Sunday, March 5, 2017

ஞாயிறு 170305 :: வண்ணப்பறவை சிறகடிக்குமா?
Himaalayan Mountaineering Institute
வைத்திருக்கும் Zoo வில் முதலில் கண்ணில் பட்டது விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம்தான்.  அதுவும் சற்றுத் தேடித்தான் பார்க்கவேண்டும்!


ராஜேஷ் கன்னாவின் கனவு ராணி இதுபோன்றதொரு ரயிலில்தான் பயணம் செய்தார்!
வண்ணமயமாக பறவை இருந்தாலும் வேலி பார்வையைத் தடுக்கிறது.  பறவைக்கு வேலி போடுபவர்கள் விரல் தடிமனுக்கா கம்பி வேலி போடுவார்கள்? பறவை பொல்லாததா?  இல்லை, பார்வையாளர்கள் பொல்லாதவர்களா?  இல்லை ஒருவேளை பொல்லாதவர் அந்த காண்டிராக்டரோ!

இரண்டு விரல் நுழைய முடியாத வேலி போட்டால்?  நாங்கள் பார்த்தது போதும் என்று வந்துவிடுவோமா என்ன?  வேலியை நெருங்கி நின்று கேமிராவை கம்பி இடுக்கில் வைத்து....  அதுதான் பார்க்கிறீர்களே...
இவ்வளவு அழகான பறவையைப் பார்க்க எவ்வளவு இடைஞ்சல்கள்!


17 comments:

Chellappa Yagyaswamy said...

இன்னும் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் படங்கள் வந்திருக்கலாமே!
- இராய செல்லப்பா நியூஜெர்சி

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பறவையின் பெயர்...? + (பறவை தானோ...?)

கரந்தை ஜெயக்குமார் said...

அழகு
தம +1

Dr B Jambulingam said...

அருமையான ரசனை.

'நெல்லைத் தமிழன் said...

நல்லாருக்கு படங்கள். புலிக்கூண்டுக்குப் போடவேண்டிய வேலியை (தில்லி) மறந்துபோய் பறவைக்கூண்டுக்குப் போட்டுவிட்டார்கள் போலிருக்கு.

Bagawanjee KA said...

இயற்கையான சூழ்நிலையில் அங்கே நான் கண்ட மனிதனை போன்றே நின்று நடக்கும் கரடியை இன்னும் என்னால் மறக்க முடியலை :)

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.

athira said...

அஞ்சூஊஊஊஉ கொஞ்சம் ஓடி கம்ம்ம்ம் என்னால முடியல்ல... ஒரு கை கொடுங்கோ, இண்டைக்கு தேம்ஸ்ல தள்ளினால்தான் எனக்கு நித்திரையே வரும்... ஆரை எவரை எண்டெல்லாம் கேட்டிடாதீங்கோ.. அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்ன்ன்ன்...

ஞாயிற்ருக் கிழமையாச்சே போர்த்திட்டு படுத்து ஆறுதலா எழும்பி, நெல்லைத் தமிழனின் ஒரு ரெசிப்பியை பார்த்துச் செய்து சாப்பிட்டுப் போட்டு பமிலியா ஒரு மூவி பார்க்கிறதை விட்டுப் போட்டு.....

4 மணிச் சாமத்தில எழும்பி ஓடிவந்து "வண்ணப்பறவை சிறகடிக்குமா"... எனப் போட, நல்ல ஒரு ட்றீம்ல இருந்த நான், பாதியில பதறியடிச்சு ஓடியாந்து திறந்தால்ல்ல்ல் ஒது குட்டி சைஸ்ல ரெண்டு பறவை,,, இதுக்கெல்லாம் ஒரு தலைப்பு.... முடியல்ல முருகா.... எனக்காராவது காசிக்கு ஒரு ரிக்கெட் போடுங்கோ.... விண்டோ சீட் என கேட்டுப் போட்டுவிடுங்கோ பிளீஸ்ச்ச்ச்ச்ச்:)

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்தும் அழகு.....

Geetha Sambasivam said...

சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுமாம்?

ராமலக்ஷ்மி said...

அழகான பறவை.

Asokan Kuppusamy said...

அழகிய காட்சிகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

படங்கள்
வெறும் காட்சிப் பொருளல்ல...
அவை
நல்ல கதையோ கவிதையோ ஆகலாம்
அதில்
பறக்கத் துடிக்கும் பறவை!

G.M Balasubramaniam said...

சின்னச்சின்ன வண்ணப் பறவை உங்கள் ரசிப்பினைச் சொல்லுதம்மா

Angelin said...

:)கூர்மையாக பார்த்தால் கூர்ம அவதாரம் தெரியுமே :)

வண்ணப்பறவை எவ்ளோ நிறங்கள் வாவ் ..பலவர்ண பட்டாம்பூச்சியும் சிறகடித்து பறக்குமே

Angelin said...

@athiraav .//4 மணிச் சாமத்தில எழும்பி ஓடிவந்து "வண்ணப்பறவை சிறகடிக்குமா"... எனப் போட, நல்ல ஒரு ட்றீம்ல இருந்த நான்//

ஒரு டஜன் கோழிமுட்டை சாப்பிடற கனவெல்லாம் தான் வரும் உங்களுக்கு :)

புலவர் இராமாநுசம் said...

நன்று!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!