நட்பு பற்றி சந்தோஷப் பாடல்கள் நிறைய உண்டுதான். துரோகம் செய்த நண்பன் பற்றிய பாடல்கள்தான் குறைவு. இன்று இரண்டு பாடல்கள் பகிர்கிறேன். இரண்டும் கமலஹாசன். நண்பனின் தங்கைக்கு திருமணம் செய்ய காசு சேர்க்க வேண்டி கமல் எஸ் வி சேகருடன் சிம்லாவில் நாடகம் நடத்தும்போது கமலின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று செய்தி வர, சேகருக்குத் தெரிந்தால் உடனே தன்னை ஊருக்கு அனுப்பி விடுவான், நண்பனின் பணத்தேவை முக்கியம் என்று கமல் துக்கத்தை உள்ளே அடக்கி நடித்துக் கொடுக்க, சேகருக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்து தன்னிடம் சொல்லாமல் சுயநலமாக மறைத்திருக்கிறார் என்பது தெரியவர, நண்பர்கள் பிரிகிறார்கள் என்றாலும் கடைசி நாள் என்பதால் நாடகத்தை நிறைவு செய்து விட்டே கிளம்ப நினைக்கும் சமயம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கமல் ஒரு பாடல் பாடி ஆடுகிறார். அதில் நண்பனின் துரோகத்தைப் பாடுகிறார். கமலே கோரியோக்ராப் செய்து ஆடி இருக்கும் இந்தப் பாடலை வாலி எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசையில் SPB குரலில் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. நல்லதொரு பாடல். நல்லதொரு ஆடல். 1982 வெளியீடு.
=============================================
'சட்டம்' படத்தில் தான் விரும்பும் பெண்ணையே தன் வக்கீல் நண்பனும் விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ளும் போலீஸ் கமல், சிறுவயதிலிருந்தே தனக்கு எல்லா உடுவையும் செய்து வரும் பணக்கார, பாசக்கார நண்பனுக்காக மாதவியை விட்டுக் கொடுக்க நினைக்க, நடுவில் நிகழும் சில எதிர்பாராத அசம்பாவிதங்களால் கமலும் சரத்பாபுவும் எதிரி ஆகிறார்கள். ஒரு பார்ட்டியில் துரோகியாகி விட்டான் நண்பன் என்று கமல் பாடும் காட்சி. ஹிந்தி தோஸ்தானா படத்தின் தழுவல். ஹிந்தியில் அமிதாப், சத்ருகன் சின்ஹா. வாலியின் பாடல். கங்கை அமரன் இசை. 1983 வெளியீடு.
======================================================================================
சில விடுகதைகள்! விடைகள் இன்று காலை 11:11:11 க்கு வெளியாகும்!
- எல்லையில்லா அழகி எட்டி நிற்கும் இரும்பையும் கவர்ந்து தன்பால் இழுப்பான். அவள் யார்? காந்தம்
- எல்லோர் வீடும் சாத்திக் கிடக்க கங்கையம்மன் கோயில் திறந்து கிடக்குது.
கிணறு
- எல்லோருக்கும் கிடைக்காத மதி எல்லோரும் விரும்பும் மதி. நிம்மதி
- எல்லோரையும் கூவி அழைப்பான். ஆனால் எவர் அழைத்தாலும் நகரமாட்டான். அவர் யார்? மணி
- எலும்பில்லாத மனிதன் கணுவில்லாத மரத்தில் ஏறுகிறான். அது என்ன?
பேன், மயிர்
- எலும்பு இல்லாத மனிதன் எட்டு ஆறு நீந்துவான். அவன் யார்? அட்டை
- எவ்விடத்தில் சுகத்தை எப்போதும் காணலாம்? அகராதியில்
- எவனுக்கும் தெரியாத பொருள் எல்லையெல்லாம் கடக்கும் பொருள். அது என்ன? காற்று
- எழுத்துத் தமிழுக்கு இறுதி எழுத்தாம் 'இன்'வில் முடியும் மூன்று பேர். தோழர்கள் ஒருவன் காட்டில், மின்னல் ஒருவன் வீட்டில், கன்னல் ஒருவன் நீரில். மன்னன் உரைப்பீர் இவர்கள் பேரை இனிதே.
- மான், தேன், மீன்
- எழுந்து அருகில் சென்றால் காலில் விழுந்து வணங்குவாள் எழுந்து அணைத்துக்கொள்வாள். அவள் யார்? கடல்அலை
- எழுந்திரு குண்டா ஊருக்குப் போகலாம். அது என்ன? - கட்டுச்சோற்றுமூட்டை
===============================================================================================
காலங்கள் தாண்டியும்
கல்வெட்டில் வாழ்கிறார்கள்
மன்னர்களும் மந்திரிகளும்
காது கேட்காதவனுக்கு கூட
கதை புரிகிறது
புத்தகம்
பாண்டியனும் சோழனும்
இன்னமும்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
கல்வெட்டில்
================================================================================
2026 வெளியீடு. அறிமுகக் காட்சியாக ஆரம்பத்திலேயே ஒரு மிஷனை வெற்றிகரமாக ராணி முகர்ஜி முடிக்கும்போதே அடுத்து ஒரு பெரிய வேலைக்கு அசைன் ஆவார் என்று தெரிந்து விடுகிறது. ஒரு VVIP யின் அடலசண்ட் மகள் கடத்தப்படுகிறார். அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த, அவளுக்கு உதவப் போன ஒரு எளிய உதவியாளரின் மகள் வேலைக்காரச் சிறுமியும் கடத்தப்படுகிறாள். அவர்களைக் காப்பாற்ற ராணி முகர்ஜி வரவழைக்கப்படுகிறார். எல்லோராலும் 'அம்மா' என்று அழைக்கப்படும் ஒரு சகல அதிகாரங்களும் கூடிய கொடூர பெண்மணியை எதிர்க்க வேண்டிய சூழல். கடினமான நேரங்கள். வழக்கமான தடங்கல்கள். ராணி முகர்ஜியே கேள்விக்குள்ளாக்கப்படுகிறார். அந்த மிஷனிலிருந்து நீக்கப்படுகிறார். அவர் ஜெயித்தாரா, சிறுமிகள் என்ன ஆனார்கள் எதற்கு கடத்தப்பட்டார்கள் என்று சொல்கிறது இந்த இரண்டு மணி நேர படம். சென்சாரை எல்லாம் எப்படி தாண்டியது என்று எண்ணும் அளவு சில காட்சிகள். ஆனாலும் ஒரு மூச்சில் பார்த்து முடித்தேன். தமிழ் வசனம் கிடையாது. ஹிந்திதான். புரிந்தது. NetFlix
=====================================================
இதுவும் 2026 வெளியீடுதான். ஜீத்து ஜோசப் படம் என்றதுமே பார்க்கும் ஆவல் வந்து விட்டது. தமிழில் இல்லை. மலையாளம்தான். ஓரளவு புரிந்தாலும் சப்டைட்டில் நிறுத்தி நிறுத்தி படித்தவாறே தொடர்ந்தேன். அவர் படத்துக்கு உரித்தான க்ளூஸ், மர்மம், பரபரப்பு.. கல்லூரி படிக்கும் பெண்கள் திடீர் திடீரென கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளி என்று சந்தேகப்படுபவனை இன்ஸ்பெக்டர் ஆண்டனி சேவியர் (பிஜு மேனன்) காப்பாற்றுகிறார். அவர் மீது குற்றச்சாட்டுகள் வருகின்றன. குடும்ப வாழ்விலும் அவருக்குப் பிரச்னை. அவர் மகனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். மனநல மருத்துவர் சரி செய்ய முயற்சிக்கிறார். ஐரீன் என்ற பெண் கொல்லப்படும்போது அவர் தந்தை சாமுவேல் (ஜோஜு ஜார்ஜ்) உள்ளே வருகிறார்.
ஒரு கட்டத்தில் ஆண்டனியின் மகன் பிலிப் கடத்தப்படும்போது அவனைக் காப்பாற்ற ஆண்டனி சாமுவேல் கொடுத்த க்ளூக்களை வைத்து முயல்கிறார். ஜோஜு ஜார்ஜ் திட்டமிட்டு அவரை ஆட்டுவிக்கிறார். ஆண்டனி மகனைக் காப்பாற்றினாரா என்று அமேசான் பிரைமில் காண்க. சில கேள்விகள் உண்டு. குற்றத்தை ஒத்துக்கொண்டு சரண்டராகும் SI, உயர் அதிகாரியிடமிருந்து விலகி வெளிச்சத்தை நோக்கி நடக்கிறார். ஏன் அரெஸ்ட் ஆகவில்லை என்பது தெரியவில்லை. படம் பார்க்கலாம். ஏற்கனவே எனக்கு பிஜு மேனனையும் பிடிக்கும், ஜோஜு ஜார்ஜையும் பிடிக்கும். பிஜு கொஞ்சம் கொஞ்சம் மம்மூட்டியை ஞாபகப்படுத்துவார்.
மலையாளப்படங்களில் விளித்தல் வினோதமானது. ஒரு பெயரை அவர்கள் அழைக்கும்போது 'ஏ' விகாரம் சேர்த்து சொல்கிறார்கள். உதாரணமாக பிலிப்பை ஆண்டனி "பிலிப்பே பிலிப்பே " என்று அழைக்கிறார்.
ஃபேஸ்புக்கில் வீ. சரவணா இரண்டு படங்கள் சொல்லி இருக்கிறார். அவற்றைக் குறித்து வைத்திருக்கிறேன். பார்க்க வேண்டும்.
=======================================================================================
நண்பர் வெங்கட் 'சாலையில் படுத்து உறங்குபவர்கள்' படம் போட்டிருந்தார். அவர்களுக்கு வீடு என்பதே அதுதான் என்றும் எழுதி இருந்தார்.
நான் சந்தித்த இது மாதிரி மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். முன்னர் 90 களில் எம் ஜி ஆர் வீடு அருகில் உள்ள பாலத்தை ஒட்டி ஐ டி பி எல் குடியிருப்பின் அருகே சாலையின் இருபுறமும் சில சின்ன சாதாரண குடிசைகள் இருக்கும். அவர்கள் வீடுகளின் வாசலில் கட்டும் மந்திரித்த கயிறுகள் போன்றவற்றை செய்து விற்பவர்கள். குடும்பமாகத்தான் இருப்பார்கள். அத்தனூண்டு வீட்டுக்குள் தாம்பத்யம், குழந்தைகள், பெரியவர்கள்.. பின்னால் ஒட்டினாற்போல பெரிய சாக்கடை ஓடும். அதன் நாற்றம், பொங்கி வரும் கொசுக்கள்.. குழந்தைகள் வெட்ட வெளியில் தூங்கும். ஆச்சர்யமாக இருக்கும். அந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம் வீட்டு குழந்தைகளுக்கு இருக்காது என்பார் என் நண்பர்.
நான்கைந்து மாதங்களுக்கு முன் பிஸியான ஒரு கடைத் தெருவில் ஒரு கடைக்குள் நுழைந்தார் பாஸ். உள்ளே போக பொறுமையின்றி வெளியே நின்ற என் கண்களில் அந்தக் காட்சி தென்பட்டது. கடையின் வாசலில் சுவரை ஒட்டி இருந்த இடத்தில் துணிகள் அடைத்திருக்கும் சின்ன லெதர் பை தலைக்கு வைத்தபடி ஒரு பாய்விரித்து ஒருவர் படுத்திருந்தார். கால் மேல் கால் போட்டபடி ஒரு பேபாப்ர் துண்டைப் படித்துக் கொண்டிருந்த காட்சி வித்யாசமாக இருந்தது.
ஏதோ தன் வீட்டு படுக்கையறையில் படுத்திருப்பவர் போல படுத்திருந்தார். அதே இடத்தில் கடையிலிருந்து சாலையில் இறங்கும் இடத்தில் தேங்கியிருந்த மழை நீர் சகதிக்கு அருகே ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்திருந்தார். தமிழ்நாடு செய்த தவப்பயனால் உருவான மதுப்பிரியர் போலும்.
இவர்களை நான் போட்டோ எடுப்பதற்கு ரொம்பத் தயங்கி, காணொளி எடுப்பது எளிது என்று எடுப்பதே தெரியாமல் மெல்ல செல்லத் திருப்பி எடுத்தேன். அப்போது அதை ரீல்ஸில் கூட போட்டேன். பின்னர் போட்டோவும் எடுத்தேன்.
நான் செல்லை அவரை நோக்கி ஃபோகஸ் செய்வதை அவர் கவனித்தும் கூட லட்சியம் செய்யவில்லை என்பதோடு என்னிடம் காசு கேட்பது போல சைகை செய்தார்! இருபது ரூபாய் கொடுத்து பேட்டி எடுத்தேன். அருகிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனையில் புல் வெட்டுபவராக இருக்கிறாராம். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் சம்பளம். தங்குவதற்கு காசு செலவு செய்ய முடியாது என்று இங்கு இடம் பிடித்து விட்டார்.
அருகிலிருந்த பெஞ்சில் படுக்கவில்லையா என்றதும், நாம் அனாவசியமாக இப்படி உரிமை எடுத்தால் உள்ளதும் போய்விடும், விரட்டி விடுவார்கள் என்று வாழ்க்கைத் தத்துவம் பேசினார்!
வேறு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களா என்று கேட்டேன். சொல்ல மாட்டார்கள் என்றார். நான் அவர்கள் கடைக்கு இரவில் ஒரு காவல் போல என்று அவர்களுக்குள் பேசிக் கொள்ளலாம் என்றார்! ஊர் திருவண்ணாமலை என்றார். முன்பு விவசாயம் பார்த்தாராம். பிழைப்புக்கு வழியில்லாமல் சென்னை வந்தாராம். "போலீஸ் தொந்தரவு?" அதெல்லாம் ஒன்றும் இல்லையாம். 'ரிலையன்ஸ், கிரேஸ் போன்ற இடங்களில் செக்யூரிட்டியாக போகலாமே' என்றேன். 'பார்க்கிறேன்' என்றார். 7 அல்லது 8 மணிக்கு வந்து படுத்து விடுவாராம்.
ஏற்கனவே நான் சொன்னேனே.. இதை வைத்து ஒரு ரீல்ஸ் போட்டேன் என்று... அது.. இன்ஸ்ட்டாவிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன்.
==========================================================================================
1. இன்றைய வெட்டி ஆராய்ச்சி!
'லஷ்மி கல்யாணம்' என்ற படத்தில் வரும் பாடல் "ராமன் எத்தனை ராமனடி..."
'ராமன் எத்தனை ராமனடி' என்று ஒரு படம். அதில் வரும் பாடல் "அம்மாடி... பொண்ணுக்குத் தங்க மனசு..."
'பொண்ணுக்குத் தங்க மனசு' என்று ஒரு படம். அதில் வரும் பாடல் "தேன் சிந்துதே வானம்..."
'தேன் சிந்துதே வானம்' என்று ஒரு படம்.. அதில் வரும் பாடல் "உன்னிடம் மயங்குகிறேன்.."
சங்கிலி இங்கு அறுந்து விட்டது என்று நினைக்கிறேன்.
உன்னிடம் மயங்குகிறேன் என்று படம் எடுத்தார்களா, தெரியவில்லை! மங்கலான நினைவில் விஜயகுமார் நடித்த ஒரு படம் இந்தத் தலைப்பில் வந்து ஞாபகம்! 
*****************************************
சிவாஜி கணேசன் -
நடித்த படங்கள் 288 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ) -
முதல் படம் 1952 (ஆனால் அதற்கு முன்னரே முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி எனும் நடிகருக்கு குரல் கொடுத்திருக்கிறார். படம் நிரபராதி (1951)
முதல் படம் 1952 (ஆனால் அதற்கு முன்னரே முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி எனும் நடிகருக்கு குரல் கொடுத்திருக்கிறார். படம் நிரபராதி (1951)
எம் ஜி ஆர் -
நடித்த படங்கள் -116 (முதல் படம் 1936) அசோக்குமார் படத்தில் எம் கே டி யுடன் நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வருவார்).
பி யு சின்னப்பா -
நடித்த படங்கள் - 26 (முதல் படம் 1936) சந்திரகாந்தா (இவர் ஹீரோவாக நடித்தபோது எம் ஜி ஆர் இன்னும் பிற்கால நடிகரெல்லாம் பெண்வேஷம் போட்டு நடித்தனராம்) இவர் சூப்பர் ஹிட் படமான உத்தம புத்திரன் முதற்பதிப்பில் இரட்டை வேடத்தில் நடித்தவர்.
எம் கே டி பாகவதர் -
நடித்த படங்கள் - 14 (முதல் படம் 1934 ) இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார். பதினான்கே படங்களில் நடித்தாலும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
இரண்டுமே பகிரப்பட்டது, மார்ச் 31 2020 கொரானா இந்த உலகுக்கு வந்த புதிது.
=======================================================================================
"எனக்கு இன்னொரு முகம் இருக்கு.." என்பது ரஜினியின் ஃபேமஸ் டயலாக்குகளில் ஒன்று. அப்படியான அவரின் இன்னொரு முகம் பற்றி ஃபேஸ்புக்கில் படித்ததை இங்கு பகிர்கிறேன்.
திடீரென லிவிங்ஸ்டன் மனைவிக்கு ஹார்ட் அட்டாக்.
லிவிங்ஸ்டனின் குடும்பம் ஓடிப்போய் ஹாஸ்பிடலில் சேர்க்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். லிவிங்ஸ்டனிடம் அத்தனை பணம் இல்லை. உடைந்து போகிறார்.
இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வழி தெரியாமல் முடங்கி விடுகிறார் லிவிங்ஸ்டன்.
அப்போது ரஜினியிடமிருந்து அழைப்பு வருகிறது. மனைவியின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். பதினைந்து லட்சம் பணத்தை லிவிங்ஸ்டனிடம் கொடுக்கிறார்.
இன்று லிவிங்ஸ்டனின் மனைவி ஆரோக்யத்துடன் இருக்கிறார். இந்த சம்பவத்தை சொல்லும் போதே லிவிக்கு தொண்டை அடைக்கிறது.
ரஜினிக்கு ஒரு கஷ்டமான காலம் இருந்தது. ஓய்வில்லாமல் மூன்று ஷிப்ட்களும் ரெஸ்ட் இல்லாமல் நடித்து டிப்ரஷனும், நரம்பு தளர்ச்சியும் ஆட்கொள்ள நோயாளி போல் ஆன நேரம். தர்மயுத்தம் என்கிற படம் தொடங்கப்பட்டிருந்தது. அவர் அருகில் செல்ல இயக்குனர் ஆர்.சி.சக்தியே பயப்பட்ட நேரம். பின் பாலச்சந்தர் தலையிட்டு மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார்.
ஒழிந்தார் ரஜினி என எழுதப்பட்டது. ரஜினியின் வளர்ச்சியை பிடிக்காத நாக்குகள் இஷ்டத்துக்கு பேசின. முடிந்தது ரஜினியின் ஆரவாரம் என சொல்லப்பட்டன. சிகிச்சை முடிந்து தர்மயுத்தம் படத்தை முடித்துக்கொடுத்தார். தர்மயுத்தம் ரிலீசானது.
படம் அதிரடி ஹிட். ரஜினி ஏற்றிருந்த அந்த சங்கிலியால் கட்டப்படும் நாயகக்கதாபாத்திரம் தமிழுக்கு புதிதாக இருந்தது. கதையும் அப்படியே. கண்களை திருடி விற்கும் கும்பலை பழிவாங்கும் அந்த படத்தில் ரஜினி அதிரடி Come back கொடுத்தார். கொண்டாடிய வாய்கள் அடைத்துப்போயின. முடிந்தார் ரஜினி எழுதிய கைகள் துவண்டு போயின. அப்படி எழுந்து நிற்க வைத்த அந்த கதாபாத்திரம் பெயர் என்ன தெரியுமா? விஜய்.
பிராம்மாண்ட எழுச்சிக்குப் பிறகு ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய ஒரு கதாபாத்திரம் 'அலெக்ஸ் பாண்டியன்'. அலெக்ஸ் பாண்டியன் பெயரை சொன்னாலே அலறும் கூட்டம். அப்படி நேர்மைக்கு பெயர் போன போலீஸ்.
"ஏகாம்பரம் பேரை சொன்னா வயித்துல இருக்கிற குழந்தை கூட வாயைப்பொத்தும்."
"அதே குழந்தைக்கிட்டப்போய் அலெக்ஸ் பாண்டியன் பேரைச்சொல்லு. இன்னொரு கையால் அவங்க அம்மா வாயைப்பொத்தும்"
ரஜினியின் மூன்று முகம் டயலாக் போலும் பொறி பறந்தது. அனல் அடித்தது.
இந்த விஜய், அலெக்ஸ் இரு பாத்திரங்களையும் வடிவமைத்தது பீட்டர் செல்வக்குமார். பீட்டர் என்கிற கதையாசிரியரின் கை வண்ணம் ரஜினியின் கெரியரை உயரத்துக்கு கொண்டு போக உதவியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பீட்டருக்கு கடன்பட்டவர் ரஜினி.
ஆனால் காலம் காத்திருந்து பீட்டருக்கான நன்றியை பெற்றுக்கொண்டது. ஆம். லிவிங்ஸ்டனின் மனைவியின் ஆபரேஷன் மூலம் நேர் செய்யப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.
இல்லையென்றும் சொல்லலாம். ஆனால் பாருங்கள். லிவியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத அந்த நேரம் அவர் 'லால் சலாம்' படப்பிடிப்பில் இருக்க வேண்டும். செய்தி ரஜினி காதுக்கு எட்ட வேண்டும். அவர் அழைக்க வேண்டும். உதவ வேண்டும். எழுதி வைத்தது போல் நடந்திருக்கிறது.
பீட்டரின் சகோதரி தான் லிவிங்ஸ்டனின் மனைவி.
அப்படி சில நிகழ்வுகள் நாம் அறியாமலேயே கடவுளால் முடிச்சிட்டு நல்ல முடிவையும் தருகின்றன.
இதை இப்படித்தான் பார்க்கத்தோன்றுகிறது.
செல்வன் அன்பு பேஸ்புக்
===============================================================================================
அரிதான படம். தூங்கும் என் ஜி ஆர். அதில் சொல்லப்பட்டுள்ள ஒரு பெயர் தவறு என்று நினைக்கிறேன்!


= = = = = = = = = = = = = = = = = =
மன்னிக்க வேண்டுகிறேன் __/\__
kgg
நேற்றைய பதிவில், ஏப்ரல் 1 காரணமாக ஏதேனும் கலாட்டா செய்யவேண்டும் என்று .. அயல்நாடு சென்றதாக ஒரு டூப் விட்டேன்.
அந்தப் படங்கள் யாவும், நம்ம சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவுக்குள் எடுக்கப்பட்டவை !
என்னை தாய்லாந்து வரை அனுப்பித்து சிறப்பித்த வாசகர்களுக்கு நன்றி!






.jpg)













இன்றைய பதிவு ஓக்கேதான்.
பதிலளிநீக்குலிவிங்ஸ்டன் மனைவி, பீட்டர் செல்வகுமார், ரஜினி பகுதி மனதைக் கவர்ந்தது.
நல்ல மனது வருவதே கடினம். கொஞ்சம் யோசித்தால் இவ்வளவு கொடுத்தால் போதாதோ என்று மனது சுருங்க ஆரம்பித்துவிடும்.
வாங்க நெல்லை. முதலில் பாடல்கள் என்று பார்த்ததும் மனம் வேறு மாதிரி விட்டதோ..!
நீக்கு// கொஞ்சம் யோசித்தால் இவ்வளவு கொடுத்தால் போதாதோ என்று மனது சுருங்க ஆரம்பித்துவிடும். //
அதைதான் 'ஒன்றே செய், நன்றே செய், அதை இன்றே செய்' என்று பெரியோர்கள் சொன்னார்கள் போல!
ஐபேடில் பாடல்களைத் திறக்க முடியவில்லை. தலைப்பும் இல்லாமல் பாடல் பகிர்வில் லிங்க் வேலை செய்யவில்லை.
நீக்குசோழமன்னன் யானையை, உறையூர் வரும்போது கோழி எதிர்த்ததால் அதனைத் தலைநகராக்க் கொண்டான். அதனால் கோழியூர். பிற்காலத்தில் இரண்டாம் சேரமான் உறையூரை வென்றதால் கோழிக்கோன் என்ற பட்டம் (அவர்தான் குலசேகர ஆழ்வார்)
பதிலளிநீக்குசூப்பர். நீங்கள் ஜூனியர் நீலகண்டர் சாஸ்திரி ஆகி வருகிறீர்கள்.
நீக்கு//சோழமன்னன் யானையை, உறையூர் வரும்போது கோழி எதிர்த்ததால் அதனைத் தலைநகராக்க் கொண்டான். // இந்த கதையில் ஒரு சிறிய திருத்தம். யானையை கோழி எதிர்த்ததால் அவன் அதை தலைநகராக்கிக் கொள்ளவில்லை. உறையூரை தலைநகராகக் கொண்ட ஆதித்த சோழனுக்கு உறையூரின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவபெருமான் வில்வ மரத்தினடியில் இருந்த சேவலை நோக்க,அது வெறிகொண்டு யானையின் கண்களை குத்தி அதை குருடாக்கி, புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் உறையூருக்கு கோழியூர் என்ற பெயரை வழங்கினான் என்பது உறையூரில் இருக்கும் பஞ்சவர்ணசுவாமி கோவில் தல வரலாறு. அங்கு யானையோடு கோழி போரிடும் சிற்பத்தைக் காண்லாம்.
நீக்குசிறு வயதில் பஞ்சவர்ணசுவாமி கோவிலுக்குச் சென்றது.
அடடே... இன்னும் கூடுதல் தகவல். வாங்க பானு அக்கா.
நீக்குபாத்தீங்களா... வரலாற்றிலும் வீரம் ஆண்களின் உரிமை (சேவல்). போனாப் போகுதுன்னு பெயர் மாத்திரம் பெண்களுக்கு. இதைப் பற்றி பெண்ணியவாதிகள் என்ன சொல்றாங்க?
நீக்குஆஹா... ஆரம்பமாயிடுச்சே வாதம்!
நீக்குஹலோ நெல்லை, புலியை முறத்தால் விரட்டிய பெண் என்று வாசித்ததில்லையா....கண்டிப்பாக வீரம் பெண்களுக்குத்தான் அதிகம். உடலில் காட்டும் வீரமும் அவசியம் மன வீரமும் அவசியம். இல்லைனா ஆண்களை மேனேஜ் செய்வது கஷ்டம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குமுக்கியமானது பெண்களுக்கு வீரம் மிக அவசியம் என்று குறிப்பிட்டது, இப்ப பாருங்க எத்தனை அயோக்கியன் கள் பெண்களை பலாத்காரம் செய்யறது கொலை பண்ணறதுன்னு...அப்ப பெண்கள் மனவலிமை பெற்றவர்களாக இருப்பது அவசியம். பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களிடம் நான் சொல்வது இதுதான்....பெண்களுக்கு மன தைரியம் ப்ளஸ் சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுங்கன்னு..
கீதா
பாதிப்பாதி என்ன கணக்கு?..
பதிலளிநீக்குகூடக் குறைச்சலாய் இருக்கக்கூடாதோ?
அப்படி இருந்தால் பாதிப்பாய் ஆகி விடுமோ..
வாங்க ஜீவி ஸார்.. ஒரு சொல்வழக்குதான்! இப்படியும் அப்படியும் இருக்கலாம்தானே! கவிஞரின் கற்பனையில் தலையிட நாம் யார்!
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாடல் உனக்கென்ன மேலே நின்றாய் அட்டகாசமான இசையமைப்புடன் தலைவரின் குரல் இதில் உச்சபட்சம்! என் முதல் பட்டியலில் இடம் பெறும் பாடல்!
பதிலளிநீக்குஓ! கமலே நடன இயக்குநரா!!!! நல்லா இருக்கு அந்தக் காலத்துக்கான Steps வருத்தம் கோபம் இருக்கும் போது எதையேனும் குத்துவது போலக் காட்டுவாங்க இல்லையா அப்படி இவர் முதலில் ஆரம்பத்தில் அந்த அசைவுகளில் அதை வெளிப்படுத்துவது போலக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்!!
பாடல் காட்சி விளக்கம் இப்பதான் தெரிந்தது.
கீதா
வாங்க கீதா.. கமலின் டான்ஸ் பாட்டுகளில் எனக்குப் பிடித்த ஒன்று. சில டெம்ப்ளேட் கமல் அசைவுகளில் பாலசந்திரசம் இருக்கும்.
நீக்குஇன்று பாடல்கள் கேட்க முடியாத நிலை ஸ்ரீராம். மூன்றாவது காது போட முடியாத நிலை.
பதிலளிநீக்குஆனால் முதல் பாடல் அதிகம் கேட்ட பாடல் என்பதால் சொல்ல முடிந்தது. இரண்டாவது பாடல் என்ன பாடல் என்று ஊகிக்க முடியவில்லை, ஸ்ரீராம். குறித்துக் கொண்டேன். சரியானப்புறம் கேட்கிறேன்.
கீதா
ஓகே ஓகே கீதா... உங்கள் வேலைகளுக்கு நடுவே வந்திருக்கிறீர்கள். புரிகிறது.
நீக்குஇல்லை ஸ்ரீராம். வேலை முடிச்சு கொடுத்தாச்சு. மூன்றாவது காது பொருத்தும் காதில் புண். வலி எனவே மூன்றாவது காது போட முடியாத நிலை.
நீக்குகீதா
ஓ அப்படியா.. கிரேட். காதுக்கு Mupirocin ointment போடுங்கள்.
நீக்கு3 - அனுமதி?
பதிலளிநீக்கு4. இதைப் பார்த்ததும் உடனே கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் ந்னு பாடல்தான் நினைவுக்கு வருது!!!! கோயில் மணி
5 - பேன்? அல்லது பாம்பு?
8. ஆவி ஹிஹிஹி....காத்து....
இம்புட்டுத்தான் இப்ப யோசிக்க முடிந்தது. டக்கென்று எதுவும் புலப்படவில்லை ஸ்ரீராம் கொஞ்சம் கஷ்டமா கீது
கீதா
அஹ்ஹா... அஹ்ஹா.... விடைகள் எனக்குத் தெரியும் என்பதால் எனக்கு ஈஸி!
நீக்குகவிதைகள் மூன்றும் ரொம்ப நல்லாருக்கு இன்று என் நிலை நடுவில் உள்ளது போல. எத்தனை நாள் எடுக்குமோ!!
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா. நீங்க எப்பவுமே ரசிப்பீங்க...
நீக்குஸ்கூட்டரில் செல்பவர் ஏணியில் தொத்திக் கொள்வதைப் போன்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடிகளை கமலஹாசன் படங்களில் சண்டைக் காட்சிகளில் பார்க்கலாம். ஸ்லாப்ஸ்டிக் காமெடியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது கமல்தான் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநாகேஷை சொல்லலாம்.
நீக்குஒரு காலத்தில் புகைப்படப் போட்டிகள் வைத்ததற்காக இங்கு அபூர்வமா நடைபாதையில் படுத்துக் கிடந்தவரை படம் பிடித்தேன் (பாட்டில்). ஆனால் கௌதமன் சார் போட்டியை நிறுத்தி வேறு ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி மறந்துவிட்டார்.
பதிலளிநீக்குசமூகப் புரட்சி தமிழகத்தில் டாஸ்மாக்கினால் ஏற்பட்டுவிட்டது. கம்ப்யூட்டர் எஞ்சினீயரும், அன்னாடங்காச்சியும், கிழவிகளும் கம்ப்யூட்டர் அழகிகளும் கியூ வரிசையில் டாஸ்மாக் கடைகளில் நிற்பது, தமிழகத்தின் சாதனை.
:)))
நீக்குரீல்ஸ் பார்த்தீங்களா, கேட்டீங்களா!
நீக்குமுன்னாடி "பார்த்தீங்களா பார்த்தீங்களான்னு ஒரு விளம்பரம் வரும் "கேட்டிங்களா கேட்டீங்களா?"
தோம், டோம்
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குபழகினோம் - என்பதற்கு வேறு அர்த்தம் பண்ணி விட்டார்கள்...
பதிலளிநீக்குஎன்னவாம்?
நீக்குசமூகப் புரட்சி தமிழகத்தில் டாஸ்மாக்கினால் ஏற்பட்டுவிட்டது. கம்ப்யூட்டர் எஞ்சினீயரும், அன்னாடங்காச்சியும், கிழவிகளும் கம்ப்யூட்டர் அழகிகளும் வரிசையில் டாஸ்மாக் கடைகளில் நிற்பது, தமிழகத்தின் சாதனை...
பதிலளிநீக்குசிறப்பு...
கேட்கவே சந்தோஷமா இருக்கு... ரீல்ஸ் கேட்டீங்களா?
நீக்குஹூம் சினிமாவை விட OTT ல நிறைய நல்ல படங்கள் வருது போல!!? ரெண்டுமே நல்லாருக்கும்னு தோணுது. ஆனால்......
பதிலளிநீக்கு//மலையாளப்படங்களில் விழித்தல் வினோதமானது//
விளித்தல்.....
கீதா
விழித்தல் பற்றி நானும் குறிப்பிட நினைத்தேன், மகனோடு என்பதும் மகண்டுங் என்று தவறாக வந்திருக்கிறது.
நீக்குஆமாம்... டைப்போ!
நீக்குசுஜாதா மகன் அச்சு அசல் அவரைப் போல இல்லை, அம்மாவின் ஜாடையும் இருக்கிறது, இன்ஃபாக்ட் அம்மாவின் சாயல்தான் அதிகம்.
பதிலளிநீக்குஆமாம். எனக்கு என்னுடைய மேலதிகாரி ஒருவர் உடனடியாக நினைவுக்கு வந்தார்!
நீக்குதிரு.கௌதமன் அவர்களின் கவனத்திற்கு: நான் வெளிநாடு என்று நினைக்கவில்லை, எந்த இடம் என்று கணிக்க முடியாவிட்டாலும், இந்தியா என்று தெரிந்தது. அந்த தாவரம் காட்டி கொடுத்தது என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குGreat!
நீக்குஅடடே ஆச்சர்யக்குறி.
நீக்குமீ டூ! கீழே பதில் கொடுத்திருக்கேன்
நீக்குகீதா
தெருவோர வாழ்க்கை, இங்கும் மேம்பாலங்களின் அடியில் கூடாரம் எதுவும் இல்லாமல் குடும்பம் நடத்துபவர்களைப் பார்க்கிறேன் ஸ்ரீராம். கல் வைத்து தீ மூட்டி சமையல் இல்லைனா அருகில் தெருவோர தள்ளுவண்டிகளில் கிடைக்கும் சாப்பாடு.
பதிலளிநீக்குஇப்ப ஏரிக்கரையில் வெளியில் சாலையில் நடக்கும் நடைபாதையில் 8,9 குடும்பங்கள் கூடாரம் போல அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். கொசுத்தொல்லைக்கு என்ன பண்ணறாங்கன்னு யோசித்தேன். நானும் படங்கள் எடுத்து வைச்சிருக்கேன் சொல்வதற்கு.
கீதா
நான் திருவடிசூலம் பயணம் எழுதியபோது அதில் இப்படியான ஒரு குடும்பத்தின் படம் போட்டிருந்தேன், நினைவிருக்கா?
நீக்குநினைவிருக்கு ஸ்ரீராம்....
நீக்குஅது போல கீழே வெட்டி அரட்டை பகுதி முன்னர் போட்டதும் நினைவிருக்கு அங்கு சொல்லாமல் இங்கு சொல்லிவிட்டேன்.
கீதா
என்ன படம் என்று சொல்லாமல் விமர்சனம் எழுதினால் எப்படி பார்ப்பதாம்? JKC சாரும், தி.கீதாவும் என்ன படம் என்று தெரிந்து கொள்ள முடியும்.
பதிலளிநீக்குஅடக்கடவுளே.. மேலே இணைத்திருக்கும் படத்தைப் பார்க்கவே இல்லையா நீங்கள்? அவ்வளவு விளக்கமாகவா இன்னமும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?!!
நீக்குமுன்னரெல்லாம் தமிழ்ப்படத்தில் கதாநாயகி ஒரு சிறு பாட்டிலை கையிலெடுப்பார், அதில் 'விஷம்' என்று பெரிய எழுத்தில் எழுதி இருக்கும். பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டுமே... நாம் அதையெல்லாம் தாண்டி வந்து விட்டோம் என்று நினைக்கிறேன்!
வெட்டி ஆராய்ச்சி - ஸ்ரீராம் இப்படி யோசித்ததுண்டு. எழ்தியும் வைத்த நினைவு சமீபத்தில் கூட திரைப்படப் பாடல்கள் தலைப்பில் படங்கள். கூடவே திரைப்படப் பெயர்களைக் கொண்டு கதை எழுதுதல் இல்லை சும்மா கட்டுரை என்று எழுதிய நினைவு. ஆனால் தளத்தில் போட்ட நினைவில்லை
பதிலளிநீக்குகீதா
வெட்டி ஆராய்ச்சி நான் அடிக்கடி செய்வது. எனக்கு அது பொழுதுபோக்கு. பார்ப்பவர்களுக்கு படிப்பவர்களுக்கு அது வெட்டிவேலை!
நீக்குமுன்னர் வியாழன் லேபிலிலேயே வெட்டி அரட்டை என்று கொடுத்த நினைவு இருக்கலாம். ஏகாந்தன் ஸார் சொல்லி மாற்றினேன்!
ரஜனி பற்றிய தகவல்கள் இது ஏற்கனவே எங்கேயோ வாசித்த நினைவு. அவர் இப்படி உதவிகள் செய்வதுண்டு என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதிகம் வெளிவராதோ? சினிமா உலகைத் தாண்டியும் அவர் செய்வது எதுவும்? இல்லை அப்படி எதுவும் இல்லையா?
பதிலளிநீக்குகீதா
எல்லோரிடமும் நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கும்தானே! நான் இப்போதுதான் முதலில் வாசித்தேன்!
நீக்குஉதவிகள் வெளீல தெரிந்தால் வீட்டுக்கு முன் பெரீய கியூ நின்றுவிடும். பிறகு, அவனுக்கு மட்டும் செஞ்சீங்களே என்ற அக்கப்போர். இதுனாலத்தான் கம்முனு இருந்துடறாங்க.
நீக்குஇன்னொன்று.. நமக்கு உதவணும் என்ற ண்ணம் தூண்டுதல் எப்போதும் வராது. எப்பவாச்சும்தான் வரும். இதைக் கவனிச்சருக்கீங்களா?
புதிர் விடைகள்:
பதிலளிநீக்கு3. நிம்மதி
4. அலாரம் டைம் பீஸ்
11:11:11 க்கு செக் செய்து கொள்ளலாம்!!
நீக்குரங்கபிரசாத் உடல் மொழி அப்படியே சுஜாதா...ஜாடை கொஞ்சம் கலந்த கலவை அம்மா மற்றும் அப்பா!
பதிலளிநீக்குகீதா
ஆமாம். அப்படி தெரிகிறதுதான்.
நீக்குகோழியூர் பற்றிய துணுக்கிற்கான படம் தவறு. கோழி யானையின் பின் பக்கம் அமர்ந்து கொத்துவதைப் போல இருக்கிறது. தலபுராண படத்தில் கோழி யானையின் தலை மீது அமர்ந்து கண்ணை குத்துவது போல இருக்கும்.
பதிலளிநீக்குநான் என்ன செய்யட்டும்? அது எஸ் ஏ பி கவனிக்கவில்லை என்று அவரைத்தான் சொல்லவேண்டும்!
நீக்குரஜினியின் சினிமா க்ரீயர் அவ்வளவுதான் என்று கருதப்பட்ட நேரத்தில் இரண்டு படங்கள் வந்து அவரை கை தூக்கி விட்டன. ஒன்ரு தர்ம யுத்தம், இன்னொன்று ஆறிலிருந்து அறுபது வரை.
பதிலளிநீக்குரஜினி நடித்த படங்கள் என்று நான் இரண்டு மூன்றைதான் குறிப்பிடுவேன். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் இப்படி.. ஆனால் 6 2 60 நன்றாக ஓடியதா என்று தெரியவில்லை.
நீக்கு8. வதந்தி
பதிலளிநீக்குசொல்லலாமோ... ஒரு விடைதான் இருக்க வேண்டுமா என்ன!
நீக்குஉறையூர் பெயர்க்காரணத்துடன் கூடவே ஒரு விஷயமும் .....
பதிலளிநீக்குஇரண்டாம் சேரமான் - இவர் தான் பின்னர் குலசேகர ஆழ்வார்- உறையூரை வென்றதால் கோழிக்கோன் என்ற பட்டம்...மன்னன் எப்படி குலசேகர ஆழ்வார் ஆனார் என்ற வரலாற்றில் வாசித்தது.
நெல்லையும் கூட இங்கு பதிவுகளில் குறிப்பிட்டிருந்த நினைவு.
கீதா
__/\__
நீக்கு70 களில் எப்போதோ மற்றும் இறுதியில் சென்னை வந்த போது மௌன்ட் ரோடு இப்ப உள்ளது போல இல்லை என்று நான் சென்னையில் இருந்த காலங்களில் நினைத்ததுண்டு. இப்படத்தைப் பார்க்கறப்ப எவ்வளவு அழகா இருந்திருக்கு அந்தச் சாலைன்னும் தோன்றுகிறது. அதாவது வாகன நெரிசல் இல்லாம.
பதிலளிநீக்குகீதா
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கூட பெரிய மாறுதல் இல்லை. தென்றலே என்னைத் தொடு படப் பாடல் காட்சியில் கூடப்பார்க்கலாம்!
நீக்குஜோக்குகளில், ப்ளாட்ஃபார்ம் மற்றும் ஹோட்டல் ஜோக் புன்சிரிப்பை வரவழைத்தன!
பதிலளிநீக்குகீதா
அவர்களுக்கு நன்றி சொல்வோம்!
நீக்குஓ நேற்றைய பதிவு நேற்று இரவுதான் பார்த்தேன் ஆனால் கருத்து சொல்லலை. கண்டிப்பா கௌ அண்ணா போனது வெளியூர் இல்லைன்னு தோன்றியது. காரணம், 2 கௌ அண்ணா இப்படி விளையாடுவார் என்பது யூகித்தேன்....இரண்டாவது வெளியூர் சென்றிருந்தால் கண்டிப்பாக இப்படியான படங்கள் சான்ஸ் மிகவும் குறைவு. அந்தச் சிலை கொஞ்சம் காட்டிக் கொடுத்தது.
பதிலளிநீக்குகீதா
அப்படியா சொல்றீங்க? ஏன் கௌ அண்ணா வெளிநாடு போகமாட்டாரா? போகத்தான் கூடாதா?
நீக்குநெல்லை நேத்து நீங்க சொல்லியிருப்பது போல், மேஜர் மதன் குமார் சானல் பிடிக்கும். ஆனால் சமீபத்தில் பார்க்க முடியவில்லை ஒரு சிலது தவிர. ஈரான் போர் பத்தி சொல்லிக் கொண்டிருந்தார் அதன் பின் என்னாச்சுன்னு தெரியலை. இப்ப வீடியோஸ் பார்க்க முடியாத நிலை. ரெண்டு மூன்று நாட்களில் சரியாகும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
கீதா.. நேற்று கீதா அக்கா கூட உங்களைத் தேடியிருந்தார்.
நீக்கு