ரொம்பப் பேருங்க - படம் பார்க்க முடியவில்லை என்று பின்னூட்டம் இட்டதால், அதை இப்போதைக்கு நிறுத்தி விட்டோம். ஆறுதலாக ஒரு படம் இங்கே.
பார்த்துவிட்டு,
உங்களுக்குத் தோன்றும் கருத்துகளைப் பதியுங்கள்.
நன்றி.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
18.2.10
17.2.10
பாடல் என்பது எது வரை..
சினிமாக்களில் பாடல் என்பது ஒரு கட்டாயம். இந்தியப் படங்களுக்கு பாடல் காட்சிகள் இன்றியமையாதவை. ஒரு காலத்தில் பாடல் காட்சிகளின் தொகுப்பே படங்களாகவும் இருந்தது. கண் சிமிட்டி முடிப்பதற்குள் அடுத்த பாடல் தொடங்கி விடும். பின்னர் படிப் படியாக அந்த வழக்கம் குறைந்து அளவாக பாடல்கள் வைக்கத் தொடங்கினார்கள். பாடலே இல்லாமல் கூட படங்கள் முயற்சித்ததுண்டு,...அந்த நாள். ஆனால் அது தொடராமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நின்று விட்டது!
தமிழாகட்டும், தெலுங்காகட்டும், மலையாள, ஹிந்தியாகட்டும்...மொழி முக்கியமின்றி அனைத்து மொழிகளிலும் பாடல்களை ரசிக்கும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு..இசை...அதில் வரும் ஆனந்தம்...நம் ரத்தத்தில் கலந்தது. தமிழ்ப் பாடல்கள் பற்றி எல்லோருமே எழுதி உள்ளோம். மற்ற மொழிகளிலும் ஆங்காங்கு பாடல்கள் ரசிப்போம். தெலுங்கில் சங்கராபரணம், (சுவாதி முத்தியம், சாகர சங்கமம் போன்றவை தமிழிலும் ஒரே ட்யூன் தான்) மரோ சரித்ரா போன்ற படப் பாடல்கள் பிரபலமாகி மகிழ்வித்துள்ளன. சங்கராபரணம் வந்தபோது யாரோ ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் தருவாயில் இந்தப் படப் பாடல்களை உயிர் பிரியும் தருணத்தில் கேட்க விரும்பியதாக செய்தித் தாளில் படித்த ஞாபகம்.
ஆனால் ஹிந்திப் பாடல்கள் இந்த அளவு குறைந்த ப்ராபல்யமாக இல்லாமல் வெகுஜன அபிப்ராயத்தைப் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும். இந்த அளவு பாடல் கேட்கும் வசதிகள் இல்லாத அந்த நாளில் ஆல் இந்தியா ரேடியோதான் கதி. பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில், ஒரு மாற்றமாக மட்டுமின்றி, வேறு வழி இல்லாமலும் கேட்க ஆரம்பித்த நாட்கள். காலை உங்கள் விருப்பம், மதியம் இரண்டு மணிக்கு ஏதோ பெயரில் தமிழ்ப் பாடல்கள் இரவு உங்கள் விருப்பம். இவற்றுக்கு நடுவே சிலோன் ரேடியோவும் K S ராஜாவும் ஆதரவளித்தாலும், மதிய நேரங்களில் ஒரு மணிக்கு மன் சாஹே கீத் (மனம் விரும்பும் பாடல்கள்) கேட்க ஆரம்பித்து, ஒரு சில பிரபலப் பாடல்கள் எப்போதடா காதில் விழும் என்று காத்திருக்கும் வேளையில் தவிர்க்க முடியாமல் இடையே வரும் பாடல்கள் கேட்கத் தொடங்கி, அதை திரும்ப வேறொரு நாளில் கேட்கும்போது அன்று கேட்ட பாடல் என்ற அறிமுகத்துடன் ரசிக்கத் தொடங்கி...பிறகு தேடித் தேடி காலை ரங்காவளி, மதியம் மன் சாஹே கீத் தவிர மனோ ரஞ்சன், இரவு ஜெய்மாலா, சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ் என்று நீண்டதுண்டு.
ஆனந்த்பக்ஷி, மஜ்ரூ சுல்தான் பூரி, இண்டீவர், ஆர் டி பர்மன், எஸ் டி பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், கிஷோர் குமார், முஹம்மத் ரஃபி, மன்னாடே போன்ற பெயர்கள் அறிமுகமாயின. இவற்றில் எது படம் பெயர், எது பாடலாசிரியர், எது பாடுபவர் பெயர் என்று புரிய இன்னும் சில நாட்கள் ஆயின. பிறகு இந்த, இந்தப் பெயர்கள் காம்பினேஷன் வந்தால் இந்தப் பாடல்களைக் கேட்டு பார்க்கலாம் என்று 'அறிவு' வளரத் தொடங்கியது...!
நாம் கேட்கும் பாடல் பிரபலமானது பாடலாசிரியர் காரணமாகவா, இசை அமைப்பாளர் காரணமாகவா, பாடகர் காரணமாகவா நடிக நடிகையர் காரணமாகவா அல்லது எல்லாமே காரணமாகவா என்று யோசித்தால் - இதில் ஒன்று அல்லது பல காரணங்களால் பாடல் ஹிட்டாக அமைந்துவிடும்; நம் மனதில் அமர்ந்துவிடும்.
பட்டுக் கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, என்று வரிகளை ரசிக்க வைக்கும் பாடல்கள் உண்டு. பாடலின் ட்யூன் என்னென்று சொல்ல முடியாத இன்ப, துன்ப பரவச நிலைகளை மனதில் தோன்ற வைப்பதுண்டு...சமீபத்தில் திரு M S விஸ்வநாதன், ஒரு பேட்டியில் (உண்மையில் அவர் இந்தத் தகவலை பலமுறை, பல இடங்களில் சொல்லியுள்ளார்) யார் அந்த நிலவு பாடல் எழுதப் பட்ட, இசை அமைக்கப் பட்ட, பாடப் பட்ட விதம் குறித்துச் சொல்லி, கடைசியில் அந்தப் பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடித்து பெயர் தட்டிக் கொண்டு போனார் என்று சொல்லி இருந்தார். மனதை மயக்கும் ட்யூனோடு பாடல் வரிகளும், பாடுபவர் குரலும் மனதை கொள்ளை கொள்ளும்.
இவை நிச்சயமாக இந்தக் காலக் குத்துப் பாடல்களுக்குப் பொருந்தாது...
அந்த வகையில் மனத்தைக் கவர்ந்த சில பாடல்கள் பற்றி அவ்வப்போது எழுத ஆசை.
இது கதையா - பகுதி இரண்டு.
முன் கதைச் சுருக்கம் : கனவும் விழிப்பும் ...
" நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.
***** ***** *****
படுக்கை அறை வாசல் பக்கம் என்னவோ - இருளில் நிழலுருவம் ஒன்று வந்தது மாதிரி இருந்தது - பயத்தில் 'ஓ....' என்று அலற வாய் திறந்தேன். அப்புறம் நிதானமாகப் பார்த்ததில் - அது பேயோ பிசாசோ இல்லை, என் மனைவிதான் என்று தெரிந்தது. (பெரிய வித்தியாசம் ஏதும் இல்லைதான்! )
" நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்." விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.
***** ***** *****
படுக்கை அறை வாசல் பக்கம் என்னவோ - இருளில் நிழலுருவம் ஒன்று வந்தது மாதிரி இருந்தது - பயத்தில் 'ஓ....' என்று அலற வாய் திறந்தேன். அப்புறம் நிதானமாகப் பார்த்ததில் - அது பேயோ பிசாசோ இல்லை, என் மனைவிதான் என்று தெரிந்தது. (பெரிய வித்தியாசம் ஏதும் இல்லைதான்! )
உள்ளே எட்டிப் பார்த்து, அவள் கேட்ட கேள்வியில் - விழிக்க வைத்த அலாரச் சத்தத்தின் விவரம் புரிந்தது. " தாம்பாளச் சத்தத்துல எழுந்துவிட்டீர்களா? உங்களுக்கு கேட்டிருக்காது என்று நினைத்தேன். கேட்டிடுச்சா? ஆமாம் - நீங்க ஊருக்குப் போகிறதாகச் சொன்னீங்க இல்லியா - ஊருக்குப் போகிறதுக்கு முன்னால - காலை உணவாக சப்பாத்தி பண்ணி கொடுத்திடலாம்னு - மேலேயிருந்து தாம்பாளத்தை எடுத்தேன். அதுக்கு மேலே எப்பவோ வாங்கி வந்த மாதுளம்பழம் ஒன்றை குழந்தைங்க வெச்சிருக்கும் போலிருக்கு. தாம்பாளத்தை எடுக்கும்பொழுது பழம் என் மேலே விழுந்து, அதனால பயந்து, கை தவறி தாம்பாளம் கீழே விழுந்து விட்டது. சரி நீங்க எழுந்ததும் நல்லதாப் போச்சு - சப்பாத்தியோ பூரியோ - உங்களுக்கு எது வேண்டுமோ அதுக்கு கொஞ்சம் மாவு பிசைந்து கொடுங்க. - இந்தாங்க - தாம்பாளம், மாவு டப்பா, தண்ணி, உப்பு. ..நாலும் இருக்கு ..." சொல்லிகிட்டே சமையல் அறைப் பக்கம் நடையைக் கட்டினாள் - அதர்மப் பத்தினி..
'மாதுளம் பழம் விழுந்ததால் தாம்பாளம் விழுந்தது, நாலும் இருக்கு....." இவை எல்லாம் என் மூளையில் திரும்பவும் (கனவு) மணி அடித்தது. ஆஹா கடவுள் சொன்னதை மறந்துவிட்டேனே. நான் சந்திக்கும் நான்காவது நபர் யார் என்று விழிப்போடு தேட வேண்டுமே. கடவுள் சொன்னதை நான் சரியாகக் கேட்டேனா - ஒரு வேளை மனைவிதான் கடவுளின் அம்சமோ?
சேச்சே - அப்படி இருக்காது - அதையும் தவிர - கனவில் அவர் ஸ்பஷ்டமாகச் சொன்னாரே - நீ சந்திக்கின்ற - சொந்த பந்தமில்லாத - நான்காவது உயிரினம் என்று! எனவே நான் கடவுளின் கணவன் இல்லை என்று தெரிந்துகொண்டேன். சொந்த பந்தம் இல்லை என்பதால் வீட்டிலே இருக்கும் மற்றவர்கள் கூட கடவுள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
அப்போ யாரு ? கொஞ்சம் நிதானமா யோசிக்கலாம். யாரை எல்லாம் இன்றைக்குச் சந்திக்கிறோனோ அதை எல்லாம் முழு கவனத்துடன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீவிர சிந்தனைகளுடன் மாவு பிசைந்து கொடுத்துவிட்டு, வீட்டு வாசல் கதவைத் திறந்தேன். கடவுளைச் சந்திக்க நான் தயார். அவர் தயாரா?
அப்பொழுதுதான் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் - கார் துடைக்கும் - பணியாளர் (பெயர் தெரியாது). சரி சொந்த பந்தமில்லாத முதல் உயிரினம் இவர். மனதில் குறித்துக் கொண்டேன். அவர், பக்கெட்டில் நீர் நிரப்பி, காரைக் கழுவ எடுத்துச் சென்றுவிட்டார். நான் வேறொரு பக்கெட்டில், நீர் நிரப்ப ஆரம்பித்தேன்.
அப்போ காம்பவுண்டுச் சுவர் மீது ஓர் ஈ உட்கார்ந்து, கைகளை தேய்த்து தேய்த்து, கழுத்திலும், முகத்திலும் பூசிக் கொண்டது. இரண்டாவது உயிரினம் 'ஈ' குறித்துக் கொண்டுவிட்டேன்.
பக்கெட் நீரை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி நடந்து போகும்பொழுது - ஒரு தடிமனான (பெண்) உருவம், டிராக் சூட், சட்டை அணிந்து, தலையில் ஸ்கார்ஃப் அணிந்து வழக்கமாக பார்க் நோக்கிச் செல்லும் உருவம். பார்த்து, மூன்றும் ஆயிற்று என்று குறித்துக் கொண்டேன்.
பக்கெட் தண்ணீரை - வாசலில் இருக்கும் மரத்திற்கு ஊற்றியவாறு, தெருவைப் பார்த்தால் - அங்கே அவர் என் கண்ணில் பட்டார். கடவுள் இவரா? இவர்தானா?
(தொடரும்)
16.2.10
நூறாவது ..... !!
வெற்றிப் படம் - என்றால் ஊரெல்லாம் நூறாவது நாள் போஸ்டர் ஒட்டி, ரசிகர் மன்றங்கள் நூறாவது நாள் கொண்டாடுவாங்க இல்லியா?
இதோ எங்கள் ரசிகர் மன்ற போஸ்டர்.
பார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க. நன்றி.
இதோ எங்கள் ரசிகர் மன்ற போஸ்டர்.
பார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க. நன்றி.
15.2.10
கனவின் மாயா லோகத்திலே ... !!
இறந்த பிறகு என்ன? கனவு என்பது மறைந்தவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனமா? இரண்டு கேள்விகளும் சிக்கலானவை. சுவாரசியமான விடைகளை ஒவ்வொருவரிடமிருந்தும் வரவழைக்கக் கூடியவை.
என் பங்குக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இறந்து போன என் மைத்துனி எல்லாரிடமும் பிரியமாக இருந்தவர். நல்ல வெள்ளை உள்ளம் படைத்தவர். அவ்வப் போது என் கனவில் வருவார். நானும் சர்வ சாதாரணமாக அவரைப் பெயர் சொல்லி அழைத்து " என்ன நீ செத்துப் போன பிறகு இப்படி வந்து நிற்கிறாயே, இது சாத்தியம் தானா?" என்று கேட்பதும் அதற்கு மறுமொழியாக அவர் " ஆமாம். இது சாத்தியம்தான். ரொம்ப சாதாரணம் " என்று சொல்வதும் ஒரு முறை அல்ல மூன்று நான்கு முறை நடந்திருக்கிறது. மற்றபடி அந்த விசிட்டில் அவர் முக்கியமாக எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை என்பது வேறு விஷயம். யோசித்துப் பார்த்தால் இது என் மன அலைகளின் எழுச்சியாகக் கூட இருக்கலாம். என்றாலும் கனவில் காணப்பட்ட துல்லியம், நான் கேள்வி கேட்ட போது என் மன நிலையில் இருந்த நிதானம் மற்றும் விழிப்புணர்வு கொஞ்சம் வியப்பூட்டுவதாக இருந்ததும் நிஜம். உண்மையை நாம் அந்தப் பக்கம் போய் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓரிரண்டு உறவினர்கள் உயிரை விட்ட சில நொடிகளுக்கு முன்னால் அவர்கள் தம் வீட்டுக்கு வந்தது போலவும் பார்த்துக் கொண்டு நின்றது போலவும் ஒரு பிரமை ஏற்பட்டதாக இரண்டொரு சம்பவங்கள் உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில சமயம் ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னால் மனம் கற்பனை செய்து அதற்கு கொஞ்சம் மெருகேற்றி நம்புவதும் நடக்கக் கூடியதே. கடந்த கால பல நிகழ்ச்சிகளை நாம் கொஞ்சம் அலங்கரித்து சொல்லி வந்தால் நாளடைவில் அப்படித்தான் நடந்தது என்று நம்புவோம். சண்டை போடும் கணவன் மனைவி கூட இப்படித்தான் சொன்னாய், இப்படித்தான் நடந்தது என்று விவாதிக்கிறோம் இல்லையா? உண்மை இதற்கெல்லாம் மத்தியில் எங்கோ ஒளிந்திருக்கிறதா?
உங்கள் அனுபவம் எப்படி?
14.2.10
காதலும் கத்தரிக்காயும் ! .
இது காதலர் தின சிறப்புப் பதிவு. கத்தரிக்காய் மீது வைத்தாலும், காதல், காதல்தானே! மரபணு மாற்றப்பட்டக் கத்தரிக்காய் குறித்து முன்பு கு கு அவர்கள் கேட்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.
ஐயோ ம மா க வுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு. மாதர் சங்கம் தொடங்கி இவர் அவர் என்று எல்லோரும் கொடி பிடித்து, அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேரோ செய்து - கடைசியில் மத்திய அரசு - அம்பேல் என்று - ம மா க இப்போதைக்குச் சந்தைக்கு வராது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்த பின்தான் அமளி ஓய்ந்தது.
இந்த வகை அவேர்னஸ் (Awareness) மிகவும் நல்லதுதான்.
ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு - வழங்கு மொழி - பொன்மொழி - எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அது நீதிமன்ற வழங்கு மொழி. ஒரு குற்றம் சாட்டப் பெற்றவரை - குற்றவாளி என்று கிஞ்சித்தும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபணம் செய்த பிறகே அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும். (A defendant is to be proved beyond all reasonable doubts that he / she is guilty) குற்றவாளி குற்றம் இழைத்திருப்பார் என்பதில், ஒரு சதவிகிதம் கூட சந்தேகம் இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஒரு குற்றவாளி தண்டனை பெறாமல் போனால் கூடப் பரவாயில்லை - ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே இதன் பொருள்.
கத்தரிக்காய்ப் போன்ற உணவு விஷயங்களில் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒன்று (0.001%) சதவிகிதம் ஆரோக்கியக் கேட்டிற்கு சந்தர்ப்பம் உள்ளது என்றாலும் - அதை நிராகரிப்பது நல்லதுதான். இதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை.
கத்தரிக்காய் - அதுவும் ம மா க - எந்த வகையிலும் - உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காது என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நிரூபிக்கவும் முடியவில்லை.
என்னுடைய ஆதங்கம் எல்லாம் வேறு ஒன்று.
அய்யா, அம்மா, தம்பி - ம மா கத்தரிக்காய் எதிர்ப்புப் போராட்ட மக்களே!
புகை பிடித்தல் - எவ்வளவு கெடுதல், அதனால் புற்று நோய் எந்த அளவுக்கு வரும், உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்கின்றது என்றெல்லாம் - எவ்வளவோ வருடங்களாக அரசாங்கம் முதல் அனாமதேயச் சங்கங்கள் வரை எத்தனை எத்தனை ஆட்கள் - எவ்வளவு உரக்கக் கத்தி வருகிறார்கள். துரதிருஷ்டவசமாக - புகை பிடிக்கும் பழக்கமும், பீடி சிகரெட்டுகளும் செய்ய லைசென்ஸ் கொடுக்கப் படுவதற்கு முன்பே - மீடியாக்களில் - மரபணு மாற்றக் கத்தரிக்காய் அளவுக்கு செய்திகள் அறிவிப்புகள் - அந்த நாளில் வெளியாகவில்லை. ஆனாலும் பல வருடங்களாக - எச்சரிக்கைகள் எவ்வளவு நம் கண்களில் படுகிறது? மரபணு மாற்றக் கத்தரிக்காய் உண்பதை விட - இன்னும் அதிகம் ரிஸ்க் இருப்பது புகை பிடித்தலால்தான் என்று நம்மில் அனைவருக்குமே தெரியுமே - அப்போ ஏன் புகைப் பழக்கத்திற்கு எதிராக இவ்வளவு கூச்சல்கள் இல்லை?
எங்களுக்குக் காரணம் தெரியவில்லை. உங்களுக்கு?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







