மெய்யழகன் ஒரு சுவாரஸ்யமான படம். நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். இந்தக் காட்சித் துணுக்கைப் பார்த்தபோது படத்தின் இனிய காட்சிகளின் நினைவு வந்தது.
ஆனால்,
காட்சியில் வருவது போல நாம் ஒரு திருமணத்துக்குச் சென்று, மணமக்கள் மேடைக்கு வருவதற்குப் பொறுமையாகக் காத்திருந்து, வந்து அவர்கள் இப்படி போஸ் கொடுத்து, அப்படி போஸ் கொடுத்து ஆரம்ப கட்ட புகைப்படங்கள் எடுத்து முடித்ததும் ஓரளவு அந்த நேரத்திலேயே மொய் கொடுக்க இடது பக்கமாய் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விடும். அவரவர்களுக்கு அவரவர் கவலை.. நேரமாகிறதே என்று. ஆறரை மணிக்கு வரவேற்பு என்று பத்திரிகையில் போட்டிருப்பதை அப்பாவியாய், அசட்டுத்தனமாய் நம்பி ஊரின் இன்னொரு மூலையிலிருந்து வந்து சீக்கிரம் கிளம்பலாமே என்றுதவிப்புடன் அமர்ந்திருப்போரில் நானும் ஒருவன்.
மண்டபத்துக்குள் சென்ற உடன் இடது பக்க மூலையில் மேடைக்கருகில் இடம்பிடித்து அமர்ந்து விடுவேன். தகுந்த நேரம் வந்தததும் சட்டென எழுந்து மொய் / கிப்ட் கொடுக்க லைனில் நின்று விடுவேன். பாஸ் இதை விமர்சிப்பார். ஆனால் லேட்டானால் மட்டும் முகம் கோணுவார்!
சில இடங்களில் 'அட.. பொழுது போகிறதே.. சாப்பிட்டு விட்டு வந்து விட்டால், கிப்ட் கொடுத்து விட்டு தாம்பூலத்துடன் அப்படியே தாவி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்தால் டின்னர் கூடத்தில், மணமக்கள் மேடைக்கு வந்ததும்தான் சாப்பாடு ஆரம்பிக்கும் என்று ஆட்டிடியூட் காட்டுவார்கள் கொள்கை வீரர்கள். ஆனால் நல்லவேளை, பெரும்பாலும் இப்போதெல்லாம் அப்படி இல்லை.
வரவேற்பு என்பது பலநாட்கள், மாதங்கள், வருடங்கள் பார்க்காத உறவுகளை சந்தித்து உரையாடி மகிழும் இடம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள் மணமக்கள். அவர்கள்தான் அந்த DJ எனப்படும் பயங்கரத்தை வைப்பவர்கள். ஆக, அவ்வளவு நாட்கள் பார்த்தும் உறவுகளிடம் நிம்மதியாய் சந்தோஷமாய் குசலம் விசாரிக்க முடியாது. பேசி மகிழ முடியாது. நெஞ்சு அதிரும். என் மகன்கள் திருமணத்திலும் என் மறுப்பை மீறி DJ வைத்தார்கள். என்ன, என் வேண்டுகோளுக்கிணங்கி கொஞ்சம் - கொஞ்சம்தான் - சத்தத்தைக் குறைத்தார்கள்.
இந்த வெறுப்பிலேயே அதிருப்தியுடன், எப்போதடா இந்த சத்தத்திலிருந்து தப்பிப்போம் என்கிற மனஉணர்வுடன் வேகமாக மொய் கியூவில் இடம் பிடிப்போம்.
அந்த நேரத்தில் நம் முன்னால் வரிசையில் நகர்பவர்கள் மணமக்கள் ஒத்துழைப்புடன் இப்படி அரவிந்தசாமி மாதிரி மாதிரி லேட் செய்தால்... கடுப்புதான் வரும்!
சிலர் விழுந்து விழுந்து கைகுலுக்குவார்கள். குசலம் விசாரிப்பார்கள். தாங்கள் அவர்களுக்கு மிக நெருங்கியவர்கள் என்று காட்டிக் கொள்ள முனைவார்கள். செல்பியாக எடுத்துத் தள்ளுவார்கள். பின்னால் கால் மாற்றிக் காத்திருக்கும் நமக்கு பொறுமை போகும். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
சில அநாகரீகங்கள் சட்டென நம் பின்னாலிருந்து நம்மைத் தாண்டி முன்னேறி கிப்ட் கொடுக்கச் சென்று விடுவார்கள். "ஸாரி.. கொஞ்சம் அவசரமா போகணும்.." நாங்கள் மட்டும் என்ன அங்கேயே பாய் விரித்து படுக்கவா போகிறோம்?
நம் முறை வந்து விட்டது என்று நினைக்கும்போது மணமகனின் / மணமகளின் உறவு ஏதாவது ஒன்று வந்து அவர்களுடன் முக்கியமாக இஸ்ரேல் - இரான் போல பேச்சு வார்த்தை நடத்தும். காத்திருக்கும் அந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதாவது இது போதாதென்று ராங் ஸைடில் அதாவது வலது பக்கத்திலிருந்து சில VVIP க்கள் - அப்படி தங்களை நினைத்துக் கொண்டு - விரைந்து வந்து மணமக்கள் கைகுலுக்கி கிப்ட் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து பொறுமையை சோதிப்பார்கள். அங்கிருந்து அடுத்த ஒருவரும் விரைந்து வந்து நின்று கொள்வார். காத்திருப்பார். எரிச்சல் வரும்.
இந்தக் காட்சித் துணுக்கைப் பார்த்ததும் எழுதத் தோன்றியது. எழுதி விட்டேன்!
===============================================================================================
கர்ணனின் முடிவு... இதற்குள் சல்யன் கர்ணனிடம் "அஸ்திரத்தை அர்ஜுனனின் கழுத்துக்கு குறி வைத்து எய். தலையைக் குறி வைக்க வேண்டாம்" என்று யோசனை கூறினான். ஆனால் கர்ணன், "ஒரு தடவை வைத்து குறியை கர்ணன் மாற்ற மாட்டான்" என்று கூறி அந்த நாகாஸ்திரத்தை எய்தான். (விதிதான் அவனுக்கு அந்த அகம்பாவத்தைக் கொடுத்திருக்க வேண்டும்)
அஸ்திரம் தீயைப்போல் ஜொலித்துக்கொண்டு வருவதைக் கண்ணபிரான் பார்த்தார். தேரை அழுத்தி ஐந்து அங்குலம் தரையிலழுத்தும்படி செய்தார். அஸ்திரம் அர்ஜுனனின் ரத்தினம் இழைத்த கிரீடத்தை எடுத்துச் சென்றது. அவனது தலை தப்பியதும் ஆகாயத்தில் அனைவரும் கண்ணபிரானின் திறமையைக் கொண்டாடினார்கள்.
உடனே அர்ஜுனன் வெல்
மீண்டும் கர்ணனும் அர்ஜுனனும் போரிட்டார்கள். பெரிய பெரிய அஸ்திரங்களை ஏவிக் கொண்டார்கள். இதற்கிடையே கர்ணனுடைய
அப்போது கண்ணபிரான் கர்ணனைப் பார்த்து, அவன் பாண்டவருக்குச் செய்த தீங்குகளை ஒவ்வொன்றாகக் கூறினார்.: " நீ இப்போது தர்மம் பேசுகிறாயே! அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று?" என்றார். கர்ணன் வெட்கித் தலைகுனிந்தான். பிறகு கர்ணனும் அர்ஜுனனும் பிரம்மாஸ்திரம் முதலிய அஸ்திரங்களை ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டார்கள்.
நெருப்பு போல ஒளிரும் ஒரு கொடிய அஸ்திரத்தைக் கர்ணன் அர்ஜுனன் மேல் ஏவினான். அது அர்ஜுனனுடைய மார்பைத் தாக்கியயது. தலை சுழன்று காண்டீபத்தை அவன் நழுவ விட்டான். அந்தச் சமயம் பார்த்துக் கர்ணன் தன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கிவிட முயன்றான். அதற்குள் அர்ஜுனனுக்கு நினைவு வந்து விட்டது. கர்ணன் தன் தேரில் ஏறுவதற்கு முன் அவனைக் கொ
[ தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் வி எச். சுப்பிரமணிய சாஸ்திரி. ஆனால் எதிலிருந்து என்று தெரியவில்லை! மஞ்சரி 1963.]
"உன் பொண்டாட்டியே உன்னை செருப்பாலேயே அடிச்சாச்சு..."
#வைரமுத்து வைப் பிரிந்து வாழும் #கவிஞர் பொன்மணி_வைரமுத்துவின்
பதிவு ....
" வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம்.
அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.
அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!
அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.
ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.
கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.
அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்....
மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு
இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!
மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!
ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!
ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!
இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
அவரைக் கண்டதும் கண்பருக்கு சிரிப்பு வந்துவிட்டது. "என்ன ஷா, உங்களை யாராவது வெளிநாட்டுக்காரர்கள் கண்டால் இங்கிலாந்து தேசம் பஞ்சத்திலடிப்பட்ட தேசம் என்று நினைத்துக்கொள்வார்கள்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
இதற்கு ஷா, "உங்களைக் கண்டதும் அந்தப் பஞ்சத்துக்கு யார் காரணம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள் " என்று ஒரு போடு போட,
நண்பர் அசந்துவிட்டார்.
நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச் சுவையும் கலந்தி ருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால், இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரண மாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப் படவில்லை. நான் சென்று அவர் எதிரே உட்கார்ந்ததும், "அவிநாசி, நீயும் இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டார். அதைக் கேட்ட தும் திடுக்கிட்டேன். நான் என்ன தவறு செய்தேனென்று எனக்குப் புரியவில்லை. அவருடைய கடுமையான தோற்றம் என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது.
அதற்கு அவர், "அன்று நாடகத்திற்கு என்னிடம் ரூ. 1500-க்குச் செக் கொடுத்தாய் அல்லவா?" என்று கேட்டார்.
நான், "ஆம்" என்றேன்.
அதற்கு அவர், "பாங்கில் கொடுக்கப்பட்டவுடனே செலாவணியாகவில்லை என்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
அதைச் சொன்னவுடனே எனக்கு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியார் மகாத்மா காந்தியடிகள்பால் பக்தி கொண்டவர்கள். நாடகத்திற்கு மகாத்மாஜியை அழைத்துவர வேண்டுமென்று அவர்கள் விரும்பியிருந்தார்கள்.
மகாத்மாஜிக்கு அவர்கள் சார்பில் நான் முன்னமே வாக்களித் திருந்தேன். எனவே, எப்படியும் மகாத்மாஜிக்கு ரூ. 1500 கொடுக்க வேண்டியிருந்தது. வசூலாகும் பொதுப் பணங்களை என் கையில் நான் வைத்துக்கொள்ளும் பழக்கம் கிடையாது பாங்கில் அந்த அந்தக் கணக்கில் அவ்வப்போது போட்டுவிடுவதுதான் வழக்கம்.
மகாத்மாஜி சொன்னார்: "மகத்தான தவறு ஒன்றும் நடக்க ஆனால், பொதுப் பணம் எதையும் ஒரு தனிப்பட்ட கணக்கில் போடக்கூடாது என்று உனக்குத் தெரியா தா? உன்னைப் போன்ற ஊழியர்கள் இதுமாதிரி விஷயங்களில் சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுடன் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ் விஷயத்தில் தவறு ஒன்றும் நேரவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அத்துடன் நீயே ரூ.500 அதிகமாகக் கொடுத்திருக்கிறாய் என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீ செய்திருக்கும் தவறுகள் இரண்டு. ஒன்று, பொதுப்பணத்தைச் சில தினங்களுக்கான போதிலும், தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி, அதில் போட்டிருக்கவேண் டும். இரண்டாவது, உன் கணக்கில் பணம் இல்லாமல் இருக்கும் போது அதில் இருப்பதற்கு அதிகமாக நீ செக் கொடுக்கவே கூடாது. உனக்கு ரூ. 500 பெரிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நாம் செய்கிற காரியம் ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். பொது ஊழியர்கள் எந்த விதமான குறைகளுக்கும் ஆளாகக்கூடாது என்பது பற்றியே நான் இவ்வளவு கடுமையாக இதை எடுத்துரைத்தேன்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
-கலைமகள் பொன்விழா மலர் - ஆகஸ்ட், 1949.
===========================================================================================
அஸ்திரம் தீயைப்போல் ஜொலித்துக்கொண்டு வருவதைக் கண்ணபிரான் பார்த்தார். தேரை அழுத்தி ஐந்து அங்குலம் தரையிலழுத்தும்படி செய்தார். அஸ்திரம் அர்ஜுனனின் ரத்தினம் இழைத்த கிரீடத்தை எடுத்துச் சென்றது. அவனது தலை தப்பியதும் ஆகாயத்தில் அனைவரும் கண்ணபிரானின் திறமையைக் கொண்டாடினார்கள்.
உடனே அர்ஜுனன் வெல்
வெட் துணியைக் கொண்டு தலைமயிரைச் சேர்த்து அடக்கித் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு போருக்குத் தயாரானான். அசுவசேனன் அர்ஜுனனின் கிரீடத்தை எடுத்துக்கொண்டு மேலே கிளம்புவதைக் கண்ணபிரான் அர்ஜுனனுக்கு காட்டினார். "உன்னைக் கொல்ல வந்த தட்சகன் மகனைக் கொன்று விடு" என்று உத்தரவிட்டார். உடனே அர்ஜுனன் திரும்பவும் ஆறு பாணங்களைத் தொடுத்து அந்தப் பாம்பைத் துண்டித்து விட்டான்.
மீண்டும் கர்ணனும் அர்ஜுனனும் போரிட்டார்கள். பெரிய பெரிய அஸ்திரங்களை ஏவிக் கொண்டார்கள். இதற்கிடையே கர்ணனுடைய
தே
ரின் இடது சக்கரம் தரையில் அழுந்தியது. கர்ணன் சட்டென்று கீழே குதித்து அதைத் தூக்கி நிறுத்திச் சரிப்படுத்த முன்வந்தான். அப்போது, "அர்ஜுனா, நீ சிறந்த வீரன். அதர்மமான
காரியம் செய்ய மாட்டாய். நீ தேரில் இருக்கிறாய். நான் தரையில் இருக்கிறேன். என்மேல் பா
ணம் தொடுப்பது முறையல்ல. இந்தச் சக்கரத்தைத் தூக்கி விடும்
வரையில் பொறுத்திரு" என்றான்.அப்போது கண்ணபிரான் கர்ணனைப் பார்த்து, அவன் பாண்டவருக்குச் செய்த தீங்குகளை ஒவ்வொன்றாகக் கூறினார்.: " நீ இப்போது தர்மம் பேசுகிறாயே! அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று?" என்றார். கர்ணன் வெட்கித் தலைகுனிந்தான். பிறகு கர்ணனும் அர்ஜுனனும் பிரம்மாஸ்திரம் முதலிய அஸ்திரங்களை ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டார்கள்.
நெருப்பு போல ஒளிரும் ஒரு கொடிய அஸ்திரத்தைக் கர்ணன் அர்ஜுனன் மேல் ஏவினான். அது அர்ஜுனனுடைய மார்பைத் தாக்கியயது. தலை சுழன்று காண்டீபத்தை அவன் நழுவ விட்டான். அந்தச் சமயம் பார்த்துக் கர்ணன் தன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கிவிட முயன்றான். அதற்குள் அர்ஜுனனுக்கு நினைவு வந்து விட்டது. கர்ணன் தன் தேரில் ஏறுவதற்கு முன் அவனைக் கொ
ல்லு
வதற்கு உத்திரவிட்டார் பகவான். அர்ஜுனனும் அப்படியே சிறந்த அஸ்திரத்தை எடுத்து, "நான் தவம் செய்திருந்தால், பெரியோர்களைத் திருப்தி செய்திருந்தால், யாகம் முதலியவற்றைச் செய்திருந்தால் இந்த அஸ்திரம் பகைவனைக் கொல்லட்டும்" என்று கூறி அதைக்
கர்ணனின் மேல் தொடுத்தான். கர்ணனின் தலை அறுபட்டது. அவன் கீழே விழுந்தான். அனைவரும் "ஹா! ஹா!" என்று கூவினார்
.[ தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் வி எச். சுப்பிரமணிய சாஸ்திரி. ஆனால் எதிலிருந்து என்று தெரியவில்லை! மஞ்சரி 1963.]
===========================================================================================
ஃபேஸ்புக்கிலிருந்து .... இன்றைய கவிதைப் பக்கமும் இதுவேயாய்...
#வைரமுத்து வைப் பிரிந்து வாழும் #கவிஞர் பொன்மணி_வைரமுத்துவின்
பதிவு ....
" வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம்.
அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.
அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!
அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.
ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.
கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.
அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்....
மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு
இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!
மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!
ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!
ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!
இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
===========================================================================================
==========================================================================================
படித்தது... ரசித்தது.. பகிர்வது..
மகள்களுக்கு வேண்டாம் என அம்மாக்கள் தடுக்கும் பெரும்பாலான விஷயங்களில், அதைச் செய்ய முடியாத அவர்களின் இளமைக்கால ஏக்கம் மறைந்திருப்பதைக் காண் முடியும். மிக நுட்பமாகக் கவனித்தால் இரு தலைமுறைப் பெண்களுக்கு இடையேயான பொறாமை உணர்வுகூட அதில் இருக்கும். அம்மாக்களைத் தாண்டி னடி மகள்கள் வ வளரத் தொடங்கும் காலங்களில், அம்மாக்களின் எரிச்சல் வளாததுதாடங் குறு ஏஜ் வயதில், தான் நினைத்த எல்லாவற்றையும், தன்னால் செய்ய முடியாத எல்லாவற்றையும் மகள் செய்வதை அவர்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளவே முடிவது இல்லை. நம் சமூகத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எப்போதும் ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் அதில் அவர்கள் பங்கேற்க முடிவது இல்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே கைத்தட்ட முடிகிறது.
80-5 எல்லாக் காலத்து நபர்களையும்விட பிறந்தவர்களுக்குச் சொல்வதற்கு நிறையக் கதைகள் உள்ளன. சினிமா, டி.வி., இளையராஜா இசை... என ஆரம்பித்து இந்தப் பட்டியல் நீளும். நம்மைவிட 10 ஆண்டுகள் பின்னால் பிறந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்தின் பிள்ளைகளாகிப் போய்விட, நாம்தான் ஓர் அழிவின் இறுதியிலும், ஒரு புது வரவின் தொடக்கத்திலும் நின்று கொஞ்சம் தடுமாறினோம்.
ஒவ்வொண்ணுக்கும் நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா?' என விடாது பேசிக்கொண்டே இருக்கிறோம். சைக்கிள் வாங்க, சினிமா சினிமா செல்ல, புத்தகம் வாங்க, வாங்க, நூலகம் செல்ல, தோழியைப் பார்க்க... க... என மிக அடிப்படையான விஷயங்களுக்காகத்தான், வருடங்களாக நாம் சார்ந்த நபர்களோடு போராடிக் கொண்டிருந்தோம்.
இந்தப் பிரச்னை நம் இளையவர்களுக்கு இல்லை. நாம் சந்தித்த பிரச்னைகளை அதே வயதில் அவர்கள் சுலபமாகக் கடந்து செல்கிறார்கள். இன்றைக்கு அவர்களுக்கு காதல், ஒரு பொருட்டே அல்ல. நாம் அந்தக் காதல் என்ற ஒற்றை உணர்வுக்காக மட்டும் எவ்வளவு காலங்களைச் செலவிட்டோம்.
எங்களுடைய டீன்-ஏஜ் வயதுகளில் பேச்சின் பெரும் சினிமா பகுதியைக் காதல்தான் பிடித்துக் கொள்ளும். ஹீரோக்களை நினைத்தே எங்கள் தூக்கத்தையும் படிப்பையும் தொலைத்திருக்கிறோம். 'குஷி' படம் பார்த்துவிட்டு, 'கல்யாணம் பண்ணா விஜய்யைக் கல் கல்யாணம் பண்ண்ணும். இல்லைன்னா காளிகேசம் மலையில் இருந்து குதிக்கணும்' என்று சொன்ன ரேகா, நிஜமாகவே விஜய்யைக் காதலிக்கத் தொடங்கியிருந்தாள். அல்லது அவ்வாறு நம்பத் தொடங்கியிருந்தாள். படிப்பை அப்படியே கோட்டைவிட்டாள்.
காண அன்பான தருணம் ஒன்றில் தலைகோதிவிட்ட ஒரே காரணத்துக்காக. நான் எங்கள் புரொஃபசரைக் காதலிக்க ஆரம்பித்தேன். அவர் பாடம் எடுக்கும் நேரங்களில் அவ்ரோடு சினிமாத்தனமாக பைக்கில் சுற்றுவதாகக் கனவு ஆரம்பித்தேன். அதை அவரிடமே சொல்ல. என் நேசத்தைப் புரிந்துகொண்டு அது சாதாரண விஷயம் எனப் புரியவைக்கும் தெளிவு அவருக்கு இருந்ததால் நான் தப்பித்தேன்.
நாங்கள் இப்படித்தான் இருந்தோம். எங்களுக்கு, நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கவே இல்லை. நாங்கள் லாவற்றையும் குழப்பிக் கொண்டோம். பேசும் ஆண்களை எல்லாம் நேசித்தோம். எது காதல், எது நட்பு, எது எது சரி, எது தவறு எதிலும் தெளிவு இல்லை. ஆண்கள் அருகி அருகில் வந்தாலே சிலிர்த்துக் கொண்டோம். 'நாம் காதலிக்கலாமா?' எனக் கேட்டால், அந்த நொடியே தலையை ஆட்டினோம். வீட்டின் அடக்குமுறைகள், அதை எப்போதும் மீற நினைக்கும் மனம், தனக்கு என்ன வேண்டும் எனத் தெளிவு இல்லாத மனது... இவற்றில் இருந்து வெளியே வருவதற்கே எவ்வளவு வருடங்கள் ஆனது. அதற்குள் மீட்க முடியாத பலதை நாங்கள் இழந்திருந்தோம்.
ப்ரியா தம்பி - 'பேசாத பேச்செல்லாம்' தொடரில் - ஆனந்த விகடன்
===========================================================================================
நெல்லை கண்ணன் பக்கம் : ஜனனம் - மரணம் கண்ணதாசன்
===============================================================================================
ஒருநாள் நண்பரொருவர் நாடக மேதையான பெர்னாட்ஷாவைக் காண வந்தார் வந்தவர் தடித்துக் கொழுத்து தக்காளிப்பழம் போல் இருந்தார். பெர்னாட்ஷாவோ ஈறுக்குச்சி போல ஒல்லியாக இருப்பவர்,
இதற்கு ஷா, "உங்களைக் கண்டதும் அந்தப் பஞ்சத்துக்கு யார் காரணம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள் " என்று ஒரு போடு போட,
நண்பர் அசந்துவிட்டார்.
1963 தாமரை இதழிலிருந்து...
=========================================================================================
மகாத்மாஜியின் கோபம்
தி. சு. அவிநாசிலிங்கம்
மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச் சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேண்டிய கார்களுடன் சென்றிருந்தேன். நான் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்தில் காந்தியடிகள் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்ததும் நேராகத் தம அறைக்குச் சென்றார். குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரணமாக அவர் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் மற்றவர்களைப் பார்ப்பது வழக்கம். அவர் வந்தவுடனே நான் வந்து காத்துக் கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி போயிற்று. அதைக் கேட்டதும், "உடனே அவிநாசியைக் கூப்பிடு" என்று சொல்லியனுப்பினார்.
நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச் சுவையும் கலந்தி ருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால், இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரண மாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப் படவில்லை. நான் சென்று அவர் எதிரே உட்கார்ந்ததும், "அவிநாசி, நீயும் இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டார். அதைக் கேட்ட தும் திடுக்கிட்டேன். நான் என்ன தவறு செய்தேனென்று எனக்குப் புரியவில்லை. அவருடைய கடுமையான தோற்றம் என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது.
பயபக்தியுடன், "நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லையே” என்று சொன்னேன்.
அதற்கு அவர், "அன்று நாடகத்திற்கு என்னிடம் ரூ. 1500-க்குச் செக் கொடுத்தாய் அல்லவா?" என்று கேட்டார்.
நான், "ஆம்" என்றேன்.
அதற்கு அவர், "பாங்கில் கொடுக்கப்பட்டவுடனே செலாவணியாகவில்லை என்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
அதைச் சொன்னவுடனே எனக்கு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியார் மகாத்மா காந்தியடிகள்பால் பக்தி கொண்டவர்கள். நாடகத்திற்கு மகாத்மாஜியை அழைத்துவர வேண்டுமென்று அவர்கள் விரும்பியிருந்தார்கள்.
அப்படி வருவதானால் ஹரிஜன நிதிக்கு ரூ.1500 கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ரூ.1500-க்கு அதிகமாகவே அன்று நாடகத் திற்கு வசூலாகுமென்று அவாகள் எதிர்பார்த்திருந்தாரகள. ஆனால், பொதுக்கூட்டம் நடந்த அன்றிரவே நாடகம் நடந்தபடியால், லட்சக்கணக்கான பேர்கள் கூடியிருந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் இருந்தமக்கள் தங்கள் வீடு செல்லவே இரவு ஒன்பது அல்லது பத்து மணி ஆகியிருக்க வேண்டும். ஆகையால் நாடகக் கம்பெனியார் எதிர்பார்த்திருந்தபடி அதிகமான பேர் நாடகத்திற்கு வரவில்லை. எனவே, அவர்கள் எதிர்பார்த்த வசூலும் ஆகவில்லை. சுமார் ரூ. 1000 தான் வந்தது. அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து, "தயவு செய்து தாங்கள் மீதத்தையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்கள். பின்னால் வசதி வரும்போது அதைத் திருப்பிக் கொடுக்க முயலுகிறோம்” என்று உரைத்தார்கள்.
மகாத்மாஜிக்கு அளிக்க இருக்கும் ஹரிஜன நிதி தாற்காலிகமாக ஏற்பட்டதாகையால் பாங்கில் அதற்குக் கணக்கு வைக்கவில்லை. வந்த செக்குகளை வசூல் செய்து அனுப்ப மகாத்மாஜி அவைகளை ஒரு நண்பரிடம் கொடுத்திருக்கிறார். அச் சமயம் கோவை ஜில்லா அர்பன் பாங்கில் என் பெயரில் ஒரு கணக்கு இருந்தது. ஆதலால் அந்தக் கணக்கில் காந்தி நிதிக்கு வசூலாகும் பணம் அத்தனையும் போடப்பட்டிருந்தது. அவர்கள் கொடுத்த ஆயிர ரூபாயையும் உடனே பாங்குக்கு அனுப்பிவிட்டேன். அவர்களுக்காகக் கொடுக்க வேண்டிய தொகைக்காக என் சகோதாரிடம் சொல்லி ரூ. 500-ஐ உடனே பாங்கில் சுட்டும்படி சொல்லிவிட்டு, ரூ. 1500-க்கு ஒரு செக் எழுதி மகாத்மாஜியிடம் கொடுத்துவிட்டு, ஊரை விட்டு அவருடன் சுற்றுப் பிரயாணம் செய்யக் கிளம்பிவிட்டேன்.
செக்கைக் காலையில் சுமார் 11 மணிக்குப் பாங்குக்குக் கொண்டு போயிருக்கிறார். கணக்கில் போதுமான பணம் இல்லாதபடியால் ஒரு மணி நேரம் கழித்து வரும்படி பாங்குக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் முன்னமேயே சொல்லியிருந்தபடி என்னுடைய சகோதரர் அந்த நேரத்திற்குள் அந்தப் பணத்தைக் கணக்கில் கட்டியிருக்கிறார். செக்குக்குப் பணமும் பெற்றுச் சென்றார்கள்.
செக்கைக் கொண்டு போனதும், பாங்குக்காரர்கள் ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னதையும், பிறகு சென்று பணம் பெற்று வந்ததையும் அந்த நண்பர் மகாத்மா ஜிக்குத் தெரிவித்திருக்கிறார். இதுதான் விஷயம். இவ் விஷயங் களையெல்லாம் மகாத்மாஜிக்கு எடுத்துரைத்தேன்.
மகாத்மாஜி சொன்னார்: "மகத்தான தவறு ஒன்றும் நடக்க ஆனால், பொதுப் பணம் எதையும் ஒரு தனிப்பட்ட கணக்கில் போடக்கூடாது என்று உனக்குத் தெரியா தா? உன்னைப் போன்ற ஊழியர்கள் இதுமாதிரி விஷயங்களில் சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுடன் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ் விஷயத்தில் தவறு ஒன்றும் நேரவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அத்துடன் நீயே ரூ.500 அதிகமாகக் கொடுத்திருக்கிறாய் என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீ செய்திருக்கும் தவறுகள் இரண்டு. ஒன்று, பொதுப்பணத்தைச் சில தினங்களுக்கான போதிலும், தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி, அதில் போட்டிருக்கவேண் டும். இரண்டாவது, உன் கணக்கில் பணம் இல்லாமல் இருக்கும் போது அதில் இருப்பதற்கு அதிகமாக நீ செக் கொடுக்கவே கூடாது. உனக்கு ரூ. 500 பெரிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நாம் செய்கிற காரியம் ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். பொது ஊழியர்கள் எந்த விதமான குறைகளுக்கும் ஆளாகக்கூடாது என்பது பற்றியே நான் இவ்வளவு கடுமையாக இதை எடுத்துரைத்தேன்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
அன்று அவர் சொன்ன மொழிகள் இன்னும் என் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருக்கின்றன. சிறு விஷயங்களிலுங் கூடப் பெரியவர்கள் எவ்வளவு கவனமாகக் கவனிக்கிறார்கள் என்பது என்க்கு ஆச்சரியமாயிருந்தது. மகாத்மாஜிக்குச் செல்லாக வேண்டிய பணம் முன்னமேயே வந்துவிட்டது.
எனவே, இதைப் பற்றி அவர் கவனியாமல் இருந்திருக்கலாம். ஆனால், என்னுடைய நன்மையை உத்தேசித்து அவர் இதை ஞாபகத்தில் வைத்து என்னிடம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் சொன்ன அந்த யோசனையை நான் மிகவும் போற்றி வந்திருக்கிறேன். அந்த யோசனை, இன்னும் மற்றப் பல விஷயங்களிலும் மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ள எனக்கு ஏதுவாயிற்று. எதிர்கால வாழ்க்கையிலேயே அவருடைய அந்த வார்த்தை எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. என்
உணவும் ஓய்வும் முடித்துக்கொண்டு கரூரிலிருந்து புறப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்தோம்.
உணவும் ஓய்வும் முடித்துக்கொண்டு கரூரிலிருந்து புறப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்தோம்.
ஈரோட்டிலும் தமிழ் நாட்டின் மற்றப் பகுதிகளைப்போல் பதினாயிரக் கணக்கான மக்கள் கூடி மகாத்மா ஜியை வரவேற்றார்கள். அங்கிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குச் சென்றோம். அங்கு ராஜாஜி அவர் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். மகாத்மாஜியைத் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சேர்த்ததுடன் நான் அவருடன் சென்ற அப்போதைய பிரயாணம் முடிவாயிற்று. அவரிடம் விடை பெற்று, ஊர் திரும்பினேன்.
-கலைமகள் பொன்விழா மலர் - ஆகஸ்ட், 1949.
=========================================================================================
பாஹே பக்கம்
எங்கள் கோலிகுண்டு விளையாட்டில் இதற்கு மதிப்பு 300. சார்மினார் 100. சிஸர்ஸ் 200.
==============================================================================================
குரலில் எந்த வகையான மாறுதலும் செய்து பாடும் திறமை பெற்ற ஜானகி அம்மாதான் SPB திரையில் பாட முழுமுதல் காரணம்.
பொய்ச்சிரிப்பு, அழுகை எல்லாம்தான் சாத்தியம். ஒருவர் அழும்போது பாடமுடியாது என்பார் ஜானகி. மம்மி பேரு மாறு என்று ஆண்குரலில் நெஞ்சத்தைக் கிள்ளாதேயில், கண்ணா நீயெங்கே என்று குழந்தைக்கு குரலில் என்று வித்யாசமாக பாடியவர்.
40,000 பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் பாடி, 2017 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தவர்.
1963 ல் வெளியான 'கொஞ்சும் சலங்கை' படம்தான் திரையுலக வரலாற்றில் முழுப்படமும் டெக்னிக்கலரில் வெளியான ஒரே படமாம். ரொம்ப சுவாரஸ்யமான படம். இதைப் படத்தில் இடம்பெற்ற S. ஜானகி பாடலை அறியாதோர் யாரும் இருக்க முடியாது. இன்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் சாதனைப் பாடலாக பாடப்படுகிறது "சிங்காரவேலனே தேவா"
இந்தப் பாடல்தான் ஜானகி அம்மாவை எங்கோ உயரத்தில் கொண்டு நிறுத்தியது. அப்புறமும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழில் பயாடிக் கொண்டிருந்தவரை இளையராஜாவின் வருகை மாற்றியது. அவர் இசையில் தொடர்ந்து பலப்பல பாடல்கள்.
கொஞ்சும் சலங்கை படம் பிரம்மாண்ட தயாரிப்பு. ஜெமினி சாவித்ரி, குமாரி கமலா, மனோகர், ராம்தாஸ், ஏ\போன்றோர் நடித்த படம். இதை இப்போது பற்பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் பார்க்கும் ஆவல் வந்திருக்கிறது. அரக்குமாளிகை எல்லாம் வரும் என்று நினைக்கிறேன். சாவித்ரி படத்தில் இருந்தாலும் ஜெமினி அவரை விரும்ப / மணக்க மாட்டார்.
ஆபேரி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜானகி அம்மா பம்பாயில் பாட, அங்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடலில் வரும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் இரண்டும் சேர்க்கப்பட்டதாம்.
இந்தப் படத்தில் டூயட் பாடலே கிடையாது என்பது ஒரு குறிப்பு. கொஞ்சும் சலங்கையின் ஒலிகேட்டு பாடலை பி சுசீலா ஒரு முறையும், பி லீலா ஒருமுறையும் பாடி இருக்கிறார்கள்.
இன்றைய பாடலை எழுதியவர் கு மா பாலசுப்ரமணியம், இசை எஸ் எம் சுப்பையா நாயுடு.





கர்ணன் பிரம்மாஸ்திரத்தை அர்ஜுன்ன் மீது பிரயோகம் செய்தானா? ஆ
பதிலளிநீக்குபிரம்மாஸ்திரம் அல்ல. ப்ரமமோஸ்
நீக்குவாங்க நெல்லை.. பிரம்மாஸ்தரம் எய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். குந்தி தான் வரம் வாங்கி விட்டாளே..
நீக்குஅது நாகாஸ்திரம் ஶ்ரீராம். மந்திரம் மறந்துபோகும் சாபம்.
நீக்குகர்ணன் பிரம்மாஸ்திரப் ப்ரயோகம் செய்ததாகத் தான் சொல்லப்படுகிறது. ஆனால் அது எதிர்பார்த்த பலனைக் கர்ணனுக்கு அளிக்கவில்லை. ஏனெனில் பரசுராமரின் சாபம் காரணமாக பிரம்மாஸ்திரம் கர்ணனைக் கைவிடுகிறது.
நீக்குஆமாம், இல.லே...!
நீக்குரிசப்ஷன் மாத்திரமல்ல, எந்த ஃபங்ஷனிலும் கிஃப்ட் கவர் கொடுப்பதைப் போன்ற கடியான வேலை வேறு கிடையாது.
பதிலளிநீக்குபேசாமல் எடுத்துக்கொண்டு போயிடலாமா என்று தோன்றும்.
நீங்கள் எழுதியிருப்பது அனைவரின் அனுபவமாகத்தான் இருக்கும். ஃபங்ஷன் முடிந்து, போய்ட்டு வரேன் என்று சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தால், அப்போதும் பல மகானுபாவர்கள் உலக விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அடுத்தவங்களும் சொல்லிக்கக் காத்துக்கொண்டிருப்பார்களே எனத் தெரியாத ஜென்மங்கள். .
/கிஃப்ட் கவர் கொடுப்பதைப் போன்ற கடினமான வேலை வேறு கிடையாது./
நீக்கு100 சதம் ஆமோதிக்கிறேன். எவ்வளவோ விஷயத்தில் அமெரிக்காவைக் காப்பியடிக்கிறோம் (உதாரணம்--- வேலண்டைன் கார்ட், அன்னையர்/தந்தையர் தின கார்ட்). இந்த மொய் விஷயத்திலும் காப்பி அடிக்கலாமே. அங்கு மணமக்கள் "கிஃப்ட் ரெஜிஸ்ட்ரி" என்று ஆன்லைன் ஷாப்பிங்க் சைட்டில் அவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஒரு லிஸ்ட் தயாரித்து விடுகிறார்கள். நாம் போய், நம் பட்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி ஒரு அயிட்டத்தை செலக்ட் பண்ணிப் பணம் கட்டி விட்டால், அந்தப் பொருள் மணமக்களின் அட்ரஸுக்குப் போய் சேர்ந்து விடும். மொய் கொடுக்க லைனில் நிற்க வேண்டாம். நாம் கொடுக்கும் கிஃப்ட் அவர்களுக்கு உபயோகமாய் இருக்குமா என்ற சந்தேகமும் வேண்டாம்.
@நெல்லை...... சமயங்களில் போட்டோவும் வேண்டாம் போஸும் வேண்டாம் என்று மணமக்களின் பெற்றோரிடம் கவரைக் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறேன்!
நீக்குவாங்க சூர்யா.. நீங்கள் சொல்லியிருக்கும் அமெரிக்கன் மெத்தட் மிகவும் அருமையாக இருக்கிறது. இங்கு யாராவது ஒருவர் தொடங்கி விட்டால் போதும்... அடுத்தடுத்து அது தீயாய் பற்றி கொண்டு பரவி விடும்.
நீக்குஇங்கேயும் இருக்கு. என் அண்ணா பெண், தம்பி பிள்ளைகள் கல்யாணத்தில் எல்லாம் அவங்க கல்யாணத்துக்கு முன்னரே குடித்தனத்துக்கு வீடு பார்த்துப் பால் காய்ச்சியதால் அப்போவே பரிசுப் பொருட்களைக் கொடுப்பவர்களிடம் இன்ன இன்ன பொருள் வேண்டும் எனச் சொல்லி முடிஞ்சவங்க அதை வாங்கிக் கொடுத்தாங்க. அண்ணா பெண் கல்யாணத்தில் ஞாநியின் 2 பையர்களுமாகச் சேர்ந்து ஏசி வாங்கிக் கொடுத்ததை மறக்க முடியாது. :))) ஞாநியும் அவர் பங்குக்கு ஏதோ கொடுத்திருந்தார். என்னனு நினைவில் இல்லை.
நீக்குசூர்யா சார்... இந்த மாதிரி இன்டஸ்ட்ரிலயும் அனுபவம் உண்டு, நான் குழுமத்தின் கணிணி தலைவராக இருந்ததால். இப்படி லிஸ்ட் இந்த ஷாப்பில் போட்டிருக்எஓம்னு சொன்னா வேக வேகமாய்ப் போய், சிறிய அளவு விலையுள்ள பொருட்களை முதலில் புக் பண்ணுவார்கள்.
நீக்குபோட்டோ.... அதை மாதிரி பிக்காலித்தனம் கிடையாது என்று சமயத்தில் தோன்றும். வழுங்கு என்பது பெரும்பாலானவர்களிடம் கிடையாது. மத்தவங்க காத்திருக்காங்களேன்னு பேசிக் சிவில் சென்ஸ் கிடையாது. கூட்டமா ஒரு தடவை, தனியா ஒரு தடவை, இந்த எழவுல அவங்க மொபைல கேமராமேன்ட குடுத்து இன்னொரு முறை... இதில் கூட்டமா நிற்கும்போது போட்டோக்கார்ரை போட்டோ எடுக்கவிடாமல் பேசறது, ஏய் அவளைக் கூப்பிட்டயா, நீ இங்க வா, வாடா கோண்டு என்று எங்கோ இருக்கறவனைக் கூப்பிடுவது என்று.... அல்ப ஜந்துக்கள் அனேகம்பேரைப் பார்க்கலாம்.
நீக்குஇது ரொம்ப ஒல்ட் விஷயமாச்சே. 70, 80 களில் கல்யாணம் பண்ணிப் பார்க்க பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்போதெல்லாம் மணமக்களின் நண்பர்கள், அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கித் தந்து விடுவார்கள்.
நீக்குஆமாம், நான் வேலைக்குச் சென்றபோது என் கூட வேலை பார்த்த பெண்ணுக்கு இப்படித் தான் வெள்ளி கூஜா வாங்கிக் கொடுத்தோம். அதூவ்ம் கூஜா அவர்களிடமே இருந்தது தான். அலுவலக நண்பர் ஒருத்தர் அதைக் கடைக்கு எடுத்துச் சென்று எடை போட்டு அன்றைய விலையை எழுதி வாங்கி வந்தார். அனைவருமாகச் சேர்ந்து அந்தத் தொகை வருமாறு பணம் போட்டு ஒப்பேற்றினோம்.
நீக்குநம் மொழியில் நமக்கு உகந்ததைச் செய்யும்போது, இறுக்கும் மனதிற்கு இப்படியோரு இடைவேளை கிடைப்பது உண்மைதான்.
பதிலளிநீக்குஅனுபவித்து எழுதியிருக்கிறார்.
?????????????
நீக்குபாஹேயின் கவிதை பற்றிய விமர்சனம்.
நீக்குஆமாம்.
நீக்குகவிதை ஸ்பெஸல். இன்றைய பதிவு கவிதை ஸ்பெசல் என்று கூறலாம். பொன்மணி கவிதை, ஸ்ரீராம் (பாட்டு), பாஹே கவிதை என்று கவிதை மயம்.
பதிலளிநீக்குமொய் என்ற கடமை (சாப்பிட்ட பில் கட்டுவது) பல சமயங்களிலும் பொறுமையை சோதிக்கும். இதற்குத்தான் சில கல்யாணங்களில் மொய் வசூலிப்பவர் என்று இரண்டு பேர் (மாப்பிள்ளைக்கு ஒன்று, பெண்ணுக்கு ஒன்று என) நோட்புக், சகிதம் மேஜை நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார்கள். சில கல்யாணங்களில் QR கோடே வைத்திருப்பதும் உண்டு.
வைரமுத்து போன்றோருக்கே ஞான பீடம் பரிசு கொடுப்பார்கள். கண்ணதாசனுக்கு கிடையாது.
காதல் பற்றிய கட்டுரை ஈர்க்கவில்லை. தொடக்கம் அம்மாவின் கண்டிப்பு, பின்னர் திசை மாறி காதலுக்கு வந்து பின்னர் தற்போதைய ஜெனெரேஷன் போக்கை அலசுவதில் போகிறது. இக்கட்டுரை ஒரு அரட்டை எனவே கூற முடியும்.
மஹாத்மாவும், அவிநாசியும் இன்று இருப்பார்களானால் PMLA வில் ED கைது செய்திருக்கும்.
பெரியார் சாம்பார்... அதாங்க...வெங்காய சாம்பார் பாட்டு ' கல்யாண சமையல் சாதம்' ரீமிக்ஸ் தானே? ரீமிக்ஸ் வித்தகர் கில்லெர்ஜீயை கொஞ்ச நாட்களாகக் காணோம்.
பதிவானாலும் சிகெரெட் விளம்பரங்கள் எல்லாம் போடக்கூடாது. சட்டப்படி குற்றம்.
Jayakumar
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க ஜே கே சி சார்! மொய்க்கு உங்கள் விளக்கம் சிரிக்க வைத்தது நாற்காலி போட்டுக் கொண்டு சின்ன டேபிளில் மொய் எழுதுவது எழுதும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அப்படியெல்லாம் கிடையாது. மேலே சூர்யா சொல்லி இருக்கும் முறை அருமையாக இருக்கிறது. சிலர் கியூ ஆர் கோட் கொடுத்து ஜி பே கூட செய்ய சொல்லி விடுவார்கள். காதல் பற்றிய கட்டுரை அரட்டை தான். ப்ரியா தம்பி அதில் மிகவும் வல்லவர். சாம்பார் பாடல் ஒரிஜினல் தவறாக சொல்லி இருக்கிறீர்கள்!!
நீக்கு/மெய்யழகன் ஒரு சுவாரஸ்யமான படம். நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்/
பதிலளிநீக்குமெய்யழகன் படம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. வெகு நாட்களுக்கப்புறம் பார்த்த ஒரு எதார்த்தமான தமிழ்ப் படம். அரவிந்தசாமி நன்றாக நடித்திருந்தார் என்றாலும் கார்த்திக் தன் அருமையான நடிப்பால் அவரைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் என்பது என் அபிப்பிராயம்.
எனக்கு கார்த்தி பற்றி தனியாக சொல்ல தோன்றவில்லை. ஒருவரது பெர்பார்மன்ஸ் சிறப்பாக தெரிய அடுத்தவரின் உதவியும் தேவை.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க வளர்க
நீக்குமொய் வைத்த படலம் அருமை
பதிலளிநீக்குஹா... ஹா.... ஹா.. நன்றி.
நீக்குமெய்யழகன் படம் நானும் தோஹா போன புதுசிலே பார்த்தேன். நன்றாகவே இருந்தது. கார்த்தி கலக்கல் நடிப்பு. அர்விந்த்சாமி வழக்கம் போல். அதில் இந்தக் காட்சியும் நினைவில் இருக்கு.
பதிலளிநீக்குமஹாபாரதத்தில் இந்த இடத்தைப் பல முறை படிச்சாச்சு. கர்ணனின் மரணம் எதிர்பார்த்தது என்றாலும் சொந்தத் தம்பியே கொன்றது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும். நிகழ்வு அப்படி.
பொன்மணியின் இந்தக் கவிதை இந்தப் பிரச்னை நடக்கும்போதே வந்திருந்தது. படிச்சிருக்கேன். ஆனாலும் அவர் மனம் நொந்து தனிமையில் இருக்கையில் வைரமுத்து பற்றி எழுதி இருந்தவற்றைப் படிக்கையில் மனம் பதறவே செய்தது. நல்லவேளையாகத் தப்பித்துத் தனியாகப் போய்விட்டார் என ஒரு நிம்மதியும் பிறந்தது.
கல்யாண சமையல் சாதம்,
அந்தக் காய்கறிகளும் பிரமாதம். அதானே இது? இஃகி,இஃகி,இஃகி வேறே யாரும் முந்திண்டாங்களா?
ப்ரியா தம்பியின் எழுத்துப் புதிது. அவரே புதிது. இன்னிக்குத் தான் பார்க்கிறேன்.
வழக்கம் போல் நெல்லை கண்ணனைக் கடந்து கீழே வரேன். :(
வாங்க கீதா அக்கா.... மெய்யழகன் படம் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். சொந்ததம்பி என்பது மட்டுமல்லாமல் மரணம் நேரும் முறையும் உறுத்தும். பொன்மணி விஷயம் சமீபத்தில்தான் தெரியும். ப்ரியா தம்பி எழுத்து அப்போதெல்லாம் பிடிக்கும். பாடலுக்கு சொல்லி இருக்கும் விடை தப்பு.. என் அக்கா காலை 5:10 க்கே போன் பண்ணி சரியான விடை சொல்லி விட்டார்..
நீக்குதண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுத்தே அலைகளிலே பாடல். படம் தங்கை. டி எம் எஸ்
நீக்குமனமாச்சர்யங்களை மறந்து நெல்லை கண்ணனை ரசிக்கலாம் கீதா அக்கா.
நீக்குகே ஜி ஜி.. கரெக்ட்.
நீக்குஅதாவது அவர் பிரதமரையோ அல்லது மற்ற தலைவர்களையோ என்ன சொன்னாலும் கேட்டுக்கணும். நான் அவ்வளவெல்லாம் பெருந்தன்மை இல்லை. :(
நீக்குபெர்நாட்ஷாவைப் பல முறை படிச்சாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குமஹாத்மாவின் கோபம் நியாயமானதோ இல்லையோ அவர் பண விஷயத்தில் வ.உ.சி.க்குச் செய்த துரோகம் மன்னிக்கவே முடியாத ஒன்று.
அப்பாவுக்கு ரசவாதம் கை கூடியதோ இல்லையோ, நமக்குக் கூடி வருது.
இஃகி,இஃகி,இஃகி, இந்த சிகரெட் அட்டைகளுக்காக எங்கெங்கே இருந்தெல்லாம் பொறுக்கி இருக்கேன்? இப்போ நினைச்சுப் பார்த்தா சிப்புச் சிப்பா வருது. இத்தனைக்கும் தம்பிக்காக. ஆனாலும் ட்ரேட் விளையாட்டின் போதும் இதைப் பணமாக உபயோகிச்சிருக்கோம்.
ஆமாம் இந்த பண அட்டை பல விளையாட்டுகளில் உபயோகப்படும்
நீக்குஇந்த ஆண் குரல் பாட்டு, குழந்தைக்குரல் பாட்டு இரண்டு பத்தியும் இன்னிக்குத் தான் தெரியும். முடியறச்சே அந்தப் பாடல்களைப் பகிர்ந்துக்கோங்க. சிங்காரவேலனே தேவா பாடல் ஒரு மாஸ்டர் பீஸ். அதுக்கு ஈடு, இணை இல்லை.
பதிலளிநீக்குஆமாம் அவர் ஆண் குரலில் பாடியதும், குழந்தை குரலில் பாடியதும் சாதனை என்று சொல்லலாமே தவிர வசிக்க முடியாது
நீக்குஅந்தப் படம் வெளிவந்த சமயம் ஜிவாஜியோ, எம்ஜாரோ ஏதோ ஒரு படம் பிரபலமாக ஓடியதால் (வீரபாண்டியக் கட்ட பொம்மனோ?) இதைப் போட்டிக்கு எடுத்ததாகச் சொல்லுவார்கள். என்றாலும் ரொம்பச் சின்ன வயசு அப்போ என்பதால் படக்கதை சரியா நினைவில் இல்லை. குமாரி கமலா(அப்போ திருமதி ஆயாச்சு) ஜெமினியைக் காதலிப்பதைத் தெரிந்து கொண்டு சாவித்திரி அவருக்காகத் தியாகம் பண்ணுவார்னு முடிவு என்பதாக நினைவு. ஏதோ கிணறு போன்ற ஒன்றில் குமாரி கமலாவையும், சாவித்திரியையும் கட்டி மேலேயும் கீழேயும் அனுப்பினதாக அரைகுறை நினைவு. இருந்தாலும் படம் பார்க்கணும். பார்த்துட்டுச் சொல்றேன்.
பதிலளிநீக்குநான் கூட படம் எப்பொழுதோ பார்த்தது. மறுபடியும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா வணக்கம்
நீக்குமொய் கொடுப்பதற்காக வரிசையில் நிற்பது கஷ்டம்தான், என்ன செய்வது, நின்று கொடுத்து விட்டுதான் வரவேண்டும். அதை விட அசிங்கம், சாப்பிடுபவர்கள் பின்னால் நின்று இடம் பிடிப்பது. அதை நான் செய்யவே மாட்டேன்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா. நீங்கள் சொல்லும் விஷயமும் சங்கடமான விஷயம்தான்.. எனக்கும் அதில் அனுபவம் உண்டு். இங்கும் எழுதி இருக்கிறேன்
நீக்கு89-92ல் சரவணபவனில் மதிய சாப்பாட்டின்போது இந்தப் பிரச்சனை உண்டு. நாம காத்திருந்தாலும், சீக்கிரம் கிளம்பித் தொலைய மாட்டானான்னு இருக்கும். அதுக்காகவே 10 3/4க்கு முதல் ஆளாப் போய் உஸ்மான் ரோடு சரவணபவன்ல சாப்பிட்டுவிடுவேன்.
நீக்குஅந்தப் பாடல் என் தம்பி படத்தில் வரும் 'தண்ணீரிலே தாமரைப் பூ, தள்ளாடுதே அலைகளிலே...' சரியா? (சரிதான்). ஷொட்டு கொடுக்க அருகில் யாரும் இல்லை.
பதிலளிநீக்குபாடல் சரி! படம் பெயர் தப்பு!!
நீக்குபடத்தின் பெயரை நீங்கள் கேடகவே இல்லை, சொல்லாமலே இருந்திருக்கலாம், முந்திரிகொட்டைத்தனம்! என் தங்கையா?
நீக்குவெறும் தங்கை.
நீக்குதங்கை!
நீக்குஅந்தப் படத்தில் 'தட்டட்டும்,கை தழுவட்டும்..'என்று ஒரு பாடல் உண்டு. சரோஜா தேவியி பாடிக்கொண்டே ஆட, சிவாஜி அவர் கொண்டையில் இருக்கும் பூவை சாட்டையால் எடுப்பாராம். முதல் முறை தவறும் பொழுது, வில்லன் பாலாஜி அட்டகாசமாக சிரிப்பார். படம் பார்த்ததில்லை, பாடல்கள் பல முறை கேட்டதுண்டு.
பதிலளிநீக்குஅது வேறு படம்.
நீக்குஅந்தப் படம் பார்த்திருக்கேனே? ஆனால் அது ஜரோஜா தேவியா? ஜெயலலிதாவோனு நினைவு. பாடல்/காட்சி இரண்டுமே நினைவில் இருக்கு. படம் எதுனு தெரியலை.
நீக்குகாந்தி அவிநாசி சம்பவம்.... இந்தத் தலைமுறையில் யாரும் நம்ப மாட்டார்கள். பொழைக்கத் தெரியாதவங்க என்பார்கள்.
பதிலளிநீக்குகாலம் அப்படி மாறிவிட்டது. கலிகாலம்.
நீக்குமெய்யழகன் ஒரு சுவாரஸ்யமான படம். //
பதிலளிநீக்குஆமாம், உண்மைதான். கல்யாண பெண்ணை எனக்கு மிகவும் பிடித்தது.
படத்தில் நடித்த அனைவரும் நன்கு நடித்து இருந்தார்கள்.
எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் போடுகிறவர் மகன் கல்யாணத்தில் மணமகன், மணமகள் இரு வீட்டாருக்கும் தனி தனியாக பரிசு பொருளை வாங்க , பணம் கொடுத்தவர் பேர் எழுத அமுர்ந்து இருந்தார்கள் வாசலில் அவர்களிடம் கொடுத்து விட்டு எல்லோரும் தாம்பூல கவர் வாங்கி கொண்டு போனார்கள்.
அட... இப்பவும் இந்த முறை அமலில் இருக்கிறதா கோமதி அக்கா?
நீக்குகுஜராத்தில் எப்போவுமே உண்டு. ஆனால் பெண் தனியா/பிள்ளை தனியானு எல்லாம் கிடையாது. மொத்தமாக வாங்குவார்கள். அப்படியே பெண், மாப்பிள்ளையிடம் கொடுத்துடுவாங்க. அவங்க குடித்தனத்துக்குப் பயனாக வாங்கிக்கலாம்னு அறிவுரை சொல்லி இருப்பாங்க ஏற்கெனவே. எனக்கு என்னமோ இது ரொம்பவே சரினு தோணும்.
நீக்குநாம் பார்க்கவில்லை என்றால் இல்லை என்று முடிவு செய்து விடுகிறோம். நான் என்னைச் சொன்னேன்.
நீக்குபொன்மணி வைரமுத்துவின் கவதை மிக அருமை... வெண்பா, சந்தம், மரபு என்று பிளந்து கட்டியிருக்கிறார்..
பதிலளிநீக்குவைரமுத்து பொன்மணியின் கவிதைகளை திருடி பயன்பெற்றார் என்ற குற்றச்சாட்டு உண்டு. எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது.
நீக்குவைரம் வெறும் ஷோ தான். இவர் அதாவது பொன்மணி இந்த வெற்று ஷோவில் தான் மயங்கினார். அப்பா/அம்மா எச்சரித்தும் கேட்கவில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டார் எனக் கேள்வி. ஸ்ரீராம் சொல்லி இருப்பதும் உண்மையே. இது பற்றிய நம்பகமான தகவல் ஒண்ணு உண்டு. ஆனால் சம்பந்தப்பட்ட நபருக்குப் பிரச்னை வரும் என்பதால் வெளியே சொல்ல முடியாது.
நீக்குஎனக்கு தனியே சொல்லுங்களேன்
நீக்குகொஞ்சும் சலங்கை படத்தில் டூயட் கிடையாதா? டூயட் இல்லாத இன்னும் இரண்டு படங்கள் உண்டு. ஒன்றில், ஒன்றில் எல்லாப் பாடல்களையும், பெண் பாடகி பாடியிருப்பார், இன்னொன்றில் ஆண் குரல். யாராவது சொல்லுங்கள். ஸ்ரீராம் சொல்லிவிடுவார் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇல்லை பானு அக்கா எனக்கு சொல்ல தெரியவில்லை
நீக்குஒன்று 'கற்பகம்', இன்னொன்று 'ஒரு தலை ராகம்'.
நீக்குஅந்த நாள், பேசும்படம் இரண்டு படங்களில் கூட டூயட் கிடையாது!
நீக்குபானு அக்கா... ஆமாம். நன்றி.
நீக்குகே ஜி ஜி. நீங்கள் சொல்லும் வகையில் இன்னும் சில படங்கள் கூட இருக்கலாம். எனக்கு தெரிந்த ஒன்றை சொல்கிறேன். கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
மற்ற பகிர்வுகள் படித்தேன்.
பதிலளிநீக்குஅப்பாவின் பக்கம் நன்றாக இருக்கிறது.
பானுமதி சொன்ன பதில் சரிதான் என்று நினைக்கிறேன். தண்ணீரிலே தாமரைப் பூ, தள்ளாடுதே அலைகளிலே.. . பாடலை பாடி பார்த்தேன் .
சரிதான். நான் அதற்கு பதிலும் கொடுத்து விட்டேன். பார்க்கவும்.
நீக்குகொஞ்சும் சலங்கை பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஆமாம். நன்றி கோமதி அக்கா.
நீக்குமெய்யழகன் நல்ல படம். அவ்வப்பொழுது இப்படி நல்ல படங்கள் வருகின்றன. சில நடிகர்கள் சில பாத்திரங்களுக்கு சிக்கென்று பொருந்துவார்கள். ஸ்மிதா பட்டீல் ஆதிவாசி ரோலுக்கு, வி.ஆர்.எஸ். போலீஸ் அதிகாரி வேடத்திற்கு, டில்லி கணேஷ் சமையல்காரர் ரோலுக்கு, அது போல கார்த்தி கிராமத்தானாக நன்றாக பரிமளிப்பார்.
பதிலளிநீக்குஉங்கள் பட்டியல் புதுசு இது போல ஒரு தனி பட்டியல் தயாரித்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்கு'இறுக்கும் மனதிற்கு இப்படியொரு இடைவெளி' அடடா! பாஹே எங்கோ சென்று விட்டார்.
பதிலளிநீக்குபொன்மணி வைரமுத்துவின் கவிதையும் அருமை!
நன்றி பானு அக்கா.
நீக்குஇன்றைய பதிவின் தலைப்பு கூட ஒரு பாடலின் உல்டாதான். யாராவது சொல்வார்கள் என்று பார்த்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
தாங்கள் எதிர்பார்த்தபடி இன்றைய தலைப்பின் பாடல் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.." இதுவோ..?
மொய் தரும்/ தந்த அனுபவங்களை சுவையாக கூறியுள்ளீர்கள். மெய்யழகன் இதுவரை நான் பார்த்ததில்லை. குடும்பத்தில் அனைவரும் பார்த்திருக்கலாம்.
கவிதைகள் இரண்டும் அருமை. (வைரமுத்து அவர்களின் மனைவி எழுதியது, தங்கள் தந்தையின் கவிதை) இரண்டையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாஹே பக்கத்தில் தமிழுக்கு வணக்கம்!
பதிலளிநீக்குமொய் தந்த அனுபவங்களை சுவையாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குகவிதைகள் பிடித்திருந்தன.
"சிங்காரவேலனே"என்றும் ஒலிக்கும் நல்ல பாடல்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஜானகி அம்மாவை என்றுமே மறக்க முடியாது. அவர் பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை. "சிங்கார வேலனே" பாடல் எப்போதும் கேட்டாலும் மனதை மயக்கம் கூடியவை. நாதஸ்வரத்தோடு இணைந்த அற்புதமான குரலை வேறு யாராலும் தர முடியாது. ஆனால். அது போல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் (ஜூனியர் பகுதி இரண்டில்) பகுதியில் அதில் பங்கு கொண்ட அல்கா அஜித் அவர்கள் போட்டியின் முடிவில் இந்தப்பாடலைப் பாடி திருமதி ஜானகி அவர்களாலேயே பாராட்டைப் பெற்றதும் மறக்க இயலாத ஒன்று.
திருமதி ஜானகியின் மறைவை அவர் குரல் அவரை என்றும் மறக்க விடாமல் செய்தபடி இருக்கும்.நேற்று பகிர்ந்த அவரது பாடலும் இனிமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/குரலில் எந்த வகையான மாறுதலும் செய்து பாடும் திறமை பெற்ற ஜானகி அம்மாதான் SPB திரையில் பாட முழுமுதல் காரணம். /
ஆம். அதை மேடையில் பலமுறை எஸ் பி பி அவர்கள் திருமதி ஜானகிக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் பார்த்திருக்கிறேன். அத்தகைய நல்லுள்ளம் கொண்டவர் திரு எஸ் பி பி அவர்கள். அதனால்தான் இருவராலும் இசையுலகில் கொடிகட்டி பறக்க முடிந்தது. இருவரின் இழப்பும் இசையுலகிற்கு ஒரு வேதனை தருகின்ற நிகழ்வுதான். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
எஸ் ஜானகி ரொம்ப சீனியர். அவர் பாலுவை வா போ என்றுதான் அக்கா ஸ்தானத்தில்்சொல்லுவார். நிறைய பாடல்கள் சேர்ந்து பாடியிருக்காங்க. இருவரும் நல்லவர்கள், எஸ் பஇ பி நிச்சயமா பொதுவெளில நல்லவர் அப்புறம் என்ன
நீக்குமொய் கவர் கொடுக்க காத்திருப்பது, DJ தொல்லை, உணவுக்கான காத்திருப்பு, அதீத சப்தம் என இவை அனைத்தும் பெரிய தொல்லை. வரவேற்பு என்று சென்று நீண்ட காத்திருப்பு - ஒரு கல்யாண ரிசப்ஷன் 2000 பேருக்கு அழைப்பு வைத்திருந்தார்கள் - நிற்க முடியாமல் பெண்ணின் அம்மாவிடம் கொடுத்து விட்டு உணவுக்கு முண்டியடிக்க முடியாமல் சாப்பிடாமல் திரும்பி இருக்கிறேன். DJ தவிர இப்போதெல்லாம் தமிழகக் கல்யாணங்களில் செண்டை மேளம் வேறு! அதற்கு சிலரின் குத்து ஆட்டம் கூடுதல் bonus ஆக - அதை ரசிக்க முடிவதில்லை.
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று. பொன்மணி கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கும். அவரது கவிதை தொகுப்பு ஒன்றும் வாசித்து இருக்கிறேன். வைரமுத்து கவிதைகளை விட பொன்மணியின் கவிதைகள் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்கு