ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஞாயிறு -31


பழமைக் காதலர்களுக்கு இது அர்ப்பணம். தேதியைப் பார்த்தீர்களா?

24 கருத்துகள்:

 1. கவிதையாய் சித்திரம்! மெய் மறந்து ரசித்தேன் சில நிமிடங்கள்.
  ஹேமா, இந்த படத்துக்கு ஒரு கவிதை சொல்லுங்களேன்!

  பதிலளிநீக்கு
 2. அற்புதம். எங்கிருந்து பிடித்தீர்கள்.

  என் அப்பா பிறந்து ஒரு மாதம் 13 நாள் பிறகு வந்த ஆனந்த விகடன். அடுத்த முறை சென்னை போகும்போது அவரிடம் காட்ட வேண்டும். சந்தோஷ படுவார்.

  அப்படி இருந்த ஆனந்த விகடனா இப்போது இப்படி ஆகிவிட்டது. படத்தில் என்னவொரு தீர்க்கம்.

  நன்றிகள் பல.

  - சாய்

  பதிலளிநீக்கு
 3. அது பழமைக் காதலர்களுக்கான படம் தானா?

  அப்படியென்றால்,அந்த அட்டைப்படம் மாதிரியே கதை கந்தல் தான்!

  கீழே கடைசியில் உள்ள வசனம் தேர்தலைப் பற்றியல்லவோ, அந்த சிறுபெண், தன தாய் தகப்பனுக்குச் சொல்வது போல இருக்கிறது!

  'முதலாளி' ஷோபனா என்ன சொல்ல வருகிறார்?

  பதிலளிநீக்கு
 4. கிருஷ் சார் - இது என் தாத்தாவின் புத்தக அலமாரியில் கிடைத்த ஒரு தாள்.

  பதிலளிநீக்கு
 5. விகடன் தோன்றி நான் தோன்றாக்காலம்! அதே வருடம் செப்டம்பரில் தான் இந்த ‘திரு அவதாரம்’!

  பின்னால இருக்கும் பாரதமாதாவின் படத்தைப்பாருங்கள். பத்துவருடம் கழித்து அவரது இரு கரங்களையும் வெட்டிவிட்டோம்!

  எண்பது வயதாகப்போகும் விகடனாருக்கு இப்போது டைட்டாக ஜீன்ஸ் மாட்டி, நடிகைகள் நடுவில் உலவ விட்டுவிட்டோம்!

  காலத்தின் கோலம்!

  பதிலளிநீக்கு
 6. ஒரு பழைய ஆவணத்தைப் பார்க்க நேரிட்டால், வெவ்வேறு வயதுடையவர்கள் - அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் - என்று தெரிந்துகொள்ள ஆசைப் பட்டோம்.
  இதுவரை கருத்துகள் கூறியுள்ள புலவன் புலிகேசி, மீனாக்ஷி, சாய்ராம் கோபாலன், சைவகொத்துப்பரோட்டா கிருஷ்ணமூர்த்தி, தேனம்மை லக்ஷ்மணன், பாரதி மணி ஆகியோருக்கு எங்கள் நன்றி. சோபனா - ரொம்ப பெருமை கொள்ளவேண்டாம். இதைவிடப் பழைய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என்று பலர் எங்கள் பிளாகுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் சரி, மேலே வோட்டுப் பெட்டிக்குள் விழுவது வோட்டுக்களா அல்லது (அப்போதிலிருந்தே) ரூபாய் நோட்டுக்களா?

  பதிலளிநீக்கு
 8. நன்றி தமிழ் உதயம்.
  சை கொ ப - ரொம்பத்தான் உன்னிப்பா பாத்து இருக்கீங்க! ஆனா நோட்டா இருந்தா பாக்கெட்டில் போட்டுக்கிட்டு, வோட்டை பெட்டியில் போட்டிருப்பாங்க - அதனால இது வோட்டுதான். அந்தக் காலத்துல வோட்டுச் சாவடியில மஞ்சப் பெட்டி, பச்சைப் பெட்டின்னு வெவ்வேற கட்சிக்கு வெவ்வேற கலர் பெட்டிகள் இருந்ததாம். எங்க அப்பா சொல்லியிருக்காரு.
  sarang - please see seventh comment from the top. Thank you.

  பதிலளிநீக்கு
 9. //ஒரு பழைய ஆவணத்தைப் பார்க்க நேரிட்டால், //
  பழைய 'ஆணவத்த' பாக்கணுமுன்னா, நம்பியாரின் சினிமா படங்களை போடணும்.. , ஒ, நீங்க சொன்னது, 'ஆவணமா' .. ஓகே ஓகே

  //"எங்கள் said..."நன்றி தமிழ் உதயம். சை கொ ப - ரொம்பத்தான் உன்னிப்பா பாத்து இருக்கீங்க!"//

  ரொம்ப உன்னிப்பா பாத்தது(கேட்டது), "பே.சோ.வி" மாதிரி தெரியுது. நீங்க 'சை.கோ.pu' ன்னு சொல்லியிருக்கீங்க.. (ஹி ஹி.. நாங்களும் உன்னிப்பா பாக்குறவங்கதான் !)

  ரெண்டுமே சும்மா ஒரு 'டமாசுக்கு'..

  பதிலளிநீக்கு
 10. //ரொம்ப உன்னிப்பா பாத்தது(கேட்டது), "பே.சோ.வி" மாதிரி தெரியுது. நீங்க 'சை.கோ.pu' ன்னு சொல்லியிருக்கீங்க.. (ஹி ஹி.. நாங்களும் உன்னிப்பா பாக்குறவங்கதான் !)//

  'சை.கோ.pu' should have been'சை.கோ.ப' (I was little faster than the translator. this time)

  பதிலளிநீக்கு
 11. மாதவன் - ஆமாம் - நீங்க சொல்வது சரி. பெ சொ வி யைத்தான் தவறுதலாக சை கொ ப என்று சொல்லிவிட்டோம். பெ சொ வி - எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்.

  பதிலளிநீக்கு
 12. வாவ்....இவ்ளோ காலம் இவ்ளோ பக்குவமா இருந்திருக்கே.
  அதிசயம்தான் !
  பதிவுக்குள் கொண்டு வந்ததுக்கே பெருமை உங்களுக்குத்தான்.

  பதிலளிநீக்கு
 13. மீனு...கவிதையா ?இப்போதான் உங்க பின்னூட்டம் கவனிச்சேன்.
  வேலைக்கு புறப்படுறேன்.
  முயற்சி செய்றேன்.

  பதிலளிநீக்கு
 14. நேரம் இல்லை என்றால் விடுங்கள் ஹேமா, பரவாயில்லை. இந்த சித்திரத்தை பார்த்த உடன், இதற்கொரு கவிதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுவும் ஹேமா எழுதினால் எப்படி இருக்கும்! என்று மனம் நினைத்ததால் தான் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 15. கவிதை கேட்ட எங்கள் ரசிகருக்காக - இதோ ஒரு ஆசிரியரின் அ வே கவிதை.
  தலை எடுத்த பிள்ளைகள் தகப்பனுக்கும் தாய்க்கும் வழங்குவர், தயங்காமல் தங்கள் அறிவுரைகளை.
  தம் மக்கள் மேலுள்ள அக்கறையால் - தாமும் ஏற்பர் அதனை அந்தத் தலைமுறையினர்.
  இங்கேயோ
  தலை இழந்த (அட - கிழிஞ்சி போச்சுங்க ) தம்பி தங்கை சொல்லுதுங்க:
  " அப்பா, அம்மா - நோட்டுக்கு விக்காதீங்க உங்க வோட்டு.
  போட்டுவிட்டு வருந்தாதீங்க - உங்க வோட்டு.
  அடமானம் வெக்கிறவங்க வாங்கறது பணம்.
  பணம் வாங்கிகிட்டு வெக்காதீங்க - அடமானம் - உங்க தன்மானம்.
  பாரத மாதா வின் மானம் காக்க - நீங்க போடற வோட்டு,
  என்றென்றும் பாரினில் அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் வைக்கவேண்டும் வேட்டு!"

  பதிலளிநீக்கு
 16. ஆஹா, ஆஹா, கவிதை பிரமாதம்! அதை விட பிரமாதம் நீங்கள் உங்கள் வாசகர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. நன்றி. இது ஒண்ணும் அ வே கவிதையா இல்லை, அழகாவே இருக்கு. இந்த கவிதையை, நம்ம ஊர் தேர்தல் சமயத்துல போஸ்டர் அடிச்சு, ஊரெங்குமே ஓட்டலாம் போல இருக்கே! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!