கணினியோ, கதவோ.. ரிப்பர் வேலைக்கு வருகிறவர்கள் எப்படி ஒரு சுலபமான வேலை முறைக்கு பழகுகிறார்கள் என்பதை முன்னரே சொல்லி இருந்தேன். எதற்கு, எதில், எங்கே பிரச்னை, என்ன பிரச்னை என்று தேடி நேரத்தை வீண் செய்து கொண்டு... சமயங்களில் அது அவர்களுக்கு தெரியவும் தெரியாது. எனவே ஒரு வழி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
"இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.. எந்தப் பொருளும் ஒரு வருஷத்துக்கு மேல வர்றதில்லை.. தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்க வேண்டியதுதான். இதை ரிப்பேர் செஞ்சா ஆகற செலவுக்கு புதுசே மாட்டிடலாம்!"
சோம்பேறித்தனம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாமல் வேலை தெரியாத அறியாமையும் இதில் உண்டு. பழையதை கழற்றவும், புதியதை மாட்டவும் தெரிந்திருந்தால் அவர் ஒரு நல்ல மெக்கானிக் ஆகி விடலாம். ஆனால் இது எண்ணிக்கை அளவில் குறைவு என்றே நினைக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்குமுன் எங்கள் அறைக்கதவு படாரென்று அறைந்து சாத்திக்கொள்ள, உள்ளே யாரும் இல்லை என்றாலும் கதவைத் திறக்க வேண்டிய நிர்ப்பந்தம். என் மகன் உடனடியாக ஒரு அபாயகரமான வழியில் இறங்கி கதவைத் திறந்தான். மொட்டை மாடி சென்று, அங்கிருந்து எங்கள் வீட்டு ஓபன் டெரஸில் மெல்ல இறங்கி நல்லவேளையாக திறந்திருந்த டெரஸ் கதவின் வழியே உள்ளே நுழைந்து சிரமப்பட்டு கதவைத்திறந்தான். தாழ்ப்பாள் செட் உடனடியாக மாற்றப்பட்டது.
இன்னொரு அறையில் தாள் இதேபோல சண்டி செய்யத் தொடங்கும்போதே நாங்கள் ஆளை வரவழைத்து விட்டோம். அவர் அங்கும் செட்டை மாற்றி விட்டார்.
இப்போது சமீபத்தில் எங்கள் அறைக்கதவு மீண்டும் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியது. மூடிக்கொண்டால் திறப்பது மிகவும் கடினமானது. என் லெவலில் எனக்குத் தெரிந்த ஆயில் வைத்தியம் செய்தேன். கொஞ்சம் சரியானாலும் மறுபடி மறுபடி பிரச்னை செய்தது.
பழைய ஆள் இப்போதெல்லாம் ராங்கி பண்ணிக்கொண்டு வருவதில்லை. ஊரில் இல்லை என்பார். வெளியூரில் இருக்கிறேன் என்பார். நாம் வெளியே தாண்டிச் செல்லும்போது அவர் கடை தாண்டிதான் செல்ல வேண்டும். அங்குதான் நின்று வேலை செய்துகொண்டிருப்பார். இது ஒருவகை அலட்சியம்.
எனவே "கொஞ்சம் வந்து தாழ்ப்பாள் மட்டும் மாற்றிக் கொடுத்து விட்டுப் போகவும்" என புது ஆளைக் கூப்பிட்டோம்.
அவர் இரண்டு நாட்கள் டைம் எடுத்துக் கொண்டு வந்தார். தாளை சோதித்தார். உள்ளே நின்று தாழிட்டுப் பார்த்தார். கதவைத் திறந்தார். சுத்தியலை எடுத்தார். நிலையில் தாள் நுழையும் இடத்தில இரண்டு உலோக பட்டைகள் இருந்தன. அவற்றை உள்பக்கமாகவே கொஞ்சம் அடித்து,அப்புறம்கொஞ்சம் ஆழ அடித்து இறுக்கினார். அவ்வளவுதான்.
"அவ்வளவுதானா?"
"அவ்வளவுதான். செக் செய்து பாருங்க.."
சரியாய் இருந்தது.
''இது தெரியாதவர்கள்தான் உடனே தாளையே மாற்றச் சொல்வார்கள்'' என்று விட்டு மேலும் அவர் சொன்னதும் சுவாரஸ்யம்.
" நான் இப்போ உங்களுக்காக என் ஏரியா விட்டு இங்க வந்திருக்கேன். சுத்தியலால் ரெண்டு தட்டு தட்டிட்டு ஐநூறு ரூபா கொடுங்கன்னா நிறையபேர் யோசிப்பாங்க... இதுக்கு ஐநூறு ரூபாயான்னு.. கொஞ்சம் வேலை பார்த்துட்டு கேட்டா....? ஆனா உங்களுக்கு தெரியும் இது நியாயம்னு.. இந்த டெக்னிக்குக்குதானே காசு.. இல்லையா? இது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா என்னை ஏன் கூப்பிட்டிருக்கப் போறீங்க? இல்லையா?"
மௌனமாய் தலையசைத்தேன். ஐநூறு ரூபாயா? இது சமபந்தமான ஒரு குட்டிக் கதையும் இதேபோல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கே ஜி எஸ்ஸும் இதே மாதிரி அவர் சர்வீஸில் ஒரு சம்பவம் சொல்லி இருக்கிறார்.
பையில் தன் உபகரணங்களை சேமித்துக் கொண்ட மணிமாறன் - அதுதான் அவர் பெயர் - என்னைப் பார்த்து புன்னகைத்து, "இருநூறு ரூபாய் போடுங்க" என்று சொல்லி "கதவை மூடும்போது கைப்பிடியை திருகாமல் அப்படியே அடிக்கற மாதிரி மூடுங்கள். திறக்கும்போது மட்டும் கைப்பிடியை திருகினால் போதும்" என்று ஒரு டிப்ஸும் தந்து புறப்பட்டார்.
=========================================================================================
ஜீவி ஸார் இது மாதிரி போட்டி அறிவிப்புகளை எபியில் பகிர்ந்து கொள்ளலாமே என்று சொல்லி இருக்கிறார்...
கலைஞானம் அவர்களின் ஆதங்கம்...!
"பாகவதர் தன் காதலியை தூக்கி கட்டிலில் போட்ட 'அம்பிகாபதி' படத்தைப் பார்த்து யாரோ ஒருவர் தன் மனைவியை தூக்கி கட்டிலில் போட்டு இடுப்பை ஒடித்த விஷயம் என் காதிற்கு எட்டாமல் இருந்திருந்தால்... நான் மிளகாப் பழம் திருடி விற்று அந்தப் படத்தைப் பார்த்திருக்க மாட்டேன். தாத்தாவிடம் அடி வாங்கியிருக்கமாட்டேன். ஊரைவிட்டு ஓடியிருக்க மாட்டேன். என் அக்கா கண்ணில் பட்டிருக்கமாட்டேன். அக்கா என்னை மதுரைக்கு க்கு அழைத்துச் சென்றிருக்காது. இதனால் மாமா என்னை அடித்திருக்க மாட்டார். அக்காவும், மாமாவை விட்டு வடக்குப்பட்டி வந்திருக்காது. கொள்ளை நோயால் செத்திருக்காது. ஆனால் என் படம் பார்க்கும் ஆசை... என் அக்காவின் மரணத்திற்கு மூலகாரணமாய் அமைந்துவிட்டதே... என்கிற குற்ற உணர்ச்சி. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பினேன். சுவரில் 'கண்ணகி' பட போஸ்டரில் கண்ணாம்பா ஆவேசமாக சிலம்புடன் நின்றார்.
மறுபடியும் எனக்கு சினிமா பைத்தியம் பிடித்தது."தனது திரையுலக அனுபவங்கள் பற்றி சொல்லும் புத்தகத்தில் திரு கலைஞானம். அவர் சொல்லி இருக்கும் அனுபவங்களை விலாவாரியாக ஒவ்வொன்றையும் எழுதி இருக்கிறார்.
======================================================================================
அழையாமல்
வா மழையே.......
மனம் வறண்ட மக்களின்
வனம் அழித்த செயலை
மன்னித்து
மண் காக்க, வளம் காக்க
மண் நனைக்க, மனம் நனைக்க
மழையே, வா!
இயற்கையை மீறும்
இவ்வுலக மக்களின்
விஞ்ஞான இம்சையை
அஞ்ஞான அம்சமாய் நினைத்து
மனம் குளிர வைக்க
மழையே, வா
இந்தியர்கள் என்ற நிலை மறந்து
மொழியால் பிரிந்து
நீர் தடுக்கும்
நீசர்கள் செயல் மாற,
மாறி மனம் வருந்த,
பயிர் செழிக்க
கரு மேகப்
படையெடுத்து
மழையே, வா
பஞ்சம் என்ற நிலையால்
மீண்டும் பூமியில்
வஞ்சம் பரவச் செய்ய வேண்டாம்
நெஞ்சம் பதற வேண்டுகிறோம்
கொஞ்சம் இரங்கி
வா மழையே
கண் நனைய வேண்டுகிறோம்
மண்குளிர
வா மழையே... 2013
இங்கு வேண்டாம்...
இங்கில்லை...
இங்கும் வேண்டாம்..
எங்கு பொழியவேண்டும்
என்கிற முடிவு
தங்களிடம் இருப்பதாகவே
நம்பி
நகர்ந்துகொண்டிருக்கின்றன
மேகங்கள் - 2020
=============================================================================================
1986 ல் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு பொதுவெளியில் சண்டையிட்டு பிரிந்ததாய் கேள்வி. ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்துக்கு இசை வி எஸ் நரசிம்மன். பாடல்கள் ஹிட் ஆகி படமும் வெற்றி பெற்றது. மோகன் சீதா நடித்திருந்தார்கள். அதிலிருந்து இரண்டு பாடல்கள்.
பாடல் தளத்தில் ஒரு ரசிகரின் ரசனை.... பரிமள்ஜெய்
V.S.நரசிம்மன் அவர்களின் அற்புதமான மெட்டமைப்பு. வாஸந்தி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட மெட்டு. நரசிம்மன் ஐயா சிறந்த வயலின் இசைக் கலைஞர் என்பதால் அந்த நாதமே இதயத்தை அதிகம் மீட்டுகிறது.
தாளக் கட்டு இந்த சோகத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது.
SPB SIR போல இந்த பாடலை இத்தனை உணர்ச்சியோடு , எழுத்துக்கு கூட கனம் கொடுத்து யாராலும் பாட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
"நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது.." வரியைப் பாடும் போது அந்த விரக்தி, சலிப்பு அத்தனையும் கொட்டி இருப்பார்.
"உன் வீணையில் கேட்கலாம் வேறு கீதம்.. உன் பாடலில் சேரலாம் வேறு ராகம்.. இதைத் தானோ தேவன் நினைத்தான்.." வாலி ஐயாவின் வரிகள்
கண்களில் நீர் வார்க்கின்றன.
நிசப்தமான இந்த இரவில் இந்த பாடலை இத்தனை தெளிவான பதிவில் தந்து, நாடி நரம்பெங்கும் சோகம் பாய்ச்சி, நெகிழச் செய்து விட்டீர்களே.!
பாடல் முடிந்தும் மீண்டு வர முடியவில்லை. அருமையான பதிவுக்கு
நன்றிகள்
இரண்டாவதுக்கு பாடலாக மேகம் பாடலா, பூமேடையோ பாடலா என்று பூவா தலையா போட்டுப் பார்த்து மேகம் அந்த இகம் பாடலையே இரண்டாவது பாடலாய் தெரிவு செய்தேன்!!
========================================================================================
பீஜிங்: சீனா - ஜப்பான் இடையே, 1937ல் நடந்த போரின் போது சீன போர்க்களத்தில் பணியாற்றி நுாற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இந்திய டாக்டர் துவாரகநாத் கோட்னிஸை கவுரவிக்கும் விதமாக, சீனாவின் ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபத்தை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. சீனா - ஜப்பான் இடையே, 1937 - 45 காலகட்டத்தில் போர் நடந்தது.
சீனாவின் நண்பர் : ம் சீன தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐந்து தன்னார்வ டாக்டர்கள் அடங்கிய மருத்துவ உ தவிக்குழுவை இந்திய தேசிய காங்கிரஸ் சீனாவுக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவில், நம் நாட்டைச் சேர்ந்த டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் இடம் பெற்று இருந்தார். இந்த குழு, போரில் காயம் அடைந்த சீன வீரர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தது. ஒரு கட்டத்தில் கோட்னிஸ் உடன் சென்ற டாக்டர்கள் இந்தியா திரும்பினர். ஆனால், கோட்னிஸ் அங்கேயே தங்கி போர்க்களத்தில் பணியாற்றினார்.
மின்சாரம் இல்லாத நிலையிலும் அறுவை சிகிச்சைகளை செய்து, ஒரு நாளில், 18 மணி நேரம் உழைத்தார். 1,000க்கும் மேற்பட்ட சீன வீரர்களின் உயிரை காப்பாற்றினார். உள்ளுர் மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்தார். அவருக்கு உதவியாக இருந்த சீன நர்ஸ் குவோ கிங்லானை, 1941ல் மணந்தார். போர் அழுத்தங்களால் அவரின் குழந்தை பருவ வலிப்பு நோய் தீவிரமடைந்தது. கடந்த 1942 டிச., 9ல் சீனாவின் ஹெபே மாகாணத்தின் குவோலியாங்லியாங் கிராமத்தில், அறுவை சிகிச்சை செய்யும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அப்போது அவருக்கு வயது 32. சீனாவின் மாமனிதராக கோட்னிஸ் போற்றப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'சீனாவின் நண்பர்' என கோட்னிசுக்கு புகழாரம் சூட்டினார். அவரது சேவை குறித்து, 'இந்தியாவில் இருந்து வந்த டாக்டர் கோட்னிஸ்' என்ற புத்தகம் 1941ல் வெளியிடப்பட்டது. சக்திவாய்ந்த சின்னம் : கடந்த, 1949க்கு பின் கோட்னிஸ் பெயரில் சீனா ஒரு மருத்துவ கல்லுாரியை கட்டியதுடன், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. மேலும், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு நகருக்கு கோட்னிஸ் பெயரை சூட்டியது. கோட்னிஸ், இந்திய - சீன நட்புறவின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இன்று வரை திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சீனாவின் ஹெபே மாகாணத்தில் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் பெயரில் நினைவு மண்டபம் கட்டிய சீன அரசு, அதை சில தினங்களுக்கு முன் திறந்து மரியாதை செய்துள்ளது.
============================== ============================== ==
க டல் அலைகளுக்குள் எத்தனையோ நாகரிகங்கள் பிறந்து, வளர்ந்து, மறைந்து விட்டன. அந்த மறைந்த நகரங்களின் மவுனமான கதைகளையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும் ஒவ்வொரு நாடும் முயல்கின்றன.
பூம்புகாரின் சமகால நகரமாகக் கருதப்படும் பொதுக்கேவும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில், இந்தியத் தொல்பொருள் துறை 2007ம் ஆண்டு புதுச்சேரி கடற்பகுதியில் ஒரு கடலாய்வை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வின் முழுமையான அறிக்கைகளோ, தெளிவான தரவுகளோ இன்று வரை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிவரவில்லை. அதனால் பொதுக்கே என்பது இலக்கியங்களில் வாழ்ந்த ஒரு பெயராக மட்டுமே நீண்ட காலம் இருந்தது.
கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மதில் இந்த மவுனத்தை உடைத்ததுள்ளது.
இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. புதுச்சேரியில் டெம்பில் அட்வென்சர் என்ற 'ஸ்கூபா டைவிங்' பள்ளியை நடத்தி வரும் அரவிந்த், தனது மாணவர்களுடன் கடலுக்குள் பயிற்சி மேற்கொண்டபோது, கரையிலிருந்து சுமார் 16 கி.மீ., தொலைவில், 42 மீட்டர் ஆழத்தில், கடலின் அடியில் பரந்து விரிந்த ஒரு பிரமாண்டமான நீண்ட மதிற்சுவரைக் கண்டுள்ளார்.
அந்தக் காட்சி, கடலுக்குள் மூச்சை நிறுத்தும் அதிசயம் போல இருந்தது. 2.5 கி.மீ., துாரமுள்ள அந்த மதில், காலத்தின் கொடுமையையும் கடலின் தாக்குதலையும் தாங்கி இன்றும் நிமிர்ந்து நிற்பது போலத் தோன்றியது. அதன் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்துவாரம் வரையிலும், மற்றொரு பகுதி புதுச்சேரியின் எல்லையிலுள்ள நரம்பை பகுதி வரையிலும் நீள்கிறது.
அந்த மதிலுக்கு அருகே, மரக்கலங்கள் சென்று வரக்கூடிய வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தடயங்களும் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அந்த மதில் ஒரு கோட்டையின் சுவராகவோ அல்லது கடல் நீர் தடுப்புச் சுவராகவோ இருந்திருக்கலாம் என, அரவிந்த் கருத்து தெரிவித்தார்.
அந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் தந்த பெயர் 'அரவிந்த் வால்'.
தாலமியும், பிளினியும் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளில், காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து பொதுக்கே, அதனையடுத்து சோபட்டனம் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட இந்த மதில் சோபட்டனம் ஆக இருக்க முடியாது என்பது தெரிய வருகிறது. சோபட்மா எனப்படும் எயிற்பட்டினம் இன்றைய மரக்காணம் பகுதி என்பதைக் குறித்து இலக்கியச் சான்றுகளும், அகழ்வாய்வு ஆதாரங்களும் தொல்லியலாளர்களால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, காவிரிப்பூம்பட்டினத்துக்கும் சோபட்மாவுக்கும் இடையில் இருப்பதாகக் கூறப்படும் பொதுக்கே என்ற துறைமுகத்துடன் இந்த மதில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருத்து மேலும் வலுப்பெறுகிறது.
இதுவரை கற்பனையிலும், இலக்கியங்களிலும் மட்டுமே வாழ்ந்த பொதுக்கே, இந்த மதிலின் மூலம் முதல் முறையாக கடலின் அடியில் இருந்து தன் இருப்பை அறிவித்திருக்கிறது. இது கடலில் மூழ்கிய பொதுக்கே துறைமுகத்தின் முதல் தொல்லியல் தடயமாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த புதுச்சேரி கடற்பகுதியில், இந்தியக் கடல்சார் தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து, திட்டமிட்ட மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டால், சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாத பொதுக்கே துறைமுகம் பற்றிய பல அரிய உண்மைகள் வெளிப்படும்.
அந்த ஆய்வுகள் மூலம், பொதுக்கே என்பது ஒரு சிறு துறைமுகம் அல்ல; அது ஒரு நகர நாகரிகம், கடல் வணிகத்தின் மையம், தமிழரின் தொழில்நுட்ப அறிவின் சாட்சி என்பதும் நிரூபிக்கப்படும். அப்போது கடலின் அடியில் மறைந்திருந்த பொதுக்கே, மீண்டும் வரலாற்றின் மேடையில் தலை நிமிர்ந்து நிற்கும்.
புதுச்சேரி கடல் இன்று மவுனமாக கரையில் மோதி விளையாடி கொண்டு இருக்கலாம். ஆனால் அதன் அடியில், புதுச்சேரியின் பெருமை இன்னும் உயிரோடு இருக்கிறது.
அதை வெளிக்கொணர வேண்டியது - புதுச்சேரி அரசின் கடமை.
==========================================================================================================
'தில்லானா மோகனாம்பாள்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்த ஏபிஎன் வைத்தி என்ற பிம்ப் வேடத்தில் ‘கூட்டி’க் கொடுக்கும் ஏஜெண்டாக நாகேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மேனேஜரை அனுப்பி கால்ஷீட் கேட்டு வரச் சொன்னார்.
புகழின் உச்சத்தில் நாகேஷ் இருந்த அந்த நேரத்தில், குடும்பத்தில் ஒரு கொலை விழுந்து, போலீஸ் மாமனார், மாமியார், மைத்துனர்கள் என்று ஒவ்வொருவராக அழைத்துக் கடுமையாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் ஏபிஎன் மேனேஜர் போய் நிற்கிறார். ‘இந்த வழக்கில் ஒரு வேளை என்னையும் போலீஸ் கைது செய்யலாம். நான் பாதியில் உள்ளே போய்விட்டால் படம் நின்று விடும். என்னால உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம். வேறு நடிகரைப் பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பினார்.
மேனேஜர் இதைச் சொன்னதும், 'அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுன்னா, அவர் விடுதலையாகி வெளியே வந்ததுக்கப்புறம் நாகேஷ் சீன்களை ஷூட் பண்ணிக்கலாம். நாகேஷ் இல்லாம மோகனாம்பாள் படம் வராது. போய் அட்வான்ஸ் குடுத்திட்டு வாங்க!'ன்னு ஏபிஎன் சொன்னதைக் கேட்டு, 'என் மேல அவரு இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரா?'ன்னு கண்ணீர் விட்டு அழுதார் நாகேஷ்.
அவர் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் மேல் படங்கள், ‘காக்கும் கரங்கள்’ என் முதல் படம், 'பூவெல்லாம் உன் வாசம்' 192-வது படம். முதல் படத்திலும் இருந்தாரு. 192-வது படத்திலும் நாகேஷ் இருந்தாரு. இடையில் கிட்டத்தட்ட 30 படங்களில் நாங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம்.
என்னை அழகுப் பையான்னுதான் ரொம்ப வருஷம் கூப்பிடுவாரு. கடைசி நாட்களில் கவுண்டரே என்று செல்லமா கூப்பிடுவாரு.
திடீர்னு ஒருநாள் சீதம்மா கல்யாண மண்டபத்துக்கு 10 நிமிஷம் வந்திட்டுப் போப்பான்னு கூப்பிட்டாரு.
மொபரீஸ் ரோட்ல உள்ள அந்த மண்டபத்துக்குப் போனேன். அவர் பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடந்திட்டிருந்தது. ‘பையனை ஆசீர்வதிச்சுட்டுப் போ!’ன்னாரு.
மனுஷங்க வாழ்க்கையில விபத்துங்கிறது பலவிதமா நடக்குது. என் வாழ்க்கையில் காதல்ங்கிற பேர்ல அந்த விபத்து நடந்தது.
‘கிறிஸ்தவப் பெண் ரெஜினா. நான் கன்னட பிராமணன். என் பேரை பீட்டர்னு மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க. எப்படியோ திசைமாறிப் போன வாழ்க்கை- மீண்டும் பழைய பாதைக்கே வந்திருச்சு. என் பேரன் உபநயனம் பண்ணி என் வம்சத்தை விருத்தி செய்யப்போறான். இனி நான் நிம்மதியா கண்ணை மூடலாம்’ன்னு சொன்னார்.
நாகேஷ் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்னு எல்லோருக்கும் தெரியும். அதையெல்லாம் தவிர்த்திருந்தா ஒரு வேளை அந்த ஸ்ட்ரெஸ்லயே அவர் தற்கொலை கூட பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று நினைப்பேன்.
2009 -ஜனவரி 26-ம் தேதி ‘கம்பன் என் காதலன்’ ங்கிற தலைப்பில ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில நான் கம்பராமாயண உரை 8000 பேர் முன்னாடி நிகழ்த்தி விட்டு, 31-ம் தேதி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்தபோது நாகேஷ் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார்ங்கிற செய்தி வந்திச்சு.
என் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதை அறிவித்து ஒரு நிமிடம் மெளனம் அனுசரித்தபின் என் உரையைத் தொடங்கினேன்.
சென்னை வந்து நாகேஷ் இல்லம் போனேன். பரந்து விரிந்து வெறிச்சோடி கிடந்த ஹாலில் நடுவில் மாலையுடன் ஓரு படம். நான் வரைந்த நாகேஷின் ஓவியம். அந்த ஒன்றே ஒன்றுதான் அந்த வீட்டில் வைக்கப்படிருந்தது.
1970-ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில், ‘இது என் அன்பளிப்பு!’ என்று கொடுத்தபோது, அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
- சிவக்குமார்

.jpg)

.jpg)













இன்றைய பகுதிகளை, பாடல் தவிர, அனேகமாகப் படித்து முடித்துவிட்டேன்.
பதிலளிநீக்குகருத்துகள் பிறகுதான். மேகத்தைப் பற்றிய இரண்டாவது கவிதை 2020, மனதைக் கவர்ந்தது
வாங்க நெல்லை... ஆச்சர்யம், எல்லாவற்றையும் படித்து விட்டீர்கள். பாடல்களையும் கேட்டு விடுங்களேன்!
நீக்குசிறிய மூட்டு பிசகாக இருக்கலாம். மருத்துவர் ஒரு செகன்டில் குணப்படுத்திவிடலாம். இல்லைனா நமக்குத்மானே பெரும் கஷ்டம்.
பதிலளிநீக்குஎக்ஸ்ரே, மருத்துவம் செலவுக்கு 2000 ரூ கொடுக்க அஞ்சுவதில்லை. தாழ்ப்பாள் ரிப்பேர் செய்பவரும் அது மாதிரித்தானே
என்ன ஒண்ணு... ஐயாயிரம் பெருமானமுள்ள தாழ்ப்பாளுக்கு ஐந்நூறு கொடுத்தால் மனதுக்கு ஓக்கே என்று தோன்றும்.
அப்படிப் பார்க்க முடியாதே.. பெரிய செலவு இப்போது செய்யாமல் சிறிய செலவு. அவ்வளவுதான். கே ஜி எஸ் தான் சர்வீஸ் பார்த்த பெரிய கம்பெனிகளில் அவர் இப்படி சிறிய திருகாணித் திருகல்களில் சரி செய்ததையும், அதற்கு அவர் போட்ட கட்டணத்துக்கு கம்பெனி கேள்வி கேட்டதையும், தான் சொன்ன பதில்களையும் சொல்லி இருக்கிறார்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். வீட்டு ரிப்பேர் என்கிற பெயரில் நமக்கு வரும் செலவுகள். தி நகரிலிருந்து வரும் செல்வம் என்பவர் அத்தனை அருமையாகச் செய்து கொடுப்பார். சத்தமே இல்லாமே நாலு மணி நேரம் வேலை செய்து, நானூறு ரூபாய் வாங்கிச் செல்வார்,. அது 20 வருடங்களுக்கு முன்னால். இப்போது வீத்தின் மராமத்து செய்பவர் ஆயிரத்துக்குக் குறைந்து வருவதில்லை. உங்கள் வீட்டுக்கு மீண்டும் தொந்தரவு வராமல் இருக்கட்டும். மணி மாறன் வாழ்க.
பதிலளிநீக்குவாங்கம்மா.. சில பேர் செய்த வேலைக்கு தகுந்த கூலி வாங்கி கொள்வார்கள்,. சிலர் அரை நாள் கட்டணம், முக்கால் நாள் கட்டணம் என்று வாங்கி விடுவார்கள்!
நீக்குஓவியங்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கின்றன. ஜெய காந்தன் பெயர் பார்த்ததும் படிக்க ஆசை:)
பதிலளிநீக்குஹா.. ஹா... ஆனால் கதை பெயர் முழுசாகத் தெரியாமல் படம் எடுத்துள்ளேனே...!
நீக்கு:)))))))))
நீக்குபாடல்கள் நான் கேட்டதில்லை.மோஹனுக்கும் இசைக்கும் நல்ல ராசி.
பதிலளிநீக்குஇப்போ கேட்டீங்களாம்மா?
நீக்குகேட்கிறேன் அப்பா. டிவி தமிழ் செய்திகளை அலறிக் கொண்டிருக்கிறது:)
நீக்குநன்றிம்மா. செய்தியில் எனி விசேஷம்?
நீக்குசிவக்குமாரின் நாகேஷ் பற்றிய உரை மனதை உருக்குகிறது.
பதிலளிநீக்குநல்ல கலைஞரின் வாழ்வு இப்படிச் சீர்குலைந்ததே.
தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கெடுத்துக் கொண்டாரே.
பேரன் வாழ்க்கையாவது சிறக்கட்டும். மிக வருத்தமாக இருக்கிறது.
"யாராருக்கு எதுவென்று விதி போடும் பாதை.. போனாலும் வந்தாலும் அதுதான்!" - பாடல் வரி!
நீக்குஉண்மைதான்.
நீக்குஅது பெரிய கதை இல்லையோ? நாகேஷே இதைப் பற்றிப் பல முறை சொல்லி இருக்கார்னு நினைவு. அவர் மைத்துனன் செல்வராஜ் கொலை வழக்கில் மனோரமா பெயரும் அடிபடவே நாகேஷோடு நடிப்பதை மனோரமா நிறுத்தினதாகச் சொல்வார்கள்.
நீக்குவாங்க கீதா அக்கா... ஆமாம்.. நீங்கள் சொல்வது படித்த மாதிரிதான் இருக்கிறது.
நீக்குஅருமையான கவிதை மா. மழைக்காலம் என்று ஒன்று இல்லையே. எப்பவோ பெய்ய வேண்டிய மழை இப்போது கண்டிப்பாகப் பெய்ய வேண்டும். இந்த அக்கினி வெப்பம் குறைய, கத்திரி வெய்யிலில் மழை எப்பவும் பெய்யும்.
பதிலளிநீக்குநன்றிம்மா. வெப்பமும் வெக்கையும் மிக பயங்கரமாக இருக்கும்மா.. நேற்று தி, நகரில் இரவிலேயே இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு கடையில் இருக்கும்போது கஷ்டம் தெரியவில்லை. வெளியே வந்தால் வெக்கை..
நீக்கு''மனம் வறண்ட மக்களின்
பதிலளிநீக்குவனம் அழித்த செயலை
மன்னித்து
மண் காக்க, வளம் காக்க
மண் நனைக்க, மனம் நனைக்க
மழையே, வா!'' மனம் நிறை பாராட்டுகள் ஶ்ரீராம்.
__/\__
நீக்குஇந்த வார வியாழன் இலவச இணைப்பு போல சிறியதாக இருக்கிறது. சில வாரங்கள் நீண்டும், சில வாரங்கள் இப்படி சிறியதாகவும் அமைவதை தடுக்க முடியாதா?
பதிலளிநீக்குமுடியலையே... அதிகமாக இருப்பதை எல்லாம் அந்த சிறப்பிதழ், இந்த சிறப்பிதழ் என்று சொல்லி விட வேண்டியதுதான்! வாங்க பானு அக்கா.
நீக்குமழை பற்றிய இரண்டு கவிதைகளுமே சிறப்பாக இருக்கின்றன. இரண்டாவதை படித்த ஞாபகம். அக்னி நட்சத்திர காலத்தில் மழை வருவது அத்தனை சிலாக்கியம் கிடையாதே.
பதிலளிநீக்குஆமாம். சும்மா கொஞ்சம் மட்டும் பெய்துவிட்டு போனால் அதைவிட வேறு வினை கிடையாது!
நீக்குமாயாவின் ஓய்யங்களைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன?. அதில் இரண்டாவது படத்தில் இருக்கும் ஆண், எம்.ஜி.ஆரையும், மூன்றாவது பட ஆண் ரவிச்சந்திரனையும், பெண் ஜெயலலிதாவையும் நினைவு படுத்தகிறது.
பதிலளிநீக்குஆமாம். அவர்களை மனதுக்குள் மாடலாக நிறுத்திக் கொள்வார்கள் போல...!
நீக்கு*ஓய்யங்களை - ஓவியங்களை. முன்பெல்லாம் ப்ளாகில் கருத்திடும்பொழுது நேரும் தவறுகளை திருத்த முடியும், இப்பொழுது இயலவில்லை.
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து எப்பவுமே பிளாக்கில் போட்ட கமெண்ட்டுகளை திருத்த முடியாது! அழித்து விட்டு வேறு போடலாம்!
நீக்குஎடிட், டெலிட் என்று இரண்டு ஆப்ஷன்கள் பார்த்த நினைவு.. வேறு எதிலாவது பார்த்திருப்பேனோ?
நீக்குநிச்சயமாக பிளாக்கரில் இல்லை
நீக்குகடலுக்கடியில் உறங்கும் புதுச்சேரியின் வரலாற்றுச் சுவடு செய்தி சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஆமாமில்ல?
நீக்குஜெ.. ஓவியங்களில் சிலவற்றில் இயல்பான போஸ் இருக்காது. ஓவியத்துக்காகவே போட்ட போஸ் போல இருக்கும்.
பதிலளிநீக்குவிளம்பரத்துக்கு அடுத்த மூன்றாவது ஓவியம் அப்படித்தான் இருக்கு. பெண்ணின் அந்த போஸுக்கு கதையில் சம்பவம் இருக்குமாதெரியலை.
சில சமயங்களில் கதாசிரியர்களுடன் கலந்து பேசி எந்த இடத்தில் ஓவியம் போடலாம் என்று பேசி போடுவதுண்டு. சமயங்களில் கதாசிரியர் முன்னதாகவே சொல்லி விடுவார். சமயங்களில் ஓவியர் இஷ்டத்துக்கு ஒரு பெண் படமோ, ஆண் படமோ வரைந்து விடுவார்!
நீக்குஇந்தப் பத்திரிகைகள் நடத்துவது பற்றியும் அதற்கு விஷயதானம் செய்வது குறித்தும் ஓவியரோடு கலந்து ஆலோசித்துப் படங்களைக் கொண்டு வருவதும், அது முழுப்பக்கப்படம்னால் ஆசிரியருக்கு அதற்கேற்றாற்போல் மற்றப் பக்கங்களைச் சரி செய்யும் பொறுப்பு இருக்கும். ஆகவே இதில் ஆசிரியரின் யோசனையும் தேவை. ஆங்காங்கே சில இடங்களில் என்றால் எழுதிய்வரும் , வரைபவருமாக முடிவு செய்யணும். இதெல்லாமுமே நம்ம "தேவன்" எழுதின "மிஸ்டர் வேதாந்தம்" தொடரில் வந்திருக்கும். அதைப் படிச்சாலே போதும். வெற்றிகரமாகப் பத்திரிகை நடத்துவது பற்றிப் புரியும். மேல்கொண்டு வேணும்னா இருக்கவே இருக்கார் திரு ரா.கி.ர. அவர் எழுதின புத்தகமும் வழிகாட்டுமே.
நீக்குநாகேஷ் பற்றிய சிவகுமாரின் கருத்துகள் அனுபவம்..
பதிலளிநீக்குவாழ்க்கைல முழுதும் வெற்றி பெற்றவர்று யாரேனும் இருக்காங்களா என்ன?
முழுமையான வாழ்க்கைல, ப்ரொஃபஷன்ல வெற்றி பெறுவதற்கே பல கஷ்டங்களைச் சந்திக்கணும். குடும்பம், பசங்க அவங்க வாழ்க்கைல வெற்றி பெறுவது.... எல்லாமே ஒருவருக்குக் கிடைக்காது, அவர் யாராக இருந்தாலும்.
இதையும் மீறி, அவர்களது திறமையை நாம் நினைவுகூறுகிறோமே... அதுவே பெரிய விஷயம் இல்லையா?
ஆம். சரியாய்ச் சொன்னீர்கள். யார் ஒருவர் வாழ்க்கையிலாவது துன்பமே இல்லாமல், தவறே நிகழாமல், இன்பம் மட்டுமே, எல்லாமே சரியாக இருக்க முடியுமா என்ன! மிகை நாடி மிக்க கொள்வதுதான்.
நீக்குஏதானும் சின்னச் சின்னப்பிரச்னைகள் வரலாம். உடம்பு சரியில்லை, ஆபரேஷன் அந்த மாதிரி. பொதுவாகச் சிலருக்கு மட்டும் வாழ்க்கையில் அடிபடுவதே இல்லை. நமக்கு உள்ள பிரச்னைகளைப் பார்த்தால் அவங்களுக்கு ஏனோ இதெல்லாம் அதிசயமாத் தெரியும் என்பதோடு இதெல்லாம் என்ன? என்று கேலி செய்துவிட்டுக் கடந்து போவார்கள். இதை மாமாவின் பெரியம்மா பிள்ளை ஒருத்தர் மாமாவுக்கு அண்ணா/ அவர் குடும்ப வாழ்க்கையிலேயே பார்த்திருக்கோம். பார்க்கிறோம். ந்ல்லபடியா நீடூழி வாழட்டும் என வேண்டிப்போம்.
நீக்குபட், இந்த மாதிரி ஆட்கள் ரொம்ப ரேர் கீதா அக்கா.
நீக்குகடலுக்குள் ஒரு அல்லது இரண்டு கிமீ தூரத்திற்கு நீல் சில நாட்கள் உள்வாங்கினால் எத்தனையோ அதிசயங்களைக் காண இயலும்.
பதிலளிநீக்குபூம்புகார் முன்பு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர், அவருடைய சிறிய வயதில் கடல் 200 மீட்டர் அப்பால் இருந்தது, இப்போ ஊருக்குள் வந்துவிட்டது எனச் சொன்னார்.
ஆமாம். இயற்கையின் அதிசயங்கள்.
நீக்குநான் பார்க்க ஆசைப்பட்டுப் பார்க்காமல் போனதில் பூம்புகாரும் உண்டு. அதென்னமோ நம்மவர் திருவெண்காடு வரை போயிட்டு (காரிலேதான்) அங்கிருந்து பூம்புகார் போகலாம்னா பிடிவாதமா மறுத்துட்டார். அங்கே ஒண்ணும் இல்லைனு வேறே சொல்லுவார். அதைப் பார்த்துட்டு இல்லையோ முடிவு பண்ணணும். :( இத்தனைக்கும் அங்கே நெருங்கிய சொந்தம், நண்பர்கள்னு இருக்காங்க.
நீக்குபூம்புகார்ல பழசின் எச்ச்ங்கள் என்ன இருக்கு?
நீக்குபார்த்தால் தானே தெரியும்? பார்த்ததே இல்லையே!
நீக்குஅது சரி...
நீக்குஅங்க ஒரு சிறிய கலைக்கோவில் இருக்கு. கடற்கரை இருக்கு. உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் மாதவி தென்படலாம். பூர்வ ஜென்ம நினைவுகள் வாராதோ? நமக்குத் தொடர்பிருந்தால்.
நீக்குவரலாற்று இடங்களுக்குப் போனால் அது தரும் உணர்வே தனி.
இந்தச் சிறுகதைப் கோட்டிகளைப் பகிரச்்சொல்லும் ஜீவி சார், இவற்றிர்க்கு கதைகள் எழுதுகிறாரா?
பதிலளிநீக்குஎழுதுவார் என்றுதான் நினைக்கிறேன். நான் கலந்து கொள்ளவில்லை என்பதை பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்!
நீக்குநம் எபி நண்பர்களில் எழுத்தார்வம் கொண்டவர்கள் எழுத்து சம்பந்தபட்ட விஷயங்களில் பலர் போற்றும்படி ஜொலிக்க வேண்டும் என்ற கனவு எனக்குண்டு. அதன் வெளிப்பாடு தான் இதெல்லாம், நெல்லை
நீக்குஎன் வீட்டில் இது போன்று மார்ட்டிஸ் லாக் மக்கர் செய்த சங்கதியை அப்புறம் என்ன ஆச்சு பகுதியில் எழுதியிருந்தேன். ஆக பழைய போல்ட் அண்ட் திண்டுக்கல் லாக் தான் நல்லது என்பது திண்ணம்.
பதிலளிநீக்கு//இந்த KTR ஊறுகாய்.... இன்னும் என் நாக்கில் அந்த ருசியின் மீதம் இருக்கிறது. இப்போது கிடைப்பதில்லை.//
TSR ஊறுகாய் படம்.
Jayakumar
அட.. ஆமாம். மாற்றிச் சொல்லி விட்டேனோ... KTR என்பது வாசனாதி திரவியம். என் அப்பாவின் நண்பர் கவிஞர் மா வரதராஜன் நிறுவனம் அது.
நீக்கு"இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.. எந்தப் பொருளும் ஒரு வருஷத்துக்கு மேல வர்றதில்லை.. தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்க வேண்டியதுதான். இதை ரிப்பேர் செஞ்சா ஆகற செலவுக்கு புதுசே மாட்டிடலாம்!"//
பதிலளிநீக்குஉண்மையாகவே இத கேட்டு கேட்டுப் புளிச்சு போச்சு...நாமதான் ஐடியா கொடுத்து தூக்கிப் போடாம சிலதை செஞ்சு வாங்க வேண்டியதாக இருக்கிறது.
இப்ப ஜஸ்ட் ஒரு குழாய, ட்யூபை செருகற வேலைக்கு service charge 500 ரூ!!
கீதா
கீதா
அது சரிதான் கீதா... வாங்க.... ஆனால் டியூபை சொருகனும்னோ, எங்கே சொருகணும்னோ நமக்கு தெரியாததற்குதானே அந்தக் காசு!
நீக்குஅது சரிதான்...ஆனால் இது தெரிந்தே ...வாஷிங் மெஷின் தண்ணீர் வெளியேறும் குழாய் ட்யூப் ....தரையில் இருக்கும் தண்ணீர் செல்லும் பகுதியில் செருக வேண்டும்....மற்றொரு பகுதி மெஷினில் செருகப்பட்டிருக்கும் ...இந்தத் தரையில் அது செருகும் பகுதி சில சமயம் வெளியில் வந்துவிடும் எலி கடித்து வைத்திருந்திருக்கிறது எனவே முழுவதும் உள்ளே போகாமல்...சில சமயம் தண்ண்ணீர் வெளியில் அந்து சமையலரை படுக்கை அறை வரை மூன்று பக்கெட் சோப் தண்ணீர் வந்துவிட்டிருந்தது...நான் வாக்கிங் முடிந்த்து வீட்டுக்கு வரும் போது இப்படி தண்ணீரை அள்ளிக் கொட்டி துடைத்து என்று மீண்டும் சரியாகச் செருகி வைத்தும் ஆனது...அப்படி 3 முறை ஆன பிறகு அந்த ட்யூபை மாற்ற மெஷினின் செர்வீஸ் நபரை வரவழைத்ஹு...நான் என்ன செர்வீஸ் சார்ஜ் இவ்வளவு கேக்கறீங்கன்ன்றதும் அடுத்த முறை நீங்களே போட்டுக்கலாம் என்று சொல்லிச் சென்றார் தமிழ்க்காரர்தான். இப்ப அதே ட்யூபை ரெண்டாக வெட்டிப் போடிருக்கிறார்...
நீக்குகீதா
மோசமான அனுப்வங்கள் உண்டுன்னாலும் கம்பெனிக்காரங்களையே கூப்பிட்டுச் செய்யச் சொன்னால் வாரன்டி கார்டோடு பில்லும் கொடுத்துடுவாங்க. ஆகவே மறுபடி கூப்பிட்டால் அநேகமாகப் பணம் வாங்குவதில்லை. இது வாஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி, ஏசி ஆகியவற்றில் என் அனுபவம்.
நீக்குஇனி கீதா ரங்கன், மருத்துவரிடம் போய், அவர் தலைவலிக்கு பேனடால் மாத்திரம் எழுதிக்கொடுத்தால், கன்சல்டன்ஸி ஃபீஸை திருப்பிக்கொடுங்க, பேனடால் நானே வாங்கிப்பேனே என்று சொல்லிடுவாரோ... ஒருவேளை நான் டாக்டராக இருந்தால், கால்ல எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க, கைல எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி அவைகளைப் பார்த்துவிட்டு பேனடால் எழுதிக்கொடுப்பேன்.
நீக்குசமீபத்தில் வாஷிங் மெஷினின் வேஸ்டேஜ் பைப் வெளியே வந்து பால்கனி முழுக்க ஈரமாக, முதலில் புரியாமல் வாஷிங் மெஷின் ரிப்பேர்காரனை அழைத்து, அவன் வர தாமதமாக, நாங்களே உண்மை கண்டறிந்து நான் சரி செய்தேன்.
நீக்கு// வாரன்டி கார்டோடு பில்லும் கொடுத்துடுவாங்க. ஆகவே மறுபடி கூப்பிட்டால் அநேகமாகப் பணம் வாங்குவதில்லை.//
நீக்குஇது அதையும் தாண்டி புனிதமானது. அதாவது ஏழு வருஷ பழசு!
டாக்டர்களுக்கும் இது பொருந்தும்தான் நெல்லை!
நீக்குசொன்னா தவறா எடுத்தக்கூடாது பலர்.... டாக்டர்களுக்கு இது வேறு விதத்தில் பொருந்தும்.
நீக்குஎனக்கு வெளியே மதியம் சாப்பிட்டபிறகு (மனைவியுடன்) தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போல இருந்தது. துப்பினாலும் வரலை ஆனால் ஏதோ இருப்பதுபோல (கொஞ்சம் பெருசா). எதுக்கு வம்புன்னு ஹோட்டல்லேர்ந்து நேரா ஒரு மருத்துவமனை சென்றேன் (அலர்ஜியா இருக்கலாம் என்று நினைத்து). அப்போ ஒரு ஈ என் டி ஸ்பெஷலிஸ்ட் ஃஃப்ரீயா இருந்தாராம். உடனே அவர்கிட்ட போகச் சொன்னார்கள். அவர் டார்ச்லைட்டோட ஒரு குழாயை இறக்கி (அதுக்கு முன் லோகல் அனஸ்தீஷியா தொண்டைக்கு) ஸ்க்ரீன்ல வீடியோ போட்டு மனைவியை அதை ரெக்கார்ட் பண்ணச் சொல்லி. கடைசியில் உங்களுக்கு அசிடிட்டி இருக்கு, காலை 8 மணிக்கு, 12 மணிக்கு, 4 மணிக்கு பிறகு இரவு 7 1/2 மணிக்குன்னு நல்லா சாப்பிடணும்னார். 3000-4000 பில் போட்டிருப்பார், மருந்துகள் தவிர. மனைவி என்னிடம் எவ்வளவு என்று சொல்லவில்லை. சொன்னால் அலர்ஜி போய் வேறு பிரச்சனை வந்துவிடும் என்று.
எனக்கு எப்போதுமே தோன்றும், மருத்துவமனைகள், அடுத்த ஆள் வந்தால் ஒழிய, ஐசியு மற்ற படுக்கையிலிருந்து ஆளை வெளியேற்றாது. இருக்கும் உபகரணங்களை, நல்லா வச்சுக்கறதுக்காக தினமும் பலருக்கு உபயோகப்படுத்திப் பார்த்துவிடும் என்று.
அடுத்த பாரா டிட்டோ, ஸ்ரீராம்
பதிலளிநீக்குskilled நபர்கள் மிகமிகக் குறைவு. செய்யும் வேலையிலும் நேர்த்தி இருப்பதில்லை.
இங்கு நம்ம ஊர் டாய்லெட் ஒரு குளியலறை/கழிவறையில் . இங்கு வந்த போது அது சரியாகத்தான் இருந்தது. தீடிரென்று எலி கழிவில் புரண்ட எலி வீட்டுக்குள் கழிவறை முழுவதும் கழிவு வேறு...கடவுளே! பார்த்தால் கழிவு செல்லும் குழாயில் பெரிய ஓட்டை. உரிமையாளரிடம் சொல்லி முழுவதையும் மாற்றி வேறு புதுசு வைத்த அந்த ப்ளம்பர் அதை ஃபிக்ஸ் செய்துவிட்ட தரைக்குச் சமமாக நன்றாகப் பதிய வைக்காலம் கொஞ்சம் உயர்த்திப் பூசி விட்டார்...பாருங்க என்ன ஒரு நேர்த்தி!!! நாம் கால் வைக்கும் பகுதியில் ஒரு புறம் இப்ப தண்ணீர் தேங்குகிறது ஒவ்வொரு முறையும் வைப்பர் வைச்சு தண்ணீரைத் தள்ள வேண்டும்!!!
கீதா
அனுபவங்கள் பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்றாலும்... சமயங்களில் இப்படியும் நேர்கிறது!
நீக்குபூங்கதவே தாழ் திறவாய்!!!!! மணிச்சித்திரத்தாழ்!!!! ஆகிடுச்சு உங்க அறைக் கதவு!!!!
பதிலளிநீக்குஇந்த வீட்டு வாசல் கதவும் இப்படியேதான் வந்த புதிதில் அப்புறம் உரிமையாளரிடம் சொல்லி இதே போலதான் இரண்டாவது படம்....புதுசா லாக் போட்டாச்சு.
ஆனா இங்கு தாளையே மாற்ற வேண்டியதாச்சு...ஏனென்றால் சாவியை நுழைத்துத் திருகோ திருகுன்னு திருகினாலும் டக்கென்று திறக்கவே திறக்காது. சாவியை நுழைப்பதே சில சமயம் கஷ்டமாக அது சரியாகத் திறக்கும் இடத்தில் ஃபிக்ஸ் ஆகாமல்...படுத்தியது. இப்ப பிரச்சனை இல்லை
மணி மாறன் - மணி அதிகம் கேட்காமல் போனாரே!!!
கீதா
// பூங்கதவே தாழ் திறவாய்!!!!! மணிச்சித்திரத்தாழ்!!!! //
நீக்குஹா.. ஹா.. ஹா... நல்ல பாடல்கள் ரெபரென்ஸ்..
மணிமாறன் மணி அதிகம் கேட்காதது ஓகே தான்!
writer's cafe போட்டி பற்றி இன்று பானுக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.
பதிலளிநீக்குகீதா
நல்லது. அவர் கலந்து கொள்கிறாராமா?
நீக்குதெரியவில்லை. நானும் கேட்கவில்லை ஸ்ரீராம். ஆனா அக்கா சொன்னாங்க, இப்படியான போட்டிகளில் ஏதாவது ஒரு மாரல் ஆஃப த ஸ்டோரி போல இருக்கணும்னு நினைப்பதுண்டு. ஃப்ரீயா எழுத முடியாது என்று. அதில் செல்லப்பா சார் குழுவில் இருந்த ஓரிருவர் அப்போட்டி நடத்தும் குழுவில் உண்டு போல என்று ஓர் அனுமானமாக... பானுக்கா சொன்னாங்க..
நீக்குகீதா
ஓஹோ.. அம்புலிமாமா கதை போல ஆகிவிடாது?
நீக்குதிரு கலைஞானம். அவர் சொல்லி இருக்கும் அனுபவங்களை விலாவாரியாக ஒவ்வொன்றையும்//
பதிலளிநீக்கு10 வரிக்கதை போன்று, ஃபுல்ஸ்டாப் இல்லாத கதையாகவும் கூட யோசிக்க முடிகிறது.....அழகாக எழுதியிருக்கிறார்.
ஸ்ரீராம் நீங்க அந்த நீலக்கலரோ, இல்லை கடைசியில் அனுபவம் என்று இருந்திருககவிட்டால் கண்டிப்பாக ஒரு குமுதம் 10 வரிக் கதை என்றே நினைத்திருப்பேன்!!!
கீதா
அவர் நீளமாக கொடுத்திருந்ததை நான் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அந்தப் பாரா.. ஆமாம், அது அவர் தந்ததுதான். எங்கள் ஸ்கவுட் மாஸ்டர் ஒரு பாடல் சொல்லிக் கொடுப்பார்.. முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை என்று.. அதுபோல.
நீக்குமுத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை என்று.. அதுபோல.//
நீக்குஓ! அது ஏதாவது நினைவு வைத்துக் கொள்ளவோ?
கீதா
இல்லை. பல விஷயங்களை ஒரு ஒரு வரியாக அடக்கி...
நீக்குகவிதைகள் ரொம்ப நலலருக்கு ஸ்ரீராம். அதுவும் மேகம் கவிதை சூப்பர்!
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஆயிரம் போஓக்கள் - ஆயிரம் பூக்கள்?
பதிலளிநீக்குபாட்டு செம ஸ்ரீராம் இப்பதான் கேட்கிறேன்....வாசந்தி !!!!
குறுக்குச் சிறுத்தவளே!!! வாசந்தி....பாடும் நிலாவே பாடலில் தேன் கவிதை அந்த இடம் வாசந்தியைக் காட்டிக் கொடுக்கும் ஆனால் அப்பாடல் வேறு ஒரு ராகமும் கலந்து வரும்.
சோகத்தை ஜீஸாக்கி வார்த்தைகளில் கலந்து கொடுக்கிறார் நம்ம தலைவர்..
கீதா
நன்றி. திருத்தி விட்டேன் கீதா.. ஓ.. வாஸந்தி ராகமா? ஆனால் பாடல் செம செம செமதான்.
நீக்குகேட்கலாம் யாவுமே கிடைக்காது என்ற இடத்தில் ஒரு சின்ன சோகச்சிரிப்பு கொடுக்கறார் பாருங்க தலைவர்!!! அங்க நிக்கிறார் இதெல்லாம் அவருக்கே உரித்தான சொந்த சாகித்தியங்கள்!!!!!!! விரக்த்திச் சிரிப்பு...செம இல்ல? ஃபீல் பண்ணி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துப் பாடுவது என்பது எல்லாருக்கும் வராது, ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.. ஆமாம்...
நீக்குஇந்தப் பாட்டைக் கேட்டுட்டுப் பார்த்தா மோகனின் பிறந்தநாள் ஒரு ஷார்ட்ஸ் அவர் கோயிலுக்குச் சென்ற போது ரசிகர் ஒருவர் ஓடிவந்து அவருக்குச் சாமி படம் கொடுபப்து போன்ற ஷார்ட்ஸ்!
பதிலளிநீக்குகீதா
ஓஹோ.. நான் பார்த்ததில்லை.
நீக்குநானும் இப்பதான் இந்தப் பாட்டு முடிந்ததும் யுட்யூபில் சைடில் அது வந்திருந்தது, ஸ்ரீராம்,
நீக்குகீதா
மேகம் மேகம் தொடக்கமே ஸ்பீட் பல்லவி... இடையில் வரும்வ் அரி போல பல்லவி ஸ்பீட். ஸ்ரீராம், நீங்க பூவா தலையா போட்டுப் பார்த்த அந இன்னொரு பாடலையும் கேட்க வேண்டும். இந்தப் பாடல் ஓகே
பதிலளிநீக்குஜாலி பாட்டு போல!
கீதா
ஆமாம். பரவசப்பாடல்.
நீக்குசீதா க்ளோஸப்பில் புன்னகையை விரியவிடுவது அந்த ஷாட் இன்னும் கொஞ்சம் இயல்பாக எடுத்திருக்கலாம் போன்று தோன்றியது அப்பலாம் இப்படித்தானே க்ளோஸப் ஷாட் வைக்கும் போது சிரிப்பது புன்னகைப்பது ஆனால் அதையும் அது தெரியாமல் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது அந்தப் புன்னகை செயற்கையாக இருக்கு!!!
பதிலளிநீக்குகீதா
ஆனால் சீதா அழகுதான். அவர் அழகை உன்னால் முடியும் தம்பியில் கேபி அழகாக காண்பித்திருப்பார்.
நீக்குயெஸ் யெஸ்....அதுல சீதா செம செம அழகு!!! இப்படம் என் அத்தையின் தயவால் நாகர்கோவில், அத்தை பெண் நான் அத்தை என்று தியேட்டரில் பார்த்த படம்.
நீக்குகீதா
சீதா அழகு தான். நல்ல நடிப்பும் கூட. ஆனால் திருமண விஷயத்தில் தான் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்துட்டுப் பின்னர் திண்டாடினார். ஆனால் இதே தேவயானி முதலிடத்தில் இருக்கையிலேயே திருமண விஷயத்தில் முடிவெடுத்துப் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாலும் அதைத் தனக்கேற்றாற்போல் வெற்றியாகத் திருப்பிக் கொண்டு விட்டார். இப்போது அவர் மகளும் நடிக்க வந்திருந்தாலும் தேவயானி சர்ச் பார்க் கான்வென்டில் பார்க்கும் ஆசிரியர் வேலையை விடவில்லை. ராஜகுமாரனையும் தனக்கேற்றாற்போல் மாற்றி நிறைவான வாழ்க்கை வாழ்கிறார். வாழ்க்கையில் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.
நீக்குஎன்ன.. சீதா மகள் நடிக்க வந்து விட்டாரா? என்ன? தேவயானி டீச்சராக இருக்கிறாரா? இன்னும் தொடர்கிறாரா? இதெல்லாம் செய்தி எனக்கு. சீதா வீட்டுத் தோட்டம் பற்றி ஓரிரு ரீல்ஸ் போட்டு பார்த்திருக்கிறேன்.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீதா மகள் நடிக்க வந்துட்டார்னு எங்கே சொல்லி இருக்கேன்? கீர்த்தனா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தோடு சரி. பார்த்திபன் தன்னுடைய உறவில் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார்னும் சீதா அந்தக் கல்யாணத்துக்குப் போனதாகவும் செய்திகள் சொல்கின்றன.
நீக்குநான் சொன்னது தேவயானி மகள் பற்றி. தேவயானி போலத் தான் இருக்கார் இவரும். படத்தின் ஆரம்ப ஷூட்டிங்கிற்கு தேவயானியும் போய்க் கலந்து கொண்ட ஒரு வீடியோ வந்தது. அதில் தான் இந்தத் தகவல்கள். ஆனால் தேவயானி சர்ச் பார்க்கில் வேலை பார்ப்பது சில ஆண்டுகள் முன்னரே தெரியும்.
தேவயானி மகள் நடிக்க வந்ததும் தெரியாது எனக்கு! நான் இன்னும் குழந்தையாவே இருக்கேன். உலக அறிவை வளர்த்துக்கணும் போல...
நீக்குஅதுக்கு யூடியூப் நிறைய பார்க்கணும் (காஸிப்). அப்புறம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பார்த்திருக்கணும். தேவயானி வாழ்க்கைல வெற்றி பெற்றுவிட்டார்.
நீக்குசீதாவும் பார்த்திபனும் சொதப்பிவிட்டார்கள். ஒருவர் உருப்படி இல்லாத படங்கள் எடுத்து அழிந்துபோனார். இன்னொருவர் பற்றி சொல்ல விரும்பலை.
///ஆனால் சீதா அழகுதான். // அழகா இல்லாத ஒரு நடிகை சொல்லுங்களேன் பார்ப்போம். சிலர் சில படத்தில் சில காட்சிகளில் நல்லா இருக்க மாட்டாங்க. அவ்ளோதான்.
மின்சாரம் இல்லாத நிலையிலும் அறுவை சிகிச்சைகளை செய்து,//
பதிலளிநீக்குஆச்சரியம் இல்லையா ஸ்ரீராம்...அறுவை சிகிச்சைக்குச் சில உபகரணங்களுக்கு மின்சாரம் தேவைப்படும் இல்லையா? ஆனால் அக்காலகட்டத்தில் இதெல்லாம் இலலத சூழலில் பெரிய விஷயம் தான். இப்ப எவ்வளவோ வளர்ச்சியடைந்தும் கூட அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைகின்றன இல்லைனா ஏதாவது தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றனவே!
நம்ம ஊர் மருத்துவருக்கு சீனாவில் மரியாதை! சூப்பர்ல?!
கீதா
சூப்பர்தான்... சூப்பர்தான்...
நீக்குகோட்னிஸ் பற்றிய இந்தச் செய்திகள் மட்டுமில்லாமல் நம் தமிழகத்தில் இருந்த டாக்ட்ர் ரங்காச்சாரி அவர்களும் மிகவும் திறமையானவர் என்று சொல்லுவார்கள். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இது நான் கடைசி வருஷம் பள்ளியில் படிக்கையிலேயே படிச்சிருக்கேன். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவர் டாக்டர் ரங்காசாரி. முக்கியமா மகளிர் மருத்துவத்தில்.
நீக்குஆமாம். ரங்காச்சாரி பற்றி அறியாதோர் உண்டா என்ன...
நீக்குகடந்த 1942 டிச., 9ல் சீனாவின் ஹெபே மாகாணத்தின் குவோலியாங்லியாங் கிராமத்தில், அறுவை சிகிச்சை செய்யும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்//
பதிலளிநீக்குஓ மை! வருத்தமாக இருநது இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவருக்கு வலிப்பு நோய்...
அப்ப அந்த நோயாளிக்கும் என்னாச்சோ.
கீதா
ஹா.. ஹா.. ஹா.. உங்க கவலை வித்தியாசமானது.
நீக்குஆமாம், அவர்களும் மனிதர்கள் தானே. டாக்டர் ரங்காச்சாரி கூட டைபாய்ட் ஜூரத்தில் இறந்ததாகச் சொல்லுவார்கள்.
நீக்குஅதில்லை கீதா அக்கா... இவர் ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டிருந்த அந்த நோயாளிக்கு என்ன ஆச்சோன்னு கவலைப்படுகிறார் கீதா!
நீக்குOho!
நீக்கு/அறுவை சிகிச்சை செய்யும்போதே// கீதா ரங்கன் என்ன நினைச்சிருக்காங்க? சமையல் செய்யறது மாதிரி அறுவைச் சிகிச்சைன்னா? அதுக்கு நிறைய அசிஸ்டெண்டுகள் இருப்பாங்க. நர்ஸுகளும். சமையல் செய்யறதுக்குத்தான் ஒருத்தரே ஒருத்தர்.
நீக்குஅப்போது அவருக்கு வயது 32. சீனாவின் மாமனிதராக கோட்னிஸ் போற்றப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'சீனாவின் நண்பர்' என கோட்னிசுக்கு புகழாரம் சூட்டினார். //
பதிலளிநீக்குமெய்சிலிர்ப்பு!
கீதா
Yessu...
நீக்குஅரிக்கமேடு முகத்துவாரம் சென்றிருட்ந்தார்கள் என் மகன் மற்றும் அவன் வகுப்பு பிள்ளைகளை அப்ப கூட்டிப் போனாங்க. மிகச் சிறந்த வரலாற்று இடம் என்று மகன் சொன்னான் என்னை அப்புறம் தனியாகக் கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான் ஆனால் வாய்க்கவில்லை. அங்கு அப்பொது இத்தகவ்ல் சொல்லப்பட்டதாகச் சொல்லியிருந்தான், இப்ப அட! சமீபத்திய நிகழ்வு போல அச்செய்தியை சுட்டிக்குச் சென்று வாசித்தேன், ஸ்ரீராம். சூப்பர்ல அடில இன்னமும் இருப்பது ஆச்சரியம் அதுவு ம் 2.5 கிமீ!!
பதிலளிநீக்குகீதா
இயற்கை அதிசயங்கள் எப்போதுமே சுவாரஸ்யம். இல்லை?
நீக்குஎப்போதுமே சுவாரஸியம்தான் ஸ்ரீராம்
நீக்குகீதா
நாகேஷ் - பற்றி சிவகுமார் சொன்ன பகுதி நெகிழ்ச்சி. நாகேஷ் எப்பேர்ப்பட்ட நடிகர்....சர்வர் சுந்தரம் அந்த கேரக்டர் அசாத்தியமான கேரக்டர். அப்படம் முழுவதும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்.
பதிலளிநீக்குஇப்போதுதான் அறிகிறேன் நாகேஷ் கன்னடத்துக்காரர் மற்றும் அவரது சமூகம் . அவரது தியேட்டர் நாகேஷ் தியேட்டர் பாண்டிபஜார் அது இயங்காமல் அப்புறம் கல்யாணமண்டபம் ஆனது. இப்ப என்னன்னு தெரியலை.
கீதா
தியேட்டர் ஆரம்பிக்கும்போது திருமதி ஒய் ஜி பி பிரச்னை செய்தார். பள்ளியை ஒட்டி இருப்பதாகக. நாகேஷ் எம் ஜி ஆரிடம் ஓடினார். அவர் வாசலை மாற்றிக் காட்ச்ச்சொல்லி விட்டு அனுமதி வழைக்கி விட்டார் என்று படித்திருக்கிறேன்.
நீக்குஓ! ஒய்ஜிபி பள்ளி அங்க எங்க இருக்கு ஸ்ரீராம்? பார்த்த நினைவு இல்லையே ஓ எதிரில் இருக்கும் பள்ளியா ஒரு கான்வென்ட் உண்டு!
நீக்குஅவர் வாசலை மாற்றிக் காட்ச்ச்சொல்லி விட்டு அனுமதி வழைக்கி விட்டார் என்று படித்திருக்கிறேன்.//
ஓஹோ!
திருமணம் மண்டபம் ஆன பிறகு அதன் முகப்பு பாண்டிபஜாரில்தான் ஆனால் ரொம்பக் குறுகிய இடம். உள்ளே ஹால் பெரிதாக இருந்தாலும் சாபாடுக் கூடம் மேலே! ரொம்ப வசதிகள் கிடையாது, எங்கள் வீட்டு ஒரு திருமணம் அங்கு நடந்தது
கீதா
நாகேஷ் மாத்வ பிராமணர். தாராபுரம் சொந்த ஊர். அவரின் ஒரு உறவினர் நம்ம ரங்க்ஸின் அலுவலகம். அவரே அரசு உத்தியாகத்தில் தான் இருந்தார் எனக் கேள்வி..
நீக்குP S பள்ளிதான் அங்கே இருக்குன்னு நினைக்கிறேன் கீதா.
நீக்கு// அவரின் ஒரு உறவினர் நம்ம ரங்க்ஸின் அலுவலகம். ..
நீக்குசரிதான். இவருமா? கீதா அக்கா.. இது ரொம்ப அநியாயம்!
ada???????????? நான் என்ன செய்வது? நிஜம்மாவே அவங்க எல்லாம் அம்பத்தூரில் வேறே இருந்தாங்களே! இன்னும் சொல்லப்போனால் விசு, மௌலி, மௌலியின் தம்பி, அவங்க அப்பா எல்லோருமே அம்பத்தூர் தான். பித்துக்குளி முருகதாஸ் எங்க தெரு தான் அவர் மேற்குக் கோடி எனில் நாங்க கிழக்குக் கோடி. மேலும் ரா.கணபதி, வினு ஆகியோரும் அம்பத்தூரில் பேருந்து நிலையம் அருகே திருவேங்கட நகரில் தான் இருந்தாங்க. வினு அவர்களின் ஆஞ்சநேயர் படம் சிலருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டி நாங்க அடிக்கடி வினு வீட்டுக்குப் போவோம். மேலும் என்னோட தாய் மாமா (என்னுடன் இருந்தார்) அங்கே வீடு பார்த்துக் குடித்தனம் இருந்தார்.
நீக்கு//P S பள்ளிதான் அங்கே இருக்குன்னு நினைக்கிறேன் கீதா.//ஆரம்பகாலப் பள்ளி! அங்கே இருந்தது. அநேகமா மின் பிம்பங்கள் அலுவலகம் எதிரேனு நினைக்கிறேன். லக்ஷ்மி காலனி. உள்ளே போய் இடப்பக்கம் திரும்பினால் திரு வெங்கட்ராமன்(ஆர்வி, ஜனாதிபதி) அவர்களின் பூர்விக இல்லம் வரும். என் மைத்துனர் (மாமாவின் சொந்தத் தம்பி) அங்கே தான் இரண்டு தெருக்கள் தாண்டி வீடு வாங்கிக் கொண்டு இருந்தார். இப்போவும் வீடு இருக்கு. மும்பையில் இருந்து அடிக்கடி வந்து தங்கிப்பார். வேம்பத்தூரோ/வேப்பத்தூரோ டான்ஸ் மாஸ்டர் அவரின் பூர்விக வீட்டை இடிச்சு ஃப்ளாட் கட்டியதில் இவரும் வாங்கினார். இன்னமும் டான்ஸ் கிளாஸ் கீழே அன்டர்கிரவுன்டில் நடக்கிறது. அந்தக் காலனியே அநேகமாகத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவங்க தான்.
நீக்குஅம்மாடி.. இந்த அளவுக்கெல்லாம் எனக்கு பூகோள சரித்திர அறிவு இல்லை!
நீக்குவிசு, மௌலி அம்பத்தூர் பத்தி எல்லாம் சொல்லி இருக்கீங்க படிச்சிருக்கேன்.
நீக்குசில சமயங்களில் கீதா சாம்பசிவம் மேடம் வேலை பார்த்தாங்களா இல்லை ஆபீஸில் அரட்டை அடிச்சிட்டிருந்தாங்களான்னு சந்தேகம் வரும் (அப்போ யூடியூப் தொலைக்காட்சி இல்லை இல்லையா?) எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நீக்குஅது ஹோலி ஏஞ்சல்ஸ். (ஜெ படித்தார்கள் என்று நினைவு). அது எம்ஜிஆர் முதலமைச்சரா இருந்தபோது. கடந்த பத்து வருடங்களில் டாஸ்மாக் வந்தாலே வாயைப் பொத்திக்கிட்டு இருந்திருப்பாங்க. நல்லவேளை போதை மருந்துக்கு வாசல்லயே கடை திறக்கலையே என்று.
மாயா அவர்களின் ஓவியங்களில் கண்கள் பெரிதாக உருண்டு இருக்கும்.
பதிலளிநீக்குஆண்கள் - கொஞ்சம் எம்ஜிஆர் ஜாடையில் வரைந்திருக்கிறாரோ? ஒரு ஓவியத்தில் பெண் ஓவியம் எம் ஜி ஆர் ஜெஜெ போன்று...
ஆனால் ஜெயகாந்த கதைக்கான படம் கொஞ்சம் வித்தியாசமாக...
கீதா
விதம் விதமாக வரைவார் தான். ஓவிய பயிற்சிப்பள்ளி வேறு வைத்திருந்தாரே...
நீக்குமழைக்கவிதையும் மேகங்களின் செய்தியும் அருமையாக இருக்கு. முதல்லேயே சொல்லிடறேன். அப்புறமா ஸ்ரீராம் எனக்குக் கவிதையே பிடிக்காதுனு நினைச்சுக்கறார். :)
பதிலளிநீக்குகோட்னிஸ் பற்றிய செய்தியை ஏற்கெனவே பள்ளியில் படிக்கையிலேயே இந்திய/சீனப் போர் சமயம் எங்கள் வாத்தியார் மூலம் எங்க வகுப்பு அனைவரும் தெரிந்து கொண்டோம்.
குந்தவையும், வானதியும் கந்தமாறன் உண்மை மதுராந்தகனாகச் செம்பியன் மாதேவியைப் பார்க்க வந்ததும், தனக்கு அரியணை வேண்டாம், சிவலோக சாம்ராஜ்யமே போதும் எனச் சொல்லுவதும் நடக்கும்போது உள்ள படம். ஒரிஜினல் மணியத்தின் ஓவியம்.
மணியம் ஓவியம் ஓகே. கோட்னிஸ் பற்றி பள்ளிக் காலத்திலேயே படித்திருக்கிறீர்களா? நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
நீக்குஆஹா கீதா அக்கா.. கவிதை பற்றி நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை என்பதால் எனக்கு அப்படி தோன்றியது உங்களுக்கு எப்படித் தெரியும்?!!
நீக்கு//கவிதை பற்றி நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை என்பதால் எனக்கு அப்படி தோன்றியது உங்களுக்கு எப்படித் தெரியும்?!!// mind reaing. :D
நீக்குஎனக்குப் பள்ளியில் முக்கியமா எங்க செக்ரடேரியல் வகுப்புக்கு மட்டும் அருமையான தமிழாசிரியப் பெண்மணி, ஆங்கில ஆசிரியை, பின்னர் அக்கவுன்டசி மற்றும் எகனாமிக்ஸ் பற்றிய பாடங்களுக்கெல்லாம் நல்லதொரு ஆசிரியர் கிடைத்தனர். உலகப் பொருளாதாரம் படிக்கையில் அவர் இந்த மாதிரி நிறையத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுவார். கோட்னிஸ் பற்றிய புத்தகம் கூட வந்திருப்பதைச் சொல்லிப் படிக்கவும் சிபாரிசு பண்ணினார். அப்போல்லாம் இதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. முதலில் கதைப் புத்தகங்கள், பின்னர் தொடர்கள், வாராந்தரிகள்னு புத்தி போகும்.
நீக்குஇந்த மாதிரி எல்லாம் ஆசிரியர்கள் அமையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீக்குநாகேஷ் பற்றிய சிவகுமாரின் கருத்துக்களும் முன்னரே படிச்சிருக்கேன். அதிலும் பேரனுக்குப் பூணூல் போட்டது பற்றி நாகேஷ் சொன்னதும் அவர் திருமணம் பற்றி நாகேஷ் சொன்னதும் மற்ற விபரங்களும் அப்போல்லாம் தினசரிகளில் பரபரப்பூட்டும் செய்திகளாக வந்தன என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குடி.எ/ஸ்.ஆரில் ஊறுகாய் கிடைக்கும் என்பதே உங்கள் மூலம் தான் தெரியும். இதுக்கு முன்னால் கூட ஒரு தரம் இதே விளம்பரம் வந்திருக்கு அல்லது இதே போன்ற டிஎஸ்.ஆர். ஊறுகாய் விளம்பரம்.
மாயாவின் படங்கள் அனைதுமே அந்தக் கால விகடன். இல்லையா? ஜெயராஜின் ஓவியம்? குமுதமோ? ஆமாம், ரா.கி.ர. கதை வந்திருக்கே?
ஆமாம். TSR ஊறுகாய் பற்றி நான் அடிக்கடி புலம்பி இருக்கிறேன். மாயா விகடனில் மட்டும்தான் வரைந்தாரா? ஜெ கூட பழைய விகடன்தான். சமீபத்தில் அழகியசிங்கர் வாட்சாப் குழுமத்தில் சுஸ்ரீ எனும் எழுத்தாளர் வீட்டுக்கு ஓவியர் ஜெ வந்தது பற்றி படம் பகிர்ந்திருந்தார். கல்லூரிக் காலத்திலிருந்து பழக்கமாம்.
நீக்கு"ஜெ" பழைய விகடனில் வரைஞ்சிருக்காரா? ஆச்சரியமே! எனக்கு நினைவில் இருந்திருக்காது. அல்லது முதல்தரம் ராஜஸ்தான் போயிருப்பேன். அப்போல்லாம் விகடன், கல்கி, கலைமகள் ஆகியவை அங்கே வராது. சந்தா கட்டித் துக்ளக்கும் (இத்தனைக்கும் விகடன் பிரசுரம்) குமுதமும் வரும். அதுவும் பல சமயங்களில் வழியில் யாராவது எடுத்துண்டுடுவாங்க. ஒண்ணும் பண்ண முடியாது. :( பின்னர் நாங்க அங்கிருந்து 78/79 ஆம் வருஷங்களில் கிளம்பும் சமயம் ஒரு தினசரிப் பத்திரிகையில் விநியோகஸ்தர் எங்கள் மூலமாக இந்தப் புத்தகங்களும் அங்கே வருவதற்கு வழி செய்தார். அதன் மூலம் அநேகமாக எல்லாப் புத்தகங்களுமே வரத் தொடங்கின. கலைமகள் கூடத் தபாலில் வந்திருக்கு. பின்னர் அடிக்கடி தொலைந்து போகவே நிறுத்திட்டோம்.
நீக்குஇந்த சு.ஸ்ரீ என்பவர் மத்யமரில் புகழ் பெற்றவர் போல. நானும் சிலவற்றைப் படிச்சிருக்கேன். ஆனால் இதன் ஆர்கனைசர் அல்லது நிறுவனர்(?) திரு சங்கர் ராஜரத்தினம் (திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் மகனாம்) எழுதுவது மட்டும். மோசம் என்றால் அவ்வளவு மோசம். அவருடைய பிராமண வெறுப்பை எல்லாம் கொட்டி எழுதுகிறார். :( இதனாலேயே நிறையப் பேர் மத்யமரை விட்டு விலகிட்டாங்க.
நீக்கு// "ஜெ" பழைய விகடனில் வரைஞ்சிருக்காரா? ஆச்சரியமே!//
நீக்குஎனக்கும் சரியாகத் தெரியவில்லை. அதைப் பார்த்தால் குமுதம் பேப்பராகத் தெரியவில்லை எனவே சொன்னேன்.
நான் மத்யமர் பக்கம் வருவதே இல்லை. மத்யானமர் பக்கமும் வருவதில்லை! சுஸ்ரீ நிறைய பக்கங்களில் இருக்கிறார். புத்தகக் கண்காட்சியில் என்னைப் பார்த்ததும், நான் ஒரு பிரபல எழுத்தாளனாயிருப்பேன் என்று எண்ணினாரோ என்னவோ, தன்னை அறிமுகபப்டுத்திக்கொண்டு ஒரு கார்ட் கொடுத்தார். செல்லப்பா ஸார் விழாவில் சந்தித்தபோது கண்டுகொள்ளளவேயில்லை!
நீக்கு//எனக்கும் சரியாகத் தெரியவில்லை. அதைப் பார்த்தால் குமுதம் பேப்பராகத் தெரியவில்லை எனவே சொன்னேன்.//ரா.கி.ர. தொடர் வருதே அதில். குமுதம் தான் அது. எஸ்.ஏ.பி இருந்தவரை குமுதம் தவிர்த்து வேறே எதிலும் ரா.கி.ர. எழுதினதில்லை. அதன் பின்னர் ஆனந்த விகடனில் எழுதினது தான் "நான் கிருஷ்ணதேவராயன்" என்று நினைக்கிறேன். இங்கே வந்திருப்பது குமுதமே தான்.
நீக்குசரிதான். மூவிரண்டு ஏழைச் சொல்கிறீர்களா? சரிதான். சரிதான்.
நீக்குபாடலை இனித் தான் கேட்கணும். இந்த மாதிரி மெகானிக்குகள், தச்சர்கள், எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள் பற்றிய கதைகள் என்னிடமும் நிறைய உள்ளன. அநேகமாக எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழியாகத் தான் இருக்காங்க. இவர் என்னமோ உங்களுக்குக் கொஞ்சம் நல்லவராக இருந்திருக்கார். 500 ரூ சொல்லிட்டு 200 ரூ வாங்கிக் கொண்டதும் ஓர் அதிசயம் தான். ஆனால் வீடு என்றாலே உட்கார்ந்து சாப்பிடும் என்பதை வாராவாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கும். ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து கொண்டே இருக்கும். இந்தியாவில் தான் அப்படின்னா இங்கேயும் தான். ஒண்ணு ஏசி, இல்லைனா குளிர்சாதனப்பெட்டி இல்லைனா தண்ணீரே வராது, அதுவும் இல்லைனா தண்ணீர் மணலாக வரும். அல்லது குழாய் உடைச்சுக்கும். இப்படி எத்தனையோ. சொல்லாமல் கொள்ளாமல் மின்வெட்டு வேறே இப்போல்லாம். :))))
பதிலளிநீக்குஅங்கெல்லாமும் இப்படி எல்லாம் நடக்கிறது என்று படிக்கும்போது மனதில் ஒரு அல்ப ஸந்தோஷம்! மனுஷ புத்தி!
நீக்குபுதுச்சேரி பொதுக்கே நாகரிகம் பற்றிச் சாண்டில்யன் எழுதிப் படிச்சேனோ? நினைவில் இல்லை. இப்போதானும் சான்றுகள் கிடைச்சிருப்பது சந்தோஷம். பாடல்களும், ராகக் கண்டுபிடிப்புக்களும் உங்களுக்கும் கீதாவுக்கும் இடையில் ஆனது. நான் மத்தியானமாய்ப் பாட்டைக் கேட்டுக்கறேன். இந்தத் தண்ணீர் கேன் குழாய் உடைஞ்சு இன்னிக்குப் பம்ப் போட்டு எடுக்கையில் தண்ணீரே வரலை. :( எப்படிச் சமைப்பதுனு யோசிச்சபோ மருமகள் வேறே கானில் இருந்து எடுத்துத் தரேன்னு சொல்லி இருக்கா. இப்போத் தான் மணி ஒன்பது ஆகிறதால் கொஞ்ச நேரம் கழிச்சுப் போய்ப் பார்க்கணும். :)))) பிரச்னையுடனே விடியும் நாட்கள். கிணறும் வாளியும் தான் சிறப்புனு நினைக்க வைக்கின்றன.க்க்
பதிலளிநீக்குசாண்டில்யன் இதுபற்றி எழுதி இருக்கிறாரா என்று தெரியாது. விலைராணி என்றொரு கதை படித்துக் கொண்டிருக்கிறேன். பச்சை ஆபாசப் புத்தகம்! அங்கேயுள்ள பிரச்னைகள் சீக்கிரம் தீரட்டும்!
நீக்குஸ்ரீராம் இரண்டு தினங்களுக்கு ஒரு புது சாண்டில்யன் நாவல் பெயர் சொல்கிறார். எப்படித்தான் படிக்க இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ. (எல்லாரும் ஆபீஸ் போயாச்சுன்னா நிம்மதியா படிக்க உட்கார்ந்துவிடுகிறாரோ?)
நீக்குஇன்றைய பகுதிகள் அத்தனையும் சிறப்பு.
பதிலளிநீக்குபுதுச்சேரி கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டுவோம்.
ஓவியங்கள் சூப்பர்.
பாடல்கள் இரண்டும் அருமை.
வாங்க மாதேவி.. படித்ததற்கும், ரசித்ததற்கும், கருத்துகளுக்கும் நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநல்ல தச்சர் கிடைத்தார், கதவு தாழ்ப்பாள் சரிசெய்யப்பட்டது .வேலை எளிதோ, கடினமோ செய்ய தெரிந்த அவரின் அறிவுக்கு தான் காசு.
பதிலளிநீக்குசிறுகதை போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகலைஞானம் அவர்களின் ஆதங்கம் இங்கு ஏற்கனவே படித்தமாதிரி இருக்கே!
மழை கவிதை அருமை.
இங்கு இன்று மழை வருவது போல மேகம் காற்று எல்லாம் வந்து ஏமாற்றி சென்று விட்டது கருமேகம்.
முதல் பாடல் வரவில்லை. அடுத்த பாடல் இனிமை கேட்டேன்.
டாக்டர் துவாரகநாத் கோட்னி அதிகம் உழைத்து விட்டார் போல அதனால் சிறு வயதிலேயே அவரை ஓய்வு எடுக்க சொல்லி கடவுள் எடுத்து கொண்டார் போலும். இருந்து இருந்தால் இன்னும் நிறைய மருத்துவ சேவைகள் செய்து இருப்பார். அவருக்கு சிலை வைத்து மரியாதை செய்து இருப்பது மகிழ்ச்சி. சீன மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.
அரவிந்த் வால்' கண்டுபிடிக்கப்பட்டது அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநாகேஷ்பற்றி சிவக்குமார் சொன்னது படித்தேன்., நல்ல நடிகர்.
இவை ஓவியங்களுக்காகத்தானே தவிர, கதை படிப்பதற்கல்ல! //
ஓவியங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தாழ்ப்பாள் அந்த சாமார்த்தியசாலியால், ஒரு நிமிடத்தில் சரி செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி. கூலியும் குறைவாக வாங்கி சென்றுள்ளார். ஆனால், இன்னமும் அவர் குறைத்துக் கேட்டிருக்கலாம்.
சிலது இப்படித்தான் நாம் ஏதோ பிரமாண்டமாக இருக்குமென நினைப்போம் . ஆனால், வந்தவர் ஒரு நொடியில் சரி செய்ததும் நாமும் இப்படி முயற்ச்சித்திருக்கலாமே எனத் தோன்றும். எங்கள் மகன் வீட்டு பெட்ரூம் கதவும் இப்படி காற்றில் ஓடிவந்து (பாத்ரூம் வாசலில் போட்டிருந்த மிதியடியையும் துணைக்கு சேர்த்தவாறு) சாத்திக் கொண்டு விட்டது. நாங்கள் திறக்க எவ்வளவோ முயற்சித்தும் அசையவில்லை. என்மகனும் உடனே தெரிந்த கார்பெட்டரை வரவழைத்து அவர் ஒரு நிமிடத்தில் பூட்டை திறந்து கதவுடன் மிதியடியையும் விடுவித்தார். அதுதான் அவர் திறமை.
தங்கள் கவிதைகள் அருமை. இரண்டாவது நல்ல பொருளுடன் அருமையாக உள்ளது. உங்கள் கவிதைகள் கண்டு இன்று மாலை இங்கு நல்ல மழை.
நாகேஷ் பற்றி சிவக்குமார் சொன்னதை படித்தது மனம் நெகிழ்ந்தது. புதுச்சேரி கடல் பற்றி தெரிந்து கொண்டேன்.
மாயா ஓவியங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இன்றைய கருத்துரைகள் நன்றாக உள்ளது. காலையில் இங்கு நெட் பிரச்சனை அதனால் வர இயலவில்லை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் அருமை. இந்தப்படமும், பாடலும் இதுவரை அறிந்ததில்லை. முதல் பாடல் வீடியோ வரவில்லை. இரண்டாவது பாடல் கேட்டு ரசித்தேன்.
திரு கோட்னி மருத்துவரின் செயல் பாராட்டுக்குரியது. அவரின் நினைவை போற்றி கொண்டாடும் சீனா அரசுக்கு வாழ்த்துகள்.ஆனால், அவர் சிறு வயதில் மரணமடைந்தது வேதனைக்குரியது. சிலரின் மரணத்திற்குப் பின் அவரின் புகழ் உலகமெங்கும் பரவுவது இயல்புதான் போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.