபெறும்.
5 வருட தகுதியின் அடிப்படையில் நடைபெற்ற முதல் இன்டெர்வியுவில்
முதல் தோல்வி அடைந்தேன். தோல்வியே வெற்றிப் பாதையின் முதற்படி
என்று கருதி, அடுத்த வருடம் அதாவது 6 வருட முடிவில் மீண்டும்
பெங்களூரில் இன்டெர்வியுக்கு சென்றேன். மீண்டும் தோல்வி, இரண்டாவது தோல்வி.
IIT ப்ரொபசர்களுக்கு IIT யில் படிக்காதவர்கள் மடையர்கள் என்று ஒரு
அபிப்பிராயம், theory யில் மட்டம் தட்டி விடுவார்கள். சரி இனி
அவ்வளவுதான் என்று இருந்த நிலையில் 8 வருட முடிவில் மீண்டும்
இன்டெர்வியூக்கு விளிக்கப்பட்டேன். வருடம் 1993.
மூன்றாவது தடவையாக அழைக்கும் இன்டெர்வியூ கால் லெட்டர்
இன்டெர்வியூ தேதிக்கு ஒரு வாரம் முன் தான் கிடைத்தது.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மட்டுமே
உண்டு. 1993 இல் ஆன்லைன், IRCTC என்பவை கிடையாது. ரயில்வே
ஸ்டேஷனுக்கு சென்று ரிசர்வ் செய்யவேண்டும். அதில் டிக்கெட்
கிடைக்கவில்லை. முதல் தடங்கல்.
சரி மதுரை சென்று மைசூர் எஸ்பிரஸில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு செல்ல முடியுமா என்று பார்த்தேன். இடம் இருந்தது. அதில் டிக்கெட் ரிசர்வ் செய்தேன்.
காலை திருவனந்தபுரத்தில் புறப்பட்டு திருவள்ளுவர் போக்குவரத்து பஸ்சில் மதுரை சென்று மதுரையில் இரவு பெங்களூர் ட்ரெயினை பிடித்து பெங்களூர் சென்று அடுத்தநாள் இண்டெர்வியு அட்டென்ட் செய்வதாக திட்டம்.
அதன்படி காலை மதுரைக்கு திருவள்ளுவர் பஸ்ஸில் ஏறிவிட்டேன். பஸ்
மதியம் உணவுக்குப் பின் விருதுநகர் பக்கமோ, கோவில்பட்டி பக்கமோ
பழுதாகி நின்று விட்டது. Axle leaf spring உடைந்து விட்டது. இரண்டாம்
தடங்கல்.
அப்புறம் என்ன ஆச்சு?
Spare பஸ் வரவேண்டும். அதுவரை வழியில் காத்திருக்க வேண்டும்.
திருவள்ளுவர் பஸ் ஆனதால் கட்டபொம்மன், நேசமணி பஸ் காரர்கள் ஏற்ற மாட்டார்கள். திருவள்ளுவர் பஸ்கள் வந்தாலும் நிறுத்த மாட்டார்கள். சீட் இல்லை என்று சொல்வார்கள்.
நடத்துனரிடம் ரயில் டிக்கெட்டைக் காட்டி செல்ல வேண்டிய அவசியத்தை
சொன்னேன். அவர் பெரிய மனது பண்ணி என்னை மட்டும் எப்படியோ ஒரு திருவள்ளுவர் பஸ்ஸில் ஏற்றி விட்டார்.
அப்படி மதுரை வந்தது சேர்ந்தபோது இரவாகி விட்டது. மதுரை பெரியார்
பேருந்து நிலையத்தில் இறங்கி ஜங்சனுக்கு ஓடி ட்ரெயினை பிடித்து விட்டேன்.
அப்பாடா என்று இருந்தது.
நல்ல சோர்வுடன் பெர்த்தில் ஏறி படுத்து தூங்கிவிட்டேன். சுமார் 4 மணிக்கு
விழிப்பு வந்தது. ட்ரெயின் ஈரோடு ஸ்டேஷனில் ரொம்ப நேரமாக நின்று
கொண்டிருந்தது. அப்போது தான் மற்றவர்கள் சொன்னார்கள் ‘ட்ரெயின் இனி போகாது, எல்லோரும் இறங்க வேண்டியது தான்.
காரணம் இதற்கு முன் போன ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு வேகன்கள்
இரண்டாவது ட்ராக்கில் விழுந்து விட்டன. அந்த ட்ராக்கில் வந்து
கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் வேகன்கள் மீது மோதி மீண்டும் ஒரு தடம் தவறுதல். ஆக இரன்டு ட்ராக்கிலும் தடங்கல். பெரிய விபத்து. தற்போதைக்கு சரியாகாது.
எல்லோரும் டிக்கெட்டை கவுண்டரில் கொடுத்து மீதி கட்டணத்தை
பெற்றுக்கொள்ளலாம் அல்லது TTE க்களிடம் TDR வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ட்ரெயியினை விட்டு இறங்கினேன். எப்படியும் பெங்களுர் போகவேண்டும். டிக்கெட் காப்பி ஆபீசில் காட்ட வேண்டும். டிக்கெட்டை கான்சல் செய்ய முடியாது. TDR வாங்கிகொண்டால் கான்செல் செய்ய காரணங்கள் என்ன என்பது ரசீதில் இருக்கும். பின்னர் டிக்கெட்டைக் கொடுத்து பாக்கி தொகையை வாங்கிக்கொள்ளலாம்.
சரி என்று டிக்கெட்டை காட்டி TDR வாங்கி கொண்டேன். இனி பஸ் பிடித்து
செல்ல வேண்டும். மூன்றாவது தடங்கல்.
அப்புறம்………ஹூம் ….போர் அடிக்கிறதா? கதை மெகா சீரியல் மாதிரி
போகிறதா? பொறுமை பொறுமை.
ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து பஸ் ஸ்டான்ட் போக ஆட்டோ கேட்டேன்.
வந்தார்கள். ஆனால் ரேட் டபுள். மேலும் இரண்டு பேர் கூடுதலாக ஷேர்
ஆட்டோ போல் ஏற்றிக்கொள்வார்கள் அவர்களிடமும் டபுள் வாங்குவார்கள்.
வேறு வழி இல்லாததால் கேட்ட காசை கொடுத்து விட்டு சேலம் பஸ்ஸில்
இடம் பிடித்தேன். அப்போதே விடிந்து விட்டது.
சேலம் வந்து பெங்களூரு பஸ்ஸில் இடம் கிடைத்து ஏறி விட்டேன். பசி,
காபி குடிக்கவில்லை. சோர்வு. பஸ் தோப்பூரில் டிபனுக்கு நின்றது. நின்ற
ஹோட்டல் பாடாவதி. ஆனால் ரேட் மட்டும் கூடுதல். கடனே என்று வந்த
விரக்திகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தபோது மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்டெர்வியூ அடுத்த நாள் தான், ISAC இல்..
இந்த இன்டெர்வியூவுக்கு ஒரு பொதுவான ரூல். இன்டெர்வியூவுக்கு
வந்தவர்கள் எல்லோரும் காலை 8 மணிக்கு ஆஜர் ஆகவேண்டும். வருகை
பதிவு செய்தபின் அன்று வரும் expert கள் எத்தனை மணிக்கு வருவார்கள்
என்ற விவரம் அறிந்து அதன்படி அன்றைய இன்டர்வியு வரிசை
தீர்மானிக்கப்படும். அப்படி தீர்மானித்த வரிசை எண்ணை சொல்வார்கள்.
அதன்படி உத்தேசமாக இத்தனை மணிக்கு இன்டெர்வியூ நடக்கும்
என்பதையும் தெரிவிப்பார்கள். அதன்படி எனக்கு பிற்பகல் 5 மணிக்கு என்று கூறினார்கள். லேட் ஆகிவிட்டால் அடுத்த நாளும் வரவேண்டி வரும்.
எப்படியோ 4 மணி வரை வெளியில் சுற்றித்திரிந்து ஒரு பாக்கெட்
சிகெரெட்டையும் தீர்த்து 4 மணிக்கு வந்து பார்த்தேன்.
என் முறை வர 5:30 மணி ஆனது.
கூப்பிட்டார்கள். முதலில் அறிமுகம். சென்ற 8 வருடங்களில் நிறைவேற்றிய
முக்கியமான பணிகளை கூறினேன். பிரத்தியேகமாக நான்காம் சம்பள
கமிஷன் (1986) பரிந்துரைகள் பிரகாரம் ஊழியர்களின் சம்பள நிர்ணயம்,
மற்றும் அரியர்ஸ் கணக்கிட்டு பிடிக்கவேண்டிய income tax, மற்றும் PF
ஆகியவற்றை பிடித்து பாக்கி பேமண்ட், என்று இரவு பகலாக உழைத்தது,
அதே போல் IBM 360/44 கம்ப்யூட்டரில் இருந்து CDC cyber 170/730
கம்ப்யூட்டருக்கு ப்ரோக்ராம்கள், மற்றும் Data ஆகியவற்றை கொண்டு சென்று ஒரு seamless porting செய்தது என்று செய்த முக்கிய வேலைகளைக்
கூறினேன்.
இன்டெர்வியூ கேள்விகள் ஆரம்பமாயின. Theory கேள்விகளுக்கு முன்னர்
மற்ற சென்டர் டைரக்டர் ஒருவர் செய்த வேலைகள் எப்படி ப்ராக்டிகலாக
செய்தேன் என்பது பற்றி விளக்கமாக கேள்விகள் கேட்டார், அது நான் செய்த வேலை என்பதால் தடங்கல் இன்றி பதில்கள் கூற முடிந்தது. இன்டெர்வியூ முடிந்தது.
ரிசல்ட் பற்றி கவலை இல்லாமல் திருவனந்தபுரம் திரும்பினேன்.
8வருடம் காத்திருந்த ப்ரோமோஷன் சரியானது.
ஊசிக்குறிப்பு.
TDR கொண்டு போய் ரயில்வே ஸ்டேஷனில் கொடுத்தது, அவர்கள் அதை
பாலக்காடு டிவிஷன் ஆபீசுக்கு அனுப்பியது, பாலக்காடு டிவிசன் டிக்கெட்
திருவனந்தபுரத்தில் வாங்கியதால் திருவனந்தபுரம் தான் டீல் செய்யணும்
என்று திருவனந்தபுரம் டிவிஷன் ஆபீசுக்கு அனுப்பியது, அவர்கள் பாஸ்
செய்து ரீஃபண்ட் வவுச்சர் அனுப்பியது, அதை கூண்டுக்குள் இருக்கும்
ஸ்டேஷன் கேஷியரிடம் கொடுத்து பணம் வாங்கியது, என்று ஏகப்பட்ட
அலைதலுக்குப் பின் கிடைத்த தொகை 50 ரூபாய் என்பது தனிக்கதை.
இந்த ப்ரோமோஷனுக்கு அடுத்த ப்ரோமோஷன் 15 வருடங்களுக்குப் பின்
grade last basic stagnation இல் 5 வருடம் இருந்தபின், 5 இன்டெர்வியூக்களுக்குப்பின் போனால் போகிறது என்று retirement க்கு 6 மாதம் முன்பு கிடைத்தது தனி கதை, அதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் முக்கிய காரணம் என்னுடைய நக்கீரத்தன்மை.
========================================================================================
இந்த வார AI பதில் :
"சோழியன் குடுமி சும்மா ஆடுமா?" என்ற பழமொழியின் சரியான வடிவம் "சோழியன் குடுமி சும்மாடு ஆகாது" என்பதாகும், இதன் பொருள் சோழ நாட்டில் உள்ள சோழியர் சமூகத்தினர் வைத்திருக்கும் குடுமியை சுமை தூக்கும் "சும்மாடு" ஆகப் பயன்படுத்த முடியாது என்பதாகும்; இது ஒருவரின் இயல்பு மாறாது என்பதையும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதன் இயல்புக்கு மாறாகப் பயன்படுத்த முடியாது என்பதையும் உணர்த்துகிறது.
விளக்கம்:
- சோழியன்: சோழர் காலத்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
- குடுமி: தலையில் முடியைக் கட்டி வைக்கும் ஒரு வகை அமைப்பு. சோழியர்கள் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.
- சும்மாடு: பெண்கள் தலையில் கனமான பொருட்களைச் சுமக்கும்போது, தலையில் துணியை உருட்டி வைத்து அதன்மேல் சுமையைத் தாங்குவார்கள்; அதுவே சும்மாடு.
பொருள்:
- சோழியர்கள் வைத்திருக்கும் குடுமி, பாரத்தைச் சுமக்கும் சும்மாடு போல மென்மையாகவோ, உறுதியற்றதாகவோ இருக்காது.
- அதன் வடிவம், அமைப்பு மற்றும் இயல்பு வேறுபடும். எனவே, குடுமியை சும்மாடாகப் பயன்படுத்த முடியாது.
பழமொழியின் உட்பொருள்:
- ஒரு பொருளின் இயல்பை மாற்ற முடியாது (A thing cannot be used for a purpose it's not meant for).
- ஒருவரது இயல்பையும், குணத்தையும் மாற்ற முடியாது (A person's nature cannot be changed).
================================================================================================
இந்த புத்தக விற்பனைச் சந்தையில் காலச்சக்கரம் நரசிம்மாவின் நவகண்ட நாயகி வாங்கினேன். வானதி பதிப்பகம். நேற்றுதான் படித்து முடித்தேன். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி விட்டு இவ்வளவு எழுத்துப் பிழைகளா என்று வருத்தம் தருகிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்களிடமும் இது குறித்துச் சொன்னேன். திறமையான ஆட்கள் குறைந்து போயினரா? சம்பளம் அதிகம் என்று விட்டு விட்டார்களா? வானதி பதிப்பகத்திலிருந்து இப்படி ஒரு கவனக்குறைவை நான் எதிர்பார்க்கவில்லை. சரி, போகட்டும். அந்தப் புத்தகத்திலிருந்து..
நவகண்ட நாயகி கதைக்களம் :
பழையாறையில் பதினாறு பிரிவுகளில் நான்கு படை ஊர்கள் உண்டு. புதுப்படையூர், ஆரியப்படையூர், பம்பப்படையூர், மணப்படையூர் - என்கிற நாலு பகுதிகளில்தான் போர்த்தளபதிகள், படைவீரர்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரான வேளக்கார படையினர் வசித்தார்கள்.
குறிப்பாக, ஆரியப்படையூர் மற்றும் பம்பப்படையூர் தான் இந்த படையூர்களில் முக்கியமானவை. இங்கேதான். அரிகண்ட மற்றும் நவகண்ட நாயகர்கள் வசித்தனர்.
அரிகண்டம் என்கிற மன்னரின் பாதுகாவலர்கள், அவன் மரணித்தபோது, தங்களது தலையை வெட்டிக்கொண்டார்கள். தங்களது தலையை வெட்டி, உயிர் தியாகம் செய்து கொண்டவர்கள் வசித்ததால் அந்த பகுதி அரியப்படையூர் என்று இருந்து, பின்னர் ஆரியபடையூர் என்று மாறி இருக்கலாம்.
பம்பை இசைத்து ஒன்பது அங்கங்களை வெட்டி கொண்ட நவகண்ட நாயகர்கள் வசித்த ஊர் பம்பப்படையூர்.
இந்த புதினத்தில் இன்னொரு புதுமையையும் சேர்த்திருக்கிறேன். அதாவது மன்னர்களின், அரசுகளின் அரண்மனை வேலம் பற்றி எழுதி உள்ளேன். வேலம் என்றால் Secretariat என்று சொல்லலாம். ஒரு வேலத்தில் பல ஊழியர்கள் இருப்பார்கள்.
மன்னருக்கு ஒரு வேலம், பட்டத்து அரசிக்கு ஒரு வேலம், அந்தப்புரத்திற்கு ஒரு வேலம், பட்டத்து இளவரசனுக்கு ஒரு வேலம், அரண்மனை அடுக்களைக்கு ஒரு வேலம், கஜானாவுக்கு ஒரு வேலம், வஸ்திர கொட்டடிக்கு ஒரு வேலம், அயல் நாட்டு விருந்தாளிகளுக்கு ஓர் வேலம் என்று ஒரு அரண்மனையில் ஒரு டஜன் வேலங்கள், இருக்கும்.
மன்னர் பராந்தக வேலம், பட்டத்து அரசி கோக்கிழானடி வேலம் கண்டராதித்த வேலம் என்று தனித்தனியாக வேலம், அவரவர் பெயர்களில் அழைக்கப்படும். இந்த வேலத்தில் கணக்காளர்கள், கஜானா ஆபரண அதிகாரிகள், வஸ்திர கொட்டடி அதிகாரிகள், தாதிகளை மேற்பார்வையிடும் பெண் அதிகாரிகள், உணவு அதிகாரி, புறப்பாடு மற்றும் பயண அதிகாரி, பாட்டு மற்றும் இசை கருவிகளை இசைக்கும் பெண்கள், நடனமணிகள், புலவர்கள், விகடகவிகள் என்று பலரும் இருப்பார்கள்.
நவகண்ட நாயகியின் கதைக்களம் என்ன? மன்னர்களின் நவகண்ட மற்றும் அரிகண்ட நாயகர்களுக்கு பெண் வாடை கூடாது. அவர்கள் மன்னருக்காக தங்கள் உயிரை பணயம் வைப்பதால், குடும்பங்களை ஏற்படுத்தி கொள்வதில்லை. அந்தத் நவகண்ட நாயகர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பிரதான கரு. மன்னர்களை காப்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் துறக்கிறார்கள்! சுகங்களை இழக்கிறார்கள்!
அரிகண்ட, நவகண்ட நாயகர்கள் இடையே நிலவும் அரசியல் பகை, அவர்களிடையே சிக்கிஅல்லாடும் அரச குடும்பம் என்று ஒரு முக்கோண அரசியல் போட்டியை தான் கதை விவரிக்கிறது. மன்னருக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்து விட்டதால், அதற்கு பலனாக அரசியலையே ஆட்டி வைக்க நினைக்கும் நவகண்ட நாயகர்கள், அவர்களை எதிர்க்கும் அரிகண்ட நாயகர்கள். மன்னரின் குடும்பத்தில் நவகண்டர்களுக்கு ஆதரவாக சிலரும், அரிகண்டத்துக்கு ஆதரவாக சிலரும் என்று பிரிய, இதன் நடுவே பழுவேட்டரையர்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்க, சோழத்தில் நடைபெறும் உச்சகட்ட அரசியலும், பரபரப்பு சம்பவங்களும் தான் கதைக்களம்.
=======================================================================================
கண்ணதாசன் - வாலி பற்றி ஒரு செய்தி - பேஸ்புக் திரு R கதசாமி பகிர்ந்ததிலிருந்து...
கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக் கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ’’யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. அந்தப் பாட்டுக்காக, உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. இன்னும் நிறைய எழுது’ என்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இவற்றையெல்லாம் ஒளிவோ மறைவோ இல்லாமல் வாலியே மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
சிவாஜிக்கும் ஏராளமாகவும் தாராளமாகவும் எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் எழுதினார். ‘தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை / கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை / அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டான் / அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு, கண்ணதாசனை சந்திக்கும்போது, ‘உங்க பாட்டு ரொம்ப நல்லாருந்துச்சு’ என்று பலர் சொல்லி, “யோவ், இது நான் எழுதலைய்யா. வாலி எழுதினான். அவனைக் கூப்பிட்டு பாராட்டுங்கய்யா” என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். அந்தப் பாட்டுக்கு மட்டுமல்ல, பல பாடல்களுக்கு அப்படி அவர் சொன்னதுண்டு!
எம்ஜிஆருடன் தொடர்ந்து நடித்து வந்த ஜெயலலிதா, சிவாஜியுடன் முதன்முதலாக நடித்த படம் ‘கலாட்டா கல்யாணம்’. ‘’யோவ் வாலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் முதல்ல நம்ம கூட நடிக்குது. நல்லா பிரமாதமான வரிகளைப் போட்டு எழுது’ என்று சிவாஜி சொல்ல, உடனே வாலி ‘வந்த இடம் நீ நல்ல இடம் / வர வேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதினார்.
’சர்வர் சுந்தரம்’ படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களும் கண்ணதாசன். திடீரென வாலியை அழைத்து ஒரேயொரு பாட்டு கொடுக்கப்பட்டது. வந்தார். டியூனைக் கேட்டார். கையோடு எழுதிக் கொடுத்தார். ’அவளுக்கென்ன அழகிய முகம் / அவனுக்கென்ன இளகிய மனம் / நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன / உறவுகள் தரும் உறவுக்கென்ன / உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’ என்கிற இந்தப் பாடல் இன்றைக்கும் ஹிட் வரிசையில் தனியிடம் பிடித்திருக்கிறது.
நன்றி: காமதேனு
கண்ணதாசன் மறைவுக்கு அவர் நினைவுநாள் கூட்டத்தில் திரையுலகில் பலர் அழ, மனோரமா அழ, வாலியும் அழ....
மனோரமா ஆச்சியின் அழுகைக்கு பதில் அழுகைதான் வாலியின் அழுகை!
ஒரு புத்தகத் திருவிழாவில் திரு ஞானசம்பந்தம் பேசிய சுவையான ஒரு பேச்சிலிருந்து... உண்மையில் இந்தக் குழப்பம் திரையுலகிலேயே கூட நிறைய பேர்களுக்கு இருப்பது மட்டுமல்லாமல், கண்ணதாசனுக்கே கூட ஒருமுறை தான் எப்போது இப்படி ஒரு பாட்டு எழுதினோம் என்று கேள்வி வந்ததாம்!
=========================================================================================
நன்றி தினமணி "இந்த வார கலாரசிகன்" (31/1/2016). நன்றி வைத்தியநாதன் ஸார்.
நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தவறாமல் வந்துவிடுவார் அவர். வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.
தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.
பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற மனவருத்தத்துடன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தேன். இங்கே அலுவலகத்திற்கு வந்து, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.
எழுத்தாளர் கர்ணன், ஹேமலதா பாலசுப்பிரமணியம் எழுதிய "இவனும் அவனும்' என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். கூடவே அவர் உடல்நலம் குன்றியிருப்பது பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருந்தார்.
வழக்கம் போல தன் மனைவி ஹேமலதாவிற்கு அர்ப்பணித்திருந்த அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கர்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்தால் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குகிறது. இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.
அடுத்த முறை மதுரை செல்லும்போது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.
===========================================================================================
சென்ற வாரத்தில் ஒருநாள் வீட்டில் அரைத்த மாவு தீர்ந்து விட்டிருக்க, பாஸுடன் அவருக்காக பிஸியோதெரபிக்கு சென்று அப்படியே அருகில் இருந்த ஓட்டலில் இதை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். ஐந்து தோசைகளுக்கும் பெரிய வித்தியாசம் காட்ட முடியாமல் செய்திருந்தார்கள். பொடி, தக்காளி, ஆனியன், தக்காளி பூண்டு இன்னும் ஏதோ ஒன்று என்று கொடுத்திருந்தார்கள். சர்வரிடம் அதைக் காட்டி என்னென்ன தோசை என்றால் அவருக்கே சொல்லத் தெரியவில்லை. உள்ளே பார்த்தும் சொல்ல முடியாத அளவில் இருந்தது உள்ளே வைத்திருந்த ஸ்டஃப். ஆனால் தோசை நன்றாக இருந்தது. கிளம்பும்போது இந்த தோசை பற்றி ஹோட்டல் மேனேஜரிடமும், சர்வரிடமும் சொல்லி சமையல்காரருக்கு தோசை டிப்ஸ் கொடுத்து வந்தேன்!
=================================================================================
ஸி ஐ டி சந்துரு கதையில் தேவன் ஒரு இயல்பான உரையாடலைக் கோட்னு வருகிறார். ரொம்ப கேள்வி கேட்டால் கடுப்படிக்கும் அதிகாரி. சமாளிக்கும் அடுத்த நிலை அதிகாரி. உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு அதிகாரி சரளா சமாளித்த விவரத்தை சிலாகிக்கிறார்.
ஒரு விஷயத்தை துப்பறிய சொல்லி சிறிய அறிமுகம் சிஐடி சந்துரு சொன்னவுடன் சரளா சொல்கிறார் "இந்த விபரங்களை எனக்கு போதும் மிஸ்டர் சந்துரு அந்த பெண்மணி யார் அவளுக்கு என்ன விதமான ஆபத்து நான் செய்ய வேண்டியது என்ன இதையெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?"
கோபாலன் சிரித்தார் மிஸ் சரளா! நீங்கள் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து என் மனைவி லட்சுமி இடம் பேச வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அவளுக்கு நான் எத்தனை விவரங்கள் சொன்னாலும் போதாது என்கிறாள். உங்களுடன் கொஞ்சமாக பழகினால் புத்தி வரும் என்று நினைக்கிறேன்" என்றார்.
"என்னை பரிகாசம் செய்கிறீர்கள் இன்ஸ்பெக்டர்! சந்துருவிடம் விஷயம் வருவிக்க வேண்டுமானால் இப்படித்தான் பேச வேண்டும். ஏதேனும் நானாக மேலும் கேட்டால் அவருக்கு கோபம் வரும். 'எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு அங்கே போய் என்ன புரட்டுகிறது' என்று எரிந்து விழுவார். 'போதும்' என்றால்தான் மளமளவென்று பேசுவார்"
"உங்களுக்குள் இருக்கிற சந்தேகம் சங்கேதம் எனக்கு ஒன்றுமே புரிகிறது இல்லை. எங்கே சந்துரு... எனக்கு அவசர கேஸ் இருக்கிறது. நான் போக வேண்டும். மிஸ் சரளாவிடம் விவரங்களைச் சொல். நானும் கேட்கிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர் கோபாலன்
================================================================================





இன்றைய பல்சுவைப் பதிவு சூப்பர்
பதிலளிநீக்குவாங்க நெல்லை. நன்றி. பெங்களூரு திரும்பியாச்சா?
நீக்குஇன்று மாலை 6 1/2க்கு இரயில் பெங்களூருக்கு. இப்போ நந்திபுர விண்ணகரம், தேரழுந்தூர் போன்ற பல தலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்
நீக்குநந்திபுர விண்ணகரம் எங்கே இருக்கிறது? எதன் அருகில்? தேரழுந்தூர் சகோதரிகள் என்று ஒரு இரட்டையர் கர்னாடக சங்கீத பாடல்கள் பாடுபவர்கள் உண்டு. சீனுவை காண்டாக்ட் செய்தீர்களா?
நீக்குஆபீசில் எத்தனையோ பிடிக்காதவர்களைச் சம்பாதித்திருப்போம். ஆனால் நமக்கு ப்ரமோஷன் இன்க்ரிமென்ட் தரப்போகிறவர்களிடம் எப்போதும் சூப்பர் பெயர் எடுத்துவிடவேண்டும். அவர்கள் செய்வதில் குறைகள் சொல்லக்கூடாது பாராட்டவே செய்யணும். குறை கண்டுபிடிப்பதால் பிரயோசனம் இல்லை
பதிலளிநீக்குமுதல் பாயிண்ட் எங்கும் பொருந்தும். ஆனால் மற்றவை அரசு அலுவலகங்களில் செல்லாது. தனிப்பட்ட ஒரு அதிகாரியிடம் பெயர் வாங்கினால்தான் இன்க்ரிமெண்ட் கதை அங்கு கிடையாது! அது ருடீன்.
நீக்குஉண்மையிலேயே ஒவ்வொருவரிடமும் ஏகப்பட்ட குறைகள் உண்டு அதிலும் நம்மிடம் அனேகம். இது புரிந்துவிட்டால் போதும் ஆபீஸ் வாழ்க்கை இனிமையாகிவிடும்
பதிலளிநீக்கு'சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா..' என்று கண்ணதாசன் பாடி இருக்கிறார்.
நீக்குசோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது தான் நான் அறிந்த ஒன்று. சோழியன் தலை ஆட்டினால் முன்குடுமி ஆடும் என்றும் அப்படி தலை ஆட்டினால் சோழியனுக்கு அதனால் எதோ லாபம் உண்டு என்பதும் தான் இதன் அர்த்தம்.
பதிலளிநீக்குசோழியன் குடுமி மட்டுமல்ல, எந்தக் குடுமியும் சும்மாடு ஆகாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஹோட்டல் பிருந்தாவன் எந்த ஊர் பிருந்தாவன்? கடலூரில் ஒரு பிருந்தாவன் ஹோட்டல் உண்டு. கல்லூரிப் பருவத்தில் அங்கு பொங்கல் வடை சாப்பிட்டிருக்கிறேன். NCC parade முடிந்ததும் டிபன் கிடைக்கும். அதற்க்கு அவர்கள் தாம் காண்ட்ரேக்ட்.
தோசைகள் நன்றாக உள்ளன.
பதிவின் line and paragraph alignment தாறுமாறாக உள்ளது. கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Jayakumar
வாங்க JKCSir .. இந்த பிருந்தாவன் சென்னை பிருந்தாவன்! பெரிய ஹோட்டலும் அல்ல, அதற்காக சிறிய ஹோட்டலும் அல்ல!
நீக்குஎனவே இதன் மூலம் நீங்கள் NCC யில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!!
பாரா அலைன்மெண்ட் இப்போது சரி செய்திருக்கிறேன்.. பார்த்துச் சொல்லுங்கள்.
இரண்டு யுத்தங்களுக்கு பின் (1962 சீன, 1965 பாக்) கல்லூரி மாணவர்கள் எல்லோரும் cumpulsory ஆக NCC யில் சேரவேண்டும் என்ற சட்டம் இருந்தது. 3 கேம்ப் (விழுப்புரம், சிதம்பரம், MRC வெல்லிங்டன்) சென்றிருக்கிறேன். B செர்டிபிகேட் first class இல் பாஸ் செய்திருக்கிறேன்.
நீக்குJayakumar
நல்லவேளை.. எங்கள் காலத்தில் ஆப்ஷனல்தான். ஆனால் அது நல்லவேளையா, துரதிருஷ்டமா தெரியவில்லை. Fit ஆக இருந்திருக்கலாம், பாருங்கள்!
நீக்குஎனக்கு என் ஸ்கௌட் மாஸ்டர் பொன்னுதுரையும் அவர் பாடும் பாடலும் நினைவுக்கு வந்து விட்டது..
முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை தினம் தின்ற எலியை கொன்று தின்ற பூனையை துரத்திட்ட நாயிடம்......
வெள்ளிச் சிதறல்கள் - சிறப்பு. கண்ணதாசன் - வாலி - குறித்த குறிப்புகள் - நன்று. அனைத்து பகுதிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஐந்து வித தோசை - விதம் விதமாக தோசை செய்கிறேன் பேர்வழி என படுத்துகிறார்கள் பல உணவகங்களில்... தில்லியில் சாக்லேட் தோசை, ஐஸ்க்ரீம் தோசை என்றெல்லாம் தருகிறார்கள்! ஒரு முறை சாக்லேட் தோசை சுவைத்தேன் - சகிக்கவில்லை!
வாங்க வெங்கட்... சாக்லேட் தோசையா... ஹையே.. ஆனால் தேங்காய்த் துருவல் போட்டு லேசாக சர்க்கரை தூவி செய்வேன் நான். அது அமோக வரவேற்பைப் பெற்ற தோசை வகை எங்கள் வீட்டில்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குகந்தா சரணம். வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குalignment அப்புறம் என்ன ஆச்சு இல் சரியாகவில்லை.
பதிலளிநீக்குஅப்பாவின் கதை தொகுப்பில் இருந்து ஒன்றிரண்டு கதைகள் இங்கும் பதிக்கலாம்.
Jayakumar
இப்போது மறுபடியும் உங்கள் பகுதி மட்டும் சரி செய்திருக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.
நீக்குஅப்பாவின் கதைகளை இங்கு பகிரும் எண்ணம் ஆல்ரெடி உண்டு!!
வெள்ளியின் கதம்பம் - சிறப்பு.
பதிலளிநீக்குகவியரசர் - வாலி பற்றிய குறிப்புகள் - ஆகா!..
ஆஹா செல்வாண்ணா.. சந்தோஷமாயிருக்கிறது. நன்றி.
நீக்குகாலையில் சுருள் தோசைகள் அடடா!..
பதிலளிநீக்குசட்னி வகைகளும் வைத்திருக்கிறேன் பாருங்கள்...!!
நீக்குசட்னி வகைகளை சொல்வதற்கு
பதிலளிநீக்குமறந்து விட்டேன்...
ஹிஹிஹி.. நாங்கள் மறக்காமல் செர்வ் செய்துடுவோமே...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குIIT ப்ரொபசர்களுக்கு IIT யில் படிக்காதவர்கள் மடையர்கள் என்று ஒரு
பதிலளிநீக்குஅபிப்பிராயம், theory யில் மட்டம் தட்டி விடுவார்கள். //
பெரும்பாலோர் அப்படித்தான், ஜெ கே அண்ணா. கொம்பு முளைத்தது போல் செயல்படுவாங்க. அது எதனால் என்றால், சமூகத்தில் ஐ ஐ டி என்றாலே அறிவு ஜீவிகள் என்ற பொதுவான எண்ணம், ஸ்டேட்டஸ் சிம்பல். அது ஒரு சிலருக்குக் கர்வத்தைக் கூட்டுகிறது.
கீதா
வாங்க கீதா... பதில் JKC சொல்வார்!
நீக்குஅண்ணா, எத்தனை இடர்பாடுகளுக்குப் பின் இன்டெர்வ்யூ! ரொம்ப பதற்றமான சூழலாக இருந்திருக்கும் இப்போது போல அத்தனை சௌகரியங்கள் இல்லாத காலமும் கூட இல்லையா?
பதிலளிநீக்குஐ எஸ் ஆர் ஓ இன்டெர்வ்யூ எல்லா கிரேடுகளுக்குமே கடினம் தான். அதில் கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களும் உண்டு.
கீதா
புரியுது!
நீக்குபரவால்லையே ஏ ஐ நல்லாவே பதில் சொல்லுது!! (எல்லாம் நாம மக்கள் போடும் இன்புட் தானே!!!)
பதிலளிநீக்குகீதா
ஆனால் எவ்வளவு வேகமா தேடி எடுத்து கொடுக்குது பாருங்க...
நீக்குஅவர்கள் மன்னருக்காக தங்கள் உயிரை பணயம் வைப்பதால், குடும்பங்களை ஏற்படுத்தி கொள்வதில்லை. அந்தத் நவகண்ட நாயகர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பிரதான கரு. மன்னர்களை காப்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் துறக்கிறார்கள்! சுகங்களை இழக்கிறார்கள்! //
பதிலளிநீக்குவேதனையான விஷயம் இல்லையா? எப்படி இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கும்? ஒரு வேளை ராஜ ரகசியங்கள் வெளியாகக் கூடாது என்பதால் இருக்குமோ?
கிட்டத்தட்ட, இப்போதைய இராணுவத்தினருக்கு, விஐபிக்களுக்குக் கொடுக்கப்படும் கமாண்டோஸ், ஒற்றர்களுக்கு நிகர் என்றாலும் இராணுவத்தினர், மணம் செய்து கொண்டு குடும்பம் என்று இருப்பதும் இழப்புகளும் வலிகளும் நிறைந்த பணிதானே!. குறிப்பாக எல்லையில் இருப்பவங்க. ஒற்றர்களுக்கான வாழ்க்கை இன்னும் ரிஸ்க்.
இதன் அடிப்படையில் ஒரு கதை கால்வாசியில் இருக்கு.
கீதா
ஆ.. இதிலும் கால்வாசி எழுதி வைத்திருக்கிறீர்களா?
நீக்குஅதெல்லாம் இராணுவ வீரர்களின் மரணம் பற்றி அறிய நேரும் போதும், விஐபிக்களுக்கு இருக்கும் கமாண்டோஸ் தலைவரைக் காப்பாற்ற முற்படும் போது இறக்கும் சம்பவ்னகளை அறிய நேர்ந்த போனது எழுத முற்பட்டு...என்னவோ போங்க...அப்படியே இருக்கு சில விஷயங்கள் சேகரிக்க வேண்டும் என்பதால்...தூசி தட்ட வேண்டும் சமீபத்தில் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கின் கனெக்ஷன் வயர்கள் கிடைச்சப்ப கணினியில் இணைத்துப் பார்த்தப்ப அடக்கடவுளே எல்லாம் இப்படி நிக்குதேன்னு!
நீக்குகீதா
நவகண்ட நாயகி சுவாரசியமாக இருக்கும்னு தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
பரவாயில்லை, ஓகே.
நீக்கு’அவளுக்கென்ன அழகிய முகம் //
பதிலளிநீக்குஇது அசாத்தியமான பாடல்! கவிஞர் என்றுதான் நினைத்திருந்தேன். வாலி என்பது இப்பதான் தெரிந்தது.
வாலியும், கண்ணதாசன் அவர்களும் என்ன ஒரு அழகான காதல் நட்பு! கவிஞரின் பாராட்டும் குணம்தான் அந்த மனதுதான் அவரை இன்றும் வாழ வைத்துள்ளது!
கீதா
ஆமாம். இதேபோல ஒரு பாடலில் ஆணை சந்திரன் என்று வாலி வர்ணித்திருப்பதைக் கேட்ட கவிஞர் அந்தப் படத்தின் இயக்குனரிடம் ஆணை எப்படி சந்திரன் என்று சொல்லலாம் என்று கேட்டதை அவர் வாலியிடம் சொல்ல, வாலி நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். அவருக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றாராம். அப்புறம் பதிலும் சொன்னாராம் - அவர் அதே போல முன்னர் எழுதி இருந்த பாடல்களை சுட்டிக் காட்டி!
நீக்குதிரு ஞானசம்பந்தம் அவர்களின் பேச்சு சுவாரசியம். இந்தப் பாட்டு வாலி என்பது தெரியும்.
பதிலளிநீக்குஎபியில் இப்பாட்டு வந்ததோ இல்லை இதைப்பற்றிய குறிப்புகள் அதாவது வாலி அவர்களைப் பற்றிய பகுதிகளில் வந்த ஒன்று என்று நினைவு.
கீதா
ஆமாம். நானும் பகிர்ந்திருந்தேன். நீங்களும் வேறெங்கும் கூட படித்திருக்கும் வாய்ப்பு மிக் அதிகம்.
நீக்குஇதற்கு முந்தய ஒரு வெள்ளியில் சினிமா செய்திகள் அதிகம் இருந்தன, இன்று இலக்கிய செய்திகள் அதிகம்.
பதிலளிநீக்குபதிவி உயர்வு பெற JKC Sir பட்ட பாடுகள் அதிகம்தான்.
சினிமாவும் ஒருவகை இலக்கியம்தான் அக்கா...!
நீக்குஅந்த வாரம் கையில் எதெது சிக்குகிறதோ அவற்றையெல்லாம் கூடையில் போட்டுக் கொண்டு வந்து இங்கு கொட்டி விடுகிறேன்!
// சினிமாவும் ஒருவகை இலக்கியம்தான் அக்கா...!// இலக்கியத்தின் நீர்த்துப் போன வடிவம்.
நீக்குஹேமலதா பாலசுப்பிரமணியன்... பெயர் கேள்விபட்ட மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. யார் என்பது தெரிந்து விட்டது. அவருடைய புத்தகம் ஒன்றை ஸ்ரீராம் எனக்கு அன்பளிப்பாக தந்தார். அதிலிருந்த பல கருத்துகள் மலைக்க வைத்தன.
பதிலளிநீக்கு//இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.// ஸ்ரீராமின் தந்தையைப் பற்றி கட்டுரையாசிரியரின் வருத்தம் நியாயமானதுதான். அதற்குதான் அதிர்ஷ்டம் என்று பெயரோ?
நன்றி பானு அக்கா. இதற்கு நானென்ன பதில் சொல்ல...
நீக்குவாலி எழுதிய பல நல்ல பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன.பாவம். இதே போல கங்கைஅமரன் இசை அமைத்த சில பாடல்கள் இளையராஜாவால் இசையமைக்கப் பட்டவை என்று கருதப்பட்டதுண்டு.
பதிலளிநீக்குஆமாம். உண்மைதான். வாழ்வே மாயம் கங்கை அமரன் இசை அமைத்த படம் என்று இன்னமும் நிறையபேருக்கு தெரியாது!
நீக்குநவகண்ட நாயகி.. படிக்க முயற்ச்சிக்கிறேன். பொன்னியன் செல்வன், திருவரங்கன் உலா, நான் கிருஷ்ண தேவராயன் பாணியில் இருந்தால் பிடிக்கும்.
பதிலளிநீக்குஐந்து வகை தோசை... ரமணி VS ரமணி பார்ட் 2 வில் 35வகை தோசை செய்து போடுவாரே அது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குசோழியன் குடுமி சும்மாடு ஆகாது - சிறப்பான விளக்கம்.
பதிலளிநீக்குகடைசியில் தேவன் தேவந்தான்!
அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். //
பதிலளிநீக்குஓ! விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தாரா அப்பா?!!
கீதா