சனி, 24 ஆகஸ்ட், 2024

குறள் சூடி உமையாள் மற்றும் நான் படிச்ச கதை

 ‛குறள் சூடி உமையாள்' - மெய்யம்மையின் நாசா சாதனை

நான்கு வயதிலேயே திருக்குறள் மட்டுமின்றி ஸ்லோகங்கள், தமிழ் மாதங்கள், பொது அறிவு உட்பட பலவற்றையும் மேடைகளில் பேச கற்றுக் கொடுத்தனர்.  துபாய் உட்பட அரபு நாடுகளில் மீனாட்சி திருக்கல்யாணம், சிலப்பதிகாரம் திருப்பாவை திருவாசகம் திருப்புகழ் திருக்குறள் உள்ளிட்டவற்றில் ஒரு மணி நேரம் சொற்பொழிவு செய்தேன். தவிர தமிழ்ச்சங்கம், பொது நிகழ்ச்சி, திருமண விழாக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் 5க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிலும் பேசி உள்ளேன். நான்கு வயதிலேயே 1330 திருக்குறளையும் ஒப்புவித்து விருது பெற்றுள்ளேன்.

மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சொற்பொழிவுக்காக சென்றுள்ளேன். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கையால், திருக்குறளுக்கு விளக்க உரை வெளியிட்டதற்கு விருது பெற்றுள்ளேன். கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்திடம் இரு முறை விருது பெற்றுள்ளேன். 3 வயதிலேயே 'குறள் சூடி உமையாள் பட்டம்' வழங்கினர். அன்றிலிருந்து யார் எனது பெயரை கேட்டாலும் எனது பெயருக்கு முன்பு குறள் சூடி என்று சேர்த்தே சொல்வேன். இலக்கிய மேதை, சொற்சுடர், குறள்சுடர் குழந்தை மேதை, கலைமகள் தாரணி என பல பட்டங்கள் பெற்றது பெரும் மகிழ்ச்சி.  அமெரிக்காவிற்கு பலமுறை சொற்பொழிவிற்காக சென்றுள்ளேன். ஆனால் முதல்முறையாக, நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில், சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது. இதில் நான், ஹியூமன் ஆட்டோமேஷன் கன்ட்ரோல் ரோபோட் என்ற ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இந்த ப்ராஜெக்ட் முதலிடம் பிடித்ததோடு, இலவசமாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெற்றேன். எனது வழிகாட்டியாக, எங்கள் பள்ளி தாளாளர் எஸ்.சுப்பையா, கைடு அருணாக்காந்த் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.  நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது ஸ்பேஸ் சென்டர் ஹூஸ்டன், ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் பார் விசிட்டர்ஸ், ஸ்மித்சோனியன் அப்ளியேட்டட் மியூசியம் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கேட்வே டு ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர், ராக்கெட் பார்க், ஓரியன் கேப்சூல், ஷட்டில் அண்ட் ஸ்பேஸ் கிராப்ட் ப்ரொடக்சன், அப்பல்லோ, மிஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது பிரமிப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  ஐ.ஏ.எஸ்., ஆவது என் கனவு. ஐ.ஏ.எஸ்., ஆனாலும் உலகம் போற்றும் சிறந்த சொற்பொழிவாளராக வருவதே எனது லட்சியம் என்றார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு, இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.   விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், ஆர்.எல்.வி., புஷ்பக் என்ற ராக்கெட்டை ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரோ சோதனை செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா உள்ள ஏவுத்தளத்தில், இன்று (ஜூன் 23) காலை 7.10 மணிக்கு 3வது முறையாக, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பிரான்ஸ்சில் நடைபெற்ற 43-வது உலக சுகாதார போட்டியில் 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.  பிரான்ஸ்நாட்டின் செயின்ட்ட்ரோபஸ் நகரில் கடந்த 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் 43-வது உலக சுகாதரப்போட்டிகள் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளின் சார்பில் 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு ராணுவ மருத்துவ அதிகாரிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 19 தங்கம், ஒன்பது வெள்ளி,நான்கு வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

=================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

 

முன்னுரை 


Engal blog தற்போது முதியோர் மின்னிதழ் ஆகிவிட்டதுஆசிரியர்கள் முதியோர்கள்ஸ்ரீராம் உட்பட… வாசகர்களும் முதியோர்கள் ….இப்பகுதி எழுதும் நானும் முதியவன் தான். அதனால் தானோ என்னவோ நான் படிச்ச கதைப்பகுதியில் முதியோர் இல்ல கதைகள் மூன்று இடம் பெற்று விட்டன. இன்று ஒரு நான்காவது முதியோர் இல்ல முதியவர் கதை இடம் பெறுகிறது.   

பழைய மூன்று கதைகளின் பின்னோட்டம். 

கீதா பென்னட் எழுதிய வித்தியாசம்”  என்ற சிறுகதையில் மாறுபட்ட கலாச்சாரங்களை சேர்ந்த…. மனைவியை இழந்த முதியவர்கள் இருவர்அமெரிக்கர் ஏரணும், தமிழர் ஜனார்த்தனனும் ஏற்காடு ஏரியில் சந்தித்தபோது  தத்தம் கலாச்சாரம், மற்றும்  வாழ்வைப் பற்றி அளவளாவுகின்றனர். கடைசியில் அவர்கள் இருவரும் ஒரே முடிவிற்கு வந்திருக்கின்றனர்  என்பதை அறிகின்றனர். முதுமைக் காலத்தில் முதியோர் இல்ல வாழ்க்கை என்ற முடிவு ஒற்றுமையை உணர்கின்றனர். 

பாகீரதி….பாகீரதிஎன்ற இந்திரா சவுந்தரராஜன் கதை…. முதியோர் இல்லம் பற்றி ஒரு கட்டுரை எழுதும் வித்யா என்ற நிருபரின் முதியோர் இல்ல முதியோர்களின்  அனுபவங்களைப் பற்றியது.  

ராமபத்ரன் தாத்தா, அவரது மனைவி சுப்புப்பாட்டி  இருவரும் இல்ல வாசிகள்.. தாத்தாவுக்கு சுப்புப்பாட்டி இல்லாமல் ஒன்றும் ஓடாது, எல்லாம் மறந்துபோகும். சுப்புப்பாட்டி இறந்துவிட அதை அறியாமல் தாத்தா ஏன் சுப்பி ஆசுபத்திரியில் இருந்து வரவில்லை என்று புலம்பிக் கொண்டே இருப்பார். 

காலத்தின் விளிம்பில்என்ற கதை பாவண்ணன் எழுதியது. ஆப்பிரிக்காவில் இருக்கும் சந்திரன் என்பவர் அவருடைய பெரியம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். தையல்நாயகி என்ற அந்த முதியவருக்கு மறதி நோய். சந்திரன் கேட்டுக் கொணடபடி ஆசிரியர் அம்முதியவரைக் சென்று காண்கிறார். பாட்டி அவருடைய கதையை, பழைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார். இடையில் நீங்க யார்என்று ஆசிரியரைக் கேட்டாலும் ஆசிரியரின் பதிலை ஒதுக்கிவிட்டு அவருடைய கதையை கூறுவதிலேயே கண்ணாய் இருக்கிறார். 

இந்த மூன்று கதைகளின் ஊடாக ஒரு பிணைப்பு செல்கிறது. அது முதியோர்கள் அவர்களுடைய மக்கள் மேல் வைத்திருக்கும் பாசம், அன்பு. அதிலும் மகன் மேல் உள்ள பாசம் கூடுதல். கடைசி காலத்தில் அவர்களைக் கண்டு பேச ஒரு துடிப்பு மூன்று கதைகளிலும் ஒரு சிறு இசையாய் ஒலிக்கிறது.  இன்றைய கதையிலும் இதைக்  காணலாம். 

இன்று நாம் காணப்போகும் கலைச்செல்வியின் இந்த ரமணிப் பாட்டிகதையும் ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர் பற்றிய கதை தான். ஒரு சாதாரண கதை தான். முடிவும் கிட்டத்தட்ட எதிர்பார்ப்புக்குள் அமைந்ததே. 

சிறந்த கதை, இலக்கியத்தரம் உள்ள கதை என்றெல்லாம் தேர்ந்தெடுத்து எழுதினால் வரவேற்பு குறைகிறது, சரி,  இவ்வாரம் ஒரு சாதா தோசைசாதாரண கதைசொல்லலாம்  (அமெச்சூர் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை, சொல்கிறார்கள்)  என்று உத்தேசித்து இக்கதையை இங்கு உட்படுத்துகிறேன்

ரமணி பாட்டி 

கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி

 

பாட்டி… பாட்டி… உங்க பேரன் சதீஷ் வந்திருக்கான்.” முதியோர் இல்ல பொறுப்பாளர் சதீஷை அறிமுகப்படுத்தினார்.

ம்..ம்..யாரு…?”

பேரன்…. சதீஷ்அமெரிக்காவிலிருந்து…”

பேரனா… சதீஷ்சா…” சற்று நேரம் பேச்சே இல்லை… நிமிர்ந்த கண்களில் கொஞ்சம் ஈரம்.

சற்று நிதானித்து… “எப்படி இருக்க சதீஷ்…? என் கண்ணு… ராசா… உங்க அப்பா எங்கே…?”

நல்லா இருக்கேன் பாட்டிஅப்பா வரலஎன்கூட வர்றதா இருந்தாருஅப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசரம் வேலைநான் மட்டும்தான் பாட்டி இப்ப வந்தேன்.”

ம்.. என்னப்பா …? காது சரியா கேட்கலப்பா….”

அப்பா… வரல பாட்டிநான் மட்டும்தான் வந்தேன்.”

ரெண்டு வருஷம் ஆச்சு பார்த்து… இங்கே சேர்த்த பிறகுஒரு தடவ வந்துட்டு போனான்….. எப்போ என் மகனை பார்ப்பேன்னு தோணுதுப்பா சதிஷ்

தினம்…. உங்க நெனப்புதான் சதீஷ்…. ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குதுஇந்த அம்மா (முதியோர் இல்ல பொறுப்பாளர்கிட்ட தான் சொல்லுவேன் அடிக்கடிஎன் பையனுக்கு போன் போட்டு வரச் சொல்லுங்கன்னுசொல்லி ஆறு மாசம் ஆகுது… அவங்களும் 10 தடவைக்கு மேல சொல்லிட்டேன்னு சொன்னாங்க….

வாய் கொளறுதுப்பா… ரொம்ப பேச முடியல..

ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ நீ மட்டும் வந்து இருக்கே..உங்க அம்மா எப்படி இருக்கா?…தம்பி எப்படி இருக்கான்மருமகளைப் பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு….” கையை விரித்துக் காட்டியபடி.

போன தடவை உங்க அப்பா மட்டும்தானே வந்து போனான்.

சரி நீயாவது… வந்தியே இப்ப ..இந்த பாட்டிய பாக்க.”

இன்னும் ஒரு வருஷம் நான் இங்க தான் இருப்பேன் பாட்டி.. இங்க தான் வேலை.. இனி வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களை வந்து பார்ப்பேன் பாட்டி…”

அப்படியா சதீஷ்இங்கேயா வேலை?..ரொம்ப சந்தோஷம்ப்பா.”

பாட்டியின் கண்களில் ஒளி… வாயில் எச்சில்…. கண்களில் கடல் பொங்கிய நிலை..

இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள்… ரமணி பாட்டிபிறகு வாயை துடைத்துக் கொண்டே…”மகராசா அது போதும்அது போதும் எனக்கு!” பொக்கை வாய் திறந்துகுழந்தையை போல் சிரித்தாள்.

பத்து நிமிடம் இருந்து விட்டு… “சரி வரட்டுமா பாட்டி?….” என்றான் சதீஷ்.

என்னப்பா… அதுக்குள்ள போறேங்கிர… உன்னை பாத்து எவ்வளவு நாளாச்சு?. ….சாயங்காலம் போயேன்கொஞ்சம் ஓங் கூட பேசிட்டு இருக்கேனே….”

அடுத்த வாரம் தான் வருவேனே பாட்டி…?”

அது இருக்கட்டும்இப்போ இருப்பா…”

சதீஷ்கையை பிடித்து உட்கார வைத்தாள் ரமணி பாட்டி

உங்க அப்பா சின்ன வயசுல அப்படி பாசமாக இருப்பான்… அம்மா அம்மான்னு சேலையை புடிச்சுக்கிட்டு பின்னாடியே வருவான்நான் செய்ற அச்சு முறுக்கு அவனுக்கு ரொம்ப பிடிக்கும்… எப்பவும் அதையே தான் கேட்பான்…”

அதை இன்னும் மறக்க முடியல.. அப்புறம் ஸ்கூல்காலேஜ்வேலைகல்யாணம்னு பிஸியா ஆயிட்டான்கல்யாணம் வரைக்கும்தினம் தினம் போன் பண்ணுவான்…”

இப்ப…? என்கூட பேச நேரமில்லை அவனுக்கு.”

நீஅப்பா மாதிரி செய்யாதப்பா…. அம்மா அப்பா கிட்ட உன் பாசம் குறையவே கூடாதுஎவ்வளவு வேலை இருந்தாலும் வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணி பேசிடனும்என்ன சதீஷ்எப்பவும்அம்மா அம்மாதான்அப்பா அப்பா தான்உங்களுக்காகத்தான் அவன் இப்படி ஓடிட்டு இருக்கான்…”

சதீஷ் பெருமூச்சுவிட்டான்.

நானும் உங்க தாத்தாவும் ,கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துபாத்து பாத்து அந்த வீட்டை கட்டிணோம்உங்க தாத்தா பையனுக்கு வேணும் பேரனுக்கு வேணும்னு அந்த வீட்டை கனவு வீடா கட்டினார்அங்கே இப்போ யாருமே…..இல்லை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பாஅதை பத்தி பேசணும்னு நினைச்சேன்..இந்த ஹோம்லஇருக்கிறவங்க என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிறாங்க.. அவங்க செய்யற உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல.. பெத்த தாயை கவனிப்பது போல பாத்துக்கிறாங்கஇவங்க தான் இப்ப எல்லாம் எனக்கு..”

சதீஷ் முகத்தில் ஈ யாடவில்லை.

அந்த வீட்டை இந்த முதியோர் இல்லத்துக்கு எழுதி வெச்சிடலாம்னு நினைப்பு வந்துக்கிட்டே இருக்குப்பாஎன்ன மாதிரிஅனாதைகளுக்கு அடைக்கலம் கிடைக்குமே…. என்ன சொல்ற சதிஷ்எல்லாமே வெறுத்துப் போச்சு….ஓடி ஓடி காசு சேத்து.. அர்த்தமே இல்லாத வாழ்க்கையா ஆயிடுச்சுஎன்பது வயசுல உங்க அப்பாவும் இப்படித்தான் நினைப்பான்இப்ப புரியாதுஅவனுக்கு…”

அப்பாவுக்குத் புரியும் பாட்டிஅடிக்கடி உங்கள பார்க்கப் போகணும்னு சொல்லிகிட்டு தான் இருப்பாரு.”

நான் உயிரோடு இருக்கும்வரை தானே வரப்போறான்…”

கவலைப்படாதீங்க பாட்டிசீக்கிரம் அப்பாவ வர சொல்றேன்.”

சரிப்பா..சதீஷ் உங்க அப்பா போட்டோ இருக்காகாட்டேன்… இப்ப எப்படி இருக்கான்போட்டோல யாவது பார்க்கிறேன்.”

சதீஷ் கைபேசியில் இருந்து காண்பித்தான்.

என்ன முகத்தில சுருக்கம் வந்திருச்சுமுடி கொஞ்சம் வெளுத்து இருக்கு.. கடவுள் புண்ணியத்துல கண்ணு மட்டும் நல்லா தெரியுது எனக்குஅவன் கல்யாண முகம் மட்டும்தான் எப்பவும் ஞாபகம்.. அதுவரை தானே என்னோட இருந்தான் .. கல்யாணம் முடிஞ்சு அமெரிக்கா போனவன் தான்… அந்த முகமும்அந்த பத்து வயது முகமுமே எப்பவும் வந்து போகுது… அவன் முகத்தைப் பார்க்கத்தான் இந்த உசுரு ஊசலாடிக் கிட்டு இருக்கு சதிஷ்சு….”

சீக்கிரம் வருவார் பாட்டிகவலைப்படாதீங்க.சரி பாட்டிஅஞ்சு மணி ஆச்சு .நான் கிளம்புறேன் ஞாயிற்றுக் கிழமை வரேன் பாட்டி…”

கிளம்புறியா… சதீஷ்.. சரி போயிட்டுஅடுத்த வாரம் வா…” எழுந்திருக்க முயன்றாள்… ரமணி பாட்டிமுடியவில்லை

சதீஷ் கையை பிடித்து பொக்கைவாய் சிரிக்க… “அடுத்த வாரம் வா… உங்க அப்பாவை போன் போட்டு வரச் சொல்லு…”

சரி பாட்டி…”

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பாட்டியை பார்க்க சதீஷ் வந்தான்முதியோர் இல்லம் சற்று வித்தியாசமாகப்பட்டது.

ஆங்காங்கே ஒரே கூட்டம்சதிஷ்க்கு ஒன்னும் புரியல.

பாட்டி அறைக்குள் நுழைந்தான்.. அந்த பொறுப்பாளர் அம்மா சதீஷ்யை பார்த்தவுடன் கண் கலங்கினர். .. “இப்பத்தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு.. திடீரென மூச்சு திணறுச்சு.. ஏதோ சொல்ல வந்தாங்க…. முடியலஐந்து நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சு போச்சுப்பா… இப்ப தான் உனக்கு போன் போட்டேன்ஒரே பிசியா இருந்தது… உங்க அப்பாவுக்கு இப்பதான் சொன்னேன்.”

இப்போ என்னப்பா பண்றதுஉங்க அப்பா அம்மாவால உடனே வர முடியுமாஉயிரோடு இருக்கும் போதே உங்க அப்பாவ பார்க்க ரொம்ப ஆசைப்பட்டாங்க.”

நான் எத்தனையோ தடவை சொன்னேன்வரேன் வரேன்னு சொல்லிட்டு வரல….”

இப்ப கேட்டு சொல்லுப்பாஇல்லாட்டி நாங்களே எல்லா பார்மால்டியும் இங்கேயே முடித்து விடுவோம்.. பேரன் நீ இருக்க… கொள்ளி மட்டும் வைப்பா… உன்னை பார்த்த சந்தோஷத்திலேயே போய் சேர்ந்துட்டாங்க போல….”

ஒரு வாரமா அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்…”

சதீஷ் வெறுமையாய் சிலையாய் நின்றிருந்தான்.

சதீஷ் தனக்குள்அப்பா செய்தது தவறுவருடத்திற்கு ஒரு முறையாவது பார்க்க வந்திருக்கலாம்எனக்கு இது ஒரு பாடம்உயிர் போன போது பாட்டியின் மனசு என்ன பாடு பட்டிருக்கும்இது பெரிய பாவம்அனைவருக்கும் இது ஒரு பாடம்பாட்டியின் கடைசி ஆசைப்படிஅந்த வீட்டை ரமணி பாட்டி முதியோர் இல்லமாக மாற்றுவதால் அவரின் ஆன்மா சாந்தி அடையும்சடலத்தை பார்க்க இனி அப்பா வந்து ஒரு பயனும் இல்லைதனது இந்த முடிவோடு அந்த பொறுப்பாளர் அம்மாவை பார்த்தான் சதீஷ்

ரமணி பாட்டி”, அக்டோபர் 2023 , வானவில் மின்னிதழ்.

*******************************************

வை கோ சார் எழுதிய ஒரு கதை இதே சுப்ஜெக்ட்டில்

https://gopu1949.blogspot.com/2014/08/vgk-31.html


அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது.'..................


*******************************************


ஆசிரியர்: கலைச்செல்வி 

சிவகங்கை சொந்த ஊர். வேதியியலில் இளங்கலை பட்டமும், உளவியலில்  முதுகலை பட்டமும் பெற்றவர். தலைமை செயலகத்தில் பலவேறு துறைகளில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார். 

இவரது பல கதைகள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. அவரது சொந்த குரலிலும் வானொலியில் கதைகளை வாசித்துள்ளார். 

இருபதுக்கும் மேற்பட்ட சிறு கதைகள், பல கவிதைகள், பல விழிப்புணர்வு கட்டுரைகள், இலக்கிய  மாத இதழ்  தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வானவில் மின்னிதழ், முதலெழுத்து மின்னிதழ், தீக்கதிர் நாளிதழ், ஆகியவற்றில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.  இவரது முகநூலில் இவர் எழுதிய கதைகள், கவிதைகளை  பதிவு செய்துள்ளார். ======>கலையின் சிறுகதைகள்<====== என தனியாக =====>blog<===== திறந்து, தனது படைப்புகளை  வெளியிட்டு வருகிறார்.

======>ஆசிரியர் பற்றிய மேல் அதிக விவரங்களுக்கு <=====

67 கருத்துகள்:

  1. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விழி எடுக்காமல் வாசித்தேன்.
    வாசித்து வரும் வாசகர் எதிர்பாராதவாறு கதையை முடிப்பது ரொம்ப சிரமமான காரியம் தான். இந்தக் கதையை வாசித்து வரும் போது இப்படியான முடிவாக இருக்குமோ என்று வழக்கமான எழுத்தாள குறுக்கு புத்தி ஓடியது. அதெற்கெல்லாம் இடம் தராமல் ஆசிரியர் கதையை சிறப்பாக முடித்திருந்ததும் ஒரு விதத்தில் எனக்குப் பாடமாயிற்று. இப்படியான ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான எழுத்து நடை கொண்ட எழுத்தாளரை இந்தப் பகுதியில் அறிமுகப் படுத்தியதற்கு ஜெஸி ஸாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இன்னொன்றும் சொல்ல வேண்டும். வைகோ சார் கதை விமரிசனப் போட்டி நடத்திய காலத்தில் இவருக்குப் பதிவுலகம் அறிமுகமில்லாது இருந்தது போலும்
    வைகோ சாரின் ஒரு கதையையாவது விமர்சித்து எழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருந்த்தால் பரிசுக்குரிய விமர்சனமாகத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்பது நிச்சயம். அப்படியான நிதானமான எழுத்து நடை இவருக்கு வாய்த்திருக்கிறது என்பதற்காக சொன்னேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மகன்கள் ஒருவர் பின் ஒருவராக கல்லூரியில் படித்த காலம். இருந்தது ஒரு இணைப்பு BSNL (512Kbps) பின்னர் Asianet. 25 GB 3600 ரூ. நெட்டில் இருந்தாலும் வைகோ, துளசி, போன்றவர்களின் தளங்களுக்கு செல்வதில்லை. அதே போல் அதிக படங்களை உள்ள பக்க்கங்களையும் தவிர்த்து விடுவேன். ஆகவே வைகோ சாரின் சிறுகதைப்போட்டிகளில் சேர்ந்தது இல்லை. கந்தசாமி ஐயா பரிசு பெற்றது ஞாபகம் இருக்கிறது.

      இன்றைய கதை பிடித்திருந்ததிற்கு நன்றி. கற்பனை கலவாத கதை. யதார்த்தம் மற்றும் சலிப்பு தட்டாத நடை, மற்றும் அளவில் அடக்கம், போன்றவற்றால் இக்கதை சிறப்பு பெறுகிறது.
      Jayakumar​

      நீக்கு
    2. ஜீவி சார். நமஸ்காரம்.

      நாம் சிறுகதை விமர்சனப் போட்டிகளை (2014) ஓராண்டுக்கு வெற்றிகரமாக நடத்தி, பத்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், அதைப்பற்றி இங்கு பேசும் சந்தர்ப்பம் அமைந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      நீக்கு
  3. இவர் தாமரை, தீக்கதிர்
    வானவில் மின் இதழ்
    போன்றவற்றில் எழுதியிருப்பதை அறிய மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. வை.கோ. சாரின் அவருக்கென்றே வாய்த்த அவர் எழுத்தையும் இங்கு பார்க்க கிடைத்த அரிய வாய்ப்புக்கும் மிக்க நன்றி. நிறைய பழைய நினைவுகள் கிளர்ந்து எழுந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ..... நாள் ..... ஞாபகம் ..... நெஞ்சிலே ..... வந்ததே ..... நண்பரே ..... நண்பரே !

      நீக்கு
    2. ஆஹா. எப்படி இருக்கீங்க வை.கோ.
      சார்? அந்தப் பொற்காலம் அடிக்கடி
      நினைவுக்கு வரும் பொழுதெல்லாம்
      அதன் நாயகனான நீங்களும் நினைவுக்கு
      வருவீர்கள்.

      நீக்கு
  5. ஜெயகுமார் சார்.. நீங்க முதியோர் என்ற வார்த்தையை கெத்தாகவோ இல்லை எதனாலோ உபயோகித்திருக்கிறீர்கள். நாம் முதியோர் என்ற எண்ணம் எப்போதுமே நம் மனதுக்கு வரக்கூடாது. நம் செயல்கள் சின்னப்பசங்க செயல்களைப் போலவோ இல்லை அவங்களுக்கு தவறான முன்னுதாரணமா அமைந்துவிடக்கூடாது என்பதால் நம் மனதுக்குள், நாம பெரியவங்க என்ற எண்ணத்தை 50ஐக் கடந்தால் நிலைநிறுத்திக்கணும்.

    மற்றபடி முதியோர் என்று சொல்லத்தக்க மனதுடையோர் எபியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார் நான் "யோவ் பெருசு, வீட்ல சொல்லிக்கினு வந்தியா" என்ற "பெருசு" என்ற அடைமொழியை பொறுத்துக் கொள்கிறேன். தற்போது வெளியில் செல்வதில்லை.

      நீக்கு
  6. இந்த மாதிரி முதியோர் கதைகள் படிக்க வேண்டியவங்க, பதின்ம வயதில் இருக்கறவங்கதான். அப்போதான் மனதில் எது சரி எது தவறு என்பது பதியும். மிடில் ஏஜ்ல உள்ளவங்களுக்கும், ஏதாவது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலையோ என்ற எண்ணம் வர ஏதுவாகும். ஆனால் அறுபதைக் கடந்தவங்க படிச்சால் மனதில் வெறுமையும் டிப்ரஷனும்தான் வரும்.

    ஒரு கதையை நேர்த்தியா எழுதுவது, நயத்தோடு எழுதுவது என்பதெல்லாம் வேறு. வாழ்வியல், மனதுக்குப் புரியும்படியானவைகளை எழுதுவது வேறு. முடிவு எல்லாம் சாதாரணமாகிருந்தாலும், கதை சொல்ல வருவது எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதாலும் சப்ஜெக்ட் உணர்வுபூர்வமானது என்பதாலும் மிகவும் பிடித்திருந்தது.

    நேற்று 2010-11வரையிலான நான் எடுத்த புகைப்படங்களை கணிணியில் பார்த்துக்கொண்டிருந்தேன். (என்னிடம் லட்சக்கணக்கில் நினைவுக்கான படங்கள் உண்டு). அனுபவித்த, இன்னும் நிறைய பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் வந்த, தவறவிட்ட தருணங்களை நினைத்துக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. கோபு சார் கதைக் மிகவும் நன்றாக இருக்கும். உணர்வு பூர்வமான, நான் நன்றாக அறிந்த சமூகத்தையொட்டிய கதைகளை அவர் நிறைய எழுதியிருக்கிறார்.

    ஆனால்ஒரு சமயத்தில் வெற்று உணர்ச்சிகளின் காரணமாக, அவங்களே தன் கதைக்கு நிறைய வரவேற்பில்லையோ, நம் கதையை பிறர் விரும்புவதில்லையோ, இப்போ படிக்கறவங்க குறைஞ்சுட்டாங்க என ஏதேதோ எண்ணிக்கொண்டு எழுதுவதை நிறுத்திவிடறாங்க. அவங்க எழுத்தை ஒரு ஜீவனாவது ஆர்வத்துடன் படிக்கும்வரை எழுதுவோம் என்று நினைப்பதில்லை. முடியவில்லை வயதாகிவிட்டது என்பது வேறு (காமாட்சி அம்மாள் போன்றவர்கள்). ஆனால் வேண்டாம் என சோம்பேறித்தனத்தினால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்துவது என்பது வேறு. கோபு சார் இந்த லிஸ்டில்தான் வருகிறார். அவர் எழுதிய கதைகள் அனேகமா எல்லாமே மிக நன்றாக இருக்கும். அறத்திலிருந்து நீங்கி எழுதமாட்டார்.

    அவரை நினைவுகூர வைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால்ஒரு சமயத்தில் வெற்று உணர்ச்சிகளின் காரணமாக, அவங்களே தன் கதைக்கு நிறைய வரவேற்பில்லையோ, நம் கதையை பிறர் விரும்புவதில்லையோ, இப்போ படிக்கறவங்க குறைஞ்சுட்டாங்க என ஏதேதோ எண்ணிக்கொண்டு எழுதுவதை நிறுத்திவிடறாங்க. அவங்க எழுத்தை ஒரு ஜீவனாவது ஆர்வத்துடன் படிக்கும்வரை எழுதுவோம் என்று நினைப்பதில்லை.//

      யெஸ் நெல்லை. நான் இதில் அடக்கம்.

      கீதா

      நீக்கு
    2. இப்போ படிக்கறவங்க குறைஞ்சுட்டாங்க//

      இது நண்பர் துளசியின் எண்ணம் அதனாலேயே அவர் எழுதறதில்லை. எனக்கும் அவருக்கும் நேத்து கூட வாக்குவாதம் வந்தது. நானும் எழுதலை நீயும் எழுதலைன்னு...

      இப்ப உங்க கருத்தை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அவருக்கும் அனுப்பியிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்(க்கா) - எழுத்து என்பது என்ன? பிளாக்கில் எழுதுவது பெரும்பாலும், ஒரு நண்பர் வீட்டிற்கு வந்தால் நாம் பல விஷயங்களைப் பேசிச் சிரித்து, சி விஷயங்களைப் பகிர்ந்து ஆறுதல் தேடி... இது மாதிரி எழுதுவதுதான். நான்தான் அடுத்த சுஜாதா, திஜர (அப்படீன்னாக்க யாரு) என்றெல்லாம் நினைத்து எழுத பிளாக் சரியான மீடியம் இல்லை.

      இன்னொன்று, யாருமே கருத்துகள் எழுதலையே, இந்தப் பத்தியில் சிறப்பா உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கேன் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டலையே, இந்தக் கதையைக் குறை சொல்றாங்களே, முடிவு அட்டஹாசம் ஆனால் இவனுக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி சுமார் முடிவுன்னு எழுதறானே... இவன் எழுதும்போது கிழித்துவிட வேண்டியதுதான், பெருசா எழுதாம ஒரு வார்த்தையில எழுதிட்டானே, இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினதுக்கு ஐந்து பேர்தான் கருத்து சொல்லியிருக்காங்களா? அதுல ஒண்ணு குட் மார்னிங் மெசேஜ் என்றெல்லாம் கோஸ்ட்மார்டம் பண்ணினா டிப்ரஷன்தான்.

      பிளாக், ஒரு வித்த்தில் நண்பர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பது போன்றது. எழுதறவங்களுக்கும் எந்த மீடியத்திலாவது நம் உணர்வைப் பகிர்ந்தோம் என்ற ஆறுதல் அவ்ளோதான். கருத்து எழுதுனவங்களுக்கு, மரியாதைக்கு பதில் எழுதினால் சந்தோஷம். இல்லைனா, கருத்து எழுதணும்னு தோணினா எழுதுவாங்க, இல்லைனா எழுதமாட்டாங்க.

      அதுக்குமேல எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. குமுத்த்தில் என் கதை வந்தது என்று சொல்பவர்களுக்கு எத்தனை பேர்கள் படித்தார்கள் என்பது தெரியாது, பதினைந்துபேர் கருத்தை அனுப்பியிருக்கலாம். நிலைமை அப்படி இருக்கும்போது பிளாக் எந்த மூலைக்கு?

      நீக்கு
    4. இல்லை நெல்லை, வலைத்தளம் என்பது சும்மா நண்பர்கள் தொடர்பு கும்மி என்பதல்ல அது ஒரு புறம் இருந்தாலும், அதையும் தாண்டி நம் எழுத்தையும், திறமையையும் அறிமுகப்படுத்தும் ஒரு இடம் ஒரு வாயில் எனலாம். திரைப்படத் துறையில் நுழைய விரும்புறவங்க குறும்படங்கள் எடுத்து தங்கள் திற்மையை நிரூபிக்க முயற்சி பண்ணுவாங்க இல்லையா அப்படி.

      அப்படி நிறையபேர் இப்ப பெரிய எழுத்தாளர்களாகி ஏன் பெரிய எழுத்தாளர்களுமே கூட ப்ளாக் வைத்திருக்கிறார்கள்.

      எதையுமே ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பார்க்கணும். பிளாக் எந்த மூலைக்குன்னு சொல்வது சரியல்ல என்பது என் கருத்து. நம் திறமைக்கு ஒரு மேடை எனலாம்.

      சிலர் எழுதலைனா ஏன் எழுதலைன்னு கேட்பதுண்டு. நான் எழுதலைனா கேட்பதற்கும் கூட யாரும் கிடையாது அதையும் மனதில் கொண்டுதான் நான் எழுத வேண்டும்.

      ஆனால் எனக்கு என் மனம் சுருங்கி இருக்கிறது என்பது உண்மை. அதிலிருந்து நான் வெளியில் வந்தால்தான் எழுத முடியும். ஸோ நான் எழுதாதற்குக் காரணம் நானே என் மனமே.

      கீதா

      நீக்கு
    5. நீங்க எழுதலைன்னா ஏன் எழுத மாட்டீங்கறீங்கன்னு நான் கேட்பேன் சகோதரி! அப்படி பல தடவைகள் எபி செவ்வாய்க் கிழமை எழுத்துக்காக கேட்டும் இருக்கிறேன். ப்ளாக் எழுத்து எழுதும் ஆசை உள்ளோருக்கு ஒரு பயிற்சி களம். பிற்கால பிரகாசத்திற்கான அடித்தளம். அதனால் மனம் சோர்ந்து கேட்கிறேன். எபி செவ்வாய்க்கு நீங்கள் எழுத வேண்டும். உற்சாக மூட்ட உங்கள் கூடப் பிறவாத மூத்த அண்ணனாக நான் இருக்கிறேன். வாருங்கள். எழுதுங்கள்.

      ஒரு விதத்தில் பார்க்கப் போனால் செவ்வாய் மட்டும் அல்ல இந்த சனிக்கிழமை தளமும் கதைகள் எழுத ஆவல் கொண்டோருக்கும் பிறர் எழுத்தை ஆக்க பூர்வமாக விமர்சிக்க ஆசைப்படுவோருக்குமான பயிற்சி களம் தான். ஜெஸி ஸார் கூட தன் அந்த ஆசையை ஒரு எழுத்தாளரையும் கதையையும் இங்கு அறிமுகப்படுத்தும் நேரத்திலேயே தனது அந்த ஆசையை ஊடும் பாவுமாய் நிறைவேற்றிக் கொள்வதைப் பார்க்கலாம்.

      நீக்கு
    6. இந்தக் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்
      . கதாசிரியர் கலைச்செல்வி அவர்கள் தனக்கு உகந்த வழியில் ஒரு முடிவைக் கொடுத்து இந்தக் கதையை எழுதி இருக்கிறார்.
      வேறு எந்தந்த விதங்களில் இந்தக் கதையை முடித்திருக்கலாம் என்று இந்தக் கதையை வாசித்ததின் அடிப்படையில் உங்கள்ய்க்குத் தோன்றினால் அதைக் குறிப்பிட்டு எழுதினீர்கள் என்றால் அதுவும் கதைகள் எழுதுவதற்கு மேலான ஒரு உந்துதலைக் கொடுப்பதற்கான வழி தான். ஏன் அப்படி முடிப்பதற்கு சாத்தியமில்லை என்று இன்னும் சிலர் பங்கு கொண்டால் அதுவும் கதைகள் எழுத பயிற்சி தான்.
      நம் சகோதரர்கள்
      KGG, ஸ்ரீராம், துளசிதரன், கமலா ஹரிஹரன், வெங்கஜி, தேவகோட்டையார, சகோதரி பானுமதி என்று மற்றும் பலர் இந்த சனிக்கிழமை தளத்தில் ஒதுங்கியிராமல் இந்த மாதிரி பயிற்சிகளில் பங்கு கொண்டால் இந்தப் பகுதியும் பங்கு கொள்வோர்களின் திறமையும் பட்டை தீட்டிய வைரம் போல் இன்னும் ஜொலிக்கும் என்பது நிச்சயம்.



      நீக்கு
    7. பிரபல கதாசிரியர்
      ரா.கி. ரங்கராஜன் அவர்கள் 'கதைகள் எழுதுவது எப்படி?' என்பதற்க்ய் வாசகர்களுக்கு பல பயிற்சிகளைக் கொடுப்பதற்காக மனம் உவந்து செயல்பிருக்கிறார்கள்.

      நமக்கெல்லாம் வாரந்தோறும் சனிக்கிழமைகள் நல்ல சிறுகதைகள்
      படைப்பதற்கான பயிற்சிக்களமாக இருக்கட்டுமே!

      எல்லாத் துறைகளிலும் மனம் இருந்தால் மார்கங்கள் பல உண்டு.

      செயல்படப்போகும்
      நண்பர்களுக்கு நன்றி.

      நீக்கு
    8. //கோபு சார் கதைக் மிகவும் நன்றாக இருக்கும். உணர்வு பூர்வமான, நான் நன்றாக அறிந்த சமூகத்தையொட்டிய கதைகளை அவர் நிறைய எழுதியிருக்கிறார்.//

      மிக்க நன்றி, மை டியர் நெல்லைத் தமிழன் ஸ்வாமீ. ஆஹா..... வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷிப் பட்டம். தன்யனானேன் !

      நீக்கு
    9. // நான் எழுதலைனா கேட்பதற்கும் கூட யாரும் கிடையாது அதையும் மனதில் கொண்டுதான் நான் எழுத வேண்டும். //

      நீங்கள் ஏன் கீதா எழுதவில்லை? உங்கள் பிளாக்கில் மாதம் இரண்டு பதிவாவது வருமாறு செய்யுங்கள். உடனே செவ்வாய்க்கு ஒரு கதை அவசரமா அனுப்புங்க... அதுவும் உங்க பாணியில்..

      நீக்கு
  8. எல்லா முதியவர்களுக்கும் சொல்ல வேண்டிய, பகிர வேண்டிய, சொல்ல மறந்த கதைகள் ஏராளம். அதைக் காதுகொடுத்துக் கேட்க ஆட்கள் மிக்க் குறைவு என்பதால் சிறுகதை எழுத்த் தெரிந்தவர்கள் எழுத்தில் கொண்டுவரவேண்டும்.

    இன்னொன்று... எப்போது விமர்சனத்தைச் சகிக்கும் பக்குவமோ இல்லை எழுத்தைப்பற்றி நகடிவ் விமர்சனம் வரும்போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லையோ அப்போதே ஒருவர், தான் முதியோர் கேடகரிக்குள்ள வந்தாச்சு என்று நிச்சயித்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார் முதியவர்கள் விமரிசனங்களை வரவேற்கிறார்கள், அல்லது ஒதுக்கி விடுகிறார்கள். அதன் காரணமாக விரோதம், கோபம் கொள்வதில்லை. இன்று கீதா ரங்கன்(க்கா) என்னுடைய விமரிசனத்தை நன்றாக விமரிசித்திருக்கிறார். நான் கோபம் கொள்ளவில்லை அடையவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் இயல்பு. அதுவே வயது முதிர்ச்சியினால் ஏற்படும் பக்குவம்.
      Jayakumar

      நீக்கு
    2. சந்தடி சாக்கில்
      கீதா ரங்கன்(க்கா)வா?
      ஜெஸி ஸார்! அநியாயம் ஸார் இது. :))

      நீக்கு
    3. கீதா ரங்கன்(க்கா) என்னைவிடச் சில வாரங்கள்/மாதங்கள் பெரியவங்க. அதனால் அவரை அப்படிக் கலாய்க்கிறேன். ஆனால் அவர் ரொம்ப ஆக்டிவ், ரொம்ப சுறுசுறுப்பு (என்னை மாதிரி இல்லை) ஆனால் இங்க உள்ள மற்ற எல்லோருக்கும் அவர் மிக இளையவர்

      நீக்கு
  9. வயது என்பது ஒரு நம்பர் தான். யாரும் தங்களை வயதானவர்கள் என்று நினைக்கவே கூடாது.
    மனது இளமையாக இருந்தாலே பலம் தான்

    நான் எப்போதும் சொல்வேன்
    யாரையும் How old are you
    என்று கேட்கக் கூடாது
    How young are you
    என்றுதான் கேட்க்க வேண்டும் என்று.
    அதிலேயே அவர்கள் முகத்தில்
    மலர்ச்சி காணலாம்.
    அவ்வளவு தான்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  10. குறள் சூடி உமையாள்! பிரமிப்பு!

    மனமார்ந்த வாழ்த்துகள் அவரது கனவுகள் நிறைவேற!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாசிட்டிவ் செய்தியும் நன்று

    //பிரான்ஸ்சில் நடைபெற்ற 43-வது உலக சுகாதார போட்டியில் 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.//

    செய்தி மகிழ்ச்சி ஆனால் யோசிக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. Engal blog தற்போது முதியோர் மின்னிதழ் ஆகிவிட்டது… ஆசிரியர்கள் முதியோர்கள்… ஸ்ரீராம் உட்பட… வாசகர்களும் முதியோர்கள்//

    ஜெ கே அண்ணா நான் இதை முற்றிலும் எதிர்க்கிறேன்!!! ஹாஹாஹாஹா

    வயது என்பது மனசிலதான். நாங்க எல்லாம் சின்ன பசங்கதான்..இன்னமும் மனசுல இளமையோடு...இருக்கிறோம் என்பதை இங்கு எல்லார் சார்பிலும் சொல்லிக்கொள்கிறேன்! கண்டிப்பா இதை ஆமோதிப்பாங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது என்று சொல்கிறாரோ...

      :))))

      நீக்கு
  13. இதற்கு முன்னர் பகிர்ந்த மூன்றுகதைகளும் நினைவு இருக்கு ஜெ கே அண்ணா.

    சிறந்த கதை, இலக்கியத்தரம் உள்ள கதை என்றெல்லாம் தேர்ந்தெடுத்து எழுதினால் வரவேற்பு குறைகிறது, //

    அப்படி எப்படி சொல்றீங்க ஜெ கே அண்ணா? இதற்கு முன்பு நீங்க சில நல்ல கதைகளைப் பகிர்ந்திருக்கீங்க. ஏன் கீதா பென்னட்டின் கதை கூட.

    சென்ற இரு வாரங்களில் பகிர்ந்த கதைகளை இலக்கியத் தரம்னு எதுவுமே சொல்ல முடியாது. கூடவே இலக்கியத் தரம்னா என்ன?

    ஜெமோ, எஸ் ரா இன்னும் சில பிரபல எழுத்தாளர்கள் புகழ்ந்து எழுதினால் அவை இலக்கியம் என்று சொல்லப்படுமா? இவங்க அப்படிச் சொல்லாத பல கதைகள் மக்களின் மனதில் பதிந்தவை உண்டே.

    இலக்கியம் என்பது மக்களின் உணர்வுகளோடு பிணைந்திருக்க வேண்டும். கவர வேண்டும் கரு அந்த எழுத்து. என்பதுதான் என் தனிப்பட்டக் கருத்து. சுஜாதாவின் கதைகள் கூட இலக்கியத்தோடு சேர்க்க மாட்டாங்க! ஆனா அவர் எத்தனை பேரை கட்டிப் போட்டார் தன் எழுத்தால்!

    சு வெங்கடேசன் அவர்களின் வரலாற்று நாவல் சாகித்திய அகடமி பரிசை வென்றது ஆனால் 10 பக்கங்கள் கூட வாசிக்க முடியவில்லை. ஆனா நம்மைக் கட்டிப் போடும் வரலாற்று நாவல்களை எழுதிய எழுத்தாளர்களும் உண்டே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதற்கு முன்பு நீங்க சில நல்ல கதைகளைப் பகிர்ந்திருக்கீங்க. ஏன் கீதா பென்னட்டின் கதை கூட. //

      ​JKC என்னன்னா எபியில் வருபவை படிக்க, ரசிக்க, மறக்க என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் என்னடாவென்றால் இதை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்!

      :))

      நீக்கு
  14. இந்தக் கதையின் கரு பலராலும் எடுத்தாளப்பட்ட கருதான். ஆனால் இதையே இன்னும் மிக அழகாகப் படைத்திருக்கலாம்.

    வேறு எதுவும் இல்லை கதையைப் பற்றிச் சொல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படிப் படைத்திருக்கலாம் என்று எழுதினால் நமக்கும் கதைகள் எழுதுவற்கு அதுவும் ஒரு பயிற்சியாக இருக்கும் என்று சில வழி முறைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன். வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன், சகோ.

      நீக்கு
  15. ஒரு வேளை இந்தக் கதைதான் இப்படி இருக்கிறதோ வேறு கதைகள் எப்படி என்று பார்க்க, அதுவும் ஆசிரியரைப் பற்றிய விவரங்களை வாசித்ததும், அவரது படைப்புகள் பல பெரிய பெரிய பத்திரிகைகளில் வந்திருக்கிறதே என்பதைப் பார்த்ததும், அவர் தளம் சென்று வாசித்தேன் ஒரு சில தேர்ந்தெடுத்து. என்ன சொல்ல என்று தெரியவில்லை.

    .......................................................

    அமெச்சூர் என்று சொல்லியிருக்கீங்க....பார்க்கப் போனால் எபியில் கே வா போ வில் எழுதுபவர்களில் சிலர் மிக நன்றாக எழுதுகிறார்கள். (இதில் கண்டிப்பாக நானில்லை என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். )

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வெற்றியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

    கதை நன்றாக இருந்தது. நல்ல நடையில்.
    நீண்ட சலிக்க வைக்காத கதை.

    வை.கோ அவர்களின் கதைகளையும் நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வை.கோ அவர்களின் கதைகளையும் நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.//

      மிக்க நன்றிங்கோ மாதேவி மேடம். 🍬🍬

      நீக்கு


  17. Positive செய்திகள் எல்லாம் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நான் படிச்ச கதை நன்றாக இருக்கிறது.
    கைபேசி காலத்தில் தன் மகனை பார்த்து பல வருடம் ஆச்சு என்று தாய் சொல்வது தான் வருத்தம்.
    வர முடியவில்லை என்றால் கைபேசியில் பேசி இருக்கலாம்.

    வை கோ சார் எழுதிய கதையை மீண்டும் படித்தேன்
    அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வை கோ சார் எழுதிய கதையை மீண்டும் படித்தேன்
      அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.//

      வணக்கம் மேடம். நலமா? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🍧🍧🍨🍨

      நீக்கு
  18. குறள் சூடி உமையாள் பட்டம் பெற்ற சிறுமி உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம். இக்காலத்திலும்,நாஸா சென்றாலும் தன் கனவு சொற்பழிவாற்றுவது என்று சொல்லும் இப்படி குழந்தைகள் இருப்பது மகிழ்வான விஷயம்.

    பூமிக்கு மீண்டும் திரும்பும் புஷ்பக் ஏவுகலன், பதக்கம் வென்ற நம் சுகாதார அதிகாரிகள் எல்லாமே நாம் பெருமைப்பட வேண்டிய நிகழ்வுகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. ரமணிப்பாட்டியின் கதை மனதை என்னவோ செய்துவிட்டது.

    இது போல் தனிமையில் வாழ்கின்ற பெற்றோர்கள் அல்லது தாயோ தந்தையோ மட்டும் தனியாக வாழ்பவர்களை நினைக்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது. ஆனால் யாரையும் குற்றம் சொல்ல இயலாது வாழ்வியல் அப்படியாகிவிட்டது. இன்று வெங்கட்ஜியின் தளத்திலும் கூட கிட்டத்தட்ட இதை ஒத்த கவிதை கோடாங்கி அவர்கள் எழுதியதைப் பகிர்ந்திருந்தார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. இன்று ஜீவி சார் தன்னுய கருத்துக்களை சென்னை மழை போல பொழிந்திருக்கிறார். அமெரிக்கா அவருக்கு நிறைய ஆலோசிக்க நேரம் தந்திருக்கிறது. "எப்படி கதை எழுதுவது" என்ற சுஜாதாவின் கட்டுரையை ஒரு சனிக்கிழமையில் உட்படுத்தியதாக நினைவு. இது இல்லாமல், கா,நா, சு, மாலன், ரா, கி, ர, எஸ், ரா ஆகியோர்களின் சிறுகதை இலக்கணம் பற்றிய பாடங்களையும் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளேன்.

    ஆக எ பி ஒரு தினத்தந்தி தான். காலையில் பார்த்துவிட்டு பிடித்தவர்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்டு பின்னர் மறந்து போவது தான் வாடிக்கை. எ பி யில் வரும் பதிவுகள் சிந்தித்து பார்க்க அல்ல. படிக்க, ரசிக்க, மறக்க மட்டுமே.





    Jayakumar

    பதிலளிநீக்கு
  21. ஆச்சர்யமாக பின்னூட்டம் இட்டவர்கள் குறைவாகினும், பின்னூட்டங்கள் செறிவானதாக, அர்த்தம் உள்ளதாக , நிறைவாக, இருந்ததில் மகிழ்ச்சி. பின்னூட்டங்கள் இட்ட அனைவர்க்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  22. ரமணிப்பாட்டியின் உணர்வுகளும், திடீர் முடிவும் கண் கலங்க வைத்தன. பாட்டியைப்பார்க்க வந்த பேரன் சதீஷின் திடீர் வருகையும், பாட்டியின் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவன் நடந்து கொண்டதும், பாட்டியைப் போலவே என் மனதுக்கும் ஹிதமாக இருந்தது. அடியேன் பிறந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கதாசிரியர் திருமதி இரா. கலைச்செல்வி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். சுகமும் சோகமும் கலந்ததோர் கதையை அழகாக ஆரம்பித்து கச்சிதமாக முடித்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  23. பின்னூட்டப்பகுதியில் என்னைப்பற்றி சிலர் சிலாகித்து எழுதியிருப்பதால், இந்தப் பதிவின் இணைப்பினை வாட்ஸ்-அப் மூலம் எனக்கு அனுப்பிவைத்து உதவிய, எனது அன்பு நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு கோடானுகோடி நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை எப்போதும் மறப்பதில்லை வைகோ சார். நீங்கதான் இணையத்தை மறந்து சோஷியல் மீடியாவில் மூழ்கிட்டீங்க.

      நீக்கு
    2. அடியேனும் யாரையும், எதையும், எப்போதும் மறப்பதே இல்லை ஸ்வாமீ. நாம் நேரில் சந்தித்த நாள் : 12.11.2018 அதற்கான ஸ்வீட்டான இணைப்பு இதோ :

      https://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html

      நீக்கு
  24. பின்னூட்டப்பகுதியில் என்னைப்பற்றி சிலர் சிலாகித்து எழுதியிருப்பதால், இந்தப் பதிவின் இணைப்பினை வாட்ஸ்-அப் மூலம் எனக்கு அனுப்பிவைத்து உதவிய, எனது அன்பு நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு கோடானுகோடி நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. //வை கோ சார் எழுதிய ஒரு கதை இதே சுப்ஜெக்ட்டில்

    https://gopu1949.blogspot.com/2014/08/vgk-31.html //

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    வணக்கம். நலம். நலமறிய ஆவல். எனது சிறுகதையின் சுட்டியை இங்கு கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளதற்கு என் மனமார்த்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்றொரு நாள் என் இல்லத்திற்கு அன்புடன் வருகைதந்த எங்கள் ப்ளாக் உறவுகள் அனைவருக்கும் என் விஜாரிப்புக்களைச் சொல்லவும்.

    https://gopu1949.blogspot.com/2015/01/blog-post_30.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வைகோ ஸார்... நலமா? நெல்லை தயவில் உங்கள் தரிசனம். சுட்டி நான் தரவில்லை. எல்லாமே JKC கைங்கர்யம். அவர்தான் சனிக்கிழமைகளில் இந்தப் பகுதியின் தூண்.

      நீக்கு
    2. அப்படியா! மிகவும் சந்தோஷம். தூணாக விளங்கும் கைங்கர்ய சிகாமணி JKC Sir அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லிவிடவும். 🤠

      நீக்கு
  27. எனது படைப்பில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விமர்சனப் போட்டிக்காக வெளியான மற்றுமோர் முதியோர் இல்லக்கதைக்கான இணைப்பு:

    https://gopu1949.blogspot.com/2014/04/vgk-14.html

    நீ .... முன்னாலே போனா ..... நா ..... பின்னாலே வாரேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பாருங்க வை.கோ. சார்... ரொம்ப முதியவர்கள் கதைகளை (அதாவது எழுத்தாள முதியவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லலை. முதியோர்களைப் பற்றிய, வயதானவர்களுக்கான இல்லத்தைப் பற்றிய) படித்தாம் நமக்கு டிப்ரெஷன் வந்துவிடாதா?

      நீக்கு
    2. டிப்ரெஷன் எல்லாம் வர விடவேக்கூடாது, ஸ்வாமீ. உலகில் ஆங்காங்கே ஒவ்வொரு நொடியும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்து எத்தனை எத்தனையோ துயரச்செய்திகள் கேட்டு வருகிறோம். இருப்பினும் அவற்றை நாம் கடந்து போகவில்லையா? அதுபோலத்தான் இதுவும் ஒன்று. பலரின் அனுபவங்கள் நமக்குப் பாடமாகவும் அமையலாம் அல்லவா?

      நீக்கு
  28. மேற்படி விமர்சனப் போட்டியில் கலந்துகொண்டு, முதல் 3 பரிசுகளை வென்ற ஐவர் பற்றிய விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:-

    https://gopu1949.blogspot.com/2014/05/vgk-14-03-03-third-prize-winner.html

    https://gopu1949.blogspot.com/2014/05/vgk-14-02-03-second-prize-winners.html

    https://gopu1949.blogspot.com/2014/05/vgk-14-01-03-first-prize-winners.html

    பதிலளிநீக்கு
  29. சிறப்பு விருந்தினர் வை. கோ. சாருக்கு நன்றி. கூகிள் தான் உங்களுடைய கதையையும் சுட்டியது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  30. *2014-ம் ஆண்டு, பொங்கல் முதல் தீபாவளி வரை தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு எனது வலைத்தளத்தினில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற 'சிறுகதை விமர்சனப் போட்டி'யின், நிறைவு விழாச் செய்திகள், 10 ஆண்டுகளுக்குப்பின், இப்போது அசைபோட்டு மகிழ கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுத்துள்ளேன்:*

    https://gopu1949.blogspot.com/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    https://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html ஜீவி+வீஜீ விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-2-of-4.html
    சேஷ் விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html
    கீதா விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-4-of-4.html
    ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_6.html
    போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும்!

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_7.html
    சிறுகதை விமர்சனப் போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்பு

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_8.html
    அன்பான நெஞ்சங்களுக்கு ... நடுவர் திரு. ஜீவி அவர்களின் கடிதம்.

    https://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html
    பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

    அன்புடன் கோபு
    25/08/2024

    பதிலளிநீக்கு
  31. *2014-ம் ஆண்டு, பொங்கல் முதல் தீபாவளி வரை தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு எனது வலைத்தளத்தினில், மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற 'சிறுகதை விமர்சனப் போட்டி'யின், நிறைவு விழாச் செய்திகள், 10 ஆண்டுகளுக்குப்பின், இப்போது அசைபோட்டு மகிழ கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுத்துள்ளேன்:*

    https://gopu1949.blogspot.com/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    https://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html ஜீவி+வீஜீ விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-2-of-4.html
    சேஷ் விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html
    கீதா விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/part-4-of-4.html
    ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருது

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_6.html
    போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும்!

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_7.html
    சிறுகதை விமர்சனப் போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்பு

    https://gopu1949.blogspot.com/2014/11/blog-post_8.html
    அன்பான நெஞ்சங்களுக்கு ... நடுவர் திரு. ஜீவி அவர்களின் கடிதம்.

    https://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html
    பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

    அன்புடன் கோபு



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நினைவுகளை மீட்டுத் தந்தமைக்கு நன்றி வை.கோ. சார்.

      நீக்கு
  32. சிறப்பான செய்திகள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!