"அந்த மூணு இட்லியை அப்படியே தூக்கி குப்பைல போடுங்க.. நேத்தைக்கு மிச்சம்.. யாரும் போட்டுக்க மாட்டாங்க? - பாஸின் குரலில் எரிச்சல் இருந்தது."அதென்ன மூணு இட்லி அதிகமா போயிடுதா? அதையும் போட்டு காலி பண்ணியிருக்க வேண்டியதுதானே?"
அவர் கேள்வியில் நியாயம் இருந்தது. ஆனால் எப்படியோ மிஞ்சி விடுகிறது. என் மாமியார் (ஆ மு) சாப்பிடும்போது இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை என்று மட்டும் சாப்பிடுவார். அதற்குமேல் போட்டால் கைநீட்டி தடுத்து "அதிகம்" என்பார் சிக்கனமாக. சமயங்களில் - மிகச்சில சமயங்களில் - அரை தோசை அல்லது அரை இட்லி கேட்பார்! பாஸின் கோபம் எல்லை மீறும்! அதென்ன அரை கணக்கு என்று!
இதோ.. இன்று பாஸின் மூட் சரியில்லை. இட்லியை விரோதமாக பார்த்தார். நான் அதை ஆதரவாக என் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். மகன் உடலி உப்புமா செய்தால் சாப்பிடுகிறேன் என்றான்.
"ஆமாம்.. மூணு இட்லியை உதிர்த்து உப்புமா வேற" - பாஸின் முகவாய்க்கட்டை அவர் தோளைத் தாக்கித் திரும்பியது.
நான் முன்னரே முயற்சித்திருந்த - சமீபத்தில் ஒரு மாமி செய்து அனுப்பிய - இட்லி ஃப்ரை முயற்சிக்கத் தீர்மானித்தேன். அந்த மாமி அதில் ஏதோ சாஸ் எல்லாம் போட்டு, மேலே காராசேவ்வோ ஓமப்பொடியோ தூவி அனுப்பி என் விரோதத்தை சம்பாதித்திருந்தார்.
சும்மா எப்படி வருகிறது என்று பார்க்கத்தானே... அன்று சரஸ்வதி பூஜை என்று வெங்காயம் பூண்டு வேறு சேர்க்கக் கூடாது என்று பாஸ் கட்டளையிட்டிருந்தார். உன்னால் முடியும் தம்பி ஜனகராஜ் மாதிரி வெங்காயம் பூண்டு சேர்க்காதிருக்க ஏதோ ஒரு காரணம்!
நானும் வெங்காயம் பூண்டு தொடவில்லை. இருந்தது மூன்றே இட்லி என்பதால் ஒரு சிறு கேரட், ஒரு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் உப்பு, பெருங்காயப்பொடி எடுத்து கேரட் தக்காளியை சிறு துண்டுகளாக்கிக் கொண்டு தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டேன். தக்காளியின் நீர்வளம் போதுமே..
எடுத்துக் கொண்டேனா.. அதை ஓரமாக வைத்து விட்டு, இட்லியை சிறு துண்டுகளாக்கிக் கொண்டேன். சிறு துண்டுகளாக்கிக் கொண்டேனா, அவற்றை அப்படியே வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொண்டேன்.
பொரித்ததை ஓரமாக வைத்துக் கொண்டேன். வைத்தேனா, அப்புறம் முதலில் அரைத்து வைத்திருந்தேனே அந்த கலவையை எடுத்து வாணலியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் ஊற்றி வதக்கினேன்.
மிக்சியில் இருப்பது பூராவும் வீணாகாமல் வரவேண்டுமே.. அதனால் மிக்சியில் கொஞ்சமாக தண்ணி விட்டு அதை ஒரு சற்று சுற்றி வாணலியில் விட்டேன்.
பச்சை வாசனை போக அது கொதித்ததும் பொரித்து வைத்திருந்த இட்லித்துண்டுகளை அதில் போட்டு, புரட்டி எடுத்து, மகன்களுக்கு மற்றும் பாஸுக்குஆளுக்கு இரண்டு துண்டு கொடுத்தேன். ரசித்தார்கள்!,

===================================================================================
மனசாட்சியம் - 25
KGY Raman
துணுக்குத் தோரணம்
பெர்னாட்ஷா அவர்களைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர் அறையை சுற்று முற்றும் பார்த்துவிட்டு, " ஏன் அறையில் எந்தவிதமான அலங்காரமும் செய்யவில்லை ? குறைந்தபட்சம் ஒரு பூ ஜாடியில் சில பூக்களைக் கொய்து வைத்திருக்கலாமே ! பார்க்க அழகாக இருக்குமே ! எனக்குப் பூக்கள் என்றால் ரொம்பவும் இஷ்டம் " என்று சொன்னாராம்.
" விரும்புகிற பொருளை வெட்டிக் கொண்டு வந்து வைக்க நான் விரும்ப மாட்டேன். எனக்கு குழந்தைகள் என்றால் கூடத்தான் ரொம்ப இஷ்டம் " என்று பதில் சொன்னாராம் ஷா.
இந்த மாதிரி சம்பாஷணைகளுக்குப் பெயர் போனவர் அவர். ஒரு அறிமுக எழுத்தாளர் தான் எழுதிய நீண்ட நாவலைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து " will you please suggest the best channel for publishing this " என்று கேட்டதற்கு ஷா " The best I could think of is the English channel " என்று பதில் சொன்னாராம். நல்லதை செய்து நதியில் போடு.
அதேபோல தனது நாடகத்திற்கு பிரதம மந்திரி சர்ச்சிலை அழைத்த போது அவர் " நான் அடுத்த வாரம் வருகிறேன் - நாடகம் அடுத்த வாரமும் நடந்தால் " என்று கிண்டலாக பதில் சொல்லி இருந்தாராம். நாடகம் மிகப் பெரும் வெற்றி பெற்று இருபத்தைந்து வாரம் போன பின், பிரதம மந்திரி க்கு ஷா எழுதியது:
" நாடகம் வெள்ளி விழா கண்டுவிட்டது. இரண்டு டிக்கெட்டுகள் அனுப்பி இருக்கிறேன் . அவசியம் உங்கள் நண்பருடன் வரவும் -உங்களுக்கு நண்பர் யாரேனும் இருந்தால் ".
அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் ஒருவர் கேட்கிறார்:
"ஷேக்ஸ்பியர் ஒருவரே தான் அந்த எல்லா நாடகங்களையும் எழுதினார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ?"
ட்வைன்: எனக்குத் தெரியாது. சொர்க்கத்தில் ஷேக்ஸ்பியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்."
" ஒருவேளை அவர் சொர்க்கத்தில் இல்லாவிட்டால் ? "
"அப்படியானால் நீங்கள் கேட்டு விட வேண்டியது தான் ."
ஃபாரின் சரக்கை விட்டுவிட்டு உள்நாட்டுக்கு வருவோம்.
காந்திஜி திடீரென்று பால் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டாராம். அந்த சமயத்தில் காந்தி ஆசிரமத்திற்கு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வந்திருந்தாராம்.
" நான் பால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். பால் சாப்பிடுவதும் மாட்டு ரத்தம் குடிப்பதும் ஒன்றுதானே" என்றாராம் காந்தி.
" அப்படியானால் நாம் எல்லோரும் மனித ரத்தம் குடித்து வளர்ந்தவர்கள் தானே " என்று ராதாகிருஷ்ணன் பதில் சொன்னாராம்.
அதன் பிறகு பால் சாப்பிடாமல் இருப்பது தவறு என்று நிறைய எடுத்துச் சொன்ன பிறகு காந்தி ஒரு சமரசத்திற்கு வந்தார் . அதாவது பசுவின் பாலைத்தான் குடிப்பதில்லை ஆட்டுப்பால் குடிக்கலாம் என்பதுதான் அது.
மகாத்மா காந்தி லண்டன் வட்டமேசை மகா நாட்டுக்காக ப் போகிறார். அவர் ஆட்டுப்பால் தான் சாப்பிடுவார் என்பதால் ஆட்டுப்பாலைக் கண்டுபிடித்து வாங்கி வர ஏகப்பட்ட அலைச்சல், மிகப்பெரிய செலவு. அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரோஜினி தேவி சொன்னாராம் " பாபுவை அவருடைய எளிய பழக்க வழக்கங்களில் வைத்திருக்க நாங்கள் பெரும் செலவு செய்ய வேண்டியது வேண்டியதாக இருக்கிறது."
ராஜாஜியிடம் ஒருவர் " இப்போது இப்படிச் சொல்கிறீர்கள் , அப்போது அப்படி சொல்லி இருக்கிறீர்களே " என்று அவர் பேச்சில் இருந்த முரணைக் காண்பித்துக் கேட்டாராம்.
" பிஞ்சு மாங்காய் துவர்க்கும் , மாங்காய் புளிக்கும், ஆனால் மாம்பழம் இனிக்கும் " என்றாராம் ராஜாஜி.
வித்வான் மகாராஜபுரம் சந்தானம் மிகப் பிரபலமாக இருந்த காலம். சபா செகரட்டரி தன் வரவேற்பில் " சந்தானம் அவர்கள் வருஷா வருஷம் இந்த சபாவுக்கு வரும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்று பேசியதற்கு சந்தானம் " வரும்படி இருந்தால் வரத்தான் வேண்டும் . மறுக்க மாட்டேன் " என்றாராம்.
ஒரு பிரபல மத்திய மந்திரி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் " இப்போது நீங்கள் முன்னை விடநன்றாகப் பாடுகிறீர்கள் " என்று பாராட்டினாராம்.
" நான் எப்பவும் போல் தான் பாடிக் கொண்டிருக்கிறேன் அவ்விடத்தில்தான் இப்போது ஞானம் பிறந்திருக்கிறது " இது அரியக்குடியின் பதில்.
நல்ல இசைக் கச்சேரியில் மிருதங்கம் கடம் தனி ஆவர்த்தனம் வாசிப்பார்கள். அதுபோல ஒரு சுவாரசியம் இந்த விதமான புத்திசாலித்தனமான பேச்சு நமக்குத் தருகிறது. நாமும் ஒன்று இரண்டு முறையாவது இவ்வளவு சாதுரியமாகப் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !
என் அபிமான பாடகர் மதுரை மணி ஐயரின் கச்சேரியை கோயம்புத்தூரில் ரசித்துக் கேட்டேன். கச்சேரி முடிந்த பின் ஒரு ரசிகர் அவரிடம் வந்து " மணி ஐயர்வாள் ! போன மாசம் *** வீட்டு கல்யாணத்துல உங்க கச்சேரி கேட்டேன். " ஜானகி ரமண " காப்பி ரொம்ப பிரமாதம்" என்று பாராட்டினார்.
"கல்யாணம்னா காப்பி நல்லாத்தானே இருக்கணும் " - இது மணி ஐயர் பதில்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி என் எஸ் கிருஷ்ணன் வீட்டிற்குப் போகிறார். அன்போடு வரவேற்ற என் எஸ் கே " என்ன சாப்பிடுறீங்க காப்பியா டீயா ?" என்று கேட்டதற்கு கல்கியின் பதில் ரொம்ப பிரசித்தம் : " டீயே மதுரம்."
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
பதிலளிநீக்குமூன்று இட்லிக்குப் பன்னிரண்டு துண்டுகள் வேண்டாமோ:))))))
பதிலளிநீக்குமசாலா சூப்பரக இருக்கிறது பார்க்க. இட்லியின் கலரோ அபாரம். வாழ்த்துகள் ஶ்ரீராம். பாஸ் மகிழ்ந்தாரா. இன்னும் நிறைய இட்லி செய்து கொடுக்கப் போகிறார். நீங்களும் செய்யப் போகிறீர்கள்!!!!
பதிலளிநீக்குஇதுக்குப் பெயர் சில்மிஷம் இல்லை. பல்மிஷம்.
பதிலளிநீக்குநகைச்சுவை அனைத்தையும் ரசித்தேன். பெர்னார்ட் ஷா சூப்பர்.
பதிலளிநீக்குமிக்க நன்றி. அது என்ன ஒவ்வொரு துணுக்கைப் படித்ததும் ஒரு கருத்துப் போட்டு விடுகிறீர்கள் ?
நீக்குநன்றி ஷா எனது அபிமான எழுத்தாளர்.
நீக்கு" விரும்புகிற பொருளை வெட்டிக் கொண்டு வந்து வைக்க நான் விரும்ப மாட்டேன். எனக்கு குழந்தைகள் என்றால் கூடத்தான் ரொம்ப இஷ்டம் " என்று பதில் சொன்னாராம் ஷா.'' haaahaaa haaa. dark humor.
பதிலளிநீக்குஅவருடைய நாடகம் மேன் அண்ட் சூப்பர் மேன்படித்திருக்கிறீர்களா ? நான் பத்து முறை படித்திருப்பேன்.
நீக்குஅரியக்குடி, மஹாராஜ புரம் இருவருமே சூப்பர்,
பதிலளிநீக்குமிக்க நன்றி. இருவருமே புகழ்பெற்றவர்கள் என்றாலும் அவர்கள் பாணி என்பது வேறு. இசை ரசிகர்கள் அரியக்குடி பாணி பற்றி காரசாரமான விவாதங்கள் செய்தது உண்டு.
நீக்குநம்ம மதுரைக்காரரும் சளைத்தவர் இல்லை:)
பதிலளிநீக்குநன்றி. மதுரை மணி ஐயர் நான் ஆராதிக்கும் இசை மேதை .
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாழ்க நலம்
பதிலளிநீக்குநகைச்சுவையுடன் புது மாதிரியான கைப் பக்குவம்....
பதிலளிநீக்குசிறப்பு...
சரியாகச் சொன்னீர்கள்.. நன்றி.
நீக்குஇன்றைய துணுக்குத் தோரணங்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன ஓரிரண்டு முன்பே படித்திருந்த போதிலும்
பதிலளிநீக்குஅது தவிர்க்க முடியாத ஒன்று. பாராட்டுக்கு நன்றி. தெரிந்த சில கலந்து இருந்தால், நகைச்சுவை அதிகம் இருப்பது நல்லது தான் என்று நான் நினைப்பதுண்டு.
நீக்குகலந்து இருந்தாலும் என்று படிக்கவும்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சரஸ்வதி பூஜை இட்லி ஃப்ரை நல்ல முயற்சி
பதிலளிநீக்குஆளுக்கு ஓரிரண்டு துண்டுகள் என்பதால் நல்லா வரலைனாலும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாங்க
எனக்கு ஆறின இட்லி ல மி பொடி தடவி வைத்திருந்து மறுநாள் சாப்பிடப் பிடிக்கும் சூடான இட்லி ஊசிப்போயிடும்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமூன்றே மூன்று இட்லியானாலும் அத்துடன் காய்கறி கலவையை கலந்து செய்து அதற்கு மதிப்பூட்டி விட்டீர்கள். இட்லி பெருமிதத்துடன் உவகையும் அடைந்திருக்கும். பெருமிதம் அதற்கு. உவகை நமக்கு.
உங்களின் சிறப்பு சமையலின் நுணுக்கத்தை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பகுதியும் அருமையாக உள்ளது. நகைச்சுவை என்பது சிலருக்கு சகஜமாக பேச்சோடு பேச்சாக இயல்பாக வருவது. அத்தகையவர்களோடு ஆற அமர்ந்து பேசுவதே ஒரு மன உற்சாகத்தைத் தரும். "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என பழமொழி கூட உண்டல்லவா.! பதிவில் அத்தனை பேரின் நகைச்சுவைகளையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.