Competition results லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Competition results லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.6.14

திங்க கிழமை. 140623:: சொல்லுங்க வெல்லுங்க போட்டி

            
சென்ற திங்க கிழமை பதிவில் வெளியான சொல்லுங்க, வெல்லுங்க, மெல்லுங்க - போட்டிக்கு வந்த சமையல் குறிப்புகள். 
                      பரிசு வெல்பவர்கள்: கீதா சாம்பசிவம், மற்றும் மாடிப்படி மாது. (மாடிப்படி மாது பெயரையும் விலாசத்தையும் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்) 
(நீலக் கமெண்ட் யாவும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் கருத்து)       

Geetha Sambasivam 

ரொம்ப சிம்பிள், ப்ரெட் ஒரு பாக்கெட் வாங்கி, கால் கிலோ தக்காளி, கால் கிலோ வெங்காயம் வாங்கி சான்ட்விச் செய்துடலாம்.

முழு கோதுமை ப்ரவுன் ப்ரெட் 30 ரூபாய் (ஹி ஹி முழு கோதுமை பிரெட் ஒரு பாக்கெட் நான்கு பேர்களுக்கு போதாது!)
   
தக்காளி கால்கிலோ 5 ரூ

வெங்காயம் கால்கிலோ 5 ரூ(ஶ்ரீரங்கம் விலை) மிச்சம் பத்து ரூபாய் இருக்கும். பச்சைமிளகாய் கால்கிலோ 5 ரூ, கொத்துமல்லி 5ரூ வாங்கிக்கலாம். உப்பு வீட்டிலே இருக்கும். எண்ணெய், கடுகு வீட்டிலே இருக்கும். (நைசா எண்ணைக்கு விலைப்பட்டியலில் இருந்து விடுதலை அளித்துவிட்டீர்கள்!) இல்லாட்டியும் அப்படியே வதக்கலாம். ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் சுட்டால் சான்ட்விச் ரெடி.  
===============================================

Geetha Sambasivam

அதை விட எளிமையானது அரை கிலோ இட்லி அரிசி, 200 கிராம் உளுந்து ஊற வைத்து அரைத்து இட்லியோ தோசையோ செய்யலாம். தொட்டுக்க 100 கிராம் தக்காளி, 10 கிராம் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த துவையல். அல்லது பச்சைக்கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த பச்சைச் சட்னி. 
=======================================

Geetha Sambasivam 

கால் கிலோ ரவை, கால்கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி வாங்கிக் கொண்டு, கருகப்பிலை, கொ.மல்லி, ப.மி. 5 ரூபாய்க்குள் வாங்கிக்கலாம். (இங்கே கிடைக்குது) வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருகப்பிலை போட்டு எண்ணெய் சேர்த்து உப்புமாப் பண்ணலாம். 

அவல் அரைகிலோ, காரட் 50கி, வெங்காயம் 50கி, உப்பு, எலுமிச்சை, ப.மி. கருகப்பிலை கொ.மல்லி.

அவலை நன்கு களைந்து உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். காரட், வெங்காயம் துருவிச் சேர்த்துப் பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடவும். சுத்தமான இயற்கை உணவு. வயிற்றை எதுவும் பண்ணாது. 
===========================================
Geetha Sambasivam

அவல்+தேங்காய்+சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்

அவல் 20 ரூபாய் சர்க்கரை அல்லது வெல்லம் 10 ரூபாய்க்குக் கொஞ்சமாக இருந்தால் போதும். (கடையிலே அடிக்க வந்தால் நான் பொறுப்பில்லை) தேங்காய் பத்து ரூபாய். 
(ஹி ஹி பெங்களூரில் சிறிய தேங்காய் இருபது ரூபாய்; பெரியது முப்பது ரூபாய்!) 

அவல் 20 ரூபாய் வாழைப்பழம் 10 ரூபாய்(இங்கே நல்ல பழமாகக் கற்பூர ரஸ்தாளி 20 ரூபாய்க்குக் கிடைக்கும்)+ தேங்காய் சேர்த்துச் சாப்பிடலாம். 
====================================
Geetha Sambasivam

கால் கிலோ ஜவ்வரிசி, 100 கிராம் வறுத்த கடலை, ஒன்றிரண்டு உ.கி. ப.மி. கருகப்பிலை, எலுமிச்சை சேர்த்து ஜவ்வரிசியை ஊற வைச்சு சாபுதனா கிச்சடி பண்ணலாம்.

அரைகிலோ அரிசி 25 ரூ 200 கி பாசிப் பருப்பு 15 ரூ, இஞ்சி, மிளகு , ஜீரகம், உப்பு போன்றவை மீதம் பத்து ரூபாயில் வாங்கிப் பொங்கல் செய்து சாப்பிடலாம். என்ன நெய்யோ, எண்ணெயோ சேர்க்க முடியாது. ஏன்னா 50 ரூபாய் முடிஞ்சு போச்சே! :)))) 
=============================================


Madhavan Srinivasagopalan: 

Oh! I got it now. But still Rs.50 is too much. Buy the raw materials like Wheat (200 gm) (Rs.10) sugar 100 gm (Rs.5), oil 50 ml (Rs.5), salt Rs.5( Though this is not essential). + rs. 10 or 20 for gas(LPG) expense. + misc (remaining amount if for added flavour). Prepare couple of Chapati and keep it on the floor. More than 4 ants can have a complete Breatfast. 
==============================================

A Simple Man: 

uppumaa....

(not amma uppu :-) 

===================================
வல்லிசிம்ஹன்: 

சொல்லுங்க. செய்துடலாம். பொரி வாங்கி நாலுபேரு சாப்பிடலாம். நிறைய தயிர் விட்டுச் சப்பிட்டால் வயிறு நிரம்பும்.  

======================================
G.M Balasubramaniam: 

அரிசி வாங்கிக் கஞ்சி வைத்துக் குடித்தால் நாலு பேருக்கென்ன இன்னும் சிலருக்கும் வயிறாரக் காலை உணவாகலாம். 
=============================

பால கணேஷ்:  

அரை கிலோ ரவை வாங்கி உப்புமா கிண்டிட்டால் போச்சு. 
=============================

அருணா செல்வம்: 

உப்புமா கிண்டிட வேண்டியது தான். 
===================================

மாடிப்படி மாது: 

போட்டிக்கு என்னோட சாய்ஸ் பழைய சாதம் அல்லது நொய்க்கஞ்சி

என்னை பொறுத்தவரை காலை உணவாக பழைய சாதத்தை அடிச்சிக்க வேறு எந்த பலகாரமும் இல்லை. உங்கள் போட்டிக்கு அது ஏற்றுகொள்ள முடியாத பட்சத்தில் எனது அடுத்த சாய்ஸ் நொய்க்கஞ்சி. 

இதற்கு அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1 ஒரு கிலோ அரிசி / நொய் அரிசி - ரூ.40/-
2. தேவையான உப்பு - ரூ.2/-
4. பழைய சாதம்னா பச்சை மிளகாய், நொய்க்கஞ்சின்னா பாண்டியன் மட்டை ஊறுகாய் - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 

ஆனா நீங்க சாப்பாடு ஐட்டம் போட்டியில் சேராதுன்னு சொன்னா கேரள பாரம்பரிய உணவான புட்டு இந்த பந்தயத்துக்கு ஒத்துவரும் என தோன்றுகிறது. இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட)

1. ஒரு கிலோ பச்சரிசி - ரூ.35/- (எந்த ஊர்ல சார்? புழுங்கல் அரிசியே அந்த விலைக்குக் கிடைக்காது!) 
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு சொல்லுங்க, அரைக்கற செலவு குறையும். ஹி... ஹி... எங்கம்மா அப்படித்தான் சொல்லி அனுப்புவாங்க) (எங்க ஊர் மாவுமெஷினில் இந்த உதார் வேலை எல்லாம் நடக்காது! வேயிங் மெஷின் வைத்திருக்கின்றார்கள்!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-
4. வாழைப்பழம் அல்லது சர்க்கரை - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 
புட்டுப் பழமோ அல்லது புட்டு சர்க்கரையோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.
              
ஆங்ங்......எது .... புட்டு எப்படி செய்யணுமா....? ஆளை விடுங்க. நான் இந்த போட்டிக்கே வரலைன்னு நெனச்சுக்குங்க 

அடுத்ததா தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு கூழ்.இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1. ஒரு கிலோ கேழ்வரகு அல்லது கம்பு - ரூ.35/-
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு மறக்காம சொல்லுங்க) (அட ஆண்டவா! திருந்தவே மாட்டீங்களா!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-  
4. பச்சை மிளகாய் அல்லது வெங்காயம் (கடிச்சிக்க) - ரூ.8/-
     
போதும் போதும்னு நீங்க கத்துவது கேட்பதால் இத்தோட முடிச்சிகி.......றேன் 
===========================================