Sunday, April 23, 2017

ஞாயிறு 170423 : தேவலோகத்தில் பல் சக்கரம்!மேகக்கூட்டத்துக்கும் மேலே ஓங்கி வளர்ந்த கம்பனிகளின் மேல் உருக்கு கயிறு.  

அது சக்கரங்களின் மேலே நழுவாமல் எப்படி நகர்கிறது என்பது புரியாத புதிர்  ஏ அப்பா....! தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமோ? எப்படி ஒரு மேகக்கூட்டம் இப்படி வந்தது? இந்த மாதிரி கடைகளை பெரும்பாலும் பெண்களே நடத்துகின்றனர்.
அவ்வப்பொழுது மோமோ எனப்படும் கொழுக்கட்டை போன்ற தின்பண்டத்தை செய்து சூடு ஆறாமல் ஹாட் பாக்கில் வைத்துக் கொண்டு 40 ரூபாய்க்கு 5 என்று விற்கிறார்கள்.  குளிருக்கு இதமாக இருக்கிறது.

(இதில் வெஜ்ஜா, நான் வெஜ்ஜா என்று கேட்டுக் கொண்டு சாப்பிடவேண்டும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்!)
 தேவலோகத்தின் வேறு பகுதி.ஊர் வழக்கப்படி கிடைத்த சிறு இடத்தில் இரண்டு பூச்செடி  நம் வழக்கத்தை மறக்காமல் அப்படியே அந்தப் பெரிய்ய்ய 
பல் சக்கரத்தை...எல்லோரும் கேட்பதற்கிணங்கி பயண விவரம்  இதோ.. 

சென்னை கல்கத்தா  பாக் டோக்ரா  விமானப் பயணம் நம் தேர்வு..
பாக் டோக்ரா டார்ஜீலிங் கார் பயணம் யாத்ரா கம்பெனியின் ஏற்பாடு 

தங்கும் விடுதிகள் யாத்ராவின் லிஸ்டிலிருந்து  நம் தேர்வு.  இரண்டு அறை 5 பேருக்கு.
  

உள்ளூரில் பயணம் செய்ய கார்.  டைகர் ஹில், மௌண்டனீரிங் இன்ஸ்டிடியூட்  மிருகக் காட்சி சாலை புத்த மேடம் கூம் ரயில் நிலையம் இங்கெல்லாம் அவர்கள் சொல்லும் வழியில்.


டார்ஜீலிங் கேங்டாக் கார் பயணம், அங்கு தங்கள்,  நாதுலா பாஸ்.  ஹர்பஜன் சிங் மந்திர்  இங்கெல்லாம் போய்  வர இந்திய பாஸ்போர்ட் தேவை.


ஆக  டார்ஜீலிங் போய் தங்குமிடம் சேர ஒரு நாள் 

டார்ஜீலிங் சுற்றல் ஒரு நாள் 

ரோப் வேயில் பிரயாணம் நம் செலவு.

 டார்ஜிலிங் கேங்டாக் கார் பயணம் ஒரு நாள் 

கேங்டாக் சுற்றல் ஒரு நாள்.

இரவு தங்கல் & amp;  ஊர் திரும்பல் ஒரு நாள் 

விடுதிகளில் காலை உணவு இலவசம்.

5 நாள் 4 இரவுகள் 5 பேருக்கு 130000 ரூபாய்.

யாத்ரா நன்றாக நடத்தினர். மேலும் விவரங்கள் விரைவில் தனிப்பதிவாக வரும்....

16 comments:

வல்லிசிம்ஹன் said...

Thats very lovely. Mere sapnon ki trainla ponelaa. tiger hill Sunrise paarththelaa.
Nalla thakaval thanglishkku mannikkanum.

நெல்லைத் தமிழன் said...

படங்கள் நல்லாருக்கு. சுருக்கமான பயண விவரங்கள் படிக்கும்போது முன்பு வெளியிட்டிருந்த படங்கள் மனதில் வந்துபோனது. உணவு விவரங்கள் முதல்கொண்டு விடாமல் கேட்டுவாங்கிப் போடுங்கள்.

KILLERGEE Devakottai said...

படங்கள் அருமை மேலும் தகவல்கள் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

இனிமையான பயணம்.
விவரங்கள் அருமை.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. விரிவான விவரங்களுக்குக் காத்திருக்கிறோம்.

துரை செல்வராஜூ said...

அழகான படங்களுடன் அருமை..

மேல் விவரங்களுக்காக ஆவலுடன்..

Thulasidharan V Thillaiakathu said...

பரவால்ல எங்கள் கெஞ்சலுக்குச் செவிசாய்த்த எங்கள் ப்ளாகிற்கு முதலில் நன்றிகள்!!!

படங்கள் நல்லாருக்கு. மேகக்கூட்டம்!! அழகு.

கீதா

athira said...

//தேவலோகத்தில் பல் சக்கரம்!///

ஆஹா ஆஹா என்னா ஒரு கற்பனை.. தேவர்களின் பல்லை எல்லாம் கழட்டி சக்கரமாக்கிட்டினமாக்கும்... படத்திலயாவது பார்த்திடுவோம் என ஓடி வந்தேன் பார்க்க:).

//
ஏ அப்பா....! தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமோ? எப்படி ஒரு மேகக்கூட்டம் இப்படி வந்தது?///

ஆஹா அப்போ கன்ஃபோம்.. சகோ ஸ்ரீராம் ஃபமிலியோட தேவலோகம் போய் வந்திருக்கிறார்ர்ர்ர்... ஆனா அங்கு கொம்பு வச்ச ஆடு, மான் ஓநாய் இவற்றைத்தானே படமெடுத்தார்ர்... :) அப்போ நம் முன்னோர்கள் யாரும் அங்கே இல்லயோ?:)..நேக்கு இப்போ பயமாக்கிடகூஊஊஊ:)

athira said...

///அவ்வப்பொழுது மோமோ எனப்படும் கொழுக்கட்டை போன்ற தின்பண்டத்தை செய்து சூடு ஆறாமல் ஹாட் பாக்கில் வைத்துக் கொண்டு 40 ரூபாய்க்கு 5 என்று விற்கிறார்கள். குளிருக்கு இதமாக இருக்கிறது.
///

மாமா வைத்தான் அங்கு மோமோ என்கிறார்களோ?:)..

///(இதில் வெஜ்ஜா, நான் வெஜ்ஜா என்று கேட்டுக் கொண்டு சாப்பிடவேண்டும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்!)///
ஹா ஹா ஹா கொன்ஃபோமாத் தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:) ஸ்ரீராம்.. இப்பூடிக் கேட்காமலேயே வாங்கிச் சாப்பிட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. குளிரெனில் ஓவராப் பசிக்கும்... இங்கும் சிட்டியை விட்டு வெளியே மலைப்பகுதிகளுக்குள் ட்றைவ் போனால்... போகப்போக ஆங்காங்கு கரவன் வான்களில்.. சுடச்சுட கொஃபி, ரீ, ஹொட் சொக்கலேட், இவற்றோடு பேகர், சொசேஜ் ரோல் இப்படியான ஃபாஸ்ட் ஃபூட் சாப்பாடுகள் சுடச்சுடக் கிடைக்கும், அதனால எப்பவும் நாம் எதுவும் பக் பண்ணிப் போவதில்லை...

athira said...

///ஊர் வழக்கப்படி கிடைத்த சிறு இடத்தில் இரண்டு பூச்செடி//
ஹா ஹா ஹா மிகவும் கரீஈஈஈஈட்டாச் சொல்லிட்டீங்க... நம்மவர் எங்கு போனாலும் குட்டியாக ஏதும் நட்டிடுவோம்ம்... நானும் குளிர் காலத்தில் குட்டிக் குட்டியா ஏதும் கிச்சின் விண்டோவில் வச்சு எப்பவும் வளர்ப்பேன்.. பச்சைப்பசேலெனப் பார்க்கும்போது எப்பவும் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆ டார்லிங்ஜீ பயணம் நல்லபடி முடிந்துவிட்டது(நமக்கும்தான்:)) வாழ்த்துக்கள்... அடுத்து சிங்கப்பூர் பயணத்தை எதிர்பார்க்கிறோம்:).. இப்படிக்கு எங்கள் புளொக் ரசிகர் மன்றம்:)..

athira said...

ஆஆஆஆ முக்கியமான ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்ன்ன்... என் போஸ்ட்டுக்கு வழமையா சகோ ஸ்ரீராம் வன் டே கழிச்சுத்தான் வருவார்ர்.. ஆனா நேற்று உடனேயே வந்திட்டார்ர்.. அது எப்பூடி என நினைச்சு சரி ஏதோ கண்ணில் பட்டிருக்கலாம் என நினைச்சேன்ன், அங்கின கேட்க நினைச்சு மறந்தே போயிட்டேன்ன்:).. ஆனா நைட் என் பிரித்தானிய தூதுவரிடம் இருந்து ஒரு மயில்...

அதிரா எங்கட கூட்டுக்குடும்பம் போய் வடக்கு வாசலால எட்டிப் பாருங்கோ என..... எட்டி எட்டிப் பார்த்தேன் எதுவும் தெரியல்ல... தெரியல்லியே என்றேன்ன் இல்ல நல்லா ஜம்ப் பண்ணிப் பாணுங்கோ தெரியும் என்றா... பண்ணினேன் பாருங்கோ ஒரு ஜம்ப்ப்ப்ப்ப்.. ஹா ஹா ஹா... பார்த்திட்டேன்ன்ன்ன் :).. இப்போ எல்லாருக்கும் தலை சுத்துமே:).. சுத்தட்டும் நல்லாச் சுத்தட்டும்... ஹா ஹா ஹா:).

Bagawanjee KA said...

இந்திய பாஸ்போர்ட்?....சிக்கிம் மாநிலத்தில் நுழையும் போதே மிலிடெரி செக் போஸ்ட்டில் ,நமது அடையாள அட்டைகளை செக் செய்து ,பணத்தைக் கட்டச் சொல்லி அனுமதிச் சீட்டு கொடுத்தார்கள் ,அதுதான் இந்திய பாஸ்போர்ட்டா :)

Geetha Sambasivam said...

விரிவான பதிவுக்குக் காத்திருக்கேன்.

Asokan Kuppusamy said...

இனிமைப் பயணத்தின் விவரங்கள் அருமை புகைப்படங்களுடன் வாழ்த்துகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

படங்களும் கருத்துகளும்
உள்ளத்தைத் தொடுகின்றதே!

Madhavan Srinivasagopalan said...

// டார்ஜீலிங் கேங்டாக் கார் பயணம், அங்கு தங்கள், நாதுலா பாஸ். ஹர்பஜன் சிங் மந்திர் இங்கெல்லாம் போய் வர இந்திய பாஸ்போர்ட் தேவை. //

நேபாள்(Nepal) எல்லைக்குட்பட்ட 'சாளக்கிராம்' (திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் 10 பாசுரம்), பகுதிக்குச் செல்லவே இந்திய பாஸ்போர்ட் தேவையில்லை... இந்திய எல்லைக்குட்பட்ட இடத்திற்கு பாஸ்போர்ட் தேவையா ? வெளங்கிடும் ....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!