இனி நம்மை குழந்தைகளாகப் பார்க்க யாரும் இல்லை என்கிற எண்ணம் வருகிறது.
85
வயது என்பது சிறிய வயது இல்லைதான். ஆனாலும் 'இன்னும் இரண்டு மூன்று
வருடங்கள் இருந்திருக்கலாம்' என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பேராசை.
இரண்டு வருடங்கள் கடந்ததும் அடுத்த எக்ஸ்டென்ஷன் ப்ரேயரை அப்போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம். 'சொல்லுகிறேன்' காமாட்சி அம்மா இது குறித்து அழகாக பேசினார்கள். கொஞ்சம் தெளிவு வந்தது.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் அப்பா.
எனக்கு அல்லது எங்கள் குறுகிய வட்டத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்திருக்க வேண்டிய சோகம், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் கதையை எங்கள் ப்ளாக்கில் வெளியிட்டதில், அவருக்கு நெருங்கியவர்கள் இன்னும் கிடைத்தார்கள். அவர் செல்லும் வழிக்கு தங்கள் அனுதாபங்களால் / பிரார்த்தனைகளால் நல்வழி அமைத்துக் கொடுத்தார்கள்.
அந்தக்
கடினமான நேரத்தில் எனக்கு அலைபேசியில் ஆறுதல் சொன்ன சுப்பு தாத்தா, கீதா
சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம், ரஞ்சனி நாராயணன் மேடம், சொல்லுகிறேன்
காமாட்சி அம்மா, வல்லிம்மா, கில்லர்ஜி, மோகன்ஜி மற்றும் மெயிலில் ஆறுதல்
சொன்ன நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, ஜி எம்
பி ஸார், அப்பாதுரை, வைகோ ஸார், பின்னூட்டங்களில் ஆறுதல் சொன்ன அத்தனை
நண்பர்களுக்கும் எனது / எங்களது நன்றிகள். யார் பெயரும் தவறுதலாக விட்டுப்
போகவில்லை என்று நம்புகிறேன்.
கில்லர்ஜி
மற்றும் சுப்பு தாத்தா முதல் முறை என்னுடன் பேசும்போதே இப்படியான
சந்தர்ப்பத்தில் பேச வேண்டியிருக்கிறதே என்று வருத்தப் பட்டார்கள். இது
போன்ற கணத்தில்தானே உங்கள் ஆறுதல் எங்களுக்கு மிகவும் பலமாக இருந்தது!


