நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 24
இப்படி இளையாழ்வாருக்கு மூன்று ஆயிரங்களின் உபதேசம் ஆளவந்தாரின் ஒரு சீடரான பெரிய நம்பி மூலமாக வந்து சேர்ந்தது என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்.
அப்படி தினமும் பெரியநம்பியிடம் மூன்று ஆயிரங்களின் அர்த்தங்களையும் கற்றுக்கொண்டிருந்த போது ஒரு நாள், இளையாழ்வாருக்கு எண்ணெய் தேய்த்துவிடுவதற்காக ஒரு ஸ்ரீவைணவர் வந்திருந்தார். அவர் பசியினால் வாடி இளைத்திருப்பதைக் கண்ட இளையாழ்வார், தம் தேவியாரிடம், அன்னம் தயாராகிவிட்டதா என்று கேட்க, இன்னும் இல்லை என்றார். இன்று கோயிலிலிருந்து ஏதேனும் பிரசாதம் வந்திருக்கிறதா என்று கேட்க, தேவியாரோ, அவை வந்திருந்தும், இல்லையே என்று சொன்னார்.
தேவியாரின் முகத்தைப் பார்த்த இளையாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளே சென்று பார்க்கவும், பிரசாதத்தைக் கண்டு மிகவும் மனம் வருத்தப்பட்டார். மனைவிக்கு கருணை இல்லையே என்று எண்ணி, தம் மனைவியைக் கோபித்துக்கொள்ளவும் செய்தார்.
பெரிய நம்பியிடம், தாகமுள்ள ஒருவன் எவ்வாறு தண்ணீரைப் பருகுவானோ அதுபோல பிரபந்தங்களைக் கற்றுவந்தார் இளையாழ்வார். ஆச்சாரியனுக்கு எந்த விதத்திலெல்லாம் பணிவிடைகள் செய்யலாமோ, எவற்றைச் செய்தால் அவர் மனம் மகிழும் என்றெல்லாம் நினைந்து அவருக்குச் சேவை செய்துவந்தார் இளையாழ்வார்.
ஒரு நாள் இளையாழ்வார் ஒரு வேலையாக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார். தஞ்சமாம்பாள் வீட்டில் அருகிலிருந்த கிணற்றில் நீர் இறைப்பதற்காக தன் குடத்தைக் கட்டவும், அப்போது பெரிய நம்பியின் மனைவி விஜயாம்பாள் தன் குடத்தை எடுக்கவும் சரியாக இருந்தது. விஜயாம்பாளின் குடத்திலிருந்து நீர் இவருடைய குடத்திலும் அவர் மேலும் சிதற, தஞ்சமாம்பாளுக்கு கோபம் வந்துவிட்டது. ஆச்சார்யார் மனைவி என்ற அகம்பாவமா? என்றெல்லாம் கேட்டு ரொம்பவே சண்டைக்குப் போய்விட்டார் தஞ்சமாம்பாள். அவர் மனதில் தம் கணவர் பெரியவர், நல்ல குலத்தைச் சேர்ந்தவர், ஆனால் பெரிய நம்பி அப்படி அல்ல, செல்வத்திலும் குறைவானவர் என்ற எண்ணம் இருந்த து. இதனால் மனம் நொந்துபோன விஜயாம்பாள் தன் கணவரிடத்தில் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு பெரியநம்பி, நடந்த தவறுகளுக்கு நாமே காரணம், இங்கு தொடர்ந்து இருந்தால் இளையாழ்வாருக்கும் நமக்கும் மனஸ்தாபம் வந்துவிடும், பாகவத அபசாரம் ஆகிவிடும் என்றெண்ணி, நாம் திருவரங்கத்திற்கே திரும்பிச் செல்வோம் என்று உடனேயே மனைவியுடன் திருவரங்கத்திற்குப் புறப்பட்டுவிட்டார்.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திரும்பி வந்த இளையாழ்வார், தம் மாளிகையில், பெரிய நம்பி தங்கி இருந்த இடத்திற்குச் சென்று வணங்குவதற்காகச் சென்றபோது, அவர்கள் இல்லாததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். தேவியாரோ, என்னவோ தெரியவில்லை, இருவரும் கிளம்பிவிட்டனர் என்று சொன்னதைக் கேட்டு, அக்கம் பக்கத்தவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, குடத்து நீருக்கான விஷயத்தில் தேவியாருக்கும் ஆச்சர்யாரின் பத்னிக்கும் பூசல் என்பதை அறிந்து மிகவும் மன வருத்தமுற்றார்.
முன்பு திருக்கச்சி நம்பி விஷயமாக நடந்துகொண்டதும், பசியுடன் இருந்த ஸ்ரீவைணவனுக்கு அமுது இல்லை என்று சொன்னதும், பேரருளாளன் எண்ணப்படி நமக்கு வாய்த்த ஆச்சார்யார் பெரிய நம்பி மனம் வருத்தமடையச் செய்த தும் இளையாழ்வாரால் தாங்க இயலவில்லை. பெரிய நம்பி தேவிகளுடன் அபசாரப்பட்டுவிட்டாய். நீ செய்த மூன்று குற்றங்களிலும் இதுவே மிகப் பெரியது. நீ இப்போதே புறப்பட்டு பிறந்தகம் போ என்று சொல்லிவிட்டார் இளையாழ்வார்.
இளையாழ்வார், இராமானுஜராக ஆகவேண்டும், அவருடைய பாதை வேறு என்பதால், இந்த நிகழ்வு நடந்தது என்றே நாம் கொள்ள வேண்டும். பெரிய இலக்கை நோக்கி நடக்கும்போது இத்தகைய திருப்பங்கள் வாழ்வில் வரும். இல்லறம் நன்றா துறவறம் நன்றா என்ற கேள்விகள் ஸ்ரீவைணவத்தில் இல்லை. எது மேலானது எது கீழானது என்ற கேள்வியும் எழவில்லை. பகவத் மற்றும் பாகவத கைங்கர்யங்களுக்கு எந்த ஆசிரமம் சரியாக வருமோ அதை ஒருவர் ஒழுகுவதில் தவறில்லை. இளையாழ்வாருக்கு இதுதான் பாதை என்று அமைந்திருந்திருக்கிறது.
இளையாழ்வார் பிறகு பேரருளாளன் சன்னிதிக்குச் சென்று ஸந்யாஸம் மேற்கொள்ள அனுமதி வேண்டி நின்றார். அர்ச்சகர் மூலமாக ‘இராமானுஜ முனி’ என்று அழைத்து அவருக்கு திரிதண்ட காஷாயங்களை பிரஸாதித்தார் பேர ருளாளன். (ஒரு வரியில் இதனைச் சொல்லிவிட்டோம் என்றாலும், அவர் வரதராஜப் பெருமாள் கோயிலின் எதிரே இருந்த தடாகத்தில் அதற்குரிய யாகம் செய்து அனைத்தையும் துறந்து சன்னியாசி ஆனார் என்று சொல்கின்றனர். பேர ருளாளனே, திருக்கச்சி நம்பி மற்றும் கோயில் பெரியவர்கள் மூலமாக, இராமானுஜனை மடத்தில் விட்டுவிட்டு வருவீர் என்று விடை கொடுத்தருளினார்.
சன்னியாசி ஆன பிறகு, இராமானுஜருக்கு தான் ஆளவந்தாருக்குக் கொடுத்த பிரதிக்ஞை நினைவுக்கு வந்தது. அதை நிறைவேற்றும் பாதையில் செல்ல வேண்டுமானால் தனக்கு ஒரு குழாம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் கோவிந்த பட்டர். யாதவப் பிரகாசரால் அத்வைத மதத்தில் இருக்கும் கோவிந்த பட்டரை எப்படித் திருத்திப் பணிகொள்வது என்று யோசித்தார். அதனால் தன் மாமாவான பெரிய திருமலை நம்பிக்கு (பெரிய திருமல நம்பி முன்பே திருமலையில் கைங்கர்யம் செய்வதற்காகச் சென்றுவிட்டார் என்பதைப் பார்த்தோம்) ஒரு வைணவர் மூலம், தங்களுடைய மருமகனான கோவிந்த பட்டர் இப்போது காளஹஸ்தியில் இருக்கிறார், அவரை தேவரீர் அடியேனுக்காக அங்கே சென்று அவரை நம் சம்ப்ரதாயத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று விண்ணப்பித்தார். (இவர் உள்ளங்கை கொண்ரந்த நாயனார் என்று ஆகி, பிறகு காளஹஸ்தி கோயிலுக்கு பொறுப்பாளராக ஆன வரலாற்றை முன்பு பார்த்தோம்)
இராமானுஜர் சன்னியாசி ஆகிவிட்டதை அறிந்து, அவரது சகோதரி பூமிப் பிராட்டியின் மகனான தாசரதி, இராமானுஜரைத் தன் குருவாகக் கொள்ள எண்ணி காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். இந்த தாசரதி என்பவர்தாம் கந்தாடை முதலியாண்டான். இவரும், கூரத்திலிருந்து கூரேசரும் இராமானுஜருக்கு அமைந்த முதல் சீடர்கள். இவர்கள் இருவருக்கும் பஞ்ச சம்ஸ்காரங்களையும் செய்து தன்னுடைய சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.
வைணவ சம்ப்ரதாயத்தில் கூரத்தாழ்வார் போன்ற ஒப்பற்றவர் இன்னும் பிறக்கவில்லை என்று சொல்லும் அளவு பெருமை பெற்றவர் இவர், குரு பக்தி, இறைவனிட த்தில் பக்தி, பற்றின்மை, ஞானம், நல்லொழுக்கம் என்று பல்வேறு நல்ல குணங்களைக் கொண்டவர் இவர். இவருடைய வரலாற்றை இப்போது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
காஞ்சீபுரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூரம் என்ற அழகிய கிராமத்தில் கிபி 1010ல் பிறந்தவர் இவர். (இராமானுஜரை விட ஏழு பிராயங்கள் மூத்தவர்) இயற்பெயர் ஸ்ரீவத்ஸசிந்ஹர். இவரது தந்தை பெயர் அனந்தன் என்கிற கூரத்தாழ்வார். தாயார் பெயர் பெருந்தேவி நாயகியார். (சம்ப்ரதாயத்தில் கூரத்தாழ்வான் என்று கூறினால் இராமானுஜரின் சீடரான ஸ்ரீவத்ஸசிந்ஹர். கூரத்தாழ்வார் என்றால், அவருடைய தகப்பனார் பெயர். அதனால் ஆழ்வான் சொல்வான் என்று வந்தால் அது கூரத்தாழ்வானைக் குறிக்கும்). சிறிய வயதிலேயே வேதம், இதிஹாசம் மற்றும் புராணங்களையும், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் கற்றுத் தேர்ந்தார். செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் அவர்.
இவர் கூரத்தாழ்வான் என்ற பெயரை பிற்காலத்தில்தான் பெற்றார். நாம் ஸ்ரீவத்ஸசிந்ஹர் என்ற பெயரை உபயோகப்படுத்தாமல் கூரத்தாழ்வான் என்றே குறிப்பிடப் போவதால் அந்த நிகழ்வை இப்போதே பார்த்துவிடுவது நல்லது. ஞானம் நிரம்பப் பெற்றவர் இவர். திவ்யப் பிரபந்தங்களுக்கு நிறைவாகப் பொருளுரைக்கும் அளவுக்கு ஞானம் இருந்தும், தன் ஆச்சார்யரான இராமானுஜர் முன்பு அவர் பொருளுரைப்பதில்லை. இராமானுஜரே எல்லாம் என்று இருந்தவர் அவர். குருவுக்கு முன்னால் தாம் பொருளுரைப்பது தவறு என்றே கருதியிருந்தார்.
இராமானுஜருக்கு அவர் சொல்லி திருவாய்மொழிக்கு பொருளுரை கேட்கவேண்டும் என்ற ஆவல். அதனால் முதலியாண்டானுக்கும் மற்றவர்களுக்கும் திருவாய்மொழிப் பொருளை வியாக்யானம் செய்க என்று ஸ்ரீவத்ஸசிந்ஹருக்குச் சொன்னார். பிறகு முதலியாண்டான் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று இராமானுஜர் நினைத்தார்.
அவ்வாறே ஸ்ரீவத்ஸசிந்ஹர், திருவாய்மொழிக்கு பொருளுரை ஆரம்பிக்க, முதல் பதிகத்தின் முதல் பாசுரமான ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்ற வரியை ஆரம்பித்ததும், பிற சமய வாதிகள், எம்பெருமானுக்கு (அதாவது ப்ரம்ஹத்துக்கு) குணம் இல்லை, அது நிர்குணம் என்று வாதிடுகிறார்களே, அவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி, நம்மாழ்வார் முதல் வரியிலேயே, எம்பெருமானின் குண விபூதியைக் குறிப்பிடுகிறார் என்று சொல்லி, அதன் ஆழ்பொருளை மனதில் நினைத்து கண்ணில் நீர் வர, மயங்கிவிட்டாராம். சீடர்கள் இராமானுஜரிடம் வந்து நடந்த தைக் கூறி அவரை அழைக்க, இராமானுஜர், நம்மாழ்வார் திருவாய்மொழியை இயற்றும்போது, முதல் பத்து மூன்றாம் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தில் ‘எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே’ என்று சொல்லும்போதே எம்பெருமானின் எளிமையை நினைத்து அதில் மயங்கி ஆறு மாதம் தொடர முடியாமல் இருந்தார் என்று படித்திருக்கிறோம். நம்மாழ்வாரைப் போன்றே திருமாலின் திருக்குணங்களில் மனதினை ஊன்றி இருப்பதால், அன்றிலிருந்து ‘ஆழ்வான்’ என்றே அழைக்கப்பட்டார். கூரத்திலிருந்து வந்ததால், கூரத்தாழ்வான் என்ற பெயர் பெற்றார். இனி அவரை நாம் கூரத்தாழ்வான் என்றே அழைக்கலாம்.
கூரத்தாழ்வான் வரலாற்றைத் தொடங்கியிருக்கும் இன்று, வேறு எந்தப் பாசுரத்தின் பொருளை நாம் எடுத்துக்கொள்ள இயலும். இன்றைய பாசுரம், முதல் பத்தில், மூன்றாம் பதிகத்தில் “பத்துடை அடியவர்க்கு’ என்று தொடங்கும் முதல் திருவாய்மொழி.
இந்தப் பாசுரம், எம்பெருமான் எப்படிப்பட்ட எளிமையான குணம் (சௌலப்யம்) உடையவன் என்று கூறுகிறது. படைப்புத் தொழிலைச் செய்யும் பரந்தாமனை, பக்தர்கள் தங்கள் அன்பினால் கட்டிப்போட்டுவிட முடியும், அத்தகைய எளியவன் என்பது பொருள்.
##பத்துடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்*
மலர்மகள்
விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்துறு கடைவெண்ணெய் களவினில்* உரவிடை ஆப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்து இருந்து ஏங்கிய எளிவே!
பொருள்: இறைவன், தன் மீது அன்புடன் பக்தி செலுத்தும் அடியவர்களுக்கு மிகவும் எளிமையானவன். பக்தி இல்லாத மற்றவர்களுக்கு பேராற்றல் கொண்ட அந்த இறைவன் கிடைப்பதற்கு அரியவன். தாமரை மலரில் வாழும் ஸ்ரீதேவியை விரும்பிச் சேரும், பெறுவதற்கு அரிய தலைவன் அவன். அப்படிப்பட்ட அவன், மத்தினால் கடைந்து எடுக்கப்படும் வெண்ணெயைக் களவு செய்த தற்காக உரலில் கட்டப்பட்டு, யசோதையின் கோபத்தால் ஏங்கி நின்ற எளிய நிலை மிகவும் வியக்கத்தக்கது.
விளக்கம்: பத்து-பக்தி, உரவிடை ஆப்புண்டு-ஆயர்பாடியில் வீட்டில் வெண்ணெய் திருடி, அதனால் தாய் யசோதை மிகவும் கோபம் கொண்டு கண்ணனை உரலில் தாம்புக் கயிற்றாள் கட்ட நினைக்கிறாள். எந்தக் கயிற்றினை எடுத்தும் அது நீளம் குறைவாகவே இருக்கிறது. பிறகு கண்ணன், தன் தாய் தன்னைக் கட்ட இசைகிறான். யசோதை கல்லினால் செய்த உரலில் அவனை தாம்புக் இஅயிற்றால் கட்டி, இங்கேயே இரு என்று சொல்லிவிடுகிறாள். இதற்கிடையில், நாரத முனிவரின் சாபத்தால், குபேரனின் இரு மகன்களான மணிகிரீவன் மற்றும் நளகுபேரன் ஆகிய இருவரும், ஆயர்பாடியில் (யமுன்னா நதிக்கரையில்) இரண்டு மருத மரங்களாகப் பிறப்பெடுத்து நூறு ஆண்டுகளாக அங்கேயே இருக்கின்றனர். கண்ணன், நாரத முனியின் சாபம் தீரும் வேளை வந்துவிட்ட தை உணர்ந்து, அந்த உரலை எழுத்துக்கொண்டு இரண்டு மருத மரங்களின் இடையே செல்லவும், மருத மரங்கள் இற்று வீழ்ந்து அவர்களின் சாபம் தொலைகிறது. பரம்பொருளாக இருந்தும் தன் தாயின் மீது உள்ள அன்பால், தன் எளிமையான குணத்தால், தன்னைக் கட்டுவதற்கு இடம் கொடுத்தான் கண்ணன்.
எளிவரும்
இயல்வினன்*
நிலைவரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரு
முழுநலம்*
முதலில
கேடில
வீடாம்*
தெளிதரும் நிலைமை அது ஒழிவிலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே
பொருள்: எம்பெருமான் அடியவர்களுக்காக மிகவும் எளிமையாக வந்து பழகும் இயல்பு கொண்டவன். எல்லைகளும் வரம்புகளும் இல்லாத பல பிறவிகளைக் கொண்டவன் (அவதாரங்கள்). பிரகாசமான முழுமையான நன்மைகளும் நிறைந்தவன். பிறப்பும் இறப்பும் இல்லாத வீடுபேற்றுக்கு ஆதாரமானவன். தெளிவான ஞானத்தைத் தரும் அந்த உயரிய குணத்திலிருந்து அவன் எப்பொழுதும் நீங்குவதில்லை. அப்படிப்பட்ட இறைவன் பொழியும் தன் அருளுடன் நம்முடனே இருக்கிறான். நம் மனத்தின் உள்ளும் வெளியிலும் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான்.
அடியவர்கள் மீது கொண்ட கருணையால் அவர்கள் எல்லோரும் எளிதில் அணுகும் வண்ணம் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறான். அவன் நினைத்தால் யாருக்கும் கிடைக்காத முக்தியைத் தர வல்லவன். மிகப் பெரியவனாக இருந்தும் எளியவனாக நம் மனதிலுள்ளும் (அந்தர்யாமி) வெளியிலும் எங்கும் நிறைந்திருக்கிறான்.
இராமானுஜர் திருமாளிகை (இதன் மேல் மாடியில்தான் பெரியநம்பி வசித்தார்). வீட்டின் முகப்பில் உள்ள கிணறு. இங்கு தண்ணீர் சேந்தும்போதுதான் இராமானுஜர் மனைவிக்கும் பெரிய நம்பியின் தேவியர்க்கும் பூசல் ஏற்பட்டது.
உரவிடை ஆப்புண்டு
அடுத்த வாரம் தொடர்வோமா?
======================================================================================
நான்
வாசித்த கதை - கீதா
விலை
போகாத வரிகள்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
"நான் படிச்ச கதை"க்கு ஒரு சின்ன கதையை தேர்ந்தெடுக்கலாம்
என்று யோசித்து இணையத்தில் தேடிய போது, சிறுகதைகள்.காமில் டக்கென்று கண்ணில் சிக்கியது =====>இரா. கலைச்செல்வியின்<====== ======>விலை போகாத வரிகள்.<====== தலைப்பு ஈர்த்தது. நல்லாருக்குல்ல தலைப்பு?
மிகச் சிறிய கதை. குமுதத்தின் ஒரு பக்கக் கதை எனலாம்.
இவங்க எழுதின கதை =======>"ரமணி பாட்டி"<=======யை நான் படிச்ச கதையில் நம்ம ஜெ கே அண்ணா அறிமுகப்படுத்தியிருந்தாரே! இந்தக் கதையை
எப்படி எழுதியிருக்காங்கன்னு பார்ப்போம் என்று இதை வாசித்தேன்.
நல்ல கருத்தைக் கொண்ட கதை. ஏன் இந்தச் சின்ன கதையை எடுத்துக் கொண்டேன்?
1. எழுதுபவர்கள் நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு இணைய ஊடகத்தில், பத்திரிகையில் நம் எழுத்து வந்திடாதா? என்ற ஓர் ஆர்வத்தில் எழுதத் தொடங்கி, எழுதுகிறோம் இல்லையா? போட்டிகளில் பங்கு பெறுகிறோம். வெற்றி பெற்று அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், கிடைத்திடாதா என்றும் ஆசைப்படுகிறோம் இல்லையா? அதைப் பிரதிபலித்ததால் இக்கதை.
2 நம்மில் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்களிடம் இக்கதையை வைத்தே கேள்வி கேட்டு உட்படுத்தலாம் என்ற ஒரு நோக்கிலும்,
3. என் மனதில் எழுந்த சில கேள்விகளையும் எண்ணங்களையும் இங்கு வைக்கலாம். பத்திரிகை, ஊடக அனுபவம் மிக்கவர்கள் இங்கு இருப்பதால் அதற்கும் பதில்கள் கிடைத்தால் சுவாரசியம் என்ற காரணத்தாலும்...
4. கதையை வாசித்ததும், அட! நாம அடிக்கடி நினைக்கும், சொல்லும் கருத்து இக்கதையின் கதைக்குள் வரும் ஓரிரு வரிகளில் (அது கதையின் முக்கியக் கரு அல்ல) வருகிறதே! அதையும் போகிற போக்கில் சொல்லிவிடலாம்.
கதை என்ன?
ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகை. தங்களின் அடுத்த மாத இதழுக்கான சிறந்த சிறு கதையைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் வந்திருக்கின்றன. இறுதிப் பட்டியலுக்கு மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை எழுதிய ஆசிரியர்களை மட்டும் நேரடி சந்திப்பிற்கும், கலந்துரையாடலுக்கும் அழைக்கிறார்கள்.
அந்த மூன்று பேர்களில் இளமாறன் எனும் வளர்ந்துவரும் எழுத்தாளனும் இருக்கிறான். அங்கீகாரத்திற்க்காகக் காத்திருப்பவன். தன் கதை பிரசுரமாகி எப்படியேனும் இலக்கிய உலகில் தனக்கான முத்திரையைப் பதிக்க விழைபவன். எனவே பதற்றத்துடன் 'நகம் கடித்தபடி' ஆசிரியரின் அறையின் வெளியே காத்திருக்கிறான்.
(பதற்றத்தைச் சொல்ல 'நகம் கடித்தபடி' என்ற வழக்கமான சொற்களை எழுத்தாளர்கள் தவிர்த்துப் புதுசா யோசிக்கலாம்!!!!!!)
நடுவர் குழுவில் இருந்த ஒருவர் வெளியில் வருகிறார்.
"கதை பிரமாதம் ஆனால்....."
இளமாறனுக்குப் பதற்றம்.
"ஏதாச்சும் குறையா சார்?"
"இல்லை. எல்லாமே நல்லாருக்கு. ஆனால் இந்த முடிவை வாசகர்கள் ஏற்க மாட்டாங்க....முடிவை மட்டும் மாத்திக் கொடுத்தீங்கனா...இந்த வாரமே அச்சுக்கு அனுப்பிடலாம்"
"ஸார், "தேடல்ங்கிறது வெளியில இல்லை, நமக்குள்ளதான் இருக்குங்கிறதை அந்த முடிவு தான் உணர்த்துது." என்கிறான் இளமாறன்.
அவர் உள்ளே சென்றுவிடுகிறார்.
இளமாறனுக்கு, தன் எழுத்து நிராகரித்துப்பட்டுவிடுமோ? என்ற கவலை ஒருபுறம்.
தன் படைப்பு எப்படியேனும் பிரசுரமாகிவிட வேண்டும். இலக்கிய உலகில் தனி முத்திரையை பதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் அந்த வளர்ந்துவரும் எழுத்தாளன் இளமாறன் என்ன முடிவு எடுக்கிறான்? ஆசிரியர்கள் அக்கதையை தேர்வு செய்கிறார்களா? வரிகள் விலை போனதா?
தெரிந்து கொள்ளச் செல்லுங்கள் =>=>=>=>=>>>>>>> இந்தச் சுட்டிக்கு
கதையில், இளமாறன் எழுதிய கதையின் தலைப்பாக ஆசிரியர் சொல்லியிருப்பது "வாழ்க்கை தேடல்" - ஆன்மீகக் கட்டுரைக்கான தலைப்பு. ஆசிரியர் வேறு யோசித்திருக்கலாமோ?
கதையில் இளமாறன் எழுதிய கதைக்கான முடிவு வரி என்னை சற்று பின்னோக்கி இழுத்துச் சென்றது. கிட்டத்தட்ட இளமாறனின் மன நிலையில் இருந்த வருடங்கள்.
2024ல் ஜெ கே அண்ணாவின் "நான் படிச்ச கதை" பதிவில், அண்ணா கொடுத்திருந்த சுட்டிகளின் வழி ஆசிரியரைப் பற்றியும் ஆசிரியரின் வலைப்பக்கத்தில் ஓரிருகதைகளையும், வாசித்ததும் "நம்ம கதைகள் எல்லாம் அங்கீகரிக்கப்படுவதில்லை, நாம எழுதலைனாலும் யாரும் கேட்கப் போவதில்லை... அதனால் எழுதுவதில்லை" என்ற என் ஆதங்கத்தை அப்போதைய மனநிலையில் சொல்லியிருந்தேன்.
அதற்கு நெல்லையின் பதில் அதற்கு நான் கொடுத்த பதில்
என்று உரையாடல்கள் செல்ல, ஜீ வி அண்ணா என்னை
ஊக்குவிக்கும் பதில் கொடுத்திருந்தார். ஸ்ரீராம் என்னை உசுப்பேத்தி என்னிடம் கதை கேட்டிருந்தார், "உங்கள் தளத்தில் வாரத்தில் இரண்டு பதிவுகளேனும் எழுதுங்கள்" என்றும் சொல்லியிருந்தார். எபிக்கு அதன் பின்
அப்போது கதை அனுப்பினேனா? நினைவில்லை.
பல வருடங்களாக "மனம்" பற்றி படித்திருந்தவற்றை அசை போட்டேன். 'எதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும்? வெளியில் தேடல்கள், external validation என்று பயணித்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, தேடல்கள் நம் மனதிற்குள்தான், Internal validation மனதுக்குள்தானே கீதா? நீ எழுதுவதில் உனக்கே நம்பிக்கை இல்லைனா? ஆண்டாண்டுகாலமாகத் தெரிந்தும் இப்படி உன் self worth ஐ தாழ்த்தி நினைக்கலாமா?' என்று எனக்குள்ளே பேசிக் கொண்டு சுயமுன்னேற்றம் எல்லாம் செய்துகொண்டு எங்கள் தளத்திலும் எழுதத் தொடங்கினேன். ஆனால் கதைகள் எழுதுவது பின் தங்கின. அதற்குக் காரணம் வேறு.
என் பார்வையும் கேள்விகளும் - கதை நன்றாக இருக்கிறது. கதைக்கருவும் ஆசிரியர் இளமாறன் வழியாகச் சொல்லும் கருத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. சிறிய கதை என்பதால் அதிகம் வர்ணனைகள் இருக்காதுதானே! இவ்வளவுதான் எழுத முடியும். கதையின் முதல் சில வரிகளை வாசித்ததுமே கதையின் நகர்வு தெரிந்துவிடுகிறது.
கதாசிரியரின் கதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன.
யதார்த்த பத்திரிகைத் துறை அவர் கதையில் சொல்வது போல்தான் இருக்குமா? இல்லை அவரது அனுபவங்களின் அடிப்படையில் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கற்பனையில் எழுதியிருக்கிறாரா?
Idealistic பார்வையில், Idealistic பத்திரிகை நிறுவனத்தைக் கற்பனையில் வைத்து எழுதியிருக்கிறாரோ? என்றும்
தோன்றியது.
அதாவது தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் கதாசிரியர்களை, குறிப்பாக வளர்ந்துவரும் எழுத்தாளர்களை கலந்துரையாடலுக்கு
அழைப்பார்களா? இல்லை, பத்திரிகை ஆசிரியர்களே கதைகளில் மாற்றங்களைச் செய்துவிடுவார்களா?
கதையில் சொல்லப்படுவது போன்ற பத்திரிகை நிறுவனம் உண்டா?
இந்த இடத்தில் நம் ஸ்ரீராமிற்கு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. நம் தளிர் சுரேஷ் நடத்தும் இணைய இதழ் தேன்சிட்டில் தீபாவளி மலருக்காக ஸ்ரீராம் கதை அனுப்ப, அதுவும் வெளியானது. ஆனால், அவர் எழுதிய கதை முழுவதும் மாற்றப்பட்டு தலைப்பு உட்பட மாற்றப்பட்டு வெளியானது. நிஜமாகவே அதிர்ச்சி. ஒருவரி, இரண்டு வரி அல்ல, சில இடைச்செருகல்களுடன் வசனங்கள் உட்பட எல்லாம் புதிது! ஸ்ரீராம், சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை! போராடி, தான் எழுதிய ஒரிஜினல் கதையைப் போட வைத்தார், என்றாலும் அதில் எவ்வளவு மன உளைச்சல்கள் இல்லையா?
"பிரசுரத்திற்கு அனுப்பப்படும் கதைகள், கட்டுரைகளுக்கு ஆசிரியர் குழுவே பொறுப்பு. இவற்றில் தேவையான மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு." என்று பெரும்பான்மையான பத்திரிகைகளில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
வரம்பிற்கு மீறி முறையற்ற எழுத்தாக இருந்தால், அவர்கள் நிராகரித்தாலோ அல்லது நம்மிடம் சொல்லிவிட்டு மாற்றினாலோ சரிதான். இல்லை என்றால் நம் தனித் திறமையும் சுதந்திரமும் பறிபோகிறதில்லையா?
ஒரு சில எழுத்தாளர்கள் எந்தவித சமரசத்திற்கும்
இடம் கொடுக்காமலேயே கூட பிரபலமாகியிருக்கலாம். பிரபலமாகாமலும் போயிருந்திருக்கலாம்.
பத்திரிகை நிறுவனங்கள் பிரபலமான எழுத்தாளர்கள் என்றால் ஒரு வேளை அவர்களிடம் கதையில் மாற்றங்களை உட்படுத்தச் சொல்லியோ, முடிவை மாற்றச் சொல்லியோ கூடக் கேட்காமல் இருக்குமாக இருக்கலாம் என்று எண்ணிய நேரம் சுஜாதா நினைவுக்கு வந்தார்
சுஜாதா அவர்கள் எழுதிய "சிவப்பு கருப்பு வெளுப்பு" என்ற தொடர்கதைக்கு எழுந்த எதிர்ப்பினால், அத்தொடர் நீக்கப்பட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு அவர் கேட்டு அதன் பின்னர், "ரத்தம் ஒரே நிறம்" என்று எழுதினார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
இப்படி வாசகர்களுக்காக ஓர் எழுத்தாளர் தன்
எழுத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவரது எழுத்தின் இறக்கைகளை வெட்டி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது
போன்று ஆகாதா?
பொதுவாகச் சொல்லி நான் அறிந்தவை, பத்திரிகையைப் பொருத்து எந்த வகையான கதைகள் எந்தப் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும் என்றேல்லாம் இருப்பதாக அறிகிறேன். இதுவும் கூட எழுத்தாளரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது போல்தான் இல்லையா? அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.
இப்போது எபியில் கூட எல்லா வகைக் கதைகளையும் அனுப்ப/போட முடிவதில்லை. வித்தியாசமான கதைகளை, இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப அனுப்ப/போட முடிவதில்லை. Selective ஆகத்தான் கொடுக்க முடிகிறது. அதற்கு ஆசிரியர்கள் காரணமல்ல.
சரி, இப்ப நம்ம நட்பு எழுத்தாளர்களுக்கு ஒரு கேள்வி.
கதையில் இளமாறனுக்கு நேர்வது போன்ற ஒரு சூழ்நிலையில், அதாவது நீங்கள் எழுதிய கதையின் முடிவை மாற்ற வேண்டும், அல்லது ஏதேனும் ஒரு பகுதியை அதுவும் நீங்கள் மிகவும் விரும்பி எழுதியிருப்பதை மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன முடிவு எடுப்பீர்கள்? கருத்தில் சொல்லுங்கள்!
இக்கதையை வாசித்ததும், இவை எல்லாம் என் மனதில்
தோன்றிய எண்ணங்கள், கேள்விகள்.
ஜீவி அண்ணா, உங்கள் பதிலும் எதிர்பார்க்கிறேன். காரணம், உங்களுக்கு பல பத்திரிகைகளில் எழுதிய ஊடக அனுபவம் உண்டு. பல எழுத்தாளர்களை அறிந்தவர்.
ஜீவி அண்ணா மட்டுமல்ல, மற்ற அண்ணாக்கள், அக்காக்கள் எல்லாரும் கதையைப் பற்றியும், கேள்விகளுக்கும் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம். நானும் தெரிந்து கொள்வேன். உரையாடுவோம்.
(ஜெ கே அண்ணா, இதே எழுத்தாளர் எழுதிய "ரமணி பாட்டி" கதையை இங்கு பகிரும் போதே. ஆசிரியரைப் பற்றிய தகவல்கள் கொடுத்திருந்ததால் நான் தனியாக இங்கு கொடுக்கவில்லை. ஆசிரியரின் பெயரைக் க்ளிக்கினால் அது இட்டுச்செல்லும் பக்கத்தில் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அது போல கதையின் பெயர் வரும் இடத்தில் க்ளிக்கினால் அப்பக்கத்திற்கு இட்டுச் செல்லும்)
இளையாழ்வார் வாழ்க்கையில் இந்த நிகழ்வு வாசித்த நினைவு இல்லை. எனக்கு நல்ல நினைவில் இருப்பது பெரியநம்பி வந்த போது நடந்த நிகழ்வில்தான் இளையாழ்வாருகும் அவர் தேவிக்கும் மனவருத்தம் நடந்து அதன் பின் அவர் துறவறம் மேற்கொண்டதும் ...அப்ப இது அதற்கு முன்னா?
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. அந்தமானுக்கு (சிறைக்கு அல்ல) வந்த பிறகு இன்னமுமே உங்களைவிட வயது குறைந்ததுபோலத் தோன்றுகிறது
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
நீக்குஅந்தமான் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். பயணம் தங்கள் மனம் போல இனிதாக நிறைவேறி, படங்களுடன் எங்களையும் பயணத்தில் தொடர்ந்திருக்குமாறு பதிவாக எழுதுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
"அந்தமானை பாருங்கள் அழகு." என்ற சிவாஜியின் பாடல் நீங்கள் சொன்னதிலிருந்து என் மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப்பாடல் மிகவும் பிடித்தமானது. சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் ஏற்கனவே அந்தப் பாடலை வெள்ளியில் பகிர்ந்திருப்பார் என நினைக்கிறேன். வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுத்த வரிகளில் தெரிந்தது. நான் இதற்கும் முன்னரே அதாவது திருக்கச்சி நம்பி வந்தப்ப நடந்ததுதான் இறுதி அதன் பின் அவர் துறவறம் மேற்கொண்டார் என்று நினைத்திருந்தேன்...முந்தைய கருத்தில் திருக்கச்சி நம்பி என்பதற்குப் பதில் பெரிய நம்பி என்று சொல்லிவிட்டேன்... இப்போதுதான் அவர் துறவறம் மேற்கொள்வது நடக்கிறது என்று புரிந்தது.
பதிலளிநீக்குகீதா
வாழ்க்கையை வரிசையா சம்பவங்களோடு எழுத முயற்சித்துள்ளேன்
நீக்குபெரிய இலக்கை நோக்கி நடக்கும்போது இத்தகைய திருப்பங்கள் வாழ்வில் வரும். //
பதிலளிநீக்குகண்டிப்பாக...இது இப்பவும் நிகழ்வதுண்டு. ஆன்மீக இலக்கு என்றில்லை என்றாலும், ப்ரொஃபஷனல் இலக்கு அல்லது கொள்கை இலக்கு...என்று கருத்துவேறுபாடுகள்...ஏன் ஆன்மீக இலக்கிலும் கூட வருகிறதுதான்.
இது பற்றி என் தனிப்பட்ட கருத்துகளை பிரஸ்தாபிக்கப் போவதில்லை. சப்ஜெக்ட் மாறிவிடும்!
கீதா
நம் வாழ்க்கையிலேயே நாம் அடுத்த ஸ்டேஜ் போகும்போது நமக்குத் தெரியாமலேயே திருப்பம் வரும். எதிர்பாராத சம்பவங்கள்தான் திருப்பத்திற்குக் காரணமாக இருக்கும்
நீக்குபாசுரங்களும் பொருளும் நன்று நெல்லை...
பதிலளிநீக்குதிருமாளிகையில் மேல்மாடியைக் காணவில்லையே
கீதா
நான் சென்றதில்லை. பின்னால் இருக்கும் என நினைக்கிறேன்
நீக்குராமானுஜர் மனைவி குணம் பற்றி முன்னரே படித்த நினைவு இருக்கிறது. அவர் கடைசிவரை அதற்கெல்லாம் மனம் வருந்தவில்லை போலும்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். நமக்கு குருபரம்பரையில் உள்ளது மாத்திரமே தெரியும். எந்த நாணயத்துக்கும் இரு பக்கங்கள் இருக்கும்
நீக்குபாஸின் சித்தியின் முதல் தாஸரதி. அருமையான இரண்டு மகன்கள் பாஸின் சித்திக்கு,.
பதிலளிநீக்குஇதெல்லாம் கொடுப்பினை. நல்லா இருக்கட்டும்
நீக்குஉயர்வற உயர்நலம் உடையவன் பாடல் பள்ளிப் பருவத்தில் எனக்கு மனப்பாடப் பாடல் பகுதியாக வந்திருந்தது!
பதிலளிநீக்குஅப்போதெல்லாம் சமரசமாக அர்த்தம் கொள்ளக்கூடிய பாடல்களையே பக்தி இலக்கியங்களிருந்து வைப்பார்கள். இன்னொன்று வாளால் அறுத்துச் சுடினும் பாசுரம். கோமதி அரசு மேடம் நினைவுவைத்திருப்பார்
நீக்குஅற்றைத் திங்கள் அந்நாளில்
பதிலளிநீக்குதண்ணீர் எடுக்க கிணற்றடியில்
சண்டையிட்டபோது அது வரலாற்றுச் சிறப்புப் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்படப் போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்!!
நான் படிச்ச இல்லையில்லை வாசித்த கதையில் தலைப்பாக எனக்குத் தோன்றுவது "சமரசம் உலாவும் இடமே...", "சோதனை"
பதிலளிநீக்குசோதனை சரியா இருக்குமோ!
நீக்குதலைப்பு கதையைச் சொல்லிவிட்டது என்றே எனக்குத் தோன்றியது
கீதா
நல்ல முடிவு என்று கூட வைக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்!
நீக்குமுடிவு ரொம்பவே நல்லாதான் இருக்கு ஸ்ரீராம். எனக்கு ரொம்பப் பிடித்தது கதையின் உட்போருள்,
நீக்குஆனால் நடைமுறையில் இப்படி இருக்குமா என்பதுதான் என் கேள்வி. அதை நீங்களும் சொல்லியிருக்கீங்க ஒரு கருத்தில்
கீதா
சில எழுத்தாளர்கள் மாற்றிக் கொள்ள ரெடியாக சம்மதிக்கிறார்கள். சுஜாதா உட்பட.
பதிலளிநீக்குசில சமயங்களில் பெரிய எழுத்தாளர்களிடம் சொல்லாமல் கூட கொஞ்சம் மாற்றுவார்களாம்.
ஆனால் எனக்கு நேர்ந்தது தலைப்பிலிருந்து எல்லாவற்றையும் மாற்றியது. ஓரிரு வார்த்தைகள் மாற்றுகிறார்கள், விடுகிறார்கள் என்றால் நானும் சரி என்றுதான் சொல்லி இருப்பேன்!
ஆமாம் சுஜாதா அதைப் பற்றிச் சொல்லியதும் நினைவு இருக்கிறது. இங்கும் கூடப் பகிர்ந்திருந்த நினைவு, ஸ்ரீராம்.
நீக்கு//சில சமயங்களில் பெரிய எழுத்தாளர்களிடம் சொல்லாமல் கூட கொஞ்சம் மாற்றுவார்களாம். //
ஓ! அப்ப அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?
உங்களுக்கு நேர்ந்தது ரொம்பக் கொடுமை ஸ்ரீராம். நீங்கள் சொல்லியிராதவை எல்லாம் வந்ததே...தலைப்பு உட்பட....
ஆமாம் ஓரிரு வார்த்தைகள் என்றால் ஓகே ஆனால் கதையே மாற்றும் போது எப்படிச் சமரசம் செய்து கொள்ள முடியும்..
கீதா
// அப்ப அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?//
நீக்குஅவர்கள் ஒரு உயர் நிலையை அடைந்து விட்டார்கள் என்பதால் பத்தோடு பதினொன்று!!
புரிகிறது ஸ்ரீராம்,.கரெக்ட்!!!!
நீக்குநானும் இப்ப இதை யோசித்து இதையும் கேள்வியாக வைக்க நினைத்தேன்...நீங்களும் சொல்லிவிட்டீர்கள்
கீதா
என் அனுபவம் - இந்த சம்பவம் பற்றி ரிஷபன் ஜியிடம் பேசியபோது இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படிதான் மாற்றுவார்கள் என்றார். முன்னரே சொல்லி இருப்பார்களே என்றார். அதுவரை முன்னர் சொல்லி இருக்கவில்லை. அடுத்த ஆண்டில் சொல்லி இருந்தார்கள்.
பதிலளிநீக்குஅப்படிதான் மாற்றுவார்கள் என்றார். முன்னரே சொல்லி இருப்பார்களே என்றார். //
நீக்குஓ! ஆனால் எங்கே சொன்னார்கள்? இல்லையா?
கீதா
இப்படி எல்லாம் சோதிப்பார்களா என்று தெரியவில்லை. அதேபோல கதையை வெளியிடுவதற்கு எழுதியவரை நேரில் அழைத்து நேர்காணலா? என்னடா இது!
பதிலளிநீக்குஅதேதான் ஸ்ரீராம், எனக்கும் தோன்றியது கதையில் சொல்வதுபோல் எல்லாம் நடக்குமா? என்று..
நீக்குகற்பனை நன்றாக இருட்ந்தது...அதைத்தான் என் பார்வையில் சொல்லியிருக்கிறேன். ஐடியல் வியூ கதை என்று..நமக்குமே இப்படி எல்லாம் நடந்தால் ஒரு சந்தோஷம் வருமே!!!!!!!
நன்றி ஸ்ரீராம் கருத்துகளூக்கு
கீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க துரை அண்ணா...
நீக்குகீதா
சரணம் சண்முகா. நலமா துரை செல்வராஜ் சார்?
நீக்குபடிப்பவர்களுக்கு அவர்கள் படிக்கும் அந்தக் கதை பிடிக்காமல் போகலாம். நிறைவு இல்லாமல் இருக்கலாம். அது வாசகரின் மனோபாவத்தைப் பொறுத்தது. இதை இப்படி கூட எழுதலாம் என்று படிப்பவர்களுக்கும் யோசனை தோன்றும்தான். ஆனால் அப்படிதான் எழுத வேண்டும் என்று சொல்லக்கூடாது. படிப்பவர்கள் தங்கள் மனதில் ஒரு கதை எழுதி விடுகிறார்கள். எழுதி விட்டு, படித்த கதை சரியில்லை முடிவு சரியில்லை என்று சொல்கிறார்கள். வாசகர்கள் என்ன நினைப்பார்கள் என்று பிரசுரகர்த்தாக்கள் முடிவு செய்யக்கூடாது, முடியாது.
பதிலளிநீக்குஅப்படியே, உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குஏன் இங்கு எபியிலும் உண்டு.
முன்பு அதாவது என் மனம் விரிவதற்கு முன், நான் கூட சில கதைகளுக்குச் சொன்னதுண்டு என்றாலும் கூடவே ஒன்றும் சொல்லிவிடுவேன் அது ஆசிரியரின் எழுத்து என்று.....ஆனால் அதன் பின் நிறைய யோசித்த போது நீங்கள் சொன்ன கருத்துதான் என் மனதிலும்
கீதா
///இறைவன் தண்ணருளுடன்
பதிலளிநீக்குநம்முடனே இருக்கிறான்....///
ஹரி ஓம்..
எழுத்து இறை எண்ணத்தை உருவாக்கினால் மிக்க மகிழ்ச்சி
நீக்கு//. படிப்பவர்கள் தங்கள் மனதில் ஒரு கதை எழுதி விடுகிறார்கள். எழுதி விட்டு, படித்த கதை சரியில்லை முடிவு சரியில்லை என்று சொல்கிறார்கள்.. ///
பதிலளிநீக்குஇங்கே ஒருவர் இப்படிச் சொன்னதால் தான் எனது உற்சாகம்
குன்றிப் போனது...
துரை அண்ணா, நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றாகவே.
நீக்குஒவ்வொருவரின் கருத்தும் நிலைப்பாடும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
எனக்கும் தோன்றியதுண்டு என் கதைகள் எபியில் வரும் போது. அதுவும் கருத்துகள் வேறு மாதிரி சொல்லப்படும் போது.
ஆனால் அதன் பின் யோசித்த போது, நாம் எப்பவுமே எதிர்பார்ப்பில் இருக்கிறோம்....எல்லோரும் நாம் எழுதுவதை ஆமோதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு....கூடவே அவர்களுடைய validation. அதை நாம் மனதில் கொண்டு யோசித்தால் சரியா இல்லை நாம் நம் எழுத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கும் போது....அது நமக்குச் சரிவரவில்லை என்றால் தள்ளிவிட்டு நாம் நம் நடையில் பயணிக்கலாம்...முள் குத்தினால் வருத்தப்ப்பட்டுக் கொண்டு இருக்கமாட்டோமே...அதை அப்புறப்படுத்திவிட்டு புண்ணை ஆற்றிவிட்டு நடப்போம் இல்லையா? அது போல..
நம் மனது சொல்லும் validation ஐ மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும் நம் மனமே சொல்லிவிடும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.
அதில் ஒன்றை இப்பதிவில் குறிப்பிட்டும் இருக்கிறேன். எபி வாசகர்களுக்கு என்னால் எழுத இயலவில்லை என்று.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குஎழுத்தின் இறக்கையை வெட்டி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது ஆகாதா? - கேட்க நல்லாருக்கு உடுப்பி ஹோட்டல்ல செஃப் சைவ மீன்னு மெனுல கொண்டுவர முடியுமா? ஆடுகளத்திற்கு ஏற்றபடிதான் ஆடவேண்டும்.
பதிலளிநீக்குநான் சொல்லியிருப்பது நீங்க சரியா புரிஞ்சுக்கல நெல்லை. வரம்பிற்கு உட்பட்ட, முறையான எழுத்து என்று சொல்லி இருக்கிறேன்.
நீக்குநன்றி நெல்லை
கீதா
200 வார்த்தைகளுக்குள் கதை எழுதணும், இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கதை.. இதுவுமே கட்டுப்படுத்தற மாதிரித்தானே
நீக்குஇளையாழ்வார் இராமானுஜர் ஆகிய கதை கண்டோம்.
பதிலளிநீக்குஇளையாழ்வார் வாழ்ந்தவீடு, கண்ணனை கட்டிய உரல் படங்கள் நாங்களும் காண்பதற்கு பகிர்ந்தது சிறப்பு. நன்றி.
கூரத்தாழ்வார் படிக்கும் காலத்தில் படித்த நினைவு.
கதைப் பகிர்வு இனித்தான் படிக்க வேண்டும்..