'மழைக்கு முன், மழைக்குப் பின்' என்று திரும்பத் திரும்ப வந்தாலும், நுணுக்கமான வேலைப்பாடுகள் பளிச்!
அம்மா அங்கே போய் ஏதாவது ....
வா வா! திரும்ப உள்ளே போய் கொஞ்சம் ஒரே பிரேமில் நிறைய detail வருகிற மாதிரி wide angle லென்ஸ் போட்டு......
எல்லாவற்றையும் ஓரு ரவுண்டு ..
எடுத்துக் கொண்டு வரலாம்.
மணி தெரிகிறதா?
பிளாஷ் உபயோகித்தல் கூடாது.
laughing புத்தரின் இடது பக்கமாகப் போய்...
wide ..
wider ..
உள்ளே வேலைப்பாடுகள் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு காமெராவுக்குத் தெரியவில்லை. போட்டோஷாப் செய்து பார்க்கலாம்.
அதானே... எங்கேயோ தொலைந்து விட்டது என்றெண்ணினோம்.
யாரோ இடது கையைத் தூக்கி வலது கையில் வாள் பிடித்த மாதிரி....
மீண்டும் ஜூம்..
widest
யாளியை எடுக்காது போனால் ...என்று திருவிடைமருதூர்க்காரர் முடிக்காத வார்த்தை இன்னும் தொடர்கிறது.
போலாமா?
விடுமுறை தின பொழுதுபோக்கு :
இங்கே கிளிக்குக !
====================================
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குஆகா அருமையான குறள். நன்றி. என்னுடைய ஏழாம் வகுப்பு ஆசிரியர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்லும்போது, ஏழை எளிய மக்களுக்கு, அவர்கள் விரும்புகின்ற ஒரு பொருளை அன்போடு அளிப்பதுதான் தானம். பிரதிபலன் எதிர்பாராதது என்று சொல்வார். அதை விடுத்து, தானம் கொடுப்பவன், தான் நினைத்த பொருளை ஏழைகளுக்கு ஈவது என்பது பலனை எதிர்பார்த்து செய்வது என்பார்.
நீக்குஅழகான குறள்.
நீக்குகிராமத்தில், எனது ஆரம்பப்பள்ளி வருடங்களில் குறளின் அழகை, அருமையைச் சொல்லும் வாத்தியார்கள் கிடைக்கவில்லை. மனப்பாடம் பண்ணச்சொல்வார்கள். தப்பில்லாமல் எழுதச்சொல்வார்கள். மார்க்! இப்படி ஓடிவிட்டபின், பிற்காலத்தில் நானாக குறளைத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. நேற்று ஒரு ஆச்சரியம். கம்ப்யூட்டரில் ஏதோ படித்துக்கொண்டிருந்தபோது, என் பெண் வந்து குறள் இங்கிலீஷில் கிடைக்குமா என்று கேட்டாள் (அவளுக்குத் தமிழ் தெரியாது-என் குற்றம்). ஒரு வெப்சைட் கிடைத்தது. அதன் மொழியாக்கம் ஒழுங்காக இருக்கிறதா என சில குறள்களின் ஆங்கில ஆக்கத்தைப் பார்த்தபின் அவளுக்குக் காண்பித்து, சிலவற்றை விளக்கினேன். கூடவே வள்ளுவரின் காலத்தைப் பற்றியும், அவரின் ஞானத்தைப்பற்றியும் கொஞ்சம். சிலவற்றை ஆர்வமாகப் படித்துப் பார்த்தாள். அவளுக்குத் திருப்தி! மேற்கொண்டு அவ்வப்போது நேரம் கிடைக்கையில் படிக்கச் சொல்லியிருக்கிறேன்.
அன்பின் ஏகாந்தன்..
நீக்குதங்களது கருத்துரை மனதை நெகிழ்விக்கிறது....
எப்படியோ நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்...
சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கத்துடன் நடத்தியவர்கள் எங்கள் ஆசிரியர்கள்...
திருக்குறள் நெறியின் படி வாழ்ந்து காடினார்கள்...
அத்துடன்
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், குன்ற்க்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி, புலவர் கீரன் முதலான இலக்கிய பேச்சாளர்கள்...
அது போன்ற காலம் இனி எப்போது வரும்!...
முத்தான, சத்தான கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்கு@ துரை செல்வராஜு:
நீக்குஉண்மை. அது ஒரு பொற்காலம். நமக்கு முழுமையாகவோ, பகுதியாகவோ அனுபவிக்கக் கிடைத்தது. அதன் நினைவுச்சுவடுகளேகூட போதும், இனிவரும் மிச்ச சொச்ச காலத்தை ஓட்டுவதற்கு.
இப்போதிருக்கும் இளைய தலைமுறைக்கு அந்த பாக்யம் இல்லாதுபோனது. அவசரம், பரபரப்பு, போட்டிக்குப் பழக்கப்பட்டுப்போன தலைமுறை, கலைகளின் அழகினை, மாண்பினை ரசிக்கும், அனுபவிக்கும் மனதின் ஆழமான குணநலன்களை, இயல்புகளை இழந்து நிற்கிறது.
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க...
நீக்குவாங்கோ!
நீக்குஅழகு.. அழகு...
பதிலளிநீக்குகண்ணுக்கு விருந்தான காட்சிகள்..மகிழ்ச்சி..
நன்றி துரை செல்வராஜு ஸார்.
நீக்குநன்றி, நன்றி!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குபிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அழகு. தெளிவு. ஜூம் செய்து எடுக்கப்பட்ட படங்கள் அவ்வளவு அழகாக உள்ளன.
இடது கையை தூக்கி வலதில் வாள் பிடித்த மர மனிதன் வாசகம் ரொம்ப பொருத்தம். ரசித்தேன். மரத்தின் வடிவுக்கு பொருத்தமான வாசக வடிவமைப்புக்கு பாராட்டுக்கள்.
மலர்கள் படங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த முகப்பு படங்கள் அத்தனையும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.
நீக்குஆம், நானும் அந்தப் படத்தை ரசித்தேன்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குமரத்தைப் பற்றிய கற்பனை அருமை. ஒருவேளை ஏதேனும் அமானுஷ்யமோ?
புகைப்படம் - யாரப்பா அது.. குழந்தையைத் தூங்க வைக்கும்போது போட்டோ பிடிப்பது?
ஆஹா ! தலைப்பு கொஞ்சம் நீளம் !
நீக்குஅனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம்
பதிலளிநீக்குஞாயிறு வணக்கம்!!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். அனைவரும் பூரண உடல்நலத்தோடும், மன மகிழ்ச்சியோடும் இருக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்தனைகளுக்கு நன்றி!
நீக்குதேர்ந்த திறமையான புகைப்பட நிபுணரால் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறதெனில் அதற்குக் கொடுத்திருக்கும் விவரணைகள் அதைவிட அம்சமாய் அமைந்துள்ளன. அநேகமாய் ஸ்ரீராமும்,கௌதமன் சாரும் சேர்ந்தோ அல்லது படங்களைப் பிரித்துக்கொண்டோ தலைப்புகள் கொடுத்திருக்கலாம். மரம் சொல்வது நல்ல ரசனை! அந்த வர்ணனையும் நல்ல ரசனை.
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குஒரே கட்டிடத்தைப் (அந்த விற்பனை நிலையம் தவிர்த்து) பல்வேறு கோணங்களில் காட்டி இருந்தாலும் சலிப்புத் தட்டவில்லை. எனக்குத் தெரிந்து இந்த வாரம் தான் உணவுக்குச் செல்லும் இடத்தையும் மனிதர்களையும், உணவிடத்தையும் காட்டவில்லைனு நினைக்கிறேன். எல்லா வாரங்களிலும் இடம் பெறும். குறைந்த பட்சமாகக் காத்திருப்பதாகவேனும் வரும்.
பதிலளிநீக்குஅப்போ இரண்டாவது படம் உணவிடம் இல்லையா!
நீக்குஇப்போத் தான் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன். என்ன, ஜாஸ்தி போனால் கேக் வகைகள், ஒரு சில ஸ்வீட் வகைகள்னு இருக்குமோ? வாங்கிண்டு வந்து தான் சாப்பிடணும்னு நினைக்கிறேன்.
நீக்குவண்ணப்
பதிலளிநீக்குபடங்களும், மழையும், கொடுத்த தலைப்புகளும் ரசிக்க வைக்கின்றன.அழகான பயணம்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவிடுமுறை தின பொ. போக்கை கிளிக்கினேன்.
"போர்களில் தோல்வியின் அடையாளம்." இது சரியாய் இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு கற்பனைக்கு.
என் பதிவுக்கு வந்து கருத்துக்கள் அளித்தமைக்கு மிக்க நன்றிகள். இதுவும் ஒரு அடையாளமாக இருக்கிறதோ.? ஹா. ஹா. ஹா.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// "போர்களில் தோல்வியின் அடையாளம்."// புறமுதுகு !!! ஹா ஹா ரசித்தேன். நன்றி.
நீக்குநன்றி.
நீக்குபடத்துக்குத் தலைப்பு சுருக்கமாகக் கொடுக்க முடியவல்லை. உலகத்துக்கு முதுகு காட்டி, வீட்டைப் பிரிந்த பெண், அங்கு கூடி இருக்கும் தன் உலகத்தை மறக்கிறாள்.
பதிலளிநீக்குகதையே எழுதிட்டீங்க!
நீக்கு:)))))சுருங்கச் சொல்ல முடியாதவர்களின் கவலையே
நீக்குதலைப்பு வைப்பதுதான் ஜி.
ஹா ஹா ! அதுவும் சரிதான் !
நீக்குதிபெத் ???
பதிலளிநீக்குபைலா குப்பே - மைசூரு.
நீக்குஓ கேள்வி பட்டதில்லையே
நீக்குஅழகான காட்சிகள் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபுகைப்படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. பிளாஷ் உபயோகித்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்து இருக்கும். camera என்ன?
பதிலளிநீக்குJayakumar
அழகான இடமும், அருமையான படங்களும் ...
பதிலளிநீக்குநாங்க போன பொழுது ,அந்த ஷாப் ல குட்டி குட்டி புத்தர் சிலைகள் ரொம்ப அழகா இருந்தது ...
நன்றி.
நீக்குஅழகிய படங்கள்... அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசில படங்கள் மீண்டும் மீண்டும் வந்தாலும் படங்கள் அழகு!
பதிலளிநீக்குபுகைபடத்திற்கான கேப்ஷன்: அந்தரங்கம் யாரே அறிவார்?
குழந்தைக்கும் தேவை குளிக்க மறைவு.
ஆஹா, ஆஹா !! நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஈஸ்டர் தின வாழ்த்துகள் ஏஞ்செல்!
பதிலளிநீக்குஎல்லோரும் நம்ம ஏரியா engal6.blogspot.com இன்றைய பதிவு படித்துவிட்டீர்களா?
பதிலளிநீக்குஅருமை. புகைப்பட தொகுப்பு சிறப்பு. எழுத்தில் இன்னும் கொஞ்சம் விவரங்களை சேர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குமேலும், இந்த பதிவை ஆன்மீகம் மற்றும் பயணம் ஆகிய குறிச்சொற்களில் இணைத்திருக்கலாம். எமது வலைத் திரட்டியின் மெனுவில் உள்ள தலைப்புகளின் அடிப்படையில் தங்கள் குறிச்சொற்களை அமைத்தால் அந்தந்த பிரிவுகளில் தானாகவே இணைந்து விடும். தயவு செய்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
பொழுதுபோக்கைக் க்ளிக்கினால் தனிமையில் குழந்தைக்குப் பால்கொடுக்கும் பெண்! பாவம் எங்கேயும் மறைவிடம் கிடைக்காமல் வந்திருக்கா. நிம்மதியா இருக்கட்டும்.
பதிலளிநீக்குஹையோ ஹையோ! அந்தப் பெண்ணுக்கு அந்தப்பக்கம் ஒரு எட்டு வயது பையன்.
நீக்குஅப்படீங்கறீங்க? எனக்கு என்னமோ குழந்தையைக் கைகளில் வைச்சிருக்கிறாப்போல் தான் இருக்கு. இப்போவும் பார்த்தேன். ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குமேலும், அவங்க எந்தப் பக்கம் பார்த்து உட்கார்ந்திருக்கிறார்களோ அந்த வீட்டு (ஜன்னலு)க்குள் நான்கு bachelors குடியிருக்கிறார்கள். இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கு பயந்து முக கவசம் அணியாது அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்திருக்கிறாள் - அவ்வளவுதான். உங்க வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்தப் பையன் இருக்கின்ற படத்தை அனுப்புகிறேன்.
நீக்குஇது டப்பல்லோ... இங்கனா வெளியிட்டிருக்கணும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குபின்னூட்டத்தில் வெளியிடுவது கஷ்டம் சார்!
நீக்குஸ்ரீராம் என்ன ஞாயிற்றுக்கிழமை கூட சமையலில் பிசியா? :)))))
பதிலளிநீக்குஸ்ரீராம் ஆபீஸ் உண்டு என்று நினைக்கிறேன்.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அழகு. பச்சைபேசேல் புல்வெளி மிக அருமை. வண்ணமயமான புத்த விஹார் அழகு.
பதிலளிநீக்குநுணுக்கமான வேலைப்பாடுகள் பளிச் என்று இருக்கிறது. காமிராவில் படம் ஆக்கி காண தந்தவர்களுக்கு நன்றி.
//யாரோ இடது கையைத் தூக்கி வலது கையில் வாள் பிடித்த மாதிரி....//
ஆமாம். ரசனையான விமர்சனம்.
நன்றி.
நீக்குவர்ணப் படங்கள் கண்ணுக்கு விருந்து.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு/யாரோ இடது கையைத் தூக்கி வலது கையில் வாள் பிடித்த மாதிரி....// ரசனை ரசனை.
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குவல்லிம்மா நீங்க இன்னும் நம்ம ஏரியா இன்றைய கதையைப் படிக்கவில்லையா?
நீக்குஅழகான படங்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎல்லாப் படங்களுமே அழகு...அதிலும் 5 வது படம், அப்புறம் உள் வேலைப்பாடுகள் படம், அந்த ப் பூ க்ளோஸப் படம் அட்டகாசம்...
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஎல்லா படங்களும் அருமை
பதிலளிநீக்கு