நாம் புள்ளமங்கை ஆடுதுறையார் கோயிலில் இருக்கிறோம். அங்கிருக்கும் சிறந்த சிற்பங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இனித் தொடர்வோம்.
திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில், இந்தத் தலத்து ஈசனை பத்து பாசுரங்களால் பாடியுள்ளார். அதில்,
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
பால் உந்து உறுதிரள் – பாலைக் கடைவதால் விளையும் வெண்ணெய். பிரமனும் அவனைப் போன்ற அந்தணர்களும் வாழும் பொழில் சூழ்ந்த ‘புள மங்கை’. காலனை வென்ற அந்த ஆலந்துறையாரைத் தொழுது ஒழுகுபவர்களை எந்த வினையும் அடையாது.
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை யதுவே.
இமயவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவன், இருக்கின்ற பொழில் சூழ்ந்த புளமங்கை என்ற தலத்தை கலைகள் பலவற்றை அறிந்த அறிஞர் பலர் தொழுதுநிற்பர். அப்படிப்பட்ட, குளிச்சி நிறைந்த காவிரி பாயும் ஆலந்துறை என்று பாடுகிறார்.
இந்தப் பத்து பாசுரங்களிலும் திருஞான சம்பந்தர், ‘புள மங்கை’ என்றே குறிப்பிடுகிறார். புள்ளமங்கை என்றல்ல.
ஆலந்துறை என்பதற்கு ஆலமரங்கள் சூழ்ந்த இடம் என்றும் பொருள் கொள்ளலாம். நீர்த்துறை அருகில் அமைந்த இடம் என்றும் பொருள் கொள்ளலாம் (ஆலம்-நீர்)
மூன்று தளங்களுடைய இந்தக் கோயில், அகழி சூழ் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. அதிஷ்டானம் முதல் சிகரம் வரை கற்றளியாக க் கட்டப்பட்டிருந்தாலும், தற்போது சிகரம், சுதையினால் அமைந்துள்ளது
அனேகமாக எல்லாக் கோயில்களிலும், கருவறை, அந்தராளம் மற்றும் அர்த்த மண்டபம் அமைந்திருக்கும். அந்தராளம் என்ற பெயர் வித்தியாசமாக இருக்கும். இந்தப் பகுதியில்தான் வேதம் ஓதும் பிராமணர்கள் நின்றுகொடு வேதம் ஓதுவர் (அல்லது பிரபந்தம். சிவன் கோயில்களில் இந்த முறை முன்பு இருந்திருக்கும். நான் சென்றிருக்கும் அனேகமாக எல்லாக் கோயில்களிலும் (ஆகமங்கள் strictஆக கடைபிடிக்கப்படும்) அந்தராளத்தில் சட்டை இல்லாமல் இருந்தால்தான் அனுமதிப்பர். (அதனை ஸ்வரூபத்தில் இருந்தால்தான் அனுமதிப்பர் என்று சொல்லலாம்) தற்காலத்தில் சில பல கோயில்களில் இந்த நடைமுறை practical காரணங்களால் பின்பற்றப்படுவதில்லை,
இந்தக் கோயிலில் கருவறை, அந்தராளம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவையே சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை. மற்றவையெல்லாம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. அதனால்தான் சிற்பங்கள், தூண்களின் அழகு போன்றவை அர்த்தமண்டபத்தில் மாத்திரம் காணக் கிடைக்கின்றன.
புள்ளமங்கை
பகுதியில் 7ம் நூற்றாண்டிலிருந்து
சாம,
இருக்கு
வேத விற்பன்னர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்களுக்காக இறையிலி நிலங்கள்
விடப்பட்டிருந்தன.
இராஜராஜ
சோழன் இங்கு வந்து சாமவேதம் கற்றுக்கொண்டதாக ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இந்த ஊரே அந்த வேத
விற்பன்னர்களுக்காக விடப்பட்டிருந்த பிரமதேயமாக இருந்திருக்கக்கூடும்.
இரண்டு விமானம் தாங்கிகளுக்கு நடுவே விஷ்ணு ஐந்து தலை ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் சிற்பம். இதனைக் கூர்ந்து கவனித்தால் ஒரு கையில் சங்கும், இன்னொரு கையில் பிரயோகச் சக்கரமும், அழகிய அணிகலன்கள், ஆடையுடன் அமர்ந்த நிலையில் இருப்பது தெரியவரும்.
இரண்டு விமானம் தாங்கிகளுக்கு நடுவே நரசிம்மர் நின்ற நிலையில் இருக்கும் சிற்பம். அவர் தாங்கியிருப்பது பிரகலாதனை. அந்தச் சிறுவன் அண்ணாந்து பார்த்து அவரது முகத்தை நோக்குவதாக இருக்கிறது. சிறுவனின் காதுகளில் நீண்ட வளையங்கள் தோள்களைத் தொடுவதாக இருக்கிறது. அரையாடை அணிந்திருக்கிறான்.
அப்பா..ஒரு வழியாக
சிகப்பு நிறம் இல்லாத டி ஷர்டுடன் நான்.
பஞ்சரத்தில் கங்காளர்
நிற்கும் முறை காஞ்சி கைலாசநாதர் கோட்டத்தில் அமைந்த கங்காளரைப் போன்ற உருவ
அமைப்புடன் உள்ளது.
ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து கவனித்தால் அந்தக்கால சிற்பக் கலையின் கூறுகளும், மாந்தர்களையும் தெய்வங்களையும் உளியால் செதுக்கப்பட்ட தன்மையையும் நம்மால் அறிந்து வியக்க முடியும்.
நாம் ஒரு கட்டிடம் கட்டவேண்டும் என்று கட்டுபவர்களை ஆலோசித்தாலே அவர்கள் முதலில் நம் பட்ஜெட் என்ன, எந்த மாதிரி எவ்வளவு பெரிதாக என்ன என்ன வசதிகளோடு இருக்கவேண்டும் என்றெல்லாம் கேட்பார்கள் இல்லையா? ஒரு கோயில் என்றால் அதில் மூலவர் மற்றும் தாயார் சன்னிதி இருக்கவேண்டும் என்பது குறைந்தபட்சம். இங்கும் கோயில் என்பது சிறிய அளவில்தான் இருக்கிறது. ஆனால் அவற்றின் சிற்ப நேர்த்தி இந்தக் கோயிலைக் கலைச்சிற்பமாக ஆக்குகிறது. அதனால் இந்தக் கோயில் செய்வதற்கு முன்பும், எவ்வளவு பட்ஜெட் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டிருக்கும். கலையில் தாகமுடைய சிற்பக் கலைஞர்கள் இதனைத் தங்கள் திறமைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு மிக அழகுறச் சமைத்திருப்பார்கள். அவர்கள் அவ்வளவு முயற்சி எடுத்துக்கொண்டதற்கு அரசனிடம் வெகுமதி கிடைத்திருந்திருக்குமா, எவ்வளவு என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதனைக் காண்பவர், அடடா.. எத்தனை திறம் வாய்ந்த சிற்பக் கலைஞர்கள் என்று வியந்து அவர்களை மெச்சுவதற்கு ஈடாகுமா அந்த வெகுமதிகள்?
இதனை எழுதும்போதே, செல்வம், வசதியாக வாழ்வதின் அர்த்தம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு மாறியிருக்கிறது என்று யோசிக்கிறேன். சோழர் வரலாறு பார்த்துக்கொண்டிருக்கும்போது தற்கால நிலையை ஒப்பீடு செய்வதோ இல்லை கடந்த நூறு ஆண்டுகளுக்குள் நாம் கடந்துவந்த பாதையை நோக்குவதோ அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று தோன்றினாலும், சிற்பிகளுக்கான வெகுமதி என்று எழுதும்போது எனக்கு இந்த எண்ணம் வந்தது.
‘காமம்’ என்பதை ஆசை என்ற பொருளில் நாம் பார்க்கவேண்டும். இந்த ‘ஆசை’ என்பது நுகர்ச்சி சம்பந்தப்பட்டது அல்ல, நம் மூளையைச் சார்ந்தது. எப்போது நாம் மனதைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழக்கிறோமோ, அப்போது நுகர்ச்சியின் பிடியில் நாம் சிக்கிக்கொள்கிறோம். நுகர்ச்சிக்கு எல்லை இல்லை. அது ஒருபோதும் போதும் என்று சொல்லாது. நான்கு தலைமுறைக்கு முன்பும் வாழ்ந்து மறைந்தார்கள். நாமும் வாழ்ந்து மறையப்போகிறோம். ஆனால் இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த தற்கும் தற்போதைய வாழ்க்கை முறைக்குமே எவ்வளவு பெரிய இடைவெளி. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வீடு, அதில் காலம் சார்ந்த வசதிகள் போன்றவை தற்போது குறைந்தபட்சத் தேவையாகிவிட்ட து. எப்போதும் மக்களில் மூன்று பிரிவினர் உண்டு. ஒன்று பணத்தால் உயர்ந்தவர்கள். மூன்றாவது பணத்தினால் குறைந்தவர்கள். இடையில் இருப்பவர்கள் மத்தியதர வர்க்கம். இந்த இடையில் இருப்பவர்களே சமூக ஒத்திசைவுக்கான சக்தி என்று நினைக்கிறேன். இந்த மத்திய தர வர்க்கம் நுகர்ச்சியை அளவுக்கு அதிகமாக விரும்ப விரும்ப, அந்த சமநிலை அடிபட்டுவிடுகிறது.
சோழர் காலத்தில் சிற்பப் பிரிவினருக்கு அந்த அந்த இடங்களில் தங்கி வேலை பார்த்துவிட்டு, தன்னுடைய உணவு தங்குமிடத்திற்கு வழி செய்துகொண்டு, பிறகு தன் குடும்பத்துக்கான தேவைக்கு சம்பாதித்தால் மாத்திரம் போதுமானது. அதற்குமேல் அவர்களுக்கு ஆசை இருந்திருக்காது. ஆனால் தற்காலம் அப்படி இல்லை இல்லையா? இதை எழுதும்போது என் சித்தப்பாவிடம் இருபது வருடங்களுக்கு முன்னால் நான் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. எவ்வளவு சம்பாதித்தால் போதும், நான் திரும்பிவிடலாம் என்பது என் கேள்வி. அதற்கு அவர் பதில், எவ்வளவு சம்பாதித்தாலும் போதா து. ‘போதும்’ என்பது நம் மனசு சம்பந்தப்பட்டது. அதனால் இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் நம் மனதைக் கேட்டுக்கொள்ளவேண்டும். அது ‘போதும்’ என்று சொல்லிவிட்டால் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்த நிலைக்கு நம்மை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்றார்.
இந்தப் பதிவில் முடிந்தவரை எல்லாச் சிற்பங்களையும் கொண்டுவந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படம்பிடிக்காதது ஒரு குறைதான்.
அடுத்த வாரமும் புள்ளமங்கையில்தான் இருக்கப்போகிறோம்.
(தொடரும்)
பதிகம் வாசித்ததுமே ஓரளவு அதன் பொருள் புரிந்துவிடுகிறது. திறலவர் என்பதற்கு நான் நினைத்த பொருள் வேறு. அடியார்களின் மன உறுதி என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன். திருமுறைகள் அனைத்துக்கும் அர்த்தத்தோடு புத்தகங்கள் வந்திருக்கு என்று நினைவு.
நீக்குபுள மங்கை என்று குறிப்பிடுவதைக் கவனிக்க முடிந்தது.
பதிலளிநீக்குகீதா
கல்வெட்டுத் தூண் நுணுக்கமான செதுக்கல்கள் பேரழகு!
பதிலளிநீக்குகீதா
விஷ்ணு சிற்பத்தைக் கூர்நு கவனித்தால் தெரிகிறது. அதற்கு மேலான சிற்பங்களில் சிவன், பூதணங்கள் அடியார்கள் என்று சூழ்ந்திருக்கும் சிற்பங்கள் போன்று தெரிகிறது. பழைமை தெரிகிறது. செப்பனிட்டுப் பாதுகாத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
விமானம் தாங்கிகள் ரொம்பவே வியப்பான சிற்பம். போன பதிவிலும் பார்த்துக் குறிப்பிட்டிருந்த நினைவு,
பதிலளிநீக்குகீதா
நரசிம்மர் பிரகலாதன் பார்த்ததுமே புரிந்துவிடுகிறது.
பதிலளிநீக்குநீங்கள் நின்று எடுத்திருக்கும் பகுதியில் சிற்பங்கள் செமையா இருக்கு
கீதா
சிகப்பு நிறம் இல்லாத // ஹாஹாஹா....நெல்லை, ஆனா கரை வேஷ்டியில் சிவப்புங்கோ!!!! கருப்பு சிவப்பு!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
அட.... இப்படி யோசிக்கவில்லையே. பெரும் தவறு செய்துவிட்டேனோ?
நீக்குகங்காளர் தெளிவாகத் தெரியலையே! படத்தைப் பெரிது படுத்தவும் முடியவில்லை.
பதிலளிநீக்குகீதா
சிவன் படுத்திருக்கும் சிற்பமா? அதற்கு அடுத்து வருபவை லக்ஷ்மி வராகர்? அருகில் சிவன் நர்த்தனம்?
பதிலளிநீக்குஅதற்கும் கீழே அடிப்பகுதி....இந்த மாதிரி இண்டு இடுக்குகள் இருந்தால் எவ்வளவு பராமரிப்பு தேவை இல்லையா!?
கீதா
நிச்சயமாகச் சிற்பிகள் அசாத்திய திறமை படைத்தவர்கள். இப்போதும் சிற்பிகள் இருக்கின்றார்கள். காலகட்டம் மாறுவதால் அதற்கு ஏற்ப மாற்றங்கள் வரலாம்.
பதிலளிநீக்குபழைய காலம் பிறகு வந்த காலங்களில் அந்தந்தக் காலங்கள், நூற்றாண்டுகளின் வாழ்க்கையை, மாந்தர்களைச் சித்தரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்குமா? உதாரணத்திற்கு இப்போதைய வாழ்க்கையைச் சிற்பமாக வடிக்கும் கலை இருக்கிறதா? எதிர்காலத்தில் இப்போதைய வாழ்க்கையை இடைப்பட்ட கால வாழ்க்கையை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் இல்லையா என்று எனக்குத் தோன்றும்.
மைசூர் அரண்மனை, கேரள அரண்மனை. தமிழ்நாட்டில் கலைக்கூடங்களில் இடைப்பட்ட மன்னர்கள், மாந்தர்களின் படங்கள் ஒவியங்கள் இருக்கின்றனதான். ஒரு வேளை சிற்பக்கலை ஓவியங்களுக்கு மாறிய காலகட்டமாக இருக்கலாம்,
அப்படிப் பார்க்கும் போது இனி ஏ ஐ சொல்லுமாக இருக்கலாம்..
கீதா
அனைத்துப் படங்களையும் ரசித்தேன் நெல்லை பதிகங்கள் உட்பட
பதிலளிநீக்குகீதா
படிச்சுட்டேன், படங்கள் பார்த்து விட்டேன். உறவொன்றின் மகனுக்கு பூணூல் கல்யாணம். அதற்குப் போவதால் அவசரம்....!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். நன்றி. உங்கள் அக்கா படித்தார்களா? ஒரு நாளும் கருத்து எழுதுவதில்லையே.
நீக்குஉறவினர் விசேஷங்களுக்குப் போனால் விதவித உணவு கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அலைவது கடினம் இல்லையா?
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்குஅன்புடன்
பதிலளிநீக்குகமலா ஹரிஹரன் அவர்களுக்கான பதிவு
இன்று தஞ்சையம்பதியில்...
வணக்கம் சகோதரரே
நீக்குதஞ்சையம்பதிக்குச் சென்று நீங்கள் எனக்காக அன்புடன் தந்திருக்கும் பதிவை படித்துப் பார்த்து நன்றி கூறி வந்தேன். பதிவில் உங்கள் விளக்கங்களைப் பற்றி படித்து தெரிந்து கொண்டேன் உங்கள் அன்பிற்கும், கோவில்களைப் பற்றிய அழகான விளக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புள்ள மங்கை ஆலந்துறையார் கோயில் என்பதே சரி
பதிலளிநீக்கு/// அடுத்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் ///
பதிலளிநீக்குசிறப்பு
அன்பின் நெல்லை அவர்களுடன் இக்கோயிலுக்கு சென்றிருக்கின்றேன்...
பதிலளிநீக்குஇப்போதுள்ள உடல் நிலையில்???
முழங்கால் வலி தான் மிச்சம்..
வாங்க துரை செல்வராஜு சார். அவை இனிய நினைவுகள்.உங்கள் நினைவுபடுத்தலின் காரணமாக கும்பாபிஷேகத்துக்குப் பிறகு திருக்கண்டியூர் தரிசனம் கிடைத்தது. மறுநாள் தேரழுந்தூர் தரிசனமும்.
நீக்குநீங்கள் எழுதியதைப் படித்தபோது, முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து... பாசுரம் நினைவுக்கு வருது. ஒரு சனிக்கிழமை அதன் விளக்கத்தோடு வரும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு கோவில் தரிசன பகிர்வு எப்போதும் போல அருமை. படங்களும், பாசுரமும் மனதில் அமர்கின்றன. பாசுரமும் அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் திரிபு கொள்வது வாடிக்கையான ஒன்றுதானே..! புளமங்கை எனச் சொல்வது எளிதாகத்தான் உள்ளது. கோவிலின் சிறப்புக்களைப் பற்றி படித்தறிந்து கொண்டேன்.
கோவில் தூண்களும், சிற்பங்களும் கலைநயத்தோடு அற்புதமாக இருக்கிறது விமான தாங்கிகளுக்கு இடையே இறைவன் விஷ்ணு கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிற்பத்தையும், நரசிம்மர் பரிவுடன் பிரகலாதனை அணைத்தபடி இருக்கும் சிற்பத்தையும் பார்த்து ரசித்தேன். சிற்பிகளின் திறமை குறித்து மிகவும் வியப்பும் வருகிறது.
கலையில் தாகமுடைய சிற்பக் கலைஞர்கள் இதனைத் தங்கள் திறமைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு மிக அழகுறச் சமைத்திருப்பார்கள். அவர்கள் அவ்வளவு முயற்சி எடுத்துக்கொண்டதற்கு அரசனிடம் வெகுமதி கிடைத்திருந்திருக்குமா, எவ்வளவு என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதனைக் காண்பவர், அடடா.. எத்தனை திறம் வாய்ந்த சிற்பக் கலைஞர்கள் என்று வியந்து அவர்களை மெச்சுவதற்கு ஈடாகுமா..?
உண்மை. இந்தச் சிற்பங்களை நாம் இப்போது காணும் போது நமக்குள் வரும் வியப்பு அவர்களுக்கு அடங்கவொண்னாத வெகுமதிகள்தாம். ஆனால், அப்போதைய அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு அரசனின் வெகுமதிகள்தாம் நல்ல பயனை தந்திருக்குமா ..! என்ற கேள்வியும் வருகிறது.ஏனெனில், காலத்திற்கேற்ப பொருளாதார தேவைகள் மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசியமானதுதானே..!
உங்களின் மனித மனங்களின் ஆசை குறித்த விளக்கங்களையும் ரசித்தேன். பணத்தேவை எக்காலத்திலும் குறையாததது.
சிற்பங்களை ரசித்தேன். சிற்பங்களுக்கு அருகே நீங்கள் நின்று கொண்டு எடுத்தப்படங்களும் அருமை "ஆலயம் தொழுவது சாலவும் நன்றென்ற" உங்களின் நல்ல எண்ணங்களினால், "ஆட்டுக்கு விடிந்தால் குட்டிக்கு விடியுமென்ற" பழமொழிப்படி. எங்களுக்கும் கோவில் தரிசனங்கள், அழகிய சிற்பங்களின் ரசித்தல்கள் என கிடைத்துக் கொண்டுள்ளது. தொடரட்டும் உங்களின் ஆன்மீக சேவைகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநின்ற கோலத்தில் இருக்கும் நரசிம்மர், அவர் அணைத்துக் கொண்டிருக்கும் பிரஹல்லாதன், அவன் அணிந்திருக்கும் காது குண்டலம், அரையாடை.. எவ்வளவு நுணுக்கமாக கவனித்திருக்கிறீர்கள்! great!
பதிலளிநீக்குபொக்கிஷமான கோவில்கள் அவற்றை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும்.
திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகமும் அதற்கு விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குபுள்ளமங்கை கோயில் சிற்பங்கள் அனைத்தும் பல கதைகளை சொல்கிறது. ஒவ்வொரு படங்களும் வித விதமாக கலை நுணுக்கத்தோடு வடிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் போன போது அப்போ காமிரா, செல் எல்லாம் கிடையாது , அமர்ந்து அந்த கோயில் தேவார பதிகத்தை பாடி வணங்கி வந்து விட்டோம்.
அதனால் படங்கள் இல்லை.
போகும் வழியில் பிரண்டை கொடிகள் நிறைய படர்ந்து இருந்தது, அத்தை அதை எடுத்து வந்து துவையல் அரைத்தது வடாம் போடு போது பிழிந்து சேர்த்து கொண்டது எல்லாம் நினைவுகளில்.
பூவாரக மூர்த்தி, நரசிம்மர் , விஷ்ணு, பள்ளிக் கொண்ட பெருமாள் லட்சுமி என்று கோயில் கோஷ்டத்தில் இடம்பெற்று இருப்பது அருமை.
பதிலளிநீக்கு//அப்பா..ஒரு வழியாக சிகப்பு நிறம் இல்லாத டி ஷர்டுடன் நான்.//
நானும் நினைத்தேன்.
சித்தப்பாவிடம் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர் உங்களுக்கு கொடுத்த பதிலும் அருமை.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்லி விட்டார்கள்.
போதும் என்ற மனம் இல்லையென்றால் வருந்தி அதனால் விளைவுகள் (துன்பம்)ஏற்படலாம். போதுமென்ற மனம் தான் வருத்தங்களை போக்கும் மருந்து . அந்தக்கால மனிதர்களுக்கு தேவைகள் குறைவு. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்ந்தவர்கள்.
கோயில் சிற்பங்களில் வித விதமான நடன சிற்பங்கள் நன்றாக இருக்கிறது.