ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.. அழகியசிங்கர். தன் அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் பங்குபெற்றவர்கள் இருக்கும் குழுவில் ஏதாவது ஒரு படம் கொடுத்து அந்தப் படத்துக்கு பத்திலிருந்து இருபது வரிக்குள் கதை எழுதச் சொல்வார். நான் ஏற்கனவே ஒன்றிரண்டு அப்படி வெளியான நான் எழுதிய கதைகளை வெளியிட்டிருக்கிறேன். பானு அக்கா கூட ஒன்று அனுப்பி வெளியிட்டிருந்தேன்.
அப்படி எழுதப்பட்ட கதைகளை புத்தகமாக்கியுள்ளார் அழகியசிங்கர்.
அதில் வெளியிடப்பட்ட ஒரு கதையை - நான் எழுதிய கதையை - இங்கு பகிர்கிறேன்.
என்னாச்சு எனக்கு?
ஸ்ரீராம்
‘மது-மாது -‘ என்று தலைப்பு தந்து மாது கொடுத்த அந்தப் படத்துக்கு பரிசு கொடுத்து “மனமொத்த தம்பதியர்” என்று வந்திருந்த சான்றிதழை மேஜை மேல் வைத்து, படத்தை நிமிர்த்தி வைத்திருந்தான் மாது என்கிற மாதவன்.
அதைப் பார்த்ததும் அடுத்தது காட்டும் பளிங்கு போல மனம் கடுத்ததைக் காட்டிய உதடும் கோணியது மது என்கிற மதுமிதாவுக்கு.
அவன் சொன்ன வசனங்களுக்கும், எழுதிய கவிதைக்கும், எடுத்த இந்தப் புகைப்படத்திற்கும் அதற்கு அவன் கொடுத்த விளக்கத்துக்கும் தான் இந்தப் பரிசு.
அதை இவளுக்கும் காட்டவே இப்படி மேஜைமேல் வைத்திருக்கிறான் மாது. மீசையை எடுத்து விட்டு, இருவர் முகத்தையும் படமெடுத்து போட்டோஷாப்பில் பாதிப் பாதியாய் சேர்த்து ‘மாதொருபாகன். மாதுவுக்கு வலப்பக்கம் இடம் கொடுத்த மது’ என்று எழுதியிருந்தான்.
என்ன ஒரு போலித்தனம் என்று மனதில் தோன்றியது மதுமிதாவுக்கு.
ஒரே வீட்டில் இருந்தாலும் ஆறு மாதங்களாக ஒட்டாமல் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள்.
ஏதோ ஒரு கொடும் சந்தர்ப்பத்தில், உறவு என்னும் கண்ணாடிப் பாத்திரம் விழுந்து உடைந்து மனதில் ஆறாத காயம் ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் ஆறும் சமயம் நெகிழும் கணங்களை இறுக்கமாக்குவது போல் அவ்வப்போது சில வார்த்தைக் கத்திகள் அதைக் கீறி பச்சை ரணமாகவே இவ்வளவு காலம் வைத்திருந்தன.
இந்தப் போட்டியில் பங்குபெற்ற போது அவளைத் தோளணைத்து போட்டியாளர்களிடம் அவன் பேசிய போது அந்தத் தோளணைப்பில் ஒரு புதிய நெருக்கத்தை உணர்ந்திருந்தாள் மது. அவளுக்கும் மனதுக்குள் ஒரு நெகிழ்வு ஏற்பட்டிருந்ததுதான். காதலித்த, மற்றும் மணமான நாட்களின் ஆரம்பகால நினைவுகள் அவளுக்குள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கின என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள்வில்லை.
படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தபோதே திடீரென தன் தோளில் மாதவனின் கை படர்வதை கதகதப்பாய் உணர்ந்தாள். தோளணைத்த கைகள் முதுகை வளைத்து இடையை இறுக்கிப் பிடித்தன.
“போதும் மது… என்னாலும் என் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும்.. நம்பு.. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன்.. என்னால் உன்னை விட்டு இருக்க முடியாது மது… ஒரே வீட்டில் இருந்துகொண்டு தள்ளித்தள்ளி… ” உணர்ச்சியில் குரல் நெகிழ அவள் காதோரக் கூந்தலை மென்மையாக கைகளால் ஒதுக்கி நீவியபடி காதில் கிசுகிசுத்தான் மாது.
மனமும் உடலும் ஒருசேர நெகிழ, திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள் மது. “என்னாச்சு எனக்கு” என்று அவளுக்குள்ளேயே வியப்பான முறுவலுடன் கேள்வி வந்தது.
“என் மேலயும் தப்பு இருக்கு… நான் மாத்திக்கறேன்.. நீ மாறவேண்டாம்.. அப்படியே இரு.. அதெல்லாம் சேர்ந்துதான் நான் உன்னை லவ் பண்ணினேன்.. “
“வேண்டாம்.. நீயும் நீயாகவே இரு” மாதவன் குரலில் காதல் வழிந்தது.
========================================================================================
நாம் மட்டும் சின்னஞ்சிறு கதைகள் எழுதவில்லை. பாக்கியம் ராமசாமி எனும் ஜ ரா சு கூட தன் புகழ்பெற்ற அப்புசாமி சீதாப்பாட்டி கேகரக்டர்களை வைத்து இப்படி கதைகள் எழுதி இருக்கிறார். அதுவும் குமுதத்தில் புகழ்பெற்ற அப்புசாமி சீதாப்பாட்டியை விகடனுக்கு அழைத்து வந்திருந்திருக்கிறார்!
1) பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட்
அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து சீதாப்பாட்டி, "எதுக்கு இந்த கலெக்ஷன்?' என்றாள்.
"எனக்கு எந்த பேனா வாங்கினாலும் சரியாக எழுதுவதில்லை. ஆனால் கூரியர் சர்வீஸ்காரர்கள் கையெழுத்துப் போடக் கொடுக்கும் பேனா மட்டும் நன்றாக எழுதுகிறது. வருகிற கூரியர்காரன்கிட்டே எல்லாம், அவன் பேனா தரவேயில்லை என்று சாதித்துக் கஷ்டப்பட்டுச் சேர்த்ததாக்கும் இதெல்லாம்' என்றார்.
2) சுதந்திரம் என் பிறப்புரிமை...!
வாழ்க்கை வரலாறு எழுதுவதில் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரிடம் அப்புசாமி, “என் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்களேன்' என்றார்.
"மனைவிக்குப் பயந்து சுதந்திரமில்லாமல் இருக்கிறீர். அதை எழுதினால் உங்களுக்குக் கேவலம்தானே?' என்றார் எழுத்தாள நண்பர்.
அப்புசாமி கோபித்தார். "எவன் சொன்னான், மனைவிக்கு பயந்தவன் நான் என்று? அவளது கொடுமைகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறேன்' என்றவர், "ஆமாம்... அச்சுக்குப் போறதுக்கு முன்னே புரூஃபை அவளிடம் காட்டி அவள் அனுமதி கிடைத்த பிறகு போடுங்கள். சரித்திரம் எனக்குத் தரித்திரம் ஆகிவிடக்கூடாது இல்லையா?' என்றார்.
==========================================================================================
எல்லோரும் அப்துல் கலாமாகிவிட முடியுமா என்ன....!
கடந்த மாதத்தில் மட்டும், 10 சதவீத விஞ்ஞானிகள், சமீப காலமாக, 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதால், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரோவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நுாற்றுக்கும் அதிகமான முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர். சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இது, இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில், 25 சதவீதமாகும். இதனால், இஸ்ரோவின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விஞ்ஞானிகள் ராஜினாமா செய்யவும் மற்றும் விருப்ப ஓய்வு பெறவும், விண்வெளி துறை தடை விதித்துள்ளது.
கடந்த, 2020ல், மத்திய அரசின் விண்வெளி துறையானது, விதிகளை மாற்றி, தனியாரும் விண்வெளி திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பளித்தது. அப்போது, ஒரு நிறுவனம் மட்டுமே இதில் பங்கேற்றது. பின்னர், மத்திய அரசின் ஊக்குவிப்பால், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், துருவா ஸ்பேஸ், திகந்தரா உள்ளிட்ட 400 நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆய்வில் இணைந்துள்ளன. இவை மிக வேகமாக, ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் வளர்ந்து வருகின்றன.
இவற்றுக்கு மிகவும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பணி ஏற்ற உடனேயே மிகப்பெரிய திட்டங்களுக்கு, தலைமை ஏற்கும் பொறுப்பு, பல மடங்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வருகின்றன. இதனால், தன்னிச்சையாக சாதிக்க துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளில் சிலர், புத்தாக்க நிறுவனங்களின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.
ஊழியர்கள் வெளியேறியதால், இஸ்ரோவின் இந்தாண்டு திட்டங்களான, 'ககன்யான் ஜி1, எஸ்.எஸ்.எல்.வி-.எல் - 1, ஜி.எஸ்.எல்.வி-. எப் - 17' உள்ளிட்டவை தாமதமாகி உள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரட்டை பி.எஸ்.எல்.வி., திட்டங்கள் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் ஏழு விண்கலங்கள், ஆறு செயற்கைக் கோள்களை, இறுதி செய்யும் கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. மேலும், குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால், சிறிய ரக ஏவுதல்களை, அங்கிருந்து நடத்தும் ஆய்வுகளும் நடக்கின்றன. அந்த பணிகள் பாதிக்காமல் இருக்க, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது







இஸ்ரோவிலிருந்து விஞ்ஞானிகள் விலகல் என்று இங்கு வெளியிட்டிருக்கும் செய்தி பற்றி தனக்குத் தெரிந்த தகவல்களை நம்ம ஜெஸி ஸார் இங்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசின்னஞ்சிறு செவ்வாய்ப்பதிவு. ஆனாலும் சிறப்பு. உங்கள் கதையை விட அப்புசாமியைத்தான் மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஇஸ்ரோ வை பூட்டியாயிற்று. அடுத்து அனுசக்தித் துறைஇல் தனியாரைக் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. முக்கியமாக அ இருவரை.
Jayakumar
வாங்க JKC ஸார்... அப்புசாமியோடு போட்டி போடமுடியுமா?
நீக்குஇஸ்ரோ... தனியார் வசம் செல்வது நல்லதா என்ன? அதன் சாதக பாதகங்கள் என்ன?
ஐய்யோ வேண்டாங்க. எழுதினால் என்னைத்தேடி ED வந்துடும். இஸ்ரோவில் இருந்ததால் பென்ஷன் கிடைக்குது.
நீக்குஅடப்பாவமே.. அம்மாம்பெரிய மேட்டரா அது!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஜீவி சார். இஸ்ரோ முதலில் ஒரு சுய ஆட்சி நிறுவனமாக தான் தொடங்கப்பட்டது. நிதி பிரிச்சினைகளால் அரசு 1975இல் அரசு ஒரு டிபார்ட்மெண்ட் உருவாக்கி அதன் கீழ் இஸ்ரோ வை கொண்டு வந்தது. உருவாக்கத்தின் நோக்கம் உபகிரகங்கள் செலுத்துவது, மற்றும் அவற்றின் செயல்களை பராமரிப்பது.
பதிலளிநீக்குசந்திரயான். மங்கள்யான், ககன்யான் போன்ற திட்டங்கள் பின்னர் ஜனதா காலத்தில் முக்கியமாக வாஜபாயீ காலத்தில் உருவானவை.
அரசுடைமையாக்கப் பட்ட இஸ்ரோவில் 'internal politics' தலைதூக்கியது நீ பெரிதா நான் பெரிதா என்ற சர்ச்சையில் சாராபாய் தேர்ந்தெடுத்த பல விஞ்ஞானிகள் முக்கியமாக ஒய் ஜே ராவ், அம்பா ராவ், ராமகிருஷ்ண ராவ், விவேகானந்தன், ப்ரஹலாத், நாகப்பா, போன்ற சீனியர் விஞ்ஞானிகள் ராஜினாமா செய்து வெளியேறிவிட்டனர்.
சரி கதை போதும்.
ஒரு விஸ்வகுரு எனக்கு எல்லாம் தெரியும் என்று ஆலோசகர்களின் அறிவுரைகளை ஏற்காமல் தனியார் மயம் ஆக்கியபோது பின் விளைவுகள் நடந்தே தீரும். தனியார் மயமாகும் பின்னணியில் மிகப்பெரிய சக்தி இயங்குவதாக கேள்வி.
நன்றி ஜெஸி ஸார். போகப்போக அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் இலாகாகள், துறைகள் என்ன தான் மிஞ்சும் என்ற கேள்வியே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நீக்குஅடக்கடவுளே.. அந்த மிகப் பெரிய சக்தி உள்நாடா, அயல்நாடா?
நீக்குஅரசுத்துறையில் அரசுக்கு வருமானம் அதாவது இந்த பாக்கெட்டில் இருந்து அடுத்த பாக்கெட்டில் போட்டால் நடுவில் உள்ள அமைச்சருக்கு எப்படி வருமானம் கிடைக்கும்.
நீக்குபுதிய தீர்மானப்படி உபக்கிரகங்களுக்கு நிதி இனி மத்திய திட்ட நிதியில் இருந்து கொடுக்கப்பட மாட்டாது. உபகிரகங்களை உபயோகிக்கும் துறைகள் அவரவர் சொந்த பட்ஜெட்டில் இருந்து செலவு செய்துகொள்ள வேண்டும். அது இஸ்ரோ தான் என்றில்லை.
Jayakumar
//புதிய தீர்மானப்படி உபக்கிரகங்களுக்கு நிதி இனி மத்திய திட்ட நிதியில் இருந்து கொடுக்கப்பட மாட்டாது. // வேறு எதற்கு கொடுப்பார்களாம்? இலவசங்களுக்கா? என்ன அபத்தம் இது?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஅழகிய சிங்கர் நூலில் உள்ள உங்கள் கதை நன்று. அப்புசாமி ஹிஹி கதைகள் சிறப்பு.
இஸ்ரோ - வேதனை. போட்டி இருப்பது நல்லது தான் என்றாலும் இப்படி அரசை விட்டு விட்டு பலரும் செல்வது நல்லதல்ல.
வாங்க வெங்கட்.. வணக்கம். இஸ்ரோ உள்ளே நடக்கும் பாலிடிக்ஸ் .பெரிய பனிமலையில் நுனி மட்டுமே நமக்குத் தெரிகிறது. கதைகளை ரசித்ததற்கு நன்றி.
நீக்குகேஜிஜி ஸார்! புதனுக்கான கேள்வி.
பதிலளிநீக்குபிரதமர் மோதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசின் கீழிருந்த அரசு நிருவனங்கள் என்னன்ன?
மோதி ஆட்சிக்கு வந்த பின்னர் இப்பொழுதிய நிலையில் மத்திய அரசின் கீழிருக்கும் அரசு நிருவனங்கள் என்னன்ன?
அன்பு ஸ்ரீராம்! மேற்கண்ட புதனுக்கான கேள்வியை கேஜிஜி ஸார் க்வனத்திற்கு கொண்டு வர கேட்டுக் கொள்கிறேன்.
நீக்குஜீவி ஸார்.. அவரே பார்ப்பார். ஆனால் வழக்கறிஞர் போல ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலை மட்டும் பெறுவது காரிய நோக்குடையது. ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசிப் பார்த்தால் இன்னும் நிறைய உண்மைகள் விளங்கலாம்.
நீக்குஎன் கருத்தில் நிறைய விஷயங்கள் ஒரு எளிய குடிமகனுக்கு தெரியாமலே போகும். அவன் ஒரு கனவுலகிலேயே இருப்பான்.
அந்த கனவுலகம் அவர்களாலேயே அவனுக்காக க்கட்டமைக்கபப்ட்டிருக்கும்!
சிக்கலான கேள்வி. முடிந்தால் ஜூலை 29 புதன் பதிவில் பதில் அளிக்கிறோம்.
நீக்குநாளைய பதிவிலேயே பதில் அளிக்கிறோம். நன்றி.
நீக்குநன்றி, கேஜிஜி ஸார்.
நீக்குஇஸ்ரோ தனியார் மயம் ஆகுதல் புதிதல்ல. மாதவன் நாயர் devas multimedia ltd க்கு சில உபகிரக அலைவரிசைகள்(S band) ஒதுக்கி ஒப்புதல் செய்து பெரிய கேஸ் ஆகி அவரும் கஷ்ட்டப்பட்டார். கேஸ் கூகுள் அல்லது AI வழி படித்துப்பாருங்கள்.
பதிலளிநீக்குஅன்று சொல்லப்பட்ட "National security can not be entrusted to private parties" காற்றோடு போயாச்சு.
உண்மையிலேயே அதுதான் கவலையாய் இருக்கிறது. எந்த வழியாக வந்து நாட்டைப் பிடிக்கலாம், ஒன்றுமில்லாமல் ஆக்கலாம் என்று அயல்நாடுகள் காத்திருக்கும் வேளையில் அதன் ஆக்டொபஸ் கரங்கள் வளைக்க ஒரு வாய்ப்பு தருவது சரியா என்று தோன்றுகிறது.
நீக்குஇப்போ இந்தியாவுக்கு மிகவும் சிரமமான கால கட்டம்னு நினைக்கிறேன். ஆனால் இஸ்ரோ பத்தித் தகவல்கள் ஒண்ணும் பொதுவெளியில் சொல்லப்படவில்லை. :( என்றாலும் இது எல்லாம் தனியார் மயம் ஆவது கொஞ்சம் யோசிக்க வேண்டியதே!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தங்களது குறுங்கதை நன்றாக உள்ளது. அழகிய சிங்கர் அவர்கள் வெளியிட்ட நூல் தொகுப்பில் உங்கள் கதையும் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
அப்புசாமி சிறுகதைகள் நன்றாக உள்ளன. அப்போது பத்திரிக்கைகளில் படித்ததாக நினைவு.
இஸ்ரோ செயல்பாடுகள், விளக்கங்கள் பதிவிலும், இன்றைய கருத்துரையில் படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... அதில் என்னுடைய கதைகள் 9 இருக்கிறது. நன்றி.
நீக்குமற்றவர்கள் எழுதிய சில கதைகளையும் இங்கு பகிர உத்தேசம்.
அப்படியா..! மிக்க மகிழ்ச்சி. ஏற்கனவே ஒரு கதை முன்பே எபியில் பகிர்ந்திருந்தீர்களோ.? மீதி கதைகளையும் இங்கே பகிருங்கள்.. இருபது வரிகளுக்கு ஒரு கதை என்பது படிக்க ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கும். மற்றவர்கள் எழுதிய கதைகளையும் பகிருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நீக்குநன்றி கமலா அக்கா. உடனே உடனே இல்லாமல் அவ்வப்போது பகிர்கிறேன்!
நீக்கு//சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.// அழகிய சிங்கர் குழுவில் நான் கதைகள் எதுவும் எழுதியதில்லை. அவர் வெளியிட்டிருந்த படத்திற்கு நான் முயற்சித்த கதையை சென்ற வாரம் ஸ்ரீராம் எ.பி.யில் வெளியிட்டிருந்தார். எனிவே, வாழ்த்துக்கு நன்றி. :))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலமே வளர்க..
பதிலளிநீக்குஇன்றைய குறுங்கதைகள் அழகு..
பதிலளிநீக்குஇஸ்ரோவுக்கு கேடு காலம்..
பதிலளிநீக்குஅப்புசாமி என்றவுடன் பா மு க உறுப்பினர்கள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. ஏனோ?
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை அருமை. பரஸ்பரம் கணவன், மனைவி ஒருவக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுத் தந்தால், எல்லாம் மனம் எண்ணியபடி சுமூகமாக இருக்கும். மது, மாது என்று கதைக்குண்டான ஜோடியின் பெயர்கள் நன்றாக உள்ளது..சுருக்கி எழுதுவது ஒரு கலை. அது உங்களுக்கு கை வந்த கலையாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
அப்போது என் கருத்தை டைப் செய்து அடிக்கும் போது இதை எழுதுவதற்குள் என் கைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து விட்டது. அதனால் இப்போது வந்து தருகிறேன். மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சின்னம்சிறுகதை நன்று பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅப்புசாமி கதைகள் எப்போதும் ரசனைக்கு உரியவை.
இஸ்ரோவின் செயற்பாடுகள் அறிந்தோம்.
ஸ்ரீராமின் சின்னஞ்சிறு கதை நன்றாக இருக்கிறது. இப்படிப் புரிதலோடு கணவன்/மனைவி இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை. இந்தக் காலத்தில் இதெல்லாம் நடக்குமானு தெரியலை.
பதிலளிநீக்குஅப்புசாமி/சீதாப்பாட்டி வழக்கம் போல். புதுசா எதுவும் இல்லை. எப்படியோ இந்தச் செவ்வாயை ஒப்பேத்திட்டீங்க. :))))
பதிலளிநீக்குவிண்வெளித்துறை தனியார்மயமாக்கப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தல்லவா?
பதிலளிநீக்குபாக்கியம் ராமசாமி கதைகளைவிட ஸ்ரீராமின் கதையை ரசித்தேன். இதையே சிறுகதையாக்கிப் பாருங்கள். என்ன இருந்தாலும் இன்ஸ்டெண்ட் காபிக்கும், ஃபில்டர் காபிக்கும் வித்தியாசம் உண்டே. நான் ஒரு பூமரோ?
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம். கதையின் இறுதி பகுதி மன நிறைவு . குறை , நிறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்து கொண்டு வாழ்தல் இனிது.
பதிலளிநீக்குபாக்கியம் ராமசாமி கதைகளும் நன்றாக இருக்கிறது. இஸ்ரோவுக்கு வந்து இருக்கும் நெருக்கடிகள் கவலை அளிபதாக இருக்கிறது. விஞ்ஞானிகள் வெளியேறி விட்டால் அதன் நிலமை என்ன என்ற கவலை அளிக்கிறது.
பதிலளிநீக்குஅழகிய சிங்கர் தொடர்ந்து ஏதாவது எழுத்துக் காரியம் செய்துகொண்டுதானிருக்கிறார்! புதுமை புகுத்துவதாக எண்ணமோ? அவர் கதை ஏதாவது படித்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குஅப்புசாமி இப்படி பால்பேனாவையெல்லாம் திருடியிருக்கிறார் என்று தெரிந்து அதிர்ந்தேன். யாரையும் நம்பமுடியவில்லை !
பதிலளிநீக்கு