ரொம்ப சிம்பிள்ங்க..
பிறகு
அந்த மாவிலிருந்து தேவைக்குத் தகுந்தபடி இரண்டு மூன்று ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு,
எடுத்திருக்கும் மாவுக்குத் தகுந்த அளவு உப்புச் சேர்த்து, (உப்பு அளவில்
ஏதாவது சந்தேகம் இருந்தால் கீதா மேடத்தைக் கேட்கவும்) கெட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும். உரை(றை?) குத்தி நாலு மணி நேரம் சென்று எடுத்த தயிர் சரியாக இருக்கும்.
பச்சடிப்
பதத்துக்குக் கலக்கிக் கொண்ட பிறகு அதில் கடுகு, பெருங்காயம் (சற்று
தாராளமாகவே), காய்ந்த மிளகாய் (உங்கள் காரத் தேவையைப் பொறுத்து) தாளித்துக்
கொள்ளவும்.
கரிவேப்பிலை,கொத்துமல்லி சேர்க்கவும். சிலர் இதில் தக்காளியைப் வதக்காமல் பச்சையாகவே நறுக்கிச் சேர்ப்பார்கள். (நாங்கள் சேர்ப்பதில்லை)
அவ்வளவுதான். டாங்கர் பச்சடி ரெடி. துவையல் சாதம் முதல் வத்தக்குழம்பு சாதம் வரை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
படங்கள் : நன்றி இணையம்.