திங்கள், 15 பிப்ரவரி, 2010

கனவின் மாயா லோகத்திலே ... !!


இறந்த பிறகு என்ன?  கனவு என்பது மறைந்தவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனமா?  இரண்டு கேள்விகளும் சிக்கலானவை.  சுவாரசியமான விடைகளை ஒவ்வொருவரிடமிருந்தும் வரவழைக்கக் கூடியவை.

என் பங்குக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.  இறந்து போன என் மைத்துனி எல்லாரிடமும் பிரியமாக இருந்தவர்.  நல்ல வெள்ளை உள்ளம் படைத்தவர்.  அவ்வப் போது என் கனவில் வருவார்.  நானும் சர்வ சாதாரணமாக அவரைப் பெயர் சொல்லி அழைத்து " என்ன நீ செத்துப் போன பிறகு இப்படி வந்து நிற்கிறாயே, இது சாத்தியம் தானா?"  என்று கேட்பதும் அதற்கு மறுமொழியாக அவர் " ஆமாம். இது சாத்தியம்தான். ரொம்ப சாதாரணம் " என்று சொல்வதும் ஒரு முறை அல்ல மூன்று நான்கு முறை நடந்திருக்கிறது.  மற்றபடி அந்த விசிட்டில் அவர் முக்கியமாக எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை என்பது வேறு விஷயம்.  யோசித்துப் பார்த்தால் இது என் மன அலைகளின் எழுச்சியாகக் கூட இருக்கலாம்.  என்றாலும் கனவில் காணப்பட்ட துல்லியம், நான் கேள்வி கேட்ட போது என் மன நிலையில் இருந்த நிதானம் மற்றும் விழிப்புணர்வு கொஞ்சம் வியப்பூட்டுவதாக இருந்ததும் நிஜம்.  உண்மையை நாம் அந்தப் பக்கம் போய் தான்  தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓரிரண்டு உறவினர்கள் உயிரை விட்ட சில நொடிகளுக்கு முன்னால் அவர்கள் தம் வீட்டுக்கு வந்தது போலவும் பார்த்துக் கொண்டு நின்றது போலவும் ஒரு பிரமை ஏற்பட்டதாக இரண்டொரு சம்பவங்கள் உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில சமயம் ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னால் மனம் கற்பனை செய்து அதற்கு கொஞ்சம் மெருகேற்றி நம்புவதும் நடக்கக் கூடியதே.  கடந்த கால பல நிகழ்ச்சிகளை நாம் கொஞ்சம் அலங்கரித்து சொல்லி வந்தால் நாளடைவில் அப்படித்தான் நடந்தது என்று நம்புவோம்.  சண்டை போடும் கணவன் மனைவி கூட இப்படித்தான் சொன்னாய், இப்படித்தான் நடந்தது என்று விவாதிக்கிறோம் இல்லையா?  உண்மை இதற்கெல்லாம் மத்தியில் எங்கோ ஒளிந்திருக்கிறதா?

உங்கள் அனுபவம் எப்படி?   

13 கருத்துகள்:

  1. சில சமயம் ஒரு இறப்பு நிகழ்ந்த பின்னால் மனம் கற்பனை செய்து அதற்கு கொஞ்சம் மெருகேற்றி நம்புவதும் நடக்கக் கூடியதே. கடந்த கால பல நிகழ்ச்சிகளை நாம் கொஞ்சம் அலங்கரித்து சொல்லி வந்தால் நாளடைவில் அப்படித்தான் நடந்தது என்று நம்புவோம். //////
    இது தான் நிஜம்

    பதிலளிநீக்கு
  2. அவர்கள் மீது நாம் வைத்து இருக்கும் பிரியம்தான் கனவாக உருவெடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. Anbare kanavu enbathu nirayveratha em manathin adithala aasaygalin oru veli padu...
    oru thotrapadu...
    endru naan ninaykiren...
    Engo paditha padditha njabaham
    Thodarnthu eluthungal sinthayay Thoondungal Nandrigal

    பதிலளிநீக்கு
  4. எங்க அப்பா இறந்த பிறகு நாங்கள் அழுவதை காணப் பொறுக்காமல் பல முறை வந்து ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள் கனவில்.. அவர்கள் இறந்ததாகவே எங்களுக்கு இப்போதெல்லாம் தோன்றுவதில்லை.. கூடவே இருக்கிறார்கள்.. அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  5. எங்க காசு ஷோபனா, நாங்க நாலுபேரு வருவது (ப்ளாக் தான் - பேயா இல்லை !) உங்களுக்கு பிடிக்கவில்லையா ?

    ரெண்டு மூன்று இடுகைக்கு முன் இப்படி தான் ஏதோ போட்டீங்க !

    என் பெண்டாட்டி துங்கி எழுந்தவுடனே "சாய், "ஆத்மா என்றால் என்ன, அது என்றால் என்ன ?" " என்று அவ்வையிடம் முருகர் கேட்டது போல் ??

    பார்த்துங்க, அப்பாலிக்க யார் நேரில் வந்தாலும் கால் கிழே படிந்திருக்கின்றதா என்று இனி பார்க்கதோணும் ?

    உங்களுக்கு - சில பேர் இருந்தும் தொல்லை, செத்தும் தொல்லை போலே ??

    அந்தாக்லே விடுவீகளா ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  6. கனவு நினைவில் நடக்காத அல்லது முடியாத ஒன்றை இருப்பதாய் உருவாக்கும் ஒரு சுகமான கற்பனை.நனவில் பிரச்சனயோடு ஓடும் மனிதனை ஆசுவாசப்படுத்தும் ஓர் உலகம்.

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் ஒரு மனபிராந்திங்க..டாஸ்மாக் போனா சரியாயிரும்...சும்மா..

    கனவென்பது நம் ஆழ்மன சிந்தனை..அது இயல்பாக அருகே நிகழ்வது போன்ற உணர்வை எழுப்புவது நிஜம் தான்..

    பதிலளிநீக்கு
  8. கனவு! நிஜத்தில் நடக்காதது கனவிலாவது வந்தால், நிச்சயம் அதில் ஒரு திருப்தி இருக்கும். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை.
    என் தந்தை 2007 -ல் இறந்த பொழுது, நான் அருகில் இல்லை. அவரை பார்க்கவும் நான் கொடுத்து வைக்கவில்லை. அவருக்கு நான் என்றால் உயிர் என்றுதான் சொல்லவேண்டும். நானும், அவர் என் கனவிலாவது வரக் கூடாதா என்று தினமும் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏனோ இன்று வரை அவர் என் கனவில் வரவில்லை. இது மட்டுமல்ல, என் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாருமே என் கனவில் இதுவரை வந்ததில்லை. இத்தனை வருடத்தில், என் அம்மா மட்டும் ஒரே ஒரு முறை என் கனவில் வந்தார்கள். அவ்வளவுதான்!
    ஆனால் எனக்கு விசித்திர கனவுகள் வரும். சபரி மலை சென்றதில்லை, ஆனால் நான் கனவில் சபரி மலை சென்று, ஐயப்ப சுவாமி அபிஷேகம் முழுவதையும் கனவில் கண்டேன். நான் எதாவது புது ஊருக்கு செல்ல போகிறேன் என்றால், அதற்கு முன்னால் கனவில் நான் அந்த இடத்திற்கு செல்வது போல் கனவு வந்து விடும். இது போல் எனக்கு நிறைய தடவை நடந்திருக்கிறது. அதே போல் சில சமயம், சில இடங்களுக்கு செல்லும் பொழுது, அந்த இடத்தை எல்லாம் நான் முன்பே பார்த்தது போலவும், அங்கு எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமானது போலவும் இருக்கும். Very strange!

    பதிலளிநீக்கு
  9. ஷோபனா ஒருவர் இறந்து மூன்று நாட்கள் நீரிலும் அடுத்த மூன்று நாட்கள் மண்ணிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருந்து பின் பத்தாம் நாள் தான் அவர் உண்மையான மோட்சத்தை அடைவதாக படித்து இருக்கிறேன்... எனவே தான் நாம் இவ்வளவு சடங்குகள் செய்கிறோம் ...

    பதிலளிநீக்கு
  10. //thenammailakshmanan said...

    ஷோபனா ஒருவர் இறந்து மூன்று நாட்கள் நீரிலும் அடுத்த மூன்று நாட்கள் மண்ணிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் இருந்து பின் பத்தாம் நாள் தான் அவர் உண்மையான மோட்சத்தை அடைவதாக படித்து இருக்கிறேன்... எனவே தான் நாம் இவ்வளவு சடங்குகள் செய்கிறோம் ...

    "காசு பண்ண" உருவாக்கிய சடங்கு சம்பிரதாயங்கள் ? காசியில் போய் பாருங்கள், அந்த கருமத்தை. வரி செலுத்தாமல் நல்ல துட்டு.

    அந்த பணத்தை வேறுவகையில் தர்மம் செய்தால், இறந்த அன்றே சொர்க்கம் போகலாம் ? பத்து நாட்கள் அல்லாட வேண்டாம்

    - சாய்

    பதிலளிநீக்கு
  11. பல நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்ட
    தமிழ் உதயம், சைவகொத்துப்பரோட்டா, வானம்பாடி, திவ்யா ஹரி, சாய்ராம் கோபாலன், ஹேமா, புலவன் புலிகேசி, மீனாக்ஷி, தேனம்மைலக்ஷ்மணன் - எல்லோரும் கலக்கிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  12. Meenakshi சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, கனவுகள், நம் உள் மன வெளிப்பாடுகள் என்ற கருத்து கிட்டத் தட்ட அடிபட்டுப் போகிறது. தன தந்தையை கனவிலாவது பார்க்க வேண்டும் என்று தீரா தாபம் இருப்பினும் அவரது கனவு பலிக்கவில்லை (??!!) என்பதால் அவரது ஆழமான வெளிப்பாடு தீவிரமாக இல்லை என்று ஒதுக்கிவிடுவது சிறு பிள்ளைத்தனம். இதற்கு சாஸ்திரத்தில் ஒரு ஆறுதல் வைத்திருக்கிறார்கள். ஆத்மா உடனே நேராக சுவர்க்கம் புகுந்தாலும், மறு பிறப்பு எடுத்தாலும் அவர்கள் கனவில் வருவது சாத்தியம் இல்லை. அவர்களுக்கு தண்டனை ஆக இவ்வளவு நாள் சூக்ஷ்ம உருவில் திரிந்தாக வேண்டும் என்று விதிக்கப் படவில்லை!! இப்படிச் சொல்லி நம்மை நாம் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான். மனதின் நிறைவேறாத ஆசைகள் கனவுகளில் நிறைவேறுகின்றன என்று திடமாக சொல்லப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம். மறைந்தவர்கள் கனவு வழியாக தொடர்பு கொள்வதும் சாத்தியமாக இருக்கலாம். யார் கண்டது? ஆவியுடன் பேச ஏற்பாடு செய்து காசு பார்க்கும் இடைத் தரகர்கள் லாபம் பார்க்க இது ஒரு மார்க்கமாகக் கூட இருக்கலாம். இவ்வளவையும் மீறி, மறைந்த நபர் ஆவியாக கனவில் வருகிறார் என்பது ஒரு திருப்தியைத் தருகிறது. இரண்டொரு முறை கனவில் உண்மையான creative கருத்துக்கள் அதற்கு முன் தோன்றாதவை முளைத்ததையும் நான் அனுபவித்திருக்கிறேன். கனவின் மகிமை பற்றி தனிப் பதிவுகள் சாத்தியம் தான்.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி! நீங்கள் எழுதியதை படித்த பின் என் அப்பா சொர்க்கம் சென்றிருப்பார் என்று எண்ணி திருப்தி அடைகிறேன். கனவில் அவர் வராவிட்டாலும், என் மனதில் என்றுமே அவர் நினைவு பசுமையாக இருக்கிறது. ஆனால் கனவில் நடந்ததெல்லாம், நிஜத்தில் நடந்தது போன்ற உணர்வை தருவது உண்மைதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!