இது காதலர் தின சிறப்புப் பதிவு. கத்தரிக்காய் மீது வைத்தாலும், காதல், காதல்தானே! மரபணு மாற்றப்பட்டக் கத்தரிக்காய் குறித்து முன்பு கு கு அவர்கள் கேட்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.
ஐயோ ம மா க வுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு. மாதர் சங்கம் தொடங்கி இவர் அவர் என்று எல்லோரும் கொடி பிடித்து, அமைச்சர் ஜெயராம் ரமேஷை கேரோ செய்து - கடைசியில் மத்திய அரசு - அம்பேல் என்று - ம மா க இப்போதைக்குச் சந்தைக்கு வராது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்த பின்தான் அமளி ஓய்ந்தது.
இந்த வகை அவேர்னஸ் (Awareness) மிகவும் நல்லதுதான்.
ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு - வழங்கு மொழி - பொன்மொழி - எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அது நீதிமன்ற வழங்கு மொழி. ஒரு குற்றம் சாட்டப் பெற்றவரை - குற்றவாளி என்று கிஞ்சித்தும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபணம் செய்த பிறகே அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும். (A defendant is to be proved beyond all reasonable doubts that he / she is guilty) குற்றவாளி குற்றம் இழைத்திருப்பார் என்பதில், ஒரு சதவிகிதம் கூட சந்தேகம் இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஒரு குற்றவாளி தண்டனை பெறாமல் போனால் கூடப் பரவாயில்லை - ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே இதன் பொருள்.
கத்தரிக்காய்ப் போன்ற உணவு விஷயங்களில் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒன்று (0.001%) சதவிகிதம் ஆரோக்கியக் கேட்டிற்கு சந்தர்ப்பம் உள்ளது என்றாலும் - அதை நிராகரிப்பது நல்லதுதான். இதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை.
கத்தரிக்காய் - அதுவும் ம மா க - எந்த வகையிலும் - உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காது என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நிரூபிக்கவும் முடியவில்லை.
என்னுடைய ஆதங்கம் எல்லாம் வேறு ஒன்று.
அய்யா, அம்மா, தம்பி - ம மா கத்தரிக்காய் எதிர்ப்புப் போராட்ட மக்களே!
புகை பிடித்தல் - எவ்வளவு கெடுதல், அதனால் புற்று நோய் எந்த அளவுக்கு வரும், உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்கின்றது என்றெல்லாம் - எவ்வளவோ வருடங்களாக அரசாங்கம் முதல் அனாமதேயச் சங்கங்கள் வரை எத்தனை எத்தனை ஆட்கள் - எவ்வளவு உரக்கக் கத்தி வருகிறார்கள். துரதிருஷ்டவசமாக - புகை பிடிக்கும் பழக்கமும், பீடி சிகரெட்டுகளும் செய்ய லைசென்ஸ் கொடுக்கப் படுவதற்கு முன்பே - மீடியாக்களில் - மரபணு மாற்றக் கத்தரிக்காய் அளவுக்கு செய்திகள் அறிவிப்புகள் - அந்த நாளில் வெளியாகவில்லை. ஆனாலும் பல வருடங்களாக - எச்சரிக்கைகள் எவ்வளவு நம் கண்களில் படுகிறது? மரபணு மாற்றக் கத்தரிக்காய் உண்பதை விட - இன்னும் அதிகம் ரிஸ்க் இருப்பது புகை பிடித்தலால்தான் என்று நம்மில் அனைவருக்குமே தெரியுமே - அப்போ ஏன் புகைப் பழக்கத்திற்கு எதிராக இவ்வளவு கூச்சல்கள் இல்லை?
எங்களுக்குக் காரணம் தெரியவில்லை. உங்களுக்கு?
அதானே, ஏன்? (இன்னும் தமிலிஷில் இணைக்க வில்லை)
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஅடா
பதிலளிநீக்குகாதலில் தோற்றால் புண்பட்ட மனத்தைப் புகைவிட்டு ஆற்ற முடிகிறது. கையில் குவார்ட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு தேவதாஸ் ஆக மாறிவிடலாம். இப்படிப்பட்ட அருமையான மருந்தை (சிகரெட்டை) விட்டு விடச் சொல்றீங்களே, நியாயமா?
பதிலளிநீக்குநாளைக்கு போராட்டம் பண்ண ஏதாவது ஒண்ணு இருக்கணும் இல்லையா,
பதிலளிநீக்குசை கொ ப - பதிவிட்டு சரி பார்ப்பதற்குள் - ஒரு கமெண்ட் போட்டுட்டீங்க. நாங்க என்ன பண்ணறது!
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி - இந்தப் புன்னகையின் பொருள் என்ன?
வி ஏ எஸ் சங்கர் - இவ்வளவு சுருக்கமாச் சொன்னா எங்களுக்கு ஒன்னும் புரியவில்லை.
பெயர் சொல்ல விருப்பமில்லை -
தற்கொலை முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்த நீதிபதி கூறினாராம். " எனவே குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது சந்தேகத்திடமில்லாமல் நிரூபணம் ஆகியுள்ளது. அது சட்டப்படி குற்றம் என்பதால், அவருக்குத் தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறேன். " என்று! அதுபோல ஏற்கெனவே காதலில் தோற்று நொந்து நூடுல்ஸ் ஆன இதயத்தை, புகை போட்டு, மூச்சுத் திணறி சாக அடிக்க -- காஸ் சாம்பர் தண்டனை அளிக்க வேண்டுமா?
தமிழ் உதயம் - நாளைக்குப் போராட்டம் பண்ண - புகைப் பழக்கமா? நேற்று வந்த ம மா க வுக்கு உடனடிப் போராட்டம்; பல வருடங்களாக வேரூன்றிவிட்ட புகைப் பழக்கத்திற்கு இனிமேல்தான் போராட்டம் வரும் என்று நினைக்கிறீர்களா? சான்ஸே இல்லை.
பதிலளிநீக்குகாதல் பிடிச்சவங்களுக்கு கத்திரிக்காய் பிடிக்கலாம், பிடிக்காமலுமிருக்கலாம்
பதிலளிநீக்குகத்திரிக்காய் பிடிச்சவங்களுக்கு காதல் பிடிக்கலாம், பிடிக்காமலுமிருக்கலாம்.
காதலுக்கும் கத்திரிக்காயுக்கும் சம்பந்தம் இவ்ளோதான்..
மாதவன் - ஐயோ ஐயோ எங்களுக்குப் பிடிச்சிடுச்சு பைத் .....தியம்.
பதிலளிநீக்குஅட..இதுக்குத்தானா காதலும் கத்தரிக்காயும்ன்னு சொல்லி வச்சாங்க.புரிய வச்சதுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடம்தான் ரொம்ப அழகு.
யாரு கைவரிசை.ஸ்ரீராமா?
(என் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பதிவு ஒரே நாளில்....பாருங்க, படியுங்க!)
பதிலளிநீக்கு//கத்தரிக்காய் மீது வைத்தாலும் காதல் காதல்தானே!//
பதிலளிநீக்குஅது சரி! கத்தரிக்காய் உங்களை பதிலுக்கு காதலிக்குதா என்ன!
புகை பிடிப்பது ஒரு கெட்ட பழக்கம். புண்பட்ட மனசுக்காரங்க எல்லாருமேவா புகை பிடிக்கறாங்க? அவங்க கெட்டபழக்கத்தை நியாயபடுத்த இதெல்லாம் ஒரு நொண்டி சாக்குதான்!
// பெயர் சொல்ல விருப்பமில்லை said... காதலில் தோற்றால் புண்பட்ட மனத்தைப் புகைவிட்டு ஆற்ற முடிகிறது. கையில் குவார்ட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டு தேவதாஸ் ஆக மாறிவிடலாம். இப்படிப்பட்ட அருமையான மருந்தை (சிகரெட்டை) விட்டு விடச் சொல்றீங்களே, நியாயமா?//
பதிலளிநீக்குநான் யாருக்கும் அறிவுரை கூற அருகதை இல்லாதவன் இருந்தாலும் ....
என் சித்தப்பா புகை பிடித்து தொண்டையில் புற்று நோய் வந்து "வத்தி வதங்கி" இறந்தபோது கண் கூடாக பார்த்தவன். ஆறே மாதங்களில் உடலை உருக்கி, மரண வேதனையை தினம் தினம் அனுபவித்து இறந்து போனார். அவர் இறக்கும் தருவாயில் - "டேய் சாய், சைகையால் சிகரெட் வேண்டாம்" என்று சொன்னபோது பல மாதங்கள் விட்டு திரும்ப பிடிக்க ஆரம்பித்தவன்.
எனக்கு தெரிந்து இன்னும் பலர் புகையிலை, சிகரெட் என்று தொண்டையில் / வாயில் புற்றுநோய் வந்து இறந்து போய் இருக்கின்றார்கள்.
நான் என் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முன் போது புகை பிடிக்க ஆரம்பித்து இந்த இரண்டு மாதங்களாக மேலாக விட்டு இருப்பவன். பல முறை இங்கே (அமெரிக்காவில்) விட்டு, இந்தியா வரும்போது திரும்ப அதை பிடிக்க ஆரம்பித்தவன். வீட்டில் கோவம் வரும்போது, அலுவலகத்தில் கோவம் வரும்போது என்று நினைத்தபோது புகை பிடித்தவன்.
மீனாக்ஷி சொல்லுவது போல், எல்லா துக்கம் / சந்தோஷத்திற்கும் அது என்ன ஆண்களுக்கு மட்டும் இதை மாதிரி ஒரு நொண்டி சாக்கு ?!? பெண்கள் இதைமாதிரி எதாவது ஒரு கர்மத்தை பிடித்து கொள்ளவேண்டும் ? அப்போது தெரியும்.
நம் அம்மாவோ, அக்காவோ, தங்கையோ ஏன் மனைவியோ சிகரெட் மற்றும் மது அருந்தினால் நம் மனம் ஏற்றுக்கொள்ளுமா ? அவர்களுக்கும் தான் கவலை, மனவருத்தம் என்று நம்மை போலே !
இங்கே அமெரிக்காவில் புகைபிடிப்பதால் வரும் தொண்டை புற்றுநோய் பற்றி அடிக்கடி வரும் விளம்பரம் பார்த்தால் அதை யாரும் பிடிக்கமாட்டார்கள். ஆனந்த விகடனில் சில சமயம் டாக்டர் ஒருவரின் தொண்டை புற்றுநோய் பற்றி விளம்பரம் வரும். பாருங்கள்.
இல்லையில் "அடையார் புற்றுநோய் மருத்துவ மனை" சென்று கண்கூடாக பாருங்கள்.
முதல் வரியில் சொன்னதுபோல் பிறருக்கு அறிவுரை சொல்ல நான் அருகதை இல்லாதவன். மன்னியுங்கள்.
நீங்கள் சிகரெட் பிடிப்பவர் என்றால் - குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது விட்டு ஒழியுங்கள்.
- சாய்
//எங்கள் said..."தற்கொலை முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்த நீதிபதி கூறினாராம். " எனவே குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது சந்தேகத்திடமில்லாமல் நிரூபணம் ஆகியுள்ளது. அது சட்டப்படி குற்றம் என்பதால், அவருக்குத் தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறேன்."//
பதிலளிநீக்குஎங்க ('உங்க' அல்ல) ஊர்ல, ஒருத்தன் தூக்கு போட்டுக்கப் போறான்னு விஷயம் தெரிஞ்ச போலிசு அவன் கிட்டே ஜன்னல்வழியா பேச்சு வார்த்தை நடத்தி.. அவன் கேக்காமல் போகவே, இறுதியாக அவனைப் பாத்து 'நீ உன் முயற்சிய கைவிடலேன்னா, உன்னை சுட்டு கொன்னுடோவோம்'ன்னு மிரட்டினாங்க.. இது எப்படி இருக்கு ?
சாய்ராம் கோபாலன் : நீங்கள் விரைவில் அந்த கேட்ட பழக்கத்திலிருந்து விடுபட, அந்த 'சாய் ராம், கோபாலன்' அருள் புரிவாராக.
எனினும் உங்கள் அறிவுரை மற்றவர்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.
//சாய்ராம் கோபாலன் : நீங்கள் விரைவில் அந்த கேட்ட பழக்கத்திலிருந்து விடுபட, அந்த 'சாய் ராம், கோபாலன்' அருள் புரிவாராக.
பதிலளிநீக்குஎனினும் உங்கள் அறிவுரை மற்றவர்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.//
மாதவன், நன்றி.
இதுக்கு எங்க கடவுளை இழுக்கறீங்க !! அவர் என்ன செய்வார் பாவம் !
நான் சிகரெட்டை விட்டுவிட்டேன்.
இனி அதை தொட எண்ணம் இல்லை.
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குபடமும் பதிவும் அருமை ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகத்தீரிக் காய், கத்தரிக்கோல்..,
பதிலளிநீக்குஅனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சாய் ராமுக்கும், பாராட்டிய ஹேமா மீனாக்ஷி, தியாவின் பேனா, திவ்யா ஹரி, பழனி டாகடருக்கும் (பாராட்டுதானே டாக்டர்?) எங்கள் நன்றி.
பதிலளிநீக்குபெ சொ வி - இரண்டு பதிவுகளும் நன்றாக உள்ளன. கேள்விப் பதிவு சூப்பர்.
பதிலளிநீக்குஉண்மைதான் ஏன் மற்றவற்றில் இவ்வளவு தீவிரமாக இல்லை ஏன்னா இது மிக அடிப்படையான நம் பாரம்பரிய மிக்க உணவு அதுனால மக்களுக்கு கோபம் தனி மனித பழக்க வழக்கங்கள் அவர்களா சுய கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் ராம் ...
பதிலளிநீக்குகத்திரிக்காய் இல்லாம நம்ம சமையல் ஏதாவது உண்டா அதுதான் நம்ம மக்களுக்கு கோபம் ராம் மேலும் தனிமனித பழக்க வழக்கங்களை நாம ஒண்ணும் பண்ண முடியாது அவங்களா திருத்திக்கணும்
தேனம்மைலக்ஷ்மணன் - புகைப் பழக்கத்தைப் பற்றி ஒரு புள்ளி விவரம், எங்கேயோ எப்போதோ படித்தது. புகை பிடிக்கும் பழக்கத்தினால் புகை பிடிப்பவருக்கு ஐந்து பங்கு தீமை என்றால், பக்கத்தில் புகைக்காது, அவர் வெளியே விடுகின்ற புகையை சுவாசிக்கும் அப்பாவிக்கு அதனால் இருபத்தைந்து பங்கு அதிக தீமையாம். எனவே, இதை தனி மனித பழக்க வழக்கங்கள் என்று அசட்டையாக விட்டுவிட முடியாது.
பதிலளிநீக்குபுகையின் தீமைகளை, மதுவின் மாபாதகத்தை எவ்வளவோ கரடியாகக் கத்திச் சொன்னாலும் கேட்பாரில்லை. மரபணுக் கத்திரியை எதிர்க்க மக்கள் லட்சக் கணக்கில் சேர்கிறார்கள். மதுவும் புகையும் ஜாலி வகையைச் சேர்ந்தவை. அவை ஹாபிட் பார்மிங் வகையும் கூட. கத்திரிக்காய் அப்படி கிளுகிளுப்பு தரும் வஸ்துவோ பழக்கம் ஏற்படுத்துவதோ அல்ல. எனவே கத்திரி எதிர்ப்பு ஏற்புடையதாயும் எளிதானதாகவும் மது/புகை எதிர்ப்பு சோகை பிடித்தும் இருக்கிறது. "என்னை மாதிரி நீயும் புகை பிடித்து, மது குடித்து கேட்டுப் போகாதே " என்று எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் எடுபடுமா? என் மகளோ மருமகளோ, மனைவியோ அக்கா தங்கையோ ஷ்ரேயா போல உடை உடுத்தி வந்தால் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் sounds hollow!
பதிலளிநீக்கு