அன்றிரவு...
யார் அந்த அவர்கள்? சுஜாதா
இந்த நிலத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாம் எந்தவித வாழ்வு வாழ்கிறோம்!
லினோ டைப்பில் அரை உண்மைச் சொல்லும் செய்தித் தாள்களை நம்புகிறோம். "ஒலித்த குரல்கள் சௌந்தரராஜன், சுசீலா, ஒலிக்கப் போகும் குரல்கள் டி.எம்.எஸ்..." ரேடியோவின் சர்க்கரை போன்ற பாடல்களை நகரமெங்கும் இறைக்கும். உள்ளூர்த் தலைவர்களைக் காந்திக்கும் யேசுவுக்கும் சாப்பிடுகிறோம். அவர்களை ஜோடனை செய்து, விழாக்கள் நடத்தி சுவரொட்டிகளில் தாராளமாக வாழ்த்தி ஆறு மாதங்களில் அவர்களைப் பால் பாயிண்ட் பேனா மாதிரி தூர எறிந்துவிடுவோம். சுகாராட்டிகளில் நகரமே இரு பரிமாண வாழ்க்கை வாழ்கிறது. தினம் தினம் சட்டை உரிக்கிறது.
மகத்தான பெரிய ஆங்கில ஏ யின் நடுவில் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் பெண்ணுக்காக மூன்று மணி நேரம் க்யூவில் நிற்கிறோம். சாலைகளில் ஞாபக மறதியுடன் நடந்தவர்களை ரத்தச் சகதியில் தேய்த்துவிட்டுத் துணி போட்டு மூடி, சாக்பீஸ் கோடுகள் போட்டு டேப் அளவுகள் எடுக்கிறோம். வாழைப்பழங்கள் தொங்கும் பத்திரிகை அடைத்த கடைகளில் இரவில் பசும் பால் குடித்து எதிர்காலத்தில் சதைப்பற்றுக்கு ஏங்குகிறோம். கடலின் ஆனந்தமான அழகை மறந்துவிட்டு மண்ணில் உட்கார்ந்து ரேடியோவுடன் பாடுகின்றோம். அசுத்தம் பண்ணி விட்டு மூடுகிறோம்.
சங்கீதம். இலக்கியம், சியக்காய்த் தூள், ஊறுகாய் எல்லாமே நமக்கு 'காப்ஸ்யூல்' வடிவத்தில் தேவையாக இருக்கிறது. இன்ஸ்டால்மெண்ட் சுகங்கள், பாத்திரச் சீட்டுக்கள், ஜாக்கியான மண்டபங்கள், , கோடேஸ் பிராந்தி விஸ்கி வகைகள் நவீன டான்ஸ், திருக்குறள் எல்லாம் நம் ஸப் கல்ச்சரின் அங்கங்கள்.
என் நண்பன் ஜி, தினம் பச்சையாக ஷவரம் செய்து கொண்டு, குளித்துவிட்டு, மனைவியைப் பார்த்துச் சிரித்துவிட்டு மின்சார ரயில் நிலையத்திற்கு நடந்து அதே 9 :18 வண்டி பிடித்து அதே மூன்றாவது பெட்டியில் அதே இடத்தில் அதே கம்பி பைப் பிடித்துக்கொண்டு வண்டி பிதுங்க, சம்பாத்தியத்தை நோக்கி ஓடும் நூற்றுக்கணக்கான முகங்களில் ஒரு முகமாக ஒரு மனித மெஷினாக தினம் தினம் ஆபீசுக்கு செல்கிறான். ஆபீசில் அவன் வருஷக்கணக்காக தேய்ப்பது அதே நாற்காலி, அவன் செய்வது அதே வேலை, அவன் திரும்புவது அதே 9:18,
பதினைந்து வருஷமாக இப்படியே கம்பியைப்பிடித்துக்கொண்டு வண்டிக்கு வெளியில் தொங்கிக்கொண்டு ஆபீஸ் சென்று கொண்டிருக்கிறேன். ஒருநாள் - ஜஸ்ட்ஃ பார் சேன்ஜ் கையை விட்டு விட்டால் என்ன என்று தோன்றுகிறது என்கிறான்.
அவன் அப்படிச் செய்வதும் செய்யாததும் அவன் மனத்தின் கோழைத்தனத்தைப் பொறுத்தது. அப்படி அவன் கையை விட்டுவிட்டால் என்ன ஆகும்? வண்டி நிற்கும். ரயில்வே போலீசார் யாராவது வருவார்கள். பத்துபேர் சீச்சீ என்பார்கள். வீட்டுக்குச் செய்தி. அதே ஆட்டாப்ஸி, அதே தந்திகளோ, அதே உறவினர் , அதே தந்தியன், அதே உறவினர், அதே கண்ணீர்..
டில்லியில் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது சாலையின்நட்ட நடுவே வயதான ஒருவர் கிடந்தார். நான் நிறுத்திப் பார்த்ததில் அவர் மிகவும் இறந்திருந்தார். போகிற வருகிற கார்கள் எல்லாம் சற்றுத் தயங்கி அந்த உடலை மரியாதையாகத் தவிர்த்து வளைந்து விலகிச் சென்று மறுபடி வேகம் பிடித்து மறைகின்றன. மருத்துவரும் நிற்கவில்லை. நிற்பதில்லை. எதிர் வீட்டின் டெலிபோன் பீங்கான்களைப் பார்த்து அங்கே செய்தி சொன்னதற்கு ... , 'நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்' என்று பதில் கிடைத்தது.
யார் அந்த அவர்கள்...?
=======================================================================================
‘பத்து மாத பந்தம்’
பானுமதி அம்மா நடித்த ‘பூவும் பொட்டும்’ படத்திற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதினேன். இந்த படத்தின் கதையைச்சொல்ல பானுமதி அம்மா வீட்டுக்கு வாசுமேனன் என்னை அழைத்துச்சென்றார்.
பானுமதி அம்மா வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் அம்மா அம்பாள் விக்ரகம் போன்ற தோற்றத்தில் மாடிப்படிகளில் இறங்கி வந்தார். கையில் அர்ச்சனைத்தட்டு இல்லாத குறையுடன் எழுந்து நின்று குனிந்து கும்பிட்டேன்.
வாசுமேனன், ‘அம்மா! தம்பி தான் ஆரூர்தாஸ்!’
‘நான் நடிச்ச நளதமயந்தி படத்துக்கு அப்போ நீங்க வசனம் எழுதினீங்களே?’
‘ஆமாம்மா, அதே ஆரூர்தாஸ் தான்! நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே’.
‘எப்படி மறக்க முடியும்? இப்போ நீங்க ரொம்ப பெரிய ஆளாயிட்டிங்களே! எம்.ஜி.ஆர்., சிவாஜி நடிக்கிற நிறைய படங்களுக்கு எழுதி சக்ஸஸ் பண்றீங்க. நீங்க வசனம் எழுதின ‘பாசமலர்’ படத்தை ரெண்டு தடவை பார்த்து நானே கலங்கிட்டேன்.
கிளைமாக்ஸ் சீன்ல சிவாஜி சொல்ற அந்த ‘கை வீசம்மா கை வீசு…’ வசனம்! ஆகா! அழாதவங்களையும் அழவச்சிட்டீங்களே! நீங்க மிகச்சிறந்த டயலாக் டைரக்டரா வருவீங்கன்னு அன்னிக்கே எனக்குத் தெரியும்.
டெய்லி பேப்பர் பார்க்குறேன், படிக்கிறேன். நீங்க எழுதுற நிறைய படங்கள்ளே எல்லா லேடி ஆர்ட்டிஸ்ட்களும் நடிக்கிறாங்களே. நான் மட்டும் எப்படி – ஏன் விட்டுப்போனேன்?… கேள்வியுடன் நிமிர்ந்து என்னைப்பார்த்தார்.
நான் அமைதி காத்தேன்…
கொஞ்சம் இடைவெளி விட்டு அவரே தொடர்ந்தார்…
எனக்குத் தெரியும். இந்த வெள்ளை யானை வேண்டாம்ன்னு விட்டிருப்பாங்க, பரவாயில்லே.
அந்த மடம் இல்லேன்னா இருக்கவே இருக்கு என் சொந்த மடம்!’ என்று தலைகுனிந்தவாறு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்.
‘ஒரு இடைவெளிக்கப்பறம் மறுபடியும் பரணி பிக்சர்ஸ் பேனர்ல தமிழ்ப்படங்கள் பண்ணணும்னு பிளான் போட்டிருக்கேன். ஏற்கனவே தெலுங்குல எடுத்த படங்களை ரீமேக் பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். எதுவாயிருந்தாலும் எல்லாத்துக்கும் நீங்கதான் எழுதப்போறீங்க. நீங்க எம்.ஜி.ஆர்., சிவாஜி, சாவித்திரிக்கு மட்டுமில்லே, பானுமதிக்கும் பிடித்தமான ரைட்டர் தான். ஞாபகம் வச்சிக்குங்க.
ஒரு நல்ல நாளா பார்த்துக் கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணிக்கிறேன். நிறைய படம் பண்ணுவோம். சரிதானா?’
‘ரொம்ப சந்தோஷம்மா. பருத்தி புடவையா காய்ச்சது மாதிரி, கதை சொல்ல வந்த இடத்துல கமிட்மென்ட் கெடைக்குது’.
‘அதென்ன பருத்தி புடவையா காய்ச்சது மாதிரி. அப்படின்னா என்னா?’
‘பருத்திச் செடியிலேருந்து பஞ்சை எடுத்துப் பதப்படுத்தி, அதை நூத்து நூலாக்கி, அப்புறம் தறியிலே போட்டு நெய்து கடைசியா புடவையாக்குறதுக்குப் பதிலா, அது முதல்லேயே செடியிலேயே புடவையா காய்ச்சிடுச்சின்னா ரொம்ப சவுகரியமா இருக்குமில்லியா? அப்படின்னு அர்த்தம்.’
‘ஓகோ இப்போ நீங்கதான் அந்தப் பருத்திச்செடி! ஒங்க கிட்டேயிருந்து நான் புடவையா எடுத்துக்கப்போறேன். ஒரு புடவை இல்லே – பல புடவைங்க. எப்படி என் டயலாக்?’ என்று கூறிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.
அந்த ரசமான காட்சி, காண்பதற்கு ரம்மியமாக இருந்தது.
அழகிய பெண்களின் எந்த ஒரு செயலும் அழகாகவே இருக்கும். அது என் அனுபவபூர்வமான ஓர் உண்மை.
வாசுமேனனிடம் பானுமதி அம்மா சொன்னார், ‘கதையெல்லாம் ஒண்ணும் கேக்க வேண்டியதில்லே. எனக்கும், இவருக்கும் ஏற்கனவே நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. ஷூட்டிங் செட்டுல அப்பப்போ கேட்டுக்குறேன். எல்லாம் சரியா இருக்கும். கவலைப்படாதீங்க. ஆல் த பெஸ்ட், போயிட்டு வாங்க’.
திரும்பி காரில் வரும்போது வாசுமேனன் அன்புடன் என் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டு கூறினார்…
‘தம்பி! என்னால நம்பவே முடியலே. இப்படி நடக்கும்னு சத்தியமா நான் நினைக்கவே இல்லே. அந்தம்மாவை ஏன் போட்டீங்கன்னு சொல்லி எல்லாரும் என்னை ‘டிஸ்கரேஜ்’ பண்ணுனாங்க. நானும் ரொம்பக் குழம்பிப் போயிருந்தேன். இப்படின்னு முந்தியே எனக்குத் தெரிஞ்சிருந்தா இந்தப் படத்துக்கு ஒங்களையே டைரக்டராகவும் போட்டிருப்பேன். அப்பா! எனக்கு படமே முடிஞ்சி ரிலீஸ் ஆன மாதிரி ஆயிடுச்சி. ரொம்ப நன்றி’.
அன்றைக்குச் சொன்னதைப் போலவே ஒருநாள் அவருடைய காரை என் வீட்டிற்கு அனுப்பி என்னை வரவழைத்து, தன் வீட்டின் பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, ஒரு புதிய வெள்ளித் தட்டில் மஞ்சள் குங்குமம் பழங்களின் மீது ஒரு கவரையும் வைத்துக் கொடுத்தார். எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
வழக்கம்போல அந்தக் கவரை என் மனைவியிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கி வழக்கம்போல மாதா படத்தின் அடியில் வைத்து விளக்கேற்றி வணங்கிவிட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு பிரித்துப் பார்த்தார்.
வழக்கம்போல அதன் உள்ளே ‘வெய்யி நூட்ட பதஹாரு’ – ஆயிரத்து நூற்றுப் பதினாறு ரூபாய் இருந்தது.
பரணி பிக்சர்ஸ¨க்கு நான் முதன் முதலாக திரைக்கதை வசனம் எழுதி, பானுமதி அம்மாவே நடித்து, இயக்கித் தயாரித்து வெளியிட்டு, சென்னை மவுண்ட் ரோடு கெயிட்டி தியேட்டரில் பத்து வாரங்களுக்கு மேல் ஓடிய அந்த வெற்றிப்படம் ‘இப்படியும் ஒரு பெண்!’
அதைத்தொடர்ந்து அவருக்காக ‘வாங்க சம்பந்தி வாங்க’ என்ற படத்துக்கும் வசனம் எழுதினேன். இந்த இரண்டு பெயர்களும் நான் இட்டவையே.
இதற்கு இடையில் ஜி.சுப்ரமணிய ரெட்டியாரின் நவநீதா பிலிம்ஸ் தயாரித்து கிருஷ்ணன்–பஞ்சு இயக்கி நான் வசனம் எழுதிய ‘பத்து மாத பந்தம்’ படத்தில் பானுமதி அம்மா கர்நாடக இசைப்பாடகி கல்யாணி என்ற பாத்திரத்தில் தோன்றி, அற்புதமாக நடித்து, ‘நடிப்பின் இலக்கணம்’ என்று அறிஞர் அண்ணா வழங்கிய அந்தப் பட்டத்தை மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்திக் காட்டினார்.
அடுத்து ஜி.சுப்பிரமணிய ரெட்டியார் தயாரித்து இயக்கிய ‘மனமார வாழ்த்துங்கள்’ படத்தில் அம்மா நடித்து அதற்கும் நான்தான் வசனம் எழுதினேன்.
‘பத்து மாத பந்தம்’ படம் அவருடைய சிறந்த நடிப்புக்காகவும், பாட்டுக்காகவும் அவருக்கேற்றபடி நான் எழுதிய நல்ல வசனங்களுக்காகவுமே ஓடியது எனலாம்.
‘இப்படியும் ஒரு பெண்’, ஏவி.எம்.மின் ‘அன்னை’, ‘பத்து மாத பந்தம்’ முதலிய படங்கள் பானுமதி அம்மாவின் தலைசிறந்த நடிப்புக்காகவே ஓடிய தரமான படங்கள்!
ஏ.எம்.ரத்தினம் பானுமதி அம்மாவை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்து தெலுங்கில் தயாரித்த ‘பெத்தரிகம்’ என்ற படத்தை ‘பெரியவர்’ என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். அதற்கும் நான்தான் வசனம் எழுதினேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு நான் அதிகப் படங்களுக்கு எழுதியதைப்போல பானுமதி அம்மாவுக்கும் நிறைய படங்களுக்கு எழுதிப்புகழ் பெற்றேன்.
அவருடைய அரிய நடிப்பாற்றலை என் பேனா நன்கு பயன்படுத்திக்கொண்டு எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது.
என் மீது அவர் தனி அன்பு கொண்டிருந்தார். அந்நாட்களில், அவர் தனது ஒரே மகன் பரணியின் பெயரால் கட்டிய பரணி ஸ்டூடியோவுக்குப் பின்புறமிருந்த நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்றார். அதில் இரண்டு மனைகளை என்னை எடுத்துக் கொள்ளும்படியும், அதற்குப் பணம் கொடுக்கவேண்டாம். மிகக் குறைந்த விலை போட்டு நிர்ணயித்து, அவருக்கு நான் எழுதிய படங்களின் பணத்தில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லி அதைப்பதிவு செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார்.
அப்போது, அந்த இடத்தின் மனைகளின் அருமை தெரியாத நான் மறுத்து, அதற்குப்பதில் பணமாக வாங்கிக்கொண்டேன். இப்போது அதன் மதிப்பு வானத்தை எட்டியிருக்கிறது! எனக்குக் கொடுப்பினை இல்லை. அவ்வளவுதான்.
என்னோடு மட்டும் அல்லாமல், என் மனைவி, குழந்தைகளுடனும் உறவினர் போலப் பழகுவார். என் மனைவியை ‘தங்கச்சி’ என்று வாய் நிறைய வாஞ்சையுடன் அழைப்பார்.
எந்த ஒரு தயாரிப்பாளர் – டைரக்டர் எவருடைய வீட்டிற்கும் போய் பழக்கமில்லாத அவர், அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வந்தது எங்கள் பாக்கியம். எனக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகையை அவராகவே கொண்டு வந்து என் மனைவியிடம் கொடுப்பார்.
வீட்டில் உள்ள ஆண்டவர் மாதா படங்கள் மற்றும் நான் பல வெற்றிப் படங்களுக்குப் பெற்ற வெள்ளிக் கேடயங்கள், பரிசுகள் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, ‘எந்த சினிமாக்காரங்க இவ்வளவு பரிசுகள் வாங்கியிருக்காங்க!’ என்று வியந்து கூறுவார்.
ஒவ்வொரு வருடமும் நவராத்திரி நாளின்போது தவறாமல் என் வீட்டிற்கு கார் அனுப்பி மனைவி குழந்தைகளை கொலுவிற்கு அழைத்துச்சென்று விருந்தும், அன்பளிப்பும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இறுதிக்கால நாட்களில் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வந்த அவர் 80 ஆண்டுகள் 3 மாதங்கள் 17 நாட்கள் (7.9.1925 – 24.12.2005 – 1925 செப்டம்பர் 7–ந்தேதி பிறந்து 2005 டிசம்பர் 24–ந்தேதி வரையில்) நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தார்.
அப்போது ஐதராபாத்திலிருந்து பிரபல தெலுங்கு நடிகர் ஏ.நாகேஸ்வரராவ் இப்படிக் கூறினார்… ‘பி.பானுமதி ஒரு மகாராணியாக வாழ்ந்து மகாராணியாக மறைந்தார்!’.
பானுமதி அம்மாவின் ஒரே மகன் டாக்டர் பரணி. இப்போது 68 வயது நிரம்பிய டாக்டர் பரணியோடு அண்மையில் நான் அரை மணி நேரம் பேசி அம்மாவின் நினைவுகளைப் பரிமாறிக்கொண்டேன். அம்மாவைப்போலவே அவருடைய பிள்ளையும் என்னை, என் மனைவி மக்களுடன் தன் வீட்டிற்கு வருமாறு அன்புடன் அழைத்தார்.
பரம்பரைப் பண்புகள் என்றும் பசுமையானவை!
வருடங்களால் அவை வாடுவதில்லை!
***
==================================================================================================













அனைவருக்கும் இந்த நாள் இனிதாக அமைய பிரார்த்தனைகள். முதலில் சுஜாதா சார் .அவர் ஏன் இப்படிக் கோபத்துடன் எழுதி இருக்கிறார்? நல்லவைகள் சிலதையும் சேர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குகோபமாகவா எழுதி இருக்கிறார்? ஆதங்கம் இல்லையா? வாங்க வல்லிம்மா.வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குகோபமே ஆதங்கத்தின் இன்னோரு வெளிப்பாடுதானே. இந்த மனுஷன் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. எப்போதுமே உலகத்தையே சுமப்பவர் போல ஒரு தோற்றம். மிகப் பெரிய அறிவாளியோடு பேசுகிறோம் என்ற பயம் தோன்றும்:)
நீக்குநடிகை பானுமதியின் அதிகாரங்களிப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அருமையான பக்கத்தையும் பற்றிப் படிக்க இனிமையாக இருக்கிறது.
பதிலளிநீக்கு50களில் எம் ஜி ஆர் ,பானுமதி இணை மிகச்சிலாகிக்கப் பட்டது. அஞ்சலி ஜெமினி, சிவாஜி பத்மினி இது போல ஜோடிகள். பானுமதி நாடோடி மன்னனில் இறப்பதாக நடிக்க மறுத்ததால் பாதியில் மறைந்து சரோஜாதேவிக்கு இடம் கிடைத்தது. இருவரும் பத்துமாத பந்தத்தில் இணைந்தார்கள். அவரின் குரலில் ஆங்கிலப் பாடல் அப்போது மிக மிகப் பாராட்டப் பட்டது. இணையில்லாத நோ நான்சென்ஸ் நடிகை.
இந்தத் தொடரின் மேலும் இரண்டு பாகங்கள் அவ்வப்போது இதே வியாழனில் வெளியிடப்பட்டன அம்மா. இது மூன்றாம் பகுதி!
நீக்குஓ !அப்படியா. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கிறேன். பின் பதிவுகளைத் தேடிப்பார்க்கிறேன் மா.
நீக்குஆரூர்தாசின் பதிவு வியக்க வைக்கிறது.. இத்தனை ஆதரவானவராக இருந்திருக்கிறார் என்பதே சுகமாக இருக்கிறது கேட்க.நன்றி மா. ஶ்ரீராம்.
பதிலளிநீக்குஅவருக்கும் அவர் வேலை நடக்க வேண்டும் அல்லவா...!! ஜெமினியும் சாவித்ரியும்தான் அவரை சிவாஜியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்களாம்.
நீக்குஆமாம். இருவரும் அவருக்கு எப்படி எல்லாம் உதவி இருக்கிறார்கள் என்று ஏதோ காணொலியில் கேட்டேன். நன்றி மா.
நீக்குகுதிரையில் மனித முகம் தெரியவில்லை. கோபமாக உதைக்க ரெடியா இருக்கு.
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... எனக்கும் அப்படி மட்டும்தான் தெரிகிறது!
நீக்குஅனுஷ்கா அழகா இருக்கிறார். உங்களது கவிதையும் இனிமை மா.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குமாஞ்சோலைக் கிளிதானோ எங்க குடும்பத்தில ஒரு பையன் அந்தக் காலத்தில் தினம் பத்து தடவையாவது பாடுவார்:) இப்போது கலிஃபோர்னியாவில் ரிடயர்ட் வாழ்க்கை :) நான் அங்கே போன போது கேட்டேன். ...மாமி சும்மா சொல்லாதீர்கள் என்கிறான்.:)
பதிலளிநீக்குஎன் மாமா ஜவர்லாலும் பாடுவான்.. நானும் பாட முயற்சி செய்வேன். அந்த ஆர்வத்தை தடை போடமுடியாது. அதே போலதான் இதே படத்தில் வரும் இன்னொரு பாடலையும்... கோவில் மணி ஓசைதன்னை
நீக்குசுஜாதா கட்டுரை பெயர்த்து எழுதியதில் சில தவறுகள் ஆச்சரியம் குழப்பம் அளித்தன.
பதிலளிநீக்குபானுமதி பேசியதாக வந்ததில் நான் ரசித்தது அவர் இளையராஜாவுக்குச் சொன்னதாக வந்தது: " இந்தாப்பா நீ ட்யூன் மட்டும் போடு . பாடறேன்னு சொல்லி நீயே பாட்டுப் பாடறதெல்லாம் வேண்டாம்."
எந்த இடத்தில் தவறு என்று சுட்டிக் காட்டினால் திருத்தி விடுவேன். பானுமதி சொல்லக்கூடிய ஆள்தானே இல்லையா?!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குநன்றி அக்கா.. நீக்கி விட்டேன்.
நீக்குவொய்ஜா போர்ட் பற்றியும் ஆவிகளுடன் பேசுவது பற்றியும் முன்பும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குவிஸ்வநாத் அண்ட் சன்ஸ் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது ,வீடு தான் பிரமாண்டம். உங்கள் விமர்சனம் அருமை.
நன்றி கோமதிக்கா. ஆமாம் படம் பார்க்கலாம்தான்.
நீக்குவொய்ஜா போர்ட் பற்றிய முந்தைய கட்டுரையிலிருந்து மாறுபட்டது இது!
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குநலமே நாடுவோம்.
நீக்குஇன்று மருத்துவரிடம் செல்ல வேண்டும்
பதிலளிநீக்குநலமே விளையட்டும்,. நல்லவை நடக்கட்டும்.
நீக்குஅன்றிரவு... - யார் அந்த அவர்கள்?
பதிலளிநீக்குநல்ல விறுவிறுப்பு...
ஒருதரம் ஒய்ஜா போர்டு விளையாடி
இருக்கின்றேன்
நன்றி செல்வாண்ணா
நீக்குஇரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குயார் அந்த அவர்கள்? சுஜாதா அவர்கள் எழுதியதை படித்தேன்.
//அவர் மிகவும் இறந்திருந்தார். //
மிகவும் இறந்திருந்தார் என்றால் என்ன ?
, //'நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்' என்று பதில் கிடைத்தது.
யார் அந்த அவர்கள்...?//
யாரை சொன்னார்?
அதுதான் சுஜாதா. அது அவர் பாணி!
நீக்குபிறகுதான் வர இயலும். வெளியில் செல்கிறேன்
பதிலளிநீக்குOK
நீக்குபானுமதி அம்மா பற்றி ஆரூர்தாஸ் சொன்னதை படித்தேன்.
பதிலளிநீக்குஇங்கு தெலுங்கு நண்பர் வீட்டு பிள்ளையார் பூஜைக்கு போன போது அவர்களுடன் கொஞ்சம் தெரிந்த சில தெலுங்கு வார்த்தைகள் பேசினேன். பானுமதியின் "அத்தகாரு கதலு" கதைகளை பற்றி பேசினேன்.
மாமியார் கதைகள்’ தமிழில் விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். நல்ல சிரிப்பாக எழுதி இருப்பார்.
மாமியார் கதைகளா என்று தெரியவில்லை. புடவைப் பிசாசு துக்ளக்கின் மகள் என்றெல்லாம் கதைகள் எடுத்து வைத்திருக்கிறேன்.
நீக்குபானுமதி எழுதிய கதைகளா?
நீக்குYessu..!
நீக்குஅனுஷ்கா பழைய படம் அழகு சிரிப்பு. நீங்கள் எழுதி இருப்பதும் அருமை.
பதிலளிநீக்குஇடது பக்கம் மூளை வேலை செய்தால் தான் குதிரை முகம் தெரியுமா?
நகைச்சுவையில் புது பெயிண்ட் முதுகில் ஒட்டிக் கொண்டு இருக்கும் பெரியவர்கள் பேசுவது சிரிப்பு வருகிறது.
வாட்ஸாப் ஸ்டேட்டஸில் போடுவதற்கு முன்னர் இப்படி சில கவிதைகளை மாற்றி அமைத்து தயார் செய்தேன். அதில் ஒன்று இது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
அன்றிரவு சுவாரஸ்யமாக இருக்கிறது. வொய்ஜா போர்டு.. நாங்கள் சின்ன வயதில் இருந்த போது, எங்களுக்கு( எனக்கும், அண்ணாவுக்கும்) சித்தப்பா முறை கொண்டவர் இந்த போர்டை வைத்துக் கொண்டு, இரவு பன்னிரண்டு மணிவரை எங்களை விழிக்கச்சொல்லி, இதில் சில செய்திகளை சொன்னது ஞாபகம் வருகிறது. அந்த செய்தியை விட அவர் அன்று காட்டிய பில்டப் மறக்க முடியாதது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்தாலே கொஞ்சம் உரிமையாய் பேச பயம் வரும். அந்த நினைவு இப்போது தங்கள் பதிவை படித்ததும் வருகிறது.
நீங்களும் திருடர்களை பற்றி ஆரம்பித்து, அந்த போர்டு வரை திகிலாக தந்து விட்டீர்கள்.? நானும் சுஜாதா போல கேட்கிறேன். "யார் அந்த அவர்கள்.?" பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வொய்ஜா போர்ட் கிட்டத்தட்ட எல்லோருமே முயற்சித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆமாம் யார் அந்த அவர்கள்?!!! நன்றி கமலா அக்கா.
நீக்குநான் கேள்வி கேட்டால், நீங்களும், கேள்வியையே பதிலாக தந்தால் எப்படி.? :))
நீக்குபின்னே எனக்கு மட்டும் எப்படி..??!
நீக்குஅவர் பொதுவாக அந்த பொதுஜனத்தைப் பற்றி, அவர்கள் மனோபாவம் பற்றிச் சொல்கிறார்.
'யார் அவர்கள்?' என்று கேட்டால் நான் "இரு பூங்குயில்கள் என்று பாடி விடுகிறேன்!
ஹா ஹா ஹா. அப்போதும் பாட்டுதானா .? நான் அந்த திருடர்கள், பேய் பற்றி அளவளாவியவர்ள் யாரென கேட்டேன். அந்தப்பகுதி பாதியில் நிற்கிறதே.. .. அடுத்த வாரம் தொடருமோ என தெரிந்து கொள்வதற்காக சுஜாதாதாவையும் கூடவே அழைத்து வந்தேன்.
நீக்குஅன்றிரவு என்ன நடந்தது என்று தொடரும்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. முதலும், இரண்டும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இங்கும் பிறகு கேட்கிறேன்.
இரண்டாவது பாடலான " மாஞ்சோலை கிளிதானோ" வரிகளை யதேச்சையாக இங்கு வெளியில் பல கிளிகள் பறப்பதை பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். பதிவிற்கு வந்து பார்த்தால் அந்தப் பாடலே வந்துள்ளது ஒரு ஆச்சரியம்.!!! இந்த மாதிரி ஆச்சரியங்கள் எப்படி தன்னிச்சையாக நடக்கிறது என்பதை எந்த "போர்டில்" விசாரிப்பது? ஹா ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நினைப்பது நிறைவேறும் என்று நீங்கள் எண்ணியது பாடல் பதிவாக நடந்திருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது இல்லை?
நீக்கு"நினைப்பது நிறைவேறும்" என்ற பாடலின்படி நாங்கள் எப்போதும் உங்கள் பதிவுகளோடு அதிலும், ஒரு வாரத்தின் ஏழு நாட்களோடும் இணைந்திருக்கிறோம். வாரம் அது பாட்டுக்கு தன்னிச்சையாக நகர்கிறதா? இல்லை உங்கள் பதிவுகளின் துணையோடுதான் அது நகர்கிறதா.? என்பதே ஒரு ஆச்சரியந்தான்.!! ஆம்" திறமைகள்" இருக்குமிடத்தில்தானே வாரத்தின் நாட்களும், இணைந்திருக்கும். உங்கள் உழைப்புக்கு எப்போதும் என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள். நன்றி சகோதரரே.
நீக்குஆஹா.. தன்யனானேன் கமலா அக்கா.. தன்யனானேன்,
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தங்களின் கவிதை அழகாக உள்ளது. (அனுஷ்காவை போலவே..!)
நடிகை பானுமதி அவர்களின் இந்தப் பேட்டியும் படித்திருக்கிறேன் என நினைக்கிறேன். ஆரூர்தாஸ் அவர்களின் (பானுமதியைப்பற்றிய) பல பேட்டிகளும் சுவையாக இருக்கும். பானுமதி அவர்கள் தான் ஒரு சகலகலா வல்லி என்பதை நீரூபித்தவர். அவரின் கம்பீரம் நன்றாக இருக்கும். இதில் வந்த "பத்துமாத பந்தம்" படத்தை சென்னை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். நல்ல நடிகை.
எனக்கும் இடது பக்க மூளை வேலை செய்யாததால், குதிரை முகத்தில் ஏதும் தெரியவில்லை.வேறு யாரிடமாவது இதைச் சொன்னால், "அது சரி உனக்கு மூளையென்று ஒன்று இருந்தால் அல்லவா இடது,, வலது என்பதெல்லாம். "என்பார்கள். ஹா ஹா ஹா.
ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. நாரதரும் இந்த இசைக்குள் இசைவாய் வந்து விட்டார் போலும். முதுகில் பெயிண்ட் F ஆக ஒட்டிக் கொண்டதை .அறியாமல் பேசும் பெரியவர்கள், அப்போதைய கவரிங் வந்து விட்டதை காட்டும் நகைச்சுவை, மாப்பிள்ளை முறுக்கு, சாக்கடை நாற்ற செண்ட என அனைத்தையும் ரசித்தேன். வியாழன் கதம்பம் சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. ஆரூர்தாஸ் எழுதிய இந்தப் பகுதிகள் புத்தகமாகவே வந்திருக்கிறது.
நீக்குஅதில் மனித முகமே இல்லை போல.. யாருக்குமே தெரியவில்லை.
அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.