அப்புறம் என்ன ஆச்சு?
JKC
ஐந்திலே ஒன்றை வைத்தேன்
ஐந்திலே ஒன்றை பெற்றேன்
அதாவது ஐந்தில் ஒன்றாகிய தீயை pant பாக்கெட்டில் வைத்து விட்டேன்.
ஐந்து வருடங்களில் ஒரு ப்ரோமோஷனையும் பெற்றேன். இவ்வாறு
கூறிவிட்டு அடுத்த ப்ரோமோசனும் எத்தனையோ தடங்கலுக்குப் பின் தான்
கிடைத்தது என்று கூறியிருந்தேன்.
ஒன்றா இரண்டா, மூன்று தடங்கல், ஆனாலும் இருந்த கிரேடில் 8 வருடங்கள் முடிந்த பின் ப்ரோமோஷன் கிடைத்தது.
இருந்த கிரேடில் 5 வருடம் பூர்த்தியாகி விட்டது. அடுத்த ப்ரோமோஷனுக்கு
தகுதி என்ற அடிப்படை நிலையை அடைந்தேன். CR, peer review ஓகே. Eligible
for dpc இண்டெர்வியு. .
சென்ற இண்டெர்வியுக்களைப் போல் அல்லாது தற்போதைய இன்டெர்வியு பல மாற்றங்கள் கொண்டது. இது வரை என்னுடைய இன்டெர்வியூக்கள் எல்லாம் அந்த அந்த சென்டர் அளவில் நடைபெற்றன. தற்போது போகப்போகும் இன்டெர்வியூ அகில இந்திய அளவில் பெங்களூரில் நடைபெறும் ஒன்று. Isro வின் எல்லா சென்டர்களில் இருந்தும் தகுதியானவர்கள் பெங்களூரில் நடைபெறும் இன்டெர்வியூக்கு அழைக்கப் படுவார்கள். DPC (departmntal promotion committee) பெரிது, சுமார் 16 பேர் இருப்பார்கள்., மேலும் ஒவ்வொரு கேண்டிடேட்க்கு ஏற்ப டெக்னிகல் எக்ஸ்பெர்ட்ஸ் 2 பேர் மாறுவார்கள். அவர்கள் சாதாரணமாக IIT ப்ரோபஸர்களாக இருப்பார்கள். இன்டெர்வியூ முக்கால் மணி நேரம் நடைபெறும்.
5 வருட தகுதியின் அடிப்படையில் நடைபெற்ற முதல் இன்டெர்வியுவில்
முதல் தோல்வி அடைந்தேன். தோல்வியே வெற்றிப் பாதையின் முதற்படி
என்று கருதி, அடுத்த வருடம் அதாவது 6 வருட முடிவில் மீண்டும்
பெங்களூரில் இன்டெர்வியுக்கு சென்றேன். மீண்டும் தோல்வி, இரண்டாவது தோல்வி.
IIT ப்ரொபசர்களுக்கு IIT யில் படிக்காதவர்கள் மடையர்கள் என்று ஒரு
அபிப்பிராயம், theory யில் மட்டம் தட்டி விடுவார்கள். சரி இனி
அவ்வளவுதான் என்று இருந்த நிலையில் 8 வருட முடிவில் மீண்டும்
இன்டெர்வியூக்கு விளிக்கப்பட்டேன். வருடம் 1993.
மூன்றாவது தடவையாக அழைக்கும் இன்டெர்வியூ கால் லெட்டர்
இன்டெர்வியூ தேதிக்கு ஒரு வாரம் முன் தான் கிடைத்தது.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மட்டுமே
உண்டு. 1993 இல் ஆன்லைன், IRCTC என்பவை கிடையாது. ரயில்வே
ஸ்டேஷனுக்கு சென்று ரிசர்வ் செய்யவேண்டும். அதில் டிக்கெட்
கிடைக்கவில்லை. முதல் தடங்கல்.
சரி மதுரை சென்று மைசூர் எஸ்பிரஸில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு செல்ல முடியுமா என்று பார்த்தேன். இடம் இருந்தது. அதில் டிக்கெட் ரிசர்வ் செய்தேன்.
காலை திருவனந்தபுரத்தில் புறப்பட்டு திருவள்ளுவர் போக்குவரத்து பஸ்சில் மதுரை சென்று மதுரையில் இரவு பெங்களூர் ட்ரெயினை பிடித்து பெங்களூர் சென்று அடுத்தநாள் இண்டெர்வியு அட்டென்ட் செய்வதாக திட்டம்.
அதன்படி காலை மதுரைக்கு திருவள்ளுவர் பஸ்ஸில் ஏறிவிட்டேன். பஸ்
மதியம் உணவுக்குப் பின் விருதுநகர் பக்கமோ, கோவில்பட்டி பக்கமோ
பழுதாகி நின்று விட்டது. Axle leaf spring உடைந்து விட்டது. இரண்டாம்
தடங்கல்.
அப்புறம் என்ன ஆச்சு?
Spare பஸ் வரவேண்டும். அதுவரை வழியில் காத்திருக்க வேண்டும்.
திருவள்ளுவர் பஸ் ஆனதால் கட்டபொம்மன், நேசமணி பஸ் காரர்கள் ஏற்ற மாட்டார்கள். திருவள்ளுவர் பஸ்கள் வந்தாலும் நிறுத்த மாட்டார்கள். சீட் இல்லை என்று சொல்வார்கள்.
நடத்துனரிடம் ரயில் டிக்கெட்டைக் காட்டி செல்ல வேண்டிய அவசியத்தை
சொன்னேன். அவர் பெரிய மனது பண்ணி என்னை மட்டும் எப்படியோ ஒரு திருவள்ளுவர் பஸ்ஸில் ஏற்றி விட்டார்.
அப்படி மதுரை வந்தது சேர்ந்தபோது இரவாகி விட்டது. மதுரை பெரியார்
பேருந்து நிலையத்தில் இறங்கி ஜங்சனுக்கு ஓடி ட்ரெயினை பிடித்து விட்டேன்.
அப்பாடா என்று இருந்தது.
நல்ல சோர்வுடன் பெர்த்தில் ஏறி படுத்து தூங்கிவிட்டேன். சுமார் 4 மணிக்கு
விழிப்பு வந்தது. ட்ரெயின் ஈரோடு ஸ்டேஷனில் ரொம்ப நேரமாக நின்று
கொண்டிருந்தது. அப்போது தான் மற்றவர்கள் சொன்னார்கள் ‘ட்ரெயின் இனி போகாது, எல்லோரும் இறங்க வேண்டியது தான்.
காரணம் இதற்கு முன் போன ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு வேகன்கள்
இரண்டாவது ட்ராக்கில் விழுந்து விட்டன. அந்த ட்ராக்கில் வந்து
கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் வேகன்கள் மீது மோதி மீண்டும் ஒரு தடம் தவறுதல். ஆக இரன்டு ட்ராக்கிலும் தடங்கல். பெரிய விபத்து. தற்போதைக்கு சரியாகாது.
எல்லோரும் டிக்கெட்டை கவுண்டரில் கொடுத்து மீதி கட்டணத்தை
பெற்றுக்கொள்ளலாம் அல்லது TTE க்களிடம் TDR வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ட்ரெயியினை விட்டு இறங்கினேன். எப்படியும் பெங்களுர் போகவேண்டும். டிக்கெட் காப்பி ஆபீசில் காட்ட வேண்டும். டிக்கெட்டை கான்சல் செய்ய முடியாது. TDR வாங்கிகொண்டால் கான்செல் செய்ய காரணங்கள் என்ன என்பது ரசீதில் இருக்கும். பின்னர் டிக்கெட்டைக் கொடுத்து பாக்கி தொகையை வாங்கிக்கொள்ளலாம்.
சரி என்று டிக்கெட்டை காட்டி TDR வாங்கி கொண்டேன். இனி பஸ் பிடித்து
செல்ல வேண்டும். மூன்றாவது தடங்கல்.
அப்புறம்………ஹூம் ….போர் அடிக்கிறதா? கதை மெகா சீரியல் மாதிரி
போகிறதா? பொறுமை பொறுமை.
ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து பஸ் ஸ்டான்ட் போக ஆட்டோ கேட்டேன்.
வந்தார்கள். ஆனால் ரேட் டபுள். மேலும் இரண்டு பேர் கூடுதலாக ஷேர்
ஆட்டோ போல் ஏற்றிக்கொள்வார்கள் அவர்களிடமும் டபுள் வாங்குவார்கள்.
வேறு வழி இல்லாததால் கேட்ட காசை கொடுத்து விட்டு சேலம் பஸ்ஸில்
இடம் பிடித்தேன். அப்போதே விடிந்து விட்டது.
சேலம் வந்து பெங்களூரு பஸ்ஸில் இடம் கிடைத்து ஏறி விட்டேன். பசி,
காபி குடிக்கவில்லை. சோர்வு. பஸ் தோப்பூரில் டிபனுக்கு நின்றது. நின்ற
ஹோட்டல் பாடாவதி. ஆனால் ரேட் மட்டும் கூடுதல். கடனே என்று வந்த
விரக்திகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தபோது மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்டெர்வியூ அடுத்த நாள் தான், ISAC இல்..
இந்த இன்டெர்வியூவுக்கு ஒரு பொதுவான ரூல். இன்டெர்வியூவுக்கு
வந்தவர்கள் எல்லோரும் காலை 8 மணிக்கு ஆஜர் ஆகவேண்டும். வருகை
பதிவு செய்தபின் அன்று வரும் expert கள் எத்தனை மணிக்கு வருவார்கள்
என்ற விவரம் அறிந்து அதன்படி அன்றைய இன்டர்வியு வரிசை
தீர்மானிக்கப்படும். அப்படி தீர்மானித்த வரிசை எண்ணை சொல்வார்கள்.
அதன்படி உத்தேசமாக இத்தனை மணிக்கு இன்டெர்வியூ நடக்கும்
என்பதையும் தெரிவிப்பார்கள். அதன்படி எனக்கு பிற்பகல் 5 மணிக்கு என்று கூறினார்கள். லேட் ஆகிவிட்டால் அடுத்த நாளும் வரவேண்டி வரும்.
எப்படியோ 4 மணி வரை வெளியில் சுற்றித்திரிந்து ஒரு பாக்கெட்
சிகெரெட்டையும் தீர்த்து 4 மணிக்கு வந்து பார்த்தேன்.
என் முறை வர 5:30 மணி ஆனது.
கூப்பிட்டார்கள். முதலில் அறிமுகம். சென்ற 8 வருடங்களில் நிறைவேற்றிய
முக்கியமான பணிகளை கூறினேன். பிரத்தியேகமாக நான்காம் சம்பள
கமிஷன் (1986) பரிந்துரைகள் பிரகாரம் ஊழியர்களின் சம்பள நிர்ணயம்,
மற்றும் அரியர்ஸ் கணக்கிட்டு பிடிக்கவேண்டிய income tax, மற்றும் PF
ஆகியவற்றை பிடித்து பாக்கி பேமண்ட், என்று இரவு பகலாக உழைத்தது,
அதே போல் IBM 360/44 கம்ப்யூட்டரில் இருந்து CDC cyber 170/730
கம்ப்யூட்டருக்கு ப்ரோக்ராம்கள், மற்றும் Data ஆகியவற்றை கொண்டு சென்று ஒரு seamless porting செய்தது என்று செய்த முக்கிய வேலைகளைக்
கூறினேன்.
இன்டெர்வியூ கேள்விகள் ஆரம்பமாயின. Theory கேள்விகளுக்கு முன்னர்
மற்ற சென்டர் டைரக்டர் ஒருவர் செய்த வேலைகள் எப்படி ப்ராக்டிகலாக
செய்தேன் என்பது பற்றி விளக்கமாக கேள்விகள் கேட்டார், அது நான் செய்த வேலை என்பதால் தடங்கல் இன்றி பதில்கள் கூற முடிந்தது. இன்டெர்வியூ முடிந்தது.
ரிசல்ட் பற்றி கவலை இல்லாமல் திருவனந்தபுரம் திரும்பினேன்.
8வருடம் காத்திருந்த ப்ரோமோஷன் சரியானது.
ஊசிக்குறிப்பு.
TDR கொண்டு போய் ரயில்வே ஸ்டேஷனில் கொடுத்தது, அவர்கள் அதை
பாலக்காடு டிவிஷன் ஆபீசுக்கு அனுப்பியது, பாலக்காடு டிவிசன் டிக்கெட்
திருவனந்தபுரத்தில் வாங்கியதால் திருவனந்தபுரம் தான் டீல் செய்யணும்
என்று திருவனந்தபுரம் டிவிஷன் ஆபீசுக்கு அனுப்பியது, அவர்கள் பாஸ்
செய்து ரீஃபண்ட் வவுச்சர் அனுப்பியது, அதை கூண்டுக்குள் இருக்கும்
ஸ்டேஷன் கேஷியரிடம் கொடுத்து பணம் வாங்கியது, என்று ஏகப்பட்ட
அலைதலுக்குப் பின் கிடைத்த தொகை 50 ரூபாய் என்பது தனிக்கதை.
இந்த ப்ரோமோஷனுக்கு அடுத்த ப்ரோமோஷன் 15 வருடங்களுக்குப் பின்
grade last basic stagnation இல் 5 வருடம் இருந்தபின், 5 இன்டெர்வியூக்களுக்குப்பின் போனால் போகிறது என்று retirement க்கு 6 மாதம் முன்பு கிடைத்தது தனி கதை, அதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் முக்கிய காரணம் என்னுடைய நக்கீரத்தன்மை.
========================================================================================
இந்த வார AI பதில் :
"சோழியன் குடுமி சும்மா ஆடுமா?" என்ற பழமொழியின் சரியான வடிவம் "சோழியன் குடுமி சும்மாடு ஆகாது" என்பதாகும், இதன் பொருள் சோழ நாட்டில் உள்ள சோழியர் சமூகத்தினர் வைத்திருக்கும் குடுமியை சுமை தூக்கும் "சும்மாடு" ஆகப் பயன்படுத்த முடியாது என்பதாகும்; இது ஒருவரின் இயல்பு மாறாது என்பதையும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதன் இயல்புக்கு மாறாகப் பயன்படுத்த முடியாது என்பதையும் உணர்த்துகிறது.
விளக்கம்:
- சோழியன்: சோழர் காலத்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
- குடுமி: தலையில் முடியைக் கட்டி வைக்கும் ஒரு வகை அமைப்பு. சோழியர்கள் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.
- சும்மாடு: பெண்கள் தலையில் கனமான பொருட்களைச் சுமக்கும்போது, தலையில் துணியை உருட்டி வைத்து அதன்மேல் சுமையைத் தாங்குவார்கள்; அதுவே சும்மாடு.
பொருள்:
- சோழியர்கள் வைத்திருக்கும் குடுமி, பாரத்தைச் சுமக்கும் சும்மாடு போல மென்மையாகவோ, உறுதியற்றதாகவோ இருக்காது.
- அதன் வடிவம், அமைப்பு மற்றும் இயல்பு வேறுபடும். எனவே, குடுமியை சும்மாடாகப் பயன்படுத்த முடியாது.
பழமொழியின் உட்பொருள்:
- ஒரு பொருளின் இயல்பை மாற்ற முடியாது (A thing cannot be used for a purpose it's not meant for).
- ஒருவரது இயல்பையும், குணத்தையும் மாற்ற முடியாது (A person's nature cannot be changed).
================================================================================================
இந்த புத்தக விற்பனைச் சந்தையில் காலச்சக்கரம் நரசிம்மாவின் நவகண்ட நாயகி வாங்கினேன். வானதி பதிப்பகம். நேற்றுதான் படித்து முடித்தேன். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி விட்டு இவ்வளவு எழுத்துப் பிழைகளா என்று வருத்தம் தருகிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்களிடமும் இது குறித்துச் சொன்னேன். திறமையான ஆட்கள் குறைந்து போயினரா? சம்பளம் அதிகம் என்று விட்டு விட்டார்களா? வானதி பதிப்பகத்திலிருந்து இப்படி ஒரு கவனக்குறைவை நான் எதிர்பார்க்கவில்லை. சரி, போகட்டும். அந்தப் புத்தகத்திலிருந்து..
நவகண்ட நாயகி கதைக்களம் :
பழையாறையில் பதினாறு பிரிவுகளில் நான்கு படை ஊர்கள் உண்டு. புதுப்படையூர், ஆரியப்படையூர், பம்பப்படையூர், மணப்படையூர் - என்கிற நாலு பகுதிகளில்தான் போர்த்தளபதிகள், படைவீரர்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரான வேளக்கார படையினர் வசித்தார்கள்.
குறிப்பாக, ஆரியப்படையூர் மற்றும் பம்பப்படையூர் தான் இந்த படையூர்களில் முக்கியமானவை. இங்கேதான். அரிகண்ட மற்றும் நவகண்ட நாயகர்கள் வசித்தனர்.
அரிகண்டம் என்கிற மன்னரின் பாதுகாவலர்கள், அவன் மரணித்தபோது, தங்களது தலையை வெட்டிக்கொண்டார்கள். தங்களது தலையை வெட்டி, உயிர் தியாகம் செய்து கொண்டவர்கள் வசித்ததால் அந்த பகுதி அரியப்படையூர் என்று இருந்து, பின்னர் ஆரியபடையூர் என்று மாறி இருக்கலாம்.
பம்பை இசைத்து ஒன்பது அங்கங்களை வெட்டி கொண்ட நவகண்ட நாயகர்கள் வசித்த ஊர் பம்பப்படையூர்.
இந்த புதினத்தில் இன்னொரு புதுமையையும் சேர்த்திருக்கிறேன். அதாவது மன்னர்களின், அரசுகளின் அரண்மனை வேலம் பற்றி எழுதி உள்ளேன். வேலம் என்றால் Secretariat என்று சொல்லலாம். ஒரு வேலத்தில் பல ஊழியர்கள் இருப்பார்கள்.
மன்னருக்கு ஒரு வேலம், பட்டத்து அரசிக்கு ஒரு வேலம், அந்தப்புரத்திற்கு ஒரு வேலம், பட்டத்து இளவரசனுக்கு ஒரு வேலம், அரண்மனை அடுக்களைக்கு ஒரு வேலம், கஜானாவுக்கு ஒரு வேலம், வஸ்திர கொட்டடிக்கு ஒரு வேலம், அயல் நாட்டு விருந்தாளிகளுக்கு ஓர் வேலம் என்று ஒரு அரண்மனையில் ஒரு டஜன் வேலங்கள், இருக்கும்.
மன்னர் பராந்தக வேலம், பட்டத்து அரசி கோக்கிழானடி வேலம் கண்டராதித்த வேலம் என்று தனித்தனியாக வேலம், அவரவர் பெயர்களில் அழைக்கப்படும். இந்த வேலத்தில் கணக்காளர்கள், கஜானா ஆபரண அதிகாரிகள், வஸ்திர கொட்டடி அதிகாரிகள், தாதிகளை மேற்பார்வையிடும் பெண் அதிகாரிகள், உணவு அதிகாரி, புறப்பாடு மற்றும் பயண அதிகாரி, பாட்டு மற்றும் இசை கருவிகளை இசைக்கும் பெண்கள், நடனமணிகள், புலவர்கள், விகடகவிகள் என்று பலரும் இருப்பார்கள்.
நவகண்ட நாயகியின் கதைக்களம் என்ன? மன்னர்களின் நவகண்ட மற்றும் அரிகண்ட நாயகர்களுக்கு பெண் வாடை கூடாது. அவர்கள் மன்னருக்காக தங்கள் உயிரை பணயம் வைப்பதால், குடும்பங்களை ஏற்படுத்தி கொள்வதில்லை. அந்தத் நவகண்ட நாயகர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பிரதான கரு. மன்னர்களை காப்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் துறக்கிறார்கள்! சுகங்களை இழக்கிறார்கள்!
அரிகண்ட, நவகண்ட நாயகர்கள் இடையே நிலவும் அரசியல் பகை, அவர்களிடையே சிக்கிஅல்லாடும் அரச குடும்பம் என்று ஒரு முக்கோண அரசியல் போட்டியை தான் கதை விவரிக்கிறது. மன்னருக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்து விட்டதால், அதற்கு பலனாக அரசியலையே ஆட்டி வைக்க நினைக்கும் நவகண்ட நாயகர்கள், அவர்களை எதிர்க்கும் அரிகண்ட நாயகர்கள். மன்னரின் குடும்பத்தில் நவகண்டர்களுக்கு ஆதரவாக சிலரும், அரிகண்டத்துக்கு ஆதரவாக சிலரும் என்று பிரிய, இதன் நடுவே பழுவேட்டரையர்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்க, சோழத்தில் நடைபெறும் உச்சகட்ட அரசியலும், பரபரப்பு சம்பவங்களும் தான் கதைக்களம்.
=======================================================================================
கண்ணதாசன் - வாலி பற்றி ஒரு செய்தி - பேஸ்புக் திரு R கந்தசாமி பகிர்ந்ததிலிருந்து...
கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக் கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ’’யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. அந்தப் பாட்டுக்காக, உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. இன்னும் நிறைய எழுது’ என்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இவற்றையெல்லாம் ஒளிவோ மறைவோ இல்லாமல் வாலியே மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
சிவாஜிக்கும் ஏராளமாகவும் தாராளமாகவும் எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் எழுதினார். ‘தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை / கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை / அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டான் / அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு, கண்ணதாசனை சந்திக்கும்போது, ‘உங்க பாட்டு ரொம்ப நல்லாருந்துச்சு’ என்று பலர் சொல்லி, “யோவ், இது நான் எழுதலைய்யா. வாலி எழுதினான். அவனைக் கூப்பிட்டு பாராட்டுங்கய்யா” என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். அந்தப் பாட்டுக்கு மட்டுமல்ல, பல பாடல்களுக்கு அப்படி அவர் சொன்னதுண்டு!
எம்ஜிஆருடன் தொடர்ந்து நடித்து வந்த ஜெயலலிதா, சிவாஜியுடன் முதன்முதலாக நடித்த படம் ‘கலாட்டா கல்யாணம்’. ‘’யோவ் வாலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் முதல்ல நம்ம கூட நடிக்குது. நல்லா பிரமாதமான வரிகளைப் போட்டு எழுது’ என்று சிவாஜி சொல்ல, உடனே வாலி ‘வந்த இடம் நீ நல்ல இடம் / வர வேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதினார்.
’சர்வர் சுந்தரம்’ படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களும் கண்ணதாசன். திடீரென வாலியை அழைத்து ஒரேயொரு பாட்டு கொடுக்கப்பட்டது. வந்தார். டியூனைக் கேட்டார். கையோடு எழுதிக் கொடுத்தார். ’அவளுக்கென்ன அழகிய முகம் / அவனுக்கென்ன இளகிய மனம் / நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன / உறவுகள் தரும் உறவுக்கென்ன / உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’ என்கிற இந்தப் பாடல் இன்றைக்கும் ஹிட் வரிசையில் தனியிடம் பிடித்திருக்கிறது.
நன்றி: காமதேனு
கண்ணதாசன் மறைவுக்கு அவர் நினைவுநாள் கூட்டத்தில் திரையுலகில் பலர் அழ, மனோரமா அழ, வாலியும் அழ....
மனோரமா ஆச்சியின் அழுகைக்கு பதில் அழுகைதான் வாலியின் அழுகை!
ஒரு புத்தகத் திருவிழாவில் திரு ஞானசம்பந்தம் பேசிய சுவையான ஒரு பேச்சிலிருந்து... உண்மையில் இந்தக் குழப்பம் திரையுலகிலேயே கூட நிறைய பேர்களுக்கு இருப்பது மட்டுமல்லாமல், கண்ணதாசனுக்கே கூட ஒருமுறை தான் எப்போது இப்படி ஒரு பாட்டு எழுதினோம் என்று கேள்வி வந்ததாம்!
=========================================================================================
நன்றி தினமணி "இந்த வார கலாரசிகன்" (31/1/2016). நன்றி வைத்தியநாதன் ஸார்.
நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தவறாமல் வந்துவிடுவார் அவர். வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.
தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.
பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற மனவருத்தத்துடன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தேன். இங்கே அலுவலகத்திற்கு வந்து, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.
எழுத்தாளர் கர்ணன், ஹேமலதா பாலசுப்பிரமணியம் எழுதிய "இவனும் அவனும்' என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். கூடவே அவர் உடல்நலம் குன்றியிருப்பது பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருந்தார்.
வழக்கம் போல தன் மனைவி ஹேமலதாவிற்கு அர்ப்பணித்திருந்த அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கர்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்தால் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குகிறது. இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.
அடுத்த முறை மதுரை செல்லும்போது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.
===========================================================================================
சென்ற வாரத்தில் ஒருநாள் வீட்டில் அரைத்த மாவு தீர்ந்து விட்டிருக்க, பாஸுடன் அவருக்காக பிஸியோதெரபிக்கு சென்று அப்படியே அருகில் இருந்த ஓட்டலில் இதை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். ஐந்து தோசைகளுக்கும் பெரிய வித்தியாசம் காட்ட முடியாமல் செய்திருந்தார்கள். பொடி, தக்காளி, ஆனியன், தக்காளி பூண்டு இன்னும் ஏதோ ஒன்று என்று கொடுத்திருந்தார்கள். சர்வரிடம் அதைக் காட்டி என்னென்ன தோசை என்றால் அவருக்கே சொல்லத் தெரியவில்லை. உள்ளே பார்த்தும் சொல்ல முடியாத அளவில் இருந்தது உள்ளே வைத்திருந்த ஸ்டஃப். ஆனால் தோசை நன்றாக இருந்தது. கிளம்பும்போது இந்த தோசை பற்றி ஹோட்டல் மேனேஜரிடமும், சர்வரிடமும் சொல்லி சமையல்காரருக்கு தோசை டிப்ஸ் கொடுத்து வந்தேன்!
=================================================================================
ஸி ஐ டி சந்துரு கதையில் தேவன் ஒரு இயல்பான உரையாடலைக் கொண்டு வருகிறார். ரொம்ப கேள்வி கேட்டால் கடுப்படிக்கும் அதிகாரி. சமாளிக்கும் அடுத்த நிலை அதிகாரி. உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு அதிகாரி சரளா சமாளித்த விவரத்தை சிலாகிக்கிறார்.
ஒரு விஷயத்தை துப்பறிய சொல்லி சிறிய அறிமுகம் சிஐடி சந்துரு சொன்னவுடன் சரளா சொல்கிறார் "இந்த விபரங்கள் எனக்கு போதும் மிஸ்டர் சந்துரு அந்த பெண்மணி யார் அவளுக்கு என்ன விதமான ஆபத்து நான் செய்ய வேண்டியது என்ன இதையெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?"
கோபாலன் சிரித்தார் மிஸ் சரளா! நீங்கள் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து என் மனைவி லட்சுமி இடம் பேச வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அவளுக்கு நான் எத்தனை விவரங்கள் சொன்னாலும் போதாது என்கிறாள். உங்களுடன் கொஞ்சமாக பழகினால் புத்தி வரும் என்று நினைக்கிறேன்" என்றார்.
"என்னை பரிகாசம் செய்கிறீர்கள் இன்ஸ்பெக்டர்! சந்துருவிடம் விஷயம் வருவிக்க வேண்டுமானால் இப்படித்தான் பேச வேண்டும். ஏதேனும் நானாக மேலும் கேட்டால் அவருக்கு கோபம் வரும். 'எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு அங்கே போய் என்ன புரட்டுகிறது' என்று எரிந்து விழுவார். 'போதும்' என்றால்தான் மளமளவென்று பேசுவார்"
"உங்களுக்குள் இருக்கிற சந்தேகம் சங்கேதம் எனக்கு ஒன்றுமே புரிகிறது இல்லை. எங்கே சந்துரு... எனக்கு அவசர கேஸ் இருக்கிறது. நான் போக வேண்டும். மிஸ் சரளாவிடம் விவரங்களைச் சொல். நானும் கேட்கிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர் கோபாலன்
================================================================================





இன்றைய பல்சுவைப் பதிவு சூப்பர்
பதிலளிநீக்குவாங்க நெல்லை. நன்றி. பெங்களூரு திரும்பியாச்சா?
நீக்குஇன்று மாலை 6 1/2க்கு இரயில் பெங்களூருக்கு. இப்போ நந்திபுர விண்ணகரம், தேரழுந்தூர் போன்ற பல தலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்
நீக்குநந்திபுர விண்ணகரம் எங்கே இருக்கிறது? எதன் அருகில்? தேரழுந்தூர் சகோதரிகள் என்று ஒரு இரட்டையர் கர்னாடக சங்கீத பாடல்கள் பாடுபவர்கள் உண்டு. சீனுவை காண்டாக்ட் செய்தீர்களா?
நீக்குகம்பர் பெருமான் பிறந்த ஊர் தேரெழுந்தூர். ஞாபகம் வரவில்லையா?
நீக்குமன்னியுங்கள் ஜீவி ஸார்... என் மனதில் அது இல்லை!
நீக்குஆபீசில் எத்தனையோ பிடிக்காதவர்களைச் சம்பாதித்திருப்போம். ஆனால் நமக்கு ப்ரமோஷன் இன்க்ரிமென்ட் தரப்போகிறவர்களிடம் எப்போதும் சூப்பர் பெயர் எடுத்துவிடவேண்டும். அவர்கள் செய்வதில் குறைகள் சொல்லக்கூடாது பாராட்டவே செய்யணும். குறை கண்டுபிடிப்பதால் பிரயோசனம் இல்லை
பதிலளிநீக்குமுதல் பாயிண்ட் எங்கும் பொருந்தும். ஆனால் மற்றவை அரசு அலுவலகங்களில் செல்லாது. தனிப்பட்ட ஒரு அதிகாரியிடம் பெயர் வாங்கினால்தான் இன்க்ரிமெண்ட் கதை அங்கு கிடையாது! அது ருடீன்.
நீக்குஇன்க்ரிமென்ட் எப்போவும் கொடுப்பது தான். அந்தரங்க ரிப்போர்ட்டில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஒழிய அதை நிறுத்தி வைக்க மாட்டார்கள். ஆனால் ப்ரமோஷன் என்பது அப்படி அல்ல. ஆனாலும் ஜேகேசி இருந்தது இஸ்ரோ என்பதால் ப்ரமோஷன் கொடுக்கும் முன்னர் நன்கு வடிகட்டித் தேர்ந்தெடுப்பார்கள் போல் தெரிகிறது. மத்திய அரசில் அப்படி எல்லாம் இல்லை. எஸ்.ஏ.எஸ் எழுதிப் பாஸ் ஆகாமல் இருப்பவர்களுக்குக் கூடக் குறிப்பிட்ட கால வரம்பினைத் தாண்டி விட்டால் ப்ரமோஷன் கொடுப்பாங்க. என்னன்னா அவங்கல்லாம் கடைசி வரை வர முடியாது. எஸ்.ஏ.எஸ் பாஸ் செய்தவர்களுக்கு விரைவில் ப்ரமோஷன் கிடைக்கும். ராஜீவ் காந்தி காலம் வரையிலும். அப்போத் தான் ப்ரமோஷன் கொடுப்பதில் உள்ள சில வரையறைகள் மாற்றப்பட்டன. General Category ஊழியர்களுக்கான ப்ரமோஷன் தள்ளி வைக்கப்பட்டு மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இந்த முறை வந்ததில் பல சீனியர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர் நம்ம ரங்க்ஸ் உள்பட.
நீக்குமாநில அரசு அலுவலகங்களில் இன்க்ரிமெண்ட் நிறுத்துவது என்பது ஏதாவது தவறு செய்து 17B வாங்கி இருந்தால்தான் நடக்கும். தண்டனை போல... மற்றபடி அதுபாட்டுக்கு வந்து கொண்டிருக்கும்!
நீக்குஉண்மையிலேயே ஒவ்வொருவரிடமும் ஏகப்பட்ட குறைகள் உண்டு அதிலும் நம்மிடம் அனேகம். இது புரிந்துவிட்டால் போதும் ஆபீஸ் வாழ்க்கை இனிமையாகிவிடும்
பதிலளிநீக்கு'சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா..' என்று கண்ணதாசன் பாடி இருக்கிறார்.
நீக்குசோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது தான் நான் அறிந்த ஒன்று. சோழியன் தலை ஆட்டினால் முன்குடுமி ஆடும் என்றும் அப்படி தலை ஆட்டினால் சோழியனுக்கு அதனால் எதோ லாபம் உண்டு என்பதும் தான் இதன் அர்த்தம்.
பதிலளிநீக்குசோழியன் குடுமி மட்டுமல்ல, எந்தக் குடுமியும் சும்மாடு ஆகாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஹோட்டல் பிருந்தாவன் எந்த ஊர் பிருந்தாவன்? கடலூரில் ஒரு பிருந்தாவன் ஹோட்டல் உண்டு. கல்லூரிப் பருவத்தில் அங்கு பொங்கல் வடை சாப்பிட்டிருக்கிறேன். NCC parade முடிந்ததும் டிபன் கிடைக்கும். அதற்க்கு அவர்கள் தாம் காண்ட்ரேக்ட்.
தோசைகள் நன்றாக உள்ளன.
பதிவின் line and paragraph alignment தாறுமாறாக உள்ளது. கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Jayakumar
வாங்க JKCSir .. இந்த பிருந்தாவன் சென்னை பிருந்தாவன்! பெரிய ஹோட்டலும் அல்ல, அதற்காக சிறிய ஹோட்டலும் அல்ல!
நீக்குஎனவே இதன் மூலம் நீங்கள் NCC யில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!!
பாரா அலைன்மெண்ட் இப்போது சரி செய்திருக்கிறேன்.. பார்த்துச் சொல்லுங்கள்.
இரண்டு யுத்தங்களுக்கு பின் (1962 சீன, 1965 பாக்) கல்லூரி மாணவர்கள் எல்லோரும் cumpulsory ஆக NCC யில் சேரவேண்டும் என்ற சட்டம் இருந்தது. 3 கேம்ப் (விழுப்புரம், சிதம்பரம், MRC வெல்லிங்டன்) சென்றிருக்கிறேன். B செர்டிபிகேட் first class இல் பாஸ் செய்திருக்கிறேன்.
நீக்குJayakumar
நல்லவேளை.. எங்கள் காலத்தில் ஆப்ஷனல்தான். ஆனால் அது நல்லவேளையா, துரதிருஷ்டமா தெரியவில்லை. Fit ஆக இருந்திருக்கலாம், பாருங்கள்!
நீக்குஎனக்கு என் ஸ்கௌட் மாஸ்டர் பொன்னுதுரையும் அவர் பாடும் பாடலும் நினைவுக்கு வந்து விட்டது..
முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை தினம் தின்ற எலியை கொன்று தின்ற பூனையை துரத்திட்ட நாயிடம்......
வெள்ளிச் சிதறல்கள் - சிறப்பு. கண்ணதாசன் - வாலி - குறித்த குறிப்புகள் - நன்று. அனைத்து பகுதிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஐந்து வித தோசை - விதம் விதமாக தோசை செய்கிறேன் பேர்வழி என படுத்துகிறார்கள் பல உணவகங்களில்... தில்லியில் சாக்லேட் தோசை, ஐஸ்க்ரீம் தோசை என்றெல்லாம் தருகிறார்கள்! ஒரு முறை சாக்லேட் தோசை சுவைத்தேன் - சகிக்கவில்லை!
வாங்க வெங்கட்... சாக்லேட் தோசையா... ஹையே.. ஆனால் தேங்காய்த் துருவல் போட்டு லேசாக சர்க்கரை தூவி செய்வேன் நான். அது அமோக வரவேற்பைப் பெற்ற தோசை வகை எங்கள் வீட்டில்!
நீக்குசீஸ் தோசை எல்லாம் இருக்கு. இங்கே மருமகள் தோசைன்னாலே குஞ்சுலுவுக்கு சீஸ் சேர்த்துத் தான் வார்த்துக் கொடுக்கிறாள். ஓட்டல் தோசைனாலும் அது சீஸ் தோசை தான் கேட்கும். பனீரிலும் தோசை செய்கின்றனர். துருவிப் போடுகிறார்கள்.
நீக்குதோசை எத்தனை எத்தனை விதங்களில் வார்க்கலாம்? நிறைய வகைகள் இறுக்கி...
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குகந்தா சரணம். வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குalignment அப்புறம் என்ன ஆச்சு இல் சரியாகவில்லை.
பதிலளிநீக்குஅப்பாவின் கதை தொகுப்பில் இருந்து ஒன்றிரண்டு கதைகள் இங்கும் பதிக்கலாம்.
Jayakumar
இப்போது மறுபடியும் உங்கள் பகுதி மட்டும் சரி செய்திருக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.
நீக்குஅப்பாவின் கதைகளை இங்கு பகிரும் எண்ணம் ஆல்ரெடி உண்டு!!
வெள்ளியின் கதம்பம் - சிறப்பு.
பதிலளிநீக்குகவியரசர் - வாலி பற்றிய குறிப்புகள் - ஆகா!..
ஆஹா செல்வாண்ணா.. சந்தோஷமாயிருக்கிறது. நன்றி.
நீக்குகாலையில் சுருள் தோசைகள் அடடா!..
பதிலளிநீக்குசட்னி வகைகளும் வைத்திருக்கிறேன் பாருங்கள்...!!
நீக்குசட்னி வகைகளை சொல்வதற்கு
பதிலளிநீக்குமறந்து விட்டேன்...
ஹிஹிஹி.. நாங்கள் மறக்காமல் செர்வ் செய்துடுவோமே...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குIIT ப்ரொபசர்களுக்கு IIT யில் படிக்காதவர்கள் மடையர்கள் என்று ஒரு
பதிலளிநீக்குஅபிப்பிராயம், theory யில் மட்டம் தட்டி விடுவார்கள். //
பெரும்பாலோர் அப்படித்தான், ஜெ கே அண்ணா. கொம்பு முளைத்தது போல் செயல்படுவாங்க. அது எதனால் என்றால், சமூகத்தில் ஐ ஐ டி என்றாலே அறிவு ஜீவிகள் என்ற பொதுவான எண்ணம், ஸ்டேட்டஸ் சிம்பல். அது ஒரு சிலருக்குக் கர்வத்தைக் கூட்டுகிறது.
கீதா
வாங்க கீதா... பதில் JKC சொல்வார்!
நீக்குஅண்ணா, எத்தனை இடர்பாடுகளுக்குப் பின் இன்டெர்வ்யூ! ரொம்ப பதற்றமான சூழலாக இருந்திருக்கும் இப்போது போல அத்தனை சௌகரியங்கள் இல்லாத காலமும் கூட இல்லையா?
பதிலளிநீக்குஐ எஸ் ஆர் ஓ இன்டெர்வ்யூ எல்லா கிரேடுகளுக்குமே கடினம் தான். அதில் கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களும் உண்டு.
கீதா
புரியுது!
நீக்குபரவால்லையே ஏ ஐ நல்லாவே பதில் சொல்லுது!! (எல்லாம் நாம மக்கள் போடும் இன்புட் தானே!!!)
பதிலளிநீக்குகீதா
ஆனால் எவ்வளவு வேகமா தேடி எடுத்து கொடுக்குது பாருங்க...
நீக்குஅவர்கள் மன்னருக்காக தங்கள் உயிரை பணயம் வைப்பதால், குடும்பங்களை ஏற்படுத்தி கொள்வதில்லை. அந்தத் நவகண்ட நாயகர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பிரதான கரு. மன்னர்களை காப்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் துறக்கிறார்கள்! சுகங்களை இழக்கிறார்கள்! //
பதிலளிநீக்குவேதனையான விஷயம் இல்லையா? எப்படி இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கும்? ஒரு வேளை ராஜ ரகசியங்கள் வெளியாகக் கூடாது என்பதால் இருக்குமோ?
கிட்டத்தட்ட, இப்போதைய இராணுவத்தினருக்கு, விஐபிக்களுக்குக் கொடுக்கப்படும் கமாண்டோஸ், ஒற்றர்களுக்கு நிகர் என்றாலும் இராணுவத்தினர், மணம் செய்து கொண்டு குடும்பம் என்று இருப்பதும் இழப்புகளும் வலிகளும் நிறைந்த பணிதானே!. குறிப்பாக எல்லையில் இருப்பவங்க. ஒற்றர்களுக்கான வாழ்க்கை இன்னும் ரிஸ்க்.
இதன் அடிப்படையில் ஒரு கதை கால்வாசியில் இருக்கு.
கீதா
ஆ.. இதிலும் கால்வாசி எழுதி வைத்திருக்கிறீர்களா?
நீக்குஅதெல்லாம் இராணுவ வீரர்களின் மரணம் பற்றி அறிய நேரும் போதும், விஐபிக்களுக்கு இருக்கும் கமாண்டோஸ் தலைவரைக் காப்பாற்ற முற்படும் போது இறக்கும் சம்பவ்னகளை அறிய நேர்ந்த போனது எழுத முற்பட்டு...என்னவோ போங்க...அப்படியே இருக்கு சில விஷயங்கள் சேகரிக்க வேண்டும் என்பதால்...தூசி தட்ட வேண்டும் சமீபத்தில் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கின் கனெக்ஷன் வயர்கள் கிடைச்சப்ப கணினியில் இணைத்துப் பார்த்தப்ப அடக்கடவுளே எல்லாம் இப்படி நிக்குதேன்னு!
நீக்குகீதா
Dhuranthar! :))))
நீக்குபார்த்தாச்சா? மூன்றரை மணி நேர படம். பொறுமையாகப் பார்த்தேன். பெரிதாக போர் அடிக்கவில்லை.
நீக்குNo.
நீக்குநவகண்ட நாயகி சுவாரசியமாக இருக்கும்னு தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
பரவாயில்லை, ஓகே.
நீக்கு’அவளுக்கென்ன அழகிய முகம் //
பதிலளிநீக்குஇது அசாத்தியமான பாடல்! கவிஞர் என்றுதான் நினைத்திருந்தேன். வாலி என்பது இப்பதான் தெரிந்தது.
வாலியும், கண்ணதாசன் அவர்களும் என்ன ஒரு அழகான காதல் நட்பு! கவிஞரின் பாராட்டும் குணம்தான் அந்த மனதுதான் அவரை இன்றும் வாழ வைத்துள்ளது!
கீதா
ஆமாம். இதேபோல ஒரு பாடலில் ஆணை சந்திரன் என்று வாலி வர்ணித்திருப்பதைக் கேட்ட கவிஞர் அந்தப் படத்தின் இயக்குனரிடம் ஆணை எப்படி சந்திரன் என்று சொல்லலாம் என்று கேட்டதை அவர் வாலியிடம் சொல்ல, வாலி நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். அவருக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்றாராம். அப்புறம் பதிலும் சொன்னாராம் - அவர் அதே போல முன்னர் எழுதி இருந்த பாடல்களை சுட்டிக் காட்டி!
நீக்குதிரு ஞானசம்பந்தம் அவர்களின் பேச்சு சுவாரசியம். இந்தப் பாட்டு வாலி என்பது தெரியும்.
பதிலளிநீக்குஎபியில் இப்பாட்டு வந்ததோ இல்லை இதைப்பற்றிய குறிப்புகள் அதாவது வாலி அவர்களைப் பற்றிய பகுதிகளில் வந்த ஒன்று என்று நினைவு.
கீதா
ஆமாம். நானும் பகிர்ந்திருந்தேன். நீங்களும் வேறெங்கும் கூட படித்திருக்கும் வாய்ப்பு மிக் அதிகம்.
நீக்குஇதற்கு முந்தய ஒரு வெள்ளியில் சினிமா செய்திகள் அதிகம் இருந்தன, இன்று இலக்கிய செய்திகள் அதிகம்.
பதிலளிநீக்குபதிவி உயர்வு பெற JKC Sir பட்ட பாடுகள் அதிகம்தான்.
சினிமாவும் ஒருவகை இலக்கியம்தான் அக்கா...!
நீக்குஅந்த வாரம் கையில் எதெது சிக்குகிறதோ அவற்றையெல்லாம் கூடையில் போட்டுக் கொண்டு வந்து இங்கு கொட்டி விடுகிறேன்!
// சினிமாவும் ஒருவகை இலக்கியம்தான் அக்கா...!// இலக்கியத்தின் நீர்த்துப் போன வடிவம்.
நீக்கும்ம்ம்.. சொல்லலாம். இந்த மட்டுமாவது இலக்கியம் என்று ஒப்புக் கொண்டீர்களே... ஹிஹிஹி...
நீக்குஹேமலதா பாலசுப்பிரமணியன்... பெயர் கேள்விபட்ட மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. யார் என்பது தெரிந்து விட்டது. அவருடைய புத்தகம் ஒன்றை ஸ்ரீராம் எனக்கு அன்பளிப்பாக தந்தார். அதிலிருந்த பல கருத்துகள் மலைக்க வைத்தன.
பதிலளிநீக்கு//இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.// ஸ்ரீராமின் தந்தையைப் பற்றி கட்டுரையாசிரியரின் வருத்தம் நியாயமானதுதான். அதற்குதான் அதிர்ஷ்டம் என்று பெயரோ?
நன்றி பானு அக்கா. இதற்கு நானென்ன பதில் சொல்ல...
நீக்குவாலி எழுதிய பல நல்ல பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன.பாவம். இதே போல கங்கைஅமரன் இசை அமைத்த சில பாடல்கள் இளையராஜாவால் இசையமைக்கப் பட்டவை என்று கருதப்பட்டதுண்டு.
பதிலளிநீக்குஆமாம். உண்மைதான். வாழ்வே மாயம் கங்கை அமரன் இசை அமைத்த படம் என்று இன்னமும் நிறையபேருக்கு தெரியாது!
நீக்குநவகண்ட நாயகி.. படிக்க முயற்ச்சிக்கிறேன். பொன்னியன் செல்வன், திருவரங்கன் உலா, நான் கிருஷ்ண தேவராயன் பாணியில் இருந்தால் பிடிக்கும்.
பதிலளிநீக்குஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும் முன் தயவு செய்து இப்படி எல்லைகளை வகுத்துக் கொள்ளாதீர்கள். இது எப்படி என்றால் "எங்கம்மா சமையல் மாதிரி இல்லை" டைப்! புதிய அனுபவத்துக்கு எப்பவுமே தயாராகுங்கள்.
நீக்குஒரு வகையில் நீங்க சொல்லுவது சரியே. ஆனால் எனக்கு ரமணி சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் போன்றோரின் எழுத்துக்கள் கவர்ந்ததில்லை. கூடியவரை தவிர்ப்பேன். இன்னமும் சிலர் இருக்காங்க தான். ஆனால் சரித்திர நாவல்களுக்கு வரம்பு வைச்சுக்கலை. ஜெகசிற்பியன். கோ.வி. மணி சேகரன், அகிலன், நா.பா. விக்ரமன், சாண்டில்யன் எனப் பலருடையதும் படிச்சிருக்கேன் இப்போக் கிடைச்சாலும் படிப்பேன் "உடையார்" தவிர்த்து. நட்புக்களின் எச்சரிக்கையை மீறி "உடையார்" படிக்க ஆரம்பிச்சுட்டுப் பின்னர் நிறுத்திட்டு "அப்பாடா"னு மூச்சு விட்டேன். :(
நீக்குநீங்கள் சொல்லும் இரண்டு விஷயங்களுமே எனக்கும் பொருந்தும் ரமணி சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் எழுத்துகள் படித்ததே இல்லை. ATM ரமணி சந்திரனின் பயங்கர விசிறியை இருந்தார் ஆரம்ப காலங்களில்.
நீக்குவரலாற்றுக் கதைகள் படிக்க தயக்கம் காட்டியதில்லை. வரலாற்றுக் கதைகளில் சோழ வரலாற்றுக்கு கதைகள்தான் அதிக சுவாரஸ்யம்.
ஐந்து வகை தோசை... ரமணி VS ரமணி பார்ட் 2 வில் 35வகை தோசை செய்து போடுவாரே அது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குமதுரையில் பிரேம்நிவாஸ் என்று ஒரு ஹோட்டல் இருக்கிறது. அதில் வருடத்துக்கொருமுறை தோசைத் திருவிழா நடக்கும்.
நீக்குஆமாம், போனவார பதிவில் மெகா தோசை வீடியோ பார்த்தீர்களோ?
நாங்க இருந்தப்போ எல்லாம் மதுரையில் இந்த தோசைத் திருவிழாவை "ஆர்ய பவன்" நடத்தும். அப்போத் தான் வந்து 2, 3 வருடங்கள் ஆகி இருந்த சமயம். டெல்லிவாலாவும் அறுபதுகளில் வந்தது தான். ஆர்ய பவனுக்கு அப்போல்லாம் யாரும் அதிகம் போகமாட்டார்கள். மேலமாசி வீதி மாடர்ன் ரெஸ்டாரன்ட் அல்லது சிம்மக்கல் அருகே மாடர்ன் லாட்ஜ் தான் அதிகம் போவார்கள். இதைத் தவிர எனில் காலேஜ் ஹவுஸ். அப்போல்லாம் எங்க சொந்தக்கார மாமா ஒருத்தர் தான் அதை நடத்தி வந்தார். அவங்க பெண் எங்க பெரியப்பா பெண்ணோடு படிச்சவர். பெரியப்பா பெண் கல்யாணம் ஆகிப் போய்விட்டார். இவங்க மருத்துவம் படிச்சுட்டுப் பெரிய மருத்துவரா ஆனாங்க. இதைத் தவிரவும் கண்ணாடிப் பெட்டியில் இட்லி, தோசை, வடை, பஜ்ஜி, காராவடை, உ.வடை. மசால் வடை, போண்டா கொண்டு வரும் மாமா, இன்னொருத்தர் கோவிந்தன் என்பவர் இவங்கல்லாம் வீட்டில் தயாரித்துக் கொண்டு சூடு ஆறும் முன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கக் கண்ணாடிப் பெட்டியில் வைச்சுக் கொண்டு வருவாங்க. போளி கூட அதில் உண்டு.
நீக்குஆர்யபவன், மாடர்ன் ரெஸ்ட்டாரெண்ட் எல்லாம் போயிருக்கேன். அப்பா, அண்ணன் குடும்பம் மேல அனுமந்தராயன் தெருவில் - எம் எஸ் சுப்புலக்ஷ்மி இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தபோது அதன் வழியே அந்தப் பக்கம் சென்றால் மாடர்ன் ரெஸ்ட்டாரெண்ட். மதியம் லன்ச்சுக்கு சென்றால் நாம் இடம் பிடிக்க காத்திருக்க வேண்டும்!
நீக்குஇப்போவும் அப்படித்தான் இருக்கு. மாமா கடைசியா 22/23 ஆம் ஆண்டில் மதுரை போனப்போக் கூட அப்படித்தான் இருந்திருக்கு. சாப்பாடு நன்றாக இருந்தது என்றார்.
நீக்கு2016 க்கு அப்புறம் மதுரை போகவில்லை. இந்த ஏப்ரல் 22 வந்தால் பத்து வருடம் ஆகி விடும். அந்தப் பக்கம் சென்றால்... என்று மனதில் ஒரு லிஸ்ட் இருக்கிறது..
நீக்குசோழியன் குடுமி சும்மாடு ஆகாது - சிறப்பான விளக்கம்.
பதிலளிநீக்குகடைசியில் தேவன் தேவந்தான்!
ஹிந்தோளத்தில் பாடி விடலாமா?!
நீக்கு"சோழியன் குடுமி" பத்தி முன்னரே படிச்சிருக்கேன். என் மாமாக்கள் எல்லாம் தமிழில் கரை கண்டவர்கள். பாட்டியும் தமிழில் தானாகவே பாட்டுக்கள் இட்டுக்கட்டும் திறாமை உள்ளவர். எனக்கெல்லாம் ஏனோ அது வரவில்லை. :)))))
நீக்குஅந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். //
பதிலளிநீக்குஓ! விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தாரா அப்பா?!!
கீதா
அது ஒரு கதை... அம்மா மறைவுக்குப் பின் .... ப்ரைவஸி நாடி...
நீக்குஅப்பா எழுதிய பல வாழ்வியல் சிந்தனைகள் கொண்ட புத்தகம் தூறல்கள் நீங்க எனக்குக் கொடுத்தீங்க. என் சிந்தனைகளுக்கு ஒத்த கருத்துகள் நிறைய இருந்தன அதில். அதைப் பற்றி எங்கள் தளத்தில் எழுதிய நினைவும் கூட.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நானும் படித்துப் படித்து பிரமிக்கும் புத்தகம் அது.
நீக்குகங்கை அமரன் இசையமைப்பு கூட இளையராஜா என்று சொல்லப்படுவதுண்டு. இது மேலே சொல்ல விட்டுப் போனது மற்ற என் பழைய ஐடியிலிருந்து போட வைத்துவிட்டுச் சென்று விட்டேன். இப்ப இந்த ஐடி கருத்தைப் போடுது எனவே இங்கு அதைக் கொடுக்கிறேன்
பதிலளிநீக்குஎன் பெயரைப் போடும் முன், முந்திரிக்கொட்டை கர்சர் துள்ளிப் போய் வெளியிட்டுவிட்டது1
நீக்குகீதா
ஓ.. உங்கள் வீட்டில் நிறைய முந்திரிகள் சிதறிக் கிடக்கும் என்று சொல்லுங்கள்! :))
நீக்குகும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.//
பதிலளிநீக்குஆஹா!!!! ஸ்ரீராம், உங்க பின் புலம் பெரிசா இருக்கிறதே! அதே வரிசையில் நீங்க இப்ப!
கீதா
அது சரி.. அதற்கு நான் என்ன செய்ய.. எங்கள் பின் வீட்டில் மாளிகைக் கடைக்காரர்தான் இருந்தார்!!
நீக்கு:))) நல்ல வார்த்தை விளையாட்டு உங்களுடையது. அதனால்தான், பன்முக திறமையுடன் திகழ்கிறீர்கள
நீக்குஹிஹிஹி.. ஆமாம்.. எல்லாமே விளையாட்டாதான் போகுது!
நீக்குகும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.//
பதிலளிநீக்குஉண்மை உண்மை! அது ஏன் இப்படி? இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காது நமக்கு என்பது தெரிந்ததுதான். ஆனாலும் இலக்கிய உலகம் வஞ்சம் செய்துவிட்டது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
எல்லாத்துக்கும் ஒரு மச்சம் வேணும் போல!
கீதா
அப்படி எல்லாம் இல்லை. முயற்சி பலனளித்திருக்காது! அப்படிச் சொன்ன வைத்தியநாதன் இவர் படைப்புகளை வாங்கி தினமணி கதிரில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கலாமே!!
நீக்குhttp://tinyurl.com/jrpw7rc//
பதிலளிநீக்குஸ்ரீராம் சுட்டி எரர் சொல்லுதே. தினமணியில் வந்தது என்று தெரிகிறது. வைத்தியநாதன் சார் என்பவர் யார்? ஸ்ரீராம்?
கீதா
ஆமாம்.. சுட்டி வேலை செய்யவில்லை. ஒன்றும் செய்ய முடியாது. தினமணி ஆசிரியர்தான் வைத்தியநாதன். கலாரசிகன் என்ற பெயரில் ஞாயிறுதோறும் எழுதுவார்.
நீக்கு404
நீக்குOops.. Page not found !
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.
வாங்க கீதா அக்கா.. தினமணியியல் அந்தப் பக்கம் 'போயே போயிந்தி' போல!
நீக்குகிளம்பும்போது இந்த தோசை பற்றி ஹோட்டல் மேனேஜரிடமும், சர்வரிடமும் சொல்லி சமையல்காரருக்கு தோசை டிப்ஸ் கொடுத்து வந்தேன்!//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா.....அந்த மர்ம தோசையில் மசால் ஸ்டஃப்ஃபிங்? இல்லை பச்சை சட்னி ஏதாச்சும்? இல்லை எல்லாம் கலந்ததா? அதாவது 4 ஸ்டஃபிங்கும்?
தோசை பார்க்க நல்லாருக்கு. சுவையும் நல்லாருந்ததுன்னு சொல்லிருக்கீங்க!
கீதா
தேங்காய்ப்பூ தோசை!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் அலுவலக பதவி உயர்வு பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தது. எத்தனை தடங்கல்கள் அந்த பதவி உயர்வை பெற... அவரின் பொறுமை, தடங்கல்களை சமாளிக்கும் சகிப்புத்தன்மை, இறைவன் அருள் என அனைத்தும் வந்த தடங்கல்களை புறந்தள்ளி அவருக்கு பதவி உயர்வுகளை பெற்றுத் தந்துள்ளது.
/ இருந்தபின், 5 இன்டெர்வியூக்களுக்குப்பின் போனால் போகிறது என்று retirement க்கு 6 மாதம் முன்பு கிடைத்தது தனி கதை, அதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் முக்கிய காரணம் என்னுடைய நக்கீரத்தன்மை./
இந்த நேர்மை நமக்கு நன்றாக இருந்தாலும் மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டுமே...!என் கணவரும் அடிக்கடி இதைத்தான் சொல்வார்கள். நமக்கு தேவையானதை எப்போதுமே இறைவன் அன்புடன் தருவான்.அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டால் நல்லதுதானே.! சுவாரஸ்யமான, அனுபவ கட்டுரை நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை.
நீக்குசி ஐ டி சந்துரு நல்லாருக்கும். இப்ப சமீபத்தில் அப்பாவுக்கு வாசிக்க ஆன்லைனில் எடுத்துக் கொடுத்தேன். அப்பா பல தட்வை வாசித்தாயிற்று.!
பதிலளிநீக்குகீதா
அதிலிருந்து ஏற்கனவே கொஞ்சம் பகிர்ந்திருக்கிறேன்!
நீக்குகத்தார் வரும் முன்னால் மனம் சமனம் அடைவதற்காக தேவனின் நூல்களைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மைதிலி, ஜானகி, சி.ஐ.டி. சந்துரு, கோமதியின் காதலன், சாம்பு எனப் படிச்சுட்டு இருந்தேன். சி.ஐ.டி. சந்துரு இரண்டாம்பாகம் பாதி படிச்சுட்டுக் கையில் எடுத்து வராமல் அங்கேயே வைச்சுட்டு வந்தேன்.
நீக்குஸ்ரீமான் சுதர்சனம் எங்க வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில் இருக்கு. ஸி ஐ டி சந்துரு பி டி எப் ஆக கிடைக்கிறது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது." என்ற வாக்கியத்தின் பொருள் தெரிந்து கொண்டேன். இதுநாள் வரை "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்றுதான் சொல்லி வந்தோம். "தெனாலிராமன் தொடர்" பல மாதங்களுக்கு டி. வியில் முன் பார்த்து வந்தேன். அதில் தெ. ராமரின் குடுமி எழுந்து நின்று ஆடியபடியே அவருடன் நியாய வாதங்களைப் பேசும்படி அமைத்திருந்தார்கள். அது அவருக்கு மட்டுமே கேட்கும். அவரும் அதனுடன் பேசுவார். தொடர் நன்றாகப் போனது. நான்தான் என் நேரமின்மையால் தொடரை முழுதாக பார்க்க இயலவில்லை. அப்போதெல்லாம் இந்தப் பழமொழியைத்தான் நான் சொல்வேன். இங்கு படித்ததும் தெ. ராமர் நினைவு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓ.. நான் அந்தத் தொடர் பார்க்கவில்லை!
நீக்குஎனக்கும் இப்படி ஒரு தொடர் தொலைக்காட்சியில் வந்தது தெரியாது. ஆனால் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தே 3, 4 வருஷங்கள் இருக்குமே. அதனாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீக்குஸ்ரீராம் அப்பாவின் இந்தப் புத்தகத்தைத் தான் ஸ்ரீராமின் அண்ணா மதுரையிலிருந்து அனுப்பி வைச்சார்னு நினைக்கிறேன். தூறல்கள்னு ஒண்ணும் இருக்கு. அது எதுக்கோ பரிசாய் வந்தது. இப்போ எல்லாம் ஸ்ரீரங்கத்திலே இருக்கின்றன. "ஆனந்தப் பூங்காற்றே" என்றொரு நாவலும் கௌதமன் சார் ஏதோ பரிசுக்காக அனுப்பி வைச்சிருந்தார்னு நினைக்கிறேன். அதோடு தான் 500 ரூ. பணமும் கூட வந்த நினைவு. அந்தப் புத்தகத்தை இப்போக் காணோம். :( அது என்னமோ புத்தகங்கள் தொலைந்தாலோ அல்லது யாரானும் எடுத்துச் சென்று திருப்பிக் கொடுக்கலைனாலோ மனசு படும் பாடு சொல்ல முடியாது! இத்தனைக்கும் எவ்வளவோ பணங்களை முழுதும் எனக்குச் சொந்தமான பண்டங்களை இழந்திருக்கேன், அல்லது விட்டுக் கொடுத்திருக்கேன். அதெல்லாம் பாதிச்சதே இல்லை. இந்தப் புத்தகங்களினால் வரும் சண்டை ஒருவருக்கொருவர் பேச்சு, வார்த்தையே இல்லாமல் பண்ணி விடுகிறது. :(
பதிலளிநீக்குநல்லவேளையாக எனக்கு இதுவரை அப்படி அனுபவம் ஏற்பட்டதில்லை. ஆனால் சில புத்தகங்கள் திரும்பி வராமல் இருக்கின்றன!
நீக்குYessu 3, or 4 bindings are with me in Srirangam. :))))))) hehehehe
நீக்குஇதற்கு நான் இந்த :)) எமோஜி போடணுமா... இந்த :(( எமோஜி போடணுமா?!!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.
தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. /
கண்கலங்க செய்த வரிகள். உங்கள் அம்மாவின் மீதுதான் எத்தனை பாசம் உங்கள் அப்பாவுக்கு அதனால்தான் அவர் பெயருடனே வாழ்ந்து வந்தார். மேலும், உங்கள் அப்பாவின் திறமைகள் வியக்க வைக்கிறது. சிறந்த எழுத்தாளர். நீங்கள் அவரின் அச்சு அப்படியே..! நீங்கள் அவரின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்து சிறந்த எழுத்தாளராக பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். உங்கள் அப்பா எழுதிய கதைகளை கண்டிப்பாக எபியில் வெளியிடுங்கள். நாங்கள் படித்து மகிழ்வடைகிறோம் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த மாதிரி எல்லாம் யோகம் வருவதற்கு ஜாதகத்தில் ஏதோ இருக்க வேண்டுமாம். அது எனது எழுபதாவது வயதில்தான் வருகிறதாம்! அதுவரை பொறுத்திடுங்கள்... இன்னும் இருபத்தைந்தே ஆண்டுகள்...
நீக்குThen You are only 45? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ :))))))))
நீக்குஷ்ஷ்ஷ்... அதை வேற சத்தமா சொல்லிக்கிட்டு...
நீக்குஜேகே சி சார் கடுமையான அனுபவங்களைச் சந்தித்து அவர் பணியில் சிறப்பான இடத்துக்கு வந்திருக்கார். நல்ல உழைப்பு எப்போதுமே பலன் தரும். ஞானசம்பந்தம் பேச்சு இன்னமும் கேட்கலை. அவர் மதுரைக்கு அருகில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் ஊரான தென்கரையைச் சேர்ந்தவர். கண்ணதாசன், வாலி நட்புப் பற்றி முன்னரே சில பத்திரிகைகள் மூலம் படிச்சிருக்கேன். கங்கை அமரன் இசையும் பிடிக்கும். கரகாட்டக்காரன் படம் கங்கை அமரன் இசைதான்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.. நேற்று நீங்கள் ஆர்வி, சம்பந்தி விஷயங்கள் சொன்னவற்றைப் பார்த்தே ஆ என்று வாய்பிளந்து நிற்கிறேன்!
நீக்குஇன்னொரு வாய் பிளக்க வைக்கும் செய்தியும் சொல்றேன். திருப்பரங்குன்றம் புகழ் நீதிபதி அவர்கள் என் மாட்டுப்பெண்ணின் அண்ணா. சொந்தப் பெரியம்மா பிள்ளை. எங்க பையரை மாப்பிள்ளை என்றே கூப்பிடுவார் என்பார்கள். மதுரையில் தான் வாசம் பல ஆண்டுகளாக.
நீக்குஆ.. நிஜம்மாவா? நிஜமாகவே வாய் பிளக்கிறேன்... பெரிய ஆள் நீங்க...
நீக்குஅவர் ஜட்ஜ் ஆனதும் அவர் மனைவி முதலில் என்னைக் கூப்பிட்டுத் தான் தகவல் சொன்னார். :) நேரில் பார்த்துக்காட்டியும் பழக்கம் ஜாஸ்தி.
நீக்குஏனோ தெரியலை. இப்போல்லாம் சில ஆண்டுகளாகவே ஓட்டல்களின் தோசை பிடிப்பதில்லை. அதிலும் இம்மாதிரியான விதம் விதமான தோசைகள் சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை. எழும்பூரில் இருக்கும் சங்கீதா ஓட்டலில் ஆனியன் ஊத்தப்பம் கேட்டப்போ அதில் நிறையப் பொடியைத் தூவிக் கொண்டு வைச்சுட்டாங்க. இதை ஏன் போட்டீங்க? கேட்கவே இல்லையே நு கேட்டால் ஊத்தப்பம்னால் இப்படித் தான் தருவோம்னு சொல்லிட்டாங்க. கான்சலும் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்ல சுமார் 150 ரூபாய் என்பதால் வேறு வழியில்லாமல் பாதி தோசையைத் தின்னும்படி ஆச்சு. அதுக்கப்புறமா ஓட்டல் தோசை என்றாலே அலர்ஜி தான். :(
பதிலளிநீக்குவயசானா ஹோட்டல் பண்டங்கள் பிடிக்காது கீதா அக்கா..
நீக்குஆமாம்.. ஹோட்டலில் ஆனியன் ஊத்தப்பம் கேட்டால் இப்போதெல்லாம் பொடிதூவிதான் தருகிறார்கள். நான் சொல்லும்போதே பொடிதூவ வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.
//வயசானா ஹோட்டல் பண்டங்கள் பிடிக்காது கீதா அக்கா.. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ? நான் இன்னும் பிறக்கவே இல்லைனு கொஞ்ச நாள் முன்னாடி தான் எங்கேயோ சொல்லி இருந்தேன். :))))
நீக்குநான் பேச்சிலர்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதோசை அதன் பக்க வாத்தியங்களுடன் படங்கள் அருமை. பசியை தூண்டுகிறது. ருசியும் நன்றாக இருந்ததென கூறியுள்ளீர்கள். சில உணவகங்களில்தான் இவ்வாறு அமைகிறது. இங்கும் சில விடங்களில் நான் இவ்வாறு படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.
/கிளம்பும்போது இந்த தோசை பற்றி ஹோட்டல் மேனேஜரிடமும், சர்வரிடமும் சொல்லி சமையல்காரருக்கு தோசை டிப்ஸ் கொடுத்து வந்தேன்!//
உங்களின் இந்த நல்ல பழக்கத்திற்கு தலை சாய்த்த வணக்கங்கள். எத்தனை பேருக்கு இப்படிச் செய்யத் தோன்றுமென வியப்பு வருகிறது. 👌. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. அதற்கொரு பாராட்டா. நீங்கள் பாராட்டுவதில் வள்ளல் கமலா அக்கா... அந்த தோசை படங்களை பார்த்தால் எனக்கே இன்னொருதரம் சென்று சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகிறது!
நீக்குJkc அவர்கள் அனுபவங்கள் உத்தியோக உயர்வின் பல சிரமங்களையும் எடுத்துச் சொல்கிறது.
பதிலளிநீக்குகதைப்பகிர்வு இரண்டும் நன்று.
கண்ணதாசன் வாலி பக்கம் அறிந்தோம்.
ஐந்து வித தோசைகள் சூப்பர் நீங்கள் . பாராட்டியது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
வாங்க மாதேவி... கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குஅப்புறம் என்ன ஆச்சு?
பதிலளிநீக்குசார் இண்டெர்வியு க்கு போகும் போது ஏற்பட்ட தடங்கல்கள் தான் எத்தனை!
அத்தனை தடைகளையும் உடைத்து நல்லவிதமாக இண்டெர்வியு முடித்து பதிவி உயர்வு பெற்ற அனுபவங்களை படித்த போது வேலைபார்க்கும் இடங்களில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்து இருக்கிறது அவற்றை நல்ல படியாக கடந்து ஓய்வு பெறுவது பெரிய சாதனைதான்.
ஆமாம். அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம் என்று எனக்கும் நினைவில் இருக்கும்!
நீக்கு//தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது.//
பதிலளிநீக்குஅப்பாவின் அன்பை நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார்.
அன்பான துணையின் இழப்பு மனம், உடலை தளர செய்துவிடும்.
ஏழு வருடங்கள் மதுரையை விட்டு கிளம்பாமல் இருந்தார். பின்னர் நாங்கள் வற்புறுத்தி சென்னைக்கு வரவழைத்தோம்.
நீக்குகண்ணதாசன் - வாலி பற்றி ஒரு செய்தியும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//சமையல்காரருக்கு தோசை டிப்ஸ் கொடுத்து வந்தேன்!//
ஆஹா! தோசையை பாராட்டி தோசை டிப்ஸ் வேறு கொடுத்து வந்தீர்களா?
பேஷ்! பேஷ்!
ஹா. ஹா.. ஹா.. நன்றி கோமதி அக்கா.
நீக்குதேவன் அவர்களின் ஸி ஐ டி சந்துரு கதை பகிர்வு அருமை.
பதிலளிநீக்கு__/\__
நீக்கு