திங்கள், 21 செப்டம்பர், 2015

"திங்க"க்கிழமை 150921 :: டாங்கர் பச்சடி.


ரொம்ப சிம்பிள்ங்க..

உளுத்தம் பருப்பை எடுத்து நல்லா வாசனை வர, சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.  அதை ஆறவைத்து, பிறகு மிக்ஸியில் இட்டு, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.  அளவு உங்கள் இஷ்டம்.  ஏனென்றால் வறுத்த பொடியை எடுத்து பாட்டிலில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
 

                                                                    Image result for dangar pachadi images
 
பிறகு அந்த மாவிலிருந்து தேவைக்குத் தகுந்தபடி இரண்டு மூன்று ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு, எடுத்திருக்கும் மாவுக்குத் தகுந்த அளவு உப்புச் சேர்த்து, (உப்பு அளவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீதா மேடத்தைக் கேட்கவும்) கெட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும்.  உரை(றை?) குத்தி நாலு மணி நேரம் சென்று எடுத்த தயிர் சரியாக இருக்கும்.
 
 
பச்சடிப் பதத்துக்குக் கலக்கிக் கொண்ட பிறகு அதில் கடுகு, பெருங்காயம் (சற்று தாராளமாகவே), காய்ந்த மிளகாய் (உங்கள் காரத் தேவையைப் பொறுத்து) தாளித்துக் கொள்ளவும்.
 

                                                            Image result for dangar pachadi images
 
கரிவேப்பிலை,கொத்துமல்லி சேர்க்கவும்.  சிலர் இதில் தக்காளியைப்  வதக்காமல் பச்சையாகவே நறுக்கிச் சேர்ப்பார்கள்.  (நாங்கள் சேர்ப்பதில்லை)
 
 
அவ்வளவுதான்.  டாங்கர் பச்சடி ரெடி.   துவையல் சாதம் முதல் வத்தக்குழம்பு சாதம் வரை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.




படங்கள்  :  நன்றி இணையம்.

44 கருத்துகள்:

  1. மிகவும் பழைய கால பச்சடி இல்லையா? குறிப்பு பிரமாதம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ சாமிநாதன் மேடம். ஆமாம், இப்பல்லாம் யாராவது செய்யறாங்களா இல்லையான்னே தெரில!

      நீக்கு
  2. டாங்கர் பச்சடி
    படிச்சாத் தானே தெரிகிறது
    சுவையறிந்து நாவூறுவதை

    பதிலளிநீக்கு
  3. பிழைச்சீங்க, போங்க! :)))) டாங்கர் பச்சடிக்குத் தாளிப்பில் பச்சைமிளகாயும் போடலாம். சீரகம் பச்சையாகக் கையால் கசக்கிச் சேர்த்தால் நன்றாக இருக்கும். வறுக்காத உளுத்த மாவிலும் பண்ணலாம். இந்த வறுக்காத உளுத்த மாவு கொஞ்சம் மிஷினில் கால் கிலோ அல்லது அரைக்கிலோ உளுந்தைக் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டோமானால் கேழ்வரகு, கம்பு, கோதுமை, ரவா மற்றும் பல தோசைகளுக்குச் சேர்க்க வசதி! நான் ஒரு கிலோ அரிசிக்கு 250 கிராம் உளுந்தைச் சேர்த்துக் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வேன். அதை அப்படியே தேங்குழல் பண்ணவோ, பஜ்ஜி மாவில் கலக்கவோ வைச்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேடே... குறை ஒன்றுமில்லை! நன்றி கீதா மேடம். ஆமாம், மற்ற பயன்பாடுகளை நான் சொல்ல மறந்துட்டேன்.

      நீக்கு
  4. வறுத்த உளுத்த மாவையும் கரைச்ச தோசைகளுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமா ரவா தோசை விள்ளாமல் விரியாமல் மெலிதாக நன்றாக வரும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி இதுவரை நான் முயற்சி செய்ததில்லை கீதா மேடம். ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

      நீக்கு
  5. டாங்கர் பச்சடி அறிந்தது இல்லை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்ததில்லையா? ஆச்சர்யம்தான் சுரேஷ். நன்றி உங்கள் வருகைக்கு.

      நீக்கு
    2. இன்று கூட என் வீட்டில், டாங்கர் பச்சடிதான். நானே செய்துகொண்டது
      அது சரி..... டாங்கர் என்றால் என்ன? உளுந்தாக இருக்குமோ???

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே.

    சுவையான டாங்கர் பச்சடியின் விபரங்கள் அருமை., எங்கள வீட்டில் அன்றும் இன்றும் சமையலில் டாங்கர் பச்சடி இடம் பெறுவது உண்டு. வறுத்த உளுந்த மாவின் வாசம் போய்விடும் என்பதால் நாங்களும் அதில் தக்காளி சேர்பதில்லை.ம

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி GMB ஸார். எனக்கும் அதே கேள்வி. கீதா மேடம் சொல்லக்கூடும் இதற்கான பதிலை.

      நீக்கு
  8. ரொம்ப ஈசியான பச்சடி;எனக்குப் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ரொம்பவும் பிடித்த பச்சடி...மாமியாரிடம் கற்றுக் கொண்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கீதா மேடம் சொன்னது போல் வறுத்த உளுந்து மாவு ரவா கரைச்ச தோசையில் சேர்த்தால் நன்றாக வரும்...பிய்ந்து போகாமல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. //கீதா மேடம் சொன்னது போல் வறுத்த உளுந்து மாவு ரவா கரைச்ச தோசையில் சேர்த்தால் நன்றாக வரும்...பிய்ந்து போகாமல்....//
    கீதா//

    அதானே, ஆராய்ச்சியெல்லாம் இல்லை பண்ணிட்டுச் சொல்றோம். :)

    பதிலளிநீக்கு
  12. சாப்பிட்டா ஏதும் டேஞ்சர் இல்லையே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு டேஞ்சரும் இல்லை கில்லர்ஜி. டேஸ்ட் உங்களுக்குப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான்!

      நீக்கு
  13. வறுத்தரைத்த உளுத்தம் மாவிற்கு போடுவா மாவு என்று ஒரு பெயர். சீடைக்கு,முருக்கிற்கு,தட்டைக்கு என எல்லாவற்றிலும் சேர்ப்பதால் போடும் மாவு போடுவாமாவு என்று ஆகிவிட்டதோ என்னவோ? ஸமயத்தில் உளுந்து அப்பளாத்தைக் கரைத்தும் தயிரில் சேர்ப்பதுண்டு. துவையல்,பொடி சாத வகைகளுடன் ஜோடி.. எழுதுபவர்கள் எல்லாம் எழுதிவிட்ட பிறகு கடைசியில் வருவலும்,அப்பளாம், பருப்பு டாங்கர் சினிமா பாட்டு ஒன்று. வழக்கம்போல் வடைபோளி மலைப்பழமும்,வாழைக்காய் கறியுடன் மோர்க்குழம்பும்,அவரைக்காய் கூட்டுடனே கோசும்பறி, வறுவலும் அப்பளாம் பருப்பு டாங்கர்,ஆவக்காய் ஊறுகாய் நெல்லிக்காய்சட்னி,பாகற்காய் கடும் பிட்லை பால்ப்பாயஸம்,ரஸத்துடனே கத்தரிக்காய் வாங்கி பாத்தும்,ராத்திரிக்கே தோய்த்து வைத்த ஆடைதயிரும், போதுமா? இதில் டாங்கர் பச்சடி வருகிறது.. எங்க கால ட்ராமாவில் பாடிய பாட்டு இது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் காமாட்சி அம்மா.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      நீக்கு
  14. டாங்கர் பச்சடி ஜோர். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  15. தங்கர் பச்சானை தெரியும் ,டாங்கர் பச்சடியை உங்க மூலமா தெரிஞ்சுகிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  16. அருமையான எளிமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    ஐயா

    நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம வாக்கிற்கும், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன்.

      நீக்கு
  18. பச்சடி அருமை. எல்லோரும் தங்கள் கருத்தையும் நிறைய குறிப்புகளும் கொடுத்து இருக்கிறார்கள் எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எல்லோருமே கலந்து உரையாடியிருக்கிறார்கள்! நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  19. பச்சடி..... அருமை.

    இந்த டாங்கர் பச்சடி கேட்டிருக்கிறேன். “போஜனம் செய்ய வாருங்கள்” பாட்டிலும் இப்பச்சடி வரும். பாட்டு இங்கே கேட்கலாம்.

    http://rasithapaadal.blogspot.com/2011/05/blog-post_24.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு மட்டும்தான் இருக்கிறீர்களா வெங்கட்? டேஸ்ட் பார்த்ததில்லையா?

      நீக்கு
  20. இத்தனை சுலமா?.. இவ்வளவு காலமாக இதை அறிந்ததே இல்லையே..

    மிக அருமை சகோதரரே! நல்ல குறிப்பும் பகிர்வும்!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை காலமாக அறிந்ததில்லையா? ஆஹா... இது.... இது... இதுதான் வேணும் சகோதரி இளமதி... உங்களுக்கும், பகவான்ஜிக்கும், தளிர் சுரேஷுக்கும் இது புதுசு!

      நீக்கு
  21. புதுசாக இருக்கு இனி செய்து பார்த்துவிடலாம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!